Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 24, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
கண்டனப் பேரணியும் ஒரு கோடி கையெழுத்து வேட்டையும்.
[Thursday, 2012-09-20 23:45:22]
News Service

இந்த நூற்றாண்டின் முதல் இனப்படுகொலையாளியும் மானிடத்திற்கெதிராகக் குற்றம் புரிந்தவரும் லட்சத்திற்கு மேற்பட்ட எம் தமிழ் உறவுகளைத் துடிக்கத் துடிக்க உயிரோடு படுகொலை செய்வதற்குச் சூத்திரதாரியுமான சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸா அமெரிக்கா வருவதை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 25.9.2012 மதியம் 2.00 மணி தொடக்கம் மாலை 7.00 மணிவரை யூனிவசிற்றி அவனியூவில் அமைந்துள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் முன்பாக மாபெரும் கண்டனப் பேரணியைக் கனடியத் தமிழர் தேசிய அவை ஏற்பாடு செய்துள்ளது.

  

கடந்த காலங்களில் பிரித்தானியாவிற்கு வருகை தந்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸாவை ஐரோப்பிய வாழ் எம் தமிழ் உறவுகள் தொடர் முற்றுகைப் போராட்டமூலம் திரும்பியோட வைத்த வரலாறு எமக்குண்டு. அதேபோல் இந்தியாவிற்கு சிறிலங்கா ஜனாதிபதி வருகை தருகின்ற போதெல்லாம் நம் தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்களால் முற்றுகைப் போராட்டங்களும் கண்டனப் பேரணிகளும் நடாத்தப்பட்டு வந்ததும் கடந்த வாரம் சேலத்தைச் சேர்ந்த விமலராஜா என்கின்ற இனவுணர்வாளர் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸாவின் வருகையைக் கண்டித்துத் தன்னையே தீக்கிரையாக்கிய கோர நிகழ்வும் நடந்தேறியுள்ளது.

இவற்றை மனதில்கொண்டு கனடாவாழ் தமிழ் உறவுகள் நாம் அனைவரும் ஒன்றாகி ஓரிடத்தில் ஓர்மத்துடன் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தாவின் வருகைக்குக் கண்டனம் தெரிவிப்பதுடன் மாலை 5.00 மணிக்கு ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தின் ஐ.நா நோக்கிய ஒரு கோடி கையெழுத்து வேட்டையையும் ஆரம்பித்து வைக்கவுள்ளோம். தமிழகத்திலே கடந்த மாதம் கனடியத் தமிழர் தேசிய அவையும் அனைத்துத் தமிழகக் கட்சிகளும் இணைந்து ஆரம்பித்து வைத்த ஒரு கோடி கெயெழுத்து வேட்டை சென்னை; திருநெல்வேலி; விழுப்புரம்; தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக கனடாவிலும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சென்னையிலே ஆரம்பிக்கப்பட்ட ஒரு கோடி கையெழுத்து ஆரம்ப நிகழ்வில் கனடியத் தமிழர் தேசிய அவை உறுப்பினர்கள் கலந்துகொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தோடு அந்நிகழ்வில் ம.தி.மு.க கட்சிப் பொதுச்செயலாளர் வை.கோபாலசாமி; தமிழர் தேசிய இயக்க பழ.நெடுமாறன் ஐயா; இடது கம்மினியூஸ்ட் கட்சி முதுபெருந் தலைவர் நல்லகண்ணு; மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி; நாம் தமிழர்; பாட்டாளி மக்கள் கட்சி; விடுதலைச் சிறுத்தைகள் கட்சி; பெரியார் திராவிடக் கழகம்; மே 17 இயக்கம் இன்னும் 50 ற்கு மேற்பட்ட அமைப்புக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தமிழீழம் நோக்கிய நகர்வின் மைல் கல்லான இந்நிகழ்வில் ஒரு லடசத்து அறுபதினாயிரம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிறிலங்கா அரசின் மீது பன்நாட்டு விசாரணை வேண்டியும் ஈழத்தமிழர்கள் தங்கள் தாயக உரிமையைத் தீர்மானிக்க ஐ.நா.மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடாத்தவும் தமிழர்களே! உங்களின் கையெழுத்து தீர்மானிக்கட்டும். எம்முறவுகள் முள்ளிவாய்க்காலில் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டார்கள். இதற்காக நாமென்ன செய்யப் போகின்றோம்? சிறிலங்கா ஜனாதிபதி ராஜபக்ஸாவை போர்க்குற்றவாளியாக்கவும் ஈழத்தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுத் தரவும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ளவும்.

