Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 22, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
காதை பாதுகாக்கும் வழிமுறைகள்..
[Saturday, 2012-08-18 23:27:09]
News Service

நூலறிவோடு உலக அனுபவத்தைப் பெற ஊன்று கோலாயிருப்பது. நல்லனவற்றைக் கேட்டு பெருமைபடச் செய்வது. தீயவழியில் தூண்டல்களையும் உணர்கிறது. எனவே, செவிகள் கேட்பதற்கும், சமநிலைக்குமான உறுப்புகளாகத் திகழ்கின்றன. செவியில் புறச்செவி (வெளிச்செவி), இடைச்செவி(நடுச்செவி), உட்செவி என்ற மூன்று பகுதிகள் உள்ளன.

  

வெளியில் தெரிவது புறச்செவி, இது புனல் மாதிரி ஒலி அலைகளைச் சேர்த்து இடைச்செவி மற்றும் உட்செவிக்கு அனுப்புகிறது. காது கொடுத்து கேளுங்கள்! உங்கள் காது கேட்கிறதா? கேட்பதின் மூலம் அறிவு தெளிவு பெறுகிறது. நிலைத்த அறிவுச் செல்வமே எல்லாவற்றிலும் சிறந்தது. தீங்கு பயக்காத இன்பத்தைக் கொடுப்பது. செவிக்கு உணவாக விளங்குவது கற்றலின் ஆயினும் கேட்க வாய்ப்பளிப்பது.

புறச்செவியில் மடலும், வெளிக் கால்வாயும் அடங்கும், செவி வெளிக்கால்வாய் காற்றலைகள் அதிர்ச்சிகளை உண்டாக்கும் புனல் போன்ற செவிப்பறையுடன் முடிகிறது. செவிப்பறை காதினை நன்றாக அடைத்து கொண்டிருக்கிறது. செவிப்பறைச் சவ்வில் உண்டாகும் காற்றலைகள் அதிர்ச்சிகளை மூளை, ஒலி என்று இனம் அறிந்து கொள்கிறது. செவிப்பறையை அடுத்து நடுச்செவி தொடங்குகிறது. நடுச்செவி ஒரு கன சென்டிமீட்டர் பரிமாணம் கொண்ட குழியால் ஆனது.

நடுச்செவிக் குழியில் ஆறு சுவர்கள் உள்ளன. செவிப்பறைக்குழி, மூக்கு முன்தொண்டையுடன் நடுச்செவி குழல் மூலம் தொடர்பு கொண்டுள்ளது. நடுச்செவி குழல் மூன்று முதல் நான்கு சென்டிமீட்டர் நீளமாகவும் இரண்டு மில்லி மீட்டர் துவராமும் கொண்டுள்ளது.

நடுச்செவியில் சங்கிலி போன்ற அமைந்துள்ள மூன்று எலும்புகள் உள்ளன. இவை காற்றலை அதிர்ச்சிகளை உட்செவிக்கு எடுத்துச் செல்கின்றன. உட்செவி ஒரு சிக்கலான அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் எலும்பு மற்றும் படலத்தாலான இரண்டு வளைந்து செல்லும் அமைப்புகள் (லேபரின்த்) உள்ளன. உட்செவி பாய்மத்தால்(அக நிணநீர் மற்றும் புற நிணநீர்) நிரப்பப்பட்டுள்ளது.

பாய்மத்தின் குறுக்கே கேள்விப்புல நரம்பு உள்ளது. கேள்விப்புல நரம்பிற்கு எலும்பின் மூலம் காற்றலைகள் அதிர்ச்சிகள் (ஒலி) கடத்தப்பெறுகின்றது. மூளைக்குச் செல்லும் நரம்பின் வழி மிகவும் குறுகலானது, ஒலித்தூண்டல்கள் பெருமூளைப் புரணியில் உணரப்பட்டு செவியுணர்வுகள் தோன்றுகின்றன.

செவிப்பற்றி சில செய்திகள்:

1. செவி உடலில் மிகச்சிறிய இடத்தில் அடைபட்டிருந்தாலும் அதனுடைய பணிகள் ஏராளம்.

2. ஒரு ஒலி உண்டானால், அமைதியான நீரில் கல்லை வெட்டெறியும்போது எப்படி அலைகள் உண்டாகின்றனவோ அப்படியே காற்றிலும் ஒலி அலைகள் உண்டாகிப் பரவுகின்றன.

3. புறச்செவி கேட்பதற்கு மிகவும் முக்கியமானது. அது இல்லாமலேயே கேட்க முடியும்.

