Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 18, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
விஸ்வரூபம் படத்தின் கதை பற்றி கமல் கூறியது..
[Monday, 2012-06-11 07:13:04]
News Service

ஹாலிவுட் பாணியில் தயாராகி இருக்கும் விஸ்வரூபம் படத்தின் டிரைலர் மற்றும் படக்காட்சிகளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் நடந்து வரும் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் வெளியிட்டார் நடிகர் கமல்ஹாசன். பயங்கரவாதமும், அதற்கு எதிரான போராட்டம்தான் படத்தின் கதை என்பது ட்ரைலரை பார்க்கும் போதே தெரிகிறது.

  

அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் இதுவரை பார்த்திராத இடங்களில் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். ஒன்றரை நிமிடம் ஓடும் இந்த ட்ரைலரில், படத்தின் பிரமாண்டம் தெரிகிறது. அதுமட்டுமல்ல படத்தில் கதக் டான்சராகவும் மிரட்டியுள்ளார் கமல்.

விஸ்வரூபம் படம் குறித்து சிங்கப்பூரில் கமல் கூறியதாவது, கடந்த 7 வருடங்களாக என மனதில் பதிந்திருந்த கதை தான் விஸ்வரூபம். அமெரிக்காவில் தனது மேற்படிப்பை முடிக்க நினைத்த ஒரு நடுத்தர வர்க்கத்து தமிழ்ப் பெண் நிருபமா, அங்குள்ள விஸ்வநாதனை திருமணம் செய்து கொள்கிறாள். 3 வருடம் காதல், ஊடல், கூடலின்றி இல்லறம் நடத்தி பி.எச்.டி. முடித்து வேலைக்கும் செல்கிறாள். தனது நடன பள்ளியை சம்சாரம் இடைஞ்சலின்றி நடத்தி வருகிறார் விஸ்வநாத். ஆசை யாரைவிட்டது. நிருபமா வேறு புதுக்கனவு காணுகிறாள். திருமணத்தை துறக்க விரும்புகிறாள். மன முறிவிற்கு என்ன காரணம் சொல்வது என குழம்புகிறான். விஸ்வநாத்திடம் ஏதாவது களங்கம் உள்ளதா என்பதை துப்பறிய ஒரு ஆளை அமர்த்துகிறாள். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகிறது என்றோடு முடித்து கொண்ட கமல் மீதியை திரையில் நீங்களே பாருங்கள் என்று கூறி முடித்துவிட்டார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இயக்குனரை மெய்சிலிர்க்க வைத்த பார்வதி..
[Monday, 2013-06-17 18:24:48]

சசி இயக்கிய பூ படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாகவே மாறி நடித்திருந்தவர் பார்வதி. அவரை படத்தில் பார்த்து விட்டு நேரில் பார்த்தால் ஆள்அடையாளமே தெரியாது. அந்த அளவுக்கு நிஜத்தில் மாடர்ன் யுக பெண்ணாக இருப்பார் பார்வதி. அதேபோல் தனுசுடன் நடித்துள்ள மரியான் படத்திலும் அவருக்கு மீனவ பெண் வேடம். அவர் நினைத்துகூட பார்த்திராத மாறுபட்ட கதாபாத்திரம். வழக்கமான, காதலியாகத்தான் வருகிறார் என்றாலும், விரட்டி விரட்டியடிக்கும் தனுசை துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சிகளில் இதுவரை சினிமா ரசிகர்கள் பாத்திராத வகையில் மெய்யாலுமே தத்ரூபமாக நடித்துள்ளாராம் பார்வதி. அவரது நடிப்பு பார்த்து பட டைரக்டர் பரத்பாலா பல இடங்களில் மெய்சிலிர்க்க வைத்து விட்டதாம்.



பிரியாணிக்காக ஐபோனை பரிசளித்த கார்த்தி..!
[Monday, 2013-06-17 18:11:54]