அத்தோடு மதிப்பிற்குரிய கனடிய பிரமுகர்கள் கலந்துகொண்டு ஒரு கோடி கையெழுத்து வேட்டையை ஆரம்பித்து வைக்கவுள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிடுகின்றோம். ஆகவே கனடா வாழ் தமிழ் உறவுகளே தங்களின் வருகையுடன் தங்களின் அயலவர்கள் நண்பர்களான மாற்றின மக்களையும் அழைத்து வருமாறு கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டி நிற்கிறது.

இடம்:. 360 University Avenue (U.S Consulate in Toronto)

காலம்: 25.9.2012 செவ்வாய்க்கிழமை

நேரம்: மதியம் 2.00 மணிதொடக்கம் மாலை 7.00 மணிவரை

மேலதிக தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை

தொலைபேசி: 1.866.263.8622 - 416.830.7703

மின்னஞ்சல்: info@ncctcanada.ca

இனையத்தளம்: www.ncctcanada.ca

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

மட்டக்களப்பு கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித்தினப் போட்டி!Top News
[Friday, 2013-05-24 21:00:28]

மட்டக்களப்பில் நடைபெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித்தினப் போட்டியில்வாகரை கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் டெங்கை ஒழிப்போம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூத்து நிகழ்ச்சியில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளது. மனிதரைக் கொல்லும் கொடிய டெங்கு நோயை ஒழிக்கும் வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக விசேட கூத்தாக இக்கூத்து தயாரிக்கப்பட்டது. மக்கள் மத்தியிலே டெங்கு நோய் சம்பந்தமாக சுற்றாடலை சுத்தமாக பேணுவது தொடர்பாக ஆலோசனை கூறப்படும் வேளையில் ஒரு சிலர் ஒத்துழையாமை, எதிர்ப்பு தெரிவித்தல், விமர்சனம் செய்தல் போன்ற வகைகளால் குறித்த நோக்கம் எட்டப்படவில்லை. இதே போன்றது ஒரு எண்ணக்கருவை மையமாக வைத்து டெங்கு நோயை பரப்புகின்ற நுளம்பை கட்டுப்படுத்துவதற்கான ஒரு மார்க்கமாகவே இந்த விசேட கூத்து டெங்கை ஒழிப்போம் எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டது.



நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்வீர்களா? - அமைச்சர்களிடம் கடுமையாக பேசிய சம்பந்தன்
[Friday, 2013-05-24 20:32:10]

தமிழ் எம்.பிக்கள் தொடர்ச்சியாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் விவகாரம் தொடர்பாக பாராளமன்றில் நேற்று மதியபோசனை இடைவேளையின் போது அமச்சர்களிடம் கடுமையாக பேசினார் சம்பந்தன் எம்.பி அண்மையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சுரேஷ் ஆகியோரை நான்காம் மாடியில் வத்து விசாரித்துள்ளீர்கள் புதன்கிழமை சிவசக்தி ஆனந்தனை அழைத்து விசாரித்துள்ளீர்கள்.



