Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 22, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை - தமிழ் தேசிய கூட்டமைப்பினரைத் தவிர வேறு எவராலும் தட்டிக் கேட்கவோ தடுத்து நிறுத்தவோ முடியது:
[Friday, 2012-08-31 10:53:30]
News Service

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் தாயக பூமியில் அரசாங்கம் திட்டமிட்டமுறையில் சிங்கள மக்களை குடியேற்றிவருகிறது இதை தமிழ் தேசிய கூட்டமைப்பினரைத் தவிர வேறு எவராலும் தட்டிக் கேட்கவோ தடுத்து நிறுத்தவோ முடியது என வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்லம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

  

செங்கலடியில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்;வாறு கூறியுள்ளர்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்லம் அடைக்கலநாதன் தொடர்ந்து உரையாற்றுகையில் :

"இந்த நாட்டிலே அனைத்து உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழக்கூடிய எங்களுடைய இனத்திற்கு இனப் பிரச்சினை இருக்கிறது உரிமைப் பிரச்சினை இருக்கிறது அதை உடைத்தெறிந்து அதனூடாக ஏற்படுகின்ற இடர்களையெல்லாம் தாண்டி எங்களுடைய மக்களுக்கு ஒரு சமஷ்டி ரீதியான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான அனைத்து விடயங்களையும் செய்யக் கூடிய வகையிலே ஒரு தீர்வைப் பெற்றுத் தருவதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையாக அமைகிறது.

இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலைப் பொறுத்தவரை எமது மக்களின் வாக்குகளை சிதரடிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலே 24 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன. இதிலே யாராவது ஒரு சுயேட்சைக் குழு அரசாங்கத்திற்கெதிராக குரல் கொடுத்திருக்கிறார்களா? இவர்கள் எதிரியாக நினைப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பினரை மட்டுமே. இவர்களுக்கு அரசாங்கம் பணம் கொடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைக்கின்ற வாக்குகளை சிதைப்பதற்காக களமிறக்கியிருக்கிறது. இதிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி அக்காவும் ஒருவர்.

தங்கேஸ்வரி அக்கா இந்த தேர்தலில் தனது சொந்த பணம் ஏதாவது செலவளித்திருக்கிறாரா? இவரின் அறிக்கைகளைப் பார்க்கும் போது முழுக்க முழுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பைத் தாக்குகிறார். அவர் கூறுகிறார் நாங்கள் வெற்றிபெற்றால் ஆளும் கட்சியுடன் சேர்ந்து இணக்கப்பாட்டு அரசியலுக்கு வருவோம் என்கிறார். வடக்கிலே டக்லஸ் தேவானந்தாவும் இதைத்தான் கூறிக்கொண்டிருக்கிறார் கிழக்கில் தங்கேஸ்வரி அக்கா கூறுகிறார். இந்த சுயேட்சைக் குழுக்கழுக்கு நான் ஒன்;றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் அரசாங்கம் தரும் பணத்தை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் எங்கள் உறவினர்களுக்கு கொடுங்கள் அவர்கள் அனுபவிக்கட்டும். தயவுசெய்து எங்களுடைய மக்களின் உரிமையை சிதறடிக்கின்ற வகையில் நீங்கள் செயற்பட வேண்டாம்.

