Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 21, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
செவ்வாயில் சூரிய கிரகணம் - படத்தை அனுப்பியது கியூரியாசிடி விண்கலம்!
[Tuesday, 2012-09-18 07:36:55]
News Service

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ள, கியூரியாசிடி ரோவர் விண்கலம், அங்கு காணப்பட்ட சூரிய கிரகணத்தை, படம் பிடித்து அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய, அமெரிக்காவின், "கியூரியாசிடி ரோவர்' விண்கலம், கடந்த, 2011 நவம்பர், 26ல், விண்ணில் செலுத்தப்பட்டது.

  

பத்து மாத பயணத்துக்கு பின், 56 கோடியே, 30 லட்சம் கி.மீ.தூரம் கடந்து, கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி செவ்வாயில் தரையிறங்கியது "கியூரியாசிடி' விண்கலம். பிரமாண்ட விண் கற்களால் ஏற்பட்ட, "காலே' பள்ளப் பகுதியில், பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, இந்த ரோவர், செவ்வாய் கிரகத்தில், 13ம் தேதி காணப்பட்ட சூரிய கிரகணத்தை, படம் பிடித்து அனுப்பியுள்ளது. நாசா மையம், தற்போது, இந்த படத்தை வெளியிட்டுள்ளது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

590 மில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசை வென்ற அதிஷ்டசாலியை தேடுகிறது அமெரிக்கா!
[Monday, 2013-05-20 17:25:34]

அமெரிக்க லாட்டரியில் 590.5 மில்லியன் டொலர் (3000 கோடி இந்திய ரூபா) ஜெயித்த அந்த அதிர்ஷ்டசாலி யார் என காண உலக மக்கள் ஆவலுடன் உள்ளனர். இதுவரை இல்லாத அளவு அமெரிக்க லாட்டரி வரலாற்றிலேயே முதல்முறையாக மிகப்பெரிய தொகையான 590.5 மில்லியன் டொலருக்கு, பவர்பால் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இதன் குலுக்கல் முடிவுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டன. குறிப்பிட்ட இந்த லாட்டாரி சீட்டை புளோரிடா மாகாண செப்ரில்ஸ் நகரை சேர்ந்த ஒருவர் வாங்கியிருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. ஆனால், இவ்வளவு பெரிய தொகையை ஜெயித்த அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.



டம்ப்ளர் இணையத்தளத்தை 1.1 பில்லியன் டொலருக்கு வாங்குகிறது யாகூ நிறுவனம்!
[Monday, 2013-05-20 17:18:32]

பிளாக்கிங் செய்ய உதவும் டம்ப்ளர் இணையத்தளத்தை யாகூ நிறுவனம் 1.1 பில்லியன் டொலருக்கு வாங்க இணங்கியுள்ளது. இன்டர்நெட்டில் 18 முதல் 24 வயதினரிடையே மிகப் பிரபலமாக உள்ள பிளாக்கிங் இணையத்தளமான டம்ப்ளரை வாங்குவதன் மூலம் இளம் வயதினரை ஈர்க்க யாகூ திட்டமிட்டுள்ளது. 2007ம் ஆண்டு நிறுவப்பட்ட டம்ப்ளர் இணையத்தளத்தில் 107 மில்லியன் பிளாக்குகள் உள்ளன.12 மொழிகளில் ஆன இந்த இணையத்தில் 50 பில்லியன் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 13 மில்லியன் டொலர்கள் வருவாய் ஈட்டியுள்ள இந்த நிறுவனம் இந்த ஆண்டில் 100 மில்லியன் டொலர்களை ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. வெறும் 175 ஊழியர்களைக் கொண்டு இந்த இணையத்தளம் இந்த சாதனையைச் செய்துள்ளது. இந்நிலையில் இதை வாங்க யாகூ திட்டமிட்டுள்ளது.



இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
[Monday, 2013-05-20 17:02:03]

இந்தியா வந்துள்ள சீனப் பிரதமர் - இந்திய பிரதமர் மற்றும் முக்கியத் துறை அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையின் முடிவில், இரு நாடுகளுக்கும் இடையே 8 ஒப்பந்தங்கள் கெயெழுத்தாகியுள்ளன.இரு நாட்டு தலைவர்களுடனான சந்திப்பின் போது, சீனப் பிரதமர் தனது முதல் சுற்றுப் பயணமாக இந்தியா வந்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்திய உள்ளட்டமைப்பில் சீனாவின் முதலீட்டை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.மேலும், சீன உற்பத்திப் பொருட்களுக்கு மிகச் சிறந்த சந்தையாக இந்தியா விளங்கவதாக சீனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.



