Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
'The Internet Association' உலகின் முன்னணி இணையங்களின் கூட்டிணைவில் ஏற்பட்டுள்ள சர்ச்சை
[Sunday, 2012-09-23 19:42:19]
News Service

இணையத்தளங்களின் பொருளாதார நிலையை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதற்கும் இணையங்களின் மாற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கும் உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப, சமூக வலையமைப்பு நிறுவனங்கள் இணைந்து குழு ஒன்றினை ஸ்தாபித்துள்ளது. இந்த அமைப்புத் தொடர்பில் ஒருபுறம் சாதகமான கருத்துக்கள் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கும் அதேவேளை சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன.

  

'The Internet Association' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பு முதலில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதில் இணையத்தளங்களின் பங்களிப்புக் குறித்து ஆராயவுள்ளது.

இந்த அமைப்பில் கூகுள், யாகூ, பேஸ்புக், அமேசன், ஏஓஎல், இ-பே, எக்ஸ்பீடியா, ஐஏசி, லிங்க்டின், மொன்ஸ்டர், ரொக்ஸ்பேஸ், சேல்ஸ்போர்ஸ், ட்ரிப் எட்வைஸர், சிங்கா ஆகிய நிறுவனங்களின் அங்கத்தவர்கள் பணியாற்றவுள்ளனர்.

இந்த அமைப்பின் தலைவராக மைக்கல் பெக்கர்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு எதிராக இயங்கும் இணையத்தளங்களை அந்நாட்டில் தடை செய்வதற்கும் அதற்கான சட்டவரைவுகளைத் தயார் செய்வதற்குமே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனை முற்றாக மறுத்துள்ள மைக்கல் பெக்கர்மன், இணையங்களின் வளர்ச்சியானது நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தத் தாக்கங்கள் சாதகமான நிலைப்பாட்டினை அடைவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னணி இணைய நிறுவனங்களை முடக்குவதற்கு தீவிரவாதிகள் தயாராகலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளதாக இணையத்தளங்களில் செய்திகள் கசிந்துள்ளன.

இந்த அமைப்பில் அப்பிள், மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனங்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

உலகின் அதி வேக சுப்பர் கணினியை உருவாக்குகின்றது சீனா!Top News
[Tuesday, 2013-06-18 21:01:44]

ஜூன் மாதம் வெளியிடப்பட்ட உலகின் முதல் 500 அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரகளின் பட்டியலில் முதலிடத்தை சீனா பெற்றுள்ளதுடன் அதன் வேகம் ஏனைய எந்த ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை விடவும் 2 மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகின்றது. டியான்ஹே-2 எனப் பெயரிடப்பட்ட இந்த சூப்பர் கம்ப்யூட்டர் அதிகாரப் பூர்வமாக உலகின் நமபர் 1 அதிவேக கணிணி என திங்கட்கிழமை பிரகடனப் படுத்தப் பட்டது. மேலும் இதற்கு முன் நம்பர் 1 இல் இருந்த அமெரிக்காவின் டைட்டன் ஐயும் இது மிஞ்சி விட்டது. உலகளவில் மிகச் சிறந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானிகளைக் கொண்ட ஓர் குழு ஒவ்வொரு வருடமும் இரண்டு தடவை டாப் 500 அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களின் விபரங்களை வெளியிட்டு வருகின்றனர்.



எடையை அதிகரிக்கும் தைரோயிட் பிரச்சினை - தீர்வு காண இதோ சில வழிகள்!
[Tuesday, 2013-06-18 20:49:41]

இன்றைய காலத்தில் தைராய்டு இல்லாதவர்களை பார்ப்பதே கடினம். அந்த அளவில் தைராய்டானது நிறைய மக்களுக்கு உள்ளது. அதிலும் தைராய்டு வந்தாலே, உடல் எடையில் மாற்றங்கள் நிகழும். இவ்வாறு ஹைப்போ தைராய்டு இருந்து, உடல் எடை அதிகரித்தால், அதனை குறைப்பது என்பது மிகவும் கஷ்டம். அத்தகையவர்கள் உடல் எடை குறைய வேண்டுமென்று குறைவாக சாப்பிட்டாலும், உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும். தைராய்டு நோயாளிகளுக்கு ஏற்படும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று தான் எடை அதிகரித்தல். இதற்கு முக்கிய காரணம், தைராய்டு பற்றாக்குறையே. உடல் எடை அதிகரிப்பதற்கு உடலில் கொழுப்புக்கள் தங்குவதனால் மட்டும் ஏற்படுவதில்லை. உடலில் தண்ணீர் மற்றும் உப்பு அதிக அளவில் இருந்தாலும், உடல் பருமன் அடையும். எனவே தைராய்டு நோயாளிகள் சரியான டயட்டை மேற்கொண்டால், உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். அதற்கு டயட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.