ஆளும் கட்சியிலே முன்னாள் முதலமைச்சர் மற்றும் பல தமிழர்கள் போட்டியிடுகிறார்கள் இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றுமே செய்யாது அரசாங்கத்திற்கு வாக்களியுங்கள் பல அபிவிருத்திகளை நாம் பெற்றுகொள்ள முடியும் என்று கூறுகிறார்கள். தேர்தல் என்று வந்துவிட்டால் போட்டி இருக்க வேண்டும் வன்முறை இருக்க கூடாது நீங்கள் என்ன செய்கிறீர்கள் தமிழர்களாக இருந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற உங்களுடைய இனத்தை தாக்குகிறீர்கள். மஹிந்த ராஜபக்ஷவும் அவர்களுடைய அரசாங்கமும் மகிழ்ந்து கொள்ள வேண்டும் உங்களை பெரிதாக நினைக்க வேண்டும் என்பதற்காக தாக்குகிறீர்கள். எங்களுடைய இனத்தைப் பற்றி சிந்திக்கின்றீர்களா? உங்களால் முடிந்தால் போட்டிக்கு வாருங்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிப்பதற்காக அரிசி கொடுக்கிறீர்கள் பணம் கொடுக்கிறீர்கள் அமைச்சர் பட்டாளம் வரும் ஜனாதிபதி வருவார் தமிழிலே பேசுவார் இவ்வாறு செய்தாவது வாக்கை பெற்றுவிடலாம் என்று நினைக்கின்றீர்கள் எங்களுடைய இனம் பிச்சையெடுக்கின்ற இனமாகவா இருக்கின்றது? இந்த அரசியலிலே புரட்டி புரட்டி அடித்து அகதிகளாக இருக்கிற நிலைக்கு இன்றும் கொண்டு செல்லும் இந்த அரசாங்கத்தோடு இணைந்து எங்களுடைய வறுமையை எங்களுடைய வாழ்க்கையை தொலைதூரம் கொண்டு பிச்சை கொடுப்பதால் வாக்களிப்பார்கள் என்று இனத்தை பிச்சைக்காரர்களாக கருதுவது உன்னுடைய இனத்தை நீங்களே கேவலப்படுத்துவதாக அமையாதா?

யாருக்கும் அடிபணியாதது எங்களுடைய இனம் உரிமைக்காக தங்களுடைய உயிரைக் கொடுத்திருக்கிறது உரிமைக்காக இன்றைக்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. எங்களாலும் அரசாங்கத்தோடு இணைந்து விடுதலைப் போராட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும் எங்களை எவராலும் விலை கொடுத்து வாங்க முடியாது இன்றைக்கு வடக்கு கிழக்கிலே இருக்கின்ற எமது இனத்தை பிரித்துப் பார்க்கும் தன்மையோடுதான் இந்த அரசு செயற்படுகிறது இதற்கு வக்காளத்து வாங்கிக் கொண்டு எங்களுடைய இனத்தை பிச்சையெடுக்கும் நிலைக்கு கொண்டுவர உங்களுக்கு வெட்கமாய் இல்லையா?

உங்களுடைய இனத்தின் விடுதலைக்காக நீங்களும் போராடியவர்கள் உங்களது மனசாட்சி உறுத்த வேண்டும். நீங்கள் உங்களுடைய இனத்தைக் காட்டிக் கொடுத்து வெற்றிலைக் கட்சியில் முஸ்லிம் உறுப்பினர்களை தெரிவு செய்யப் போகிறீர்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்கிறது என்று கேட்கிறீகள் இந்த மண்ணை மீட்டெடுக்க வேண்டும் இந்த மண்ணை யாரும் அபகரிக்கக் கூடாது அபகரிக்கவும் முடியாது என்ற நோக்கிலே தந்தை செல்வா தொடக்கம் தேசிய தலைவர் பிரபாகரன் விடுதலை இயக்கங்கள் உட்பட பல தியாகங்களை செய்த அடிப்படையிலே இன்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டுக்கொண்டிருக்கிறது அந்த பணியிலே உன்னுடைய மண்ணும் காப்பாற்றப்படுகிறது.

எமது நிலம் எமக்கு வேண்டும் அதற்காகத்தான் இவ்வளவு தியாகங்கள் எங்களுடைய நிலத்தை சூரையாடுகின்ற வகையிலும் நாங்கள் பாரம்பரியமாக வாழ்ந்த அந்த வரலாற்றை விதைக்கின்ற வகையிலும் இந்த அரச திட்டமிட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. மீள்குடியேற்றம் என்ற பேரிலே சிங்கள மக்களை குடியேற்றுகின்றார்கள் நாங்கள் அதையெல்லாம் தட்டிக் கேட்கின்றோம் எங்களுடைய நிலத்திலே அடாவடித் தனம் செய்கின்றார்கள் என்று உலக நாடுகளிடம் சொல்கின்றோம். இதை உங்களால் தட்டிக்கேட்க முடியுமா? நாங்கள் அதற்காக போராடிக்கொண்டிருக்கின்றோம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் உங்களுடைய நிலமும் பாதுகாக்கப்படுகிறது.

