Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 25, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
செல்போன்களால் ஏற்படும் ஆபத்துக்கள்..
[Friday, 2012-07-27 20:33:14]
News Service

செல்போன் என்று அழைக்கப்படும் கைத்தொலைபேசிகளை பாவிப்போரின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. புதிய புதிய வடிவங்களில் செல்போன்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. வாங்குவோர் இருக்கும் வரைக்கும் புதிய புதியதாக விற்பனைக்கு வரத்தானே வேண்டும் கைத்தொலைபேசிகள்.

  

செல்போன்களால் நன்மையையும் உண்டு, அதனைவிட தீமையும் உண்டு என்பதை யாராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது . இது நமக்கு எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். நாம் எந்த விடயத்திலும் நல்ல விடயங்களை எடுத்து கொள்ள வேண்டும். கெட்ட விடயங்களை எடுத்து கொள்ள கூடாது.

செல்போனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ‎நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. தேவையே இல்லாவிட்டாலும் கூட இரண்டு, மூன்று ‎செல்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ‎பலவிதமான நோய்கள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிக நேரம் செல்போனில் பேசுவதால் கழுத்து, கை, காது போன்றவற்றில் வலி ஏற்படுகிறது. சிலர் ‎பேசும்போது காதுக்கும், தோள்பட்டைக்கும் இடையில் செல்போனை வைத்து அழுத்திக் கொண்டு பேசுவர். இவ்வாறு தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் கழுத்தில் வலி ‎ஏற்படுவதுடன், விரைவிலேயே கழுத்தில் உள்ள எலும்புகள் பாதிக்கப்பட்டு வளைந்துவிடும். இதிலும் கவனம் தேவை.

மக்களுக்கு பலனுள்ளதை, பயனுள்ளதை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லா கண்டுபிடிப்பாளர்களும் தங்கள் படைப்புகளை வெளியிட்டாலும் நன்மையான காரியங்களுக்கு இவைகள் பயன்படுவதைப் போல் தீமையான காரியங்களுக்கும் பயன்படுகின்றன. நல்ல நல்ல செய்திகளை பரிமாறிக்கொள்ள வேண்டிய மாணவ மாணவிகள் ஆபாச குறுஞ்செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் சிலர் எந்த நேரமும் SMS அனுப்ப பட்டன்களை அழுத்தி ‎அழுத்தி அவர்களுடைய விரல்கள் சீக்கிரமாகவே வளைந்து தசைகள் நகர்வதற்கும் வாய்ப்புண்டு. அதுமட்டுமின்றி, அதிக நேரம் ‎பேசுவதால் காதில் உள்ள ஒலி உணர் செல்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் விரைவிலேயே கேட்கும் ‎திறன் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. மேலும், செல்போன்களில் இருந்து வெளிவரும் கதிர்களால் ‎மூளை, இதயம் போன்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.

இளையோர் முதல் முதியோர்கள் வரை எல்லோரும் செல்போன் பயன்படுத்துகிறார்கள். வீட்டில் என்ன பொருள் இல்லையோ எல்லோர் வீட்டிலும் செல்போன் கட்டாயம் இருக்கும். அதுவும் வீட்டில் உள்ள அத்தனை பேரிடமும் செல்போன் இருக்கும்.

சிலர் விளையாட்டாக முக்கிய பிரமுகர்களுக்கு செல்போன்களின் மூலம் கொலை மிரட்டல் விடுகிறார்கள். விஷயம் பெரிதாகி செய்தியை அனுப்பியவர் சிறையில் அடைக்கப்படுகிறார். விளையாட்டு வினையாகி போகிறது. எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள். ஏன் உங்களுக்கு இந்த நிலைமை வர வேண்டும் ?

வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்றாலும் சரி பேசுவதை நிறுத்தமாட்டார்கள். செல்போன்களின் மீது இவர்களுக்கிருந்த எல்லை கடந்த பாசம் விபத்திற்குக்காரணமாகி உயிரையே பறித்துவிடுகிறது.

