Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 25, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால், நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும்: ரணில் எச்சரிக்கை!
[Wednesday, 2012-10-03 09:02:52]
News Service

எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் உழைக்கும் வர்க்கத்தினருக்கு ரூபா 10,000 சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நாடு தழுவிய தொழிற்சங்கப் போராட்டம் வெடிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்தார். இலங்கை மக்கள் அனைவரும் இன்று கடன் வாங்கி வாழ்க்கையை நடத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  

கொழும்பில் டீ. எஸ். பொன்சேகா மாவத்தையில் புதிய எதிர்க்கட்சித் தலைவர் வாசஸ்தலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார். இங்கு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் உரையாற்றுகையில், நாட்டில் அரச ஊழியர்கள், தனியார் துறை மற்றும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் என அனைவரும் வாழ்வதற்கு ஏற்ற சம்பளம் கிடைக்காமையால் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்கின்றனர்.

தற்போது கிடைக்கும் சம்பளம் வாழ்க்கையை நடத்துவதற்கு போதுமானதாக இல்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது. மின் கட்டணம், நீர் கட்டணம் அதிகரித்துள்ளன. ஆனால் சம்பளம் மட்டும் அதிகரிக்கவில்லை. மக்களின் பிரச்சினைகள் ஜனாதிபதிக்கோ, அமைச்சரவை அமைச்சர்களுக்கோ தெரியாது. அவர்கள் மக்கள் பணத்தில் சொகுசான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.

மக்களுக்கு வாழ்வதற்கான சம்பளம் கிடைப்பதில்லை. தற்போது கிடைக்கும் சம்பளம் அவர்களின் உயிர்களை பறிக்கும் சம்பளமாகும். விமானங்களுக்காக இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் தரக் குறைவானதெனக் கூறி அதனை மண்ணெண்ணையாக மாற்றி விற்பனை செய்தனர். ஹெஜின் உடன்படிக்கையால் பல கோடி ரூபாக்கள் நாட்டுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் மக்களே பலிக்கடாவாகியுள்ளனர்.

வீதிகள் செப்பனிடுவதற்காக 500 மில்லியன் டொலர் கடனாக பெறப்படுகிறது. இதில் 400 மில்லியன் அரசாங்க தரப்பு அரசியல்வாதியின் ""பொக்கெட்டை'' போய் சேருகிறது. 100 மில்லியன் டொலர்கள் மட்டுமே பாதை அபிவிருத்திப் பணிக்கு செலவு செய்யப்படுகிறது. மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மிக மோசமாக பாதித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு அரசாங்கம் இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவைக்கான நிதி உட்பட நலன்புரிகளுக்கான நிதிகளை குறைத்துள்ளது. மக்கள் இன்று வாழ்வதற்கு போராட்டம் நடத்துகின்றனர். அனைவரும் இன்று கடன் வாங்கி வாழ்க்கை நடத்தும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடன் வாங்காதவர்கள் எவரும் இன்று நாட்டில் இல்லை. அந்தளவுக்கு மக்கள் துன்பத்தில் வாழ்கின்றனர். திருடர்களை பாதுகாக்கும் அரசாங்கம், உழைக்கும் வர்க்கத்தை பாதுகாப்பதில்லை. எனவே, தற்போது எமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பினரதும் சம்பளம் ரூபா 10,000 அதிகரிக்கப்பட வேண்டும். அதனை செய்தால் அரசுக்கு நன்றி செலுத்துவதோடு நலம் வேண்டி போதி பூஜையும் நடத்தத் தயாராகவுள்ளோம். அதனை செய்யாவிட்டால் ஐ. தே. க.வுடன் தொழிற்சங்கங்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராடவும் தயாராகவுள்ளோம்.

சம்பள உயர்வை வலியுறுத்தும் அதேவேளை ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியத்தை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு வழங்கா விட்டால் நாடு தழுவிய தொழிற்சங்கப் போராட்டங்கள் வெடிக்கும். இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்க முன்வர வேண்டும் என்றார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் எம்.பி.க்களான ஜோசப் மைக்கல் பெரேரா, டாக்டர் ஜயலத் ஜயவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர். ஐ. தே. கட்சியின் இணைத் தொழிற் சங்கங்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னரே இவ் ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

சார்க் நாடுகளின் திரைப்பட விழா இ்ம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பம்..
[Saturday, 2013-05-25 18:49:27]