எமது மக்கள் முகாம்களிலே அகதிகளாக வாழ்கின்ற நிலையிலே வரவு செலவுத் திட்டத்திலே அபிவிருத்திக்கென நிதி ஒதுக்காமல் எங்களுடைய மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு பாதுகாப்பிற்கென இராணுவத்தினருக்கு பல கோடி ரூபா நிதி ஒதுக்கியுள்ளீர்கள். எமது பிரதேசத்தில் அதிகளவான இராணுவத்தினரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் எங்களுடைய மக்களை அடக்க நினைக்கும் இராணுவத்தினரை வெளியேற வேண்டும் என்று தேசிய கூட்டமைப்பு கூறுகிறது. இதனால் உன்னுடைய சகோதரி உன்னுடைய உறவினர்கள் காப்பாற்றப்படுகிறார்கள்.

இந்த அரசு எமது வணக்க ஸ்தலங்களையெல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு ஒவ்வொரு மூலைக்கு மூலையும் புத்த சிலை வைக்கிறார்கள் எங்களுடைய மக்கள்; வழிபட முடியவில்லை இதை உங்களால் தட்டிக் கேட்க முடியாது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தட்டிக்கேட்கின்றனர் இதனால் உங்களுடைய நிலத்திலும் புத்தர் சிலை வைக்காத நிலை உருவாகிறது.

வடக்கு கிழக்கில் எங்களுடைய மக்களை விரட்டி விரட்டி அடித்து படுகொலை செய்திருக்கிறார்கள் தென் இறுதி வடிவம் முள்ளி வாய்காலிலே முடிவடைந்திருக்கிறது. எங்களுடைய மக்கள் துடிக்க துடிக்க புதைக்கப்பட்டிருக்கிறார்கள் தாய் பால் மாவிற்காக நிற்கின்றபோது விமானம் மூலம் குண்டு போட்டு இன்றைக்கு எத்தனை அனாதை சிறுவர்கள் இருக்கிறார்கள். வைத்தியசாலைகளிலே இதை உயிருடன் இருந்த எத்தனை பேர் விமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்கள். இதை யார் செய்தது இவர்களுக்கா வாக்கிளிக்க போகிறீர்கள்.

வடக்கு கிழக்கிலே அழிக்கப்பட்ட காணாமல் போன இன்றைக்கும் சிறைகளிலே வாழ்கின்ற மடிந்த எல்லா விதைகளும் இன்று ஐக்கிய நாடுகள் சபையிலே கதவைத் தட்டுகிறது. இந்த அரசாங்கம் தண்டிக்கப்பட வேண்டும் எங்களுடைய இனத்தை அழித்த அடிமையாகிய இந்த அரசு சர்வதேச ரீதியில் தண்டிக்கப்பட வேண்டும் என்ற எங்களுடைய மக்கள் அனுபவித்த அவலம் இன்று ஐக்கிய நாடுகள் சபையிலே கதவைத் தட்டுகிறது.

இந்த சூழ்நிலையில் கிழக்கு மாகாண சபை ஒரு வருடத்திற்கு முன் கலைக்கப்பட்டிருக்கிறது. வருகின்ற நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையிலே இலங்கை அரசுக்கெதிராக மனித உரிமை மீறல் சம்மந்தமான பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது அங்கே கேள்வி கேட்பார்கள் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகத்தான் இந்த தேர்தல் நடைபெறுகிறது.

நீங்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்து இந்த அரசை காப்பாற்றுகின்ற போது அரச தரப்பு கருணாவும் பிள்ளையானும் ஐக்கிய நாடுகள் சபையிலே சென்று கூறுவார்கள் கிழக்கு மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள் கிழக்கு மாகாணத்திலே எந்த பிரச்சினையும் இல்லை வன்னியிலே விடுதலைப் புலிகள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற கூறுவார்கள்.

கிழக்கு மக்கள் எங்களை ஆதரித்திருக்கிறார்கள் இங்கு காணமல் போன நிகழ்வு இடம்பெறவில்லை எவரும் கொல்லப்படவில்லை எங்களுடைய பெண்கள் விதவைத் தாய்களாக இருக்கவில்லை. 13 ஆயிரத்திற்கு மேல் சிறைகளிலே இளைஞர்கள் வாடிக் கொண்டிருக்கவில்லை என்ற ரீதியில் கிழக்கு மாகாண மக்கள் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். எமது மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்து இந்த அரசைக் காப்பாற்றப்போகிறீர்களா? தன்மானமுள்ள எந்த தமிழனும் அரசாங்கத்திற்கு வாக்களித்து இந்த அரசைக் காப்பாற்றமாட்டான் என்றார்.

