Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
விமான விபத்தில் தொலைந்த இராஜதந்திரப் பொதி 46 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு!
[Thursday, 2012-08-30 18:34:15]
News Service

கடந்த 1966ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியாவின் போயிங்-707 என்ற பயணிகள் விமானம், பிரான்சில் விபத்துக்குள்ளானது.

  

மேற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய மலைத்தொடரான ஆல்ப்ஸ் மலைத்தொடரில் விமானம் விழுந்து நொறுங்கியதால், அதில் பயணம் செய்த 117 பேரும் இறந்தனர். இந்த விமானத்தில் இருந்த இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் கடிதங்கள் அடங்கிய பை இருந்தது. அந்த பை என்ன ஆனது என்று இதுவரை தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் அந்த பை, ஆல்ப்ஸ் மலைத்தொடரின், மவுன்ட் பிளாங்க் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியாளர் அர்னார்டு கிறிஸ்ட்மேன் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஜூல்ஸ் பெர்ஜர் ஆகியோர் கடந்த 21ம்தேதி அந்த பையை கண்டெடுத்துள்ளனர். இதுபற்றி கிறிஸ்ட்மேன் கூறுகையில்,

'அப்பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் சிலர் அங்கு பனிப்பாறையில் பளபளப்பான ஒரு பொருள் இருப்பதாக கூறினர். இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது விமானத்தின் பாகங்கள் கிடந்தன. சற்று தூரத்தில் ஈரமான நிலையில் பை இருந்தது. அந்த பையை யாரோ ஒருவர் வைத்து விட்டு சென்றது போல் அப்படியே இருந்தது. அந்தப் பையில் விலை உயர்ந்த வைரமோ, தங்கமோ இருக்கலாம் என்ற நம்பிக்கையில் திறந்து பார்த்தோம். ஆனால் அதில் ஈரமான நிலையில் அரசு கடிதமும், இந்திய செய்தித் தாள்களும் இருந்தன' என்றார்.

இந்த தூதரக பை, மலையடிவாரத்தில் உள்ள சாமோனிக்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் தெரியவில்லை என்றும், அந்த பை கிடைக்கப் பெற்றதும் ஆய்வு செய்யப்படும் என்றும் பாரிஸ் நகரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2008ல் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் இதே பகுதியில் பிரபல மலையேற்ற வீரர் டேனியல் ரோச் என்பவர் ஆய்வு செய்தார். அப்போது 1966 ஜனவரி 23ம் தேதியிட்ட சில இந்திய செய்தித் தாள்களை கண்டுபிடித்தார். மேலும் 1950ல் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமான என்ஜின் பாகத்தையும் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

சீனாவில் கனமழையால் 100 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - 55 பேர் பலி!
[Sunday, 2013-05-19 10:27:15]

சீனாவில் கனமழைக்கு இதுவரை 55 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். போர்க் கால அடிப்படையில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சீனாவின் தென் பகுதிகளில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். கன மழையில் இதுவரை மூழ்கியும், நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கியும் 55 பேர் இறந்துள்ளனர். அவர்களின் உடல்களை மீட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி மேலும் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளம் சீனாவின் தென் பகுதிகளில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.



பாலின மாற்று அறுவைச் சிகிச்சையால் பிரம்படி தண்டனையில் இருந்து தப்பிய ஆண்!
[Sunday, 2013-05-19 10:20:38]

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆண் ஒருவர் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியதால் பிரம்படி தண்டனையில் இருந்து தப்பினார். அவருக்கு 14 மாதம் சிறைத் தண்டனை மட்டும் விதிக்கப்பட்டது. அவரது பெயர் பெனிதா (21). இவர், தனது ஆண் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர் ஒருவரது வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கினார். அவரது வீட்டு கதவை தீ வைத்து கொளுத்தினார் என்பது குற்றச்சாட்டு. சிங்கப்பூரில் ஆண்கள் இதுபோன்ற குற்றங்களைச் செய்தால் பிரம்படி தண்டனை வழங்கப்படுவது வழக்கம்.



