Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 24, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
கூடங்குளம் கதிரியக்க பாதுகாப்பு - இந்தியாவும் இலங்கையும் உடன்படிக்கையொன்றை செய்துகொள்ள வேண்டும்: - சூழலியலாளர்கள் வலியுறுத்தல்.
[Thursday, 2012-09-27 08:56:01]
News Service

இந்தியாவின் கூடங்குளம் அணுமின் நிலையமானது உயர் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது என இந்தியா வலியுறுத்தியுள்ள அதேவேளை, இந்த அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்த இலங்கையின் கரிசனைகளை இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய, நட்புறவின் அடிப்படையில் இந்தியா ஆராய்கிறது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

  

கதிரியக்க பாதுகாப்பு குறித்து இந்திய அரசாங்கம் அதிகபட்ச கவனம் செலுத்துவதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் (1994), அணுசக்தி விபத்து தொடர்பான உடனடியாக அறிவுறுத்துவது தொடர்பான ஒப்பந்தம் (1986), அணுசக்தி விபத்து அல்லது கதிரியக்க அவசரநிலையில் உதவியளித்தல் தொடர்பான ஒப்பந்தம் ஆகியவற்றில் குறித்துரைக்கப்பட்ட கடப்பாடுகளுக்கு இந்தியா இணங்கி நடப்பதாகவும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அணுசக்தி, அணை பாதுகாப்பு முதலான துறைகளில் ஒத்துழைப்புது தொடர்பாக இந்தியாவும் இலங்கையும் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் தொடரும் எனவும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் கூறியுள்ளது. கதிரியக்க கழிவுகளை கையாளுவதற்கான அனைத்து வளங்களையும், பொருத்தமான அவசரகால பதிலளிப்புத் திட்டங்களையும் இந்தியா கொண்டுள்ளதாகவும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கதிரியக்க பாதுகாப்பு குறித்த தனது உண்மையான அர்ப்பணிப்பை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் என சூழலியலாளரான ஜகத் குணவர்தன மற்றும் ஏனைய சூழலியலாளர்கள் பலர் கோரியுள்ளனர். இந்தியாவானது தமது அர்ப்பணிப்பில் உண்மையாக இருந்தால், அணுசக்தி மற்றும் கதிரியக்க பாதுகாப்பு தொடர்பில் இலங்கையுடன் இந்தியா இரு தரப்பு உடன்படிக்கையொன்றை செய்துகொள்ள வேண்டும்" என மேற்படி சூழலியலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

13 ஆவது திருத்தம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடாத்துமாறு அருண் தம்பிமுத்து ஜனாதிபதியிடம் கோரிக்கை!
[Friday, 2013-05-24 09:03:08]

13 ஆவது திருத்தம் மற்றும் மாகாணசபைகளிடம் இருக்கின்ற நிலம் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தமிழ் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளரும் இலங்கைக்கான தமிழர்கள் அமைப்பை தோற்றுவித்தவருமான அருண் தம்பிமுத்துவே மேற்கண்டவாறு கோரியுள்ளார். மாகாண சபைகள் பற்றி மக்களின் கருத்தை அறிவதற்கே சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவேண்டும் என்று தான் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாகாண சபை தவறிவிட்டது என்றும் அவர் கூறினார்.



தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் இணைந்து கலந்துரையாட தீர்மானம்!
[Friday, 2013-05-24 08:42:59]

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் இணைந்து கலந்துரையாடுவதற்கு நேற்றைய கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும் தமிழர் விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. பம்பலபிட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை காரியாலயத்தில் இந்த கலந்துரையாடல் சுமார் 2 மணி நேரம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.



தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாது - கோத்தபாய
[Friday, 2013-05-24 08:38:19]

தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கு காணி சுவீகரிப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கேள்வி எழுப்பிபியுள்ள நிலையிலே அரசாங்கம் இவ் அறிவித்தலை விடுத்துள்ளது. குறிப்பாக பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை அமைப்பதற்காக 3000 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட உள்ளது. எனினும் நாட்டின் தேசியப் பாதுகாப்பு விவகாரத்தில் எந்தத் தரப்புடனும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் தமிழ் மக்களிடமிருந்து காணிகளை அபகரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் அமைப்பில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



இலங்கையின் உட்கட்டமைப்பு பணிகளுக்கு 580 மில்லியன் டொலர்களை வழங்குகின்றது சீனா!
[Thursday, 2013-05-23 20:51:13]

இலங்கையின் பிரதான உட்கட்டமைப்பு பணிகளுக்கு உதவும் வகையில் சீனா 580 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. கடன் அடிப்படையில் வழங்கப்படும் இந்த நிதியுடன் இலங்கைக்கு சீனா வழங்கும் கடன் தொகை 1.4 பில்லியன் டொலர்களாக உயர்வதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் சீனா, இலங்கைக்கு வழங்கும் இந்த நிதியுதவி இந்திய நலன்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



