Untitled Document
March 15, 2024 [GMT]
சொந்த மகனை பெட்டிக்குள் அடைத்து கடத்திய தந்தை: - விசாரணையை துவக்கிய நீதிமன்றம்
[Wednesday 2018-02-21 07:00]
ஸ்பெயின் எல்லையில் நபர் ஒருவர் தமது 8 வயது மகனை பெட்டிக்குள் அடைத்து கடத்திய விவகாரத்தில் நீதிமன்றம் விசாரணையை துவக்கியுள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு பெட்டிக்குள் வைத்து 8 வயது சிறுவன் கடத்தப்படுவதாக வெளியான புகைப்படம் உலக அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஸ்பெயின் எல்லையில் நபர் ஒருவர் தமது 8 வயது மகனை பெட்டிக்குள் அடைத்து கடத்திய விவகாரத்தில் நீதிமன்றம் விசாரணையை துவக்கியுள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு பெட்டிக்குள் வைத்து 8 வயது சிறுவன் கடத்தப்படுவதாக வெளியான புகைப்படம் உலக அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

  

இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிறுவனின் தந்தை வடக்கு மொராக்கோவில் அமைந்துள்ள ஸ்பெயினுக்கு சொந்தமான பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.இந்த பகுதியில் இருந்தே பெரும்பாலான ஆப்பிரிக்க நாட்டு அகதிகள் ஸ்பெயினுக்குள் சட்டவிரோதமாக செல்ல முயற்சி மேள்கொள்கின்றனர்.2015 ஆம் ஆண்டு மே மாதம் மொராக்கோ நாட்டு பெண்மணி ஒருவர் கனமான பெட்டி ஒன்றை இழுத்துக் கொண்டு எல்லைப்பகுதி வழியாக செல்வதை ஸ்பெயின் பொலிசார் கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில் சந்தேகமடைந்த பொலிசார் எக்ஸ்ரே கருவிகள் மூலம் பெட்டியை சோதனையிட்டதில் சிறுவன் ஒருவன் பெட்டிக்குள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து குறித்த சிறுவனை விடுவித்த பொலிசார், எல்லையில் சிறுவனுக்காக காத்திருந்த அவனது தந்தையை கைது செய்தனர். சிறுவனின் தந்தையான Ouattara(45), தம்மை ஆட்கடத்தும் நபர்கள் ஏமாற்றியதாகவும், தமது மகனை பத்திரமாக மாட்ரிட் நகருக்கு அழைத்துச் செல்வதாக கூறி தம்மிடம் இருந்து 5,000 யூரோ கைப்பற்றியதாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்தார். Ouattara கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக ஸ்பெயினில் குடியேறியவர். பின்னர் தனக்கான ஒரு வேலையை சம்பாதித்தவர், தமது மனைவி மற்றும் மகளை சட்டவிரோதமாகவே தன்னோடு அழைத்துக் கொண்டார். ஆனால் தமது மகனை தன்னுடன் அழைத்துக் கொள்ள 4 முறை முயற்சித்தும், ஸ்பெயின் அதிகாரிகளால் மறுக்கப்பட்டது. தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் Ouattara, தாம் ஆட்கடத்தும் குற்றம் ஏதும் செய்யவில்லை எனவும், மனிதாபிமான ரீதியில் நீதிமன்றம் இந்த வழக்கை அணுகினால் வெற்றி பெறுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதை விட நாம் வாழும் பூமியை பாதுகாப்பதே முக்கியம்: பராக் ஒபாமா!
[Friday 2024-03-15 08:00]

செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதை விட, நாம் வாழும் பூமியை பாதுகாப்பதே முக்கியம் என பாரிஸ் உச்சி மாநாட்டில் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். “செவ்வாய் கிரகத்தில் குடியேற வேண்டும் என்பதற்கான முனைப்பைவிட, மனிதகுலம் வாழத்தக்கதாக பூமியை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். ஏனெனில் அணுசக்தி யுத்தம் மற்றும் காலநிலை மாற்றம் போன்றவைக்கு பின்னரும், செவ்வாய் கிரகத்தை விட சிறப்பான வாழிடத்தை இந்த பூமி நமக்கு வழங்கக் காத்திருக்கும்’ என்றும் கூறியுள்ளார்.



