Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 21, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
அமைச்சர் றிசாத் பதியுதீனை எதிர்வரும் 4ம் திகதி மன்னார் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவு.
[Monday, 2012-09-24 20:44:14]
News Service

வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியுதீனை எதிர்வரும் 4ம் திகதி (04.10.2012) மன்னார் நீதிமன்றில் ஆஜராகுமாறு மன்னார் மாவட்ட பதில் நீதிவான் உத்தரவிட்டிருக்கின்றார்.மன்னார் மாவட்ட நீதிவான் அ.யூட்சனை அமைச்சர் றிசாத் பதியுதீன் தொலைபேசியில் அச்சுறுத்தியதாக தெரிவித்து மன்னார் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (24.09.2012) இடம்பெற்ற போதே பதில் நீதிவான் ஆர்.எஸ்.ஏ. திசாநாயக்க மேற்படி உத்தரவை பிறப்பித்திருக்கின்றார்.

  

நீதிச்சேவை ஆணைக்குழு குறித்த வழக்கு விசாரணையை நடத்துவதற்காக நீதிபதி ஆர்.எஸ்.ஏ. திசாநாயக்காவை மன்னார் மாவட்ட பதில் நீதிவானாக விசேடமாக நியமித்த நிலையில் குறித்த வழக்கு மன்னார் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.மன்னார் மாவட்ட நீதிவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் கோந்தைப்பிட்டி இறங்குதுறை தொடர்பான வழக்கின் தீர்ப்பு குறித்து அமைச்சர் றிசாட் பதியுதீன் தன்னை தொலைபேசியில் மிரட்டியதாக குற்றப்புலனாய்வு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில் இலங்கை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் மன்னார் நீதிவான் நீதிமன்றில்; குற்றவியல் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தனர். மேற்படி வழக்கு மன்னார் நீதிமன்றில் விசாரணைக்காக மூன்றாவது தடவையாக இன்று (24.09.2012) எடுக்கப்பட்டிருந்த போதே நீதிபதி ஆர்.எஸ்.ஏ. திசாநாயக்க மேற்படி உத்தரவினை பிறப்பித்திருக்கின்றார்.

பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கின் பிரகாரம் நீதிமன்ற அழைப்பாணை உத்தரவிற்கமைய வர்த்தக கைத்தொழில் துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் கடந்த ஓகஸ்ட் 27ம் நாள் (27.08.2012) குறித்த வழக்கின் இரண்டாம் கட்ட நீதிமன்ற விசாரணைக்காக மேலதிக நீதவான் ஆர்.எஸ்,ஏ. டிசாநாயக்க முன்னிலையில் ஆஜராகியிருந்தார்.இந்நிலையில் அமைச்சர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி அனுர மத்;தேகொட தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான என்.எம்.சகீப் ,எம்.எம்.சுகைர் உட்பட 23 சட்டத்தரணிகளும், மற்றைய தரப்பு சார்பாக 4 சட்டத்தரணிகளும் மன்றில் ஆஜராகி இருந்தனர்.

இதன்போது கடுமையான வாதப்பிரதிவாதங்களுக்குப்பின் அமைச்சர் சார்பில் ஆஜரான சடட்ததரணிகளின் வேண்டுகோளுக்கு அமைய மன்னார் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஆர்.எஸ்.ஏ டிசாநாயக்க அவர்களினால் சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் பெருமதியான இரண்டு அரச உத்தியோகத்தர்களது சரீரப்பிணையிலும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் அமைச்சர் பிணையில் செல்ல அணுமதித்திருந்தார்.