சாரணர் பயிற்சிக்கு சென்ற மாணவன் ஆற்றில் மூழ்கி மரணம் - வாழைச்சேனையில் சம்பவம்!
[Friday, 2013-05-24 18:16:27]

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மாந்தறை ஆற்றில் மூழ்கி மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். மரணமானவர் பிறைந்துரைச்சேனை ஷாதுலியா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்விகற்கும் பதுர்தீன் முஹம்மது பாயிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



ஒற்றுமையின் மூலமே பெற்றுக்கொண்ட சமாதானத்தை பாதுகாக்க முடியும் - ஹத்துருசிங்க!
[Friday, 2013-05-24 16:54:42]

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெற்றுக்கொண்ட சாமாதானத்தை ஒற்றுமையின் மூலமே பாதுகாக்க முடியும் என்று யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை வெசாக் தினத்தையொட்டி பாதுகாப்பு படைகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற பசுமாடுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்...



அரசியல் பேதங்களை பின்தள்ளி வைத்துவிட்டே சமய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் - விமல் வீரவன்ச!
[Friday, 2013-05-24 16:49:50]

சமய நடவடிக்கைகளின் போது, அரசியல் பேதங்களை பின்தள்ளி வைக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சமய நடவடிக்கைகளின் போது அரசியல் கட்சிகள் பேதங்களை புறந்தள்ளி விட்டு, அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். விகாரை ஒன்றை அபிவிருத்தி செய்யும் பணியின் போது, அங்குள்ள மத தலைவர்களின் அரசியல் நிலைப்பாடுகளையோ பங்களிப்புச் சபையின் அரசியல் குறித்தே கவனம் செலுத்தக் கூடாது. எனினும் சில அரசியல்வாதிகளின் எதிரான அரசியல் செயற்பாடுகள் காரணமாக தற்போதுள்ள மத வழிப்பாட்டுத் தலங்கள் குறித்து கவனத்தில் கொள்ளாது செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.



பிரித்தானியாவிற்கு ஆட்களை கடத்திவந்த இலங்கையர் கைது.
[Friday, 2013-05-24 16:46:01]

இலங்கையர்களை பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக ஆட்கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இலங்கையர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்து தற்போது பிரித்தானியாவில் வசித்துவரும் 50 வயதான சுப்ரமணியம் விக்னராஜா என்பவர் மீதே ஆட்கடத்தல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. லண்டன் - லுடோன் மற்றும் இசெக்ஸ் பகுதிகளில் கடந்த புதனன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் மேலும் 11 பேருடன் சுப்ரமணியம் விக்னராஜா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.



அலட்சியப் போக்குடனே அரசு எங்களை நடத்துகின்றது - ரவூப் ஹக்கீம்!
[Friday, 2013-05-24 16:45:51]

கிழக்கு மாகாணத்தில் இன்று ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கையில் வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது என அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாலை சாய்ந்தமருதில் இடம்பெற்ற நூலகத்திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,



காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வட மாகாண சபைக்கு வழங்கப்பட வேண்டும் - ராஜித சேனாரத்ன!
[Friday, 2013-05-24 16:39:04]

வடக்கு மாகாண சபைக்கு 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை வழங்க வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த மாகாண சபைத் தேர்தல் 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் கீழ் நடைபெறும் எனவும் அந்த மாகாணத்திற்கு அனைத்து அதிகாரங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.



பெரியளவிலான விலையைக் கொடுத்தே இலங்கையில் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம் - சவேந்திர சில்வா
[Friday, 2013-05-24 16:27:18]

பெரியளவிலான விலையைக் கொடுத்தே இலங்கையில் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு நான்கு ஆண்டு வெற்றி விழா நியூயோர்க்கில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



13வது திருத்தத்தை மட்டுமன்றி முழு அரசியல் யாப்பையும் மாற்ற வேண்டும் - பொதுபல சேனா!
[Friday, 2013-05-24 13:48:12]

13ஆவது திருத்தத்தையும் மாகாணசபை முறைமையையும் மாற்றி இனங்களுக்கிடையில் நல்லுறவையும் நாட்டில் சமாதானத்தையும் கொண்டுவர முடியாது. இந்நாட்டின் அரசியல் அமைப்பில் வெளிநாடுகளில் அழுத்தங்கள் காணப்படுவதால் முழு அரசியல் யாப்பையும் மாற்றியமைக்க வேண்டும்மென பொதுபலசேனா அமைப்பின் இணைப்பாளர் டிலந்த விதானகே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,