இலங்கையிலுள்ள தெற்காசிய நாடுகளின் கலாசார மத்திய நிலையம் ஏற்பாடு செய்துள்ள சார்க் நாடுகளின் திரைப்பட விழா இம்மாதம் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தில் நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தான் தவிர்ந்த ஏனைய நாடுகள் இந்த திரைப்பட விழாவுக்காக சினிமா திரைப்படங்களையும் விவரணத்திரைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விழாவின் போது தெரிவு செய்யப்படும் சிறந்த திரைப்படங்கள் விவரணப்படங்கள் மற்றும் சிறந்த நடிகர் நடிகைகளுக்கு விருதுகளும் வழங்கப்படவுள்ளன. கடந்த ஆண்டில் இலங்கை திரைப்படம் ஒன்றே மேற்படி விழாவின் போது சிறந்த திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டது.



வராலற்று சிறப்பினைச் பதிவு செய்த தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு !Top News
[Saturday, 2013-05-25 17:43:54]

ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெரும் வராலற்று சிறப்பினைச் பதிவதாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் அதனையொட்டிய இடம்பெற்றிருந்த மாநாடும் அமைந்திருந்ததென மாநாட்டின் செயற்குழு தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டு செயற்குழுத் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : அடிமை ஒழிப்புக்குக் குரல் கொடுத்த பெருமகன் திரு. 'தாடுஸ் ஸ்டீவன்சன்' அவர்களின் பிறப்பிடமாகிய அமெரிக்காவின் பென்சில்வேனிய மாநிலத்தின் லாங்காஸ்டர் நகரில் தமிழீழசுதந்திர சாசனம் மே-18மம் நாள் சனிக்கிழமை (18-05-2013) உணர்வெழுச்சியுடன் முரசறையப்பட்டது.



கைதிகளுக்கு இம்முறை பொதுமன்னிப்பு இல்லை - சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர்!
[Saturday, 2013-05-25 17:39:43]

இம்முறை வெசாக் பண்டிகையின் போது சிறைக் கைதிகள் எவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லையென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே தெரிவித்துள்ளார். சிறு குற்றங்களை புரிந்து தற்போது சிறையில் உள்ள குற்றவாளிகள் சிலரின் பெயரை நீதி அமைச்சுக்கு பரிந்துரை செய்தபோதிலும் அதற்கான அனுமதி தமக்கு கிடைக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



கொழும்பு துறைமுக தீ விபத்து தொடர்பில் 13 பேரிடம் வாக்கு மூலம்!
[Saturday, 2013-05-25 17:31:37]

கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் இதுவரையிலும் 13 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகளும் இன்று இடம்பெற்றன. கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் நேற்று 24 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தீ விபத்தையடுத்து களஞ்சியசாலை தொகுதியை பொலிஸார் பொறுப்பேற்றதுடன் விசாரணைகளையும் துரிதப்படுத்தினர். இந்நிலையிலேயே இதுவரையிலும் 13 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.



தேன்மதுர தமிழ் இசையால் கோடிக்கணக்கான இதயங்களை கட்டிபோட்ட மதுர குரல் இன்று ஓய்ந்து! Top News
[Saturday, 2013-05-25 17:26:59]

பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் காலமானார். இருதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார். ஆயினும் இன்று சனிக்கிழமை சற்று நேரம் முன்னதாக அவர் தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 91. தென்னிந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக பின்னணி பாடி வந்த இவர், பட்டினத்தார் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 1923 ஆம் ஆண்டு மதுரையில் சௌராஸ்டிர குடும்பத்தில் பிறந்த இவரது தகப்பனார் பெயர் மீனாட்சி ஐயங்கார். 1950 ஆம் ஆண்டும் கிருஷ்ண விஜயம் என்னும் படத்தில் 'ராதே என்னை விட்டுப் போகாதடி'' என்னும் பாடலுடன் இவர் அறிமுகமானார்.



கிளி.வட்டக்கச்சி இந்து மயானத்திற்கு எரிகொட்டகை கையளிப்பு! Top News
[Saturday, 2013-05-25 17:19:40]

வட்டக்கச்சி மம்மில் இந்து மயானத்திற்கு இராமநாதபுரத்தைச் சேர்ந்த அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை ஞாபகார்த்தமாக அவரின் குடும்பத்தவரால் எரிகொட்டகை அமைத்து வழங்கப்பட்டது. அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்களது நிதிப் பங்களிப்பில் வட்டக்கச்சி அறிவொளி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இவ் எரிகொட்டகை அமைக்கப்பட்டு, வட்டக்கச்சி கிராம முன்னேற்ற சங்கங்களிடம் கையளிக்கும் நிகழ்வு கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் வி.சுவிஸ்கரன் தலைமையில் மம்மில் இந்து மயானத்தில் இடம்பெற்றது.



இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பணிப்பெண் ஜோர்தானில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்! Top News
[Saturday, 2013-05-25 17:15:20]

ஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் கறுவாக்கேணியை சேர்ந்த 21 வயதான நாகேந்திரன் காந்திமதி என்ற பெண் ஜோர்தானில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இம்மாதம் 19-ம் திகதி அவரது குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 6-ம் திகதி உயிரிழந்ததாகக் கூறப்படும் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் தமக்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னரே அறிவிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் பிபிசி தமிழோசையிடம் கூறுகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 22ம் திகதி இவர் வீட்டுப் பணிப்பெண்ணாக ஜோர்தான் சென்றுள்ளார்.



இளம் பெண்ணை மிரட்டி பல தடவை பாலியல் வல்லுறவு - படத் தயாரிப்பாளர் கைது!
[Saturday, 2013-05-25 14:30:48]

யுவதியொருவரை தொடர்ச்சியாக மிரட்டி வல்லுறவுக்குட்படுத்தி வந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரொருவரை நாரஹெம்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யுவதி அதுருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யுவதி சினிமாவில் நடிப்பதற்காக தயாரிப்பாளரிடம் வந்துள்ளதாகவும் அவருக்கு வாய்ப்பு தருவதாகக் கூறி அவரை நிர்வாணமாக படமெடுத்து பின்னர் அதனை வெளியிடப்போவதாக மிரட்டியே குறித்த நபர் தொடர்ச்சியாக வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.



முக்கோண பாதையில் 3 கோள்கள் - இலங்கையர்கள் பார்வையிடலாம்!
[Saturday, 2013-05-25 14:27:24]

சூரியனை சுற்றியுள்ள கோள்களில் மூன்று கோள்கள் முக்கோண பாதையில் தற்போது சுற்றிவருவதை வானத்தில் பார்க்கலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார். இரவில் வானத்தில் தெட்டத்தெளிவாக தெரிகின்ற சனி, கோள்மண்டத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் மற்றும் சூரியனுக்கு மிகவும் அண்மையில் இருக்கின்ற புதன் ஆகிய கோள்களே முக்கோண பாதையில் சுற்றிவருகின்றன. இலங்கையின் வடமேல் வானத்திலேயே இதனை பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ள பேராசிரியர் சந்தன ஜயரத்ன இது போன்றதொரு நிகழ்வை 2021 ஆம் ஆண்டே பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



23வது ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் திங்களன்று ஆரம்பம்!
[Saturday, 2013-05-25 14:21:40]

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 23 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் ஹூன் மாதம் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த 23 ஆவது கூட்டத்தொடரின் அமர்வுகளின் போது நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் பல்வேறு நாடுகள் தொடர்பில் பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன. 47 உறுப்பு நாடுகள் இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதுடன் மேலும் பலநாடுகளும் அவதானிப்பு நாடுகளாகவும் கலந்துகொள்ளவுள்ளன.



ஈழத்தமிழருக்கு ஆதரவான கட்சி விரைவில் புதுடில்லியில் உதயமாகும் - தா.பாண்டியன்!
[Saturday, 2013-05-25 14:13:19]

புதுடில்லியில் விரைவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி நிச்சயம் அமையும். எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அது வெளிப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சென்னையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே பாண்டியன் இதனைத் தெரிவித்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுமிக்க ஆட்சியொன்று புதுடில்லியில் வெகுவிரைவில் அமையும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை விரைவாக எட்டுவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க முடியும் என்றும் பாண்டியன் தனது உரையில் குறிப்பிட்டார்.



13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு கோத்தபாயவிற்கு அதிகாரமில்லை - வாசுதேவ நாணயக்கார!
[Saturday, 2013-05-25 14:04:31]

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பாதுகாப்பு செயலாலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அதிகாரமோ உரிமையோ கிடையாது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவினால் முன் வைக்கப்படவுள்ள தனி நபர் பிரேரணை செல்லுபடியற்றதாகும். எனவே, அரசு மேற்படி பிரேரனைக்கு அங்கீகாரம் வழங்காது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.