பிரியாணி படத்தை நன்றாக இயக்கியதற்காக வெங்கட் பிரபுக்கு ஐபோன் ஒன்றை பரிசாக அளித்துள்ளாராம் கார்த்தி. சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரானார் கார்த்தி. இதனையடுத்து மங்காத்தா வெற்றிக்கு பிறகு, கார்த்தி- ஹன்சிகாவின் நடிப்பில் பிரியாணி படத்தை இயக்கியுள்ளார். பருத்திவீரன் படத்திற்கு பிறகு சரியாக சொல்லிக் கொள்ளும் படி படம் ஒன்றும் கார்த்திக்கு அமையவில்லை என்பது தான் உண்மை. அடுத்தடுத்து வந்த சகுனி, அலெக்ஸ்பாண்டியன் என அனைத்தும் பிளாப் ஆகியதில் நொந்து நூடுல்ஸ் ஆனார் கார்த்தி. இந்நிலையில் வெங்கட் பிரபுவின் பிரியாணி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் கார்த்தி. ரசிகைகளின் எதிர்பார்ப்பிற்கேற்ப கார்த்தியை வித்தியாசமாக காட்டும் முயற்சியில் இறங்கிய வெங்கட்பிரபு, அதில் வெற்றியும் பெற்றார். படம் முடிவடையும் நிலையில், படத்தைப் பார்த்த கார்த்தி அப்படியே ஷாக் ஆயிட்டாராம். இயக்குர் வெங்கட் பிரபுவின் திறமையைப் பார்த்து மகிழ்ந்து அவருக்கு ஐபோன் 5 ஒன்றை பரிசாகவும் அளித்திருக்கிறார் கார்த்தி.



முதன்முறையாக பாலிவுட்டில் கால்பதிக்கும் அனுஷ்கா..
[Monday, 2013-06-17 18:07:39]

கொலிவுட்டில் சூர்யாவுடன் சிங்கம் 2 படத்தில் நடித்த அனுஷ்கா, தற்போது முதன் முறையாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். நான் ஈ பட இயக்குநர் ராஜ மௌலி இயக்கும் பாஹூபாலி படத்தில் அனுஷ்கா நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு தவிர பாலிவுட்டிலும் உருவாகிறது. இதன் மூலம் முதல் முறையாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார் அனுஷ்கா. இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு யூலை மாதம் முதல் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் நடிப்பதற்காக பாரம்பரிய கத்திச் சண்டை பயிற்சிகளை அனுஷ்கா எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.



எந்த சூழ்நிலையிலும் விஜய்யை வைத்து படம் இயக்க போவதில்லை - சுந்தர்.சி
[Monday, 2013-06-17 18:02:11]

எந்த சூழ்நிலையிலும் விஜய்யை வைத்து படம் இயக்க போவதில்லை என தெரிவித்துள்ளார் சுந்தர்.சி. சமீபத்தில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் ரசிகர்கள் காட்சியில் கலந்து கொண்டார் அப்படத்தின் இயக்குநர் சுந்தர்.சி. அப்போது அவர் பேசுகையில், தல அஜித் நடிப்பில் நான் இயக்கும் படம் குறித்து அஜித்தே அறிவித்தால் நன்றாக இருக்கும். அவரிடம் தனிப்பட்ட முறையில் நான் பேசியதை பற்றி வெளிப்படையாக கூறினார் அவருக்கு பிடிக்காது. விரைவில் இருவரும் இணையும் படம் பற்றி தகவல்கள் வெளிவரும். நகைச்சுவை நடிகர்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தவர் கவுண்டமணி. மீண்டும் அவரோடு இணையும் நாளை எதிர்பார்க்கிறேன்.



சித்தார்த் எனக்கு ரொம்பவும் மேட்ச்சான ஜோடி - ஹன்சிகா: ஆடிப்போயுள்ள சமந்தா..
[Monday, 2013-06-17 17:54:52]

ரசிகர்கள் மட்டுமின்றி, நாயகர்களாலும் அதிகம் விரும்பப்படும் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் ஹன்சிகா. நாயகி என்ற பந்தாவும், ஏனோ தானோ என்றும் இல்லாமல் தனது முழுதிறமையையும் வெளிப்படுத்தி நடிப்பதால் இயக்குனர்களாலும் அதிகம் விரும்பப்படும் நாயகியாகி விட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், எந்த காட்சியாக இருந்தாலும் நான் முழு திருப்தி அடையும் வரை நடிப்பேன். அதற்காக ஓவர் ஆக்டிங் செய்ய மாட்டேன். தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளேன். சித்தார்த் எனக்கு ரொம்பவும் மேட்ச்சான ஜோடி. படத்தில் எங்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது என கூறியுள்ளார். இதுமட்டுமல்லாமல் சீனை சொன்னதும் கமெரா முன்பு வந்து நிற்பவர், எந்தவித தயக்கமும் இல்லாமல் எள் என்றால் எண்ணெய்யாக நடிப்பை பொறிந்து தள்ளி வருகிறார் என இயக்குனர் சுந்தர்.சி புகழாரம் சூட்டியுள்ளார்.