வாகனத்தில் பல பயணிகளை ஏற்றி கொண்டு செல்கின்றோம் அல்லவா , என்னை நம்பித்தானே அவர்கள் வருகிறார்கள் என்று வாகனம் ஓட்டுபவர் சிறிது நேரம் சிந்திக்கிறாரா? இல்லை. அவர் வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்போனை பேசி கொண்டு தான் இருக்கிறார்கள். திருந்துகிறார்கள் இல்லையே.

செல்போன் அதிகளவு உபயோகிப்பதால் கருவில் இருக்கும் குழந்தைக்கு பிரச்சினைகள் வரும். மன அழுத்தம் வருகிறது தூக்கம் பாதிக்கப்படுகிறது. செல்போன்களை பெல்டில் வைத்துக்கொள்வதால் ஆண்மை குறைவு ஏற்படுகிறது .சட்டை பையில் வைப்பதால் இதயத்திற்கு பாதிப்பு வருகிறது.

வேலைக்கு போகிறவர்கள் செல்போன் உபயோகிப்பதில் தவறில்லை. ஆனால், வேலை நேரங்களில் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவதால் மனஅழுத்தம், ஆழ்ந்த தூக்கம் இன்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

செல்போனில் பேசிக் கொண்டு வீதியில் நடப்பதால், வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்படுகிறது. வீடியோ எடுத்து இன்டர்னெட்டில் உலவ விடுகிறார்கள். இது எல்லாம் எவ்வளவு பெரிய தவறு. இளம் வயதினரை பார்த்தால் எப்போதும் செல்போனில் யாருடனே பேசிக்கொண்டே இருப்பார்கள். பணம் செலவாகிறதே என்று கூட யோசிப்பதில்லை. இவர்கள் எல்லாம் எப்போது திருந்துவது என்று பெரியோர்கள் அங்கலாய்த்து கொள்கிறார்கள் மனசுக்குள்.

தேவையான நேரங்களில் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். 'நீங்களே திருந்தினால் உண்டு மற்றவர்கள் உங்களை திருத்துவதட்க்கு முதல்'. நாம் நடந்து கொள்ளும் முறையில் தான் எல்லாம் உள்ளது. நமக்கு தீங்கு என்று பட்டதை செய்யாதீர்கள். எமக்கு பாதிப்பு வரும் என்று தெரிந்தும் அவற்றின் பாவனையை குறைத்து கொள்ள வேண்டியது எமது கடமை.

எனவே செல்போன்களால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன என்பதை விளங்கி கொண்டு இருப்பீர்கள். அவற்றில் இருந்து எப்படி விடுபடலாம் என்பதை பற்றி சிந்தியுங்கள். செல்போன் பாவிக்கத்தான் வேண்டும். நான் பாவிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அப்படி சொல்லவும் மாட்டேன். நல்ல விடயங்களுக்கு , தேவைகளுக்கு பயன்படுத்துங்கள்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

செல்பேசி உலகின் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது Samsung Galaxy 4 !
[Friday, 2013-05-24 21:44:17]

செம்சுங் நிறுவனத்தின் கெலக்ஸி எஸ்4 ஸ்மார்ட் போனானது உலகில் வேகமாக விற்பனையாகிய ஸ்மார்ட் போன் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் அறிக்கையின் படி வெளியாகி 1 மாத காலப்பகுதியில் 10 மில்லியன் கெலக்ஸி எஸ் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளன. செம்சுங் கெலக்ஸி எஸ்4 வின் முன்னைய வெளியீடான எஸ் 3 இதே எண்ணிக்கையை எட்டுவதற்கு 50 நாட்கள் தேவைப்பட்டதாக செம்சுங் தெரிவிக்கின்றது. மேலும் கடந்த வருடம் மே மாதம் வெளியாகிய எஸ் 3 வரை 60 மில்லியனுக்கும் அதிகம் விற்பனையாகியுள்ளதாக செம்சுங் தெரிவிக்கின்றது.



