Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 24, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
கனனேடியத் தமிழர் உதயகரனுக்கு பொறியியல் துறையில் சிறப்பு விருது வழங்கிக் கொளரவம்:
[Thursday, 2012-09-27 12:31:04]
News Service

றயர்சன் பல்கலைக்கழக விரிவுரையாளரும் பொறியியலாளரும் விஞ்ஞானியுமான கவிஞருமான உதயகரன் துரைராஐாவிறகு அர்ப்பணிப்பிற்கும் மிதமிஞ்சிய கொடைக்குமான பாராட்டு விருது (Dedication and Outstanding Contribution Appreciation Award) ஒன்று புளோறிடாவில் நடந்த சர்வதேச நகராட்சி சம்மந்தமான சமிக்கைச் சங்கத்தின் (International Municipal Signal Association - IMSA) 117வது ஆண்டு மாநாட்டில் வைத்து வழங்கிக் கொளரவிக்கப்பட்டது.

  

புளோறிடாவில் உள்ள ஓம்னி றிசோட்டில் (Omni Resort, Orlando, FL) நடைபெற்ற மேற்படி மாநாட்டில் உலகின் பல பாகங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகப்பழமையான இச் சங்கத்தில் மின்விளக்கை முதலில் கண்டுபித்தவரும் மேலும் பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்த தொமச் அல்வா எடிசனும் (Thomas Alva Edition) அவருடைய நிறுவனமும் 1901 ஆம் ஆண்டில் இச் சங்கத்தில் அங்கத்தவம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி சங்கத்தின் அழைப்பை ஏற்று புளோறிடா சென்ற உதயகரன் திடநிலை வெளிச்சம் (Solid State Lighting Light Emitting Diode (LED) Future Lighting will never be the same) சம்மந்தமான குழு விவாதத்தை (Panel Discussion) ஆரம்பித்து வைத்ததோடு அதில் கலந்துகொண்டு பலரது பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து இரண்டு ஆராட்சி விரிவுரைகளையும் (Seminars) நிகழ்த்திவிட்டு கனடா திரும்பியுள்ளார். உதயகரனுக்கு சிறந்த பொறியியல் சேவைக்கான ரொரன்றோ நகரபிதா விருதும் அண்மையில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

தனது முதலாவது ஆராட்சி விரிவுரையில் தேக ஆரோக்கித்தில் வீதி ஒளியின் பங்கு என்ற தலைப்பில் (The Role of Roadway Lighting in Health) தனக்கே உரிய பாங்கில் உலகின் நடைமுறையில் உள்ள வழிமுறைகளை விளக்கி அதில் உள்ள சாதக பாதகங்களை விளக்கியதோடு புதிய வழிமுறைகளையும் கண்டுபிடிப்புகளையும் விளக்கினார். அதைத் தொடர்ந்து தனது இரண்டாவது ஆராட்சி விரிவுரையில் அதிசிறந்த வீதி வெளிச்சத் திட்டம் என்ற தலைப்பில் (Holistic Roadway Lighting Design) தனது ஆய்வின் முடிவையும் நடைமுறைச் சாத்திய பிரயோகத்தையும் விளக்கினார்.

அவருடைய கண்டுபிடிப்பான அறிவுடைநிலை விளக்கு (An Awareness Luminaire) ஜேர்மனி மற்றும் சுவீடனில் காட்சிக்காக வைக்கப்பட்தோடு சுவீடன் பல்கலைக்கழக (The Royal Institute of Technology, Sweden) தபால் மட்டையிலும் இடம்பிடித்துக் கொண்டது. அவருடைய ஆய்வுக் கட்டுரை (A Systematic Method to Deal With Light Pollution and Safety in Lighting Design) றயர்சன் பல்கலைக்கழகத்தினால் ரோரன்றோ சு10ழல் மாசுபடல் சங்கத்திடம் (The City of Toronto Light Pollution Committee) கையளிக்கப்பட்டது. அவருடைய மற்றோரு ஆய்வுக் கட்டுரை (Light and Health Integrate Science into the Noctonal Lighting Design) சுவீடன் பல்கலைக்கழகத்தினால் ஐரோப்பிய விஞ்ஞானக் குழுவிடம் (The Scientific Committee on Emerging and Newly identified Health Risk (SCENIHR) of the European Commission) கையளிக்கப்பட்டது. இதன் ஒருபகுதி ஆய்வுக் கட்டுரை (The Illumination Engineering Society of North America) மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