சந்தையில் களமிறங்கியுள்ள HTC T328D Desire VC ஸ்மார்ட்போனில் புதிய பல வசதிகள் அறிமுகம்! Top News
[Tuesday, 2013-06-18 19:34:09]

ஹெச்.டி.சி நிறுவனம் புதிய HTC T328D Desire VC என்ற ஸ்மார்ட்போனை சந்தையில் களமிறக்கியுள்ளது. இதன் ஆட்டோ ஃபோக்கஸ், எல்.இ.டி. பிளாஷ் கொண்டு 5 எம்பி திறன் கொண்ட கேமரா உள்ளிட்ட அம்சங்கள் மக்கள் மனதைக் கவரும் வண்ணம் உள்ளது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேக கோர்டெக்ஸ் A 5 ப்ராசஸர், ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 சிஸ்டம், ஏ-ஜி.பி.எஸ். சப்போர்ட் ஆகியவற்றை சில முக்கிய வசதிகளாகக் குறிப்பிடலாம்.



அனைவராலும் கழித்து விடப்படும் வாழைத்தண்டின் மருத்துவக் குணங்கள்!
[Tuesday, 2013-06-18 16:16:47]

அதிக நீர்ச்சத்து- நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும். பெண்களின் மாவிடாய் கோளாறு- ரத்த அழுத்தத்துக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது, சிறுநீரகத்தில் தோன்றும் கற்களைக் கரைக்கும். அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம்.



அசுத்தமான வளியை சுவாசிக்கும் பெண்களின் குழந்தைகளுக்கு ஆட்டிஸ நோய் தாக்கும் அபாயம்!
[Tuesday, 2013-06-18 16:10:46]

அதிகளவில் மாசடைந்த வாயுவை சுவாசிக்க நேரிடுகின்ற கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகள் ஆட்டிஸம் நோயினால் (மன வளர்ச்சிக் குறைபாடு) பாதிக்கப்படும் அபாயம் பெருமளவில் உள்ளதாக அமெரிக்காவில் நடந்துள்ள ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இந்தப் பெண்களின் குழந்தைகளுக்கு, வாயு மாசடைதல் அளவு குறைவாகக் காணப்படும் சூழலில் வாழும் பெண்களின் குழந்தைகளைவிட ஆட்டிஸம் ஏற்பட இரண்டு மடங்கு வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.



நூறு சதவீதம் மின்கலத்தில் இயங்கும் அதிவேக மோட்டார் பைக் கண்டுபிடிப்பு!Top News
[Tuesday, 2013-06-18 16:04:33]

பைக் வைத்திருப்பவர்கள் இப்போது அதிகம், காரணம் பெட்ரோல் விலையேற்றத்தைச் சமாளிக்கதான் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.அதே சமயம் சமீபகாலமாக பேட்டரி மூலம் இயங்கும் குட்டி கார்களும், ஹைபிரிட் மூலம் இயங்கும் பெரிய கார்களும் வந்த போது பைக்கை பற்றி யாரும் கண்டு கொள்ளாமல் இருந்த நிலையிலும் வழக்கம் போல் பைக்கள் வந்தன. இதற்கிடையில் இப்போது அமெரிக்காவில் முழுவதும் பேட்டரியால் இயங்க கூடிய பைக்கை (Zero MMX) கண்டுபிடித்து அதை அமெரிக்க ராணுவத்திற்க்கு அளித்துள்ளனர்.



துளசி இலைகளை கொதிக்க வைத்து மூலிகை தேநீராக உட்கொண்டுவந்தால் பிரசவம் எளிதாகும்! - சித்தர்களது ஆயுர்வேத மருத்துவம்..
[Tuesday, 2013-06-18 10:35:56]

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவுதான் கருவின் வளர்ச்சி, பிரசவத்துக்கு பிறகு தாயின் உடல் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்ப காலத்தில் அவ்வப்போது துளசி இலைகளை மென்று சாப்பிடுவது வலியின்றி பிரசவம் ஏற்படும் என்று ஆயுர்வேதம் கூறியுள்ளது. கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்கள், 7வது மாதத்தில் இருந்து கடைசி 3 மாதங்களில் கர்ப்பிணி தனது உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். இந்த காலங்களில் அதிக திரவ உணவுகள், பழங்கள் நல்லது. கரு வளர இவை அதிக பயனளிக்கும்.



நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
[Monday, 2013-06-17 23:18:30]

நினைவாற்றல் என்றால் என்ன? 'ஒரு விஷயத்தை மறக்காமல் இருப்பதுதான் நினை வாற்றல்' என்று பதில் வரும். ஆனால், இது சரியான பதில் இல்லை! மனதில் இருக்கின்ற அறிவில் இருந்து சரியான விவரத்தைச் சரியான நேரத்தில் வெளிப்படுத்தும் திறமைதான் நினைவாற்றல் என்கிறார் கள் விஞ்ஞானிகள்! இதற்கு அமெரிக்க விஞ்ஞானிகள் கூறும் காரணங்களை பாருங்களேன். உங்களுக்கே உண்மை விளங்கும்.



Leonid Rogozov என்பவர் தான் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல் மருத்துவர். Top News
[Monday, 2013-06-17 22:22:48]

1961 ஆம் ஆண்டு 27 வயதான Leonid Rogozov க்கு கடும் வயிற்று வலியும் காய்ச்சலும் வந்தது.அவரே தன்னை பரிசோதித்து பார்த்த போது அவருக்கு குடல் அழற்சி நோய் இருப்பதை கண்டு பிடித்தார். குடல் அழற்சி நோய் மோசமாக இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் இல்லை என்றால் குடல் வால் வெடித்து, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும்.அதனால் அவரே அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவெடுத்தார்.



ஏழே நாட்களில் முகப் பொலிவை பேண என்ன செய்ய வேண்டும்?
[Monday, 2013-06-17 21:06:00]

அனைவருக்குமே நன்கு வெள்ளையாகவும், அழகாகவும் மாற வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் விற்கும் நிறைய அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஆனால் எந்த பலனும் இருக்காது. அவ்வாறு பாக்கெட்டில் இருக்கும் பணத்தை செலவழித்து, கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை விட, ஒருசில இயற்கை முறைகளை பின்பற்றினால், சருமம் அழகாக இருப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும். என்ன இயற்கை முறைகள் என்று கேட்கலாம். அது வேறொன்றும் இல்லை, முகத்தை கழுவுதல், ஃபேஸ் பேக் போடுதல், நிறைய தண்ணீர் குடித்தல், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல், உடற்பயிற்சிகளை பின்பற்றுதல் என்று பல உள்ளன.



புரியாத புதிராக இருக்கும் சில மருத்துவக் கேள்விகளுக்கான விடைகள்!
[Monday, 2013-06-17 20:38:50]

பெப்டிக் அல்சர் என்பது என்ன?

சாப்பிட்டு வயிறு காலியானவுடன் வலி ஏற்படும். இதற்கு பெப்டிக் அல்சர் என்று பெயர். இந்த பிரச்னைக்கு எண்டோஸ்கோபி பரிசோதனை செய்து பார்த்து உணவு முறையில் மாற்றம் செய்து மருந்து எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும்.



உயிர்கொல்லி புற்றுநோயின் வகைகளும் அவற்றின் அறிகுறிகளும்!
[Monday, 2013-06-17 16:09:24]

எவ்வளவு தான் நவீன மருத்துவ கண்டுபிடிப்புகள் இருந்தாலும், புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி நோயாகவே உள்ளது. ஏனெனில் உலகில் உள்ள நோய்களிலேயே புற்றுநோயின் தாக்கத்தினால் தான் அதிக அளவு உயிரிழப்பானது ஏற்படுகிறது. இத்தகைய உயிரிழப்புக்களை தடுப்பதற்கு ஒரே வழியென்றால், ஆரம்பத்திலேயே புற்றுநோயின் அறிகுறிகளை அறிந்து, அதற்கேற்றாற் போல் சிகிச்சைகளை மேற்கொண்டால், அதிலிருந்து தப்பிக்க முடியும். மேலும் புற்றுநோயில் நிறைய வகைகள் உள்ளன. இவை அனைத்துமே ஒரே மாதிரியான அறிகுறிகளை கொண்டிருக்காது. ஒவ்வொரு புற்றுநோயும் ஒவ்வொருவிதமான அறிகுறிகளைக் கொண்டிருக்கும். வேண்டுமெனில் ஒருசில பொதுவான அறிகுறிகளான சோர்வு, காய்ச்சல், குறைவான இரத்தம் மற்றும் எடை குறைவு போன்றவை உள்ளன.