சீனப்பிரதமர் இன்று இந்தியாவுக்கு விஜயம் - மூன்று நாட்கள் தங்கிருப்பார்!
[Sunday, 2013-05-19 10:18:28]

சீன பிரதமர், லி கெகியாங், மூன்று நாள் பயணமாக, இன்று மதியம், இந்தியா வருகிறார். இருதரப்பு நல்லுறவு, வர்த்தகம் தொடர்பாக, பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. சீன பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற லி கெகியாங், தன் முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணமாக, இன்று இந்தியா வரவுள்ளார். மதியம், டில்லி வரும் அவர், தனிப்பட்ட முறையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுகிறார். இரவில் அவருக்கு, பிரதமர், மன்மோகன் விருந்து அளிக்கிறார். அதில், மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.திங்கள் கிழமை, இருதரப்பு முக்கிய பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், தொழில் ஒத்துழைப்பு மற்றும் எல்லைப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.



நான்கு வயதுச் சிறுவனை மேயராக்கிய அமெரிக்க நகரவாசிகள்!
[Sunday, 2013-05-19 10:13:16]

அமெரிக்காவின், மின்னிசோட்டா மாகாணத்தில் வசிக்கும் ராபர்ட் டப்ஸுக்கு இப்போது 4 வயது.. இன்னும், பாலர் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், அமெரிக்காவில், 22 பேர் மட்டுமே வசிக்கும், "டோர்செட்' நகரத்தின் மேயர். இந்நகர மக்கள், கடந்த ஆண்டு நடந்த ஒரு விழாவில், டப்சை, மேயராகத் தேர்ந்தெடுத்தனர். "மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டப்ஸ், ஒரு பொது நல விரும்பி; அவன் பெரிய படிப்புகளை இன்னும் முடிக்கவில்லை. ஆனால், மக்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினான். முதியோர்களின் கைத்தடிகளைப் பிடித்து, சாலையை கடக்கச் செய்வான்; நன்றாக மீன் பிடிப்பான்' என, டோர்செட் நகர பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார். "மேயர் மிகவும் அழகாகப் பாடுவார்; நன்றாக நடனம் ஆடுவார்; மேலும், மக்கள் மிகவும் கவனமாக தெருக்களைக் கடக்க சொல்லிக் கொடுப்பார்' என, மின்னிசோட்டா பகுதி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.



தரையிறங்கும் போது தீப்பிடித்த விமானம் - விமானியின் சாதுரியத்தினால் 136 பயணிகளும் உயிர்தப்பினர்!
[Sunday, 2013-05-19 10:07:16]

மொஸ்கோவில் தரையிறங்கிய விமானத்தில் திடீரென தீ பற்றியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் சிறு காயமின்றி தப்பினர். ரஷ்யாவின் தென்பகுதியான ஸ்டாவ்ரோபோலில் இருந்து மாஸ்கோவிற்கு போயிங்-737 என்ற விமானம் 136 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் மாஸ்கோவில் தரையிறங்கும் போது ‌தீ பிடித்து மேலும் கீழுமாக தள்ளாடிய போதிலும் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்.இது குறித்து அவசரகால நிலைகள் துறை அமைச்சகம் ‌கூறுகையில் விமானம் தரையிறங்கும் போது தீ பிடித்த போதிலும் விமானி திறமையாக செயல்பட்டு தரையிறக்கினார். இதனால் பயணிகள் யாருக்கும் காயங்கள் இல்லை பயணிகள் 129 பேர் தான் இருந்தனர் என்றது.



இன்று ஒரே நாளில் மூன்று குறுந்தூர ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது வடகொரியா!
[Saturday, 2013-05-18 20:22:36]

குறைவான தூரம் பாய்ந்து சென்று தாக்கும் மூன்று ஏவுகணைகளை பசிபிக் கடலின் கிழக்குப் பகுதியில் வடகொரியா இன்று ஒரே நாளில் ஏவியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இது குறித்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கிம் மின்-சியோக் கூறுகையில், இன்று காலை இரண்டு ஏவுகணைகளையும், மதியம் ஒரு ஏவுகணையையும் வடகொரியா ஏவியதாக குறிப்பிட்டார். வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையை அடுத்து கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.