4. செவி வெளிக்கால்வாய் தோலிலிருந்து எண்ணெய் போன்ற திரவம் சுரக்கிறது. அத்திரவம் உறையும்போது மெழுகுபோன்ற கெட்டிப்பொருளாகி, குறும்பியாகி விடுகின்றது. குறும்பி மிக அதிகமாகத் திரண்டால் கேட்பதற்குத் தடையாகவும் இருக்கும்.

5. செவிப்பறை சவ்வு தடித்தப்போனாலும் அல்லது நலிவடைந்து போனாலும் கேள்வி அதாவது கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

6. நடுச்செவியில் உள்ள எலும்புகளை இணைக்கும் சிலேட்டுமப் படலம் (பந்தங்கள்) இறுகிப்போனால் காற்றலைகள் அதிர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனால்அரை செவிட்டுதன்மை ஏற்படுகிறது.

7. இடைச்செவியில் ஒரு பகுதியில் உள்ள வெஸ்டிபுலர் அமைப்பும், மூன்று அரைவட்ட கால்வாய்களும் உள்ளன. இந்த உறுப்புக்கள் கண், தசை, மூடடுப்பகுதி மற்றும் மூளையுடன் சேர்ந்து உடல் நிலை மற்றும்அசைவுகளை உணர்வதில் பெரும் பங்காற்றுகிறது. வெஸ்டிவுலர் அமைப்புச் சேதமடைந்தால் உடல் சமச்சீர் நிலை இயக்கத்தில் கோளாறுகள், மயக்கம் போன்ற சிக்கல்கள் தோன்றும் வெஸ்டிபுலர் அமைப்பின் மிகையான கிளர்த்தலால் கார், படகு, விமானம் ஆகியவற்றில் பயணம் செய்யும்போது மயக்கம், வாந்தி முதலான பிரயாண நோயால் அவதியுற நேரிடுகிறது.

8. இடைச்செவியில் உள்ள காற்று சதா உறிஞ்சப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இடைச் செவிக்கும், முன்தொண்டைக்கும் இணைப்பு உள்ளது. இந்த இணைப்பை ஏற்படுத்துவது இடைச் செவி குழலாகும். இருமும் பொழுது அல்லது கொட்டாவி விடும் பொழுது அல்லது விழுங்கும் பொழுது இந்தக் குழலுக்குள் காற்று பலமாகச் செலுத்தப்படுகிறது. இதனால் காற்று நிறைவிக்கப்படுகிறது. நிறைவிக்கப்பட்ட காற்றுச் செவிப்பறையின் இருபுறங்களிலும் அழுத்தம் பெற்று சமப்படுகிறது. கேள்வியும் இதனால் பாதிக்கப்படுகிறது.

9. தொண்டையில் ஏற்படும் தொற்றினையட்டி இடைச்செவியிலும் தொற்று ஏற்படக்கூடும். இதன் விளைவாக இடைச்செவியில் காற்றுக்குப் பதிலாகச் சீழ் நிரம்பிவிடும். செவிப்பறையில் உள்ள சந்து வழியாகச் சீழ் வெளியேறி செவிப்பறையை நலமடையச் செய்யும். ஆனால், அடிக்கடி நேரிடும் தொற்றினால் செவிப்பறையில் அதிர்ச்சியும், எலும்புகளில் அதிர்ச்சியும் குறைந்து போகும்.

10. ஜலதோஷம் பிடித்து மூக்கிலும் தொண்டையிலும் சளிக்கட்டிக் கொண்டிருக்கும்போது நடுச்செவியையும், தொண்டையையும் இணைக்கும் சிறிய குழாயும் வீங்கிப் போகிறது. இந்த வீக்கத்தினால் நடுச்செவிக்கும் அடைபடுகிறது. இதன் தொடர் விளைவாக தற்காலிகமாக காது கேட்காமல் போகக்கூடும்.

11. காது கோளாதவர்களுக்குப் பயன்படும் மொழி சைகை மொழியாகும். அச்சைகை மொழிக்கென பிரத்தியேக சொற்களஞ்சியம், இலக்கணம், சொற்றொடரியம், விரல் அசைவுக் கூட்டல் ஆகியவை உண்டு. அந்த மொழி, கைகளினால் உருவமைத்தல், அவற்றின் அசைவு உள்ளங்கை தொடர்பிணைவு, உடலில் கையை இருக்கச் செய்யும் நிலை ஆகியவை ஒருங்கிணைந்ததாகும்.