மின்பொறியியல் மற்றும் ஒளியியலில் முதுமானி கலாநிதி பட்டங்களை பெற்ற உதயகரன் துரைராஐh ரொரொன்ரொ றயர்சன் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகும். கனடாவின் முன்னணி பொறியியல் ஆலோசனை வழங்கும் நிறுவனத்தில் (MMM Group Limited) பங்காளியாக இருப்பதோடு முதிர்ந்த மின் பொறியியல் மற்றும் ஒளியியல் வல்லுனராக இருக்கும் உதயகரன் துரைராஐா பல நூல்களையும் ஒளிப்பதிவு தட்டுக்களையும் தமிழில் தந்துள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை கீதங்களில் தமிழர் கீதம். விண்ணைத் தொடுவோம். மாமனிதம் போன்ற நூல்களும் திருவாசகத் தேன் என்ற ஒளித்தட்டுமாகும். அவரை தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் 647-988-6171 என்ன தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

(ரொரொன்ரொவிலிருந்து ஆர். என்.லோகேந்திரலிங்கம்)

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இலங்கை போர்க்குற்றவாளிகள் சுதந்திர பறவைகளாக உலாவுகிறார்கள்: சர்வதேச மன்னிப்புச் சபை
[Friday, 2013-05-24 10:05:51]

இலங்கையில் போர் முடிவடைந்தாலும் போர்க்குற்ற முறையீடுகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் சுதந்திரப் பறவைகளாக உலாவுகிறார்கள் என லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச மன்னிப்புச் சபை அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கட்டாயத்தின் பேரில் காணாமற்போகச் செய்யப்பட்ட இருபதுக்கு மேற்பட்டோர் குறித்து இலங்கையில் கடந்தஆண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமற் போகச் செய்யப்பட்டோரில் அரசியல்வாதிகள், வர்த்தகப் பிரமுகர்கள், சந்தேகத்துக்குரிய குற்றவாளிகள் ஆகியோர் அடங்குவர் என்றும் மேற்படி சபை அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையால் நேற்று வியாழக்கிழமை விடுக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை இலங்கையை கடுமையாக விமர்சிக்கிறது.



கொழும்பு துறைமுகத்தில் பாரிய தீ விபத்து
[Friday, 2013-05-24 09:58:24]

கொழும்பு துறைமுகத்தின் (CFS 1) களஞ்சியசாலையில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பாரிய சேதசங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது பொலிஸாரும், தீயணைப்புப் படையினரும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதேவேளை இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



அதிகாரப்பகிர்விற்கு ஆதரவளித்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் - லக்ஸ்மன் கிரியல்ல
[Friday, 2013-05-24 09:48:33]

அதிகாரப் பகிர்விற்கு ஆதரவளித்திருந்தால் யுத்தத்தை தடுத்திருக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். 2001ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டமொன்றை முன்வைத்ததாககத் தெரிவித்துள்ளார். தற்போது அதிகாரப் பகிர்வு குறித்து பேசும் தரப்பினர் அதனை எதிர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டத்திற்கு ஆதரவளிக்கப்பட்டிருந்தால் யுத்தத்தினால் உயிரிழந்த பெரும் எண்ணிக்கையிலான உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.



மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கினால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் - கோதபாய
[Friday, 2013-05-24 09:39:48]

மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கக் கூடாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கப்படுவதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு அதிகாரங்களை வழங்குவதனால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென தெரிவித்துள்ளார். அரசாங்க அதிகாரி என்ற ரீதியில் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவது தமது கடமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதனை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் பாரிய பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.



