Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
தண்ணீர் கூட அருந்தாமல் போராடும் ஈழத்தமிழர் செந்தூரனுக்கு தொடரும் அநீதி! தமிழக அரசு மௌனம் Top News
[Friday, 2012-08-24 11:18:01]
News Service

பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர் செந்தூரன் நேற்றோடு 18 வது நாளாக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நான்காவது நாளாக நீர் கூட அருந்தாமல் இருக்கிறார். இன்னும் அவர் குறையை கேட்கவோ, அல்லது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ தமிழக அரசு விரும்பவில்லை.

  

அவரையும் அவரோடு இருக்கும் அனைத்து முகாம் வாசிகளையும் அரசு விடுதலை செய்து திறந்த வெளி முகாமிற்கு மாற்ற வேண்டும் என்பதே செந்தூரனின் கோரிக்கை. நான்காவது நாளாக நீர் கூட அருந்தாமல் இருக்கிறார். இன்னும் அவர் குறையை கேட்கவோ, அல்லது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ அரசு விரும்பவில்லை.

இதுதொடர்பாக கியூ பிரிவு கண்காணிப்பாளர் (எஸ் பி) சம்பத் குமார் அவர்களை சந்திக்க, சிறப்பு முகாம் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் அவரது அலுவலகம் சென்றனர்.

இக்குழு கூறியதாவது,

எங்களை வரச் சொல்லிவிட்டு , இரண்டுமணி நேரம் காக்க வைத்து விட்டார்கள். பின்பு இறுதி வரை சம்பத் குமார் எங்களை சந்திக்க வரவே இல்லை. அதனால் நாங்கள் கடிதம் எழுதி கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.

நாங்கள் வெளியே வந்ததும் எஸ் பி எங்களிடம் தொலைபேசியில் பேசினார். செந்தூரனை போராட்டம் நடத்துவதை கைவிடச் சொல்லுங்கள். நாங்கள் சொன்னால் அவர் கேட்க மாட்டேன் என்கிறார் என்று கூறினார். ஆனால் செந்தூரனின் போராட்டத்திற்கு எந்த பதிலும் கூற அவர் தயாராக இல்லை.

இவ்வாறு போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் கூறினர்.

இன்று செந்தூரனை சந்தித்து பேசிய தாசில்தார் வளர்மதி மற்றும் துணை மாவட்ட ஆட்சியாளர் செந்தூரனின் கோரிக்கையை நாங்கள் அரசுக்கு தெரியப்படுத்துகிறோம் என்று அலட்சியமாக பதில் சொல்லிவிட்டு சென்றனர்.

அப்போது அரசின் காதுகளுக்கு இதுவரை இதுபற்றி தெரியவே தெரியாது போலும். இதற்கிடையில் இன்னொரு துயர சம்பவம் நடந்துள்ளது.

செந்தூரனை சந்திக்க இலங்கையில் இருந்து அவர் அத்தை வந்துள்ளார். செந்தூரனின் நிலையை கண்டு மனம் உடைந்துள்ளர். அவர் தங்கியுள்ள விடுதி மேலாளர்களை கியூ பிரிவு காவல் துறை மிரட்டி உள்ளனர். செந்தூரனின் சித்தப்பாவையும் மிரட்டி உள்ளனர்.

எல்லா நிகழ்வுகளையும் கவனித்த செந்தூரனின் அத்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இறுதியில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் அத்தை நேற்று இறந்தே போனார்.

அத்தையின் இறந்த உடலை பார்ப்பதற்கு இப்போது செந்தூரன் காவல்துறையிடம் அனுமதி வேண்டி உள்ளார். ஒருவருக்கு இத்தனை சோகம் வரக் கூடாது. எவ்வகையிலும் ஆதரவற்ற இது போன்ற ஈழ ஏதிலிகளை சித்திரவதை செய்து இன்பம் காணுகிறது தமிழக அரசு மற்றும் காவல்துறை.

