Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
வெற்றிலை, யானை தமிழ் வேட்பாளர்கள் சிங்கள வாக்குகளை பெற்றால் மாத்திரமே வெற்றி பெற முடியும்: - மனோ கணேசன்
[Tuesday, 2012-08-21 21:25:40]
News Service

நமது மலையக தமிழ் கூட்டமைப்பு வேட்பாளர்கள் நமது தமிழ் வாக்குகளை மாத்திரம் பெற்று இரத்தினபுரி மாவட்டத்திலும், கேகாலை மாவட்டத்திலும் வெற்றி பெற முடியும். ஆனால் வெற்றிலை சின்னத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலும், யானை சின்னத்தில் ஐக்கிய தேசிய கட்சியிலும் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமானால், அவர்கள் சிங்கள வாக்குகளையும் பெற்றால் மட்டுமே வெற்றி பெற முடியும். இந்த இரண்டு வழிமுறைகளில் எது நடக்க கூடியது என்பது புத்தியுள்ள இரத்தினபுரி தமிழர்களுக்கு நன்கு தெரியும்.

  

எனவே ஆளும் கட்சியிலும், ஐக்கிய தேசிய கட்சியிலும் இன்னமும் இருக்கின்ற சில தமிழ் அரசியல்வாதிகள், தமது தமிழ் வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என உண்மையிலேயே விரும்பினால், தங்கள் கட்சிகளுக்கு வாக்களிக்கும் சிங்கள மகா ஜனங்களின் விருப்பு வாக்குகளையும் தமது கட்சி தமிழ் வேட்பாளர்களுக்கு பெற்று கொடுக்கட்டும். நான் அதை வேண்டாம் என்று சொல்லவில்லை. எமது மலையக தமிழ் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தமிழ் வாக்குகளை மாத்திரம் பெற்று நிச்சயம் வெற்றி பெறுவார்கள். அதற்கு மேலதிகமாக பெரும்பான்மை கட்சி தமிழ் வேட்பாளர்களும், சிங்கள வாக்காளர்களின் வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றால், நல்லதுதானே?

ஆனால் இரத்தினபுரி, கேகாலை மாவட்ட தமிழ் வாக்குகளை மாத்திரம் பெற்று தமிழ் பிரதிநிதித்துவம் பெறமுடியும் என உண்மைக்கு புறம்பாக பேசி, தமிழ் வாக்குகளை சிதறடிக்க வேண்டாம் என ஆளும் கட்சி - ஐக்கிய தேசிய கட்சி தமிழ் அரசியல்வாதிகளுக்கு திட்டவட்டமாக சொல்கிறேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

காவத்தை சதொச மண்டபத்தில் மலையக தமிழ் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது. மலையக மக்கள் முன்னணி தலைவி சாந்தினி சந்திரசேகரன், ராதாகிருஷ்ணன் எம்பி, இதொகா உப தலைவர் ராம், ஜதொகா பொதுசெயலாளர் முரளி ரகுநாதன், வேட்பாளர்கள் ரூபன் பெருமாள், எம். சந்திரகுமார், எஸ். மாசிலாமணி ஆகியோர் உட்பட பெருந்தொகையானோர் கலந்துகொண்ட கூட்டத்தில் மேலும் உரையாற்றிய மனோ கணேசன் கூறியதாவது,

இரத்தினபுரியில் ஒரு தமிழ் வேட்பாளர், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிடுகிறார். இவர் வெற்றி பெறாவிட்டாலும், இவருக்கு போனஸ் ஆசனம் வழங்கப்படும் என பிரச்சாரம் செய்யப்படுகிறது. இவருக்கு ஆதரவாக நாமல் ராஜபக்ச எம்பி பிரச்சாரம் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த வேட்பாளர் இன்று பலாங்கொடை பிரதேச சபையில் ஆளும் கட்சி உறுப்பினர். கடந்த காலங்களில் இவருக்கு இந்த பிரதேச சபையில் உப தலைவர் பதவி தருவதாக சொன்னார்கள். ஆனால் அது கிடைக்கவில்லை. பிரதேசசபையில், பதவி தர முடியாதவர்கள்தான், இன்று மாகாணசபையில் தமிழனுக்கு போனஸ் ஆசனம் தருவதாக பிரச்சாரம் செய்கிறார்கள். இது கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போய் சூரியனை பிடிக்கும் கதை.

