Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 24, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
மக்களது ஆதரவைத் தக்க வைக்கவே இராசபக்சே "சிங்களமயப்படுத்தலை" பயன் படுத்துகிறார்:
[Tuesday, 2012-08-21 11:52:58]
News Service

- சிறப்பு நிருபர்..
சென்னை 14,2012 "தமிழரது தாயகத்தை "சிங்களமயப்படுத்தல்" என்பது தமிழர்களது காணி, கடல் மற்றும் வளங்களைக் கைப்பற்றி அவற்றைப் பன்னாட்டு வணிக நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் ஒரு சூழ்ச்சியாகும்" என நவ சமஜமாஜ கட்சியின் தலைவரான விக்கிரமபாகு கருணரத்தின குற்றம் சாட்டினார்.

  

திரு விக்கிரமபாகு தெசோ மாநாட்டில் பங்குகொள்ள இங்கு (சென்னை) வந்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது "சிங்களமயப்படுத்தல்" என்பது ஒரு கேலிக்கூத்தாகும். சிங்களமயப்படுத்தலை தனது வறிய சிங்களமக்களின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள அவர்களை ஒரு பகடக்காயாகப் பயன்படுத்துகிறார். சிங்கள மக்கள் தமிழர்பகுதிகளில் குடியமர்த்தப்படுகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆன போதிலும் தமிழ்மக்களோடு கலந்துபேசாது அவர்களுடைய வளங்களைக் கைப்பற்றி அந்நிய சக்திகளுக்கு, குறிப்பாக பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கு, விற்பனை செய்வதற்கு மக்கள் விரும்பும் சாக்குப் போக்காகும்.

"சனாதிபதி இராணுவத்தைப் பலப்படுத்தவும் அரசியல் யாப்பைத் திருத்தவும் சிங்கள பேரினவாதத்தைப் பயன்படுத்திக் கொண்டார். அதன் மூலம் கிட்டத்தட்ட அனைத்து அதிகாரங்களையும் தன் வசப்படுத்திக் கொண்டார். துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை மேம்படுத்தல் பொதுமக்களுளோடு தொடர்பு இல்லாதவை. அது நடுத்தர வர்க்க ஊழல்வாதிகளுக்கு மட்டுமே பயன்பட்டது.

இந்தியா போரின்போது சிறீலங்காவுக்கு உதவி செய்தது. போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை விசாரணை செய்து தண்டிக்குமாறு அய்க்கிய நாடுகளைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானங்கள் ஒரு எல்லைக்கு அப்பால் பயன்படாது. காரணம் அய்க்கிய நாடுகள் அவையை உலகளாவிய நாடுகளே நடத்துகின்றன. அந்த நாடுகளின் ஆதரவு இராசபக்சேக்கு இருக்கிறது. "ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவரது உடன்பிறப்புக்கள் அமெரிக்க குடிமக்களாவர்."

தனித் தமிழீழத்துக்கு நீங்கள் ஆதரவா எனக் கேட்ட போது அதனை உடனடித் தெரிவாகத் தான் சொல்லமாட்டேன் என்றும் அய்க்கியத்துக்கான முயற்சிகள் இன்னமும் தீர்ந்துபோகவில்லை என்றும் சொன்னார். "தனித் தமிழீழமே ஒரே தீர்வு எனப் பார்ப்பது சரியான யோசனையாக இருக்காது. தன்னாட்சி உரிமை என்ற கருத்தாக்கம் இருக்கிறது. பல சிக்கல்கள் தொடர்பாக நாம் ஒரு நேரடி வாக்கெடுப்புக்குப் போகலாம்."

(இந்து - ஓகஸ்ட் 14)

CHENNAI, August 14, 2012

Special Correspondent

"Rajapaksa is using 'Sinhalisation' to retain the support of masses"

'Sinhalisation' of Tamil areas is a ruse used by the Sri Lankan government to take over land, seashore and other resources of Tamils and hand them over to multinational companies, alleged Vickramabahu Karunaratne, president of the Nava Sama Samaj Party, on Monday.