புகலிடக் கோரிக்கையாளர்கள் இருவருக்கு சட்டவுரைஞர் உதவி!
[Friday, 2013-05-24 13:34:45]

இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த 2 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிறென்டன் ஓ கொனர் சட்டவுரைஞர் உதவி வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த 2 புகலிடக் கோரிக்கையாளர்களும் அகதிகளுக்கு உதவி செய்யும் சட்டவுரைஞர் டேவிட் மான் என்பவருக்கு கிறிஸ்மஸ்தீவிலிருந்து அகதி பாதுகாப்புக்காக விண்ணப்பிக்க உதவி கோரி கடந்த புதன்கிழமை மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தனர். அண்மையில் கிறிஸ்மஸ்தீவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 31 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களும் வழமை போல சட்ட ஆலோசனை இல்லாத நிலையில் விசாரிக்கப்பட்டதாக மனித உரிமைகள் சட்டவுரைஞர் டானியல் வெப் கூறியுள்ளார்.



புத்த பிக்கு ஒருவர் வெசாக் தினமான இன்று தீக்குளிப்பு!Top News
[Friday, 2013-05-24 13:29:15]

வெசாக் தினமான இன்று கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று காலை சுமார் 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மாடுகள் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பிக்கு தனக்கு தீ வைத்துக் கொண்டுள்ளார். உடம்பில் பெற்றோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட பிக்குவை அருகில் இருந்தவர்கள் பிடித்து தீயை அணைத்து கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.



ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கனேடிய தமிழர் கைது!!
[Friday, 2013-05-24 13:24:03]

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள் டொமினிக்கன் குடியரசில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய பிரஜையான கருணாநிதி நல்லதம்பி என்பவரே இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பலுக்கு தலைமை தாங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கனேடிய கடவுச் சீட்டுத் திணைக்களத்தில் கடவுச் சீட்டுக்களைத் திருடி அவற்றில் மாற்றங்களைச் செய்து வேறு நாடுகளுக்கு மக்களை சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நல்லதம்பி என்பவரே கடவுச் சீட்டுக்களை திருடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.



விபத்தில் மரணமடைந்த வாழைச்சேனை இந்துக்கல்லூரி ஆசிரியர் ஹேமராஜனின் பூதவுடல் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது. Top News
[Friday, 2013-05-24 12:27:40]

வாழைச்சேனையில் கடந்த புதன்கிழமையன்று இடம்பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்த வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் கணிதப் பாட ஆசிரியர் சி.ஹேமராஜனின் பூதவுடல் அடக்கம் செய்வதற்காக பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மாணவர்கள் கண்ணீர் மல்க ஆசிரியரின் பூதவுடல் நல்அடக்கல் செய்யப்பட்டது.



இலங்கை போர்க்குற்றவாளிகள் சுதந்திர பறவைகளாக உலாவுகிறார்கள்: சர்வதேச மன்னிப்புச் சபை
[Friday, 2013-05-24 10:05:51]

இலங்கையில் போர் முடிவடைந்தாலும் போர்க்குற்ற முறையீடுகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் சுதந்திரப் பறவைகளாக உலாவுகிறார்கள் என லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச மன்னிப்புச் சபை அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கட்டாயத்தின் பேரில் காணாமற்போகச் செய்யப்பட்ட இருபதுக்கு மேற்பட்டோர் குறித்து இலங்கையில் கடந்தஆண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமற் போகச் செய்யப்பட்டோரில் அரசியல்வாதிகள், வர்த்தகப் பிரமுகர்கள், சந்தேகத்துக்குரிய குற்றவாளிகள் ஆகியோர் அடங்குவர் என்றும் மேற்படி சபை அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையால் நேற்று வியாழக்கிழமை விடுக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை இலங்கையை கடுமையாக விமர்சிக்கிறது.