யுவன் - இசைஞானி இசையில் இளையதளபதியின் ஹாலிவுட் படம்..!
[Monday, 2013-06-17 17:44:22]

இசைஞானி இளையராஜாவும், அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து ஹாலிவுட் படத்துக்கு இசையமைக்க உள்ளார்கள். இயக்குனர் பி.வாசுவின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு கர்ரி இன் லவ் என தலைப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் விஜய் - சோனம் கபூரை ஜோடியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. கர்ரி இன் லவ் படத்தின் கதை திரைக்கதையை அமெரிக்க தமிழரான ராஜ் திருச்செல்வன் எழுதியுள்ளார். இளையராஜா ஏற்கெனவே ரஜினி நடித்த ஹாலிவுட் படமான ப்ளட் ஸ்டோனுக்கு இசையமைத்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் அவர் பாடல்கள் பாடி இருந்தாலும், அப்பாவும் மகனும் இணைந்து ஒரு படத்துக்கு இசையமைப்பது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



நம்பர் ஒன் நாற்காலியில் மீண்டும் ஹாயாக அமர்ந்திருக்கும் ஹன்சிகா!
[Monday, 2013-06-17 17:34:34]

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்குப்பிறகு வெற்றிப்பட நாயகி பட்டியலில் இடம் பிடித்தவர் ஹன்சிகா. அதன்பிறகு அவரே நினைத்துப்பார்க்காத அளவுக்கு மளமளவென்று முன்னணி நடிகர்களின் படங்களாக அவரது பாக்கெட்டிற்குள் எகிறி குதித்தன. இதனால் கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை அந்தஸ்தை பெற்றார் ஹன்சிகா. ஆனால் அதன்பிறகு அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் ஊத்திக்கொண்டன. அதிலும் சேட்டை படத்தின் தோல்வி ஹன்சிகாவை ஆட்டம் காண செய்து விட்டது. இப்படியே இன்னும் இரண்டு படங்கள் ஓடவில்லை என்றால் மார்க்கெட் காலியாகி மும்பைக்கு வண்டியை பிடித்து விட வேண்டியதான் என்று மன பயத்தில் அவர் நடித்து வந்த நேரம்தான் தீயா வேலை செய்யணும் குமாரு படம் வெற்றி பெற்று ஹன்சிகாவின் பயம் நீக்கியுள்ளது. இதனால் மீண்டும் உற்சாகம் அவரை தொற்றிக்கொண்டுள்ளது.



விரதமிருந்து அசைவம் சீண்டாமல் அம்மன் வேடத்தில் நடித்த கோவை சரளா!
[Monday, 2013-06-17 17:29:22]

மனோரமாவிற்கு பிறகு அம்மா வேடம், காமெடி வேடம், குணசித்ர வேடம் என்று கலக்கிக்கொண்டிருப்பவர் கோவை சரளா. லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படத்தில் அம்மா வேடத்தில் நடித்த கோவை சரளாவிற்கு அதன்பிறகு தமிழை விட தெலுங்கில் மார்க்கெட் எகிறி விட்டது. அதனால் ஒரு வருடமாக ஐதராபாத்தில் முகாமிட்டு நடித்து வந்தவர், இப்போதுதான் தமிழ்நாட்டுப்பக்கம் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறார். வாலு டைட்டீல் எங்களுக்குத்தான். நாங்கள்தான் அந்த டைட்டீலை முதலில் பதிவு செய்தோம் என்று சிம்புவுடன் மல்லுக்கட்டிய இன்னொரு வாலு படத்தில் தற்போது மாமியார் வேடத்தில் நடித்துள்ளார் கோவை சரளா. (அப்படமும் இப்போது ரெட்ட வாலு என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது) இதில் படம் முழுக்க தனது மருமகன் தம்பி ராமைய்யாவை காய்ச்சி எடுக்கும் வேடத்தில் நடித்துள்ள சரளா, ஒரு காட்சியில் சாமியார் கோலத்தில் தன்னுடன் மோதும் தம்பிராமைய்யாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தானும் அம்மன் கெட்டப்பில் மாறி நடித்துள்ளாராம்.



