Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 23, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
புற்று நோயை விரட்டும் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது நீரிழிவு
[Tuesday, 2012-09-11 22:13:50]
News Service

ஒவ்வொரு மனிதனையும் வெவ்வேறு விதமான நோய்கள் திடீர் திடீரென தாக்குகிறது. அதற்கு சரியான சிகிச்சை அளிக்கா விட்டால் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. சமீப காலமாக திடீர் திடீரென வைரஸ் நோய்கள் நாடெங்கும் பரவி நம்மை பதற வைத்து விடுகின்றன. குறிப்பாக சிக்குன் குனியா, பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல் போன்ற அதிபயங்கர வைரஸ் காய்ச்சல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

  

இந்த வைரஸ் நோய் தாக்கிய பலர் உயிர் இழந்ததால் உலகம் முழுவதும் பெரும் பீதி ஏற்பட்டது. வைரஸ் காய்ச்சல் பரவும் தன்மை கொண்டதால் தங்களை காய்ச்சல் தாக்கி விடுமோ என்று எண்ணி முக கவசம் போட்டுக் கொண்டவர்கள் ஏராளம். இந்த கவசம் அணிந்தால் வைரஸ் தாக்காதா? நிச்சயம் தாக்கும். முக கவச துணியில் ஊடுருவும் அளவுக்கு மிகவும் சிறிய அளவுடையது தான் வைரஸ்கள்.எனவே எப்பேர்பட்ட நோய்களையும் கண்டுமிரளாமல் இருக்க நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலமானதாக மாற்றினால் போதும். அது எப்படிப்பட்ட வைரசையும், புற்று நோயையும் அடியோடு விரட்டி விடும் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் பிரபல நோய் எதிர்ப்பு சக்தி நிபுணர் டாக்டர் சார்லஸ்.

அவர் மேலும் கூறியதாவது:-ஒவ்வொரு நோய்க்கும் தடுப்பூசி, தடுப்பு மருந்துகள் எடுத்துக் கொள்வதை விட நம்மிடம் உள்ள மிகச் சிறந்த ஆயுதமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது புத்திசாலித்தனமான ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தி சிறிதளவு கூட இல்லாதவர்கள் தான் டஜன் கணக்கான நோய்களின் பிடியில் சிக்கி சீரழிந்து வருகிறார்கள். இந்த ரகத்தினர் தான் மருத்துவமனைக்கும், மருத்துவ கடைக்கும், அடிக்கடி சென்று மருந்து-மாத்திரைகளுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.நோய் எதிர்ப்பாற்றல் குறைவால் அவதிப்படுவோருக்கு நிச்சயம் அடிக்கடி தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம், இருமல், உடல்வலி, களைப்பு போன்றவை ஏற்படும். நோய் எதிர்ப்பாற்றல் அதிகம் இருப்போர் எப்போதுமே நல்ல உடல் நலத்துடன் உலா வருவதை கண்கூடாக பார்க்க முடியும்.

இதுவரை நாம் நோய் எதிர்ப்பு சக்தி என்பதை அதிகம் கேள்விப்பட்டிருப்போம்.ஆனால் அதன் செயல்பாடுகள் என்ன, எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படிப நோய் வராமல் தடுப்பது எப்படி? என்பது பற்றி அறியாமல் இருப்போம். அது பற்றி விரிவாக பார்ப்போம். நம் உடலை நோய் கிருமிகள் தாக்காமல் இருக்க நம் உடலில் இருக்கும் இயற்கையின் அதிசயம் தான் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம்.இந்த மண்டலத்திலுள்ள நோய் எதிர்ப்பு செல்கள் சரிவிகித அளவில் செயல்பட்டால் நோயின்றி வாழ முடியும். உடலில் நோய் எதிர்பாற்றல் குறையும் போது பலவிதமான நோய்கள் நம்மை தாக்கி பாடாய்படுத்தி விடும். செயல்பாடுகள்..

