Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 18, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

ஈராக்கில் சன்னி முஸ்லிம்களைக் குறிவைத்து தொடர்குண்டு வெடிப்புகள் - 66 பேர் பலி!
[Saturday, 2013-05-18 06:32:43]

ஈராக்கில் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள பகுபா நகரில் நேற்று சன்னி முஸ்லிம்களின் மசூதி அருகில் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடிதத்தில் குறைந்த்து 66பேர் கொல்லப்பட்டனர். மசூதியில் தொழுகை முடிந்து வெளியே வரும்போது ஒரு குண்டு வெடித்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஒரு இடத்தில் கூடி நின்றபோது, அங்கு இரண்டாவது குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டனர். 57 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல், தெற்கு பாக்தாத்தில் சன்னி முஸ்லிம் ஒருவரின் இறுதிச்சடங்கு நடந்த இடத்தின் அருகே குண்டுவெடித்தது. இதில் 8 பேர் இறந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேற்கு பாக்தாதில் மற்றொரு குண்டு வணிகவளாகம் அருகே வெடித்த்தால் 19 பேர் கொல்லப்பட்டனர்.



வடகொரியாவிடம் 200 ஏவுகணைகள் - மதிப்பிட்டதை விட அதிகம் என்பதால் அமெரிக்கா அதிர்ச்சி!
[Saturday, 2013-05-18 06:23:35]

வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனில் இருந்து வெளிவந்த தகவலை அடுத்து, கொரியாவின் பாதுகாப்பு ஆய்வு மையம் இதனைச் செய்துள்ளதாக பத்திரிகை செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. பொருளாதாரப் பிரச்சினைகளையும் மீறி வடகொரியா ஆயுதங்களில் முதலீடு செய்வதாக, அமெரிக்கா கருத்து தெரிவித்ததை அடுத்து அவர்களிடம் நகர்த்தக்கூடிய தன்மையுடன் 94 ஏவுகணைகள் இருக்கலாம் என்று தென்கொரிய அரசு நினைத்திருந்தது.



இந்தியாவுடன் நட்புறவு வைக்கக் கூடாது - நவாஸ் ஷெரீப்புக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை!
[Saturday, 2013-05-18 06:16:36]

இந்தியாவுடன் நட்புறவை வைத்துக் கொண்டால், பாகிஸ்தானில் புதிதாக பதவி ஏற்க உள்ள அரசை நீடிக்க விட மாட்டோம் என்று அங்குள்ள திவிரவாத இயக்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லிக் கட்சி அமோக வெற்றி பெற்றது. பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுத்த நவாஸ் ஷெரீப் இந்தியாவுடன் நட்புறவை வைத்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.



அமெரிக்க ராணுவத்தில் பாலியல் தாக்குதல்கள் - வெட்கக்கேடு, அவமானம் என்கிறார் ஒபாமா!
[Saturday, 2013-05-18 06:12:14]

அமெரிக்க ராணுவத்தில் பாலியல் தாக்குதல்கள் நடப்பது வெட்கக்கேடாகவும், அவமானமாகவும் இருப்பதாக அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க ராணுவத்தில் பாலியல் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன. இதையடுத்து, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் சக் ஹேகல், முப்படைகளின் தளபதி மார்ட்டின் டெம்ப்சே ஆகியோருடன் அதிபர் ஒபாமா வியாழக்கிழமை முக்கிய விவாதம் நடத்தினார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:



பள்ளிக்கட்டணம் செலுத்தாத மண்டேலாவின் முன்னாள் மனைவியின் சொத்துகள் ஏலம்!
[Saturday, 2013-05-18 05:46:20]

பள்ளிக்கூடத்துக்கு தரவேண்டிய நிலுவையை செலுத்தாததால், தென் ஆப்ரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவியின் உடமைகள் ஏலம் விடப்பட உள்ளன. தென் ஆப்ரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் இரண்டாவது மனைவி வின்னி மடிக்கிசெலா. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள, சோவிட்டோ நகர பள்ளிக்கு தரவேண்டிய, 1.18 லட்சம் ரூபாயை செலுத்தாமல் விட்டுவிட்டார். இது தொடர்பாக, பள்ளி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், வின்னி மண்டேலா வீட்டில் உள்ள பொருட்களை விற்று, இந்த தொகையை செலுத்தும் படி, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, வரும், 21ம் தேதி, வின்னியின் வீட்டில் உள்ள ஏராளமான ஓவியங்களும், வெள்ளி சாமான்களும் ஏலம் விடப்பட உள்ளன.



