Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 18, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
இனவாத பிரச்சார நடவடிக்கைகளில் ரவூப் ஹக்கீம் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு - நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை: அரசு தெரிவிப்பு.
[Friday, 2012-08-10 11:54:40]
News Service

கிழக்கில் இனவாத பிரச்சார நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் ஹக்கீம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

  

இன அடிப்படையில் பிரசாரம் செய்து வாக்குகளை பெறக்கூடாது ௭ன்பதும் அபிவிருத்தியையும் கொள்கையையும் விளக்கியே வாக்குகளை பெறவேண்டும் ௭ன்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இனங்களை அடிப்படையாகக் கொண்டு இனவாதத்தை கக்கி அரசியல் செய்யக்கூடாது ௭ன்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும். மாறாக அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் கொள்கை ௭ன்பனவற்றை அடிப்படையாகக் கொண்டே மக்களிடம் வாக்குகளை கோர வேண்டும்.

௭வ்வாறெனினும் சில கட்சிகள் கிழக்கில் இனவாதத்தை பரப்பி பிரசாரம் செய்வதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. ஆனால் இது குற்றச்சாட்டு மாத்திரமே. ஊடகவியலாளர்களும் கேள்விகளை ௭ழுப்புகின்றனர். ௭னக்கு உண்மையில் அது தொடர்பில் தெரியாது. தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ௭திராக அரசியல் கட்சி மட்டத்தில் தீர்மானம் ௭டுப்போம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

வவுனியாவில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு!Top News
[Saturday, 2013-05-18 13:34:14]

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த மக்களின் ஆண்டு நினைவாக 2010ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி திறந்து வைக்கப்பட்ட வவுனியா சம்மளங்குளம் நினைவுத்தூபி நேற்றிரவு இனம் தெரியாத தமிழ்த் தேசியத்திற்கு எதிரான குழுக்களால் இடித்தழிக்ககப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்துள்ளார். சம்பவம் அறிந்த இன்று காலை நேரடியாக அதனை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் நானும் சென்று பார்வையிட்டோம். இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார்.



புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான கண்காணிப்பு பிரிவில் ஆட்குறைப்பு செய்கின்றது அவுஸ்திரேலியா!
[Saturday, 2013-05-18 13:31:16]

அவுஸ்திரேலியாவின் புகலிடக் கோரிக்கையாளர் கண்காணிப்பு பிரிவில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அவுஸ்திரேலியாவின் மத்திய காவல்துறைப் பிரிவினர் புகலிடக் கோரிக்கையாளர் நடவடிக்கைகள் குறித்து கண்காணித்து வருகின்றனர். புகலிடக் கோரிக்கையாளர்களின் நடவடிக்கைகள் குறித்து ஜகர்த்தாவில் கடமையாற்றி வந்த அவுஸ்திரேலிய மத்திய காவல்துறை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 40 வீதமான காவல்துறையினர் அவுஸ்திரேலியாவிற்கு மீள அழைக்கப்படுவர்.



வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் இதயம் எனக்கு நன்கு தெரியும் - ஜனாதிபதி!
[Saturday, 2013-05-18 13:22:26]

வடக்கு கிழக்கு மக்கள் தேர்தலொன்றில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தவர்கள். அங்குள்ள மக்களின் இதயத்தைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மீட்டெடுக்கப்பட்ட தாய்நாட்டிலிருந்து ஒரு அங்குலத்தையேனும் அபகரிப்பதற்கோ இன்றேல் நாட்டை பிரிப்பதற்கோ ஒருபோதும் நான் இடமளிக்கமாட்டேன் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்து நடைபெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



கனடிய கொன்சவ்வேட்டிவ் மத்திய அரசில் தமிழ் கனடிய சமூகத்திற்கு ஆதரவாக பல நண்பர்களும் ஆதரவாளர்களும் இருக்கிறார்கள், அதில் நானும் ஒருவன் - பிரட் பட் எம்.பி.
[Saturday, 2013-05-18 11:24:16]

கனடாவில் வாழும் தமிழ் கனடிய சமூகம் இலங்கையில் இடம்பெற்ற பல தசாப்தகால உள்நாட்டுப் போர் நிறைவின் நான்காவது ஆண்டு நினைவை அனுஸ்டிக்கும் போது நாமும் அச்சமூகத்துடன் இணைந்து கொள்கிறோம். பல தசாப்த காலமாக போரில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த அப்பாவிப் பொதுமக்களை இவ்வாரத்தில் நினைவுகூர்வதுடன் இலங்கையில் வாழும் மக்களுக்கும் ஒரு சுபீட்சமான எதிர்காலம் அமையுமென எதிர்பார்க்கும் காலமாக அமைகிறது.



