Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 25, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
முஸ்லிம்கள், சிங்களவர்கள் ஆகியோரையும் மீள்குடியேற்றிய பின்னரே வடக்கில் தேர்தல்! - ஜனாதிபதி.
[Tuesday, 2012-07-31 08:10:41]
News Service

இலங்கையின் சட்டமா அதிபர் அலுவலகத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மாத்திரம் பேசி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இதற்கு பாராளுமன்றத்தின் மூலமே நிரந்தரமான இறுதித் தீர்வை காண முடியும். எனவே, கூட்டமைப்பினர் புலிகள் போன்று புதிய நிபந்தனைகளை விதித்து, பேச்சுவார்த்தைகளை தட்டிக் கழிப்பது தவறு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

  

தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமன்றி இந்நாட்டின் சகல அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக இனப்பிரச்சினைக்கு சகல தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வை காண வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட பிரச்சினை அல்ல. இது இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினை. எனவே, சகல அரசியல் கட்சிகளுக்கும் இந்தப் பிரச்சினையை வெற்றிகரமாக தீர்த்து வைக்கும் கடமையும், பொறுப்பும் இருக்கிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று அலரி மாளிகையில் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களையும் இலத்திரனியல் செய்திப் பிரிவு பொறுப்பாசிரியர்களையும் சந்தித்து பேசியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார். வடபகுதியில் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வடமாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறதென்று கூறினார். இந்த தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அரசாங்கம் பல முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென்று தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: கடந்த கால யுத்தத்தினால் தமிழர்கள் மாத்திரம் பாதிக்கப்படவில்லை. முஸ்லிம்களும், சிங்களவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நல்லிணக்க ஆணைக்குழு தனது சிபாரிசுகளில் வடபகுதியில் இடம்பெயர்ந்த தமிழர்கள் மட்டுமன்றி, முஸ்லிம்கள், சிங்களவர்கள் ஆகியோரையும் மீள்குடியேற்ற வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது. நாம் அதனையும் செய்து முடித்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டிய கடப்பாட்டினை கொண்டுள்ளோம்.

1981 ஆம் ஆண்டின் வாக்காளர் அட்டவணை மாத்திரமே இப்போது வடபகுதியில் உத்தியோகபூர்வ ஆவணமாக இருக்கின்றது. இதனடிப்படையில் கடந்த காலத்தில் நடந்த தேர்தலின் போது வாக்காளர் இல்லாத காரணத்தினால் சிலர் 200 வாக்குகளுக்கும் குறைந்த வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் இடம்பெற்றன. எனவே, மக்களுக்கு சுதந்திரமாக சென்று வாக்களிப்பதற்கான ஒரு சுமுகமான சூழ்நிலையை அடுத்தாண்டில் உருவாக்கியதற்கு பின்னரே வடபகுதி தேர்தலை நாம் நடத்துவோம்.

தற்போது வடபகுதியில் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்திருப்பதனால் வடபகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்பப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 இல் இருந்து 6 ஆக குறைந்திருக்கிறது. அடுத்தாண்டு ஜூன் மாதம் பூர்த்தி செய்யப்படும் புதிய வாக்காளர் இடாப்பில் மக்கள் தொகையை ஒப்பிட்டு பார்த்த பின்னரே பாராளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை கூட்டுவதா? இல்லையா? அல்லது இதேநிலையில் வைத்திருப்பதா என்று முடிவெடுக்கப்படும்.

நல்லிணக்க ஆணைக்குழுவை நான் தான் நியமித்தேன். அக்குழுவின் சிபாரிசுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா எங்களுக்கு அரசியல் ரீதியில் தீங்கிழைத்து வருகிறதென்று உங்களில் சிலர் கூறுகின்றனர். நாம் எந்தவொரு நாட்டினால் எமது நாட்டின் பாதுகாப்பையும், இறைமையையும் விட்டுக்கொடுக்க உறுதியளிக்கிறேன்?. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று ஒரு ஊடகவியலாளர் தெரிவித்தார். நாம் இதனை பெரிதுபடுத்துவது நல்லதல்ல.

ஜே.ஆர். ஜெயவர்தனே, 1983 ஆம் ஆண்டில் 6 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதை அடுத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்று தங்கள் அங்கத்துவத்தை இழந்து இந்தியாவுக்கு சென்று குடியேறினார்கள். அதனால், இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டன. அதே பிழையை நாம் செய்யத் தயாரில்லை. எங்காவது ஒரு புதிய ஹோட்டல் கட்டப்பட்டவுடன் அதனை நாமல், பசில் அல்லது கோத்தபாய கட்டுகிறார்கள் என்று எனக்கு புகார் கிடைக்கிறது. அந்த புகார்களில் எவ்வித உண்மையும் இல்லை.