ஆர்ஜன்டீனாவின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் சிறையில் மரணம்!
[Friday, 2013-05-17 20:19:58]

ஆர்ஜன்டீனாவின் முன்னாள் ஆட்சியாளரான ஜோர்ஜ் ரஃபல் விடெலா தனது 87 வது வயதில் சிறையில் மரணமானார். இயற்கை மரணம் எய்தியதாகக் கூறப்படுகின்ற ஜெனரல் விடெலா, 1976இல் ஆர்ஜன்டீனாவில் ஆட்சியை கைப்பற்றிய இராணுவ ஆட்சிக்கு தலைமை தாங்கினார்.டேர்ட்டி வோர் காலகட்டம் என்று வர்ணிக்கப்படுகின்ற தனது ஆட்சிக்காலத்தில் செய்த மனிதஉரிமை மீறல்களுக்காக அவர் சிறைத்தண்டனையை அனுபவித்து வந்தார்.1983 ஆம் ஆண்டுவரை தொடர்ந்த அந்த இராணுவ ஆட்சியில் முப்பதினாயிரம் வரையிலான இடதுசாரி செயற்பாட்டாளர்களும், அரச எதிர்ப்பாளர்களும் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மதிப்பிடுகிறார்கள்.



1400 ஆண்டுகளுக்கு முந்திய எகிப்திய வீரனின் உடல் கண்டுபிடிப்பு!
[Friday, 2013-05-17 17:07:04]

தெற்கு எகிப்து பகுதியில், சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வீரனின் உடலை தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.எகிப்து மற்றம் நுபியாவுக்கு இடையேயோன எல்லைப் பகுதியில் ரோமன் ஆட்சி காலத்தில் அந்த வீரர் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. வீரரின் உடற்பகுதி நல்ல நிலையில் இருப்பதாகவும், அவர் மரணம் அடையும் போது 25 முதல் 35 வயதுக்குள் இருக்கலாம் என்றும், அந்த வீரரின் நெஞ்சில் குத்தப்பட்டதால் அவர் உயிரிழந்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.



குளிரில் தவித்த அப்பிள்களை காப்பாற்ற ஹெலியை வாடகைக்கு அமர்த்திய கனேடிய தோட்டக்காரர்!
[Friday, 2013-05-17 16:54:04]

கனடா தலைநகர் ஒட்டாவா அருகே உள்ள அப்பிள் தோட்டம் ஒன்றில் குளிரில் தவித்த அப்பிள்களை, ஹெலிகாப்டர் மூலம் வெப்பக்காற்று வீசவைத்து பாதுகாத்துள்ளார் தோட்டக்காரர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பனிப்படலம் மூடிக்கொள்ளும் என்று வானிலை எச்சரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து கலங்கிய அப்பிள் தோட்டக்காரர் ஃபில் லியால், வேறு வழியின்றி ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்தார். அந்த ஹெலிகாப்டர் அவரது அப்பிள் தோட்டத்தில் தாழப் பறந்து, அப்பிள் மரங்கள் மீது வெப்பக் காற்றை வீசியது. இதனால் பனிப்படலம் மூடாமல் அப்பிள் தப்பியது.



காதலியின் குழந்தைக்காக ஐரோப்பிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் வடகொரிய அதிபர்!
[Friday, 2013-05-17 16:31:17]

வடகொரியா அதிபராக கிம் ஜாங்-யுன் பதவி வகித்து வருகிறார். இவருக்கு கடந்த 2009-ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆனால், அதை அவர் ரகசியமாக வைத்து இருந்தார். இந்த நிலையில், திடீரென 2012-ம் ஆண்டு ஜூலையில் தனது மனைவியுடன் மக்கள் மத்தியில் தோன்றினார். அதற்கு முன்பே இத்தம்பதிக்கு 2010-ம் ஆண்டே ஒரு குழந்தை பிறந்து விட்டது. இந்த நிலையில், தற்போது அதிபர் கிம்-ஜாங்-யுன்னுக்கு அவரது காதலி மூலம் பெண் குழந்தை பிறந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீப காலமாக சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து மிகவும் விலை உயர்ந்த குழந்தை உணவு பொருட்கள் வடகொரியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.



சிரிய இராணுவம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்கு ஆதாரம் உள்ளது! - ஒபாமா
[Friday, 2013-05-17 16:28:41]

சிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் மக்களின் மீது ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது உறுதியாகியுள்ளது என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். துருக்கி பிரதமர் ரெசெப் தய்யிப் எர்டோகன் நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்தித்து பேசினார். அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஒபாமா, சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் அங்குள்ள நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அன்றாட நிகழ்வுகள் தொடர்பாக நமக்கு தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.