வேட்பாளர் கோவிந்தன் கருனாகரம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் பொன்.செல்வராசா வினோதராதலிங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீகாந்தா சித்தாத்தன் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் கி.துரைராஜசிங்கம் சகவேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

எதிர்வரும் 28ம் திகதி முல்லைத்தீவிற்கு செல்கின்றார் பஷில் ராஜபக்ஷ!
[Wednesday, 2013-05-22 20:01:12]

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது, முல்லைத்தீவு மல்லாவி பகுதி மற்றும் கிளிநொச்சி பாண்டியன் குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் திட்டத்தினை திறந்துவைக்கவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பின் யாழ். பிராந்திய முகாமையாளர் பாலசுப்பிரமணியம் தவேந்திரகுமார் கூறினார்.



இராணுவத்தினரின் காணி சுபீகரிப்பு குறித்து ஐ.நா அதிகாரிகளுக்கு ஹத்துருசிங்க விளக்கம்!Top News
[Wednesday, 2013-05-22 19:59:38]

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தேவைக்காக சில காணிகள் இனங்காணப்பட்டுள்ளன. இராணுவம் பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படும் காணிகளின் அளவை சிலர் வேண்டுமென்றே அதிகரித்துச் சொல்வதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளார். ஐ.நா.வின் மனிதாபிமான ஒத்திசைவாக்க அலுவலகத்தின் உயரதிகாரிகளான அக்னெஸ் அஸகென்பே மற்றும் மார்க் பிரளோபா ஆகியோருக்கு யாழ். வலிகாமம் வடக்கிலுள்ள நிலங்களை இராணுவம் பொறுப்பேற்பது தொடர்பான பிரச்சினை குறித்து விளக்கமளிக்கும் போதே யாழ். கட்டளைத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, இராணுவம் பொதுமக்களின் காணிகளை பொறுப்பேற்பதாக கூறுவதை அவர் மறுத்துள்ளார். பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் என்பவற்றின் அபிவிருத்திக்காக காணிகள் பொறுப்பேற்கப்படுவதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.



உடனடியாக 13வது திருத்தம் இரத்துச் செய்யப்பட வேண்டும் - ஹெல உறுமய!
[Wednesday, 2013-05-22 19:52:56]

13 ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் உடனடியாக இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஹெல உறுமய தெரிவித்துள்ளது. கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஹெல உறுமயவின் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இதற்கான தனிநபர் பிரேரணையின் நகல் வெளியிடப்பட்டது.



சிங்களவர்களின் காணிகளையும் அரசு அபகரிக்கின்றது: விக்கிரமபாகு குற்றச்சாட்டு!
[Wednesday, 2013-05-22 19:47:58]

தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் அரசு அங்கு சிங்களவர்களை குடியமர்த்துவதாக சிங்கள மக்கள் நினைக்கின்றனர். ஆனால் சிங்கள மக்களின் காணிகளை சுவீகரித்து ஒட்டுமொத்த நாட்டினையுமே வெளிநாடுகளுக்கு அரசாங்கம் விற்பனை செய்கின்றதென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்பும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



வட மாகாணசபை தேர்தல் நடாத்தப்படாவிட்டால் நாடு இரண்டாகும்: சிறிதுங்க ஜயசூரிய
[Wednesday, 2013-05-22 19:42:31]

வட மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றால் இலங்கை ஒருநாடாக இருக்கும் அதேநேரம் தேர்தல் இடம்பெறாது போனால் நாடு இரண்டாக பிளவுபட வழி சமைக்கும் என சேஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்பும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



இந்திய வீடுகள் அமைக்கும் பணி மட்டக்களப்பில் ஆரம்பம் - இந்திய உயர்ஸ்தானிகர் ஆரம்பித்து வைத்தார்!Top News
[Wednesday, 2013-05-22 19:36:00]

கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியுடனான வீடமைப்பு திட்ட வேலைகள் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் வீட்டுத் திட்டங்களுக்கான வேலைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர். மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலக நிர்வாக பிரிவிலுள்ள மூன்று கிராமங்களில் நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வுகளின் போது, சிங்கள கிராமமான மங்களாகம கிராமத்திலே முதலாவது வைபவம் இடம்பெற்றது.