எனவே இந்த கதையெல்லாம் தமிழ் வாக்குகளை பெறுவதற்காக செய்யப்படும் பொய் பிரச்சாரங்கள் என்பதை இரத்தினபுரி தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த விடயத்தில் ஆளுகின்ற கட்சியும், என்றாவது ஒருநாள் ஆளுவோம் என கனவு காணும் கட்சியும், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இந்த நாட்டில் நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டம் காரணமாக நாம் சில வேளைகளில் இவர்களுடன் சேர்ந்து தேர்தல்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால் இந்த இரண்டு கட்சிகளை பற்றியும் நாம் நன்கு தெரிந்துகொண்டு செயற்படவேண்டும்.

நாம் கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, போராடி, வீடு வீடாக சென்று பேசி, எமது மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினால், அதையும் தட்டி பறிக்க இந்த பெரும்பான்மை கட்சிகள் முயல்கின்றன. எனவே இரத்தினபுரி தமிழ் வாக்காளர்கள், இந்த பெரும்பான்மை கட்சிகள் தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும். தமிழ் வாக்குகளை காவு கொடுக்க கூடாது.

இன்று நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமை, சிறிய கட்சிகளுக்கு சாதகமானது. இதை பயன்படுத்துகொண்டுதான் கடந்த மாகாணசபை தேர்தலில், இரத்தினபுரியிலும், கேகாலையிலும் ஜேவிபி, 9,500 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. எனவே சுமார் 10,000 ஆயிரம் வாக்குகள் பெற்று தமிழ் பிரதிநிதித்துவம் பெரும் சாத்தியம் எமக்கு இருக்கின்றது. அதை நாம் ஏன் பயன்படுத்திக்கொள்ள கூடாது? இதுதான் எனது கேள்வி.

கடந்த தேர்தலின் போது, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் நாம் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்டோம். நமது தமிழ் வேட்பாளர்களுக்கு, சிங்கள விருப்பு வாக்குகளையும் பெற்று தருவதாக அன்று உறுதி வழங்கப்பட்டது. ஆனால் கடைசியில், நமது தமிழ் வாக்காளர்களின் விருப்பு வாக்குகளை சிங்கள வேட்பாளர்கள் கேட்டு வாங்கி கொண்டார்கள். நமக்கு சிங்கள விருப்பு வாக்குகள் வரவில்லை. இதுதான் நடந்தது. எனவேதான் இம்முறை நாம் தனித்து போட்டியிட தீர்மானித்தோம் .

இந்த முறையும், யானை, வெற்றிலை சின்னங்களில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள், தமிழ் வாக்குகளை சிங்கள வேட்பாளர்களுக்கு வாங்கி கொடுக்கும் வேலையை மட்டுமே செய்கிறார்கள். அவர்களால், சிங்கள வாக்குகளை பெற்று வெற்றிபெற முடியாது. ஏனென்றால் சிங்கள வாக்காளர்கள், தமிழ் வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்குகளில் ஒன்றையேனும் வழங்க தயார் இல்லை. இதுதான் இன்றைய அரசியல் யதார்த்தம்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

எமது விளைநிலங்களை எம்மிடமே தாருங்கள்! வெலிஓயா பிரதேச செயலரிடம் மகஜர் கையளிப்பு!Top News
[Wednesday, 2013-06-19 21:00:36]

முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் ரவிகரன் தலைமையிலான பிரஜைகள் குழுவினரும், தமது வயல்நிலங்களை இழந்து தவிக்கும் கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களைச்சேர்ந்த மக்களின் பிரமுகர்களும், இணைந்து, வயல்நிலங்களின் காவல் தெய்வமான கோட்டைக்கேணி பிள்ளையார் கோவில் இறை வழிபாட்டின் பின்னர், வெலிஓயா பிரதேச செயலர் தீபல் நிஸாந்த திரிமன்னவிடம் இன்று காலை 11.00 மணியளவில் மகஜரை கையளித்ததோடு, மகஜரின் பிரதி ஒன்றை மகாவலி திட்ட அதிகார சபையின் வெலிஓயாவுக்கான இணைப்பதிகாரியிடமும் கையளித்தனர்.