மின்னல் வேகத்தில் கண்களைத் தாக்கும் கணினி!
[Monday, 2013-06-17 15:41:32]

இன்றைய பறக்கும் யுகத்தில் கணினி பக்கத்தில் அமர்ந்தபடி தான் எல்லா வேலைகளும் செய்து முடிக்கப்படுகின்றன. தொழில் நுட்ப வளர்ச்சிக்கு இது உற்சாகத்தை அளிக்கக்கூடியது என்றாலும் உடல்நலத்துக்கு கேடு என்கிறது மருத்துவ ஆய்வு. கணினி முன் அமர்ந்து பணி செய்வபர்களில் ஆண்கள் தான் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீங்களும் அந்த வரிசையில் உள்ளவர்கள் என்றால் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். கணினி முன் அதிகநேரம் அமருபவர்களுக்கு முதல் பாதிப்பு ஏற்படும் பகுதி கண்தான். ஆகையால் அதில் இருந்து தப்பித்துக் கொளள சில வழிகள்....



ஜெட் என்ஜினில் இயங்கும் வேகம் கூடிய துவிச்சக்கர வண்டி தயாரிப்பு!Top News
[Monday, 2013-06-17 15:36:02]

இங்கிலாந்தைச் சேர்ந்த, பல கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரரான கொலின் புர்சி ஜெட் என்ஜினுடன் கூடிய சைக்கிளொன்றைத் தயாரித்துள்ளார். வீட்டில் தயாரித்த ஜெட் என்ஜினை அவர் தனது சைக்கிளுக்கு பொருத்தியுள்ளார். இதன்மூலம் மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியுமென அவர் தெரிவிக்கின்றார். பார்ப்பதற்கு மிகவும் ஆபத்தானதாக இச் சைக்கிள் தோன்றுகின்றது. தற்போது 32 வயதான கொலின் இச் சைக்கிளுக்கு 'நோரா' எனப் பெயரிட்டுள்ளார். இவர் இதற்கு முன்னரும் பல கண்டுபிடிப்புகளை இணையத்தின் ஊடாக அறிமுகப்படுத்தியுள்ளார். தற்போது இவர் தனது புதிய சைக்களில் தொடர்பான காணொளியை யுடியூப்பில் வெளியிட்டுள்ளார்.



மைக்ரோசொப்ட் மற்றும் பேஸ்புக்கிடமிருந்து தனிநபர் தகவல்களை அமெரிக்க அரசு கோருவது உறுதியாகியது!
[Sunday, 2013-06-16 15:07:25]

வெள்ளி இரவு உலகின் மிகப்பெரிய இணைய நிறுவனங்களான Facebook மற்றும் Microsoft ஆகியவை அமெரிக்க அரசு தனிநபரின் விடயம் தொடர்பாக தம்மிடையே விடுத்த கோரிக்கை தொடர்பாக தகவல்களை வெளியிட்டுள்ளது இதன் அடிப்படையில் 2012 ஆம் ஆண்டு இறுதி 6 மாதங்களில் மட்டுமே அமெரிக்க அரச உளவு நிறுவனங்கள் இநத உரிமை மீறல் செயற்பாடு இருந்தது என இவை தெரிவித்துள்ளன.



நறுமணப் பூச்சுக்களை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை!
[Sunday, 2013-06-16 12:30:32]

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். பேக்கிங்கைப் பார்த்து பெர்ஃப்யூமை செலக்ட் செய்யக் கூடாது. பெர்ஃப்யூம் தயாரித்த கம்பெனி தரமான கம்பெனியா என்று முதலில் கவனிக்க வேண்டும். எக்ஸ்பயரி ஆகும் தேதியையும் முதலில் கவனிக்க வேண்டும். பெர்ஃப்யூமை முகர்ந்து பார்க்கும் போது, பெர்ஃபியூம் பாட்டில் மூடியிலேயே சிறிது அடித்து பார்க்க வேண்டும். நிறைய பெர்ஃபியூமை அடித்து ஸ்மெல் செய்து பார்க்கக் கூடாது. தேவைப்பட்டால் 2 அல்லது 3 தடவை மட்டுமே பீய்ச்சியடித்து டெஸ்ட் ஸ்மெல் செய்து பிறகு தேர்ந்தெடுக்கலாம்.



வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தியது Windows 8.1!Top News
[Sunday, 2013-06-16 12:19:54]

விண்டோஸ் 8 பதிப்பு வெளியானவுடன், அதன் முற்றிலும் புதிய தொடுதிரை இயக்கத்தினை அனைவரும் ஆச்சரியத்துடன் பாராட்டினாலும், ஸ்டார்ட் பட்டன் இயக்கம் இல்லாதது, பழைய டெஸ்க்டாப் முறை, தேவைப்படுவோருக்குத் தரப்படாதது எனப் பல குமுறல்களை வாடிக்கையாளர்கள், உலகெங்கும் வெளிப்படுத்தினர். விண்டோஸ் 8 சிஸ்டம் உரிம விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததற்கு இவையும் ஒரு காரணம் எனவும் பரவலாகப் பேச்சு எழுந்தது. பழைய, பழகிப்போன விஷயங்கள் கட்டாயம் வேண்டும் என எதிர்பார்ப்புகள் வெளிப்பட்டதால், முதலில் பிடிவாதமாக இருந்த மைக்ரோசாப்ட் பின்னர், அவற்றை மீண்டும் தரும் சிந்தனைப் போக்கினைக் கடைப்பிடித்தது. இறுதியில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு களுக்கேற்ப விண்டோஸ் 8 வளைக்கப்பட்டு, தற்போது விண்டோஸ் 8.1 பதிப்பு வெளியாகியுள்ளது. இதில் புதியதாக வந்துள்ள சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.



தூக்கத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கின்றீர்களா? கட்டாயம் இவற்றைப் படியுங்கள்!
[Sunday, 2013-06-16 12:10:58]

தூக்கம் உடலின் செயல்பாட்டிற்கும் மிகவும் அவசியமான ஒன்று. அதனால் ஒருவருக்கு போதுமான அளவு தூக்கம் என்பது அவசியமான ஒன்று. எதுவுமே அளவாக இருந்தால் தான் நமக்கு நன்மை. அதே போல் தான் தூக்கமும். தூக்கமின்மையும் சரி, அதிகமான தூக்கமும் சரி, இரண்டுமே நமக்கு பெரிய பிரச்சனை தான். தொடர்ச்சியாக பல இரவுகள் போதிய தூக்கம் இல்லாமல் தவிக்கும் பலரை போலவே, அதிகமாக தூக்கம் வரும் பிரச்சனை உள்ளவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அந்த பட்டியலில் நீங்களும் உள்ளீர்களா? அப்படியானால் அதிகமாக தூக்கம் வருவதற்கான காரணங்களையும் அதனை குணப்படுத்தும் வழிகளையும் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். இன்சோம்னியா எனப்படும் போதிய தூக்கமின்மை, இது ஒரு பொதுவான பிரச்சனையே.



கூகுளின் புதிய தொழில்நுட்பம் - பறக்கும் பலூன்கள் மூலம் இணைய இணைப்பு!Top News
[Saturday, 2013-06-15 21:37:14]

பிற்காலத்தில் எங்கேனும் இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டு தகவல் தொடர்புகள் கிடைக்க இயலாத நிலையில் ஆகாய மார்க்கமாக மீட்புப் பணிகளில் ஈடுபட உதவக்கூடும் வகையில் ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது கூகுள் நிறுவனம். அத்துடன் இதன் மூலம் இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் எப்போதும் பெறும் விதத்தில் செய்ல்படப் போகும் ஒரு புதிய முயற்சி என்றும் கூகுள் நிறுவனம் இதைக் குறிப்பிடுகிறது. அதாவது ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட 30 பலூன்களில் இணையதள தொடர்புகளை அளிக்ககூடிய கருவிகள் பொருத்தப்பட்டு விண்வெளியில் பறக்கவிடப்படுள்ளது. அவற்றின் பாதை தரையிலிருந்து கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் இதுவரை எந்த வசதிகளுமில்லாத தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் கூட இனி இணையதள வசதிகளைப் பெறமுடியுமாம்.



மருந்துகளை வாங்கும்போது அவதானிக்க வேண்டிய விடயங்கள்!
[Saturday, 2013-06-15 13:56:20]

மருந்து மாத்திரைகளை வாங்கும் போது முதலில் நிதானத்துடன் செயல்படவேண்டும் ஒரு போதும் அவசரம் காட்டக்கூடாது பொருமையுடன் வாங்கவேண்டும்.. மருந்துகளை வாங்கும் போது உரிமம் பெற்ற சில்லறை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்து சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே கவனமாக வாங்க வேண்டும். வாங்கிய மருந்து மாத்திரைகளுக்கு கடைக்காரர்களிடமிருந்து விற்பனை ரசீது கேட்டு பெறவும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும். மருந்துகளை வாங்கும் போது அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை பார்த்து வாங்க வேண்டும்.


TDE_Computers2011
Ramans2011
INNSYS-20120930
Mahesan supramaniyam 031109
TamilsGuid-191012-2013
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
NIRO-DANCE-100213
AJRwindows22.05.13
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com