இந்தியாவுக்கு இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்ய அமெரிக்க அரசு அனுமதி!
[Saturday, 2013-05-18 20:16:55]

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இயற்கை எரிவாயுவை ஏற்றமதி செய்ய அந்நாட்டு அரசு விதிமுறைகளுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது. அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயுவை, அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்ட நாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும். இந்தியா இது போன்ற ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் செய்து கொள்வில்லை. எனினும், இந்தியாவுக்கு இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்ய அமெரிக்காவின் எரிசக்தித்துறை விதிமுறைகளுடன் கூடிய சிறப்பு அனுமதி அளித்துள்ளது.



செயற்கைக் கோள்களைத் தாக்கும் ஏவுகணையை சீனா ஏவியதாக சர்ச்சை!
[Saturday, 2013-05-18 20:14:07]

சீனா கடந்த சனிக்கிழமை சிசுவான் மாகாணத்தில் உள்ள ஸிசாங் செயற்கை கோள் தளத்தில் இருந்து விண்ணுக்கு ஒரு ராக்கெட்டை செலுத்தியது. ஆனால் இது செயற்கை கோளை வழிமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.இதை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. விண்ணில் ராக்கெட் செலுத்தியது ராணுவ வளர்ச்சிக்குதான் என தெரிவித்தது. ஆனால் பூமியின் மேற்பரப்பில் பாறை அடுக்குகளில் உள்ள சக்தி வாய்ந்த துகள்கள் மற்றும் காந்த வயல்கள் குறித்து ஆய்வுக்காக அனுப்பப்பட்டதாக சீனாவின் தேசிய விண்வெளி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற மாறுபட்ட கருத்துகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



நியுயோர்க்கில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல் - 60 பேர் காயம்!
[Saturday, 2013-05-18 20:07:50]

நியூயார்க்கின் வடக்கு புறநகர் பகுதியில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன. இதில் சுமார் 60 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூயார்க்கில் இருந்து வந்த ரயிலும், கனெக்டிகட்டிற்கு சென்ற ரயிலும் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் ‌நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்துக்கு குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கிச் சூடு - நடிகர்கள் தப்பியோட்டம்!
[Saturday, 2013-05-18 20:03:17]

பிரான்சின் கேன்ஸ் நகரில் நடைபெறும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டை அடுத்து விழாவிற்கு வந்திருந்த நடிகர், நடிகைகள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் அரங்கத்தை விட்டு வெளியே ஓடினர். இதனால் சிறிது நேரம் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. துப்பாக்கியால் சுட்டவரை மேடை அருகில் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து துப்பாக்கி, கத்தி, பிளாஸ்டிக் கையெறி குண்டுகள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.



ஈராக்கில் சன்னி முஸ்லிம்களைக் குறிவைத்து தொடர்குண்டு வெடிப்புகள் - 66 பேர் பலி!
[Saturday, 2013-05-18 06:32:43]

ஈராக்கில் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள பகுபா நகரில் நேற்று சன்னி முஸ்லிம்களின் மசூதி அருகில் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடிதத்தில் குறைந்த்து 66பேர் கொல்லப்பட்டனர். மசூதியில் தொழுகை முடிந்து வெளியே வரும்போது ஒரு குண்டு வெடித்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஒரு இடத்தில் கூடி நின்றபோது, அங்கு இரண்டாவது குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டனர். 57 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல், தெற்கு பாக்தாத்தில் சன்னி முஸ்லிம் ஒருவரின் இறுதிச்சடங்கு நடந்த இடத்தின் அருகே குண்டுவெடித்தது. இதில் 8 பேர் இறந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேற்கு பாக்தாதில் மற்றொரு குண்டு வணிகவளாகம் அருகே வெடித்த்தால் 19 பேர் கொல்லப்பட்டனர்.