தற்காலிகத் திருமணம் - சீனாவில் பரவியுள்ள புதுக்கலாசாரம்!
[Friday, 2013-05-17 08:16:52]

சீனாவில் 25 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களில் 80 சதவீதம் பேர் 21 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தேசிய புள்ளியியல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. உள்நாட்டிலேயே ஒரு இடத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் வேறு இடத்தில் பணி செய்ய செல்வதும், வெளிநாட்டினர் பலர் வேலை செய்ய சீனாவுக்கு வருவதும் அதிகரித்துள்ளது. இதுபோல் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.இவர்கள் சொந்த ஊரை விட்டு பல மாதங்கள், பல ஆண்டுகள் வேலை செய்வதால் மன அழுத்தம், தனிமை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், வேறு இடங்களில் வந்து சீனாவில் வேலை செய்யும் ஊழியர்கள், தற்காலிக திருமணம் செய்து கொள்வது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.



ஈரான் அதிபர் தேர்தலில் பெண்கள் போட்டியிட இஸ்லாமிய மதத் தலைவர் தடை!
[Friday, 2013-05-17 08:12:46]

ஈரானில் வரும் ஜூன் மாதம் அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் சுமார் 30 பெண்கள் போட்டியிட எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கும் வகையில், அந்நாட்டின் மதத்தலைவர் அயோதல்லா முகமது யாஸ்டி, அதிபர் தேர்தலில் பெண்கள் வேட்பாளராக நிற்க வாய்ப்பு இல்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஈரானின் அரசியல் அமைப்பிலும் கூட ஆண்கள் தான் அதிபராக வரமுடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஈரானின் பாராளுமன்ற தேர்தலில் பெண்கள் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



கனடாவில் பறக்கும் தட்டுகளின் நட்மாட்டம் அதிகரிப்பு!
[Friday, 2013-05-17 08:09:41]

கனடாவில் அடையாள தெரியாத பறக்கும் தட்டுகளின் எண்ணிக்கை, அதிக அளவில் வானத்தில் தென்படத் தொடங்கியுள்ளன. கடந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும், இது போன்ற 2000 தட்டுகள் அந்நாட்டில் தென்பட்டுள்ளதாக இது குறித்த ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டைவிட 100 சதவிகிதம் அதிகமாகும். 2011ஆம் ஆண்டில், 986 தட்டுகள் இதுபோல் தெரிந்துள்ளன. சென்ற வருடம் இந்த எண்ணிக்கை 1981ஆக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, ஒண்டாரியோ மாகாணத்தில் 40 சதவிகிதமாகவும், மற்ற மாகாணங்களிலும், சஸ்கட்சவா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு தவிர, இது போன்ற ஒளித்தோற்றத்தையோ, பறக்கும் பொருட்களையோ மக்கள் அடிக்கடி பார்க்கின்றனர்.



சிரியப் படையினரைப் பிடித்து சுட்டுக்கொல்லும் மற்றொரு வீடியோவை வெளியிட்டது கிளர்ச்சிக்குழு!
[Friday, 2013-05-17 08:04:35]

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நூஸ்ரா என்ற அமைப்பு கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இவர்கள் சிறைபிடித்த 11 ராணுவ வீரர்களுக்கு சமீபத்தில் மரண தண்டனை நிறைவேற்றினர். கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள டைர் அல்-ஷோர் என்ற இடத்தில் இத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்பாவி மக்களை படுகொலை செய்ததற்காக இந்த தண்டனை நிறைவேற்றியதாக கூறி வீடியோ காட்சியையும் வெளியிட்டனர்.சிரியா ராணுவத்தை சேர்ந்த 11 வீரர்களும் கண்களை கட்டி, மண்டியிட செய்து வரிசையாக நிறுத்தி வைத்து இவர்களின் தலை பின்புறத்தை ஒருவர் துப்பாக்கியால் சுடுகிறார்.



மகாசேன் புயலால் கடலில் இராட்சத அலைகள் தாண்டவம் - 45 பேர் பலி!
[Friday, 2013-05-17 07:59:26]

மகாசேன் புயல் காரணமாக வங்காளதேச கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. 10 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மியான்மார் மற்றும் வங்காளதேசத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்ததுடன், 45 பேர் பலியானார்கள். வங்கக்கடலில் உருவான மகாசேன் புயல் வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாடுகளை நோக்கி நகர்ந்தது. அது வங்காளதேசத்தில் சிட்டகாங் அருகே கரையை கடக்கும் என்றும், அப்போது 100 கிலோ மீட்டர்(60 மைல்கள்) வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.