அனைத்து வகை நோய் கிருமிகளிடமிருந்தும் நம் உடலை பாதுகாத்தல். நச்சுகள், தேவையற்ற கழிவுகள் போன்றவற்றை நீக்கி உடலை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ரத்தத்தில் உள்ள சிகப்பணுக்களை அதிகரித்து நம் உடலுக்கு சுறு சுறுப்பையும் நீண்ட ஆயுளையும் தருகிறது. உடல் உறுப்புகளை சரிவர செயல்பட வைத்து தேவையான அளவுக்கு என்சைம் மற்றும் ஹர்மோன்களை சுரக்க வைக்கிறது. நோயை விரட்டும் தாய்ப்பால்...

தாய் தனது குழந்தைக்கு அளிக்கும் முதல் நாள் பாலில் (சீம்பால்) பல்வகை சத்துக்கள் உள்ளன. அது அதிக நோய் எதிர்ப்பாற்றல் மிக்கதாகவும் இருப்பதை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எதனால் குறையும்?

இன்றைய அவசர உலகில் நமது விரைவு உணவு (பாஸ்ட்புட்) பழக்க வழக்கங்களாலும், காலம் தவறிய உணவு முறைகளாலும், மரபணு முறையில் தயாரிக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளாலும் நோய் எதிர்ப்பாற்றல் வெகுவாக குறைந்து விடுகிறது. இதனால் பலவிதமான நோய் தாக்கப்படும் அளவிற்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம். இவ்வாறு இயற்கையாக நாம் பெறப்பட்ட நோய் எதிர்ப்பாற்றலை இழக்கிறோம். எதிர்ப்பாற்றல் யாருக்கு குறைவு..

1. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களிடம், 2. சத்து குறைபாடு உள்ளவர்களிடம், 3. புற்று நோய், சர்க்கரை நோய், எய்ட்ஸ், ரத்த சோகை, தைராய்டு குறைபாடு போன்ற நோய்களால் தாக்கப்பட்டவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படுகிறது. புற்று நோய்..

பொதுவாக செல்கள் வளர்ந்து சீரான முறையில் பிரிந்து புதிய செல்கள் உருவாகும். சில நேரங்களில் பழைய செல்கள் இறக்காமல் சில தேவையற்ற அதிக செல்களை உருவாக்கி விடுகின்றன. இந்த செல்கள் கால போக்கில் சதை திரட்சியாக நாளடைவில் மாற்றி புற்று நோய் வளர்ச்சியாகவோ அல்லது கட்டியாகவோ உருவெடுக்கிறது.

இந்தியாவில் வருடத்திற்கு 7 லட்சம் பேர் புதிதாக புற்று நோயால் தாக்கப்பட்டு வருகின்றனர். இதில் `3 லட்சம் பேர் அதே ஆண்டுக்குள் மரணத்தை சந்திக்க நேர்கிறது. புற்று நோய் தாக்கப்பட்ட உடனேயே அவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குன்றுகிறது. இதனால் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கடும் அவதிக்குள்ளாகிறார்கள்.புற்று நோயா?உலகின் தலைசிறந்த மருத்துவ ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் பாலூட்டி விலங்குகளிடம் காணப்பட்ட நோய் எதிர்ப்பாற்றல் அதிக வீரியம் கொண்டதாக இருந்தது.

இந்த நோய் எதிர்ப்பாற்றலை அறிவு பரிமாற்றம் செய்யக் கூடிய உயிரணு மற்றும் மூலக்கூறுகளை நவீன தொழில் நுட்பத்தின் உதவியோடு பிரித்தெடுத்து அதனோடு உலகின் தலை சிறந்த எதிர் குணம் கொண்ட எல்டி பெரி, புளூபெரி, அகாய் போன்ற பழங்களின் சாறுகளையும் சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட மூலக் கூறுகள் மற்றும் எதிர்ப்பாற்றல் நிறைந்த மருந்துகளை புற்று நோயாளிகள் சாப்பிட்டால் உடலில் உள்ள தைமஸ் சுரப்பி சரிவர இயங்கி 'டி' செல்களின் உற்பத்தியை அதிகப்படுத்தி கேன்சர் செல்களை அழித்து நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகின்றது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சாப்பிட வேண்டிய உணவு..

