Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழ் அரசியல் கைதிகளில் மனதை உருக்கும் வெளித் தெரியா சம்பவங்கள்.
[Monday, 2012-07-30 20:14:18]
News Service

தனது மகன் நிமலரூபனின் பிரேதத்தை பெறும் வரைக்கும் அறுபத்து மூன்று வயதான இராஜேஸ்வரி ஒரு நாளும் மனம் தளர்ந்ததில்லை. நம்பிக்கைதான் அவளுக்கு வாழ்க்கை.யுத்த கோரங்களினால் 1990 களில் காரைநகரில் இருந்து இடம் பெயர்ந்து பல்வேறு இடர்களுக்கு மத்தியிலே வவுனியாவுக்கு வந்து சேர்ந்தனர் இராஜேஸ்வரி குடும்பத்தினர். நெளுக்குளம் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. தன்னுடைய ஒரே ஒரு மகனான நிமலரூபனை எப்படியெண்டாலும் வளர்த்து ஆளாக்கிவிட வேண்டும் என்பதே இராஜேஸ்வரியின் கனவாகும்.

  

5.10.2009 நெளுக்குளத்திலிருந்து வவுனியாவுக்கு வரும் போது வேப்பம் குளம் இராணுவமுகாம் சோதனைச் சாவடியில் வைத்து நிமலரூபன் இராணுவ புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டான். நிமலரூபன் கைது செய்யப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் நிமலரூபனின் நண்பர்கள் மூவர் இராணுவதினரால் கைது செய்யப்பட்டு நெளுக்குளத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர். அன்றிலிருந்து நிமலரூபனும் இராணுவத்தினரால் குறிவைத்து தேடப்படும் ஒரு நபராகவே இருந்து வந்தார். பல தடவைகள் வீட்டுக்கு இராணுவத்தினர் தேடி வந்த போதெல்லாம் மறைந்து வாழ்ந்த நிமலரூபன் கடைசியில் வேப்பங்குளத்தில் வைத்து கைது செய்யப்பட்டான்.

வேப்பங்குள முகாமில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிமலரூபன் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். பயங்கரவாத தடுப்பு பிரிவின் மோசமான சித்திரவதைகளுக்கு நிமலரூபன் உள்ளாக்கப்பட்டார். புலிகளின் மறைவுக்குப் பின் வவுனியாவில் புலிகளின் நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு தாக்கப்பட்டார். அவனிடமிருந்து பொய்யான குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பெற்றிருந்தனர்.

பயங்கரவாத தடுப்பு பிரிவிலிருந்து கொழும்பு தடுப்புக்காவலுக்கு மாற்றப்பட்ட (CRP) நிமலரூபன், ஒரிரு மாதத்தில் வவுனியா சிறைக்கு மாற்றப்பட்டான். உயர் நீதிமன்றத்தில் எந்தவித வழக்கும் தாக்கல் செய்யப்படாத நிலையில் பதினைந்து நாட்களுக்கொரு தடவை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டான். ஒரு தடவை நெஞ்சுக்குள் நோவதாக சொல்லி மருந்தும் எடுத்திருக்கிறான். தினமும் சாப்பாடு கொண்டுவரும் தாயிடம், சித்திரவதைகளினால் தனக்கு நோய் தொட்டுவிட்டது என்று சொல்லி அழுவான். தாயின் ஆறுதல் வார்தையிலும் தைரியத்திலுமே அவனின் காலங்கள் ஓடிக்கொண்டிருந்தது.

சிறையிலிருந்து வெளியே வருவான் என்ற நம்பிக்கை மட்டும் இராஜேஸ்வரி மனதில் உறுதியாக இருந்தது. வவுனியா சிறையிலிருக்கும் மகனை தினமும் பொட்டல சோற்றுடன் நெளுக்குளத்திலிருந்து பார்க்கச் செல்வாள். மகனுக்கு மட்டுமல்லாது தன்னால் இயன்றளவு மற்ற பிள்ளைகளுக்கும் சேர்த்து சமைத்துக் கொண்டு போவாள். சிறையிலிருந்தாலும் தன் மகன் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்று நினைப்பவள். அவளுக்கென்று இருக்கிற சொந்தமென்றால் வயதான கணவன் கணேசனும், மகன் நிமலரூபனும்தான்.