கரப்பான் பூச்சிகள் இனிப்பை தவிர்க்கும் புத்திசாலித்தானம் வாய்ந்தவை - ஆய்வில் கண்டுபிடிப்பு!
[Friday, 2013-05-24 21:15:26]

கரப்பான் பூச்சிகளை ஒழிப்பதற்கு வீடுகளில் வைக்கப்படும் பொறிகளில் பயன்படுத்தப்படும் இனிப்பு உணவுகளை நாடாமல் இருக்கும் குணாதிசயம் சிலவகை கரப்பான் பூச்சிகளிடத்தில் இயல்பாகவே வளர்ந்திருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வகையான உணவுப் பொருட்களை அண்டாமல் இருக்கும் பழக்கம் இந்த கரப்பான் பூச்சிகளிடத்தில் ஒருசில ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்திருப்பதாகவும் வடக்கு கரோலினா அரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த வகை கரப்பான் பூச்சிகளிடத்தில் வளர்ந்துள்ள இந்தப் பழக்கம் பூகோள ரீதியிலும் உலகின் பல பாகங்களிலும் உள்ள கரப்பான் இனங்களிடத்திலும் வேகமாக பரவிவருவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.



சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கு புழுங்கல் அரிசியே சாலச்சிறந்தது!
[Friday, 2013-05-24 17:08:03]

பச்சரிசி உணவை சாப்பிட்டால் அதில் உள்ள சர்க்கரை உடனே ரத்தத்தில் கலந்து விடும். இதனால் தான் உடனடி சத்து தேவைக்காக பச்சரிசி உணவை உண்ணச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். வளரும் குழந்தைகளுக்கு பச்சரி உணவு தான் ஏற்றது. ஆனால் சர்க்கரை நோயாளிகள் இதை உண்ணக் கூடாது. புழுங்கல் அரிசியை உணவாக கொண்டால் அதில் உள்ள சர்க்கரை மெருவாகத் தான் ரத்தத்தில் கலக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள் புழுங்கல் அரிசியை உண்ணலாம். இந்த அரிசி சற்று பழுப்பு நிறமாக இருப்பதால் சிலருக்கு பிடிப்பதில்லை. இந்த நிறம் தான் இந்த அரிசியின் சிறப்புக்கே காரணம். நெல்லை அவிக்கும் போது தவிட்டில் உள்ள உயிர்ச்சத்துகள் அரிசியில் இறங்கும். இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கூடுதாலக் கிடைக்கின்றன.



கண்ணிவெடி அகற்ற நாய், எலி எதற்கு? இப்போது தேனீக்களையும் பயன்படுத்தலாம்!Top News
[Friday, 2013-05-24 13:38:10]

பொதுவாக மோப்ப சக்தி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நாய்தான். காவல் துறையிலும் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க இந்நாள்வரை மோப்ப நாய்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர, கொலை வழக்கில் துப்பு துலக்கவும் மோப்ப நாய் உதவுகிறது. சில நாடுகளில் எலிகளை வைத்து கூட வெடிகுண்டு கண்டுபிடிக்கின்றனர். இதுபற்றி பல பகுதிகளில் ஆய்வுகளும் நடந்தன. இந்நிலையில், வெடிகுண்டுகளை தேனீக்கள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனோடு இணைந்த குரோடியா நாடு, அடர்ந்த பசுமை காடுகளும், பெரிய ஏரிகளும் உடையது. இயற்கை வளம் கொழிக்கும் இந்த நாட்டில், 1990ல் பால்கன் போரின்போது புதைத்து வைக்கப்பட்ட ஏராளமான கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. சுமார் 750 சதுர கி.மீ. பரப்பளவுக்கு கண்ணிவெடிகள் ஆங்காங்கே புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.