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் வைட்டமின் ஏ,சி,இ, நிறைந்த பழங்கள், காய்கறிகள் அன்னாசி, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, கேரட் சாப்பிடலாம். இதே போல் சோயாபால், ஓட்ஸ், சோத்து கத்தாழையால் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள், பாகற்காய் (துத்த நாகம்) அதிக கொண்ட உணவுகள் சாப்பிடுவதும் நல்லது.உடலில் வலுவான நோய் எதிர்ப்பாற்றல் இருந்தால் புற்று நோய், நீரிழிவு நோய், பார்கின் சோனிசம், (நரம்பு தளர்ச்சி நோய்) சிறுநீரக செயலிழப்பு, போன்ற அனைத்து வகை நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து முதுமையை தாமதப்படுத்தி நீண்ட நாட்கள் பரிபூரண வாழ்க்கை வாழ முடியும் என்கிறார் டாக்டர் சார்லஸ். 3 வகை..

நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான எதிர்ப்பு சக்தி, தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி, உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்று 3 வகையாக பிரிக்கலாம். இந்த எதிர்ப்பு சக்தி, பிறக்கும் போதே ஒருவரது உடலில் அமைவது மனித உடலுக்கு தோல் எப்படி ஒரு மிகப் பெரிய தடுப்பு சுவர் போல் உள்ளதோ, அதைப் போலவே மூக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக்கவசம் போல் செல்படுகின்றன.இந்த கவசங்கள் நம்மை நோய் கிருமிகளிடம் இருந்து காப்பாற்றக் கூடியவை. அடுத்தபடியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக்கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடியவைகளான வெள்ளை அணுக்கள் நியூட்ரோ பில்ஸ், போசோபில்ஸ், ஈசினோபில்ஸ், தூங்காத படை வீரனைப் போல் நம் உடலுக்குள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

இவை அனைத்தும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளாகும்.இரண்டாவது வகையான தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடன் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, தாக்கும் நோய்களுக்கு காரணமான ஒவ்வொரு பாக்டீரியாக்களுக்கு தகுந்தவாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது `லிம்போ டைடஸ் என்ற ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்.மூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படும் போது, இன்னொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாக பெறுதல். உதாரணமாக, தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்புசக்தி தற்காலிகமாக கிடைக்கிறது. மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டனஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்க வைக்கும். நோய் எப்போது ஏற்படுகிறது?

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது நோய்க்கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. ஊட்டசத்துக்குறைவினாலும் நோய் ஏற்படுகின்றன. நம் உடலில் நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் சில. பலகீனமான உடலமைப்பு, மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள், அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய சூழலில் வாழ்வது, மது, போதைப் பொருள் பழக்கம், புகைப்பழக்கம், தூக்கமின்மை, சர்க்கரை நோய் இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை இல்லாமல் செய்கிறது. உணவு..

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பால், தயில், நெய், சோயா பீன்ஸ் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு, மீன் இவற்றை வாரத்தில் மூன்று முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும். கடலை, சூரியகாந்தி விதைகள் போன்றவை துத்த நாகம் கால்சியம் போன்ற எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான சத்துக்களை அதிகரிக்க உதவும்.

தவிர்க்க வேண்டியவை..