சிறைச் செலவுகளுக்காக காரைநகரிலிருந்த தனது காணியை அடகு வைத்தே செலவுசெய்து வந்திருந்தாள். பலசரக்கு கடையிலும் அறுபதினாயிரத்துக்கும் மேல் கடன். மற்றத் தாய்மாரைப் போல் தானும் ஒரு நாள் தன் பிள்ளையுடன் சந்தோசமாக வாழுவன் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.

வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்காக ஒரு மாடிக்கட்டிடம் மாத்திரமே உள்ளது. கீழ் பகுதியில் உள்ள செல்லில் 27 அரசியற் கைதிகளும் மேற்பகுதியிலுள்ள திறந்த மண்டபத்தில் சிவில் கைதிகள் 180 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். குறைந்த வசதிகளைக்கொண்டு கைதிகளால் நிரம்பிய சிறைச்சாலையாகவே வவுனியா சிறைச்சாலை இருந்து வந்தது. கைதிகள் ஆவணக்காப்பகத்தை (Record Room) தவிர, வவுனியா சிறைச்சாலை அநுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகரின் கீழ் இயங்குமொரு கிளையாகவே இருந்து வந்தது.

சிறைச் செல்லில் உள்ளவர்கள் தங்களுடைய பொதுவான பிரச்சினைகளை சிறைச்சாலை நிருவாகத்துடன் கதைப்பதற்கு தங்களுக்குள் ஒருவரை தெரிவு செய்து வைத்திருப்பார்கள். அப்படி தெரிவு செய்யப்பட்டு, காம்பரா பாட்டியாக இருந்தவர்தான் நிமலரூபனும். சிறையின் செல்களிலுள்ள எல்லோருடனும் கதைப்பதைவிட எல்லோர் சார்பாகவும் ஒருவருடன் கதைப்பதற்கு சிறைச்சாலை நிருவாகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு ஒழுங்கு முறையாகும் இது. சிக்கலான பிரச்சினைகள் வரும் போது, சிறைச்சாலை நிர்வாகத்துடன் காம்பிரா பாட்டி ஒத்துப் போகக் கூடியவராக இருந்தால் அவரை தங்கள் பக்கம் வைத்துகொண்டு பிரச்சினைகளை தணிக்க நிர்வாகம் முயற்சிக்கும். ஆனால் நிமலரூபன் வளைந்து கொடுக்காதது சிறைச்சாலை நிருவாகத்துக்கு நிமலரூபன் மேல் கடுப்பாக இருந்தது.

பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வழக்கு தங்களுக்கு சாதகமற்ற நிலையில் இருந்தால், "பயங்கரவாதத் தடை சட்டத்தின் திருத்தியமைக்கப்பட்ட 10 ஆம் இலக்க 1982 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 15 ஆம் அ (1) ஆம் பிரிவின் கீழ், அரச பாதுகாப்பிற்கும் பொது அமைதிக்கும் பங்கம் விளையுமென பாதுகாப்புச் செயலாளர் கருதும் இடத்து சுதந்திரமான நியாயமான விளக்கம் நடைபெறுவதை உறுதிப்படுத்த, வழக்கின் எதிரியை விளக்க மறியலிலிருந்து மீண்டும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைத்தல்", என்ற சட்டத்தைப் பயன்படுத்தி வழக்காளியை மேலதிக விசாரணை என்று விசாரணப் பிரிவுக்கு மாற்றம் செய்வர். வழக்காளியின் வழக்கை இழுத்தடிப்பதற்கு அரச பயங்கரவாதம் கையாளும் ஒரு உத்தியாக இது இருக்கின்றது.

இதனடிப்படையில் நிமலரூபனுடன் வவுனியா சிறையிலிருந்த கணேஸ்வரன், சிந்து என்ற இருவரையும் பூஸா தடுப்பு முகாமுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் உள்ளெடுத்திருந்தனர். கணேஸ்வரன் புனர்வாழ்வு பெறுவதற்காக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த நிலையிலேயே வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்படமலே பூஸா தடுப்பு முகாமுக்கு எடுத்து செல்லப்பட்டனர். அவர்களுடைய உடுப்புக்களைக் கூட சிறைச்சாலைக்குச் சென்று எடுத்துவர பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அனுமதிக்கவில்லை.