ஒருங்கிணைவில் மாற்றம் இருந்தால் பொருள்மாறும். முகபாவம், சைகை மொழியினைத் தெளிவுபடுத்தும், புருவத்தை உயர்த்துதல் என்பதைக் குறிக்கும். சைகை மொழியை பிரத்தியேக பள்ளிகள், கல்லூகளில் கற்கலாம். ஒளி, ஒலி நாடகங்கள் மற்றும் நூல்கள் வாயிலாகவும் கற்கலாம்.

12. காது கேட்கும் திறன் மற்றும் காது நலிவுகளின் தீவிரத்தைக் கண்டறிய உதவுவது ஆடியோகிராம், இம்பீனிஸ் ஆடியோகிராம், எலக்ட்ரோ நிஷ் டாக்மோகிராபி, மாஸ்பாய்டு எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஸ்கேன் ஆகிய சோதனைகள் உள்ளன.

13. இச்சோதனைகளால் காதின் கேட்கும் திறன், காது, நரம்புகள், செவிப்பறை, நடுக்காது, உட்காது, தலைச்சுற்றல், காதில் உள்ள கட்டிகள் முதலியவற்றைக் கண்டறியலாம்.

14. காது கேட்பதால் வார்த்தைகள் அறியப்படுகின்றன. மூளையில் பதியும் வார்த்தைகளை வாய் உச்சரிக்கிறது. வாய் உச்சரிப்பதினால் பேச்சு வளர்ச்சி அடைகிறது.

15. காது குத்தி கொள்ளுவதால் கீலாய்டு என்ற கட்டிகள் சிலருக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு. இத்தகைய பாதிப்புகள் ஏற்படக்கூடியவர்கள் காது குத்திக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

காது பாதுகாப்பு:

1. காதின் வெளிப்பக்கத்தை சோப்பு மற்றும் தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

2. காதில் இருக்கும் மெழுகு போன்ற பொருளை (குரும்பியை) எடுக்கக்கூடாது. அது செவிக்பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது. கசப்பாக இருக்கும் அதில் எந்த பூச்சியும் நுழையாது.

3. ஒரு வேளை பூச்சி ஏதாவது காதிற்குள் நுழைந்து விட்டால் சில சொட்டுகள் தேங்காய் எண்ணெய் அல்லது கடலை அல்லது நல்லெண்ணெய் அல்லது ஏதாவது ஒரு சுத்தமான எண்ணெய் காதில் விட்டால் அந்தப் பூச்சியைக் கொன்றுவிடும். பிறகு பீச்சான குழலைப் பயன்படுத்தி எடுத்துவிடலாம். பூச்சி கண்ணுக்கு தெரிந்தால் சாமணத்தால் அதை எடுத்து விடலாம். எல்லாவற்றிற்கும் மேலாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வதே சிறந்ததாகும்.

4. காதில் குச்சிபோட்டுக் குடையக்கூடாது. குச்சியைப் பயன்படுத்தினால் செவிப்பறை கிழிந்துபோக வாய்பப்புண்டு. நலிவுக்கும் உள்ளாக்கும், காதில் சீழ் வழியக்கூடிய அபாயமும் ஏற்படக்கூடும்.

5. காதிலுள்ள உரோமங்கள் மிகவும் முக்கியமானவை, தூசியும், பூச்சியும் காதுக்குள் நுழையாமல் அவை தடுக்கின்றன. எனவே, இவற்றை வெட்டி எடுக்கக்கூடாது.

6. சொத்தைப்பல், கடைவாய்ப்பல் சரியான வெளிவராதிருந்தால், நாக்கு மற்றும் வாய்ப்புண்கள், டான்சில் சதை வளர்ச்சி , கழுத்து எலும்பு தேய்வு, புற்றுநோய் போன்ற நலிவுகள் மற்ற உறுப்புக்களை பாதிப்பதினால் காதில் வலி ஏற்படக்கூடும்.

7. காதில் வலி ஏற்பட்டால் கெட்டியான குடும்பியோ அல்லது புறச்செவியில் நலிவோ ஏற்பட்டிருக்கலாம். இதற்காக மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் காதில் சொட்டு மருந்தைப் போட்டுக் கொள்ளக்கூடாது. தவறான சொட்டு மருந்து காதை அதிகமாக, எதிர்பாராத வகையில் பாதிக்கக்கூடும்.

8. காது வலி தொண்டையில் அழற்சி காரணமாக இருக்கலாம். நோய்க்கிருமிகள் தாக்கத்தின் விளைவாகவும் இருக்கலாம். காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணரை அணுகி சிகிச்சைப் பெறுவது நல்லது.

