Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 25, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
"கிழக்கு மாகாணத் தேர்தலின் நல்ல முடிவு - ஈழத் தமிழர் வாழ்வில் மலரும் விடிவு"
[Friday, 2012-08-10 12:29:09]
News Service

இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவிற்குக் கொண்டுவரப் பட்டபின் இலங்கைப் பிரச்சனையை எப்படித் தீர்க்க வேண்டுமென்ற தனது திட்டத்தை நிறைவேற்ற மகிந்த ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து அதை அவர் மிகத் துரித கதியில் செயற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

  

இலங்கையில் சிறுபான்மையினர் என்று யாருமே இல்லை.சிறுபான்மைப் பிரச்சனை என்று தீர்ப்பதற்கு எதுவும் இல்லை உள்ள பிரச்சனை மக்களின் வாழ்வாதார பொருளாதார அபிவிருத்திப் பிரச்சனை தான் என்று கூறி வருகிறார். இதன் மூலம் அவர் சொல்வது என்னவென்றால் தமிழர் என்று யாருமே இருக்காமல் அவர்கள் பெரும்பான்மை இனத்தவரோடு கலந்து கரைந்து இலங்கை ஒரு சிங்களப் பௌத்த நாடாக இருக்க வேண்டும் என்பதே. அதைச் சாதிக்க வேண்டுமானால் தமிழர் தாயகம் என்று ஒன்று இருக்கக் கூடாது. தமிழ் மொழியோ அவர்களது மதமோ அரச அங்கீகாரம் பெறக் கூடாது. தேசீய இனஉணர்வு உள்ள தமிழர் இருக்கக் கூடாது.அதைச் சாதிக்க தமிழரிடம் பொருளாதார பலம் இருக்கக் கூடாது.

இவற்றைச் சாதிப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் அவர் செயற்படுகிறார். அவரது அரசு தாக்கும் நிலையிலும் தமிழர் தடுக்கும் நிலையிலும் உள்ளோம்.அவருக்குத் தடையாக இருப்போர்

1.அவரது ஊழல் சர்வாதிகார குடும்பஆட்ச்சியை எதிர்க்கும் சிங்கள எதிர்க்கட்சிகளும் மக்களும்.

2 .கௌரவமாக வாழ விரும்பும் தமிழர் தரப்பு

3 . தத் தம் வல்லாதிக்கத்தை பொருளாதார நலன்களை தக்க வைக்க விரும்பும் சர்வதேசம்.

முதலிரண்டு பகுதியினரையும் ஆயுதப் படை துணைப் படைகளின் உதவியோடு தமது சர்வாதிகார அதிபர் பதவியால் நசுக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் சர்வதேச வல்லாதிக்கப் போட்டியில் சீனச் சார்பாக இலங்கை இருப்பதை சகிக்க முடியாத மேற்குலகம் இலங்கையை தமது வழிக்குக் கொண்டுவர இலங்கை தமிழருக் கெதிராகச் செய்த செய்கின்ற அட்டூழியங்களை மனித உரிமை மீறல்களை இலங்கைக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்து கின்றது.அதன் முதற்படியாக இலங்கை தானே பெற்றெடுத்த டுடுசுஊ பரிந்துரைகளை உடனே நடைமுறைப் படுத்தும்படி இலங்கையின் கழுத்தை நெரிக்கிறது. நல்லிணக்கமாக அரசியல்த் தீர்வை வழங்கும் படி அழுத்தம் கொடுக்கிறது.

மேற்குலகை முற்றிலும் பகைக்க முடியாத மகிந்த ஒரு அரசியல்த் தீர்வைக் கொடுத்து விட்டதாகக் காட்டுவதற்கான அவரது நிகழ்ச்சி நிரலின் முதற்படியே கிழக்கு மாகாணத் தேர்தலாகும். அதனாற்தான் சென்ற வருடமே நடத்த வேண்டிய வட மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அடுத்தவருடம் நடக்க வேண்டிய கிழக்கு மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்துகிறார்.இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று தமக்குச் சாதகமான ஆட்சி அமைப்பதன் மூலம் மகிந்த இராசபக்சே சாதிக்க விரும்புவது

1 . கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களும் தனது குடும்ப ஆட்சிக்கும் கொள்கைக்கும் ஆதரவாக இருகிறார்கள் என்பதை பன்னாட்டு சமூகத்துக்கு எண்பிப்பது.