Mr. Vickramabahu, as he prefers to be referred to, was here to attend the Tamil Eelam Supporters Organisation (TESO) conference. He told reporters that 'Sinhalisation' process was a "farce" and Sri Lankan president Mahinda Rajapaksa was using it to gamble with poor Sinhalese masses for retaining their support. He said there was no denying the fact there were incidents of Sinhalese being settled in Tamil areas. However, it was only a populist pretext for grabbing the resources of the Tamil people and selling these to alien powers, especially MNCs, without consulting the Tamil people.

"The President has made use of Sinhalese chauvinism to strengthen the military and amended the Constitution to give him almost dictatorial powers. But, his economic polices have failed. The development of harbours and airports has little relevance to the ordinary citizen and they have benefited only the corrupt bourgeois."

Mr. Vickramabahu said India also helped Sri Lanka in the war and the resolutions asking the United Nations to probe and punish those who were responsible for the war crimes would not serve the purpose beyond a point, since the U.N. was run by global powers and Mr. Rajapaska had their support. "You must keep in mind that his brothers are citizens of the U.S."

Asked if he was in favour of a separate Eelam, Mr. Vickramabahu said that he would not advise it as an immediate option since efforts to foster unity had not been exhausted. "Seeing separate Eelam as the only solution is not the right idea. The idea of self-determination is there and we can go for a referendum on these issues."

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுக்கிறார்கள்! Top News
[Friday, 2013-05-24 22:40:09]

மாடு வெட்டுவதை கண்டித்து இன்று கண்டி தலதா மாளிகைக்கு அருகில் புத்த பிக்கு ஒருவர் தீக்குளித்ததாக தினக்கதிரில் செய்தி வெளியானதை பார்த்த நேயர் ஒருவர் இந்த படத்தையும் அனுப்பி வைத்ததுடன் ஏன் சிங்களவர்கள் மாடு வெட்டுவதில்லையா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். இலங்கையில் முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுகின்றனர். அதற்கான ஆதாரம் இதோ என இப்படத்தை அனுப்பியிருக்கிறார். இந்த புத்த பிக்கு எந்த உலகில் இருக்கிறார் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருந்தார்.



மட்டக்களப்பு கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித்தினப் போட்டி! Top News
[Friday, 2013-05-24 21:00:28]

மட்டக்களப்பில் நடைபெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித்தினப் போட்டியில்வாகரை கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் டெங்கை ஒழிப்போம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூத்து நிகழ்ச்சியில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளது. மனிதரைக் கொல்லும் கொடிய டெங்கு நோயை ஒழிக்கும் வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக விசேட கூத்தாக இக்கூத்து தயாரிக்கப்பட்டது. மக்கள் மத்தியிலே டெங்கு நோய் சம்பந்தமாக சுற்றாடலை சுத்தமாக பேணுவது தொடர்பாக ஆலோசனை கூறப்படும் வேளையில் ஒரு சிலர் ஒத்துழையாமை, எதிர்ப்பு தெரிவித்தல், விமர்சனம் செய்தல் போன்ற வகைகளால் குறித்த நோக்கம் எட்டப்படவில்லை. இதே போன்றது ஒரு எண்ணக்கருவை மையமாக வைத்து டெங்கு நோயை பரப்புகின்ற நுளம்பை கட்டுப்படுத்துவதற்கான ஒரு மார்க்கமாகவே இந்த விசேட கூத்து டெங்கை ஒழிப்போம் எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டது.



நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்வீர்களா? - அமைச்சர்களிடம் கடுமையாக பேசிய சம்பந்தன்
[Friday, 2013-05-24 20:32:10]

தமிழ் எம்.பிக்கள் தொடர்ச்சியாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் விவகாரம் தொடர்பாக பாராளமன்றில் நேற்று மதியபோசனை இடைவேளையின் போது அமச்சர்களிடம் கடுமையாக பேசினார் சம்பந்தன் எம்.பி அண்மையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சுரேஷ் ஆகியோரை நான்காம் மாடியில் வத்து விசாரித்துள்ளீர்கள் புதன்கிழமை சிவசக்தி ஆனந்தனை அழைத்து விசாரித்துள்ளீர்கள்.



சாரணர் பயிற்சிக்கு சென்ற மாணவன் ஆற்றில் மூழ்கி மரணம் - வாழைச்சேனையில் சம்பவம்!
[Friday, 2013-05-24 18:16:27]

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மாந்தறை ஆற்றில் மூழ்கி மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். மரணமானவர் பிறைந்துரைச்சேனை ஷாதுலியா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்விகற்கும் பதுர்தீன் முஹம்மது பாயிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



ஒற்றுமையின் மூலமே பெற்றுக்கொண்ட சமாதானத்தை பாதுகாக்க முடியும் - ஹத்துருசிங்க!
[Friday, 2013-05-24 16:54:42]

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெற்றுக்கொண்ட சாமாதானத்தை ஒற்றுமையின் மூலமே பாதுகாக்க முடியும் என்று யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை வெசாக் தினத்தையொட்டி பாதுகாப்பு படைகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற பசுமாடுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்...



அரசியல் பேதங்களை பின்தள்ளி வைத்துவிட்டே சமய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் - விமல் வீரவன்ச!
[Friday, 2013-05-24 16:49:50]

சமய நடவடிக்கைகளின் போது, அரசியல் பேதங்களை பின்தள்ளி வைக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சமய நடவடிக்கைகளின் போது அரசியல் கட்சிகள் பேதங்களை புறந்தள்ளி விட்டு, அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். விகாரை ஒன்றை அபிவிருத்தி செய்யும் பணியின் போது, அங்குள்ள மத தலைவர்களின் அரசியல் நிலைப்பாடுகளையோ பங்களிப்புச் சபையின் அரசியல் குறித்தே கவனம் செலுத்தக் கூடாது. எனினும் சில அரசியல்வாதிகளின் எதிரான அரசியல் செயற்பாடுகள் காரணமாக தற்போதுள்ள மத வழிப்பாட்டுத் தலங்கள் குறித்து கவனத்தில் கொள்ளாது செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.



பிரித்தானியாவிற்கு ஆட்களை கடத்திவந்த இலங்கையர் கைது.
[Friday, 2013-05-24 16:46:01]

இலங்கையர்களை பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக ஆட்கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இலங்கையர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்து தற்போது பிரித்தானியாவில் வசித்துவரும் 50 வயதான சுப்ரமணியம் விக்னராஜா என்பவர் மீதே ஆட்கடத்தல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. லண்டன் - லுடோன் மற்றும் இசெக்ஸ் பகுதிகளில் கடந்த புதனன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் மேலும் 11 பேருடன் சுப்ரமணியம் விக்னராஜா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.



அலட்சியப் போக்குடனே அரசு எங்களை நடத்துகின்றது - ரவூப் ஹக்கீம்!
[Friday, 2013-05-24 16:45:51]

கிழக்கு மாகாணத்தில் இன்று ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கையில் வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது என அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாலை சாய்ந்தமருதில் இடம்பெற்ற நூலகத்திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,



காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வட மாகாண சபைக்கு வழங்கப்பட வேண்டும் - ராஜித சேனாரத்ன!
[Friday, 2013-05-24 16:39:04]

வடக்கு மாகாண சபைக்கு 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை வழங்க வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த மாகாண சபைத் தேர்தல் 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் கீழ் நடைபெறும் எனவும் அந்த மாகாணத்திற்கு அனைத்து அதிகாரங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.