நாட்டில் மத முரண்பாடுகள் கிடையாது, அவ்வாறு முரண்பாடுகள் ஏற்பட பௌத்தர்கள் இடமளிக்க மாட்டார்கள் - ஜனாதிபதி
[Friday, 2013-05-24 09:29:08]

இலங்கை பௌத்தர்கள் கடும்போக்காளர்கள் அல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க சில அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. பௌத்தர்கள் ஏனைய மதத்தவரை துன்புறுத்துவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. ஏனைய மத வழிபாட்டுத் தலங்களை அமைத்துக் கொள்ள பௌத்த விஹாரைகளுக்கு சொந்தமான காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பௌத்தர்கள் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த எவ்வளவு முயற்சி எடுத்து வருகின்றனர் என்பது வெளிப்படையாகும். நாட்டில் மத முரண்பாடுகள் கிடையாது, அவ்வாறு முரண்பாடுகள் ஏற்பட பௌத்தர்கள் இடமளிக்க மாட்டார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



யாழில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 இந்திய மீனவர்கள் விடுதலை!
[Friday, 2013-05-24 09:23:25]

யாழ்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 26 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலையான மீனவர்கள் இந்திய எல்லைப் பகுதிக்கு சென்றடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் காலை 8 மணியளவில் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 5ம் திகதி இலங்கை எல்லைப்பகுதிக்குள் சென்று மீன் பிடித்து கொண்டிருந்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.



மன்னாரில் தமிழர்களை வெளியேற்றி 600 சிங்கள குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை!
[Friday, 2013-05-24 09:12:46]

மன்னார், எமிழ் நகர் பகுதியில் அத்துமீறி குடியமர்ந்துள்ள காணிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு மன்னார் பிரதேசச் செயலாளர் டி.தயானந்தா உரிய தரப்பினரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். மன்னார், எமிழ் நகர் கிராம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட பகுதியில் உள்ள அரச காணியில் அத்துமீறி குடியேறி தற்போது குறித்த காணிகளில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமிழ் நகர் கிராம சேவையாளரினால் கடந்த மாதம் 17 ஆம் திகதி மன்னார் பிரதேசச் செயலாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த பகுதியில் அரச காணிகளில் குடியிருக்கும் மக்கள் அமைத்துள்ள தற்காலிக குடிசைகள் மற்றும் சுற்று வேலிகளை பிரித்து காணியை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



13 ஆவது திருத்தம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடாத்துமாறு அருண் தம்பிமுத்து ஜனாதிபதியிடம் கோரிக்கை!
[Friday, 2013-05-24 09:03:08]

13 ஆவது திருத்தம் மற்றும் மாகாணசபைகளிடம் இருக்கின்ற நிலம் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தமிழ் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளரும் இலங்கைக்கான தமிழர்கள் அமைப்பை தோற்றுவித்தவருமான அருண் தம்பிமுத்துவே மேற்கண்டவாறு கோரியுள்ளார். மாகாண சபைகள் பற்றி மக்களின் கருத்தை அறிவதற்கே சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவேண்டும் என்று தான் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாகாண சபை தவறிவிட்டது என்றும் அவர் கூறினார்.



தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் இணைந்து கலந்துரையாட தீர்மானம்!
[Friday, 2013-05-24 08:42:59]

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் இணைந்து கலந்துரையாடுவதற்கு நேற்றைய கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும் தமிழர் விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. பம்பலபிட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை காரியாலயத்தில் இந்த கலந்துரையாடல் சுமார் 2 மணி நேரம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.



தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாது - கோத்தபாய
[Friday, 2013-05-24 08:38:19]

தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கு காணி சுவீகரிப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கேள்வி எழுப்பிபியுள்ள நிலையிலே அரசாங்கம் இவ் அறிவித்தலை விடுத்துள்ளது. குறிப்பாக பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை அமைப்பதற்காக 3000 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட உள்ளது. எனினும் நாட்டின் தேசியப் பாதுகாப்பு விவகாரத்தில் எந்தத் தரப்புடனும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் தமிழ் மக்களிடமிருந்து காணிகளை அபகரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் அமைப்பில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