இன்று ஈராக்கை அதிரவைத்த தொடர் கார் குண்டுவெடிப்புகள் - குறைந்தது 40 பேர் பலி!
[Monday, 2013-05-20 16:57:16]

ஈராக்கின் தலைநகர் பாக்தாத் மற்றும் பாஸ்ரா நகரப் பகுதிகளில் நடந்த தொடர் கார்குண்டு தாக்குதல்களில் குறைந்தது 40 பேர் பலியாகியுள்ளனர். இன்று பாக்தாத்தில் ஷியா முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் 9 இடங்களில் கார்க்குண்டுகள் வெடித்தன. இதில் 27 பேர் கொல்லப்பட்டதுடன் 116 பேர் காயமடைந்தனர். அதேவேளை ஈராக்கின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிகழ்ந்த இரு குண்டுத்தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டனர். பாஸ்ரா நகரப் பகுதியில், பேருந்து நிலையம் மற்றும் விடுதியருகே இரண்டு கார் குண்டுகள் வெடித்ததில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் 40 பேர் காயமடைந்தனர்.



மூன்றே நாட்களில் ஆறாவது ஏவுகணையை பரிசோதித்தது வடகொரியா - பான் கீ மூன் கண்டனம்!
[Monday, 2013-05-20 16:45:53]

குறுகிய தூர இலக்கை குறி வைத்து தாக்கவல்ல ஏவுகணையை வட கொரியா இன்று வெற்றிகரமாக சோதித்துள்ளது. ஜப்பான் கடற்கரைப் பகுதியில் ஏவுகணைச் சோதனை தளத்தில் இன்று நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைக்கு தென் கொரியா தலைவர்களும் ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூனும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று நாட்களில், வடகொரியா நடத்தியுள்ள 6வது ஏவுகணைச் சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நாவினதும் அமெரிக்கா போன்ற நாடுகளின் எச்சரிக்கைகளையும் மீறி வடகொரியா ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருகிறது.



சீனப் பிரதமரின் இந்தியப் பயணத்துக்கு எதிராக திபெத் அமைப்புகள் போராட்டம்!
[Monday, 2013-05-20 08:07:25]

சீனப் பிரதமர் லீ கெகியாங்கின் இந்திய சுற்றுப் பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரு நாள்களுக்கு தொடர் போராட்டங்களை நடத்த இருப்பதாக திபெத் அமைப்புகள் அறிவித்துள்ளன. இதையடுத்து தில்லியில் போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். லீ கெகியாங் தங்கியுள்ள ஹோட்டல், சீன தூதரகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தில்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே திபெத்தியர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதால், திங்கள்கிழமை காலை 8 முதல் 10 மணி வரை 4 மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்படுகின்றன. லீ கெகியாங், அவருடன் வந்துள்ள குழுவினரின் பயணத்திட்டங்களுக்கு ஏற்ப போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.



தபால் ஊழியர்கள் அதிகளவில் நாய்க்கடியால் பாதிக்கப்படும் நகரம் லொஸ்ஏஞ்சல்ஸ் தானாம்!
[Monday, 2013-05-20 08:03:17]

தபால் துறை ஊழியர்கள் நாய் கடியால் பாதிக்கப்படுவது லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில்தான் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.நாய்கள் ஜாக்கிரதை எச்சரிக்கை பலகை உலகளவில் பல வீடுகள், பங்களாக்களில் வைக்கப்படுகின்றன. தெரிந்தவர்களை, நன்றாக பழகியவர்களையே பல வேளைகளில் செல்ல நாய்கள் கடித்து வைக்கின்றன. அப்படி இருக்கும் போது, அரசு சீருடையில் வருபவர்களை பார்த்ததும் சும்மா இருக்குமா? குறிப்பாக நாய்களால் அதிகம் பாதிக்கப்படுவது தபால் துறை ஊழியர்கள்தான் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க தபால் துறை சேவை செய்தி தொடர்பாளர் ஈவா ஜேக்சன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:



எல்லையில் அமைதி குலைந்தால் இருதரப்பு உறவு பாதிக்கும் - சீனப் பிரதமரை எச்சரித்தாராம் மன்மோகன்சிங்!
[Monday, 2013-05-20 07:58:41]

எல்லைப் பகுதியில் அமைதி குலைந்தால் இருதரப்பு உறவு பாதிக்கும் என சீன பிரதமர் லீ கெகியாங்கிடம் பிரதமர் மன்மோகன் சிங் கண்டிப்புடன் கூறியுள்ளார். சீனப் பிரதமராகப் பொறுப்பேற்ற பின், லீ கெகியாங் முதல் வெளிநாட்டுப் பயணமாக தில்லி வந்தடைந்தார். மூன்று நாள் பயணமாக வந்துள்ள அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் கடந்த மாதம் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது குறித்த தனது கவலையை பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.



பாரிய விண்கல் சந்திரனில் மோதியதால் பெரும் பள்ளம் தோன்றியது!
[Monday, 2013-05-20 07:37:37]

விண்கல் மோதியதில் நிலவில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தெரிவித்துள்ளது. "சிறிய அளவிலான பாறை போன்ற விண்கல் கடந்த மார்ச் 17-ம் தேதி நிலவில் மோதியது. அப்போது, இதுவரை பார்த்திராத அளவுக்கு அதிகளவு வெளிச்சம் உண்டானது' என்று விண்கற்கள் ஆராய்ச்சியாளர் பில் குக் தெரிவித்தார். நிலவில் மோதிய விண்கல் 40 கிலோ அளவுக்கு எடை கொண்டதாகவும், 0.3 முதல் 0.4 மீட்டர் நீளம் கொண்டதாகவும் இருந்தது. அது, மணிக்கு 90123 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



விண்வெளிக்கு ரஸ்யா அனுப்பிய எலிகள், பல்லிகள், நத்தைகள் பத்திரமாக பூமிக்குத் திரும்பின!
[Monday, 2013-05-20 07:10:31]

ரஷ்யா அனுப்பிய விண்கலத்தில் சென்ற எலி, பல்லி, நத்தை போன்றவை, நேற்று, பாதுகாப்புடன் பூமிக்குத் திரும்பின. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்குரிய சூழல் உள்ளதாக, விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதற்கான ஆய்வுகளில் பல நாடுகள் ஈடுபட்டு உள்ளன. செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் நடவடிக்கையிலும், சில தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன. செவ்வாய் கிரகத்தின் சூழல், உயிரினங்களுக்கு எந்த வகையில் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைக கண்டறிவதற்காக, ரஷ்ய விஞ்ஞானிகள், சுண்டெலி, நத்தை, பல்லி உள்ளிட்ட உயிரினங்களை, பயோன்-எம் விண்கலம் மூலம், கடந்த மாதம், விண்வெளிக்கு அனுப்பினர். இந்த விண்கலம், ரஷ்யாவின், ஓரன்பர்க் நகரில் நேற்று பாதுகாப்பாக தரை இறங்கியது.



ஒரே நேர்கோட்டில் புதன், வியாழன், வெள்ளி கிரகங்கள் - வரும் 28ம் தேதி தெளிவாகத் தெரியும்!
[Sunday, 2013-05-19 20:36:13]

புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் நிற்கும் அற்புத நிகழ்வை வரும் 28-ம் தேதி காணலாம். பூமியில் இருந்து காண்போரின் கண்களுக்கு இந்த காட்சியானது புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிரகங்கள் அருகருகே இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இரண்டு பவுர்ணமி நிலவின் அளவிற்கு புதன் கிரகம் காணப்படும். அதனையடுத்து சற்று ஒளிமங்கிய நிலையில் வியாழன் கிரகமும், நேர்க்கோட்டில் தென்படும். இவை இரண்டிற்கும் சற்று தூரத்தில் வெள்ளி கிரகமும் தெரியும். வரும் 28-ம் தேதி சூரியன் மறைந்த பிறகு வானத்தின் மேற்கு திசையில் இக்காட்சியை காண முடியும்.



அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு ஈரானில் மரணதண்டனை!
[Sunday, 2013-05-19 19:50:08]

உளவு பார்த்ததாக ஈரானில் இரு உளவாளிகளுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. இஸ்ரேலைச் சேர்ந்த முகமது ஹைதாரி, இவர் அந்நாட்டு உளவு நிறுவனமான மூசாத் அமைப்பிற்கு ஆதரவாகவும், அமெரிக்காவைச் சேர்ந்த கவுரோஷ் அகமாதி , சி.ஐ.ஏ. உளவு அமைப்பிற்காகவும், ஈரானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஈரானின் அணு ரகசியங்களை உளவு பார்த்தது உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.



முன்சக்கரம் இயங்க மறுத்ததால், தரையில் சறுக்கியபடி தரையிறங்கிய அமெரிக்க விமானம்!
[Sunday, 2013-05-19 19:27:52]

அமெரிக்க நியுயோர்க் பன்னாட்டு விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது.அப்போது அந்த விமானத்தின் முன் சக்கரப் பகுதியில் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமான முன் சக்கரம் கீழிறங்காமல், விமானத்தின் முன்பகுதி தரையை கிழித்துக் கொண்டு சறுக்கி சென்றது. இதனால் விமானத்திற்குள்ளே இருந்தவர்கள் என்ன ஆவர்களோ என்று பரபரப்பு நிலவியது. இருந்தும் அந்த விமானம் சறுக்கி சென்றுச் நின்று விட்டதால், அதிலிருந்த 34 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



வரும் 31ம் திகதி இரவு பூமியைத் தாக்குமா ராட்சத எரிகல்?
[Sunday, 2013-05-19 19:19:57]

இந்த மாத இறுதியில் பூமியை நெருங்கும் ராட்சத கல் பூமியை தாக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் ஏராளமான எரிகற்கள் சுற்றி திரிகின்றன. இந்நிலையில், ராட்சத பாறை போன்ற எரிகல் ஒன்று பூமியை நோக்கி நெருங்கி வருகிறது. இது 1.7 மைல் நீளம் கொண்டது. இதை கடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்காவின் மசாசூசெட்ஸ்சில் உள்ள வின்கோல்ன் தொழில் நுட்பத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டது. நியூ மெக்சிகோவில் சொகோர்ரோ என்ற இடத்தில் எரிகல் ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது இது கண்டறியப்பட்டது. இந்த ராட்சத எரிகல் வருகிற 31ந்தேதி இரவு 9.59 மணிக்கு பூமிக்கு மிக அருகில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இங்கிலாந்தில் நான்கு சிறுநீரகங்களுடன் வாழும் பெண் - டாக்டர்கள் அதிர்ச்சி!
[Sunday, 2013-05-19 19:13:48]

லண்டனை சேர்ந்த ஜெஸ்சிகா கர்பே (20). இவருக்கு வயிற்றின் வலது பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது. எனவே அவர் டாக்டரை சந்தித்தார். அப்போது சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், சிறுநீர் தொற்று நோய் இருப்பது தெரியவந்தது. அதற்குரிய மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. இருந்தும் நோய் குணமாகவில்லை.எனவே, அவரது சிறுநீரகம் ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது, வலது புற சிறுநீரகத்துடன் 7 செ.மீட்டர் கட்டி இருப்பதை டாக்டர்கள் பார்த்தனர். இதை தொடர்ந்து 11 நாட்கள் கழித்து மீண்டும் பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில், அவருக்கு வலப்புறத்தில் 2 சிறுநீரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



சீனாவில் கனமழையால் 100 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - 55 பேர் பலி!
[Sunday, 2013-05-19 10:27:15]

சீனாவில் கனமழைக்கு இதுவரை 55 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். போர்க் கால அடிப்படையில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சீனாவின் தென் பகுதிகளில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். கன மழையில் இதுவரை மூழ்கியும், நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கியும் 55 பேர் இறந்துள்ளனர். அவர்களின் உடல்களை மீட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி மேலும் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளம் சீனாவின் தென் பகுதிகளில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.