தூசு, தண்ணீரிலிருந்து பாதுகாப்புடைய செல்பேசியினை அறிமுகப்படுத்தியது LG!Top News
[Friday, 2013-05-24 13:18:59]

முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான LG நிறுவம் Optimus GJ எனும் தொடரைக்கொண்ட அதிநவீன கைப்பேசிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. இக்கைப்பேசிகள் நீர் மற்றும் தூசிகளிலிருந்து மிகுந்த பாதுகாப்புடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் கூகுளின் Android 4.1.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டவையாகவும் காணப்படுகின்றன.



கொழுத்தும் வெயிலுக்கு குளிர்பானங்கள் மட்டுமா தீர்வு? இருக்கவே இருக்கு கம்பங்கூழ் கம்பு!
[Thursday, 2013-05-23 20:12:01]

நாம் கொளுத்தும் வெயிலில் நாம் குளிர்பானங்களை தேடிச் செல்வதுண்டு. பல வகையான வேதிப்பொருட்களும், சாயப்பொருட்களும் நிறைந்த செயற்கை குளிர்பானங்களை குடிப்பதால் பல் எனாமல் தேய்ந்து, பற்கூச்சம் ஏற்படுவதுடன், கண்டு பிடிக்க இயலாத பலவிதமான வயிற்று உபாதைகளும் உண்டாகின்றன. உடனடியாக கிடைத்தல், அவசரம், நிற ஈர்ப்பு போன்ற காரணங்களால் செயற்கை குளிர்பானங்களை நாடி அதற்கு அடிமையாகி விடுகின்றனர். செயற்கை குளிர்பானங்கள் நமது எலும்புகளை தாக்கி அவற்றின் கனிம அடர்த்தியை குறைப்பதுடன், குடற்பகுதிகளில் வாழும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் அழித்து விடுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மட்டுமின்றி வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட குளிர்பானங்களில் உள்ள நச்சுப்பொருட்கள் அதிகளவில் உட்கொள்ளப்படும் போது சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றை பாதிப்படையச் செய்கின்றன.



மனிதனை நகல் எடுக்கும் முதற்கட்ட முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை!
[Thursday, 2013-05-23 18:05:51]

மனிதனின் தோல் செல்லுடன் பெண்ணின் சினைமுட்டையை சேர்த்து ஸ்டெம் செல் கரு முட்டையை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் அபார சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான ஸ்டெம்செல்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறினர். குளோனிங் முறையில் மனிதனை ஜெராக்ஸ் எடுக்கும் முயற்சியின் முதல் கட்டம் இது என்ற பரபரப்பையும் ஏற் படுத்தியுள்ளது இந்த ஆராய்ச்சி. மனித உடலில் பல லட்சம் கோடி செல்கள் உள்ளன. இவற்றையோ, நுண்ணுயிர் களையோ மணம், நிறம், குணம் மாறாமல் அச்சு அசலாக ஜெராக்ஸ் பிரதி எடுப்பது தான் குளோனிங். இரு வரி விளக்கம் என்றாலும் இது மிகவும் சிக்கலானது. இதுதொடர் பான ஆராய்ச்சிகள் பல காலமாக நடந்து வந்தது. 1952இல் முதன்முதலாக தவளை ஒன்று குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது.



காரணம் தெரியாமல் காப்பி குடிக்கலாமா? இதோ இன்றே தெரிந்துகொள்ளுங்கள்...
[Thursday, 2013-05-23 17:24:46]

காஃபி மற்றும் தேநீர் பருகாதவர்கள் மிகவும் குறைவே. ஆனால் இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பலர். ஒரு வேளை தேநீர் குடிக்கவில்லை என்றாலும் பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிடுவர் பலர். சரி, தினமும் குடிக்கிறீர்களே, அதனை பற்றி எத்தனை பேருக்கு முழுவதுமாக தெரியும்? அதில் உள்ள மருத்துவ குணங்கள் எத்தனை பேருக்கு தெரியும்? நல்லது என்று தெரியாமலே, நாம் பல காரியம் செய்கிறோம் அல்லவா? அப்படி ஒன்று தான் இந்த தேநீர். ஆம், இதில் நமக்கு தெரியாத பல நன்மைகள் அடங்கியுள்ளது. தேநீரைப் பற்றிய நெடுங்கால ஆய்வுகள், அவற்றின் மருத்துவ குணங்களை ஒவ்வொன்றாக நமக்கு தெரிவிக்கின்றன. பழங்காலத்தில் இருந்தே தலைவலி முதல் மன அழுத்தம் வரை, பல பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது தேநீர். அத்தகைய தேநீரில் உள்ள மருத்துவ குணங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.