பி.வாசு இயக்கும் ஹாலிவுட் படத்தில் நாயகனாக விஜய்..!
[Monday, 2013-06-17 17:23:23]

தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் பி.வாசு, ஹாலிவுட்டில் கால்பதிக்கிறார். தனது முதல்படத்தையே த்ரில்லிங்கான பேய் படமாக உருவாக்குகிறார். பணக்காரன், உழைப்பாளி, சின்னதம்பி, மன்னன், சந்திரமுகி உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கியவர் பி.வாசு. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 60 படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது முதன்முதலாக ஹாலிவுட்டில் ஒரு படம் இயக்க உள்ளார். படத்திற்கு "கரி இன் லவ்" என்று பெயர் வைத்துள்ளனர். இப்படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பி.வாசு கூறியதாவது, நான் புதிய படத்துக்கான கதை‌ விவாதத்தில் இருந்தபோது, அமெரிக்க வாழ் தமிழர் ராஜ்திருச்செல்வம் என்பவர் என்னிடம் பேசினார். அப்போது தங்களது சந்திரமுகி படத்தை பார்த்தேன், அதேப்போன்று பேய் படம் ஒன்றை ஹாலிவுட்டில் தயாரிக்க உள்ளேன், அப்படத்தை நீங்கள் டைரக்ட் செய்தால் நன்றாக இருக்கும் என்றார்.



முனி பாகம் - 3இல் நாயகியாக அஞ்சலி!
[Monday, 2013-06-17 17:16:06]

முனி படத்தின் இரண்டாம் பாகமான காஞ்சனாவை பெரிய ஹிட் படமாக கொடுத்த ராகவா லாரன்ஸ், அப்படத்தின் மூன்றாம் பாகமான கங்கா படத்தை இன்னும் பெரிய அளவில் வெற்றிப்படமாக கொடுத்து விட வேண்டும் என்று நினைக்கிறார். அதனால்தான், இரண்டாம் பாகத்தை முடித்த கையோடு மூன்றாம் பாகத்தின் வேலைகளில் இறங்காமல், பல மாதங்களாக அதற்கான கதை விவாதத்தை நடத்தி வந்தார். மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படத்தை இயக்கும் லாரன்ஸ், தமிழ்ப்பதிப்பில் ஹீரோயினியாக நடிக்க டாப்ஸியை புக் பண்ணிவிட்டவர், தெலுங்கில்தான் சில மாதங்களாக தனது கதைக்கு பொருத்தமான நடிகையை தேடி வந்தார். ஆனால், இவர் கால்சீட் கேட்க நினைக்கும் நடிகைகள் வருடக்கணக்கில் தங்கள் கால்சீட் டைரியை புல் பண்ணி வைத்திருக்கிறார்களாம். அதனால், இப்போது அஞ்சலியை தெலுங்கு பதிப்புக்கு புக் பண்ணி விட்டாராம் லாரன்ஸ்.



வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - மீண்டும் சந்தானம் நாயகன் அவதாரம்!
[Sunday, 2013-06-16 21:29:18]

சேட்டை படத்துக்குப்பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு படம் தன்னை கைதூக்கியிருப்பதாக நினைக்கிறார் சந்தானம். ஏற்கனவே கலகலப்பு படத்தில் அஞ்சலியின் முறைப்பையனாக தன்னை கலகலப்பூட்ட வைத்த சுந்தர்.சி, இந்த முறை நாயகன் சித்தார்த்துக்கே காதல் ஐடியா கொடுக்க வைத்ததால் சுந்தர்.சி மீதான சந்தானத்தின் மரியாதை பலபடி உயர்ந்து நிற்கிறதாம். அதேசமயம், காமெடி என்ற பெயரில் தன்னை காலி பண்ணிய சில இயக்குனர்களையும் அவர் மறக்கவில்லை. குறிப்பாக சேட்டை படத்தில் தன்னை படம் முழுக்க டாய்லெட்டுக்குள்ளேயே உருண்டு புரள வைத்த இயக்குனர் கண்ணன் போன்றவர்கள் மீது செம கடுப்பிலும் இருந்து வருகிறார். அதனால் தான் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கும் படாதிபதி, அந்த படத்தை இயக்கும் பொறுப்பினை இயக்குனர் கண்ணனிடம் ஒப்படைக்க முற்பட்டபோது அதை தடுத்து விட்டாராம் சந்தானம். மேலும், அவரை விட ஒரு நல்ல டைரக்டரை நான் தருகிறேன் என்று காமெடி நடிகர் ஸ்ரீநாத்தை கைகாட்டி விட்டாராம்.



ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்கவும் சிம்ரன் தயார்!
[Sunday, 2013-06-16 21:24:24]

தமிழ் சினிமாவில் நதியா, குஷ்புவுக்குப்பிறகு பேசப்பட்ட ஒரு கதாநாயகி சிம்ரன். ஆரம்பத்தில் கிளாமரை முன் வைத்து நடித்தாலும், பின்னர் சிறந்த பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்ட் என்ற இடத்தை பிடித்தார். இதனால் அவரது கதாநாயகி ஆயுட்காலம் அதிக ஆண்டுகள் நீடித்தது. இருப்பினும், காலத்தின் கட்டாயம் அதற்கடுத்து வந்த ஜோதிகா மார்க்கெட்டை பிடித்துக்கொள்ள பின்தங்கினார் சிம்ரன். இதையடுத்து தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டவர் ஒரு குழந்தை பெற்ற கையோடு, மீண்டும் கோலிவுட்டில் பிரவேசித்தார். அப்போதும் அவரது உடல்கட்டு சைஸ் மாறாமல் இருந்ததால், மீண்டும் ஹீரோயினியாக நடிக்க ஆசைப்பட்டார். அதற்காக தான் டூயட் பாடிய நடிகர்களை சந்தித்து சிபாரிசு கோரினார். ஆனால், திருமணமாகி விட்ட ஒரே காரணத்துக்காக அவரைக்கண்டு முகத்தை திருப்பிக்கொண்டார்கள்.



அமிதாப்பச்சனை பின்தள்ளி இந்தியாவின் சிறந்த தந்தையாக ஷாரூக்கான் தேர்வு!
[Sunday, 2013-06-16 17:59:41]

உழைப்பாளர் தினம், ஆசிரியர் தினம், அன்னையர் தினம், மாணவர் தினம், பெண்கள் தினம் என்று கொண்டாடப்பட்டு வருவதைத் தொடர்ந்து இப்போது தந்தையர் தினத்தையும் பெரிய அளவில் கொண்டாடத் தொடங்கி விட்டனர். இன்று([ஜூன் 16ம் தேதி) தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இந்தியாவின் சிறந்த தந்தை யார்? என்று ஒரு இணையதளத்தில் ஓட்டெடுப்பு நடத்தியுள்ளனர். அதில், ஆண்கள் இல்லாமல் 11 ஆயிரம் பெண்களை மட்டுமே ஓட்டளிக்க வைத்துள்ளனர். இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த பெண்கள் இந்திய அளவில் சிறந்த தந்தை யார் என்பதற்கு தங்களது மேலான கருத்துக்களை ஓட்டுகள் மூலம் தெரிவித்துள்ளனர். அதில், 34.83 சதவிகிதம் ஓட்டுகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளார் இந்தி நடிகர் ஷாரூக்கான். அவரைத் தொடர்ந்து நடிகர் அமிதாப்பச்சன் 31.58 சதவிகிதம் பெற்று இரண்டாம் இடமும், 18.61 சதவிகிதம் பெற்று சச்சின் டெண்டுல்கர் மூன்றாம இடத்திலும் உள்ளார். இந்த தகவலை ஷாரூக்கானுக்கு தெரியப்படுத்தியபோது, மிகுந்த மகிழச்சியடைந்தவர். தனக்கு ஓட்டளித்த அனைத்து பெண்களுக்கும் மனதார நன்றி தெரிவித்துக்கொண்டாராம்.



சீக்கிரமே அம்மாவாக வேண்டும் போல் உள்ளது - சமந்தா
[Sunday, 2013-06-16 17:50:30]