2 .அதன் மூலம் கிழக்கு மாகாண மக்கள் வட கிழக்கு இணைப்பையும் காணி பொலிஸ் அதிகாரங்களையும் நிராகரித்து விட்டார்கள் என்று காட்டுவது.

3 . மாகாணசபைகளுக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் பகிரப்பட்டுள்ள காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை மீளப்பெற்று ஒன்றுமே இல்லாத வெறும் பெயரளவிலான மாகாண சபைகளாக அவற்றை ஆக்குவது. 4.வடமாகாணத்திலும் கணிசமான சிங்களக் குடியேற்றங்களாலும் தமிழரை விலைக்கு வாங்குவதாலும் தமிழ்ப் பெரும்பான்மையைக் குறைத்து ஆயுத படைப் பலத்தோடும் ஏற்கெனவே கிழக்கில் பெற்ற வெற்றிகளின் செல்வாக்கோடும் வடக்கு மாகாணத்திலும் அரசிற்குச் சாதகமான மாகாண சபையை உருவாக்கல்.என்பனவாகும்.

அத்துடன் டுடுசுஊ பரிந்துரைகளை நிறைவேற்றும் திட்டம் தயார் என்றும் ஆனால் அதற்கு மூன்று வருடகால அவகாசம் வேண்டுமென்றும் கேட்டிருப்பது இந்த வட மாகாண சபைத் திட்டத்தைச் செயற்படுத்த மூன்று வருட கால அவகாசம் தேவை என்று அவர் கணக்கிடுகிறார் என்பது புலனாகும்.எனவே மகிந்தவின் நிகழ்ச்சி நிரலின் முதற்படி தான் இந்தக் கிழக்கு மாகாணத் தேர்தல் என்பது வெள்ளிடை மலையாகும்.

கிழக்கு மாகாணத் தேர்தலில் அரச கட்சி வென்றால் பின்னர் மகிந்தவின் நிகழ்ச்சிநிரல் நிறைவேறுவதைத் தடுக்கவே முடியாது. சர்வ தேசமும் எதுவும் கேட்க வாய்ப்பில்லாமல் போகும்.இலங்கையில் தமிழரின் இருப்பை எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தலாகத் தான் இந்தத் தேர்தல் அமைகிறது.அதனாற்தான் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சியை தோற்கடிக்கமாறு திரு இரா சம்பந்தன் தமிழ் பேசும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இனச் சிக்கலுக்கு மாகாண சபை தீர்வாக மாட்டாது என்பது ததேகூ இன் நிலைப்பாடாக இருந்தாலும் காணி மற்றும் காவற்றுறை அதிகாரம் எமது கையில் இருப்பது எமது மண் பறிக்கப்படுவதை ஓரளவேனும் தடுத்து நிறுத்த உதவும். அண்மையில் தனியார் காணிகளைப் பறிக்க நகர மற்றும் நாட்டுத் திட்ட சட்டத்தில் அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்துக்கு ஒன்பது மாகாணங்களின் சம்மதம் வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிள்ளையானின் கிழக்கு மாகாண சபை சம்மதம் கொடுக்க வட மத்திய மாகாணம் சம்மதம் கொடுக்க மறுத்துவிட்டது.

அதனாற்தான் அதற்கும் இப்போது தேர்தல் நடக்கிறது.எப்பாடு பட்டாலும் கிழக்கு மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற வெறியுடன் அரசு தனக்குள்ள அதிகாரம், பொருள்வளம், ஆட்பலம் எனச் சகல வளங்களையும் பயன்படுத்துகிறது. ததேகூ வேட்பாளர்களுக்கு மிரட்டல் விடுத்தல் 2,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கல், அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்கல், அடிக்கல் நாட்டல் வேலை வாய்ப்பு தரப்படும் என ஆசை வார்த்தை பேசுதல் போன்ற தேர்தல் முறைகேடுகளில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது. தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதடிப்பதற்கு பல சுயேட்சைக் குழுக்களையும் அரசு களமிறக்கியுள்ளது.

தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ததேகூ இந்தத் தேர்தலில் வெற்றி பெறச் செய்வது தமிழ் வாக்காளர்களது அத்யாவசிய கடமையாகும். ததேகூ வெற்றிபெறும் போது அது தமிழ்மக்களின் அரசியல் வேட்கைகளை உள்ளடக்கியதும் தமிழ்மக்கள் தங்கள் சொந்த மண்ணில் தங்களைத் தாங்களே ஆளக் கூடியதுமான ஒரு நிரந்தரமான நியாயமான நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்ற ததேகூ இன் நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்கும்.

இணைப்பாட்சி அடிப்படையில் தங்களைத் தாங்களே ஆளும் ஒரு அரசு உருவாக்கப் படவேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெறும். வட - கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வாய்ப்பு ஏற்படும். வட - கிழக்கு இணைப்பை முஸ்லிம் மக்களும் ஏற்றுக் கொள்ள வழிவகுக்கும் வகையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் வழங்கப்போகும் தீர்ப்பு அமைய வேண்டும். அதனையே பன்னாட்டு சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அரசின் உள்நோக்கம் எதுவாக இருந்தாலும் தமிழ்மக்கள் ததேகூ இன் பின்னால் அணிதிரண்டுள்ளார்கள் என்பதை தேர்தல் முடிவு பன்னாட்டு இராசதந்திரிகளுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

ததேகூ அரசோடு மோத விரும்பவில்லை. அதே சமயம் ஏமாற்றப்படவும் அர்த்தமற்ற முடிவுகளையோ தீர்வுகளையோ ஏற்றுக் கொள்ளவும் அதன் தலைமை தயாராக இல்லை. இதனை ததேகூ உள்நாட்டிலும் பன்னாட்டு சமூகத்துக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லிவருகிறது.அதனை மெய்பிக்கும் பொறுப்பு கிழக்கு மாகாணத் தேர்தல் வெற்றியில் தங்கியிருக்கிறது. மேலும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ததேகூ பெறும் வெற்றி வலுவ10ட்டும். ததேகூ கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற வைக்கும் பொறுப்பு கனடிய தமிழர்களது தோள்களிலும் உண்டு.

மனிதவளம் பொருள்வளம் என்று வரும்போது அரசோடு ததேகூ போட்டி போட முடியாது. இருந்தும் நாம் ததேகூ இன் கைகளை பல வழிகளில் பலப்படுத்தலாம். அதன் வெற்றிக்கு பாடுபடலாம். கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி இருக்கிறது.இந்த வரலாற்றுக் கடமையை உடனே செய்வோம்.

வின் மகாலிங்கம் - கனடா

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இளம் பெண்ணை மிரட்டி பல தடவை பாலியல் வல்லுறவு - படத் தயாரிப்பாளர் கைது!
[Saturday, 2013-05-25 14:30:48]

யுவதியொருவரை தொடர்ச்சியாக மிரட்டி வல்லுறவுக்குட்படுத்தி வந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரொருவரை நாரஹெம்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யுவதி அதுருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யுவதி சினிமாவில் நடிப்பதற்காக தயாரிப்பாளரிடம் வந்துள்ளதாகவும் அவருக்கு வாய்ப்பு தருவதாகக் கூறி அவரை நிர்வாணமாக படமெடுத்து பின்னர் அதனை வெளியிடப்போவதாக மிரட்டியே குறித்த நபர் தொடர்ச்சியாக வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.