A110Q Canvas 2 Plus ஸ்மார்ட் செல்பேசிகளை அறிமுகப்படுத்தியது மைக்ரோமக்ஸ்!Top News
[Thursday, 2013-05-23 16:48:12]

இந்தியாவை தளமாகக் கொண்டு இயங்கிவரும் Micromax நிறுவனமானது A110Q Canvas 2 Plus எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுளின் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இக்கைப்பேசியானது 12.7 சென்டிமீட்டர், 854 x 480 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.



2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் பயன்பாட்டில் இருந்துள்ள நெய்!
[Thursday, 2013-05-23 00:05:25]

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர். மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.



குழந்தையின் மன வளர்ச்சியைப் பாதிக்கும் கர்ப்பகால அயடீன் குறைபாடு - ஆய்வில் தகவல்!
[Wednesday, 2013-05-22 19:30:46]

கர்பகாலத்தில் அயோடின் குறைபாடு இருந்தால், அது பிறக்கப் போகும் குழந்தையின் மன வளர்ச்சியை பாதிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கர்பகாலத்தில் தாய்மார்கள் அயோடின் சத்து நிறைந்த மீன் மற்றும் பால் பொருட்களை போன்ற உணவுகளை போதுமான அளவில் உட்கொள்ளாவிட்டால் பிறக்கப் போகும் குழந்தையின் அறிவுத்திறன் மற்றும் வாசிப்புத்திறன் ஆகியவை ஒப்பீட்டளவில் மற்ற குழந்தைகளைவிட குறைவாக இருந்ததாக அந்த ஆய்வில் கணடறியப்பட்டுள்ளது.



சருமத்தை அழகாக்கும் வொட்கா பேஷியல்!
[Wednesday, 2013-05-22 17:08:04]

சருமத்தை அழகாக்குவதில் ஒயின், வோட்கா போன்றவை சிறப்பான இடத்தை பெறுகின்றன. இதுவும் வோட்கா வைத்து செய்யும் பேசியல் சருமத்தை பொலிவாக்குகிறது. இதர ஆல்கஹால் பேஷியல் அயிட்டங்களுடன் ஒப்பிடுகையில் இது கொஞ்சம் வித்தியாசமானது. இரவில் படுக்கும் முன்பாக புதினா, தேனீர், எலுமிச்சை பழ சாறுடன் இரண்டு தேக்கரண்டி வோட்கா சேர்த்து குளிர்சாதன உள்பெட்டியில் (பிரீஸர்) பத்திரமாக வையுங்கள். காலையில் பார்த்தால் வோட்கா கலவை அப்படியே ஐஸ் கட்டியாக உறைந்திருக்கும். இதை வெளியே எடுத்து முகத்தில் 10 நிமிடம் தடவி வர வேண்டும்.. இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.



PCOS என விபரிக்கப்படும் சினைப்பை கட்டிகள் இருப்பதற்கான சில அறிகுறிகள்!
[Wednesday, 2013-05-22 17:01:23]