வவுனியா வைத்திய சாலையில் தாதியர்கள் பணி பகிஷ்கரிப்பு! Top News
[Wednesday, 2013-06-19 20:52:13]

அரசாங்க தாதிமார் சங்கத்தை சேர்ந்த தாதிய உத்தியோகத்தர்கள் பல அம்ச கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா வைத்திய சாலை முன்றலில் சுலோக அட்டைகளை தாங்கியவாறு ஒரு மணி நேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அரசே ஒரு வாரத்திற்கான வேலை நாட்களை ஐந்து நாட்களாக மாற்று ,ஆபத்து கொடுப்பனவு அனைத்து தாதிய உத்தியோகத்தர்களுக்கும் வழங்க வேண்டும்,மேலதிக நேர கொடுப்பனவு என்பன அதிகரிக்கப் பட வேண்டும் ,அரசே 1979 ல் வெளி வந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் ,பட்டதாரி தாதிய உத்தியோகத்தர் களுக்கு நியமனத்தை வழங்கு ,சேவை மூப்பு அடிப்படையின் அடிப்படையின் படி மூத்த தாதியர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்கு என்பவற்றை முதலான கோரிக்கைகளை முன் வைத்து இப்போராட்டம் நடை பெற்றது.



யாழ்.மக்கள் இராணுவத்தினரை விரும்புகின்றனர் - லலித் வீரதுங்க!
[Wednesday, 2013-06-19 20:26:48]

யாழ்ப்பாணத்திலுள்ள காணிகள் பொது மக்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆயுதபடைகளை அங்கு தொடர்ந்தும் இருக்குமாறு யாழ்ப்பாண மக்கள் மனப்பூர்வமாக கேட்பதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். பல நிலங்கள் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளன, அரசாங்கத்துக்கு தேவையான நிலங்களை அரசாங்கம் வைத்துக்கொள்ளும். உயர் பாதுகாப்பு வலயம் 60 சதவீதத்தால் குறைந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



13 பிளஸ் எனக்கூறியது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வையே : இந்தியாவிற்கு இலங்கை புது விளக்கம்!
[Wednesday, 2013-06-19 18:53:08]

"13 + என நாம் சொன்னது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான தீர்வு" இதுவும் மகிந்த சிந்தனையின் ஒரு துளி இலங்கையின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் மிகவும் விரிவுப்படுத்தப்பட்ட பொதுவான தீர்வையை 13 பிளஸ் என இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு அறிவித்திருந்தாக இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு புதிய விளக்கம் அளித்துள்ளது. அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் ஊடாக இலங்கை அரசாங்கம் இதனை இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. 13வது அரசியல் அமைப்புத் திருத்தமானது அரசியல் கட்சிகளின் உரிய இணக்கங்கள் இன்றியே ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.



விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்களை தடைசெய்யுமாறு ஆஸி. பிரதமரிடம் இலங்கை வேண்டுகோள்! Top News
[Wednesday, 2013-06-19 18:46:02]

அவுஸ்திரேலியாவில் இயங்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளை தடைசெய்யுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஜுலியா கில்லார்ட்டிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாமல் ராஜபக்ச,லொஹான் ரத்வத்த, திலங்க சுமதிபால, வசந்த சேனநாயக்க ஆகிய ஆளும்கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்குத் தலைமையேற்று அவுஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜுலியா கில்லார்ட், வெளிவிவகார அமைச்சர் றொபேட் கார் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இதன்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதுடன், வரும் நவம்பரில் கொழும்பில் கொமன்வெல்த் உச்சி மாநாட்டை நடத்துவதற்கான அவுஸ்திரேலியாவின் உதவியையும் கோரியுள்ளார்.