எளியோரை மென்மேலும் துன்பப்படுத்தி பார்ப்பது தான் அரசு இயந்திரந்தின் செயலாக இப்போது மாறிவிட்டதை நினைத்தால் நெஞ்சு பொறுக்கவில்லை.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

கோவையில் நடைபெற்ற மே 18 போர்க்குற்றநாள் நிகழ்வில் பெருமளவு ஈழ விடுதலை ஆதரவாளா்கள் பங்கேற்ப்பு. Top News
[Monday, 2013-05-20 10:26:35]

கோவையில் நேற்றையதினம் (18 05 2013) முள்ளிவாய்க்கால் இனப்படுகொல போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவான தமிழீழ விடுதலை ஆதரவாளா்களும் செயற்ப்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.



ஜனாதிபதி மஹிந்த சீனாவுக்கு ஆறாவது தடவையாக விஜயம்!
[Monday, 2013-05-20 09:16:57]

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் 22ம் நாள் தொடக்கம் 26ம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். எனினும் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை. ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர், சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் ஆறாவது பயணம் இதுவாகும். அண்மையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர், சிறிலங்கா அதிபர் நடத்தவுள்ள முதல் சந்திப்பு இதுவாகும்.



கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் நடைபெற்ற தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வு Top News
[Monday, 2013-05-20 09:15:07]

"ஈழத் தமிழ் மக்களுக்கான தீர்வு சுதந்திர இறைமை உடைய தமிழீழ அரசே"
- தமிழீழ சுதந்திர சாசன முரசறைவில் பிரதமர் உருத்திரகுமாரன் வலியுறுத்தினார்.

"தமிழீழ மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி அமைய விருக்கும் தமிழீழ அரசு ஜனநாயக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். சுதந்திர இறைமை உடைய அரசே தமிழ் மக்களுக்கு அவசியம். மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு சட்டமியற்றி, அதனை அமுல்படுத்தும் உரிமை இருக்கும். சட்டத்தின்முன் தமிழீழ மக்கள் அனைவருமே சரிசமமாக நடாத்தப்படுவார்கள். தமிழீழ அரசாங்கம் மதசார்பற்றதாக இருக்கும். தமிழ், முஸ்லீம் மக்களது தனித்துவம் பேணப்படும்.



கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் இம்மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம்: - சிவாஜிலிங்கம்
[Monday, 2013-05-20 09:12:26]

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. இதற்கான பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ரெலோவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.



கனடாவின் நகர்வுகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என்கிறது இலங்கை அரசு!
[Monday, 2013-05-20 09:11:55]

கனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் கனடா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என்பது குறித்து கவனிக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடத்தப்படுவது குறித்து கனடாவும் பஹாமாஸூம் அண்மையில் நடாத்திய பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டின் உண்மையான நிலைமைகள் குறித்து அந்தந்த நாடுகளுக்கு தெளிவுபடுத்துமாறு வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.



அரசின் யுத்த வெற்றிவிழா ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இரத்தக் கண்ணீரால் எழுதப்பட்ட ஒரு துக்க தினம். - ஜனா
[Monday, 2013-05-20 09:06:05]

யுத்த வெற்றிவிழா இலங்கை அரசைப் பொறுத்தவரை கொண்டாட்ட நிகழ்வாக இருக்கும். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இரத்தக் கண்ணீரால் எழுத்தப்பட்ட ஒரு துக்க தினம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவிக்கிறார். யுத்த வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறுவது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நோர்வே அரசு அதிர்ச்சி!
[Monday, 2013-05-20 08:52:13]