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்/பி.சி.ஓ.எஸ் (PCOS)எனப்படும் சினைப்பைக் கட்டிகள் என்பது பொதுவாக எல்லாப் பெண்களுக்கும் வருவதில்லை. ஹார்மோன் மாற்றங்களினால் வரும் இந்த குறைபாடு உடனடியாக கண்டறியப்பட முடியாதது. பி.சி.ஓ.எஸ் எனப்படும் சினைப்பைக் கட்டிகள் இருப்பது குறித்த அறிகுறிகள் மெல்ல தான் தெரிய ஆரம்பிக்கும். பெண்கள் பருவமடைந்ததும், அவர்களது தொடக்க டீன் ஏஜ் பருவத்தில், முதலாவது மாதவிலக்கிற்குப் பிறகு ஹார்மோன் மாற்றங்களால் பி.சி.ஓ.எஸ் ஆரம்பிக்கிறது. உடல் எடை அதிகரிப்பதைத் தொடர்ந்து இதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். பி.சி.ஓ.எஸ் இருந்தால். ஒன்றிரண்டு அறிகுறிகளோ அல்லது பல அறிகுறிகளோ தென்படலாம். பி.சி.ஓ.எஸ் காரணமாகத் தென்படும் அறிகுறிகளைத் தவறாக பிற நோய்களுக்கான அறிகுறிகள் எனக் கொள்வது சகஜமான ஒன்று. ஆனால் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையுள்ள பெண்களை மருத்துவரிடம் ஆலோசனைக்கு வரச் செய்யும் அறிகுறிகளுள் முதன்மையானவை, இதோ:



Galaxy Mega 6.3 ஸ்மார்ட் செல்பேசியை அறிமுகப்படுத்துகின்றது சம்சுங்!Top News
[Wednesday, 2013-05-22 16:25:03]

சம்சுங் நிறுவனமானது Samsung Galaxy Mega 6.3 எனும் அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் ஜுலை மாதம் அறிமுகம் செய்கின்றது. 6.3 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 1.7GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor, பிரதான நினைவகமாக 1.5GB RAM போன்றவற்றினையும் சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவையும் கொண்டுள்ளதுடன் இதனை microSD கார்ட்களின் உதவியுடன் 64GB வரை அதிகரிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.



பெண்களின் பாதங்களை வைத்தே இவ்வளவெல்லாம் சொல்கிறார்களா ..?
[Wednesday, 2013-05-22 11:51:42]

மங்கையரின் பாதங்கள் தாமரை இதழ்களைப் போன்று சிறந்த நிறமுடையனவாக அமைந்திருந்தால் அத்தகைய மங்கையர்கள் சத்குண சம்பத்துகள் உடையவர்களாகவும், சங்கீத சாகித்திய வித்வாசகம் பொருந்தியவர்களாகவும், இனிய குரலுடன் மகாராணி போன்ற சுகபோக சவுபாக்கியங்களை உடையவர்களாகவும் விளங்குவா். புண்ணிய காரியங்களைச் செய்வதிலும் தான, தர்மங்களைச் செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள்.



பல மர்மங்கள் நிலவும் மருத்துவ உலகம் - அவசியம் அறிந்திருக்கவேண்டிய தகவல்கள்!
[Tuesday, 2013-05-21 21:27:54]

வர வர எதுவும் புரியாமல், என்ன நடக்கிறது என்றே தெரியாமல், எதற்காக இவை செய்யப்படுகின்றன என்று கேட்கக் கூட முடியாத நிலைக்கு நோயாளிகளைத் தள்ளும் மாய உலகமாக, மர்ம நகரமாக மருத்துவ உலகம் மாறி வருகிறது. இதில் எல்லா மருத்துவர்களையும் குறை கூறுவதற்கு இல்லை. ஒரு சிலர் இப்படியும் இருக்கிறார்கள். பொதுவாக ஸ்கேன் என்பது இருவகைப்படும். சாதாரண அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன். மற்றொன்று சி.டி. ஸ்கேன் (கம்ப்யூட்டட் டோமோகிராபி ஸ்கேன்) என்பதாகும். இதில் முதல் வகை ஸ்கேனுக்கு குறைந்தது 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், இரண்டாவது வகையான சி.டி. ஸ்கேன் என்பது பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பல ஆயிரங்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.



சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதம் - இரத்தப் பரிசோதனை இன்றியே நோயை கண்டுபிடிக்கலாம்!Top News
[Tuesday, 2013-05-21 21:09:57]

சர்க்கரை நோயாளிகள் இனி இரத்த பரிசோதனை செய்ய உடலில் ஊசியை குத்தி பார்க்க தேவையில்லை. ஆம்! இனி கையில் ஊசியை குத்த அவசியமில்லை, ToucHb என பெயரிடப்பட்டுள்ள இந்த கருவியை கையில் வைத்துக்கொண்டாலே போதும் உங்கள் இரத்த குரூப், இரத்தத்தின் சர்க்கரை அளவு ஆகியவற்றை துல்லியமாக அளக்கலாம். இதை கண்டுபிடித்தது இந்திய விஞ்ஞானிகள் தான், இது மருத்துவ உலகில் ஓர் மைல்கல் என்றே கூறலாம். இது தற்போது விற்பனைக்கு வர உள்ளது.



இத்தனை வித்தைகள் தேங்காயில் உண்டா? தேங்காயின் சத்துப் பட்டியல்!
[Tuesday, 2013-05-21 16:16:24]

தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும் அது பருப்பு வகையோடு பிரித்து அறியப்படுகிறது. இதில் அடங்கிய சத்துக்களின் விவரத்தை அறியலாம்...

* தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.



மன அழுத்தத்தால் அவதிப்படுகின்றீர்களா? உடலுக்கு மசாஜ் செய்தால் மாயமாக மறைந்துவிடும்!
[Tuesday, 2013-05-21 15:50:03]

அமைதியாக இருந்து ஆளை கொல்வதில் மன அழுத்தம் முதன்மையானது. தற்போதைய அவரச உலகில் அனைவருக்கும் மன அழுத்தமானது அழையா விருந்தாளியாக வருகிறது. அதிலும் அதிகப்படியான வேலைப்பளு, வேகமான வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரச்சனை போன்றவற்றால் மன அழுத்தமானது அதிகரிக்கிறது. இத்தகைய மன அழுத்தத்தை சரியாக கவனித்து, அதனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடாவிட்டால், உடல் நிலையானது இன்னும் மோசமாகிவிடும். குறிப்பாக இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்றவை சீக்கிரமே வந்துவிடும். ஆகவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஒருசிறந்த நிவாரணி மசாஜ் தான். மசாஜ்களில் நிறைய வகைகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு இடத்திலும் மசாஜானது வித்தியாசப்படும். பொதுவாக அனைத்து வகையான மசாஜ்களும் மன அழுத்தத்தைப் போக்கக்கூடியவை.



செல்பேசிகளை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் சார்ஜரை கண்டுபிடித்து இந்திய வம்சாவளி மாணவி சாதனை!Top News
[Tuesday, 2013-05-21 15:25:29]

கலிஃபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் அந்த அமெரிக்க வாழ் இந்திய மாணவி ஈஷா காரே. இவர் வெறும் 20 வினாடிகளில் சார்ஜ் ஆகும் மொபைல் போன் சார்ஜரை கண்டுபிடித்து ஃபினிக்ஸ் என்ற இடத்தில் நடைபெற்ற இன்டெல் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் இடம்பெறச் செய்தார். அந்த லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு 50,000 அமெரிக்க டாலரை பரிசாக வென்றுள்ளது. சூப்பர் கெப்பாசிட்டரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இந்த மொபைல்போன் சார்ஜர், அளவில் மிகச்சிறியதாக உள்ளது. அதே சமயம் மற்ற வழக்கமான பேட்டரிகளை விட 10,000 தடவைக்கும் அதிகமாக மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்யும் திறன் கொண்டது இந்த மொபைல் சார்ஜர்.


TamilsGuid-191012-2013
Canada Kanthasamy Kovil
Suresh-remax-2013-01-01
AJRwindows22.05.13
INNSYS-20120930
TDE_Computers2011
RoyaShades-l2011(04-12-11)
Ramans2011
NIRO-DANCE-100213
Mahesan supramaniyam 031109
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com