முக்கோண பாதையில் 3 கோள்கள் - இலங்கையர்கள் பார்வையிடலாம்!
[Saturday, 2013-05-25 14:27:24]

சூரியனை சுற்றியுள்ள கோள்களில் மூன்று கோள்கள் முக்கோண பாதையில் தற்போது சுற்றிவருவதை வானத்தில் பார்க்கலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார். இரவில் வானத்தில் தெட்டத்தெளிவாக தெரிகின்ற சனி, கோள்மண்டத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் மற்றும் சூரியனுக்கு மிகவும் அண்மையில் இருக்கின்ற புதன் ஆகிய கோள்களே முக்கோண பாதையில் சுற்றிவருகின்றன. இலங்கையின் வடமேல் வானத்திலேயே இதனை பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ள பேராசிரியர் சந்தன ஜயரத்ன இது போன்றதொரு நிகழ்வை 2021 ஆம் ஆண்டே பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



23வது ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் திங்களன்று ஆரம்பம்!
[Saturday, 2013-05-25 14:21:40]

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 23 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் ஹூன் மாதம் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த 23 ஆவது கூட்டத்தொடரின் அமர்வுகளின் போது நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் பல்வேறு நாடுகள் தொடர்பில் பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன. 47 உறுப்பு நாடுகள் இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதுடன் மேலும் பலநாடுகளும் அவதானிப்பு நாடுகளாகவும் கலந்துகொள்ளவுள்ளன.



ஈழத்தமிழருக்கு ஆதரவான கட்சி விரைவில் புதுடில்லியில் உதயமாகும் - தா.பாண்டியன்!
[Saturday, 2013-05-25 14:13:19]

புதுடில்லியில் விரைவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி நிச்சயம் அமையும். எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அது வெளிப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சென்னையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே பாண்டியன் இதனைத் தெரிவித்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுமிக்க ஆட்சியொன்று புதுடில்லியில் வெகுவிரைவில் அமையும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை விரைவாக எட்டுவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க முடியும் என்றும் பாண்டியன் தனது உரையில் குறிப்பிட்டார்.



13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு கோத்தபாயவிற்கு அதிகாரமில்லை - வாசுதேவ நாணயக்கார!
[Saturday, 2013-05-25 14:04:31]

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பாதுகாப்பு செயலாலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அதிகாரமோ உரிமையோ கிடையாது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவினால் முன் வைக்கப்படவுள்ள தனி நபர் பிரேரணை செல்லுபடியற்றதாகும். எனவே, அரசு மேற்படி பிரேரனைக்கு அங்கீகாரம் வழங்காது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.



மட்டக்களப்பு நுழைவாயிலில் வைக்கப்படும் புத்தர் சிலை இனங்களுக்கிடையே மனக்கசப்பை ஏற்படுத்தும் - யோகேஸ்வரன் எம்.பி பிரதமருக்கு கடிதம்!
[Saturday, 2013-05-25 13:57:56]

மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியானது இனங்களுக்கிடையில் மனக்கசப்பை ஏற்படுத்தும் செயலாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். புத்தர் சிலையை நிறுவுதல் தொடர்பில் பிரதமர் தி.மு ஜயரட்னவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



கல்லுடன் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு: முல்லைத்தீவில் சம்பவம்!
[Saturday, 2013-05-25 09:56:07]

முல்லைத்தீவு பனிச்சங்குளப் பகுதியில் பாலியல்வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்ததேகிக்கப்படும் நிலையில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நிலையில் இச் சடலம் இருப்பதாகவும் சடலத்திலுடன் கல்லுக்கட்டப்பட்டு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



ஆஸிக்கு செல்ல முயற்சித்த 21 இலங்கையர்கள் கேரளாவில் கைது!
[Saturday, 2013-05-25 09:30:44]

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 21 இலங்கை அகதிகள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பிரதேசத்தில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கியூ பிரிவு பொலிஸார் மற்றும் கேரளப் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின்படி இந்தச் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 7 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் நியூகொச்சின் பகுதி ஹோட்டல் ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னையிலிருந்து ரயில் மூலமாக கேரளா சென்றுள்ளனர்.



திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் விசாரணை செய்யவுள்ள இலங்கை அரசு!
[Saturday, 2013-05-25 09:14:17]

அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலையில் பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையத்தை (அமெரிக்கன் கோணர்) அமைப்பதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், திருகோணமலை நகரசபையுடன் கடந்த 22ம் நாள் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது. இந்த உடன்பாடு குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்படாதது சிறிலங்கா அரசாங்கத்துக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு முடிவு செய்துள்ளது.



வடக்கு தேர்தலினில் பொருத்தமானவர்கள் நிறுத்தப்படவேண்டும்! - குமாரவடிவேல் குருபரன்!
[Saturday, 2013-05-25 08:44:20]

வடக்கு மாகாணசபை தேர்தலில் எவரையும் போட்டியிடக்கூடாதெனவும் பகிஸ்கரிக்கவேண்டுமெனவும் சிவில் சமூகம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறப்படுவது தவறான தகவலென சிவில் சமூக அமைப்புக்கள் சார்பினில் குரல்தரவல்லவரான சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்தார்.



ஜனநாயக பண்புகளைக் கொண்ட அரசாங்கம் ஆசியப் பிராந்தியத்திலே இலங்கையில்தான் உள்ளது - ஜனாதிபதி பெருமிதம்!
[Saturday, 2013-05-25 08:27:33]

ஆசியாவிலேயே ஜனநாயக பண்புகளை முழுமையாக பின்பற்றி நிலையான அரசாங்கமொன்றை உருவாக்கியுள்ள நாடு இலங்கைதான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். மஹரகம இளைஞர் சேவைகள் மன்ற அரங்கில் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்"டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-



3000 கிலோகிராம் இரும்புகள் கோப்பாயில் திருட்டு - நான்குபேர் கைது!
[Saturday, 2013-05-25 08:18:03]

யாழ்ப்பாணம், கோப்பாய் கோண்டாவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 3000 கிலோகிராம் இரும்புகள் திருடப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். களவாடப்பட்ட இரும்புகளில் 1800 கிலோகிராம் இரும்புகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார். மீட்கப்பட்ட இரும்புகளில் பாரிய ஆயுதங்களின் உதிரிபாகங்களும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த ஆயுதங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை ஈழத்தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இடையிலான ஒரு உறவுப் பாலம்! - நக்கீரன்
[Saturday, 2013-05-25 08:10:25]

தமிழர்களிடை ஒற்றுமை இல்லை, அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூட்டை போல இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டைப் பலர் முன் வைக்கிறார்கள். ஒற்றுமை என்பது ஒரு ஒப்பீட்டுச் சொல். நூற்றுக்கு நூறு ஒற்றுமை எந்த இனத்தவரிடமும் இல்லை. ஒற்றுமைக்குப் பெயர் போன யூதர்கள் பற்றி ஒரு பகிடி சொல்வார்கள். பத்து யூதர்கள் இருந்தால் பதினொரு கட்சிகள் இருக்குமாம். எல்லாம் வீட்டுக்கு வீடு வாசல்படி என்று சொன்ன கதைதான்.



விடுதலைப்புலிகள் தொடர்பில் பிரதியமைச்சர் முரளிதரன் விடுத்த கோரிக்கை அரசினால் நிராகரிப்பு!
[Saturday, 2013-05-25 08:10:06]

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில், பிரதி அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் விடுத்துள்ள கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களை விடுதலை செய்யுமாறு பிரதியமைச்சர் முரளிதரன் அரசாங்கத்திடம் கோரியிருந்தார். விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியமை, இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியமை, மக்களை கொலை செய்தமை உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 200 புலிஉறுப்பினர்கள் கைது செய்பப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் மட்டும் பொது மன்னிப்பு அடிப்படையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



இலங்கையைச் சேர்ந்த 16 புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா!
[Saturday, 2013-05-25 07:57:36]

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மேலும் 16 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அந்நாட்டு அரசாங்கத்தினால் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய வேண்டாம் எனத் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்ற போதும், அக்கோரிக்கையை செவிமடுக்காது சட்டவிரோதமாக வந்த 16 பேரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்தார். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்திலிருந்து சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தி வருகிறது.



பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டு கோத்தபாய அரசியல் பேசவேண்டும்: - சுரேஷ்பிரேமச்சந்திரன்
[Saturday, 2013-05-25 07:57:33]

13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலோ கருத்துக்கூறுவதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அதிகாரம் இல்லை. அவர் அரசாங்க அதிகாரியேயாவார். அரசியல் விடயங்கள் குறித்து பேசவேண்டுமானால் அவர் பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டு வரவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.



முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுக்கிறார்கள்! Top News
[Friday, 2013-05-24 22:40:09]

மாடு வெட்டுவதை கண்டித்து இன்று கண்டி தலதா மாளிகைக்கு அருகில் புத்த பிக்கு ஒருவர் தீக்குளித்ததாக தினக்கதிரில் செய்தி வெளியானதை பார்த்த நேயர் ஒருவர் இந்த படத்தையும் அனுப்பி வைத்ததுடன் ஏன் சிங்களவர்கள் மாடு வெட்டுவதில்லையா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். இலங்கையில் முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுகின்றனர். அதற்கான ஆதாரம் இதோ என இப்படத்தை அனுப்பியிருக்கிறார். இந்த புத்த பிக்கு எந்த உலகில் இருக்கிறார் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருந்தார்.



மட்டக்களப்பு கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித்தினப் போட்டி! Top News
[Friday, 2013-05-24 21:00:28]

மட்டக்களப்பில் நடைபெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித்தினப் போட்டியில்வாகரை கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் டெங்கை ஒழிப்போம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூத்து நிகழ்ச்சியில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளது. மனிதரைக் கொல்லும் கொடிய டெங்கு நோயை ஒழிக்கும் வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக விசேட கூத்தாக இக்கூத்து தயாரிக்கப்பட்டது. மக்கள் மத்தியிலே டெங்கு நோய் சம்பந்தமாக சுற்றாடலை சுத்தமாக பேணுவது தொடர்பாக ஆலோசனை கூறப்படும் வேளையில் ஒரு சிலர் ஒத்துழையாமை, எதிர்ப்பு தெரிவித்தல், விமர்சனம் செய்தல் போன்ற வகைகளால் குறித்த நோக்கம் எட்டப்படவில்லை. இதே போன்றது ஒரு எண்ணக்கருவை மையமாக வைத்து டெங்கு நோயை பரப்புகின்ற நுளம்பை கட்டுப்படுத்துவதற்கான ஒரு மார்க்கமாகவே இந்த விசேட கூத்து டெங்கை ஒழிப்போம் எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டது.



சாரணர் பயிற்சிக்கு சென்ற மாணவன் ஆற்றில் மூழ்கி மரணம் - வாழைச்சேனையில் சம்பவம்!
[Friday, 2013-05-24 18:16:27]

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மாந்தறை ஆற்றில் மூழ்கி மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். மரணமானவர் பிறைந்துரைச்சேனை ஷாதுலியா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்விகற்கும் பதுர்தீன் முஹம்மது பாயிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



ஒற்றுமையின் மூலமே பெற்றுக்கொண்ட சமாதானத்தை பாதுகாக்க முடியும் - ஹத்துருசிங்க!
[Friday, 2013-05-24 16:54:42]

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெற்றுக்கொண்ட சாமாதானத்தை ஒற்றுமையின் மூலமே பாதுகாக்க முடியும் என்று யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை வெசாக் தினத்தையொட்டி பாதுகாப்பு படைகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற பசுமாடுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்...


NIRO-DANCE-100213
RoyaShades-l2011(04-12-11)
TamilsGuid-191012-2013
TDE_Computers2011
AJRwindows22.05.13
Canada Kanthasamy Kovil
Suresh-remax-2013-01-01
INNSYS-20120930
Ramans2011
Mahesan supramaniyam 031109
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com