இலங்கை நீதிமன்றின் தீர்ப்புகள் தமக்கு அதிர்ச்சியளிப்பதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கைக்கான நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என கொழும்பு நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது. கொழும்பு மேலதிக நீதவான் அமாலி ரணவீர இந்த உத்தரவினை பிறப்பித்திருந்தார். முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனமான சகவாழ்வு மன்றத்தின் தலைவர் குமார் ரூபசிங்கவினால் நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உறுதிமொழி அளிக்கப்பட்டதனைப் போன்று நிதி உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நோர்வேயின் முன்னாள் தூதுவர் ஹில்டே ஹரால்ஸ்டட் மற்றும் இரண்டு அதிகாரிகள் 98.5 மில்லியன் ரூபாவினை வழங்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



பௌத்த பிக்குகள் பொறுமையுடனும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டும் - பிரதமர்
[Monday, 2013-05-20 08:39:20]

பௌத்த பிக்குகள் மிகவும் பொறுமையுடன் செயற்பட வேண்டுமென பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். சிலர் வேற்று மதங்களுடன் மோதல்களை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். இதனால் நாட்டின் பெரும்பான்மை இனத்திற்கு அதிக அழிவு ஏற்படும். இதனை பௌத்த மாநாயக்கத் தேரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பௌத்த மதத் தலைவர்கள் பொறுமையுடனும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டும். மக்களின் மனதுகளை வென்றெடுக்கக் கூடிய மதத் தலைவர்கள் இல்லையென்றால், எத்தனை பெரிய விஹாரைகள் அமைத்தாலும் அதில் பயன் கிடையாது என பிரதமர் தெரிவித்துள்ளார். களனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



மெல்பேணில் நடைபெற்று வரும் தமிழர் இனவழிப்பு புகைப்படக் கண்காட்சி! Top News
[Monday, 2013-05-20 08:08:59]

அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் ஞாயிற்றுக்கிழமை (19-05-2013) அன்று தமிழர் இனவழிப்பை நினைவுபடுத்தும் புகைப்படக் கண்காட்சி தொடங்கிவைக்கப்பட்டது. மதியம் இரண்டு மணிக்குத் தொடங்கப்பட்ட இந்நிகழ்வு தமிழ் ஏதிலிகள் கழகத்தைச் (Tamil refugee Council) சேர்ந்த Ron Guy தலைமையில் இடம்பெற்றது. இக்கண்காட்சியில், முள்ளிவாய்க்கால் பேரழிவின் இறுதிக்காலப்பகுதியில் எடுக்கப்பட்ட, இதுவரை வெளிவராத புகைப்படங்களும் போரின் பின்னான எமது மக்களின் அவல வாழ்வை வெளிப்படுத்தும் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்படங்கள் அனைத்தும் முள்ளிவாய்க்கால் காலப்பகுதி தொடக்கம் கடந்த ஆண்டின் இறுதிவரை தமிழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பின் சாட்சியமாக உள்ளன. இப்படங்களில் பெரும்பாலானவற்றைப் படம்பிடித்து பாதுகாப்பாக அந்த ஆவணங்களை அவுஸ்திரேலியா வரை கொண்டு வந்து சேர்ந்த்தவரும் நேரடியாக இக்கண்காட்சித் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டார்.



முப்பது வருடங்களாக தமிழர்கள் போராடி அழிவைத்தான் பெற்றுக்கொண்டுள்ளனர் - ஹிஸ்புல்லா
[Monday, 2013-05-20 07:59:39]

பதவிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுக்க மாட்டேன் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் பல சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் முஸ்லிம் சமூகம் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும். முஸ்லிம் சமூகத்தை நிதானத்துடன் வழி நடத்த வேண்டிய பொறுப்பு முஸ்லிம் அரசியல் தலைவர்கள், சமூக சமய தலைவர்களுக்கு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முஸ்லிம்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளை விட அதிகமான பிரச்சினைகள் எதிர்காலத்தில் வரலாம் பாரிய சவால்கள் ஏற்படலாம். எந்த பிரச்சினை வந்த போதும் நாம் பொறுமையாகவும் நிதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.