வேதிப் பொருள்கள், பூச்சி மருந்துகள் போன்றவை படிந்த பொருட்கள், மற்றும் வண்ணம் பூசப்பட்ட பொருட்கள், பதப்படுத்தப்பட்ட டின் பொருட்கள் போன்வற்றை உண்பதை தவிர்க்க வேண்டும். எண்ணையில் வறுத்த உணவுப் பண்டங்களை உண்ணக் கூடாது. அவை உடலில் நச்சுத் தன்மையை உண்டாக்குகிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.சர்க்கரையின் அளவு அதிகமானால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை 15 மணி நேரத்திற்கு குறைத்துவிடுகிறது. காபி, டீ இவற்றை அளவுக்கு மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற உபாதைகள் ஏற்படத் தொடங்கினால் மருத்துவரை அணுகி உடலை பதிசோதித்துக் கொள்ள வேண்டும்.மருத்துவ பரிசோதனை மூலம் உடலுக்கு என்ன தேவை என்பதை மருத்துவர் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.

நோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு உண்டு. நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு வாழ்வதே சிறந்தது என்கிறார் டாக்டர் சார்லஸ்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் பயன்பாட்டில் இருந்துள்ள நெய்!
[Thursday, 2013-05-23 00:05:25]

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர். மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.



குழந்தையின் மன வளர்ச்சியைப் பாதிக்கும் கர்ப்பகால அயடீன் குறைபாடு - ஆய்வில் தகவல்!
[Wednesday, 2013-05-22 19:30:46]

கர்பகாலத்தில் அயோடின் குறைபாடு இருந்தால், அது பிறக்கப் போகும் குழந்தையின் மன வளர்ச்சியை பாதிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கர்பகாலத்தில் தாய்மார்கள் அயோடின் சத்து நிறைந்த மீன் மற்றும் பால் பொருட்களை போன்ற உணவுகளை போதுமான அளவில் உட்கொள்ளாவிட்டால் பிறக்கப் போகும் குழந்தையின் அறிவுத்திறன் மற்றும் வாசிப்புத்திறன் ஆகியவை ஒப்பீட்டளவில் மற்ற குழந்தைகளைவிட குறைவாக இருந்ததாக அந்த ஆய்வில் கணடறியப்பட்டுள்ளது.



சருமத்தை அழகாக்கும் வொட்கா பேஷியல்!
[Wednesday, 2013-05-22 17:08:04]

சருமத்தை அழகாக்குவதில் ஒயின், வோட்கா போன்றவை சிறப்பான இடத்தை பெறுகின்றன. இதுவும் வோட்கா வைத்து செய்யும் பேசியல் சருமத்தை பொலிவாக்குகிறது. இதர ஆல்கஹால் பேஷியல் அயிட்டங்களுடன் ஒப்பிடுகையில் இது கொஞ்சம் வித்தியாசமானது. இரவில் படுக்கும் முன்பாக புதினா, தேனீர், எலுமிச்சை பழ சாறுடன் இரண்டு தேக்கரண்டி வோட்கா சேர்த்து குளிர்சாதன உள்பெட்டியில் (பிரீஸர்) பத்திரமாக வையுங்கள். காலையில் பார்த்தால் வோட்கா கலவை அப்படியே ஐஸ் கட்டியாக உறைந்திருக்கும். இதை வெளியே எடுத்து முகத்தில் 10 நிமிடம் தடவி வர வேண்டும்.. இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.



PCOS என விபரிக்கப்படும் சினைப்பை கட்டிகள் இருப்பதற்கான சில அறிகுறிகள்!
[Wednesday, 2013-05-22 17:01:23]