மாகாண இணைப்பை தடுக்கும் 19ஆவது திருத்தத்தை ஒத்தி வைக்க அரசு தீர்மானம்!
[Wednesday, 2013-06-19 18:39:57]

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் ஒன்றிணைவதை தடுக்கும் நோக்கில் கொண்டுவர தீர்மானித்திருந்த 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் பிற்போட்டுள்ளதாக தெரியவருகின்றது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான 19 ஆவது திருத்தச் சட்டம் அவசர சட்டமூலமாக செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல கடந்த வாரம் தெரிவித்திருந்தபோதிலும் அதனை தற்போது பிற்போட்டுள்ளதாகவே அறிய முடிகின்றது. அந்த வகையில் நேற்று பிற்பகல் பாராளுமன்றக்கட்டட தொகுதியில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் 19 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவருவது தொடர்பில் எந்த விடயமும் ஆராயப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மண்டபத்தில் இலங்கைத்தமிழர் மாரடைப்பால் மரணம் - மனைவி புதல்விகளை சந்திக்க தடை!
[Wednesday, 2013-06-19 18:21:05]

இலங்கையிலிருந்து சென்று தமிழகம் மண்டபம் முகாமில் உள்ள தனது மனைவி மற்றும் புதல்விகளை சந்திக்க சென்ற இலங்கைத் தமிழர் அந்த முகாமிற்கு அருகாமையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மரணமானார். இவரது மனைவி கடந்த 2011ம் ஆண்டு கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்திற்காக கச்சதீவு சென்றிருந்தார். கச்சதீவில் இருந்து அவர் தமது இரண்டு புதல்விகளுடன் சட்டவிரோதமான முறையில் தமிழகத்தைச் சென்றடைந்த வேளையில் கியு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.பிரயாண ஆவணங்கள் எதுவுமே அற்ற நிலையில் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.



லண்டனில் ஆர்பாட்டம் நடத்திய ஈழத்தமிழர்கள் மீது சிங்கள வெறியர்களின் தாக்குதலை கண்டிக்கிறோம்: - பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு
[Wednesday, 2013-06-19 18:11:39]

லண்டனில் ஸ்ரீலங்கா துடுபெடுத்தாட் அணியைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தியும் மற்றும் ஸ்ரீலங்காவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் தமிழர்கள் மீதான இன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டியும் நேற்று லண்டன் வாழ் ஈழதமிழர்களால் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கும், சிறிலங்காவுக்கும் இடையில் துடுபெடுத்தாட்ட போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது மைதானத்துக்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் நிகழ்த்தப்பட்டது.



ஊடகவியலாளர சிவராமை கடத்தியவர்களை அடையாளம் காட்ட முடியும் - முச்சக்கர வண்டி சாரதி சாட்சியம்!
[Wednesday, 2013-06-19 18:11:18]

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராமைக் கடத்திய நபர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சிவராம் கொலை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, அங்கு சாட்சியமளித்த கொழும்பு பாமன்கடை பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் பிரியந்த என்னும் முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு கூறியுள்ளார். சிவராம் கடத்தப்பட்ட போது தான் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அருகே தனது வண்டியுடன் நின்றிருந்ததாகக் அவர் கூறினார்.



புகலிடம் கோருவோருக்கு நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா! - ஆசியில் அவதிப்படும் அகதிக் கொரிக்கையாளா்கள்
[Wednesday, 2013-06-19 18:00:22]

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். புகலிட கோரிக்கையாளர்கள் தொழில் செய்ய முடியாது, குடும்பத்தை அவுஸ்திரேலியாவுக்கு எடுக்க முடியாது மற்றும் பணம் அனுப்பமுடியாது ஆகிய மூன்று நிபந்தனைகளுடனேயே தற்காலிக விஸா வழங்கப்படுகின்றது.