நிமலரூபனுடனிருந்த மற்றுமொரு கைதியான நாகராசா சரவணபவான் அனுராதபுரம் நொச்சியாகம நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக சென்றவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் உள்ளீர்க்கப்பிட்டிருந்தார். அன்றிரவு சரவணபவான் அனுரதபுர சிறையிலே தங்கவைக்கப்பட்டிருந்தார். அனுரதபுரத்தில் 60-70 அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள். இவர்களுக்கென்று பிரத்தியேகமான maximum செல் இருக்கிறது. சரவணபவான் அந்த செல்லில் அடைக்கப்படாமல் p1 என்ற சிங்களக் கைதிகளின் செல்லில் போடப்பட்டிருந்தார்.

ஏற்கனவே சரவணனுக்கும், p1 செல்லில் இருந்த சிங்களக் கைதி ஒருவருக்குமிருந்த முரண்பாட்டின் வெளிப்பாடு சரவணனை தாக்கி மலங்களை ஊற்றி கொடுமைப்படுத்தியுள்ளனர். இவைகள் சிறைச் சாலை நிருவாகத்துக்கு தெரிந்திருந்தும் கண்டும் காணாததுபோல் நடந்து கொண்டனர். ஏற்கனவே உணவு தவிர்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டிருந்த இவர்களை பழிவாங்கும் செயலாகவும் சிறைச்சாலை நி்ர்வாகம் இதனை கையாண்டுகொண்டது.

சிறைச்சாலைகள் நீதிமன்ற நிர்வாகத்தின் கீழே இயங்குகிறது. ஆனால் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை நீதிமன்றத்தாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை, தங்களுடைய கோரிக்கைகளை சிறைச்சாலை நிர்வாகமும் செவிமடுக்கவில்லை என்ற வெப்புசாரத்தில் வவுனியா சிறையில் இருந்த கைதிகளுக்கு சரவணனுக்கு நடந்தவைகள் மேலும் ஆத்திரத்தை ஊட்டியது. கணக்கெடுப்பு செய்ய வந்த மூன்று சிறைச்சாலை அதிகாரிகளை கைதிகள் தங்களுடன் பிடித்து வைத்துவிட்டு கதவை பூட்டிவிட்டனர்.

கைதிகளின் கோரிக்கைகள், பிரச்சினைகள் மறைக்கப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகளை கைதிகள் பிடித்து வைத்தது மட்டுமே மேற்கிளம்பியது. நீதிபதி அலக்ஸ்ராசா, சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ஆகியோர் கைதிகளிடம் கதைத்து சிறைச்சாலை அதிகாரிகளை விடுவதற்கான உடன்பாட்டுக்கு வந்திருந்தனர். ஆனால் பாதுகாப்பு செயலாளரின் உத்தரவின் பெயரில் விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலை கட்டிடத்துக்குள் கண்ணீர்புகை அடித்து கைதிகளை அரை மயக்க நிலையில் வைத்து, விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலையை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தனர்.

கைதிகளை விசேட அதிரடிப்படடையினர் தாறுமாறாக தாக்கியபோது எதிர்ப்பக்க கட்டிடத்தில் நீதிபதியும், விசேட அதிரடிப்படியின் பொறுப்பதிகாரியும் பார்த்துக்கொண்டிருந்தனர். 'கைதிகளை தாக்க வேண்டாம் என்று அதிரடிப்படைப் பொறுப்பதிகாரி' கூறியும் அதனை அவர்கள் செவிமடுக்கவில்லை. சப்பாத்துக் கால்களைத் தூக்கி கைதிகளின் நெஞ்சில் உதைந்தனர். பட்டன் பொல்லால் ஓங்கும் விசைக்கு தலையில் அடித்தனர். அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. சட்டம் கைகட்டி, வாய்பொத்தி பார்த்துக் கொண்டிருந்தது.

அன்றைய தினம் மதியமளவில் வவுனியா சிறைச்சாலையிலிருந்து அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கைதிகள் கொண்டு செல்லப்பட்டனர். கைதிகள் வாசலில் வைத்து தரம் பிரிக்கப்படனர். சிவில் கைதிகள் வேறாகவும், பயங்கரவாத சந்தேக கைதிகள் வேறாகவும் பிரிக்கப்பட்டனர்.