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்/பி.சி.ஓ.எஸ் (PCOS)எனப்படும் சினைப்பைக் கட்டிகள் என்பது பொதுவாக எல்லாப் பெண்களுக்கும் வருவதில்லை. ஹார்மோன் மாற்றங்களினால் வரும் இந்த குறைபாடு உடனடியாக கண்டறியப்பட முடியாதது. பி.சி.ஓ.எஸ் எனப்படும் சினைப்பைக் கட்டிகள் இருப்பது குறித்த அறிகுறிகள் மெல்ல தான் தெரிய ஆரம்பிக்கும். பெண்கள் பருவமடைந்ததும், அவர்களது தொடக்க டீன் ஏஜ் பருவத்தில், முதலாவது மாதவிலக்கிற்குப் பிறகு ஹார்மோன் மாற்றங்களால் பி.சி.ஓ.எஸ் ஆரம்பிக்கிறது. உடல் எடை அதிகரிப்பதைத் தொடர்ந்து இதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். பி.சி.ஓ.எஸ் இருந்தால். ஒன்றிரண்டு அறிகுறிகளோ அல்லது பல அறிகுறிகளோ தென்படலாம். பி.சி.ஓ.எஸ் காரணமாகத் தென்படும் அறிகுறிகளைத் தவறாக பிற நோய்களுக்கான அறிகுறிகள் எனக் கொள்வது சகஜமான ஒன்று. ஆனால் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையுள்ள பெண்களை மருத்துவரிடம் ஆலோசனைக்கு வரச் செய்யும் அறிகுறிகளுள் முதன்மையானவை, இதோ:



Galaxy Mega 6.3 ஸ்மார்ட் செல்பேசியை அறிமுகப்படுத்துகின்றது சம்சுங்!Top News
[Wednesday, 2013-05-22 16:25:03]

சம்சுங் நிறுவனமானது Samsung Galaxy Mega 6.3 எனும் அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் ஜுலை மாதம் அறிமுகம் செய்கின்றது. 6.3 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 1.7GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor, பிரதான நினைவகமாக 1.5GB RAM போன்றவற்றினையும் சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவையும் கொண்டுள்ளதுடன் இதனை microSD கார்ட்களின் உதவியுடன் 64GB வரை அதிகரிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.



பெண்களின் பாதங்களை வைத்தே இவ்வளவெல்லாம் சொல்கிறார்களா ..?
[Wednesday, 2013-05-22 11:51:42]

மங்கையரின் பாதங்கள் தாமரை இதழ்களைப் போன்று சிறந்த நிறமுடையனவாக அமைந்திருந்தால் அத்தகைய மங்கையர்கள் சத்குண சம்பத்துகள் உடையவர்களாகவும், சங்கீத சாகித்திய வித்வாசகம் பொருந்தியவர்களாகவும், இனிய குரலுடன் மகாராணி போன்ற சுகபோக சவுபாக்கியங்களை உடையவர்களாகவும் விளங்குவா். புண்ணிய காரியங்களைச் செய்வதிலும் தான, தர்மங்களைச் செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள்.



பல மர்மங்கள் நிலவும் மருத்துவ உலகம் - அவசியம் அறிந்திருக்கவேண்டிய தகவல்கள்!
[Tuesday, 2013-05-21 21:27:54]

வர வர எதுவும் புரியாமல், என்ன நடக்கிறது என்றே தெரியாமல், எதற்காக இவை செய்யப்படுகின்றன என்று கேட்கக் கூட முடியாத நிலைக்கு நோயாளிகளைத் தள்ளும் மாய உலகமாக, மர்ம நகரமாக மருத்துவ உலகம் மாறி வருகிறது. இதில் எல்லா மருத்துவர்களையும் குறை கூறுவதற்கு இல்லை. ஒரு சிலர் இப்படியும் இருக்கிறார்கள். பொதுவாக ஸ்கேன் என்பது இருவகைப்படும். சாதாரண அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன். மற்றொன்று சி.டி. ஸ்கேன் (கம்ப்யூட்டட் டோமோகிராபி ஸ்கேன்) என்பதாகும். இதில் முதல் வகை ஸ்கேனுக்கு குறைந்தது 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், இரண்டாவது வகையான சி.டி. ஸ்கேன் என்பது பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பல ஆயிரங்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.



சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதம் - இரத்தப் பரிசோதனை இன்றியே நோயை கண்டுபிடிக்கலாம்!Top News
[Tuesday, 2013-05-21 21:09:57]

சர்க்கரை நோயாளிகள் இனி இரத்த பரிசோதனை செய்ய உடலில் ஊசியை குத்தி பார்க்க தேவையில்லை. ஆம்! இனி கையில் ஊசியை குத்த அவசியமில்லை, ToucHb என பெயரிடப்பட்டுள்ள இந்த கருவியை கையில் வைத்துக்கொண்டாலே போதும் உங்கள் இரத்த குரூப், இரத்தத்தின் சர்க்கரை அளவு ஆகியவற்றை துல்லியமாக அளக்கலாம். இதை கண்டுபிடித்தது இந்திய விஞ்ஞானிகள் தான், இது மருத்துவ உலகில் ஓர் மைல்கல் என்றே கூறலாம். இது தற்போது விற்பனைக்கு வர உள்ளது.



இத்தனை வித்தைகள் தேங்காயில் உண்டா? தேங்காயின் சத்துப் பட்டியல்!
[Tuesday, 2013-05-21 16:16:24]

தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும் அது பருப்பு வகையோடு பிரித்து அறியப்படுகிறது. இதில் அடங்கிய சத்துக்களின் விவரத்தை அறியலாம்...

* தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.



மன அழுத்தத்தால் அவதிப்படுகின்றீர்களா? உடலுக்கு மசாஜ் செய்தால் மாயமாக மறைந்துவிடும்!
[Tuesday, 2013-05-21 15:50:03]

அமைதியாக இருந்து ஆளை கொல்வதில் மன அழுத்தம் முதன்மையானது. தற்போதைய அவரச உலகில் அனைவருக்கும் மன அழுத்தமானது அழையா விருந்தாளியாக வருகிறது. அதிலும் அதிகப்படியான வேலைப்பளு, வேகமான வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரச்சனை போன்றவற்றால் மன அழுத்தமானது அதிகரிக்கிறது. இத்தகைய மன அழுத்தத்தை சரியாக கவனித்து, அதனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடாவிட்டால், உடல் நிலையானது இன்னும் மோசமாகிவிடும். குறிப்பாக இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்றவை சீக்கிரமே வந்துவிடும். ஆகவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஒருசிறந்த நிவாரணி மசாஜ் தான். மசாஜ்களில் நிறைய வகைகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு இடத்திலும் மசாஜானது வித்தியாசப்படும். பொதுவாக அனைத்து வகையான மசாஜ்களும் மன அழுத்தத்தைப் போக்கக்கூடியவை.



செல்பேசிகளை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் சார்ஜரை கண்டுபிடித்து இந்திய வம்சாவளி மாணவி சாதனை!Top News
[Tuesday, 2013-05-21 15:25:29]

கலிஃபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் அந்த அமெரிக்க வாழ் இந்திய மாணவி ஈஷா காரே. இவர் வெறும் 20 வினாடிகளில் சார்ஜ் ஆகும் மொபைல் போன் சார்ஜரை கண்டுபிடித்து ஃபினிக்ஸ் என்ற இடத்தில் நடைபெற்ற இன்டெல் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் இடம்பெறச் செய்தார். அந்த லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு 50,000 அமெரிக்க டாலரை பரிசாக வென்றுள்ளது. சூப்பர் கெப்பாசிட்டரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இந்த மொபைல்போன் சார்ஜர், அளவில் மிகச்சிறியதாக உள்ளது. அதே சமயம் மற்ற வழக்கமான பேட்டரிகளை விட 10,000 தடவைக்கும் அதிகமாக மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்யும் திறன் கொண்டது இந்த மொபைல் சார்ஜர்.



முகத்திற்கு பொலிவு தரும் வித்தை பூசணிக்காயிடம் உண்டு - அறிவீர்களா?
[Monday, 2013-05-20 21:27:44]

பூசணிக்காயில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. அதிலும் இதில் உள்ள ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டீன், ரெட்டினோயிக் ஆசிட் போன்றவை, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், பழுப்பு நிற சருமத்தை பொலிவாக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

* பூசணிக்காயின் கூழை எடுத்து, தினமும் முகத்தில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவாக இருக்கும்.



நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் இருக்க கவலை எதற்கு?
[Monday, 2013-05-20 19:14:03]

உங்கள் பரம்பரையில் யாரேனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா? அல்லது நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? கவலை வேண்டாம். ஏனெனில் பெரும்பாலானோருக்கு புற்றுநோயால் இறப்பு ஏற்படுவதற்கு காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான். ஆம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களானாலும் சரி, புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் சரி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், தினந்தோறும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றினால், நிச்சயம் புற்றுநோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம். அந்த வகையில் ஒருசில உணவுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாக உள்ளன. நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும், எளிதில் குணமாக்கலாம். மேலும் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் இருந்தால், புற்றுநோய் இன்னும் தீவிரமாகத் தான் இருக்கும். ஆனால் அத்தகையவற்றையும் ஒருசில உணவுகள் மூலம் கட்டுப்படுத்தலாம். இப்போது அத்தகைய புற்றுநோயை உண்டாக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!



அதிவேகம் மற்றும் அதிக தூரத்திற்கு சமிக்ஞையை கொண்டு செல்லும் WiFi Router!
[Monday, 2013-05-20 15:29:49]

வைஃபை ரவுட்டரின் பிரச்சினை கீழே மாட்டினா மாடி ரூம்ல சிக்னலே வராது அதனால் அடிக்கடி ரவுட்டரை மாற்றி கொண்டே இருப்பார்கள் டெக்கீஸ். அது போக ஏற்கனவே ஸ்பீடு பத்தாது இதுல ரவுட்டர் கவரேஜ் வேற சொதப்பினா எப்படி இருக்கும்? இதற்க்கு ஆப்பு வைக்கும் போல ஒரு நிகழ்வு அதான் உலகத்தின் அதி வேக அதிக பேன்ட்வித் கொண்ட ஒரு வைஃபை ர்வுட்டரை ஜெர்மனியின் ஃபிரான்ஹோஃபர் இன்ஸ்டிட்யூட் கண்டு பிடித்திருக்கிறார்கள் இந்த ரவுட்டர் 1 கிலோ மீட்டர் வரை கவரேஜ் செய்வது மட்டுமில்லாமல் இதன் வேகம் 40 கிகாபைட்ஸ். இதன் மூலம் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தை 1 நொடி ஆமாமுங்கோ - வெறும் ஒரு நொடியில் டவுன்லோட் செய்யலாம்.



8வது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றது யூ டியூப் - புதிய மென்பொருளும் அறிமுகம்!
[Monday, 2013-05-20 15:17:18]

முதற்தர வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் YouTube தளத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றின் வரிசையில் தற்போது Visual Youtube Downloader எனும் ஒரு புதிய மென்பொருளும் இணைந்துள்ளது. இலகுவான பயனர் இடைமுகம் மற்றும் விரைவான செயற்பாட்டினைக் கொண்ட இம்மென்பொருளானது உயர் தரம் வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுவதனால் ஏனைய மென்பொருட்களிளை விடவும் சிறந்ததாக இருக்கின்றது.



போக்குவரத்து பொலிசார் வண்டியின் மீட்டரைப் பார்க்காமலே வேகத்தை கணிப்பது எப்படி என்று தெரியுமா?
[Sunday, 2013-05-19 21:32:57]