வடகொரியாவிடம் 200 ஏவுகணைகள் - மதிப்பிட்டதை விட அதிகம் என்பதால் அமெரிக்கா அதிர்ச்சி!
[Saturday, 2013-05-18 06:23:35]

வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனில் இருந்து வெளிவந்த தகவலை அடுத்து, கொரியாவின் பாதுகாப்பு ஆய்வு மையம் இதனைச் செய்துள்ளதாக பத்திரிகை செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. பொருளாதாரப் பிரச்சினைகளையும் மீறி வடகொரியா ஆயுதங்களில் முதலீடு செய்வதாக, அமெரிக்கா கருத்து தெரிவித்ததை அடுத்து அவர்களிடம் நகர்த்தக்கூடிய தன்மையுடன் 94 ஏவுகணைகள் இருக்கலாம் என்று தென்கொரிய அரசு நினைத்திருந்தது.



இந்தியாவுடன் நட்புறவு வைக்கக் கூடாது - நவாஸ் ஷெரீப்புக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை!
[Saturday, 2013-05-18 06:16:36]

இந்தியாவுடன் நட்புறவை வைத்துக் கொண்டால், பாகிஸ்தானில் புதிதாக பதவி ஏற்க உள்ள அரசை நீடிக்க விட மாட்டோம் என்று அங்குள்ள திவிரவாத இயக்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லிக் கட்சி அமோக வெற்றி பெற்றது. பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுத்த நவாஸ் ஷெரீப் இந்தியாவுடன் நட்புறவை வைத்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.



அமெரிக்க ராணுவத்தில் பாலியல் தாக்குதல்கள் - வெட்கக்கேடு, அவமானம் என்கிறார் ஒபாமா!
[Saturday, 2013-05-18 06:12:14]

அமெரிக்க ராணுவத்தில் பாலியல் தாக்குதல்கள் நடப்பது வெட்கக்கேடாகவும், அவமானமாகவும் இருப்பதாக அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க ராணுவத்தில் பாலியல் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன. இதையடுத்து, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் சக் ஹேகல், முப்படைகளின் தளபதி மார்ட்டின் டெம்ப்சே ஆகியோருடன் அதிபர் ஒபாமா வியாழக்கிழமை முக்கிய விவாதம் நடத்தினார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:



பள்ளிக்கட்டணம் செலுத்தாத மண்டேலாவின் முன்னாள் மனைவியின் சொத்துகள் ஏலம்!
[Saturday, 2013-05-18 05:46:20]

பள்ளிக்கூடத்துக்கு தரவேண்டிய நிலுவையை செலுத்தாததால், தென் ஆப்ரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவியின் உடமைகள் ஏலம் விடப்பட உள்ளன. தென் ஆப்ரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் இரண்டாவது மனைவி வின்னி மடிக்கிசெலா. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள, சோவிட்டோ நகர பள்ளிக்கு தரவேண்டிய, 1.18 லட்சம் ரூபாயை செலுத்தாமல் விட்டுவிட்டார். இது தொடர்பாக, பள்ளி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், வின்னி மண்டேலா வீட்டில் உள்ள பொருட்களை விற்று, இந்த தொகையை செலுத்தும் படி, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, வரும், 21ம் தேதி, வின்னியின் வீட்டில் உள்ள ஏராளமான ஓவியங்களும், வெள்ளி சாமான்களும் ஏலம் விடப்பட உள்ளன.



ஆர்ஜன்டீனாவின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் சிறையில் மரணம்!
[Friday, 2013-05-17 20:19:58]

ஆர்ஜன்டீனாவின் முன்னாள் ஆட்சியாளரான ஜோர்ஜ் ரஃபல் விடெலா தனது 87 வது வயதில் சிறையில் மரணமானார். இயற்கை மரணம் எய்தியதாகக் கூறப்படுகின்ற ஜெனரல் விடெலா, 1976இல் ஆர்ஜன்டீனாவில் ஆட்சியை கைப்பற்றிய இராணுவ ஆட்சிக்கு தலைமை தாங்கினார்.டேர்ட்டி வோர் காலகட்டம் என்று வர்ணிக்கப்படுகின்ற தனது ஆட்சிக்காலத்தில் செய்த மனிதஉரிமை மீறல்களுக்காக அவர் சிறைத்தண்டனையை அனுபவித்து வந்தார்.1983 ஆம் ஆண்டுவரை தொடர்ந்த அந்த இராணுவ ஆட்சியில் முப்பதினாயிரம் வரையிலான இடதுசாரி செயற்பாட்டாளர்களும், அரச எதிர்ப்பாளர்களும் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மதிப்பிடுகிறார்கள்.