9. காது திடீரெனக் கேட்கவில்லையென்றால் உடன் 48 மணி நேரத்திற்குள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். காலம் தாழ்த்துவது அல்லது உதாசீனமாக விட்டுவிடுவது விபரித விளைவுகளை ஏற்படுத்துக்கூடும்.

10. குடும்பத்தில் பிறவிச் செவிடர்கள் இருந்தால் இரத்த உறவில் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் காது கேளாமலிக்க வாய்ப்புண்டு.

11. சிறு குழந்தைப் பருவத்தில் காது கேட்கவில்லை என்றால் அந்தக் குழந்தையின் பேச்சும் பாதிக்கக்கூடும். காலங் கடத்தாது மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே சிறந்ததாகும்.

12. சில மருந்துகள் செவிட்டுத் தன்மையை ஏற்படுத்தும். ஆகையால் மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்ள்க்கூடாது.

13. அதிக இரைச்சலான இடங்களில் வேலை செய்வோர் செவிப்பாதுகாப்பு அடைப்பான்களைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

14. சுவாசிப்பதில் தவறான முறையில் மூச்சு வெளியேற்றுவதும் காது வலிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். மூச்சு உறுப்புகளில் தொற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் காதுவலி ஏற்படலாம்.

15. காது கேட்கவில்லையெனில் நீங்களாகவே கடைகளில் உள்ள பல ரகங்களிலான கேட்க உதவும் பொறியமைவுகளில் ஏதேனும் ஒன்றை வாங்கிப் பயன்படுத்துவது கூடாது. செவித்திறன் குறைவின் அளவைப் பொறுத்து அதற்கேற்ற அமைவினையே பயன்படுத்த வேண்டும்.

16. உணர்வு நரம்பின் செவிட்டுத் தன்மைக்கேற்ற பொறியை மருத்துவரின் பரிந்துரைப்படி பொருத்திக் கொள்ள வேண்டும்.

17. கேட்கும் தன்மைக்கேற்ப பேச்சுத்தன்மையும் அமைகிறது. எனவே செவிட்டுத்தன்மையை புறக்கணிக்கக்கூடாது.

18. அடிக்கடி சளி பிடித்தாலும் தொண்டை வலி ஏற்பட்டாலும் காதின் கேட்புத்திறன் பாதிக்கக்கூடும்.

19. மூக்கை, வேகமாகச் சிந்தக்கூடாது. சிந்தினால் முக்கிலும் தொண்டையிலும் உள்ள கிருமிகள் நடுச் செவிக்குள் புகுந்து காதைச் செவிடாக்கிவிடக்கூடும்.

20. குழந்தைகளின் காதில் ஒருபோதும் அறையக்கூடாது. அறைந்தால் காதுக்கு ஊறு ஏற்பட்டு கேளாமல் போனாலும் போய்விடும்.

21. தண்ணீரில் குதித்துக் குளிப்பதாலும், கடல் நீரல் குளிப்பதாலும் நோய்தொற்று நடுச்செவிக்குழல் மூலம் காதுக்குள் சென்று கடுமையான காது வலியை ஏற்படுத்தக்கூடும்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

பெண்களின் பாதங்களை வைத்தே இவ்வளவெல்லாம் சொல்கிறார்களா ..?
[Wednesday, 2013-05-22 11:51:42]

மங்கையரின் பாதங்கள் தாமரை இதழ்களைப் போன்று சிறந்த நிறமுடையனவாக அமைந்திருந்தால் அத்தகைய மங்கையர்கள் சத்குண சம்பத்துகள் உடையவர்களாகவும், சங்கீத சாகித்திய வித்வாசகம் பொருந்தியவர்களாகவும், இனிய குரலுடன் மகாராணி போன்ற சுகபோக சவுபாக்கியங்களை உடையவர்களாகவும் விளங்குவா். புண்ணிய காரியங்களைச் செய்வதிலும் தான, தர்மங்களைச் செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள்.