செங்கலடி இரட்டைக் கொலை சந்தேக நபர்களுக்கு 29 ஆந் திகதிவரை விளக்கமறியல்!
[Wednesday, 2013-05-22 19:28:24]

செங்கலடி நகரில் நள்ளிரவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பேருக்குமான விளக்கமறியல் காலம் எதிர்வரும் 29 ஆந் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். பிரபல வர்த்தகர் சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் படுக்கையறையில் கோரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர். இக்கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் செங்கலடி மத்திய கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்களை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.



இவ்வருட இறுதிக்குள் 340 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவர் - சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவிப்பு!
[Wednesday, 2013-05-22 16:53:25]

தற்போது புனர்வாழ்வு பெற்றுவருகின்ற முன்னாள் போராளிகள் 340 பேரையும் இந்த வருட இறுதிக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.சமூகமயப்படுத்தல் செயற்பாடுகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, வவுனியா மருதமடுவில் இயங்கிவந்த புனர்வாழ்வு முகாம் மூடப்பட்டுள்ளது. அதன்படி இந்த முகாமில் புனர்வாழ்வு பெற்றுவந்த 100 முன்னாள் போராளிகளும் பூந்தோட்டம், சேனதுறை மற்றும் கந்தக்காடு ஆகிய புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.



தமிழர்களை கொன்ற நினைவு நாளுக்காக தமிழர்களிடம் 10ரூபா அறவிடும் வடமாகாணசபை!
[Wednesday, 2013-05-22 16:48:53]

தேசிய போர் வீரர்கள்' தினத்தை முன்னிட்டு இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரையை வடக்கு மாகாண சபை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் வாங்க வேண்டும் என வற்புறுத்தி விற்பனை செய்யப்படுவதாக மாகாண ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 2009க்குப் பின்னர் இலங்கை அரசால் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18 ஆம் திகதி போர் வெற்றிவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்காக 5 ரூபா பெறுமதியான நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.



பீரிசை தொலைபேசியில் மிரட்டினார் குர்ஷித்?
[Wednesday, 2013-05-22 16:46:25]

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தம்மை அச்சுறுத்தும் வகையிலோ, அடக்குகின்ற வகையிலோ உரையாடவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை காலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் கல்மான் குர்ஷித் தொலைபேசி மூலம் உரையாடியிருந்தார். இதன்போது, மாகாணசபையின் அதிகாரங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான சட்டத்திருத்தங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் சல்மான் குர்ஷித் எச்சரித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.



மஹிந்த அரசை கவிழ்க்க சூழ்ச்சி தேவையில்லை - ரணில்!
[Wednesday, 2013-05-22 16:38:06]

இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சிகள் செய்யத் தேவையில்லை எனவும் வாக்கு பலத்தின் ஊடாக அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பெண் தூதுவர் ஒருவரை சந்தித்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானதென ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். ஜேர்மன் உதவி கிடைக்கும் 'பெட்ரிக் நியூமான் பவுன்டேசன்' என்ற அமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நடத்தும் கருத்தரங்கை அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சி என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதால் அதில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் இன்று (22) பாராளுமன்றில் தெரிவித்தார்.



புதிய சட்டமூலத்தின் ஊடாக வட மாகாண சபையை திரிபுபடுத்த அரசு முயற்சி - கூட்டமைப்பு!
[Wednesday, 2013-05-22 16:32:34]

அரசாங்கம் வட மாகாண சபையை திரிபுபடுத்த புதிய சட்டமூலம் ஒன்றை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்பும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவை - சம்பந்தனுக்கு அஸாத் சாலி கடிதம்!
[Wednesday, 2013-05-22 16:27:37]

தமிழ் முஸ்லிம் சமூகங்கள் சில முக்கிய பொதுவான விடயங்களில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது என்று தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,



வேடர்களும் நாகர்களுமே இலங்கையின் ஆதிக்குடிகள் - பொதுபல சேனாவுக்கு இதுதான் பதில்! - மனோ கணேசன்!
[Wednesday, 2013-05-22 16:16:55]

பொதுபல சேனாவின் வண. ஞானசார கலபொட தேரர், இந்த நாடு சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்கிறார். இந்த அடிப்படையில் வடக்கில் தமிழர் பெரும்பான்மை அதிகாரத்தின் கீழ் மாகாணசபை ஒன்று உருவாக முடியாது என்கிறார். ஆகவே மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்கிறார். அனைத்துக்கும் முதலில் இந்த நாட்டின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை கலபொட தேரர் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த அடிப்படை உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறி, தத்தம் மூதாதையர்கள் வந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டும்.



மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் போராட்டம்!
[Wednesday, 2013-05-22 10:32:03]

சாதாரண மக்கள் இன்றும் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். மக்கள் அவ்வாறு அடக்கி ஒடுக்கப்படுகின்றபோது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை தொழிற்சங்கம் என்ற வகையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களுக்கும் உண்டு. இவ்வாறு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவித்தார். மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக வாயிலில் நேற்று நடந்த கவனவீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர், பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கம் என்ற ரீதியில் பல்கலைக்கழகத்தில் மட்டுமன்றி நாட்டில் எந்தவொரு மக்களும் அடக்கி ஒடுக்கப்படுகின்ற போது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை எமக்கு உண்டு. எதிர்காலத்தில் மக்கள் நசுக்கப்படும் போது அடக்கப்படும்போது அதற்கெதிராக நாம் குரல் கொடுப்போம் என்றார்.



எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்திய சம்பந்தன் ஐயா, மாவை போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன் - முரளிதரன்
[Wednesday, 2013-05-22 10:13:18]

எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்திய சம்பந்தன் ஐயா மற்றும் மாவை சேனாதிராஜா போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று சபையில் தெரிவித்தார். ஜனாதிபதியிடம் தான் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதியமைச்சர் முரளிதரன் இதனைத் தெரிவித்தார்.



வடக்கை போன்று கிழக்கிலும் இராணுவ ஆட்சி: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு
[Wednesday, 2013-05-22 10:02:05]

வடக்கில் நிலவி வரும் இராணுவ ஆட்சி போன்றே இப்போது கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜகிரியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.



சங்கீதக் கதிரை விளையாட்டு போல அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற முடியாது - ஹக்கீம்
[Wednesday, 2013-05-22 09:52:01]

சங்கீதக் கதிரை விளையாட்டில் பாடல் நின்றவுடன் கதிரையை நீக்கிவிட்டுச் செல்வது போன்று, அரசை விட்டு வெளியேறும் சித்து விளையாட்டில் எமது கட்சி ஈடுபடமாட்டாது. ஆனால் சில சக்திகள் அவ்வாறுதான் விரும்புகின்றன. இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டி, தம்பதெனிய, நிக்கவரெட்டிய தேர்தல் தொகுதிகளில் உள்ள சில கிராமங்களில் நடைபெற்ற கூட்டங்களின் போதே அவர் இவ்வாறு கூறினார்.



அரசின் ஏதேச்சாதிகார நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை - பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடாத்தக் கூடாது: - மங்கள சமரவீர
[Wednesday, 2013-05-22 09:49:34]

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது அமர்வுகளுக்கான மாநாடு இலங்கையில் நடாத்தப்படக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஏதேச்சாதிகார நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரையில் அமர்வுகளை நடத்தக் கூடாது என அவர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.



மாத்தளை மனித புதைகுழி விசாரணைகளில் சந்கேம்: ஐ.நாவின் தலையீட்டை கோருகிறது ஆசிய மனித உரிமை ஆணைக்குழு!
[Wednesday, 2013-05-22 09:41:00]

மாத்தளை பாரிய மனித புதைகுழி விசாரணைகள் குறித்து ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது. பாரிய மனித புதை குழி தொடர்பான விசாரணைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 154 பேரின் உடல் எச்சங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் விசாரணை நடத்திய சட்ட வைத்திய அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணை நடத்தி வரும் நீதவானும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாரிய மனித புதைகுழி தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இந்த இடமாற்ற உத்தரவுகள் குறித்த தகல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய வேண்டுமென ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.


AJRwindows22.05.13
Ramans2011
TDE_Computers2011
TamilsGuid-191012-2013
Suresh-remax-2013-01-01
RoyaShades-l2011(04-12-11)
Canada Kanthasamy Kovil
Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
INNSYS-20120930
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com