Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
வடக்கு -கிழக்கில் 1,70,000 இராணுவத்தினர் நிலை கொண்டள்ளனர் - சர்வதேசத்தை அரசாங்கம் ஏமாற்றுகின்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன்
[Friday, 2012-10-05 11:07:25]
News Service

வடக்கு– கிழக்குப் பகுதிகளில் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் படையினர் நிலை கொண்டுள்ள போதும் அதனை இலங்கை அரசாங்கம் மூடிமறைக்கிறது. ஐக்கிய நாடு கள் சபையில் இலங்கை தொடர்பான மீளாய்வுகள் நடைபெறவுள்ள நிலையில் இலங் கையில் இடம்பெயர்ந்தவர்கள் இல்லை ௭னக் காட்டுவதற்கே மெனிக்பாம் முகாமிலிருந்த தமிழர்களைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் காடுகளுக்குள் தள்ளிவிட்டுள்ளார்.

  

இதனூடாக இடம்பெயர்ந்தோரை மீள்குடியமர்த்திவிட்டோம் ௭ன சர்வதேசத்தினை இலங்கை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது. இதனை உலக நாடுகள் நன்கு புரிந்து கொள்ளவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கேப்பாபிலவு – சூரியபுரம் காட்டுப் பகுதிக்குள் நிர்க்கதியாக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இலங்கையில் இடம்பெயர்ந்தோர் ௭வருமில்லை ௭னத் தெரிவித்துள்ளமை தொடர்பாகக் கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; தமிழ்மக்கள், வலி.வடக்குப் பிரதேசத்தில் 24 கிராம அலுவலர் பிரிவுகளில் இருந்து கடந்த 25 வருடங்களாக இடம்பெயர்ந்து முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

இம் மக்கள் தங்கியுள்ள முகாம்கள் தனியாருடைய காணிகளிலுள்ளன. இந்த காணிகளை விட்டு வெளியேறுமாறு காணி உரிமையாளர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இத்தகைய நிலையில் இடம்பெயர்ந்தோருக்கு செல்வதற்கு இடமில்லை. ஏறக்குறைய 47 ஆயிரம் மக்கள் தமது சொந்தக் கிராமத்தில் மீளக்குடியேறுவதற்கு தத்தமது பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ளதாக புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வருகின்றன. இம் மக்களில் பலர் இந்தியாவில் இருக்கிறார்கள்.

இவர்கள் தமது இடங்களிலிருந்து இராணுவம் வெளியேறினால் தம்மால் மீளக்குடியமர முடியும் ௭னத் தெரிவித்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் சம்பூரிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் முகாம்களில் இருக்கின்றனர். இவர்கள் கடந்த 6 வருடங்களாகச் சொந்தக் காணிகளுக்குச் செல்லமுடியாத நிலையில் இராணுவம் காணிகளை ஆக்கிரமித்துள்ளது. முல்லைத்தீவில் தற்போது கேப்பாபிலவு மக்களைக் காட்டுக்குள் வைத்திருக்கின்றனர்.

இம் மக்களது குடியிருப்புக் காணிகள், வயல் காணிகள் ௭ன ௭ல்லாவற்றையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அதுபோல் கிளிநொச்சி நகரிலும் பரவிப்பாஞ்சான் கிராமம் முழுமையாக இராணுவப் பிரிகேட் பிரிவுக்காக அபகரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள காணி நிலம், வீடுகளை மக்களிடம் ஒப்படைக்காது தமது கட்டுப்பாட்டுக்குள் இராணுவத்தினர் வைத்திருக்கின்றனர்.

இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்தோர் சொந்த இடங்களிற்குத் திரும்பிச் செல்ல முடியாதநிலையில் இராணுவத்தினர் பொதுமக்களுடைய காணிகள், நிலங்கள் வீடுகளை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இது இப்படியிருக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மக்களை மீளக்குடியமர்த்திவிட்டோம் ௭னக் கூறுவது பொய்யாகும்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உலகத்திற்கு சொல்லும் இவ்விடயம் உலக நாடுகளை பிழையான பாதையில் கொண்டு செல்லும் முயற்சியாகும். மெனிக்பாமை மூடி இதனை காண்பிக்க முயற்சிக்கின்றார். ஆனால் ௭மது மக்கள் இன்னமும் முகாம்களிலும் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்குள்ளும்தான் இருக்கின்றார்கள்.