பல மர்மங்கள் நிலவும் மருத்துவ உலகம் - அவசியம் அறிந்திருக்கவேண்டிய தகவல்கள்!
[Tuesday, 2013-05-21 21:27:54]

வர வர எதுவும் புரியாமல், என்ன நடக்கிறது என்றே தெரியாமல், எதற்காக இவை செய்யப்படுகின்றன என்று கேட்கக் கூட முடியாத நிலைக்கு நோயாளிகளைத் தள்ளும் மாய உலகமாக, மர்ம நகரமாக மருத்துவ உலகம் மாறி வருகிறது. இதில் எல்லா மருத்துவர்களையும் குறை கூறுவதற்கு இல்லை. ஒரு சிலர் இப்படியும் இருக்கிறார்கள். பொதுவாக ஸ்கேன் என்பது இருவகைப்படும். சாதாரண அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன். மற்றொன்று சி.டி. ஸ்கேன் (கம்ப்யூட்டட் டோமோகிராபி ஸ்கேன்) என்பதாகும். இதில் முதல் வகை ஸ்கேனுக்கு குறைந்தது 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், இரண்டாவது வகையான சி.டி. ஸ்கேன் என்பது பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பல ஆயிரங்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.



சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதம் - இரத்தப் பரிசோதனை இன்றியே நோயை கண்டுபிடிக்கலாம்!Top News
[Tuesday, 2013-05-21 21:09:57]

சர்க்கரை நோயாளிகள் இனி இரத்த பரிசோதனை செய்ய உடலில் ஊசியை குத்தி பார்க்க தேவையில்லை. ஆம்! இனி கையில் ஊசியை குத்த அவசியமில்லை, ToucHb என பெயரிடப்பட்டுள்ள இந்த கருவியை கையில் வைத்துக்கொண்டாலே போதும் உங்கள் இரத்த குரூப், இரத்தத்தின் சர்க்கரை அளவு ஆகியவற்றை துல்லியமாக அளக்கலாம். இதை கண்டுபிடித்தது இந்திய விஞ்ஞானிகள் தான், இது மருத்துவ உலகில் ஓர் மைல்கல் என்றே கூறலாம். இது தற்போது விற்பனைக்கு வர உள்ளது.



இத்தனை வித்தைகள் தேங்காயில் உண்டா? தேங்காயின் சத்துப் பட்டியல்!
[Tuesday, 2013-05-21 16:16:24]

தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும் அது பருப்பு வகையோடு பிரித்து அறியப்படுகிறது. இதில் அடங்கிய சத்துக்களின் விவரத்தை அறியலாம்...

* தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.



மன அழுத்தத்தால் அவதிப்படுகின்றீர்களா? உடலுக்கு மசாஜ் செய்தால் மாயமாக மறைந்துவிடும்!
[Tuesday, 2013-05-21 15:50:03]

அமைதியாக இருந்து ஆளை கொல்வதில் மன அழுத்தம் முதன்மையானது. தற்போதைய அவரச உலகில் அனைவருக்கும் மன அழுத்தமானது அழையா விருந்தாளியாக வருகிறது. அதிலும் அதிகப்படியான வேலைப்பளு, வேகமான வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரச்சனை போன்றவற்றால் மன அழுத்தமானது அதிகரிக்கிறது. இத்தகைய மன அழுத்தத்தை சரியாக கவனித்து, அதனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடாவிட்டால், உடல் நிலையானது இன்னும் மோசமாகிவிடும். குறிப்பாக இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்றவை சீக்கிரமே வந்துவிடும். ஆகவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஒருசிறந்த நிவாரணி மசாஜ் தான். மசாஜ்களில் நிறைய வகைகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு இடத்திலும் மசாஜானது வித்தியாசப்படும். பொதுவாக அனைத்து வகையான மசாஜ்களும் மன அழுத்தத்தைப் போக்கக்கூடியவை.



செல்பேசிகளை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் சார்ஜரை கண்டுபிடித்து இந்திய வம்சாவளி மாணவி சாதனை!Top News
[Tuesday, 2013-05-21 15:25:29]

கலிஃபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் அந்த அமெரிக்க வாழ் இந்திய மாணவி ஈஷா காரே. இவர் வெறும் 20 வினாடிகளில் சார்ஜ் ஆகும் மொபைல் போன் சார்ஜரை கண்டுபிடித்து ஃபினிக்ஸ் என்ற இடத்தில் நடைபெற்ற இன்டெல் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் இடம்பெறச் செய்தார். அந்த லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு 50,000 அமெரிக்க டாலரை பரிசாக வென்றுள்ளது. சூப்பர் கெப்பாசிட்டரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இந்த மொபைல்போன் சார்ஜர், அளவில் மிகச்சிறியதாக உள்ளது. அதே சமயம் மற்ற வழக்கமான பேட்டரிகளை விட 10,000 தடவைக்கும் அதிகமாக மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்யும் திறன் கொண்டது இந்த மொபைல் சார்ஜர்.