மே 18 போர்க்குற்ற நாள் ஸ்ரார்ஸ்பூர்க் நகரில் அனுஷ்டிப்பு!Top News
[Thursday, 2013-05-23 20:30:51]

18.05.2013 அன்று, தமிழினவழிப்புக்கு பிரான்சு அரசிடம் அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும, தமிழ்மக்களின் பாதுகாப்பைக் கோரியும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்றிருந்தது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து, சிங்கள பேரினவாத அரசினால் படுகொலைசெய்யப்பட்ட எமது மக்களினதும், மாவீரர்களினதும் குறிக்கோள்கள் நிறைவேறவேண்டி 19.05.2013 அன்று, பல்லினமக்கள் கூடி வேண்டுதல் வணக்க நிகழ்வும் செய்திருந்தனர். மேலும் 22.05.2013 அன்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் அனைத்துலக சுயாதீன விசாரணையை முன்னெடுக்க வலியுறுத்தியும், தமிழீழத்தை ஏற்றுக்கொள்ளக்கோரியும் ஒன்றுகூடல் நடைபெற்றது. ஐரோப்பியப் பாராளுமன்ற பிரதிநிதிகளை ஐரோப்பியத் தமிழர் ஒன்றிய உறுப்பினர்கள் சந்தித்து, பல இலட்சம் மக்களைக் காவு கொண்ட இனப்படுகொலை நடந்தேறி நான்கு ஆண்டுகளாகியும் தமழ்மக்களுக்கான நீதி பெற்றுக்கொடுக்கப்படவில்லை.



மத்திய மாகாணத்தில் முதலமைச்சர் உட்பட 4 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ்!
[Thursday, 2013-05-23 20:05:14]

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட நால்வருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று வியாழக்கிழமை வாபஸ் பெற்றப்பட்டது. இதனையடுத்து அந்த குற்றச்சாட்டுகளிலிருந்து நால்வரும் விடுதலைச்செய்யப்பட்டனர். கண்டியிலுள்ள பாடசாலையில் பிள்ளையொன்றை சேர்க்குமாறு அந்த பாடசாலையின் அதிபர் மீது செல்வாக்கு பிரயோகித்ததாக அவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் குற்றஞ்சாட்டப்பட்டது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டியவிடம் இன்று மனுவொன்றை சமர்ப்பித்தே வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.



சிலாவத்தையில் புதிய நிர்வாகம் - பறிபோனது டக்ளஸின் பதவி!
[Thursday, 2013-05-23 19:43:49]

கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் சிலாவத்தை கிராம அபிவிருத்திச் சங்க உத்தியோகத்தர்கள் தெரிவு நீண்டகால இழுபறியின் பின்னர் நேற்று முன்தினம் முறையாக இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கரைதுறைப் பற்று பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கரைதுறைப்பற்று கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மகளிர் அபிவிருத்திச் சங்கங்களின் சமாசத் தலைவர் ஆகியோர் முன்னிலையில் தெரிவு இடம் பெற்றது. இந்தத் தெரிவின்போது சிலாவத்தை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவராக இருந்து புதிய நிர்வாகத் தெரிவுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தார் என மக்கள் குற்றஞ்சாட்டிய திருச்செல்வம் டக்ளஸ் பங்குபற்றவில்லை.



கட்சிக்கு நிதி கிடைக்கப் பெறும் வழிகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!
[Thursday, 2013-05-23 19:38:44]

கட்சி நிதி தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். எந்த வழிகளில் கட்சிக்கு நிதி கிடைக்கப் பெறுகின்றது என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் நோக்கில் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தற்போது கட்சி நிதி மூலங்கள் பற்றி கேள்வி எழுப்பப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கட்சி உறுப்பினர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்ட போதிலும், நாளாந்த அடிப்படையில் காவல் நிலையத்திற்கு ஆஜராகுமாறு அழைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.