நம் வண்டியின் ஸ்பீடோ மீட்டரைப் பார்க்காமலேயே போக்குவரத்து காவல்துறையினர் அதிக வேகம் என்று அபராதம் கட்டச் சொல்வது எப்படி? நாம் போகும் வேகத்தை தூரத்திலிருந்தே அவர்கள் எப்படிக் கணிக்கின்றனர்? இந்த இடத்தில்தான் டாப்ளர் எஃபெக்ட் என்ற ஒப்பற்ற அறிவியல் அடிப்படை உதவுகிறது. அந்த அடிப்படையை ஆராய்ந்து உலகுக்குத் தந்தவர் ஆஸ்திரிய அறிவியல் மேதை கிறிஸ் டியன் டாப்ளர். ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் 1803ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிறந்தவர் டாப்ளர். இவர் தந்தை, கல் உடைக்கும் தொழிலாளி. இளவயதில் நோஞ்சான் குழந்தையாக இருந்ததால், தந்தையின் தொழிலிலிருந்து தப்பித்தார் டாப்ளர். பள்ளிக் கல்வியை முடித்து, வியன்னாவிலும் சால்ஸ்பர்கிலும் வானியல் மற்றும் கணிதத்தைக் கற்றுத் தேர்ந்தார். பின் பிராகா பல்தொழில் நுட்பக் கல்லூரியில் பணியாற்றினார்.



குறைந்த விலையில் Asus அறிமுகப்படுத்தும் புதிய லேப்டொப்!Top News
[Sunday, 2013-05-19 12:31:10]

முதற்தர கணனி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Asus நிறுவனமானது கணனி வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பானதாகக் கருதப்படும் Ubuntu இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட மடிக்கணினிகளை அறிமுகப்படுத்துகின்றது. Asus 1015E எனும் பெயர் கொண்ட இக்கணனிகள் 1.1 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Intel Celeron dual-core processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டு காணப்படுவதுடன் 10.1 அங்குல அளவு மற்றும் 1366 x 768 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.



உடல் உபாதைகளை சரிசெய்யும் சில விசித்திரமான இயற்கை வைத்தியங்கள்!
[Sunday, 2013-05-19 11:46:29]

உடலில் பிரச்சனைகள் ஏற்படும் போது, அதனை குணப்படுத்துவதற்கு சிறந்த வழியென்றால் அது இயற்கை வைத்தியங்கள் தான். பணத்தை செலவழித்து மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை விட, இயற்கை வைத்தியங்களை பின்பற்றினால், உடலில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதோடு, வேறு எந்த பிரச்சனையும் உடலைத் தாக்காமலும் தடுக்கும். ஆனால் கெமிக்கல் கலந்த மருந்து மாத்திரைகளை பின்பற்றினால், அது சில நேரங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தி, நிலைமையை இன்னும் மோசமாக்கச் செய்யும். இயற்கை வைத்தியம் என்றதும் வேறு ஏதோ ஒன்று என்று எண்ண வேண்டாம்.



கணினி வன்றட்டின் (Hard Disk) நிலையை அறிவதற்கு உதவும் மென்பொருள்!
[Sunday, 2013-05-19 08:28:30]

நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில், பைலை சேவ் செய்கையில், அல்லது புதிய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், டிஸ்க்கில் உள்ள ட்ரைவில் இடம் பற்றாக்குறையாக உள்ளது என்ற செய்தி நமக்கு அச்சத்தைத் தரலாம். அப்படி என்ன நான் அதிகக் கோப்புகளை உருவாக்கி, அல்லது புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தைப் பயன்படுத்தி விட்டேன் என ஆச்சரியப்படலாம். உடனே ட்ரைவின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று, எங்கு அதிக இடம் பயன்படுத்தப்பட்டு உள்ளது எனத் தேடித் தேடிப் பார்க்கலாம். உங்களின் இந்த நேரத்தில் உதவத்தான் WinDirStat என்ற புரோகிராம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.



கறுப்பான சருமமா? பப்பாளி, ஆரேஞ்சு இருக்க கவலை எதற்கு?
[Saturday, 2013-05-18 19:52:16]

கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் களையாக மாற வழிகள்...

* முகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடைத்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை துடைக்கவேண்டும்.


RoyaShades-l2011(04-12-11)
TamilsGuid-191012-2013
INNSYS-20120930
NIRO-DANCE-100213
Suresh-remax-2013-01-01
Mahesan supramaniyam 031109
TDE_Computers2011
Ramans2011
Canada Kanthasamy Kovil
AJRwindows22.05.13
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com