பிரித்தெடுத்த கைதிகள் அனைவரையும் அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகரின் முன்பாக முழங்காலில் நிக்குமாறு பணித்தனர். அத்தியட்சகரே தனது பட்டன் பொல்லால் தாக்குதலை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அனைவரும் வந்த வீச்சுக்கு தாக்கினர். ஒரு கட்டத்தில் களைப்படைந்த நிலையில் தண்டனை கைதிகளாக இருந்த நான்கு சிங்கள கைதிகளை கூட்டி வந்து விட்டார் சிறைச்சாலை அத்தியட்சகர். அவர்களும் அரசியற் கைதிகளை அடித்தார்கள். சிறைச்சாலை அத்தியட்சகரின் சப்பாத்தை நக்கச் சொல்லி கைதிகளை பலவந்தப்படுத்தினர்.

நிமலரூபன், ஜெபநேசன், வேலாயுதம், டில்ருக்ஸன், சசி ஆகியோரைத் தனிமைப்படுத்தித் தாக்கினர். நிமலரூபனின் நெஞ்சில் காயம் ஏற்பட்டு இரத்தக்கசிவு ஏற்பட்டது. கைப்பகுதியில் நரம்பு வெடித்து தோலின் உட்பகுதியினூடாக இரத்தம் கசிந்தது. நிமலரூபனை காலில் பிடித்து இழுத்து சென்று செல் கம்பிக்குள் இரண்டு காலையும் விட்டு திருகி முறித்தார்ககள்.

டில்ருக்ஸனின் தலையில் புத்தகதை வைத்து பொல்லால் ஓங்கி அடித்தார்கள். அந்த சிறையில் மரண ஓலத்தை தவிர எந்த சத்ததையும் கேட்கமுடியவில்லை. அநுராதபுர சிறைச்சாலையின் பல நூறு காதுகள் அந்தக் கைதிகளின் மரண ஓலத்தை கேட்டு சிரித்துக் கொண்டிருந்தன.

அன்று நள்ளிரவே 27 அரசியற் கைதிகளையும் அநுராதபுரத்திலிருந்து மகர சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர் சிறைச்சாலை மிருகங்கள். நடக்க முடியாதபோதும் இழுத்து ஏற்றிக்கொண்டு சென்றார்கள். மகர சிறையின் செல்லில் மரணவலியில் எல்லோரும் துடித்துக் கொண்டிருந்தனர். ஓரளவுக்கு முடிந்தவர்கள் நிமலரூபனுக்கும் மற்றவர்களுக்கும் உதவிகள் செய்தனர். வைத்திய வசதிகளுக்காக கைதிகள் மன்றாடியும் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. ஒவ்வொருவருடைய காயங்களிலிருந்தும் ஊனம் வடிந்து கொண்டிருந்தது. மகர சிறைச்சாலை அதிகாரிகளும் கைதிகளின் மரண வேதனையினை இரசித்தனர்.

நிமலரூபன் வலியாலும், இரத்தப் போக்காலும் துடித்துக் கொண்டிருந்தான். அதற்குமேலும் சித்திரவதைகளைத் தாங்கமுடியாமல் அவனது உடலை விட்டு உயிர் பிரிந்து அடங்கியது. ஒரு அத்தியாயம் முடிந்தது. எல்லோரது கண்களிலும் மரண பயத்தைத் தான் காணமுடிந்தது. இதைத்தான் இந்த அரச பயங்கரவாதம் எதிர்பார்த்தது.

கதைத்துக் கொண்டிருக்கும் போது மயக்கமுற்று விழும் ஜெபநேசனும், வேலாயுதமும் கோமாவோடு போராடும் டில்ருக்ஷ்னும், ஒரு காலில் ஐந்து இடத்தில் முறிவு, கையில் முறிவு என அல்லலுறும் சசியினதும் என சிறைக் கைதிகளின் அவலம் தொடருகிறது.

அரச பயங்கரவாதம் தனது கோரமுகத்தை இன்னுமொருமுறை வெளிப்படுத்தி பலரைத் தீர்த்துக்கட்டியுள்ளது. விசாரணைகளைப் பற்றி அக்கறை கொள்ளப்படாத நிலையிலே இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெளிவாகிறது. இப் படுகொலை அரசியற் போராட்டத்துக்கு விழுந்திருக்கும் பலத்த அடி.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை முரசறைந்த தமிழீழ சுதந்திர சாசனம் : 110 000 மேற்பட்ட மக்கள் பங்கெடுப்பு ! சிங்கள தேசத்திற்கு பேரிடி!Top News Top News
[Sunday, 2013-05-19 22:04:59]

தமிழர் தேசத்தினை போரில் வெற்றிகொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, 1 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது. 2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப்பாதையில் இராஜதந்திர களத்தில் தமிழீழ சுதந்திர சானத்தின் முரசறைவு தமிழர் தரப்பின் வரலாற்று முக்கியமிக்கதொரு பெரும் அரசியல் முன்னகர்வாக கருதப்படுவதோடு ஆயிரக்கணக்கான தமிழீழத் தாயக மக்கள் தங்கள் கருத்துக்களை இச்சாசன உருவாக்கத்திற்கு வழங்கியுள்ளமை உணர்வெழுச்சியினை ஏற்படுத்தியுள்ளது.