அதேவேளை குறித்த வழக்கின் மேலதிக விசாரணைகளுக்காக அமைச்சர் அவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் நான்காம் திகதி (04.10.2012) மீண்;டும் மன்றில் ஆஜராக வேண்டும் எனவும் மேலதிக நீதவான் ஆர்.எஸ்.ஏ. டிசாநாயக்க உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் குறித்த தினத்திற்கு முன் அமைச்சர் அவர்கள் மன்றில் ஆஜராக வேண்டும் எனும் விசேட நகர்த்தல் மணு ஒன்றின் மூலம் சிரேஸ்ட சட்டத்தரணி இ.கயஸ்பல்டானோ நீதிபதியின் அணுமதியினை கோரியிருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதவான் அமைச்சர் றிஷாட்பதியூதீனை இம்மாதம் 24ம் திகதி மன்றில் ஆஜராக வேண்டும் எனும் கட்டளையினை பிறப்பித்திருந்தார்.இதனடிப்படையில் இன்றைய தினம் மன்றில் ஆஜராக வேண்டிய அமைச்சர் குறித்த வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்காத நிலையில் அவர்சார்பாக அவரது சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகி வாதிட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் நான்காம் திகதி (04.10.2012) மன்றில் நடாத்துமாறும் குறித்த தினத்தில் அமைச்சர் றிஷாட் பதியூதீனை மன்றில் ஆஜராகுமாறும் மேலதிக நீதவான் ஆர்.எஸ்.ஏ டிசாநாயக்க உத்தரவிட்டிருக்கின்றார். இதேவேளை குறித்த வழக்கின் விசாரணைகளை அவதானிக்கும் பொருட்டு ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அனுப்பிவைத்த பிரதிநிதியும் மன்றில் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் றிஷாட் பதியூதீனுக்கு எதிரான வழக்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிய பிரதிநிதி அவதானித்தார்அமைச்சர் றிஷாட் பதியூதீனுக்கு எதிரான வழக்கு விசாரணையினை சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் பிரதிநிதி பார்வையிட்டிருக்கின்றார்.

அமைச்சர் றிஷாட் பதியூதீனுக்கு எதிராக மன்னார் நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணையின் மூன்றாம் கட்ட நடவடிக்கைகள் இன்று (24.09.2012) இடம்பெற்றிருக்கின்றது.குறித்த வழக்கின் மூன்றாம் கட்ட நடவடிக்கைகள் மன்னார் நீதவான் நீதிமன்றில் மேலதிக நீதவான் ஆர்.எஸ்.ஏ டிசாநாயக்க முன்னிலையில் இடம்பெற்றிருக்;கின்ற போதும் அமைச்சர் றிஷாட் பதியூதீன் மன்றிற்கு சமூகமளித்திருக்கவில்லை.

ஆயினும் குறித்த வழக்கு விசாரனையினை பார்வையிடும் பொருட்டும் அதனை அவதானிக்கும் பொருட்டும் ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அனுப்பிவைத்த பிரதிநிதியும் மேற்கு அவுஸ்திரேலிய சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினருமான மார்க் டிரவல் மன்றில் பிரசன்னமாகியிருக்கின்றார்.

மன்னார் மற்றும் கொழும்பு நீதிமன்றங்களில் தமக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை கண்காணிக்குமாறு அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்திடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒருதலைப்பட்சமாக தமக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாகவும், தம்மிடம் விளக்கம் கோராமலேயே நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை நடத்தியதாகவும் அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதேவேளை சில ஊடகங்களும், சட்டத்தரணிகள் சங்கமும் தமக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் இது பாதகமான நிலைமையை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.நிறைவேற்று அதிகாரத்திற்கும் நீதிமன்றக் கட்டமைப்பிற்கும் இடையிலான முரண்பாடாக இந்தப் பிரச்சினையை வெளிப்படுத்த சில தரப்பினர் முயற்சித்து வருவதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியிருந்தார்.

நீதி நிலைநாட்டப்படுவதற்கு அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ரிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இந்திய இராணுவத்தை விரட்டவே புலிகளுக்கு பிரேமதாஸ ஆயுதங்களை வழங்கினார் - சஜித் விளக்கம்!
[Tuesday, 2013-05-21 09:49:06]

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸா ஆயுதங்களை கொடுத்தது ஏன்? என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான சஜித் பிரேமதாஸ தெளிவுப்படுத்தியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து 4 ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை கொண்டாடும் வகையில் காலி முகத்திடலில் சனிக்கிழமை நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார். அத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக நாட்டைபிரிப்பதற்கு முயன்றனர் என்று குற்றஞ்சாட்டினார்.



இராணுவத்தின் காணி அபகரிப்புக்கு எதிரான 1478 ரிட் மனுக்கள் மீதான விசாரணை 27 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
[Tuesday, 2013-05-21 09:38:00]

யாழ்ப்பாணத்தில் தமக்கு சொந்தமான காணிகளை இழந்துள்ள 1,474 பேர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுக்கள் மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் மே மாதம் 27 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைத்துள்ளது. தமக்கு சொந்தமான 6381 ஏக்கருக்கு கூடுதலான் பாரம்பரிய தனியார் நிலங்களை சுவீகரிக்க அரசாங்கம் எடுக்கு நடவடிக்கைகளை எதிர்த்தே கடந்த 15 ஆம் திகதி புதன்கிழமை இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நீதியரசர் கே. ஸ்ரீஸ்கந்தராஜா முன்னிலையில் நேற்று ஆராயப்பட்டன. 1474 ரிட் மனுக்களையும் ஏற்கவேண்டும் என்பதற்கான ஆதாரங்களை மே மாதம் 27 ஆம் திகதி முன்வைக்குமாறு பணித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அன்றைய தினத்திற்கே வழக்கையும் ஒத்திவைத்தது.



பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கம் பிரான்ஸ் - இலவசபாட வகுப்புக்களை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
[Tuesday, 2013-05-21 09:30:17]

பிரான்ஸ் நாட்டை தளமாக கொண்டு செயற்படும் பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கம் பின் தங்கிய பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்களில கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் இலவசபாட வகுப்புக்களை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.



13 ஆவது திருத்த சட்டத்தை ரத்துச் செய்யும் அதிகாரம் அரசாங்கத்திற்கு கிடையாது: வாசுதேவ, திஸ்ஸ விதாரண எச்சரிக்கை!
[Tuesday, 2013-05-21 09:27:37]

அரசியல் அமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்தச்சட்டத்தை ரத்துச் செய்யும் தார்மீக அதிகாரம் அரசாங்கத்திற்கோ அதனைச் சார்ந்த பங்காளிக் கட்சிகளுக்கோ கிடையாது. அவ்வாறானதொரு நடவடிக்கை எத்தரப்பில் முன்னெடுக்கப்பட்டாலும் அதனை தோல்வியடையச் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்று அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோர் எச்சரித்துள்ளனர். மாகாணசபை முறைமையை ஒழிப்பதற்கு ஆளும் கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள் எதிர்ப்பாகவே உள்ளனர். இந்த நிலையில் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ரத்துச் செய்வதற்கான பிரேரணையை கொண்டு வந்தாலும் அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் அப்பிரேரணையானது மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவின்றி தோல்வியடையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.



எமது படையினரை நாம் எங்கு வைத்திருப்பதென்பதை தீர்மானிக்கும் உரிமை சர்வதேச சமூகத்துக்கு கிடையாது: - இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரியா
[Tuesday, 2013-05-21 09:27:05]

வடக்கில் நாம் பெரும் படைக்குறைப்பை மேற்கொண்டுள்ளோம் போர்க்காலத்தில் யாழ். மாவட்டத்தில் 16 இராணுவ முகாம்கள் இருந்தன. தற்போது 3 இராணுவ முகாம்கள் மாத்திரமே அங்குள்ளன என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரியா தெரிவித்துள்ளார். அரச வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.



ஐ.நாவின் தீர்மானங்களை நிறைவேற்றாத அரசு, தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்குமா? - பொன். செல்வராசா
[Tuesday, 2013-05-21 09:13:15]

யுத்தத்தை மறக்க வேண்டும் என்று அசோகச் சக்கரவர்த்தி கூறியுள்ள வேளையில் அரசாங்கம் போரின் வெற்றியைக் கொண்டாடுகின்றது. ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களை நெறிப்படுத்த முடியாத அரசு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பார்களா என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா கேள்வி எழுப்பினார். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுதத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் 4ஆம் ஆண்டு நிறைவு அஞ்சலியும் ஆத்மசாந்திப் பூசையும் மட்டக்களப்பு நகர தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.



முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனியில் தொடரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் Top News
[Tuesday, 2013-05-21 09:13:12]

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனியில் தொடரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனி பெர்லின் மற்றும் பீலேபெல்ட் நகரங்களில் கவனயீர்ப்பு மற்றும் இன அழிப்பு கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது . யேர்மனியின் தலைநகரத்தில் மக்கள் நடமாடும் நகர மத்தியில் கவனயீர்ப்பு நிகழ்வு பல்லின சமூகத்தினரிடம் செல்லும் வகையில் சிறீலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது முன்னெடுக்கும் இன அழிப்பை வெளிக்காட்டும் முகமாக யேர்மன் மொழியில் தகவல்கள் வாசிக்கப்பட்டு மற்றும் பதாதைகள் தாங்கி துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது .



சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் சீனப் பயணம் பிற்போடப்பட்டுள்ளது!
[Tuesday, 2013-05-21 09:10:25]

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சீனாவிற்கான பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. எதிரவரும் 27ம் திகதியே அவர் சீனாவுக்குப் பயணமாகவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக, சிறிலங்கா அதிபர் நாளை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், இந்தப் பயணம் பிற்போட்படு எதிர்வரும் 27ம் நாள் தொடக்கம் 30ம் நாள் வரை இடம்பெறும் என்று சீன வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. புதிய சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள நெருக்கமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



சிரேஷ்ட அமைச்சரின் பெயரில் பண மோசடி
[Tuesday, 2013-05-21 08:59:31]

சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி இளைஞர் யுவதிகளை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கண்டி நீதிவான் நீதிமன்றத்தினால் 25 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் சரீரப்பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கண்டி வெரல்லகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தான் நிதி மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி நபர் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரது பெயரைக் கூறி அவர் தனக்கு மிகவும் நெருங்கியவர் என போலியான கதைகளைக் கூறியும் அவரூடாக வங்கிகளில் தொழில் பெற்றத் தருவதாகக் கூறியுமே இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பன்வில பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஜுன் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.



வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தர் - திருகோணமலையில் சம்பவம்
[Tuesday, 2013-05-21 08:45:10]

திருகோணமலை லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 12 வயதான விசேட தேவையுடைய சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 33 வயதான நபர் ஒருவர் எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமை பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கைது செய்யப்பட்டவர் லிங்கநகரைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி என தெரியவந்துள்ளது. அவரது மனைவி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகநபர் சிறுமியை பலாத்காரதிற்கு உட்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை யாழ்ப்பாணத்தில் தங்கி வேலை செய்வதாகவும் தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது நான்காம் தரத்தில் கல்வி பயிலும் வாய் பேசமுடியாத சிறுமி தனது ஆசிரியரிடம் இப்பிரச்சினையை தெரிவித்தன் பின்னர் சம்மந்தப்பட்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



மனித உரிமைக்கும் சுதந்திரத்திற்கும் ஸ்ரீலங்காவில் இன்னும் இடமில்லை - மனித உரிமை ஆர்வலர் குழு தெரிவிப்பு!
[Monday, 2013-05-20 22:34:42]

இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்துகொண்டு போவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம், அரச படைகளும் விடுதலைப் புலிகளும் செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்களை விசாரிக்கவோ சட்ட நவடிக்கை எடுக்கவோ அர்த்தமுள்ள நடவடிக்கை ஒன்றையும் இதுவரையில் எடுக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.



மே18 நான்காம் ஆண்டு நினைவேந்தல், மயிலாடுதுறையில் நடைபெற்றது. Top News
[Monday, 2013-05-20 21:10:53]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமுன்தினம் மயிலாடு துறையில் இடம்பெற்றது (18 05 2013). இதில் ஏராளமான தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டதோடு படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலிகளையும் செலுத்தியுள்ளனர்.



நெதர்லாந் நாட்டில் இடம்பெற்ற தமிழினவழிப்பின் 4ம் அண்டு நினைவு நாள். Top News
[Monday, 2013-05-20 20:22:03]

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின் உச்சக்கட்டமே 18. வைகாசி 2009ம் ஆண்டாகும். வைகாசி 18ம் திகதியை உலகெங்கும் வாழ்கின்ற தமிழீழ உறவுகள் ஓர் துயரநாளாகவும் தமிழீழ மண்ணை மீட்டெடுக்க வேண்டுமென உறுதியெடுக்கின்ற நாளாகவும் எழுச்சிப்பூர்வமாக நினைவுகூர்ந்து வருகின்றார்கள்.



லயன் எயார் விமானம் தொடர்பில் கிளம்பியது புதிய சந்தேகம் - சுட்டு வீழ்த்தப்பட்டதா? கடத்தப்பட்டதா என குழப்பம்!
[Monday, 2013-05-20 19:51:45]

இரணைதீவுக் கடலில் 1998ம் ஆண்டில் வீழ்ந்த லயன் எயர் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது கடத்தப்பட்டதா என்ற சந்தேகம், அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இரணைதீவுக் கடலில் இந்த மாதம் 4ம் நாள் தீவிரவாத புலனாய்வுப் பிரிவின் வழிகாட்டலில், லயன் எயர் விமானத்தின் சிதைவுகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டனர். கடலில் 25 அடி ஆழத்தில் இருந்த சுழியோடிகளால் விமானத்தின் இரண்டு இறக்கைகள், மூன்று சக்கரங்கள் உள்ளிட்ட பல பாகங்கள் மீட்கப்பட்டன. இரண்டு நாட்கள் நீடித்த இந்த மீட்புப் பணியின் போது, பெண் ஒருவரின் தேசிய அடையாள அட்டை, செயற்கைப் பல், மற்றும் மனித எலும்புகள் சிலவும் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது.