தற்போது தெலுங்கு சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார் சமந்தா. அதோடு அடுத்து தமிழுக்கும் என்ட்ரி ஆகிறார். இந்த நேரத்தில், சித்தார்த்துடன் அவரை இணைத்து காதல் மற்றும் கல்யாண செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால், இதன்காரணமாக சமந்தாவின் சினிமா மார்க்கெட் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. எப்போதும் போலவே பிசியாக, ஜாலியாக இருந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தனது டுவிட்டரில், தனக்கு அம்மாவாகும் ஆசை வந்திருப்பதாக தெரிவித்துள்ளார் சமந்தா. அந்த ஆசை ஏற்பட்டதற்கான காரணத்தை அவர் கூறும்போது, நான் ஒரு தெலுங்கு படப்பிடிப்பில் இருந்தபோது அங்கு ஒருவர் தனது குழந்தையை கொண்டு வந்திருந்தார். என்னைப்பார்த்ததும் அந்த குழந்தை பூவாக சிரித்தது. அதோடு என்னிடம் தாவி வந்து உட்கார்ந்து கொண்டது. பெற்றோர் அழைத்தும் என்னை விட்டு செல்ல அடம்பிடித்தது. அந்த குழந்தை எனக்கு ரொம்பவே பிடித்து விட்டது. சில நிமிடங்களிலேயே அந்த குழந்தை என்னை விட்டு பிரிந்து சென்றாலும், அதன் முகமும் சிரிப்பும் என் மனதை விட்டு விலகாமல் நிற்கிறது.



விஜய் தரப்பின் எதிர்ப்பையும் மீறி நாசரை தலைவாவுக்குள் புகுத்திய இயக்குனர்!
[Sunday, 2013-06-16 17:42:03]

சினிமா உலகம் செண்டிமென்ட் நிறைந்தது. ஒரு படம் வெற்றி பெற்றால் அதே கூட்டணி தொடருவார்கள். அதேபோல், சில நடிகர்-நடிகையரை தங்களது செண்டிமென்ட் கலைஞர்களாக கருதுவார்கள் சில இயக்குனர்கள். அப்படி நடிகர் நாசரை தனது முதல் படத்திலிருந்தே நடிக்க வைத்து வருபவர் இயக்குனர் விஜய். ஆனால், விஜய்யை வைத்து அவர் இயக்கியிருக்கும் தலைவா படத்திற்கு நாசரை புக் பண்ணுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டது. காரணம், இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து நிற்கும் தயாரிப்பாளர் சங்கத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சிக்கு எதிர்கோஷ்டியை சேர்ந்தவர் நாசரின் மனைவி கமீலா. அதனால், தலைவா பூஜைக்கு நாசர் சென்றபோது சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நாசரை படத்தில் சேர்த்தால் பிரச்சினைகள் வெடிக்கும் என்பதை உணர்ந்து கொண்டாராம் டைரக்டர்.



'சினேகாவின் காதலர்கள்' - பதறிப்போன சினேகா..
[Sunday, 2013-06-16 17:38:02]

பிரசாந்துடன் விரும்புகிறேன் என்ற படத்தில் அறிமுகமானவர் சினேகா. அதன்பிறகு படிப்படியாக வளர்ந்து கமல்ஹாசன் வரை ஜோடி சேர்ந்து ஒரு பெரிய ரவுண்டே வந்தார். பின்னர், தனது மார்க்கெட் சறுக்கிக்கொண்டு வந்த நேரத்தில் விஜயசாந்தி பாணியில் பவானி ஐபிஎஸ் என்றொரு படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்திலும் நடித்து தனக்குள் இருந்த ரப் அண்ட் டப் சினேகாவை வெளியே கொண்டு வந்தார். அதையடுத்து, அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோதிலிருந்தே தான் காதலித்து வந்த நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு இல்லத்தரசி ஆனார் சினேகா. இருப்பினும் நடிப்பு ஆசை அவரை ஆட்டுவிக்க, சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடிப்பவர், உன் சமையல் அறையில், பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.



மரியான் பட நாயகிக்கு தனுஷ் யாரென்றே தெரியாதாம்..!
[Saturday, 2013-06-15 18:31:14]

சமீபத்தில் ஒரு தமிழ் முன்னணி சினிமா பத்திரிகையில் பூ பார்வதியின் பேட்டி ஒன்று வந்திருந்தது. அதில் தனுஷ் யாரென்றே எனக்கு தெரியாது என்று பதில் அளித்திருப்பதாக வந்திருந்தது. இதை கேள்விப்பட்ட தனுஷ் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து ஃபேஸ்புக்கில் அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். மரியான் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துவிட்டு, அவரை யாரென்று தெரியாது என்று கூறுவது அதிகப்பிரசங்கித்தனமான பேட்டி என்று அவருக்கு எல்லா பக்கங்களில் இருந்து கண்டனங்கள் பறந்து வந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த பார்வதி, அந்த பேட்டியில் தன்னுடைய பதில் தவறாக திரித்து பிரசுரிக்கப்பட்டிருப்பதாகவும், மரியான் படத்தில் நடிப்பதற்கு முன் அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று பதில் அளித்திருந்ததை திரித்து, வெளியிட்டு இருக்கிறார்கள் என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.