மேற்குலகிற்கு அடி பணிந்து வடமாகாணசபை தேர்தலை நடாத்துவது படையினரை அவமானப்படுத்தும் செயல் - சம்பிக்க ரணவக்க
[Monday, 2013-05-20 07:50:35]

மேற்குலக அழுத்தங்களுக்கு அடிபணிந்து வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்துவது தாய்நாட்டுக்காக தமது உயிர்களைக் கொடுத்த போர்வீரர்களை அவமானப்படுத்தும் செயல் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமயவினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட போர்வீரர்களை நினைவு கூரும் நான்காவது ஆண்டு நினைவு நிகழ்வில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஈழப்போரில் வெற்றி பெற்றிருந்தால், இப்போது சிறிலங்காவுக்கு எதிராக அரசியல் நடத்தும் இந்திய அரசியல்வாதிகளான கருணாநிதியும், ஜெயலலிதாவும் உயிருடன் கூட இருந்திருக்கமாட்டார்கள். பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் அரசியல்வாதிகளான சம்பந்தன், ரவூப் ஹக்கீம், அசாத் சாலி போன்றோரும் உயிருடன் இருந்திருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



போலிப்பிரச்சாரங்களை விடுத்து இராணுவக் குறைப்பினை ஏற்றுக்கொள்ளுங்கள் - கோத்தாபாய கோரிக்கை!
[Monday, 2013-05-20 07:23:10]

43ஆயிரம் படைவீரர்கள் நிலைநிறுத்தப்பட்டிருந்த வடக்கில் தற்போது 13ஆயிரத்து 200 படைவீரர்களே கடமையில் உள்ளனர். போலிப்பிரச்சாரங்களை விடுத்து இராணுவக் குறைப்பினை ஏற்றுக்கொள்ளுங்கள் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடக்கில் தற்போது இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களில் புறச் சக்திகள் தலையீடு செய்வதற்கு ஒரு போதும் அனுமதியளிக்க முடியாது. அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித், காணி சுவீகரிப்பு மற்றும் படையினர் நிலைநிறுத்தம் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தத் தகவல்களில் உண்மைகள் எதுவும் இல்லை. வடக்கில் பலாலி, காங்கேசன்துறை பகுதிகளில் காணி சுவீகரிப்பு தொடர்பில் இந்தியா கேள்வி எழுப்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை முரசறைந்த தமிழீழ சுதந்திர சாசனம் : 110 000 மேற்பட்ட மக்கள் பங்கெடுப்பு ! சிங்கள தேசத்திற்கு பேரிடி!Top News Top News
[Sunday, 2013-05-19 22:04:59]

தமிழர் தேசத்தினை போரில் வெற்றிகொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, 1 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது. 2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப்பாதையில் இராஜதந்திர களத்தில் தமிழீழ சுதந்திர சானத்தின் முரசறைவு தமிழர் தரப்பின் வரலாற்று முக்கியமிக்கதொரு பெரும் அரசியல் முன்னகர்வாக கருதப்படுவதோடு ஆயிரக்கணக்கான தமிழீழத் தாயக மக்கள் தங்கள் கருத்துக்களை இச்சாசன உருவாக்கத்திற்கு வழங்கியுள்ளமை உணர்வெழுச்சியினை ஏற்படுத்தியுள்ளது.



மனித எலும்புக்கூடுகள் குருநாகல் மலையில் மீட்பு!
[Sunday, 2013-05-19 21:43:37]

குருநாகல், யதிஸ்ஸா மலைப் பகுயிலிருந்து மனித எலும்புக்கூடுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.பொலிஸருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி இவ் மனித எலும்புக் கூடுகள் இரண்டும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எலும்புக் கூடுகளில் ஒன்று ஆண் எனவும் மற்றையது பெண் எனவும் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.