வேலைநிறுத்த போராட்டத்தின் போது ஏதாவது ஒரு காரியாலயம் மூடப்பட்டால் நான் பதவி துறப்பேன்: பிரதியமைச்சர்
[Monday, 2013-05-20 19:04:39]

மின்சார கட்டண அதிகரிப்பிற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்த போராட்டத்தின் போது ஏதாவது ஒரு காரியாலயம் மூடப்பட்டால் நான் பதவிதுறப்பேன் என்று பிரதியமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். அரசாங்க காரியாலயங்கள் அல்லது எந்தவொரு தனியார் காரியாலயமும் நாளை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டால் நான் பதவிதுறப்பேன். என்று பெருந்தோட்ட கைத்தொழில் பிரதியமைச்சர் ஏர்ல் குணசேகர தெரிவித்துள்ளார். கம்பளை ரத்னாசார விஹாரையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு சவால் விடுத்தார்.



ஆட்கொணர்வு மனுவை மீளப்பெறுமாறு காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு படையினர் அச்சுறுத்தல்!
[Monday, 2013-05-20 19:00:15]

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெறுமாறு மனுதாரர்களுக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் 2009 ம் ஆண்டு மே 18ம் திகதி இராணுவத்தினரின் அறிவித்தலுக்கு அமைய சரணடைந்திருந்தனர். இதன் பின்னர் சரணடைந்தவர்கள் அவர்களது உறவினர்களின் கண்ணெதிரே படையினரால் பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். எனினும் அதன் பின்னர் அவர்களது நிலை என்னவென்று தெரியா நிலையில் அவர்களது உறவினர்கள் உள்ளனர்.



மக்கள் எழுச்சியைக் கண்டு ராஜபக்ஷ ரெஜிமென்ட் பயந்துவிட்டது - ரணில்!
[Monday, 2013-05-20 18:42:18]

ராஜபக்ஷ ரெஜிமென்ட் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்துள்ள நிலையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய தொழிற்சங்க போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தற்போதைக்கு வழங்கப்படத் தேவையில்லை - டக்ளஸ்!
[Monday, 2013-05-20 18:27:33]

தற்போதைக்கு மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் இரண்டு பிரதான இன சமூகங்களுக்கு இடையில் சரியான புரிந்துணர்வு எட்டப்படும் வரையில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்குவது தொடர்பிலான தீர்மானத்தை சற்றே ஒத்தி வைக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். வட மாகாணசபைக்கு காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சிங்கள மக்கள் அது குறித்து கவனம் செலுத்துவர், இந்த அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் தமிழ் மக்கள் அது குறித்து கவனம் செலுத்துவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



மீண்டும் த.தே.ம.மு உறுப்பினர்களை விசாரணைக்கு அழைத்தது குற்றத்தடுப்பு பொலிஸ்!
[Monday, 2013-05-20 18:17:34]

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொதுச் செயலாளர் உட் பட்ட 4பேர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று மீளவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் யாழ்.வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 18ம் திகதி மன்னாரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சமயம் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் இளைஞரணி தலைவர் எஸ்.சத்தியசீலன் உட்பட 15பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் நள்ளிரவு விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் முன்னணியின் உபதலைவர் சி.கஜேந்திரகுமார், மற்றும் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.வசந்தரூபன் ஆகியோர் இன்று காலை 9மணிக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.



இராணுவத்தினால் காணி சுவீகரிப்பு - தடுக்குமாறு நாமல் எம்.பிக்கு கடிதம்!
[Monday, 2013-05-20 18:13:18]

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காணியினை அரசாங்க அதிபர் குழுவினர் சுவீகரிக்க முயற்சிப்பதாகவும் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சிசாலை ஊழியர்கள் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 12 ஏக்கர் காணியில், முதற்கட்டமாக வனவள திணைக்களத்திற்கும், சிறுவர் பூங்காவிற்கும், இராணுவத்தினரின் புனித பூமிக்குமாக எமது காணி சுவீகரிக்கப்பட்டது.


TDE_Computers2011
NIRO-DANCE-100213
Mahesan supramaniyam 031109
Canada Kanthasamy Kovil
RoyaShades-l2011(04-12-11)
INNSYS-20120930
Suresh-remax-2013-01-01
TamilsGuid-191012-2013
Ramans2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com