ஐரோப்பிய நாடுகளில் பரவும் போலி நாணயத்தாள்கள்!
[Friday 2024-03-15 08:00]

போலி நாணயத்தாள்கள், மனித கடத்தல் மற்றும் ஏவுகணை உதிரிபாகங்கள் விநியோகம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பாகிஸ்தானியர்கள் உலகளாவிய கடத்தலில் ஈடுபட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகளாவிய போலி நாணய மோசடியில் ஈடுபட்ட பல பாகிஸ்தானிய பிரஜைகள் ஸ்பெயின் பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டதை அடுத்து குறித்த வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



ரஷ்யாவுக்கு மிரட்டல் விடுத்த பிரான்ஸ் ஜனாதிபதி!
[Friday 2024-03-15 08:00]

ரஷ்ய உக்ரைன் போரில், உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு படைகளை அனுப்பக்கூடும் என பிரான்ஸ் ஜனாதிபதி கூறியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிலிருந்து பிரான்ஸ் படைகள் திருப்பி அனுப்பப்படுவதை ரஷ்ய ஜனாதிபதி புடின் சுட்டிக்காட்டியுள்ளார்.



ஒட்டாவா படுகொலை: சந்தேகநபரான மாணவன் நீதிமன்றத்தில் முன்னிலை!
[Thursday 2024-03-14 18:00]

கனடா - ஒட்டாவாவில் வீடொன்றில் வைத்து 6 பேரைக் கொன்ற 19 வயது இலங்கை மாணவன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சந்தேக நபரான 19 வயது பெப்ரியோ டி சொய்சா இன்று (14.3.2024) வியாழன் ஒட்டாவா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை 6 பேரைக் கொலை செய்த சந்தேக நபரின் YouTube கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை தொடர்பில் தகவல்!
[Thursday 2024-03-14 18:00]

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கமானது இன்று (14.3.2024) அதிகாலை ஏற்பட்டுள்ளதாக வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.



கடையொன்றில் திருடிய நியூஸிலாந்து முன்னாள் எம்.பி!
[Thursday 2024-03-14 18:00]

நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தபோது, கடையொன்றில் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோல்ரிஸ் கஹ்ரமான், தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.



காசாவில் கடந்த 4 மாதங்களில் அதிக குழந்தைகள் உயிரிழப்பு!
[Thursday 2024-03-14 18:00]

கடந்த 4 ஆண்டுகளில் உலகம் முழுவதும் இடம்பெற்ற போர்கள் மற்றும் மோதல்களால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கையை விட காசாவில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என பாலஸ்தீனத்துக்கான ஐ.நா.வின் அகதிகள் மறுவாழ்வு மைய பிரதிநிதி பிலிப் லாஸரினி தெரிவித்துள்ளார்.



அணு ஆயுதப் போருக்கு தயார்: மேற்குலக நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை!
[Thursday 2024-03-14 06:00]

தொழில்நுட்ப ரீதியாக உக்ரைன் மீதான அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக மேற்குலக நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா தனது படைகளை உக்ரைனுக்கு அனுப்பினால், போர் மேலும் சிக்கலடையும் என அவர் எச்சரித்துள்ளார். உள்நாட்டு ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை வெளியிட்டுள்ளார்.



இலங்கையை வந்தடைந்துள்ள அமெரிக்க உளவு விமானம்!
[Thursday 2024-03-14 06:00]

அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான N7700 Bombardier உளவு விமானத்துடன் அதன் ஊழியர்களும் இரத்மலானை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். குறித்த அமெரிக்க உளவு விமானத்தை பயன்படுத்தி அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தலையீட்டுடன் இரத்மலானை விமான நிலையத்தில் விசேட பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



ஜேர்மனில் வாழும் தமிழ் மக்களினால் சாந்தனுக்கு நினைவஞ்சலி!
[Thursday 2024-03-14 06:00]

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 வருடங்களாக தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனுக்கு ஜேர்மன் - நெற்றெற்ராலில் வாழும் தமிழ் மக்களினால் நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.



ரமழான் முதல் நாளில் 100 பாலஸ்தீனியர்களை பலியாக்கிய இஸ்ரேல் இராணுவம்!
[Wednesday 2024-03-13 18:00]

காசா பதற்ற நிலைக்கு மத்தியில் இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் 100 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புனித ரமழான் நோன்பை பாலஸ்தீனியர்கள் ஆரம்பித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களால் கொல்லப்பட்ட 67 பேரின் உடல்கள் கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டதாகவும், போர் தொடங்கியதில் இருந்து பாலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கை 31,112 க்கும் அதிகமாக இருப்பதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



ரொறன்ரோவில் உறவினர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!
[Wednesday 2024-03-13 18:00]

கனடாவின் ரொறன்ரோவில் உறவினர்கள் மூன்று பேர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவா காயமடைந்துள்ளார். ரொறன்ரோவின் ரீஜன்ட் பார்க்கின் டுன்டாஸ் வீதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.