முகத்திற்கு பொலிவு தரும் வித்தை பூசணிக்காயிடம் உண்டு - அறிவீர்களா?
[Monday, 2013-05-20 21:27:44]

பூசணிக்காயில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. அதிலும் இதில் உள்ள ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டீன், ரெட்டினோயிக் ஆசிட் போன்றவை, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், பழுப்பு நிற சருமத்தை பொலிவாக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

* பூசணிக்காயின் கூழை எடுத்து, தினமும் முகத்தில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவாக இருக்கும்.



நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் இருக்க கவலை எதற்கு?
[Monday, 2013-05-20 19:14:03]

உங்கள் பரம்பரையில் யாரேனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா? அல்லது நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? கவலை வேண்டாம். ஏனெனில் பெரும்பாலானோருக்கு புற்றுநோயால் இறப்பு ஏற்படுவதற்கு காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான். ஆம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களானாலும் சரி, புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் சரி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், தினந்தோறும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றினால், நிச்சயம் புற்றுநோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம். அந்த வகையில் ஒருசில உணவுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாக உள்ளன. நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும், எளிதில் குணமாக்கலாம். மேலும் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் இருந்தால், புற்றுநோய் இன்னும் தீவிரமாகத் தான் இருக்கும். ஆனால் அத்தகையவற்றையும் ஒருசில உணவுகள் மூலம் கட்டுப்படுத்தலாம். இப்போது அத்தகைய புற்றுநோயை உண்டாக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!



அதிவேகம் மற்றும் அதிக தூரத்திற்கு சமிக்ஞையை கொண்டு செல்லும் WiFi Router!
[Monday, 2013-05-20 15:29:49]

வைஃபை ரவுட்டரின் பிரச்சினை கீழே மாட்டினா மாடி ரூம்ல சிக்னலே வராது அதனால் அடிக்கடி ரவுட்டரை மாற்றி கொண்டே இருப்பார்கள் டெக்கீஸ். அது போக ஏற்கனவே ஸ்பீடு பத்தாது இதுல ரவுட்டர் கவரேஜ் வேற சொதப்பினா எப்படி இருக்கும்? இதற்க்கு ஆப்பு வைக்கும் போல ஒரு நிகழ்வு அதான் உலகத்தின் அதி வேக அதிக பேன்ட்வித் கொண்ட ஒரு வைஃபை ர்வுட்டரை ஜெர்மனியின் ஃபிரான்ஹோஃபர் இன்ஸ்டிட்யூட் கண்டு பிடித்திருக்கிறார்கள் இந்த ரவுட்டர் 1 கிலோ மீட்டர் வரை கவரேஜ் செய்வது மட்டுமில்லாமல் இதன் வேகம் 40 கிகாபைட்ஸ். இதன் மூலம் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தை 1 நொடி ஆமாமுங்கோ - வெறும் ஒரு நொடியில் டவுன்லோட் செய்யலாம்.



8வது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றது யூ டியூப் - புதிய மென்பொருளும் அறிமுகம்!
[Monday, 2013-05-20 15:17:18]

முதற்தர வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் YouTube தளத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றின் வரிசையில் தற்போது Visual Youtube Downloader எனும் ஒரு புதிய மென்பொருளும் இணைந்துள்ளது. இலகுவான பயனர் இடைமுகம் மற்றும் விரைவான செயற்பாட்டினைக் கொண்ட இம்மென்பொருளானது உயர் தரம் வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுவதனால் ஏனைய மென்பொருட்களிளை விடவும் சிறந்ததாக இருக்கின்றது.



போக்குவரத்து பொலிசார் வண்டியின் மீட்டரைப் பார்க்காமலே வேகத்தை கணிப்பது எப்படி என்று தெரியுமா?
[Sunday, 2013-05-19 21:32:57]