டென்மார்க்கில் பாராளமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மக்கள் மனு கையளித்தனர்! Top News
[Saturday, 2013-05-18 08:14:10]

17.05.2013 அன்று டென்மார்க் வெளிவிவகார அமைச்சகத்தின் அலுவகத்தின் முன்பாக பேரணி ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து பாராளமன்றம், நோக்கி பெரும் திரளான மக்கள் உணர்வு பூர்வமாக முள்ளிவாய்காலில் இடம்பெற்ற இனவழிப்பில் இறந்த தமிழீழ மக்களின் படங்கள் மற்றும் தமிழீழ தேசிய கொடியை ஏந்தியவண்ணம் தமிழீழம் ஒன்றே இறுதி முடிவு என்ற உணர்வுடன் ஊர்வலமாக பாராளமன்றம், நோக்கி பேரணியாக வந்தடைந்தார்கள்.



மௌரிசியஸ் தமிழ் மக்கள், தமிழீழ மக்களுடன் கைகோர்த்து போராட்டத்தி​ல் ஈடுபட்டனர்!Top News
[Saturday, 2013-05-18 08:00:22]

நேற்று மே 17 ஆம் திகதி மௌரிசியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸில் மௌரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு, அங்கு இருக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் எங்கு உள்ள அனைத்து ஆலயங்களிலும் செய்தபின் அந்நாட்டு பாராளுமன்றம், மற்றும் இந்திய, அமெரிக்க துதராலயங்களை நோக்கி பல்லாயிரம் மக்கள் உணர்வு பூர்வமாக தமிழீழ தேசிய கோடியை ஏந்தியவண்ணம் தமிழ் ஈழம் தான் இறுதி முடிவு என்று உணர்த்து முகமாக எமது தேசிய நிறமான சிவப்பு மஞ்சள் கோடியில் தமிழ் ஈழம் என்று பொறித்து எல்லோரும் ஏந்தி சென்றனர். அத்துடன் சிறி லங்கா சர்வதேச அமைப்புகளில் இருந்து புறக்கணிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.



லண்டனில் இன்றைய பேரணிக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் பூர்த்தி:
[Saturday, 2013-05-18 07:59:08]

லண்டனில் இன்று சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக பிரித்தானிய தமிழர் பேரவையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய தினம் பி.ப 1 மணிக்கு North Carriage Park, Hyde Park (Closest station: Marble Arch) ஆரம்பிக்கும் பேரணி பி.ப 3 மணியளவில் Waterloo Place , (Closest station: Piccadilly Circus) நிறைவுறும். இதனைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் உரையாற்றவிருப்பதுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.



மே 18 - தமிழர் இனவழிப்பு நினைவு நாள் 2013 - தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிக்கை
[Saturday, 2013-05-18 07:49:51]

இன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள். ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சி கொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது.



தயா மாஸ்டரின் கோரிக்கையை நிராகரித்தது எதிர்க்கட்சி!
[Saturday, 2013-05-18 07:48:10]

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரின் கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட தயா மாஸ்டர் கோரியதாகவும், அதனை நிராகரித்ததாகவும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியையும், புலிகளையும் இணைத்து பல்வேறு சேறு பூசல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.



கொழும்பில் முன்னாள் போராளிகள் இருவர் கைது!
[Saturday, 2013-05-18 07:43:41]

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து குறித்து சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய குற்றச்சாட்டின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவர், மற்றையவர் சில காலம் சிறைத்தண்டனை அனுபவித்தவர். புறக்கோட்டை பஸ் குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.



வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது - அரசு அறிவிப்பு!
[Saturday, 2013-05-18 07:41:56]

வட பகுதியிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிநாட்டுச் சக்திகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்கு அமைய இராணுவ முகாம்களை அகற்றிக்கொள்ள முடியாது. வன்னிப் போர் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் அரசாங்கம் இதனை அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகளின் சில தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் அடிக்கடி வடக்கிற்கு விஜயம் செய்து இராணுவ முகாம்கள் பற்றி மக்களுடனும் அரசியல் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.



யாழ்.பல்கலைக்கழகத்தை சூழ இரவோடு இரவாக இராணுவம் குவிப்பு!
[Saturday, 2013-05-18 07:36:51]

யாழ்.பல்கலைக்கழக சூழலில் மீண்டும் நள்ளிரவு முதல் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நாலாம் ஆண்டைய நினைவு நிகழ்வுகள் கெடுபிடிகள் மத்தியில் இன்று பல்கலைக்கழக சமூகத்தினால் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் விடுதிகளினிலும் மாணவர்கள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நாலாம் ஆண்டைய நினைவு நிகழ்வுகளை முன்னெடுக்கலாமென்ற அச்சத்திலேயே மாணவர்கள் விடுதிகளுட்பட்ட பல்கலைக்கழக சூழல் சுற்றிவளைக்கப்பட்டிருக்கலாமென்ற அச்சம் எழுந்துள்ளது.