தற்போதைய ஆட்சிக்கு எதிராக நாம் அனைவரும் துணிந்து ஒன்று திரண்டுள்ளோம் - அநுர குமார
[Thursday, 2013-05-23 19:27:52]

தற்போதைய ஆட்சிக்கு எதிராக நாம் அனைவரும் இன்று வீதி ஆர்ப்பாட்டத்திற்கு துணிந்து ஒன்று திரண்டு இறங்கியுள்ளோம் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜே.வி.பி.யினால் மின் கட்டண உயர்வை இரத்துச் செய்யுமாறு அரசை வலியுறுத்தி இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கசங்கம்(பிரான்ஸ்) ஏற்பாட்டில் இலவச பாட வகுப்புக்கள் ஆரம்ப நிகழ்வு!Top News
[Thursday, 2013-05-23 19:09:07]

இன்று(புதன் கிழமை) மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியும் எல்லைப்புற பகுதியுமான 40 வட்டை விபுலானந்தா வித்தியாலயத்தில் இலவச பாடவகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான நிகழ்வுகள் பி.பகல் 2 மணியளவில் பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கத்தின் ஆலோசகர் திரு.பி.தயாபரன் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.க.பாஸ்கரன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.அத்தோடு, மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் (நிர்வாகம்) திரு.ஞா.சிறிநேசன் , பட்டிப்பளை பிரதேச கோட்டக்கல்வி அதிகாரி திரு.ந.தயாசீலன், 40 வட்டை விபுலான்ந்தா வித்தியால அதிபர் மற்றும் மாவடிமுன்மாரி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் பிரதிஅதிபர் ஆகியோர். அதிதிகளாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.



"ராஜபக்ஷ எந்தநாளும் விளையாடாதே" - மின் கட்டண உயர்வை கண்டித்து ஜே.வி.பி. நடாத்திய ஆர்ப்பாட்டம்!
[Thursday, 2013-05-23 18:58:50]

அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தினை இரத்துச் செய்யுமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி ஜே.வி.பி.யினால் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இவ் ஆர்ப்பாட்டப் பேரணி பொரளையிலிருந்து ஆரம்பமாகி மருதானையூடாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை இடம்பெற்றது. இதில் ஜே.வி.பி.யின் முக்கியஸ்தர்களான ரில்வின் சில்வா, விஜித ஹேரத், கே.டி.லால்காந்த, சுனில் ஹந்துன்நெத்தி, இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். "ராஜபக்ஷ எந்தநாளும் விளையாடாதே", "மக்கள் மீது சுமையை ஏற்றுவதை நிறுத்து", "உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை இரத்துச் செய்", "அமைச்சர்களின் மின் கட்டணம் அப்பாவி மக்களின் தலையில்" போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இலங்கை சர்வதேசத்தின் முன்னால் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றது - மங்கள சமரவீர!
[Thursday, 2013-05-23 18:29:22]

ராஜபக்ஷ அரசாங்கம், நாட்டை சர்வாதிகார ஆட்சியை நோக்கி கொண்டு சென்றுக்கொண்டிருப்பதாகவும் சர்வதேச சட்டங்கள் மற்றும் சர்வதேசத்திற்கு மத்தியில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாததால், சர்வதேச முன்னால், இலங்கை அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். குடும்ப நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக நாட்டில் இருந்த ஜனநாயக நிறுவனங்கள் அனைத்தையும், ராஜபக்ஷ அரசாங்கம், வலுவிழக்க செய்துள்ளது. இதன் காரணமாக நாட்டு மக்களின் உரிமைகளில் பல இல்லாமல் போயுள்ளன எனவும் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதியை சந்திக்க சென்ற 3 பாடசாலை மாணவிகள் பொலிஸாரால் கைது!
[Thursday, 2013-05-23 18:27:53]

ஜனாதிபதியை சந்திக்கும் நோக்கில் பெற்றோரிடம் தெரிவிக்காமல் கொழும்பு நோக்கிப் பயணம் செய்த 2 பாடசாலை மாணவிகள் குருநாகல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



வடக்கு தேர்தலுக்கு அஞ்சும் நீங்கள், தமிழர்களின் அச்சம் பற்றி சிந்தித்ததுண்டா? இனவாதிகளிடம் மனோ கேள்வி!
[Thursday, 2013-05-23 18:22:13]

வடக்கு மாகாண சபை கூட்டமைப்பின் கரங்களுக்கு போவது தொடர்பில் சிங்கள மக்களுக்கு அச்சம் உள்ளது என்று திரும்பத் திரும்பக் கூறுகின்றீர்கள். ஆனால் தமிழர்களின் அச்சம் பற்றி என்றாவது சிந்தித்துப் பார்த்தீர்களா? நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அதிகாரத்தையும், பலமிக்க நாடாளுமன்றத்தையும், முப்படைகளையும் வைத்திருக்கும் உங்களுக்கு அச்சம் இருந்தால் இன்று தமிழர்களுக்கு, தமது எதிர்காலம் தொடர்பில் எந்தளவு அச்சம் இருக்கும் என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கின்றீர்கள்? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன். கொழும்பில் நேற்று இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:



31 புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!
[Thursday, 2013-05-23 18:01:03]

புகலிடம் கோரி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் இன்று (23ம் திகதி) நாடு திரும்புகின்றனர். 31 இலங்கையர்கள் இவ்வாறு நாடு திரும்புவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தீவில் இருந்து இவர்கள் இலங்கை - கொழும்புக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி கடந்த வருடம் ஒகஸ்ட் தொடக்கம் இதுவரை 1161 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்பட்டதாகவும் அவர்களில் 950 பேர் சுய விருப்பின் பேரில் அனுப்பப்பட்டதாகவும் பிரன்டன் ஒ கொன்னர் தெரிவித்துள்ளார்.