நம் வண்டியின் ஸ்பீடோ மீட்டரைப் பார்க்காமலேயே போக்குவரத்து காவல்துறையினர் அதிக வேகம் என்று அபராதம் கட்டச் சொல்வது எப்படி? நாம் போகும் வேகத்தை தூரத்திலிருந்தே அவர்கள் எப்படிக் கணிக்கின்றனர்? இந்த இடத்தில்தான் டாப்ளர் எஃபெக்ட் என்ற ஒப்பற்ற அறிவியல் அடிப்படை உதவுகிறது. அந்த அடிப்படையை ஆராய்ந்து உலகுக்குத் தந்தவர் ஆஸ்திரிய அறிவியல் மேதை கிறிஸ் டியன் டாப்ளர். ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் 1803ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிறந்தவர் டாப்ளர். இவர் தந்தை, கல் உடைக்கும் தொழிலாளி. இளவயதில் நோஞ்சான் குழந்தையாக இருந்ததால், தந்தையின் தொழிலிலிருந்து தப்பித்தார் டாப்ளர். பள்ளிக் கல்வியை முடித்து, வியன்னாவிலும் சால்ஸ்பர்கிலும் வானியல் மற்றும் கணிதத்தைக் கற்றுத் தேர்ந்தார். பின் பிராகா பல்தொழில் நுட்பக் கல்லூரியில் பணியாற்றினார்.



குறைந்த விலையில் Asus அறிமுகப்படுத்தும் புதிய லேப்டொப்!Top News
[Sunday, 2013-05-19 12:31:10]

முதற்தர கணனி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Asus நிறுவனமானது கணனி வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பானதாகக் கருதப்படும் Ubuntu இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட மடிக்கணினிகளை அறிமுகப்படுத்துகின்றது. Asus 1015E எனும் பெயர் கொண்ட இக்கணனிகள் 1.1 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Intel Celeron dual-core processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டு காணப்படுவதுடன் 10.1 அங்குல அளவு மற்றும் 1366 x 768 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.



உடல் உபாதைகளை சரிசெய்யும் சில விசித்திரமான இயற்கை வைத்தியங்கள்!
[Sunday, 2013-05-19 11:46:29]

உடலில் பிரச்சனைகள் ஏற்படும் போது, அதனை குணப்படுத்துவதற்கு சிறந்த வழியென்றால் அது இயற்கை வைத்தியங்கள் தான். பணத்தை செலவழித்து மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை விட, இயற்கை வைத்தியங்களை பின்பற்றினால், உடலில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதோடு, வேறு எந்த பிரச்சனையும் உடலைத் தாக்காமலும் தடுக்கும். ஆனால் கெமிக்கல் கலந்த மருந்து மாத்திரைகளை பின்பற்றினால், அது சில நேரங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தி, நிலைமையை இன்னும் மோசமாக்கச் செய்யும். இயற்கை வைத்தியம் என்றதும் வேறு ஏதோ ஒன்று என்று எண்ண வேண்டாம்.



கணினி வன்றட்டின் (Hard Disk) நிலையை அறிவதற்கு உதவும் மென்பொருள்!
[Sunday, 2013-05-19 08:28:30]

நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில், பைலை சேவ் செய்கையில், அல்லது புதிய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், டிஸ்க்கில் உள்ள ட்ரைவில் இடம் பற்றாக்குறையாக உள்ளது என்ற செய்தி நமக்கு அச்சத்தைத் தரலாம். அப்படி என்ன நான் அதிகக் கோப்புகளை உருவாக்கி, அல்லது புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தைப் பயன்படுத்தி விட்டேன் என ஆச்சரியப்படலாம். உடனே ட்ரைவின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று, எங்கு அதிக இடம் பயன்படுத்தப்பட்டு உள்ளது எனத் தேடித் தேடிப் பார்க்கலாம். உங்களின் இந்த நேரத்தில் உதவத்தான் WinDirStat என்ற புரோகிராம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.



கறுப்பான சருமமா? பப்பாளி, ஆரேஞ்சு இருக்க கவலை எதற்கு?
[Saturday, 2013-05-18 19:52:16]

கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் களையாக மாற வழிகள்...

* முகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடைத்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை துடைக்கவேண்டும்.



Lenovo அறிமுகப்படுத்தும் IdeaPad Yoga 11S ஹைப்பிரிட் மடிக்கணனிகள்!Top News
[Saturday, 2013-05-18 13:43:48]

முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Lenovo ஆனது IdeaPad Yoga 11S எனும் புத்தம் புதிய ஹைப்பிட் மடிக்கணனியினை அறிமுகப்படுத்தியுள்ளது. 11.6 அங்குல அளவுடையதும் 1366 x 768 Pixel Resolution உடையதுமான திரையினைக் கொண்டுள்ள இக்கணினியானது i3,i5 மற்றும் i7 Processor களை கொண்ட மூன்று பதிப்புக்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் பிரதான நினைவகமாக 4GB RAM இணைக் கொண்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 128GB Solid State Disk (SSD) இணையும் உள்ளடக்கியுள்ளன.