பிரான்சில் நடைபெற்ற மே. 18 தமிழின அழிப்பு நினைவு நாள் Top News
[Sunday, 2013-05-19 21:12:43]

தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உப கட்டமைப்புக்களும், தமிழீழ மக்கள் பேரவையும் இணைந்து இப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். இன்றைய போராட்டத்தில் குர்திஸ்தான் விடுதலை அமைப்பும் பங்கு கொண்டு தமது முழு ஆதரவையும் தெரிவித்தனர்.



ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா அழுத்தம் கொடுக்க வேண்டும் - கூட்டமைப்பு!
[Sunday, 2013-05-19 21:00:04]

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு யதார்த்தமான முறையில் தீர்வு காண்பதற்கும், அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கும் அரசாங்கம் மெய்யாகவே முனைப்புகாட்ட, சீனா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் அழுத்தங்களை ஈடு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் சீனாவின் உதவியை நாடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.



பிரபாகரனின் படம் ஜெயலலிதாவுக்கு ஓட்டுக் கேட்கும்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? சீமான் கேள்வி!
[Sunday, 2013-05-19 20:52:15]

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து சிறிய அளவுக் கூட்டமாக உள்ளரங்கில் ஒரு திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. இதனால், பொதுக்கூட்டத்துக்காகப் போடப்பட்ட மேடைகளை கட்சியினர் பிரித்து எடுத்தனர். மேடை கலைக்கப்பட்டு பேனர்கள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? இதுபோல் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது?



மாகாணசபை முறைமை அவசியமா? இல்லையா? - சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசு திட்டம்!
[Sunday, 2013-05-19 20:44:48]

வடக்குத் தேர்தலுக்கு எதிராக பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்குத் தேர்தல் நடத்துவதனை தடுக்குமாறு கோரி தேசிய சுதந்திர முண்ணனி இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளது. வடக்குத் தேர்தல்களை ரத்துச் செய்யுமாறு கோரி பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. பொதுமக்களின் கையொப்பங்கள் திரட்டும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பில் நடைபெறவுள்ள இந்த ஆரம்ப நிகழ்வில் கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக காணி,மற்றும் காவல்துறை அதிகாரங்கள் ரத்துச் செய்யப்படவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.



மெரினாவில நடைபெற்ற மே 18 போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். Top News
[Sunday, 2013-05-19 20:44:05]

சிங்கள இனவெறியர்களால் இலங்கைத் தீவில் ஈழத்தில் நடாத்தப்பட்ட தமிழினப் படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவு தினம் நினைவேந்தல் நிகழ்ச்சியாக இன்று 19.05.13 சென்னை மெரினாவில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வானது மே 17 இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.



இலங்கை, சிங்கள பெளத்தர்களின் நாடு எனக் கூறுபவர்கள் இந்நாட்டின் வரலாறு தெரியாதவர்கள் - சுரேஷ் எம்.பி
[Sunday, 2013-05-19 20:39:12]

இலங்கை சிங்கள பெளத்தர்களின் நாடு எனக் கூறுபவர்கள் இந்நாட்டின் வரலாறு தெரியாதவர்கள். விஜயன் வருகைக்குப் பின்னரே இலங்கையில் பெளத்த மதம் பரவியதாக மகாவம்சம் தெரிவிக்கின்றது. இப்படியிருக்க இது சிங்கள பெளத்தர்களின் நாடு என எப்படி கூற முடியும்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். விஜயனின் வருகைக்கு முன்னர் இங்கு நாகர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள் தமிழ் பேசுபவர்கள், சிவ வழிபாடு செய்பவர்கள், தமிழ் பண்டைய மொழி. இதற்கு நீண்ட வரலாறு உண்டு. சிங்கள மொழி நான்காம் நூற்றாண்டில் தோன்றியதாக கூறப்படுகின்றது.


RoyaShades-l2011(04-12-11)
INNSYS-20120930
TDE_Computers2011
Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
Ramans2011
Suresh-remax-2013-01-01
Canada Kanthasamy Kovil
TamilsGuid-191012-2013
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com