விரிவுரையாளரை தாக்கிய மாணவனை வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்த பொலிஸார்! Top News
[Wednesday, 2013-06-19 17:53:56]

நாவல திறந்த பல்கலைக்கழக சட்டபீட வளாகத்தில் பெண் விரிவுரையாளரான யசோதரா கதிர்காமத்தம்பியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மாணவனை பொலிஸார் வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்துள்ளனர். இன்று புதன்கிழமை யசோதரா கதிர்காமத்தம்பி என்ற பெண் விரிவுரையாளர் குறித்த மாணவனால் தாக்கப்பட்ட நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட மாணவன் பல்கலைக்கழக வளாகத்தில் கூரிய ஆயுதத்துடன் நடமாடியதையடுத்து ஒருவகை மருந்தை உட்கொண்ட நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து குறித்த மாணவன் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற வேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



13 இல் திருத்தம் செய்யாவிடின் அரசில் நீடிப்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் - விமல் எச்சரிக்கை!
[Wednesday, 2013-06-19 17:50:04]

ஆளும் கட்சியில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாகாணசபை சட்டத்தில் திருத்தங்கள் செய்யாது வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். சில தரப்பினர் தூதுவராலயங்களுக்கு அடிமைப்பட்ட அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். இருப்பினும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவளிக்கும் மாகாணசபை அதிகாரங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். மாகாணசபை சட்டங்களில் திருத்தம் செய்யாது தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க நேரிடும் என விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.



சிங்களவர்களால் லண்டனில் தமிழீழ மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கண்டனம்!
[Wednesday, 2013-06-19 17:48:32]

தமிழ்த் தேசிய இனத்தின் மீது தொடர்ச்சியான இனவழிப்புப் போரை கட்டவிழ்த்து விட்டுள்ள சிங்கள இனவெறியாளர்களின் ஆட்சியரங்காகவுள்ள சிறிலங்காவினை புறக்கணிக்கக் கோரி, புலம்பெயர் தமிழீழ மாணவர்களினால் கடந்த 17ம் திகதி ஓவல் துடுப்பாட்ட மைதானம் முன்பாக ஒழுங்கு செய்யப்பட்ட அமைதி வழியான கவனயீர்ப்புப் போராட்டம் சிங்கள இனவெறியாளர்களின் காட்டுமிராண்டித்தனமான வன்முறைத் தாக்குதலுக்குள்ளானது. தாயகத்தில் பல்வேறுபட்ட ஒடுக்குமுறைகளுக்குள் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எமது தமிழீழ மக்கள் தமது அடிப்படை உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டு திறந்த வெளிச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.



வடக்கு தேர்தலுக்கு எதிராக குரலெழுப்புபவர்கள் ஜனாதிபதியின் திட்டத்தையே முன்னெடுக்கின்றனர் - அசாத் சாலி
[Wednesday, 2013-06-19 17:42:11]

வடக்குத் தேர்தலுக்கு எதிராக கூக்குரல் போடும் சம்பிக்க, விமல், பொதுபல சேனா, ராவணா பலய மற்றும் ராவய போன்றோர் ஜனாதிபதியின் திட்டத்தையே முன்னெடுக்கின்றனர் என கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து நாட்டைக் கட்டியெழுப்பும் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



மனைவியுடன் தகராறு - சயனைட் கடித்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி!
[Wednesday, 2013-06-19 17:38:06]

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சயனைட் கடித்து தற்கொலைக்கு முயற்சித்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குருசுமதவடி, ஆணைக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி மல்கம் பேட் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டவேளை, கணவருக்கு சயனைட் எவ்வாறு கிடைத்தது என்பது பற்றி தனக்கு தெரியாதென்று கூறியுள்ளார்.



பஸ் விபத்துக்குள்ளானதில் இருவர் பலி, 70 பேர் காயம்!
[Wednesday, 2013-06-19 17:19:14]

நுவரெலியா, ஹாவாஎலிய பகுதியில் பஸ் வண்டியொன்று விபத்திற்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளதுடன், 70 பேர் காயமடைந்துள்ளனர். பதுளையிலிருந்து நுவரெலியா நோக்கி வந்துகொண்டிருந்த பஸ் வண்டியொன்றே இன்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் விபத்திற்குள்ளானது. இப்பஸ் வண்டியானது பாதையை விட்டு விலகிச்சென்று பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. இவ்விபத்தில் நமுணுகல பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் இருவரே பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



தமது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தும் தருணம் இந்தியாவிற்கு வந்துவிட்டது - மனோ கணேசன்!
[Wednesday, 2013-06-19 17:15:59]