பெரியளவிலான விலையைக் கொடுத்தே இலங்கையில் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம் - சவேந்திர சில்வா
[Friday, 2013-05-24 16:27:18]

பெரியளவிலான விலையைக் கொடுத்தே இலங்கையில் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு நான்கு ஆண்டு வெற்றி விழா நியூயோர்க்கில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



13வது திருத்தத்தை மட்டுமன்றி முழு அரசியல் யாப்பையும் மாற்ற வேண்டும் - பொதுபல சேனா!
[Friday, 2013-05-24 13:48:12]

13ஆவது திருத்தத்தையும் மாகாணசபை முறைமையையும் மாற்றி இனங்களுக்கிடையில் நல்லுறவையும் நாட்டில் சமாதானத்தையும் கொண்டுவர முடியாது. இந்நாட்டின் அரசியல் அமைப்பில் வெளிநாடுகளில் அழுத்தங்கள் காணப்படுவதால் முழு அரசியல் யாப்பையும் மாற்றியமைக்க வேண்டும்மென பொதுபலசேனா அமைப்பின் இணைப்பாளர் டிலந்த விதானகே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,



புகலிடக் கோரிக்கையாளர்கள் இருவருக்கு சட்டவுரைஞர் உதவி!
[Friday, 2013-05-24 13:34:45]

இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த 2 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிறென்டன் ஓ கொனர் சட்டவுரைஞர் உதவி வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த 2 புகலிடக் கோரிக்கையாளர்களும் அகதிகளுக்கு உதவி செய்யும் சட்டவுரைஞர் டேவிட் மான் என்பவருக்கு கிறிஸ்மஸ்தீவிலிருந்து அகதி பாதுகாப்புக்காக விண்ணப்பிக்க உதவி கோரி கடந்த புதன்கிழமை மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தனர். அண்மையில் கிறிஸ்மஸ்தீவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 31 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களும் வழமை போல சட்ட ஆலோசனை இல்லாத நிலையில் விசாரிக்கப்பட்டதாக மனித உரிமைகள் சட்டவுரைஞர் டானியல் வெப் கூறியுள்ளார்.



புத்த பிக்கு ஒருவர் வெசாக் தினமான இன்று தீக்குளிப்பு!Top News
[Friday, 2013-05-24 13:29:15]

வெசாக் தினமான இன்று கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று காலை சுமார் 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மாடுகள் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பிக்கு தனக்கு தீ வைத்துக் கொண்டுள்ளார். உடம்பில் பெற்றோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட பிக்குவை அருகில் இருந்தவர்கள் பிடித்து தீயை அணைத்து கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.



ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கனேடிய தமிழர் கைது!!
[Friday, 2013-05-24 13:24:03]

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள் டொமினிக்கன் குடியரசில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய பிரஜையான கருணாநிதி நல்லதம்பி என்பவரே இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பலுக்கு தலைமை தாங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கனேடிய கடவுச் சீட்டுத் திணைக்களத்தில் கடவுச் சீட்டுக்களைத் திருடி அவற்றில் மாற்றங்களைச் செய்து வேறு நாடுகளுக்கு மக்களை சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நல்லதம்பி என்பவரே கடவுச் சீட்டுக்களை திருடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.



விபத்தில் மரணமடைந்த வாழைச்சேனை இந்துக்கல்லூரி ஆசிரியர் ஹேமராஜனின் பூதவுடல் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது. Top News
[Friday, 2013-05-24 12:27:40]

வாழைச்சேனையில் கடந்த புதன்கிழமையன்று இடம்பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்த வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் கணிதப் பாட ஆசிரியர் சி.ஹேமராஜனின் பூதவுடல் அடக்கம் செய்வதற்காக பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மாணவர்கள் கண்ணீர் மல்க ஆசிரியரின் பூதவுடல் நல்அடக்கல் செய்யப்பட்டது.