1400 ஆண்டுகளுக்கு முந்திய எகிப்திய வீரனின் உடல் கண்டுபிடிப்பு!
[Friday, 2013-05-17 17:07:04]

தெற்கு எகிப்து பகுதியில், சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வீரனின் உடலை தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.எகிப்து மற்றம் நுபியாவுக்கு இடையேயோன எல்லைப் பகுதியில் ரோமன் ஆட்சி காலத்தில் அந்த வீரர் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. வீரரின் உடற்பகுதி நல்ல நிலையில் இருப்பதாகவும், அவர் மரணம் அடையும் போது 25 முதல் 35 வயதுக்குள் இருக்கலாம் என்றும், அந்த வீரரின் நெஞ்சில் குத்தப்பட்டதால் அவர் உயிரிழந்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.



குளிரில் தவித்த அப்பிள்களை காப்பாற்ற ஹெலியை வாடகைக்கு அமர்த்திய கனேடிய தோட்டக்காரர்!
[Friday, 2013-05-17 16:54:04]

கனடா தலைநகர் ஒட்டாவா அருகே உள்ள அப்பிள் தோட்டம் ஒன்றில் குளிரில் தவித்த அப்பிள்களை, ஹெலிகாப்டர் மூலம் வெப்பக்காற்று வீசவைத்து பாதுகாத்துள்ளார் தோட்டக்காரர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பனிப்படலம் மூடிக்கொள்ளும் என்று வானிலை எச்சரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து கலங்கிய அப்பிள் தோட்டக்காரர் ஃபில் லியால், வேறு வழியின்றி ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்தார். அந்த ஹெலிகாப்டர் அவரது அப்பிள் தோட்டத்தில் தாழப் பறந்து, அப்பிள் மரங்கள் மீது வெப்பக் காற்றை வீசியது. இதனால் பனிப்படலம் மூடாமல் அப்பிள் தப்பியது.



காதலியின் குழந்தைக்காக ஐரோப்பிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் வடகொரிய அதிபர்!
[Friday, 2013-05-17 16:31:17]

வடகொரியா அதிபராக கிம் ஜாங்-யுன் பதவி வகித்து வருகிறார். இவருக்கு கடந்த 2009-ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆனால், அதை அவர் ரகசியமாக வைத்து இருந்தார். இந்த நிலையில், திடீரென 2012-ம் ஆண்டு ஜூலையில் தனது மனைவியுடன் மக்கள் மத்தியில் தோன்றினார். அதற்கு முன்பே இத்தம்பதிக்கு 2010-ம் ஆண்டே ஒரு குழந்தை பிறந்து விட்டது. இந்த நிலையில், தற்போது அதிபர் கிம்-ஜாங்-யுன்னுக்கு அவரது காதலி மூலம் பெண் குழந்தை பிறந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீப காலமாக சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து மிகவும் விலை உயர்ந்த குழந்தை உணவு பொருட்கள் வடகொரியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.



சிரிய இராணுவம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்கு ஆதாரம் உள்ளது! - ஒபாமா
[Friday, 2013-05-17 16:28:41]

சிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் மக்களின் மீது ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது உறுதியாகியுள்ளது என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். துருக்கி பிரதமர் ரெசெப் தய்யிப் எர்டோகன் நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்தித்து பேசினார். அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஒபாமா, சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் அங்குள்ள நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அன்றாட நிகழ்வுகள் தொடர்பாக நமக்கு தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.


Canada Kanthasamy Kovil
RoyaShades-l2011(04-12-11)
TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
Mahesan supramaniyam 031109
Ramans2011
Suresh-remax-2013-01-01
INNSYS-20120930
TDE_Computers2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com