இந்திய மத்திய அரசின் கருத்துகள், இந்திய அரசு தலைவர்கள் வழங்கிய உறுதிப்பாடுகள் என மன்மோகன் சிங் சொன்னார், சோனியா சொன்னார் என கூட்டமைப்பு எம்பிக்கள் ஊடகங்கள் மூலமாக சொல்கின்றார்கள். கூட்டமைப்பு எம்பிக்களுடன் ஆளும் இந்திரா காங்கிரஸ் தலைவர், இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரது அழகான படங்களும் ஊடகங்கள் மூலமாக காட்டப்படுகின்றன. ஆனால், இந்திய அரசின் உண்மை நிலைப்பாடுகள் என்ன என்பது பற்றி தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மயக்க நிலைமை நிலவுகின்றது. இது முடிவுக்கு வரவேண்டும். யுத்தத்தை நடத்தி முடித்த இந்தியா, தேசிய இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருமா, இல்லையா என தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றார்கள்.



சிங்கள ராவயவின் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தவும் - ஜனாதிபதியிடம் அசாத் சாலி கோரிக்கை!
[Wednesday, 2013-06-19 16:08:46]

மாடுகளை அறுப்பதை நிறுத்தக் கோரி கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு ஊர்வலமாக வரும் சிங்கள ராவய அமைப்பினரை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்-முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவரான அசாத் சாலி அவர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கோரியுள்ளார். ஊர்வலமாக வந்த இவர்கள் கடந்த இரவு தங்காலை என்னும் இடத்தில் (ஜனாதிபதியின் பகுதியில்) ஒரு மாட்டிறைச்சிக் கடையை உடைத்து, தீ வைத்ததாகக் குற்றஞ்சாட்டும் அசாத் சாலி அவர்கள், அந்தத் தாக்குதல் நடந்தபோது பொலிஸார் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.



13 ஆவது திருத்த சட்டத்தைத் திருத்துவது இன்னொரு வாக்குறுதி மீறல்: - எம்.ஏ. சுமந்திரன், நா.உ.
[Wednesday, 2013-06-19 10:46:32]

சிறீலங்கா அரசு சிறீலங்கா மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது. இலங்கையின் யாப்பில் கொண்டுவரப்படவுள்ள உச்தேச 13 ஆவது சட்டதிருத்தம் - இன்று சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பரவல் மூலம் வழங்கப்பட்டுள்ள ஒரே சலுகை - இந்த வாக்குறுதி மீறல்களுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு.



இனமானக் கலைஞர் மணிவண்ணனுக்கு கனடிய மண்ணில் நடாத்தப்பட்ட நினைவெழுச்சி வணக்க நிகழ்வு Top News
[Wednesday, 2013-06-19 09:55:44]

ஜூன் 16, 2013, ஞாயிற்றுக் கிழமை 5 மணிக்கு 733 பேர்ச்மௌன்ட் வீதியில் கனடா கந்தசாமி ஆலயத்தில் ஈழ விடுதலையை தன் உயிர் மூச்சு எனக் கொண்ட பன்முக கலைஞன் மணிவண்ணன் ஐயாவின் நினைவஞ்சலி கூட்டம் கனடியத் தமிழர் தேசிய அவையினரால் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மக்கள் கலந்து கொண்டு பூவள்ளி தூவி வணங்கி நினைவெழுச்சி உரைகளில் எழுகை பெற்றுச் சென்றனர். இந்த நிகழ்வில் காசி ஆனந்தன் அண்ணாவின் சிறப்புரை நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. இனமானக் கலைஞர் மணிவண்ணன் அவர்களை நினைத்து உலகெங்கும் வாழும் தமிழர்களால் நடாத்தப்பட்ட நினைவெழுச்சி நிகழ்வுகள் வரிசையில் கனடிய மண்ணில் நடைபெற்ற இந்த நிகழ்வும் மிக சிறப்பாக நடைபெற்றது.


Mahesan supramaniyam 031109
Ramans2011
NIRO-DANCE-100213
TDE_Computers2011
Suresh-remax-2013-01-01
AJRwindows22.05.13
TamilsGuid-191012-2013
INNSYS-20120930
RoyaShades-l2011(04-12-11)
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com