தலைவர் பிரபாகரன் தப்பிச்சென்றதாக வெளியான தகவலில் உண்மையில்லை - சிங்கள பத்திரிகை தெரிவிப்பு!
[Saturday, 2013-05-18 07:32:52]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பிச் சென்றதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பிரபாகரனின் கைவிரல் அடையாள சாட்சியங்களின் மூலம் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அதிகாரிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கைவிரல் அடையாள மாதிரிகளும், நந்திக்கடல் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட பிரபாகரனின் சடலத்தின் கைவிரல் அடையாள மாதிரிகளும் ஒத்துப் போவதாக சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.



விடுதலைப்புலிகளின் மாவட்ட தலைவர் எனக்கூறி கப்பம் பெற்றவர் கைது செய்யப்பட்டார்!
[Saturday, 2013-05-18 07:30:45]

விடுதலைப்புலிகளின் யாழ். மாவட்ட தலைவர் எனக்கூறி சுமார் 12 இலட்சம் ரூபாவை கப்பமாக பெற்ற பிரதான நபரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு. எல். விக்கிரமராச்சி இன்று தெரிவித்தார். கிளிநொச்சி பரந்தன் சந்தி பகுதியில் கடந்த 3 ஆம் திகதி யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இருவர் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட இருவரும் திருநகர் மேற்கு கிளிநொச்சி மற்றும் குருக்கள் வீதி கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இருவரும் யாழ். பொலிஸ் நிலையத்தில் 3 மாத கால தடுத்து காவலில் வைக்கப்பட்டு, பொலிஸ் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.



13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் - இலங்கையிடம் இந்தியா கோரிக்கை!
[Friday, 2013-05-17 22:13:12]

இலங்கையில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வடக்கு மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னதாக நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாக தெரிவித்துள்ள இந்திய 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தே இலங்கை அரசாங்கத்திடம் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியபோதே மேற்கண்டவாறு வலியுத்தியுள்ளார்.



யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!Top News
[Friday, 2013-05-17 22:09:10]

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வு காலை 11.30 மணி தொடக்கம் 12.30 மணிவரை இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள சிவன் ஆலயத்தின் முன்பாக கையில் தீபங்கள் ஏந்தி உணர்வு பூர்வமாகவும் இடம்பெற்றதுடன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



நீர்கொழும்பில் விபச்சாரிகளுக்கு எதிராக சுவரொட்டிகள்!Top News
[Friday, 2013-05-17 21:51:56]

நீர்கொழும்பு நகரின் பல இடங்களில் விபசாரிகளுக்கு எதிராக எச்சரிக்கை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வீதியோர விபசாரிகளுக்கு 'அசிட் வீச்சு' என்ற வாசகமே இந்த எச்சரிக்கை சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக வைத்தியசாலை அருகில் கடந்த வாரம் இதே போன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டடிருந்தன. இந்நிலையில் வியாழக்கழமை இரவு முதல் மீண்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. விபசாரத்தை ஒழிப்பதற்கு உடனடியாக ஒன்று சேருவோம், விபசாரிகளுக்கு இனிமேல் தண்டனை 'அசிட்' ஆகும் போன்ற வாசகங்கள் இந்த சுவரொட்டிகளில் சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகளுக்கு எவரும் உரிமை கோரவில்லை.



வடமாகாணம் மட்டும்தான் தமிழர் தாயகமா? பா.அரியநேந்திரன்
[Friday, 2013-05-17 21:13:35]

தமிழர்களின் தாயகம் வடக்கு மாகாணம் மட்டும் தானா? என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். வடமாகாணசபைத் தேர்தல் சம்பந்தமாக சிவில் சமூகம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகளின் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.



வலியும் வீரமும் சுமந்த வாழ்வு - இதயச்சந்திரன்
[Friday, 2013-05-17 17:06:26]

திருமலை மாவிலாற்றிலிருந்து
வன்னியின் கிழக்கெல்லை வரை
வெந்து தணிந்தது காடுகள்.



நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, ஊழல் மோசடிக்கு ஜனாதிபதியே பொறுப்பு - ரவி கருணாநாயக்க எம்.பி!
[Friday, 2013-05-17 17:05:36]

நாட்டில் காணப்படுகின்ற ஊழல் மோசடிகளுக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ராஜகிரியவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,


RoyaShades-l2011(04-12-11)
TamilsGuid-191012-2013
Ramans2011
Canada Kanthasamy Kovil
Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
Suresh-remax-2013-01-01
INNSYS-20120930
TDE_Computers2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com