மனித எலும்புக்கூடுகள் குருநாகல் மலையில் மீட்பு!
[Sunday, 2013-05-19 21:43:37]

குருநாகல், யதிஸ்ஸா மலைப் பகுயிலிருந்து மனித எலும்புக்கூடுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.பொலிஸருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி இவ் மனித எலும்புக் கூடுகள் இரண்டும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எலும்புக் கூடுகளில் ஒன்று ஆண் எனவும் மற்றையது பெண் எனவும் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.



ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா அழுத்தம் கொடுக்க வேண்டும் - கூட்டமைப்பு!
[Sunday, 2013-05-19 21:00:04]

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு யதார்த்தமான முறையில் தீர்வு காண்பதற்கும், அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கும் அரசாங்கம் மெய்யாகவே முனைப்புகாட்ட, சீனா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் அழுத்தங்களை ஈடு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் சீனாவின் உதவியை நாடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.



பிரபாகரனின் படம் ஜெயலலிதாவுக்கு ஓட்டுக் கேட்கும்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? சீமான் கேள்வி!
[Sunday, 2013-05-19 20:52:15]

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து சிறிய அளவுக் கூட்டமாக உள்ளரங்கில் ஒரு திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. இதனால், பொதுக்கூட்டத்துக்காகப் போடப்பட்ட மேடைகளை கட்சியினர் பிரித்து எடுத்தனர். மேடை கலைக்கப்பட்டு பேனர்கள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? இதுபோல் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது?



மாகாணசபை முறைமை அவசியமா? இல்லையா? - சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசு திட்டம்!
[Sunday, 2013-05-19 20:44:48]

வடக்குத் தேர்தலுக்கு எதிராக பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்குத் தேர்தல் நடத்துவதனை தடுக்குமாறு கோரி தேசிய சுதந்திர முண்ணனி இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளது. வடக்குத் தேர்தல்களை ரத்துச் செய்யுமாறு கோரி பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. பொதுமக்களின் கையொப்பங்கள் திரட்டும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பில் நடைபெறவுள்ள இந்த ஆரம்ப நிகழ்வில் கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக காணி,மற்றும் காவல்துறை அதிகாரங்கள் ரத்துச் செய்யப்படவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.



தனித் தமிழீழத்தினை வென்றடைவதற்கான தெளிவான நிகழ்ச்சி நிரலை முன்நிறுத்திய பிரதமர் உருத்திரகுமாரனின் மே 18 உரை!Top News
[Sunday, 2013-05-19 20:39:54]

முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன், தனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் தெளிவாக முன்னிறுத்தியுள்ளார். உலகத் தமிழினம் நோக்கிய தனதுரையின் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுப் பெருநிகழ்வில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வழங்கியிருந்தார்.



இலங்கை, சிங்கள பெளத்தர்களின் நாடு எனக் கூறுபவர்கள் இந்நாட்டின் வரலாறு தெரியாதவர்கள் - சுரேஷ் எம்.பி
[Sunday, 2013-05-19 20:39:12]

இலங்கை சிங்கள பெளத்தர்களின் நாடு எனக் கூறுபவர்கள் இந்நாட்டின் வரலாறு தெரியாதவர்கள். விஜயன் வருகைக்குப் பின்னரே இலங்கையில் பெளத்த மதம் பரவியதாக மகாவம்சம் தெரிவிக்கின்றது. இப்படியிருக்க இது சிங்கள பெளத்தர்களின் நாடு என எப்படி கூற முடியும்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். விஜயனின் வருகைக்கு முன்னர் இங்கு நாகர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள் தமிழ் பேசுபவர்கள், சிவ வழிபாடு செய்பவர்கள், தமிழ் பண்டைய மொழி. இதற்கு நீண்ட வரலாறு உண்டு. சிங்கள மொழி நான்காம் நூற்றாண்டில் தோன்றியதாக கூறப்படுகின்றது.



மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதி ஓ.ஏ.ராமையா காலமானார்.
[Sunday, 2013-05-19 20:30:51]

மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதி ஓ.ஏ.ராமையா காலமானார். சுகவீனமுற்றிருந்த அவர், தனது 76-வது வயதில் நேற்றிரவு காலமானார். ஓ.ஏ.ராமையா நாவலபிட்டி, பூண்டுலோயாவில் உள்ள தோட்டமொன்றில் 1938ம் ஆண்டில் பிறந்தார். ஹட்டனில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது பூதவுடல், நாளை ஹட்டன் நகரசபை மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர், மாலை நாவலபிட்டிக்கு தகனக் கிரியைக்காக கொண்டுசெல்லப்படவுள்ளது. செங்கொடிச் சங்கத்தின் செயலாளர் ஓ.ஏ.ராமையா, 1950களின் இறுதியில் தனது தொழிற்சங்க வாழ்க்கையைத் தொடங்கினார். இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளராகவும் பணியாற்றிய அவர், மலையக தொழிற்சங்க அரசியலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பங்களிப்புச் செய்துள்ளார்.



படையினரின் பிரசன்னம் வட மாகாணசபைத் தேர்தலின்போது அதிகரிக்கும் - சுட்டிக்காட்டியது கபே!
[Sunday, 2013-05-19 15:02:46]

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலின் போது படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும் என தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் உயர்வடையக் கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது, தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்னதாக கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சுதந்திரமாக நடமாடக் கூடிய உரிமைகள் முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். சுதந்திரமாக சென்று பிரச்சாரங்களை மேற்கொள்வதில் தொடர்ந்தும் தடைகள் நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.



யேர்மனியில் எழுச்சியுட​ன் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் - 2013!Top News
[Sunday, 2013-05-19 14:58:17]

ஒட்டுமொத்த உலகச் சதியுடன், சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கம் தமிழீழத்தில் நடாத்திய இனவழிப்பு நாளான மே-18 இன் நினைவுநாள் நேற்று யேர்மனியின் டுசில்டோர்ப் நகரில் எழுச்சியுடன் நடைபெற்றது. பிற்பகல் 14:00 மணியளவில் டுசில்டோர்ப் தொடரூந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பித்த மக்களின் பேரணி , கோட்டொலிகள் , பதாதைகள் அடங்கலாக நகர நிகழ்வுத் திடலை நோக்கி நகர ஆரம்பித்தது. முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்புக் கொடூரங்களை நினைவுபடுத்திய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர். வீதியின் இருமருங்கிலும் நின்ற யேர்மனிய மற்றும் வெளிநாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோக்கிக்கப் பட்டன. எமது மண்ணில் நடைபெற்ற தமிழின அழிப்பினை நினைவுபடுத்தும் வகையில், அதற்கு நியாயம் கோரும் வகையிலும் எழுப்பப்பட்ட கோட்டொலிகள் வெளிநாட்டவர்களின் கவனத்தை ஈர்த்தன.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அத்திவாரம் தமிழரசுக் கட்சியே - மாவை சேனாதிராஜா எம்.பி!
[Sunday, 2013-05-19 14:58:10]

'தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் அத்திவாரமாக தமிழரசுக்கட்சி திகழ்கிறது' என்று தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். நல்லூர் பிரதேச சபையின் நிதியில் அமைக்கப்பட்ட 'யாழ்ப்பாணம் வரவேற்கிறது' வளைவு திறப்பு விழா, இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில்,



யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கடலில் மூழ்கிய கடற்படை வீரரின் சடலம் மீட்பு!
[Sunday, 2013-05-19 14:53:27]

யுத்த வெற்றி விழா கொண்டாடத்தின் போது காணாமற் போன கடற்படை வீரரது சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இவரது சடலம் பம்பலப்பிட்டி கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். காலி முகத்திடல் கடற்பரப்பில் நேற்று (18) காலை இடம்பெற்ற யுத்த வெற்றிவிழாவின் போது குறித்த சிறிய ரக படகு மூழ்கியது. படகில் இருவர் பயணித்ததாகவும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் தப்பித்துக் கொண்டதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவித்தன.



ஸ்ரீலங்கா அரசிற்கு எதிராக அணி திரட்டுகின்றார் அமைச்சர் டக்ளஸ்!
[Sunday, 2013-05-19 11:29:30]

13வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவொன்று ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 13வது திருத்தத்திற்கு அமைய காணி, காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளிடமே தொடர்ந்து இருப்பதையும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவும் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான இந்த அணியில் ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் இடம்பெற்றுள்ளனர்.