மட்டக்களப்பு நுழைவாயிலில் வைக்கப்படும் புத்தர் சிலை இனங்களுக்கிடையே மனக்கசப்பை ஏற்படுத்தும் - யோகேஸ்வரன் எம்.பி பிரதமருக்கு கடிதம்!
[Saturday, 2013-05-25 13:57:56]

மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியானது இனங்களுக்கிடையில் மனக்கசப்பை ஏற்படுத்தும் செயலாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். புத்தர் சிலையை நிறுவுதல் தொடர்பில் பிரதமர் தி.மு ஜயரட்னவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



கல்லுடன் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு: முல்லைத்தீவில் சம்பவம்!
[Saturday, 2013-05-25 09:56:07]

முல்லைத்தீவு பனிச்சங்குளப் பகுதியில் பாலியல்வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்ததேகிக்கப்படும் நிலையில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நிலையில் இச் சடலம் இருப்பதாகவும் சடலத்திலுடன் கல்லுக்கட்டப்பட்டு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



ஆஸிக்கு செல்ல முயற்சித்த 21 இலங்கையர்கள் கேரளாவில் கைது!
[Saturday, 2013-05-25 09:30:44]

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 21 இலங்கை அகதிகள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பிரதேசத்தில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கியூ பிரிவு பொலிஸார் மற்றும் கேரளப் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின்படி இந்தச் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 7 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் நியூகொச்சின் பகுதி ஹோட்டல் ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னையிலிருந்து ரயில் மூலமாக கேரளா சென்றுள்ளனர்.



திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் விசாரணை செய்யவுள்ள இலங்கை அரசு!
[Saturday, 2013-05-25 09:14:17]

அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலையில் பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையத்தை (அமெரிக்கன் கோணர்) அமைப்பதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், திருகோணமலை நகரசபையுடன் கடந்த 22ம் நாள் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது. இந்த உடன்பாடு குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்படாதது சிறிலங்கா அரசாங்கத்துக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு முடிவு செய்துள்ளது.



வடக்கு தேர்தலினில் பொருத்தமானவர்கள் நிறுத்தப்படவேண்டும்! - குமாரவடிவேல் குருபரன்!
[Saturday, 2013-05-25 08:44:20]

வடக்கு மாகாணசபை தேர்தலில் எவரையும் போட்டியிடக்கூடாதெனவும் பகிஸ்கரிக்கவேண்டுமெனவும் சிவில் சமூகம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறப்படுவது தவறான தகவலென சிவில் சமூக அமைப்புக்கள் சார்பினில் குரல்தரவல்லவரான சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்தார்.



ஜனநாயக பண்புகளைக் கொண்ட அரசாங்கம் ஆசியப் பிராந்தியத்திலே இலங்கையில்தான் உள்ளது - ஜனாதிபதி பெருமிதம்!
[Saturday, 2013-05-25 08:27:33]

ஆசியாவிலேயே ஜனநாயக பண்புகளை முழுமையாக பின்பற்றி நிலையான அரசாங்கமொன்றை உருவாக்கியுள்ள நாடு இலங்கைதான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். மஹரகம இளைஞர் சேவைகள் மன்ற அரங்கில் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்"டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-



3000 கிலோகிராம் இரும்புகள் கோப்பாயில் திருட்டு - நான்குபேர் கைது!
[Saturday, 2013-05-25 08:18:03]

யாழ்ப்பாணம், கோப்பாய் கோண்டாவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 3000 கிலோகிராம் இரும்புகள் திருடப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். களவாடப்பட்ட இரும்புகளில் 1800 கிலோகிராம் இரும்புகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார். மீட்கப்பட்ட இரும்புகளில் பாரிய ஆயுதங்களின் உதிரிபாகங்களும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த ஆயுதங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை ஈழத்தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இடையிலான ஒரு உறவுப் பாலம்! - நக்கீரன்
[Saturday, 2013-05-25 08:10:25]

தமிழர்களிடை ஒற்றுமை இல்லை, அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூட்டை போல இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டைப் பலர் முன் வைக்கிறார்கள். ஒற்றுமை என்பது ஒரு ஒப்பீட்டுச் சொல். நூற்றுக்கு நூறு ஒற்றுமை எந்த இனத்தவரிடமும் இல்லை. ஒற்றுமைக்குப் பெயர் போன யூதர்கள் பற்றி ஒரு பகிடி சொல்வார்கள். பத்து யூதர்கள் இருந்தால் பதினொரு கட்சிகள் இருக்குமாம். எல்லாம் வீட்டுக்கு வீடு வாசல்படி என்று சொன்ன கதைதான்.


Canada Kanthasamy Kovil
INNSYS-20120930
Ramans2011
Mahesan supramaniyam 031109
Suresh-remax-2013-01-01
AJRwindows22.05.13
TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
RoyaShades-l2011(04-12-11)
TDE_Computers2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com