நேற்று சிவசக்தி ஆனந்தனுக்கு நாளை எனக்கா? - நான்காம் மாடி விசாரணை குறித்து சம்பந்தன் சபையில் கேள்வி!
[Thursday, 2013-05-23 17:26:47]

"சிவசக்தி ஆனந்தனை நேற்று விசாரணை செய்தீர்கள். நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்வீர்களா? ஏன் நீங்கள் இப்படி தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றீர்கள்? தமிழர்களும், அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனிதர்களே தானே" இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இன்று வியாழக்கிழமை சிறிலங்கா அமைச்சர்கள் முன்னிலையில் கேள்வி எழுப்பினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்றுப் புதன்கிழமை நான்காம் மாடியில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரினால் இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.



7 வயதுச் சிறுமி மீது பாலியல் பலாத்காரம் - இராணுவ வீரர் கைது!
[Thursday, 2013-05-23 17:26:35]

வவுனியா நெடுங்கேணி பகுதியில் 7 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் இராணுவ வீரர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 14.05.2013 அன்று வவுனியா நெடுங்கேணி சேனைப்புலவு என்ற கிராமத்தில் ஏழுவயதான பள்ளிச் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார். இச்சம்பவமானது அப்பிரதேசத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் தாமதித்தமையால், கடந்த திங்கட்கிழமை பிரதேச மக்களால் குறித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.



ஜனாதிபதி அறிவித்தவாறு எதிர்வரும் செப்டம்பரில் வடமாகாண சபைத் தேர்தல்!
[Thursday, 2013-05-23 17:13:02]

இலங்கையின் வடமாகாண சபைக்கான தேர்தல் ஜனாதிபதி அறிவித்துள்ளபடி எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அரசு தெரிவித்துள்ளது. அந்தத் தேர்தலை ஒத்திப் போடும் எண்ணம் அரசுக்கு கிடையாது என்று வாராந்திர அமைச்சரவை முடிவுகள் குறித்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அதன் பேச்சாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அதே போல மாகாண சபைகளை உருவாக்கி அதற்கு காணி மற்றும் போலிஸ் அதிகாரங்களை வழங்கிய அரசியல் அமைப்பின் 13 ஆவது சட்டத் திருத்ததில் மாறுதலையும் கொண்டுவரவோ அல்லது அதை ரத்து செய்யவோ அரசாங்கத்துக்கு எந்த எண்ணமும் இல்லை என்றும் அமைச்சர் யாப்பா இந்தக் கூட்டத்தில் அறிவித்தார்.



விடுதலைப்புலிகளின் தலைவரை கோழை என தெரிவித்த அமைச்சர் நாராயண சாமிக்கு எதிராக முறைப்பாடு!
[Thursday, 2013-05-23 16:55:38]

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக அமைச்சர் வி.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கைபற்றி முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையானது தமிழ்பேசும் இந்தியர்களுக்கும் தமிழர் அல்லாதோருக்கும் இடையில் பகைமையை தோற்றுவித்தது என, நியாயதுரந்திரர் சி.ரமேஷ் தெற்குவலய பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்றை தொடுத்துள்ளார். கடந்த 20ம் திகதி அமைச்சர் நாராயணசாமி விடுத்த அறிக்கையில்,



'இந்திய அரசின் வீட்டுத் திட்டமா? இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா?' மட்டக்களப்பில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தவர்கள் கைது!
[Thursday, 2013-05-23 11:38:36]

மட்டக்களப்பு மாவட்டத்தின் உறுகாமம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வின்போது துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததாகக் கூறப்படும் இருவரை கரடியனாறு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் உறுகாமம் பிரதேசத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததாகக் கூறப்படும் இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இவர்களிடமிருந்து மேற்படி துண்டுப்பிரசுரங்களை கைப்பற்றியுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


RoyaShades-l2011(04-12-11)
NIRO-DANCE-100213
TamilsGuid-191012-2013
Canada Kanthasamy Kovil
AJRwindows22.05.13
Mahesan supramaniyam 031109
Ramans2011
Suresh-remax-2013-01-01
TDE_Computers2011
INNSYS-20120930
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com