அன்னபூரணியின் அமெரிக்க பயணத்தின் வைர விழா வல்வையில் கொண்டாடப்பட்டது. Top News
[Friday, 2013-05-24 10:03:50]

இரு நிகழ்வுகளும் வல்வை வரலாற்று ஆவண காப்பகம் Images of Valvai அமைந்த வல்வெட்டித்துறை 'கீதாஞ்சலி" இல்லத்தில் 27 -04 -2013 காலை 10.00மணிக்கு ஆவண காப்பக நிறுவனர் ந.நகுலசிகாமணி அவர்கள் தலைமையில்; இ.குகதாஸ் அவர்களின் இறைவணக்கத் துடன் ஆரம்பமாகியது. சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றான சீமாட்டி அன்னபூரணியின் அமெரிக்க பயணத்தின் 75ஆவது ஆண்டை நினைவுகூரும் கேக் (Cake) ஐ கப்டன் கலைநேசன் கப்டன் விநாயகமூர்த்தி கப்பல் பொறியியலாளர் கா.றஞ்சனதாஸ் ஆகியோர் வெட்டி சிறப்பித்தனர்.



கொழும்பு துறைமுகத்தில் பாரிய தீ விபத்து
[Friday, 2013-05-24 09:58:24]

கொழும்பு துறைமுகத்தின் (CFS 1) களஞ்சியசாலையில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பாரிய சேதசங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது பொலிஸாரும், தீயணைப்புப் படையினரும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதேவேளை இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



அதிகாரப்பகிர்விற்கு ஆதரவளித்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் - லக்ஸ்மன் கிரியல்ல
[Friday, 2013-05-24 09:48:33]

அதிகாரப் பகிர்விற்கு ஆதரவளித்திருந்தால் யுத்தத்தை தடுத்திருக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். 2001ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டமொன்றை முன்வைத்ததாககத் தெரிவித்துள்ளார். தற்போது அதிகாரப் பகிர்வு குறித்து பேசும் தரப்பினர் அதனை எதிர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டத்திற்கு ஆதரவளிக்கப்பட்டிருந்தால் யுத்தத்தினால் உயிரிழந்த பெரும் எண்ணிக்கையிலான உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.



மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கினால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் - கோதபாய
[Friday, 2013-05-24 09:39:48]

மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கக் கூடாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கப்படுவதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு அதிகாரங்களை வழங்குவதனால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென தெரிவித்துள்ளார். அரசாங்க அதிகாரி என்ற ரீதியில் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவது தமது கடமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதனை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் பாரிய பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.



நாட்டில் மத முரண்பாடுகள் கிடையாது, அவ்வாறு முரண்பாடுகள் ஏற்பட பௌத்தர்கள் இடமளிக்க மாட்டார்கள் - ஜனாதிபதி
[Friday, 2013-05-24 09:29:08]

இலங்கை பௌத்தர்கள் கடும்போக்காளர்கள் அல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க சில அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. பௌத்தர்கள் ஏனைய மதத்தவரை துன்புறுத்துவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. ஏனைய மத வழிபாட்டுத் தலங்களை அமைத்துக் கொள்ள பௌத்த விஹாரைகளுக்கு சொந்தமான காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பௌத்தர்கள் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த எவ்வளவு முயற்சி எடுத்து வருகின்றனர் என்பது வெளிப்படையாகும். நாட்டில் மத முரண்பாடுகள் கிடையாது, அவ்வாறு முரண்பாடுகள் ஏற்பட பௌத்தர்கள் இடமளிக்க மாட்டார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


NIRO-DANCE-100213
AJRwindows22.05.13
RoyaShades-l2011(04-12-11)
TamilsGuid-191012-2013
Canada Kanthasamy Kovil
INNSYS-20120930
Suresh-remax-2013-01-01
Ramans2011
TDE_Computers2011
Mahesan supramaniyam 031109
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com