பாலின மாற்று அறுவைச் சிகிச்சையால் பிரம்படி தண்டனையில் இருந்து தப்பிய ஆண்!
[Sunday, 2013-05-19 10:20:38]

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆண் ஒருவர் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியதால் பிரம்படி தண்டனையில் இருந்து தப்பினார். அவருக்கு 14 மாதம் சிறைத் தண்டனை மட்டும் விதிக்கப்பட்டது. அவரது பெயர் பெனிதா (21). இவர், தனது ஆண் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர் ஒருவரது வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கினார். அவரது வீட்டு கதவை தீ வைத்து கொளுத்தினார் என்பது குற்றச்சாட்டு. சிங்கப்பூரில் ஆண்கள் இதுபோன்ற குற்றங்களைச் செய்தால் பிரம்படி தண்டனை வழங்கப்படுவது வழக்கம்.



சீனப்பிரதமர் இன்று இந்தியாவுக்கு விஜயம் - மூன்று நாட்கள் தங்கிருப்பார்!
[Sunday, 2013-05-19 10:18:28]

சீன பிரதமர், லி கெகியாங், மூன்று நாள் பயணமாக, இன்று மதியம், இந்தியா வருகிறார். இருதரப்பு நல்லுறவு, வர்த்தகம் தொடர்பாக, பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. சீன பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற லி கெகியாங், தன் முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணமாக, இன்று இந்தியா வரவுள்ளார். மதியம், டில்லி வரும் அவர், தனிப்பட்ட முறையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுகிறார். இரவில் அவருக்கு, பிரதமர், மன்மோகன் விருந்து அளிக்கிறார். அதில், மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.திங்கள் கிழமை, இருதரப்பு முக்கிய பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், தொழில் ஒத்துழைப்பு மற்றும் எல்லைப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.



நான்கு வயதுச் சிறுவனை மேயராக்கிய அமெரிக்க நகரவாசிகள்!
[Sunday, 2013-05-19 10:13:16]

அமெரிக்காவின், மின்னிசோட்டா மாகாணத்தில் வசிக்கும் ராபர்ட் டப்ஸுக்கு இப்போது 4 வயது.. இன்னும், பாலர் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், அமெரிக்காவில், 22 பேர் மட்டுமே வசிக்கும், "டோர்செட்' நகரத்தின் மேயர். இந்நகர மக்கள், கடந்த ஆண்டு நடந்த ஒரு விழாவில், டப்சை, மேயராகத் தேர்ந்தெடுத்தனர். "மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டப்ஸ், ஒரு பொது நல விரும்பி; அவன் பெரிய படிப்புகளை இன்னும் முடிக்கவில்லை. ஆனால், மக்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினான். முதியோர்களின் கைத்தடிகளைப் பிடித்து, சாலையை கடக்கச் செய்வான்; நன்றாக மீன் பிடிப்பான்' என, டோர்செட் நகர பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார். "மேயர் மிகவும் அழகாகப் பாடுவார்; நன்றாக நடனம் ஆடுவார்; மேலும், மக்கள் மிகவும் கவனமாக தெருக்களைக் கடக்க சொல்லிக் கொடுப்பார்' என, மின்னிசோட்டா பகுதி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.



தரையிறங்கும் போது தீப்பிடித்த விமானம் - விமானியின் சாதுரியத்தினால் 136 பயணிகளும் உயிர்தப்பினர்!
[Sunday, 2013-05-19 10:07:16]

மொஸ்கோவில் தரையிறங்கிய விமானத்தில் திடீரென தீ பற்றியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் சிறு காயமின்றி தப்பினர். ரஷ்யாவின் தென்பகுதியான ஸ்டாவ்ரோபோலில் இருந்து மாஸ்கோவிற்கு போயிங்-737 என்ற விமானம் 136 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் மாஸ்கோவில் தரையிறங்கும் போது ‌தீ பிடித்து மேலும் கீழுமாக தள்ளாடிய போதிலும் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்.இது குறித்து அவசரகால நிலைகள் துறை அமைச்சகம் ‌கூறுகையில் விமானம் தரையிறங்கும் போது தீ பிடித்த போதிலும் விமானி திறமையாக செயல்பட்டு தரையிறக்கினார். இதனால் பயணிகள் யாருக்கும் காயங்கள் இல்லை பயணிகள் 129 பேர் தான் இருந்தனர் என்றது.


NIRO-DANCE-100213
Mahesan supramaniyam 031109
INNSYS-20120930
TDE_Computers2011
RoyaShades-l2011(04-12-11)
Canada Kanthasamy Kovil
Ramans2011
Suresh-remax-2013-01-01
TamilsGuid-191012-2013
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com