அதுபோல் கோடான கோடி ரூபா பெறுமதியான ஒரு வாகனத்தை நாமல் வாங்கினார் என்றும் ஒரு வதந்தி பரவியது. இந்த வாகனத்தை வாங்கியவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரின் நாமல் என்ற பெயருடைய சகோதரர் என்பது பின்னர் புலனாகியது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் விசாரணை செய்யவுள்ள இலங்கை அரசு!
[Saturday, 2013-05-25 09:14:17]

அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலையில் பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையத்தை (அமெரிக்கன் கோணர்) அமைப்பதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், திருகோணமலை நகரசபையுடன் கடந்த 22ம் நாள் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது. இந்த உடன்பாடு குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்படாதது சிறிலங்கா அரசாங்கத்துக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு முடிவு செய்துள்ளது.



வடக்கு தேர்தலினில் பொருத்தமானவர்கள் நிறுத்தப்படவேண்டும்! - குமாரவடிவேல் குருபரன்!
[Saturday, 2013-05-25 08:44:20]

வடக்கு மாகாணசபை தேர்தலில் எவரையும் போட்டியிடக்கூடாதெனவும் பகிஸ்கரிக்கவேண்டுமெனவும் சிவில் சமூகம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறப்படுவது தவறான தகவலென சிவில் சமூக அமைப்புக்கள் சார்பினில் குரல்தரவல்லவரான சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்தார்.



ஜனநாயக பண்புகளைக் கொண்ட அரசாங்கம் ஆசியப் பிராந்தியத்திலே இலங்கையில்தான் உள்ளது - ஜனாதிபதி பெருமிதம்!
[Saturday, 2013-05-25 08:27:33]

ஆசியாவிலேயே ஜனநாயக பண்புகளை முழுமையாக பின்பற்றி நிலையான அரசாங்கமொன்றை உருவாக்கியுள்ள நாடு இலங்கைதான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். மஹரகம இளைஞர் சேவைகள் மன்ற அரங்கில் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்"டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-



3000 கிலோகிராம் இரும்புகள் கோப்பாயில் திருட்டு - நான்குபேர் கைது!
[Saturday, 2013-05-25 08:18:03]

யாழ்ப்பாணம், கோப்பாய் கோண்டாவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 3000 கிலோகிராம் இரும்புகள் திருடப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். களவாடப்பட்ட இரும்புகளில் 1800 கிலோகிராம் இரும்புகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார். மீட்கப்பட்ட இரும்புகளில் பாரிய ஆயுதங்களின் உதிரிபாகங்களும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த ஆயுதங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை ஈழத்தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இடையிலான ஒரு உறவுப் பாலம்! - நக்கீரன்
[Saturday, 2013-05-25 08:10:25]

தமிழர்களிடை ஒற்றுமை இல்லை, அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூட்டை போல இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டைப் பலர் முன் வைக்கிறார்கள். ஒற்றுமை என்பது ஒரு ஒப்பீட்டுச் சொல். நூற்றுக்கு நூறு ஒற்றுமை எந்த இனத்தவரிடமும் இல்லை. ஒற்றுமைக்குப் பெயர் போன யூதர்கள் பற்றி ஒரு பகிடி சொல்வார்கள். பத்து யூதர்கள் இருந்தால் பதினொரு கட்சிகள் இருக்குமாம். எல்லாம் வீட்டுக்கு வீடு வாசல்படி என்று சொன்ன கதைதான்.



விடுதலைப்புலிகள் தொடர்பில் பிரதியமைச்சர் முரளிதரன் விடுத்த கோரிக்கை அரசினால் நிராகரிப்பு!
[Saturday, 2013-05-25 08:10:06]

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில், பிரதி அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் விடுத்துள்ள கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களை விடுதலை செய்யுமாறு பிரதியமைச்சர் முரளிதரன் அரசாங்கத்திடம் கோரியிருந்தார். விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியமை, இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியமை, மக்களை கொலை செய்தமை உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 200 புலிஉறுப்பினர்கள் கைது செய்பப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் மட்டும் பொது மன்னிப்பு அடிப்படையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



இலங்கையைச் சேர்ந்த 16 புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா!
[Saturday, 2013-05-25 07:57:36]

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மேலும் 16 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அந்நாட்டு அரசாங்கத்தினால் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய வேண்டாம் எனத் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்ற போதும், அக்கோரிக்கையை செவிமடுக்காது சட்டவிரோதமாக வந்த 16 பேரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்தார். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்திலிருந்து சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தி வருகிறது.



பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டு கோத்தபாய அரசியல் பேசவேண்டும்: - சுரேஷ்பிரேமச்சந்திரன்
[Saturday, 2013-05-25 07:57:33]

13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலோ கருத்துக்கூறுவதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அதிகாரம் இல்லை. அவர் அரசாங்க அதிகாரியேயாவார். அரசியல் விடயங்கள் குறித்து பேசவேண்டுமானால் அவர் பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டு வரவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.



முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுக்கிறார்கள்! Top News
[Friday, 2013-05-24 22:40:09]

மாடு வெட்டுவதை கண்டித்து இன்று கண்டி தலதா மாளிகைக்கு அருகில் புத்த பிக்கு ஒருவர் தீக்குளித்ததாக தினக்கதிரில் செய்தி வெளியானதை பார்த்த நேயர் ஒருவர் இந்த படத்தையும் அனுப்பி வைத்ததுடன் ஏன் சிங்களவர்கள் மாடு வெட்டுவதில்லையா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். இலங்கையில் முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுகின்றனர். அதற்கான ஆதாரம் இதோ என இப்படத்தை அனுப்பியிருக்கிறார். இந்த புத்த பிக்கு எந்த உலகில் இருக்கிறார் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருந்தார்.



மட்டக்களப்பு கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித்தினப் போட்டி! Top News
[Friday, 2013-05-24 21:00:28]

மட்டக்களப்பில் நடைபெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித்தினப் போட்டியில்வாகரை கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் டெங்கை ஒழிப்போம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூத்து நிகழ்ச்சியில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளது. மனிதரைக் கொல்லும் கொடிய டெங்கு நோயை ஒழிக்கும் வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக விசேட கூத்தாக இக்கூத்து தயாரிக்கப்பட்டது. மக்கள் மத்தியிலே டெங்கு நோய் சம்பந்தமாக சுற்றாடலை சுத்தமாக பேணுவது தொடர்பாக ஆலோசனை கூறப்படும் வேளையில் ஒரு சிலர் ஒத்துழையாமை, எதிர்ப்பு தெரிவித்தல், விமர்சனம் செய்தல் போன்ற வகைகளால் குறித்த நோக்கம் எட்டப்படவில்லை. இதே போன்றது ஒரு எண்ணக்கருவை மையமாக வைத்து டெங்கு நோயை பரப்புகின்ற நுளம்பை கட்டுப்படுத்துவதற்கான ஒரு மார்க்கமாகவே இந்த விசேட கூத்து டெங்கை ஒழிப்போம் எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டது.



நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்வீர்களா? - அமைச்சர்களிடம் கடுமையாக பேசிய சம்பந்தன்
[Friday, 2013-05-24 20:32:10]

தமிழ் எம்.பிக்கள் தொடர்ச்சியாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் விவகாரம் தொடர்பாக பாராளமன்றில் நேற்று மதியபோசனை இடைவேளையின் போது அமச்சர்களிடம் கடுமையாக பேசினார் சம்பந்தன் எம்.பி அண்மையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சுரேஷ் ஆகியோரை நான்காம் மாடியில் வத்து விசாரித்துள்ளீர்கள் புதன்கிழமை சிவசக்தி ஆனந்தனை அழைத்து விசாரித்துள்ளீர்கள்.



சாரணர் பயிற்சிக்கு சென்ற மாணவன் ஆற்றில் மூழ்கி மரணம் - வாழைச்சேனையில் சம்பவம்!
[Friday, 2013-05-24 18:16:27]

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மாந்தறை ஆற்றில் மூழ்கி மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். மரணமானவர் பிறைந்துரைச்சேனை ஷாதுலியா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்விகற்கும் பதுர்தீன் முஹம்மது பாயிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



ஒற்றுமையின் மூலமே பெற்றுக்கொண்ட சமாதானத்தை பாதுகாக்க முடியும் - ஹத்துருசிங்க!
[Friday, 2013-05-24 16:54:42]

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெற்றுக்கொண்ட சாமாதானத்தை ஒற்றுமையின் மூலமே பாதுகாக்க முடியும் என்று யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை வெசாக் தினத்தையொட்டி பாதுகாப்பு படைகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற பசுமாடுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்...