ஸ்ரீலங்காவிற்கு எதிரான ஐ.நா தீர்மானத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து அமெரிக்கா கவனம்!
[Sunday, 2013-05-19 11:15:16]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான நிலைமைகள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துமாறு கோரி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் பின்பற்றுகின்றதா? இல்லையா? என்பது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட 15 பேர் விடுதலை!
[Sunday, 2013-05-19 09:00:35]

கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்க தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழ் உறவுகளை நினைவுகூரும் முகமாக மன்னார் பெரியகடை பொதுமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி கூட்ட நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட 9 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதன் போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஜோசப் பெணாண்டோவும் கைது செய்யப்பட்டார்.



இன்னொரு இனத்தை அழித்து விழா கொண்டாடுவதுதான் வெற்றி விழாவா?: முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் அரியநேந்திரன் Top News
[Sunday, 2013-05-19 08:32:44]

தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை எப்போது கிடைக்கின்றதோ, அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுகளை நினைவு கூர்ந்து பிராத்தனை செய்யும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மட்டக்களப்பிலுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்லுவது போல அடிக்கடி 4ம் மாடிக்கும் செல்கின்றனர். ஒரு மாதத்திற்கு இரண்டு தடவைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்வது போன்று மாதத்திற்கு ஒரு தடவையாவது 4ம் மாடிக்கு செல்ல வேண்டியுள்ளது.



நோர்வேயில் எழுச்சியுற நடைபெற்ற இன அழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வு Top News
[Sunday, 2013-05-19 07:45:25]

18.05.2013 மாலை 1700 மணிக்கு இன அழிப்பு நாள் நினைவேந்தல் பேரணி ஒஸ்லோ மத்திய தொடரூந்து நிலைத்தின் அருகாமையிலுள்ள சதுக்கத்தில் இருந்து ஆரம்பமாகி நோர்வே பாராளமன்றத்தை சென்றடைந்தது. பாராளமன்றத்தின் முற்பகுதியில் முள்ளிவாய்கால் பெரும் நெருப்பில் கொண்ட கொள்கைக்காக பெரும் புயலை எதிர்கொண்டு வீரகளமாடிய வேங்கைகளுக்கும் அவர்களின் கேடயமாய் நின்று மானப்போர் புரிந்த மக்களுக்கும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. ஈழத்தமிழ் அவையினர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பேரணியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கரம்கோர்த்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.



நேற்றைய தினம் சுவிஸில் நடைபெற்ற மே-18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள் நிகழ்வு! Top News
[Sunday, 2013-05-19 07:38:28]

விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை உலக நாடுகள் பலவற்றின் துணையோடு இனப்படுகொலை செய்த, இந்தக்காலத்தின் அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்த தமிழீழத்தில், இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான நான்காம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வான மே-18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள், நேற்று சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள Helvetia Platz திடலில் நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற வணக்க நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, சுவிஸ் மற்றும் தமிமீழத் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டது.



'புலிகளின் தலைவர் பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது பேய் கதை' - இராணுவப்பேச்சாளர் ருவான்
[Sunday, 2013-05-19 07:25:25]

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற யுத்தத்தில் நந்திக்கடல் களப்பில் பலியாகிவிட்டார். அதனை அவருடைய சகாக்களே உறுதிப்படுத்திவிட்டனர். இந்நிலையில், பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பதை இலங்கை படைத்தரப்பு முற்றாக மறுத்துள்ளதுடன். பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பது ஒரு பேய்கதையாகும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.



லண்டனில நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கெடுப்பு Top News
[Sunday, 2013-05-19 07:22:29]

பிரித்தானிய தமிழர் பேரவையினால் லண்டனில் நேற்றையதினம் 18-05-13 சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டு எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மகா நாட்டில் கலந்து கொள்வது என்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் முடிவுக்கு தமது கண்டனத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியிருக்கிரார்கள்.


INNSYS-20120930
NIRO-DANCE-100213
RoyaShades-l2011(04-12-11)
TamilsGuid-191012-2013
Canada Kanthasamy Kovil
Mahesan supramaniyam 031109
Ramans2011
Suresh-remax-2013-01-01
TDE_Computers2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com