கோட் சூட்டிலிருந்து வேட்டி சட்டைக்கு மாறிய தல..
[Saturday, 2013-06-15 18:17:41]

கொலிவுட்டில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பெயரிடப்படாத அஜித் படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைந்து விட்டது. இப்படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸியுடன் அஜித் நடித்துள்ளார். இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்திற்கும் இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இதில் அஜித்திற்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இப்படத்தின் கதை கிராமத்து பின்னணியில் நடப்பதாக உருவாகிறது. தொடர்ந்து கோட் சூட் அணிந்து நடித்து வந்த அஜித் இதில் படம் முழுக்க வேட்டி, சட்டை அணிந்தே நடிக்கிறார். பாடல் காட்சிகளில் மட்டும் மாடர்ன் உடை அணிந்து வெளிநாடுகளில் டூயட் பாட உள்ளார். இதற்காக விரைவில் ஐரோப்பிய நாடுகளுக்கு அஜித்துடன் படக் குழுவும் கிளம்புகிறது. இப்படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த பெயரிடப்படாத படமும் டிசம்பரில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இயக்குனர் அவதாரம் எடுக்கும் பிரியங்கா திரிவேதி..
[Saturday, 2013-06-15 18:10:37]

தமிழில் ராஜ்ஜியம், ராஜா, காதல் சடுகுடு படங்களில் நடித்தவர் பிரியங்கா திரிவேதி. இவர் கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் நடிப்பை விடாமல், அடுத்ததாக படம் இயக்க திட்டமிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், எனிமி என்ற இந்தி படத்தில் 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கவுரவ வேடத்தில் நடித்தேன். ஓய்வு நேரங்களில் சில கதைகள் எழுதினேன். ஆக்ஷன் கலந்த காதல் கதை ஒன்று ரெடியாக இருக்கிறது. ஒரு படம் இயக்கவும் முடிவு செய்திருக்கிறேன். தற்போது எனது பிள்ளைகள் வளர்ந்திருக்கிறார்கள். அவர்கள் உலக விஷயங்கள் எவ்வளவு கற்க விரும்புகிறார்களோ அந்தளவுக்கு கற்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். புதிய இடங்களுக்கு அவர்களை அழைத்து செல்வேன். குறிப்பாக சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களுக்கு சென்றால் அவர்களுக்கு வாழ்க்கையை பற்றிய புதிய பரிமாணங்களை அறியும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.



நாயகனாக தான் நடிப்பேன் என அடம்பிடித்து வடிவேலு நடிக்கும் கஜபுஜகஜ தெனாலிராமன்..
[Saturday, 2013-06-15 18:00:53]

இரண்டாவது இன்னிங்சில் என்ட்ரி ஆனால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று ஆறு மாதமாக அடம்பிடித்துக்கொண்டிருந்த வடிவேலு, ஒரு வழியாக கஜபுஜகஜ தெனாலிராமன் படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் ஏற்கனவே நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி பட பாணியில் வரலாற்று கதையம்சம் கொண்ட படம் என்பதால் மன்னர் கெட்டப்பில் காணப்படுகிறார் வடிவேலு. சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்று வரும் இதன் படப்பிடிப்பிற்கு தலைமுறை கண்ட ஆரூர்தாசும் விசிட் அடித்து வடிவேலுவின் வசன உச்சரிப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறார். இவர் ஏன் வடிவேலு பேசுவதை கவனிக்க வேண்டும் என்கிறீர்களா? இந்த தெனாலிராமன் படத்தை இயக்குவது யுவராஜ் என்றாலும், படத்துக்கு வசனம் எழுதியிருப்பது ஆரூர்தாஸ் தான். எம்.ஜி.ஆர்,. சிவாஜி, ஜெமினிகணேசன் போன்ற காலஞ்சென்ற முன்னணி நடிகர்களுக்கெல்லாம் வசனம் எழுதிய இவர், இப்போது வடிவேலுவுக்கும் எழுதியிருக்கிறார்.


AJRwindows22.05.13
TamilsGuid-191012-2013
Ramans2011
INNSYS-20120930
TDE_Computers2011
RoyaShades-l2011(04-12-11)
Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com