லண்டனில் பரபரப்பை ஏற்படுத்திய 10 அடி உயர மர்ம உலோகம்!
[Wednesday 2024-03-13 18:00]

லண்டனின் வேல்ஸ் நகரில் உள்ள ஹே-ஆன்-வே பகுதியில் உள்ள ஒரு மலையில் சமீபத்தில் ஒரு பிரமாண்டமான உலோக மோனோலித் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன், அதில் சுமார் 10 அடி உயரம் உள்ள அந்த உலோகம் மாபெரும் டோப்லெரோன் (ஒரு வகை சாக்லேட்) போன்ற வடிவத்தை கொண்டுள்ளது.



பிரேசிலில் தீவிரம் அடையும் டெங்கு: 391 பேர் உயிரிழப்பு!
[Wednesday 2024-03-13 18:00]

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளதாக கூறப்படும் நிலையில், 391 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பிரேசில் சுகாதாரத்துறையினர் கடுமையாக போராடி வந்தாலும் டெங்கு காய்ச்சல் பரவலின் வேகம் குறைந்தபாடில்லை.



கனடாவில் படுகொலை: பொலிஸ் விசாரணையில் ஏற்பட்ட குழப்பம்!
[Wednesday 2024-03-13 06:00]

கனடாவில் 6 இலங்கையர்களையும் படுகொலை செய்ய வேட்டையாடும் கத்திக்கு ஒத்த கத்தியையே சந்தேகநபர் கொலைக்கு பயன்படுத்தியுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். மேலும், இலங்கையர்கள் ஆறு பேரையும் கொலை செய்ய சந்தேகநபர் ஒரு கத்தியினை பயன்படுத்தினாரா அல்லது பல கத்திகள் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.



புலம்பெயர்தலை கட்டுப்படுத்த தீவிரமாக செயற்படும் பிரித்தானியா!
[Wednesday 2024-03-13 06:00]

சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கையைத் குறைக்கும் முயற்சியில் முன்பு ஈடுபட்டிருந்த பிரித்தானிய அரசு, தற்போது, சட்டப்படி புலம்பெயர்வோர் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக செயற்பட்டு வருகிறது.



நடுவானில் திடீரென தீப்பிடித்த ரஷ்ய இராணுவ விமானம் - 15 பேர் பலி!
[Wednesday 2024-03-13 06:00]

ரஷ்யாவின் இராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் 15 போர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த விமான விபத்து நேற்று (12.3.2024) ரஷ்யாவின் தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. விமானம் புறப்படும் போது என்ஜினில் தீப்பற்றியது தான் விபத்துக்கு காரணம் என்று ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.



கனடாவில் சிறுவர்களின் உயிர் காக்கும் புதிய மருத்துவ உபகரணம் கண்டுபிடிப்பு!
[Tuesday 2024-03-12 18:00]

கனடாவின் மொன்றியால் மருத்துவர்கள் சிறுவர்களின் உயிர்களை காக்கும் வகையிலான மெய்நிகர் அவசர சிகிச்சைப் பிரிவு தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆண்டு தோறும் விபத்துக்கள் மூலமாக சுமார் ஒரு மில்லியன் சிறுவர்கள் உலகம் முழுவதிலும் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.



உக்ரேன் தாக்குதலில் பற்றி எரிந்த ரஷ்யா எண்ணெய்க் களஞ்சியங்கள்!
[Tuesday 2024-03-12 18:00]

இன்று நடத்தப்பட்ட உக்ரேன் ட்ரோன் தாக்குதல்களில் ரஷ்யாவின் இரு நகரங்களிலுள்ள எண்ணெய்க் களஞ்சியங்கள் களஞ்சியங்கள் தீப்பற்றி எறிவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேஸ்டோவோ மற்றும் ஒரியோல் நகரங்களிலுள்ள எண்ணெய்க் களஞ்சியங்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.



"டிக்டொக்" அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: டிரம்ப் விமர்சனம்!
[Tuesday 2024-03-12 18:00]

டிக்டொக் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , முகநூல் மக்களின் எதிரி எனவும் வர்ணித்துள்ளார். எனினும் இதனை தடை செய்வதை நான் ஆதரிக்கமாட்டேன் என தெரிவித்த டிரம்ப், ஏன் என்றால் அதனை தடைசெய்தால் மக்களின் எதிரியான முகநூலின் ஆதரவு அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா