Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
அசுர வேகத்தில் இணைய இணைப்பை வழங்கும் - கூகிள்Fiber Top News
[Tuesday, 2012-07-31 21:37:21]
News Service

சாதரணமாக பயன்படுத்துகின்ற இணைய இணைப்பின் வேகத்தை விட 100 முறை வேகம் கொண்ட இணைய இணைப்பை கூகிள்Fiber எனும் பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது கூகிள் நிறுவனம். தற்போது Kansas City யில் மாத்திரம் அசுர இணைய இணைப்பை வழங்கும் கூகிள் அவை விரைவில் ஏனைய இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கின்றது.

  

இதன் மூலம் 1GB க்கும் அதிகமாக அப்லோட் மற்றும் டவுண்லோட் வேகத்தை தருகின்றது. இதைப்பற்றிய அறிமுக வீடியோ:

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

வெள்ளைப் பூண்டின் மருத்துவ குணங்களை தெரிந்துகொள்வோம்!
[Wednesday, 2013-06-19 21:58:15]

* பூண்டு நோய் தடுப்பு மண்டலத்திற்கு உரு துணையாகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது.

* வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. ஊளைச் சதையைக் கரைக்கும். தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மாதவிடாய்க் கோளாறுக்கும் மருந்தாகும். * பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம், மாரடைப்பு வராது. இரத்தக் குழாயில் கொழுப்புப் படியாது.



உலகிலேயே மிகவும் மெல்லிய ஸ்மார்ட் செல்பேசி வெளியானது! Top News Top News
[Wednesday, 2013-06-19 20:09:15]

உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போனை சீனாவின் ஹூஹாவி அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இதனை ஹூவாவி அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெறும் 6.18 மில்லிமீற்றர் தடிப்பானது என ஹூஹாவி தெரிவிக்கின்றது. இதுவே உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போன் எனவும் ஹூஹாவி குறிப்பிடுகின்றது. Huawei's Ascend P6 என அழைக்கப்படும் இம்மாதிரி 4.7 அங்குல எல்.சி.டி. திரை. , 1.5GHz quad-core CPU மற்றும் 2GB RAM ஆகியவற்றையும் கொண்டுள்ளது. அண்ட்ரோய்ட் ஜெலி பீன் மூலம் இயங்குகின்றது. இதுமட்டுமன்றி 8 மெகா பிக்ஸல் ரியர் கெமராவைக் கொண்டுள்ளதுடன் 5 மெகா பிக்ஸல் முன் கெமராவையும் கொண்டுள்ளது.



இரப்பையில் சுரக்கும் அமிலத்தில் பிரச்சினையா? இதை முயற்சி செய்து பாருங்கள்!
[Wednesday, 2013-06-19 19:53:47]

பொதுவாக உண்ணும் உணவு செரிமானமாவதற்கு இரைப்பையில் சுரக்கும் அமிலம் தான் உதவியாக உள்ளது. ஆனால் இந்த அமிலமானது அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது, அவை இரைப்பையை அரிக்க ஆரம்பித்து, வயிற்றில் எரிச்சலை உண்டாக்குகிறது. இவ்வாறு வயிற்றில் ஏற்படும் அதிகப்படியான எரிச்சலைத் தான் அசிடிட்டி (acidity) என்று சொல்வார்கள். இத்தகைய அசிடிட்டி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, வறுத்த மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது, அதிகமாக புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும் காலை உணவை தவிர்ப்பது, வெறும் வயிற்றில் நீண்ட நேரம் இருப்பது, கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்றவையும் அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடியவையே. இத்தகைய அசிடிட்டியை சில அறிகுறிகள் கொண்டு அறியலாம்.



கர்ப்பம் தரித்துள்ள காலத்தில் சுத்தம் அவசியம்!
[Wednesday, 2013-06-19 16:04:56]

கர்ப்ப காலத்தில் முதலில் கடைபிடிக்க வேண்டியது சுத்தம். சாப்பிடும்போது கைகளை நன்கு சோப்பு போட்டு கழுகி விட்டு பின்னர் சாப்பிட வேண்டும். உடலை சுத்தமுடன் வைத்துக்கொள்ள தினமும் குளிப்பது அவசியம்.. அதிக சூடான தண்ணீரையும் அதிகக் குளிர்ந்த நீரையும் குளிப்பதற்கு பயன்படுத்தக்கூடாது. கர்ப்பகால இறுதியில் கர்ப்பிணி பெண்களுக்கு முலைகளில் ஏற்படும் சுரப்பு நீர் காய்ந்து பெருக்குகளாக முலைக்காம்பில் இருக்குமாயின் நன்கு தேய்த்து அகற்றி விடுதல் நல்லது.



உடல் உபாதைகளை தவிர்க்க உதவும் லிச்சி பழம்!
[Wednesday, 2013-06-19 15:57:39]

லிச்சி பழத்திலிருந்து கிடைக்கும் கலோரி 76. புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின்,நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும் நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 35 மிகி, இரும்பு சத்து 0.7 மிகி உள்ளது என்கிறார்கள் உணவுச் சத்து நிபுணர்கள். இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம். பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம்.



மின்னில் இயங்கும் கார்களுக்கு மின்சாரம் வழங்கும் சாலைகள்!
[Wednesday, 2013-06-19 15:44:40]

சமீப காலமாக மின்சார கார் வந்து கொண்டே இருக்கிறது. இரண்டு நாளுக்கு முன்பு கூட மின்சார பைக் பற்றி பாத்தோம். இது நடை முறை அளவு சாத்தியத்துக்கு மிக பெரிய அளவில் வராத காரணம் இதில் இருக்கும் சார்ஜ் விஷயம் தான். இந்த சார்ஜுக்காக நாம் சில மணி நேரம் வெயிட் செய்ய வேண்டியதிருப்பதால்தான் இது இன்னும் முழுவதுமாய் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இந்த பிரச்சினையை போக்கும் வண்ணம் ஸ்வீடனை சேர்ந்த டெஸ்லாஸ் என்னும் நிறுவனம், வோல்வோ மற்றும் ஆல்ஸ்தாமும்டன் இனைந்து ஸ்வீடன் ஹைவேயில் அதி அழுத்த மின்சார கேபிளை ரோட்டிலேயே சேர்ந்து பதித்துள்ளனர். இதன் மூலம் 750 வோல்ட் (மூன்று ஃபேஸ்) கரெண்ட் வண்டி ஒடும் போதே சார்ஜ் ஆகும்.



புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும்முட்டைக்கோஸ்!
[Wednesday, 2013-06-19 10:39:14]

முட்டைகோஸ்ஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் அத்துடன் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துக்களும், அளவுக்கு அதிகமான நன்மைகளும் நிறைந்துள்ளன.இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். குறிப்பாக முட்டைகோஸை சாப்பிடும் போது, அதனை அளவுக்கு அதிகமாக வேக வைத்து சாப்பிட கூடாது. இல்லாவிட்டால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.



உலகின் அதி வேக சுப்பர் கணினியை உருவாக்குகின்றது சீனா!Top News
[Tuesday, 2013-06-18 21:01:44]

ஜூன் மாதம் வெளியிடப்பட்ட உலகின் முதல் 500 அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரகளின் பட்டியலில் முதலிடத்தை சீனா பெற்றுள்ளதுடன் அதன் வேகம் ஏனைய எந்த ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை விடவும் 2 மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகின்றது. டியான்ஹே-2 எனப் பெயரிடப்பட்ட இந்த சூப்பர் கம்ப்யூட்டர் அதிகாரப் பூர்வமாக உலகின் நமபர் 1 அதிவேக கணிணி என திங்கட்கிழமை பிரகடனப் படுத்தப் பட்டது. மேலும் இதற்கு முன் நம்பர் 1 இல் இருந்த அமெரிக்காவின் டைட்டன் ஐயும் இது மிஞ்சி விட்டது. உலகளவில் மிகச் சிறந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானிகளைக் கொண்ட ஓர் குழு ஒவ்வொரு வருடமும் இரண்டு தடவை டாப் 500 அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களின் விபரங்களை வெளியிட்டு வருகின்றனர்.



எடையை அதிகரிக்கும் தைரோயிட் பிரச்சினை - தீர்வு காண இதோ சில வழிகள்!
[Tuesday, 2013-06-18 20:49:41]

இன்றைய காலத்தில் தைராய்டு இல்லாதவர்களை பார்ப்பதே கடினம். அந்த அளவில் தைராய்டானது நிறைய மக்களுக்கு உள்ளது. அதிலும் தைராய்டு வந்தாலே, உடல் எடையில் மாற்றங்கள் நிகழும். இவ்வாறு ஹைப்போ தைராய்டு இருந்து, உடல் எடை அதிகரித்தால், அதனை குறைப்பது என்பது மிகவும் கஷ்டம். அத்தகையவர்கள் உடல் எடை குறைய வேண்டுமென்று குறைவாக சாப்பிட்டாலும், உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும். தைராய்டு நோயாளிகளுக்கு ஏற்படும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று தான் எடை அதிகரித்தல். இதற்கு முக்கிய காரணம், தைராய்டு பற்றாக்குறையே. உடல் எடை அதிகரிப்பதற்கு உடலில் கொழுப்புக்கள் தங்குவதனால் மட்டும் ஏற்படுவதில்லை. உடலில் தண்ணீர் மற்றும் உப்பு அதிக அளவில் இருந்தாலும், உடல் பருமன் அடையும். எனவே தைராய்டு நோயாளிகள் சரியான டயட்டை மேற்கொண்டால், உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். அதற்கு டயட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.



சந்தையில் களமிறங்கியுள்ள HTC T328D Desire VC ஸ்மார்ட்போனில் புதிய பல வசதிகள் அறிமுகம்! Top News
[Tuesday, 2013-06-18 19:34:09]

ஹெச்.டி.சி நிறுவனம் புதிய HTC T328D Desire VC என்ற ஸ்மார்ட்போனை சந்தையில் களமிறக்கியுள்ளது. இதன் ஆட்டோ ஃபோக்கஸ், எல்.இ.டி. பிளாஷ் கொண்டு 5 எம்பி திறன் கொண்ட கேமரா உள்ளிட்ட அம்சங்கள் மக்கள் மனதைக் கவரும் வண்ணம் உள்ளது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேக கோர்டெக்ஸ் A 5 ப்ராசஸர், ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 சிஸ்டம், ஏ-ஜி.பி.எஸ். சப்போர்ட் ஆகியவற்றை சில முக்கிய வசதிகளாகக் குறிப்பிடலாம்.



அனைவராலும் கழித்து விடப்படும் வாழைத்தண்டின் மருத்துவக் குணங்கள்!
[Tuesday, 2013-06-18 16:16:47]

அதிக நீர்ச்சத்து- நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும். பெண்களின் மாவிடாய் கோளாறு- ரத்த அழுத்தத்துக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது, சிறுநீரகத்தில் தோன்றும் கற்களைக் கரைக்கும். அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம்.



அசுத்தமான வளியை சுவாசிக்கும் பெண்களின் குழந்தைகளுக்கு ஆட்டிஸ நோய் தாக்கும் அபாயம்!
[Tuesday, 2013-06-18 16:10:46]

அதிகளவில் மாசடைந்த வாயுவை சுவாசிக்க நேரிடுகின்ற கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகள் ஆட்டிஸம் நோயினால் (மன வளர்ச்சிக் குறைபாடு) பாதிக்கப்படும் அபாயம் பெருமளவில் உள்ளதாக அமெரிக்காவில் நடந்துள்ள ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இந்தப் பெண்களின் குழந்தைகளுக்கு, வாயு மாசடைதல் அளவு குறைவாகக் காணப்படும் சூழலில் வாழும் பெண்களின் குழந்தைகளைவிட ஆட்டிஸம் ஏற்பட இரண்டு மடங்கு வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.



நூறு சதவீதம் மின்கலத்தில் இயங்கும் அதிவேக மோட்டார் பைக் கண்டுபிடிப்பு!Top News
[Tuesday, 2013-06-18 16:04:33]

பைக் வைத்திருப்பவர்கள் இப்போது அதிகம், காரணம் பெட்ரோல் விலையேற்றத்தைச் சமாளிக்கதான் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.அதே சமயம் சமீபகாலமாக பேட்டரி மூலம் இயங்கும் குட்டி கார்களும், ஹைபிரிட் மூலம் இயங்கும் பெரிய கார்களும் வந்த போது பைக்கை பற்றி யாரும் கண்டு கொள்ளாமல் இருந்த நிலையிலும் வழக்கம் போல் பைக்கள் வந்தன. இதற்கிடையில் இப்போது அமெரிக்காவில் முழுவதும் பேட்டரியால் இயங்க கூடிய பைக்கை (Zero MMX) கண்டுபிடித்து அதை அமெரிக்க ராணுவத்திற்க்கு அளித்துள்ளனர்.



துளசி இலைகளை கொதிக்க வைத்து மூலிகை தேநீராக உட்கொண்டுவந்தால் பிரசவம் எளிதாகும்! - சித்தர்களது ஆயுர்வேத மருத்துவம்..
[Tuesday, 2013-06-18 10:35:56]

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவுதான் கருவின் வளர்ச்சி, பிரசவத்துக்கு பிறகு தாயின் உடல் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்ப காலத்தில் அவ்வப்போது துளசி இலைகளை மென்று சாப்பிடுவது வலியின்றி பிரசவம் ஏற்படும் என்று ஆயுர்வேதம் கூறியுள்ளது. கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்கள், 7வது மாதத்தில் இருந்து கடைசி 3 மாதங்களில் கர்ப்பிணி தனது உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். இந்த காலங்களில் அதிக திரவ உணவுகள், பழங்கள் நல்லது. கரு வளர இவை அதிக பயனளிக்கும்.



நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
[Monday, 2013-06-17 23:18:30]

நினைவாற்றல் என்றால் என்ன? 'ஒரு விஷயத்தை மறக்காமல் இருப்பதுதான் நினை வாற்றல்' என்று பதில் வரும். ஆனால், இது சரியான பதில் இல்லை! மனதில் இருக்கின்ற அறிவில் இருந்து சரியான விவரத்தைச் சரியான நேரத்தில் வெளிப்படுத்தும் திறமைதான் நினைவாற்றல் என்கிறார் கள் விஞ்ஞானிகள்! இதற்கு அமெரிக்க விஞ்ஞானிகள் கூறும் காரணங்களை பாருங்களேன். உங்களுக்கே உண்மை விளங்கும்.



Leonid Rogozov என்பவர் தான் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல் மருத்துவர். Top News
[Monday, 2013-06-17 22:22:48]

1961 ஆம் ஆண்டு 27 வயதான Leonid Rogozov க்கு கடும் வயிற்று வலியும் காய்ச்சலும் வந்தது.அவரே தன்னை பரிசோதித்து பார்த்த போது அவருக்கு குடல் அழற்சி நோய் இருப்பதை கண்டு பிடித்தார். குடல் அழற்சி நோய் மோசமாக இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் இல்லை என்றால் குடல் வால் வெடித்து, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும்.அதனால் அவரே அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவெடுத்தார்.



ஏழே நாட்களில் முகப் பொலிவை பேண என்ன செய்ய வேண்டும்?
[Monday, 2013-06-17 21:06:00]

அனைவருக்குமே நன்கு வெள்ளையாகவும், அழகாகவும் மாற வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் விற்கும் நிறைய அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஆனால் எந்த பலனும் இருக்காது. அவ்வாறு பாக்கெட்டில் இருக்கும் பணத்தை செலவழித்து, கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை விட, ஒருசில இயற்கை முறைகளை பின்பற்றினால், சருமம் அழகாக இருப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும். என்ன இயற்கை முறைகள் என்று கேட்கலாம். அது வேறொன்றும் இல்லை, முகத்தை கழுவுதல், ஃபேஸ் பேக் போடுதல், நிறைய தண்ணீர் குடித்தல், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல், உடற்பயிற்சிகளை பின்பற்றுதல் என்று பல உள்ளன.



புரியாத புதிராக இருக்கும் சில மருத்துவக் கேள்விகளுக்கான விடைகள்!
[Monday, 2013-06-17 20:38:50]

பெப்டிக் அல்சர் என்பது என்ன?

சாப்பிட்டு வயிறு காலியானவுடன் வலி ஏற்படும். இதற்கு பெப்டிக் அல்சர் என்று பெயர். இந்த பிரச்னைக்கு எண்டோஸ்கோபி பரிசோதனை செய்து பார்த்து உணவு முறையில் மாற்றம் செய்து மருந்து எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும்.



உயிர்கொல்லி புற்றுநோயின் வகைகளும் அவற்றின் அறிகுறிகளும்!
[Monday, 2013-06-17 16:09:24]

எவ்வளவு தான் நவீன மருத்துவ கண்டுபிடிப்புகள் இருந்தாலும், புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி நோயாகவே உள்ளது. ஏனெனில் உலகில் உள்ள நோய்களிலேயே புற்றுநோயின் தாக்கத்தினால் தான் அதிக அளவு உயிரிழப்பானது ஏற்படுகிறது. இத்தகைய உயிரிழப்புக்களை தடுப்பதற்கு ஒரே வழியென்றால், ஆரம்பத்திலேயே புற்றுநோயின் அறிகுறிகளை அறிந்து, அதற்கேற்றாற் போல் சிகிச்சைகளை மேற்கொண்டால், அதிலிருந்து தப்பிக்க முடியும். மேலும் புற்றுநோயில் நிறைய வகைகள் உள்ளன. இவை அனைத்துமே ஒரே மாதிரியான அறிகுறிகளை கொண்டிருக்காது. ஒவ்வொரு புற்றுநோயும் ஒவ்வொருவிதமான அறிகுறிகளைக் கொண்டிருக்கும். வேண்டுமெனில் ஒருசில பொதுவான அறிகுறிகளான சோர்வு, காய்ச்சல், குறைவான இரத்தம் மற்றும் எடை குறைவு போன்றவை உள்ளன.



மின்னல் வேகத்தில் கண்களைத் தாக்கும் கணினி!
[Monday, 2013-06-17 15:41:32]

இன்றைய பறக்கும் யுகத்தில் கணினி பக்கத்தில் அமர்ந்தபடி தான் எல்லா வேலைகளும் செய்து முடிக்கப்படுகின்றன. தொழில் நுட்ப வளர்ச்சிக்கு இது உற்சாகத்தை அளிக்கக்கூடியது என்றாலும் உடல்நலத்துக்கு கேடு என்கிறது மருத்துவ ஆய்வு. கணினி முன் அமர்ந்து பணி செய்வபர்களில் ஆண்கள் தான் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீங்களும் அந்த வரிசையில் உள்ளவர்கள் என்றால் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். கணினி முன் அதிகநேரம் அமருபவர்களுக்கு முதல் பாதிப்பு ஏற்படும் பகுதி கண்தான். ஆகையால் அதில் இருந்து தப்பித்துக் கொளள சில வழிகள்....


Ramans2011
Suresh-remax-2013-01-01
TDE_Computers2011
RoyaShades-l2011(04-12-11)
TamilsGuid-191012-2013
Mahesan supramaniyam 031109
INNSYS-20120930
NIRO-DANCE-100213
AJRwindows22.05.13
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com