அரசியல் பேதங்களை பின்தள்ளி வைத்துவிட்டே சமய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் - விமல் வீரவன்ச!
[Friday, 2013-05-24 16:49:50]

சமய நடவடிக்கைகளின் போது, அரசியல் பேதங்களை பின்தள்ளி வைக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சமய நடவடிக்கைகளின் போது அரசியல் கட்சிகள் பேதங்களை புறந்தள்ளி விட்டு, அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். விகாரை ஒன்றை அபிவிருத்தி செய்யும் பணியின் போது, அங்குள்ள மத தலைவர்களின் அரசியல் நிலைப்பாடுகளையோ பங்களிப்புச் சபையின் அரசியல் குறித்தே கவனம் செலுத்தக் கூடாது. எனினும் சில அரசியல்வாதிகளின் எதிரான அரசியல் செயற்பாடுகள் காரணமாக தற்போதுள்ள மத வழிப்பாட்டுத் தலங்கள் குறித்து கவனத்தில் கொள்ளாது செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.



பிரித்தானியாவிற்கு ஆட்களை கடத்திவந்த இலங்கையர் கைது.
[Friday, 2013-05-24 16:46:01]

இலங்கையர்களை பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக ஆட்கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இலங்கையர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்து தற்போது பிரித்தானியாவில் வசித்துவரும் 50 வயதான சுப்ரமணியம் விக்னராஜா என்பவர் மீதே ஆட்கடத்தல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. லண்டன் - லுடோன் மற்றும் இசெக்ஸ் பகுதிகளில் கடந்த புதனன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் மேலும் 11 பேருடன் சுப்ரமணியம் விக்னராஜா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.



அலட்சியப் போக்குடனே அரசு எங்களை நடத்துகின்றது - ரவூப் ஹக்கீம்!
[Friday, 2013-05-24 16:45:51]

கிழக்கு மாகாணத்தில் இன்று ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கையில் வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது என அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாலை சாய்ந்தமருதில் இடம்பெற்ற நூலகத்திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,



காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வட மாகாண சபைக்கு வழங்கப்பட வேண்டும் - ராஜித சேனாரத்ன!
[Friday, 2013-05-24 16:39:04]

வடக்கு மாகாண சபைக்கு 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை வழங்க வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த மாகாண சபைத் தேர்தல் 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் கீழ் நடைபெறும் எனவும் அந்த மாகாணத்திற்கு அனைத்து அதிகாரங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.



பெரியளவிலான விலையைக் கொடுத்தே இலங்கையில் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம் - சவேந்திர சில்வா
[Friday, 2013-05-24 16:27:18]

பெரியளவிலான விலையைக் கொடுத்தே இலங்கையில் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு நான்கு ஆண்டு வெற்றி விழா நியூயோர்க்கில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



13வது திருத்தத்தை மட்டுமன்றி முழு அரசியல் யாப்பையும் மாற்ற வேண்டும் - பொதுபல சேனா!
[Friday, 2013-05-24 13:48:12]

13ஆவது திருத்தத்தையும் மாகாணசபை முறைமையையும் மாற்றி இனங்களுக்கிடையில் நல்லுறவையும் நாட்டில் சமாதானத்தையும் கொண்டுவர முடியாது. இந்நாட்டின் அரசியல் அமைப்பில் வெளிநாடுகளில் அழுத்தங்கள் காணப்படுவதால் முழு அரசியல் யாப்பையும் மாற்றியமைக்க வேண்டும்மென பொதுபலசேனா அமைப்பின் இணைப்பாளர் டிலந்த விதானகே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,



புகலிடக் கோரிக்கையாளர்கள் இருவருக்கு சட்டவுரைஞர் உதவி!
[Friday, 2013-05-24 13:34:45]

இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த 2 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிறென்டன் ஓ கொனர் சட்டவுரைஞர் உதவி வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த 2 புகலிடக் கோரிக்கையாளர்களும் அகதிகளுக்கு உதவி செய்யும் சட்டவுரைஞர் டேவிட் மான் என்பவருக்கு கிறிஸ்மஸ்தீவிலிருந்து அகதி பாதுகாப்புக்காக விண்ணப்பிக்க உதவி கோரி கடந்த புதன்கிழமை மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தனர். அண்மையில் கிறிஸ்மஸ்தீவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 31 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களும் வழமை போல சட்ட ஆலோசனை இல்லாத நிலையில் விசாரிக்கப்பட்டதாக மனித உரிமைகள் சட்டவுரைஞர் டானியல் வெப் கூறியுள்ளார்.


TDE_Computers2011
NIRO-DANCE-100213
TamilsGuid-191012-2013
Mahesan supramaniyam 031109
Canada Kanthasamy Kovil
Ramans2011
RoyaShades-l2011(04-12-11)
INNSYS-20120930
AJRwindows22.05.13
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com