இலங்கை போர்க்குற்றவாளிகள் சுதந்திர பறவைகளாக உலாவுகிறார்கள்: சர்வதேச மன்னிப்புச் சபை
[Friday, 2013-05-24 10:05:51]

இலங்கையில் போர் முடிவடைந்தாலும் போர்க்குற்ற முறையீடுகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் சுதந்திரப் பறவைகளாக உலாவுகிறார்கள் என லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச மன்னிப்புச் சபை அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கட்டாயத்தின் பேரில் காணாமற்போகச் செய்யப்பட்ட இருபதுக்கு மேற்பட்டோர் குறித்து இலங்கையில் கடந்தஆண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமற் போகச் செய்யப்பட்டோரில் அரசியல்வாதிகள், வர்த்தகப் பிரமுகர்கள், சந்தேகத்துக்குரிய குற்றவாளிகள் ஆகியோர் அடங்குவர் என்றும் மேற்படி சபை அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையால் நேற்று வியாழக்கிழமை விடுக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை இலங்கையை கடுமையாக விமர்சிக்கிறது.



அன்னபூரணியின் அமெரிக்க பயணத்தின் வைர விழா வல்வையில் கொண்டாடப்பட்டது. Top News
[Friday, 2013-05-24 10:03:50]

இரு நிகழ்வுகளும் வல்வை வரலாற்று ஆவண காப்பகம் Images of Valvai அமைந்த வல்வெட்டித்துறை 'கீதாஞ்சலி" இல்லத்தில் 27 -04 -2013 காலை 10.00மணிக்கு ஆவண காப்பக நிறுவனர் ந.நகுலசிகாமணி அவர்கள் தலைமையில்; இ.குகதாஸ் அவர்களின் இறைவணக்கத் துடன் ஆரம்பமாகியது. சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றான சீமாட்டி அன்னபூரணியின் அமெரிக்க பயணத்தின் 75ஆவது ஆண்டை நினைவுகூரும் கேக் (Cake) ஐ கப்டன் கலைநேசன் கப்டன் விநாயகமூர்த்தி கப்பல் பொறியியலாளர் கா.றஞ்சனதாஸ் ஆகியோர் வெட்டி சிறப்பித்தனர்.



கொழும்பு துறைமுகத்தில் பாரிய தீ விபத்து
[Friday, 2013-05-24 09:58:24]

கொழும்பு துறைமுகத்தின் (CFS 1) களஞ்சியசாலையில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பாரிய சேதசங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது பொலிஸாரும், தீயணைப்புப் படையினரும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதேவேளை இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



அதிகாரப்பகிர்விற்கு ஆதரவளித்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் - லக்ஸ்மன் கிரியல்ல
[Friday, 2013-05-24 09:48:33]

அதிகாரப் பகிர்விற்கு ஆதரவளித்திருந்தால் யுத்தத்தை தடுத்திருக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். 2001ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டமொன்றை முன்வைத்ததாககத் தெரிவித்துள்ளார். தற்போது அதிகாரப் பகிர்வு குறித்து பேசும் தரப்பினர் அதனை எதிர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டத்திற்கு ஆதரவளிக்கப்பட்டிருந்தால் யுத்தத்தினால் உயிரிழந்த பெரும் எண்ணிக்கையிலான உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.



மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கினால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் - கோதபாய
[Friday, 2013-05-24 09:39:48]

மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கக் கூடாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கப்படுவதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு அதிகாரங்களை வழங்குவதனால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென தெரிவித்துள்ளார். அரசாங்க அதிகாரி என்ற ரீதியில் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவது தமது கடமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதனை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் பாரிய பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.


TDE_Computers2011
Ramans2011
NIRO-DANCE-100213
RoyaShades-l2011(04-12-11)
TamilsGuid-191012-2013
Suresh-remax-2013-01-01
Mahesan supramaniyam 031109
AJRwindows22.05.13
Canada Kanthasamy Kovil
INNSYS-20120930
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com