இலங்கையின் உட்கட்டமைப்பு பணிகளுக்கு 580 மில்லியன் டொலர்களை வழங்குகின்றது சீனா!
[Thursday, 2013-05-23 20:51:13]

இலங்கையின் பிரதான உட்கட்டமைப்பு பணிகளுக்கு உதவும் வகையில் சீனா 580 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. கடன் அடிப்படையில் வழங்கப்படும் இந்த நிதியுடன் இலங்கைக்கு சீனா வழங்கும் கடன் தொகை 1.4 பில்லியன் டொலர்களாக உயர்வதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் சீனா, இலங்கைக்கு வழங்கும் இந்த நிதியுதவி இந்திய நலன்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



மத்திய மாகாணத்தில் முதலமைச்சர் உட்பட 4 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ்!
[Thursday, 2013-05-23 20:05:14]

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட நால்வருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று வியாழக்கிழமை வாபஸ் பெற்றப்பட்டது. இதனையடுத்து அந்த குற்றச்சாட்டுகளிலிருந்து நால்வரும் விடுதலைச்செய்யப்பட்டனர். கண்டியிலுள்ள பாடசாலையில் பிள்ளையொன்றை சேர்க்குமாறு அந்த பாடசாலையின் அதிபர் மீது செல்வாக்கு பிரயோகித்ததாக அவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் குற்றஞ்சாட்டப்பட்டது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டியவிடம் இன்று மனுவொன்றை சமர்ப்பித்தே வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.



சிலாவத்தையில் புதிய நிர்வாகம் - பறிபோனது டக்ளஸின் பதவி!
[Thursday, 2013-05-23 19:43:49]

கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் சிலாவத்தை கிராம அபிவிருத்திச் சங்க உத்தியோகத்தர்கள் தெரிவு நீண்டகால இழுபறியின் பின்னர் நேற்று முன்தினம் முறையாக இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கரைதுறைப் பற்று பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கரைதுறைப்பற்று கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மகளிர் அபிவிருத்திச் சங்கங்களின் சமாசத் தலைவர் ஆகியோர் முன்னிலையில் தெரிவு இடம் பெற்றது. இந்தத் தெரிவின்போது சிலாவத்தை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவராக இருந்து புதிய நிர்வாகத் தெரிவுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தார் என மக்கள் குற்றஞ்சாட்டிய திருச்செல்வம் டக்ளஸ் பங்குபற்றவில்லை.



கட்சிக்கு நிதி கிடைக்கப் பெறும் வழிகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!
[Thursday, 2013-05-23 19:38:44]

கட்சி நிதி தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். எந்த வழிகளில் கட்சிக்கு நிதி கிடைக்கப் பெறுகின்றது என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் நோக்கில் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தற்போது கட்சி நிதி மூலங்கள் பற்றி கேள்வி எழுப்பப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கட்சி உறுப்பினர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்ட போதிலும், நாளாந்த அடிப்படையில் காவல் நிலையத்திற்கு ஆஜராகுமாறு அழைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.



தற்போதைய ஆட்சிக்கு எதிராக நாம் அனைவரும் துணிந்து ஒன்று திரண்டுள்ளோம் - அநுர குமார
[Thursday, 2013-05-23 19:27:52]

தற்போதைய ஆட்சிக்கு எதிராக நாம் அனைவரும் இன்று வீதி ஆர்ப்பாட்டத்திற்கு துணிந்து ஒன்று திரண்டு இறங்கியுள்ளோம் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜே.வி.பி.யினால் மின் கட்டண உயர்வை இரத்துச் செய்யுமாறு அரசை வலியுறுத்தி இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



"ராஜபக்ஷ எந்தநாளும் விளையாடாதே" - மின் கட்டண உயர்வை கண்டித்து ஜே.வி.பி. நடாத்திய ஆர்ப்பாட்டம்!
[Thursday, 2013-05-23 18:58:50]

அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தினை இரத்துச் செய்யுமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி ஜே.வி.பி.யினால் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இவ் ஆர்ப்பாட்டப் பேரணி பொரளையிலிருந்து ஆரம்பமாகி மருதானையூடாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை இடம்பெற்றது. இதில் ஜே.வி.பி.யின் முக்கியஸ்தர்களான ரில்வின் சில்வா, விஜித ஹேரத், கே.டி.லால்காந்த, சுனில் ஹந்துன்நெத்தி, இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். "ராஜபக்ஷ எந்தநாளும் விளையாடாதே", "மக்கள் மீது சுமையை ஏற்றுவதை நிறுத்து", "உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை இரத்துச் செய்", "அமைச்சர்களின் மின் கட்டணம் அப்பாவி மக்களின் தலையில்" போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இலங்கை சர்வதேசத்தின் முன்னால் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றது - மங்கள சமரவீர!
[Thursday, 2013-05-23 18:29:22]

ராஜபக்ஷ அரசாங்கம், நாட்டை சர்வாதிகார ஆட்சியை நோக்கி கொண்டு சென்றுக்கொண்டிருப்பதாகவும் சர்வதேச சட்டங்கள் மற்றும் சர்வதேசத்திற்கு மத்தியில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாததால், சர்வதேச முன்னால், இலங்கை அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். குடும்ப நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக நாட்டில் இருந்த ஜனநாயக நிறுவனங்கள் அனைத்தையும், ராஜபக்ஷ அரசாங்கம், வலுவிழக்க செய்துள்ளது. இதன் காரணமாக நாட்டு மக்களின் உரிமைகளில் பல இல்லாமல் போயுள்ளன எனவும் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதியை சந்திக்க சென்ற 3 பாடசாலை மாணவிகள் பொலிஸாரால் கைது!
[Thursday, 2013-05-23 18:27:53]

ஜனாதிபதியை சந்திக்கும் நோக்கில் பெற்றோரிடம் தெரிவிக்காமல் கொழும்பு நோக்கிப் பயணம் செய்த 2 பாடசாலை மாணவிகள் குருநாகல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



வடக்கு தேர்தலுக்கு அஞ்சும் நீங்கள், தமிழர்களின் அச்சம் பற்றி சிந்தித்ததுண்டா? இனவாதிகளிடம் மனோ கேள்வி!
[Thursday, 2013-05-23 18:22:13]

வடக்கு மாகாண சபை கூட்டமைப்பின் கரங்களுக்கு போவது தொடர்பில் சிங்கள மக்களுக்கு அச்சம் உள்ளது என்று திரும்பத் திரும்பக் கூறுகின்றீர்கள். ஆனால் தமிழர்களின் அச்சம் பற்றி என்றாவது சிந்தித்துப் பார்த்தீர்களா? நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அதிகாரத்தையும், பலமிக்க நாடாளுமன்றத்தையும், முப்படைகளையும் வைத்திருக்கும் உங்களுக்கு அச்சம் இருந்தால் இன்று தமிழர்களுக்கு, தமது எதிர்காலம் தொடர்பில் எந்தளவு அச்சம் இருக்கும் என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கின்றீர்கள்? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன். கொழும்பில் நேற்று இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:



31 புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!
[Thursday, 2013-05-23 18:01:03]

புகலிடம் கோரி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் இன்று (23ம் திகதி) நாடு திரும்புகின்றனர். 31 இலங்கையர்கள் இவ்வாறு நாடு திரும்புவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தீவில் இருந்து இவர்கள் இலங்கை - கொழும்புக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி கடந்த வருடம் ஒகஸ்ட் தொடக்கம் இதுவரை 1161 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்பட்டதாகவும் அவர்களில் 950 பேர் சுய விருப்பின் பேரில் அனுப்பப்பட்டதாகவும் பிரன்டன் ஒ கொன்னர் தெரிவித்துள்ளார்.


AJRwindows22.05.13
TDE_Computers2011
NIRO-DANCE-100213
INNSYS-20120930
Canada Kanthasamy Kovil
Ramans2011
Mahesan supramaniyam 031109
Suresh-remax-2013-01-01
RoyaShades-l2011(04-12-11)
TamilsGuid-191012-2013
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com