நிதிச்சந்தையில் ஊடக வணிகம் செய்பவர்களின் சக்தியை கட்டுப்படுத்தவேண்டும்: - போப் பிரான்சிஸ் கண்டனம்
[Thursday, 2013-05-16 22:18:33]

பார்வைக்குத் தெரியாத கொடுங்கோலாட்சியை பணம் செய்கிறது என்று சாடியுள்ள போப் பிரான்ஸிஸ் உலகத்தலைவர்கள் சந்தைகள் மற்றும் நிதிச்சந்தையில் ஊடக வணிகம் செய்பவர்களின் சக்தியை கட்டுப்படுத்தவேண்டும் என்று கோரியிருக்கிறார். வத்திக்கானில் தூதர்களிடம் பேசிய போப் பிரான்சிஸ், முகமில்லாத உலகப் பொருளாதரம் செலுத்தும் சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழும் மக்களுக்கு உதவ, அவசரமாகத் தேவைப்படும் சீர்திருத்தங்கள் அவசரமாகத் தேவைப்படுகின்றன என்றார்.



கூகுள் நிறுவனப் பங்கு 1000 டொலரை எட்டி சாதனை!
[Thursday, 2013-05-16 17:54:41]

தொழில்நுட்ப உலகில் முதல் நிறுவனம் என்ற வகையில், கூகுள் நிறுவன பங்குகளின் பங்கு ஆயிரம் டொலருக்கு உயர்ந்தது.கடந்த சில மாதங்களாகவே தொழில்நுட்ப நிறுவன பங்குகள் உயர்ந்தே வந்தன. பங்கு 900 டொலர் என்ற அளவை எட்டிப் பிடித்த கூகுள், மீண்டும் உயர்வைச் சந்தித்து சாதனை படைத்துள்ளது. வித்தியாசமான கண்டுபிடிப்புகள், குறிப்பாக கண்ணாடி மற்றும் கண்ணாடியிழை பொருள்கள் உள்ளிட்டவற்றைச் சந்தைப் படுத்தி லாபத்தை அதிகரித்துள்ளது கூகுள். இதற்கு நேர்மாறாக வால் ஸ்டீர்ட்டைப் பொறுத்தவரை, ஆப்பிள் நிறுவனம் பங்கு 500 டொலர் என்ற அளவுக்கு சரிவு கண்டுள்ளது.



டெக்ஸாசை புரட்டிப் போட்ட சூறாவளி - 6 பேர் பலி!
[Thursday, 2013-05-16 17:47:49]

அமெரிக்காவின் டெக்ஸாஸில் நேற்று இரவு தாக்கிய சூறாவளியில் சிக்கி 6 பேர் பலியாயினர். டெக்ஸாஸ் பகுதியில் நேற்று இரவு தாக்கிய சூறாவளியில், கிரான்பர்ரி பகுதியில் இருந்த 12க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாயின. இந்த சூறாவளியில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தன. இப்பகுதியில் வசித்து வந்த 14 பேரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.



கோக்க-கோலா தயாரிப்பு இரகசியத்தை ஒன்றரைக் கோடி டொலருக்கு ஏலம் விடப் போவதாக வர்த்தகர் அறிவிப்பு!
[Thursday, 2013-05-16 17:44:08]

புகழ்பெற்ற குளிர் பானமான கோக்க-கோலா உலகம் முழுவதும் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. 1943-ம் ஆண்டிலிருந்து ஒரே மாதிரி சுவையுடன் கோக்க-கோலா தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தயாரிப்புக்கான ரகசிய குறிப்புகள் அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் உள்ள டவுன்ட்டவுன் நகரில் உள்ள பழங்கால பேழை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்தது. அமெரிக்காவில் பழங்கால பொருட்களை விலைக்கு வாங்கி விற்கும் கிளிஃப் க்ளூக் என்பவர் தற்போது கோக்க-கோலாவின் தயாரிப்பு ரகசியம் என்னிடம் உள்ளது என்று பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.



வங்கதேசத்தைத் தாக்கத் தொடங்கியது மகாசென் புயல் - இதுவரை 6 பேர் பலி, 10 இலட்சம் பேர் இடம்பெயர்வு!
[Thursday, 2013-05-16 17:15:26]

மகாசென் புயல் வங்கதேசத்தின் தாழ்வான கடற்கரையோரங்களையும் மேற்கு பர்மாவையும் தாக்கியுள்ளது. மணிக்கு நூறு கிலோமீட்டர்கள் வரையிலான காற்று அங்கு வீசுகிறது. இதுவரை வங்கதேசத்தில் ஆறு பேர் இறந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. கடுமையான மழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் பல கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. கடும் மழை, புயலை பலவீனப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சூறாவளி தற்போது சிட்டாகொங் மற்றும் கொக்ஸ் பஷார் ஆகிய துறைமுக நகரங்களை கடந்துள்ளது.


NIRO-DANCE-100213
TamilsGuid-191012-2013
Suresh-remax-2013-01-01
Canada Kanthasamy Kovil
TDE_Computers2011
Mahesan supramaniyam 031109
RoyaShades-l2011(04-12-11)
INNSYS-20120930
Ramans2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com