விதைகளின் ராஜாவான பாதாமை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
[Saturday, 2013-05-18 13:09:52]

நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம் மற்றும் முடி என பலவற்றிற்கு ஆரோக்கியத்தை தருவதில் சிறந்ததாக உள்ளது. அதிலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உடலை வலுவுடனும், எந்த ஒரு நோயும் அண்டாமல் பாதுகாக்கிறது. குறிப்பாக பாதாமில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் காப்பர் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்திருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியத்துடன் வைப்பதில் பெரிதும் துணையாக உள்ளது. இவ்வாறு பாதாமின் நன்மைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில் அதன் நன்மைக்கு எல்லையே இல்லை. இப்போது அந்த பாதாமை தினமும் சாப்பிடுவதால், உடலில் உண்டாகும் 15 நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.



ஞாபகம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!
[Saturday, 2013-05-18 12:51:52]

"வீட்டுக்கு வரும்போது தேங்காய் எண்ணை வாங்கிக் கொண்டு வரச் சொல்லி எத்தனை தடவை சொன்னாலும் இந்த மனிசன் மறந்து போட்டு வந்து நிற்கிறார்" என அம்மாவிடம் பேச்சு வாங்கும் அப்பாவைப் பார்க்க பாவமாக இருக்கும். ஞாபகம் என்பது எவ்வளவு அவசியம் என்பதை பரீட்சை எழுதும் மாணவர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள். வினாத்தாள் கையிலிருக்கும் போது நினைவுக்கு வராத விடைகள் பரீட்சை மண்டபத்திற்கு வெளியே வந்ததும் ஞாபகத்திற்கு வரும்போது "அடடே" என்று சொல்வதைத் தவிர என்ன செய்ய முடியும். இப்படியான நினைவுகள் என்பன நீண்ட காலத்திற்கு சேமிக்கப்பட்ட தகவல்கள் என விஞ்ஞானிகள் வரையறை செய்வார்கள். கண், காது, மூக்கு, நாக்கு, உடல் தொடுகை போன்ற பல்வேறு புலன்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் மூளைகள் மூலம் கிடைக்கும் தகவல்கள் மூளையில் சேமிக்கப்படும் போது அது ஞாபகத்திற்கு அடித்தளமாகிறது.



புதிய வகை "டெஸ்ட் டியூப் பேபி" சிகிச்சை முறையை கண்டுபிடித்தனர் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்!
[Friday, 2013-05-17 22:26:56]

இயற்கையாக பிள்ளை பெற்றுக் கொள்வதில் பிரச்சினை உள்ள ஜோடிகளில் ஆணின் விந்தையும் பெண்ணின் முட்டையையும் உடலுக்கு வெளியில் சேர்த்து கருவை உருவாக்கும் ஐ வி எஃப் சிகிச்சை முறையில், வெற்றி வாய்ப்பை கணிசமான அளவில் அதிகரிக்கக்கூடியது என தாம் நம்பும் தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த வகையில் கரு உருவாக்கப்படுகின்ற பிள்ளையைத்தான் டெஸ்ட் டியூப் பேபி என்று சொல்வார்கள்.



சொந்த பந்தத்தில் இருந்த மணமக்கள் தேர்வு காலப்போக்கில் மாறியது - திருமணப் பொருத்தம் பற்றி சில தகவல்கள்!
[Friday, 2013-05-17 22:03:59]

திருமணத்திற்கு மணமக்கள் தேர்வு செய்வது முன்பெல்லாம் உள்ளூரில் சொந்த பந்தத்தில் என்றுதான் இருந்தது. காலப்போக்கில் இந்த நிலை மாறி கல்வி, வேலைவாய்ப்பு என்று நாட்டின் பல பகுதிக்கும் இளைஞர்கள் செல்லும் நிலை ஏற்பட்டு விட்டதால் மணமக்கள் தேர்வு செய்ய அங்கங்கேயுள்ள திருமணத் தகவல் நிலையங்களை நாட வேண்டிய அவசியம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மணமக்களின் பெற்றோர்கள் புதிதாக அறிமுகம் ஆவதால் அவர்களைப் பற்றியும் மணமகன் அல்லது மணமகள் பற்றியும் முழுமையாக தீர விசாரித்திடுவது மிகவும் முக்கியம்!


Suresh-remax-2013-01-01
Mahesan supramaniyam 031109
RoyaShades-l2011(04-12-11)
INNSYS-20120930
TamilsGuid-191012-2013
TDE_Computers2011
Canada Kanthasamy Kovil
NIRO-DANCE-100213
Ramans2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com