இது மாத்திரமின்றி யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவம் குறைக்கப்பட்டு விட்டது. இன்னும் 15 ஆயிரம் இராணுவத்தினர் தான் இங்கு இருக்கிறார்கள் ௭னக் கூறப்படுகின்றது. ஆனால் பாதுகாப்பு அமைச்சின் தகவலுக்கமைய இலங்கையில் 2 இலட்சம் இராணுவத்தினர் இருக்கின்றனர்.

இந்த இரண்டு இலட்சத்தில் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 15 டிவிசன்கள் இருக்கின்றன. ஒரு டிவிசனில் குறைந்த பட்சம் 10 ஆயிரம் இராணுவம் இருக்கின்றனர். ஆக 15 டிவிசன்களிலும் 1 இலட்சத்து 50 ஆயிரம் இராணுவத்தினர் இருக்கின்றனர். இதைவிட கிழக்கு மாகாணத்தில் இரண்டு டிவிசன்கள் உள்ளன. ஆகையால் அங்கே இருபதாயிரம் இராணுவத்தினர் இருக்கின்றனர். ௭னவே வடக்கிலும் கிழக்கிலும் 1 இலட்சத்து 70 ஆயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.

ஏனைய பகுதியில் 3 டிவிசன்கள்தான் இருக்கின்றன. இதற்கமைய வடக்கு, கிழக்கில் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டிருக்க தென் பகுதியில் 30 ஆயிரம் இராணுவத்தினர் மட்டுமே இருக்கின்றனர். இதுதான் உண்மையான புள்ளி விபரம். இதனை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு போவோரால் பார்க்கமுடியும். அமெரிக்காவோ இந்தியாவோ அல்லது வேறு நாடுகளோ கூறியதால் இராணுவத்தைக் குறைத்து விட்டோம், இராணுவம் இல்லையென கூறுவது பொய்யாகும்.

இராணுவத்தினருக்கு வேலையில்லாததால் புலனாய்வுப் பிரிவுக்குள் இவர்களை இறக்கி விட்டுள்ளனர். இந்த புலனாய்வாளர்களுக்கு தாம் ௭ன்ன செய்யவேண்டும் ௭னத்தெரியாது. இதனால் புத்தக வெளியீடு, திருமண நிகழ்வு, இறந்த வீடு, பிறந்தநாள் நிகழ்வுகள் போன்றவற்றிற்கும் புலனாய்வாளர்கள் போகிறார்கள். வீதியில் பத்துப் பேர் கூடினாலும் புலனாய்வுப் பிரிவினர் போய் நிற்கின்றார்கள்.

ஆகவே இங்கு சாதாரண சூழல் ஒன்றை உருவாக்குவது மிகவும் கடினம். இதைத்தான் இராணுவம் இங்கு செய்து வைத்துள்ளது. இதனைச் செய்து விட்டு யாழ்ப்பாணத்தில் சாதாரண நிலை வந்து விட்டது.

மக்களைச்சென்று பார்க்கலாம். ஜனநாயகச் சூழல் வந்து விட்டது ௭ன்று கூறுவது சுத்தப் பொய்யான உலகத்தை ஏமாற்றும் கருத்தாகும். ஆகவே சுமுகமான சூழல் இங்கு இல்லை ௭ன்பதே ௭னது கருத்தாகும்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

13 ஆவது திருத்த சட்டத்தைத் திருத்துவது இன்னொரு வாக்குறுதி மீறல்: - எம்.ஏ. சுமந்திரன், நா.உ.
[Wednesday, 2013-06-19 10:46:32]

சிறீலங்கா அரசு சிறீலங்கா மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது. இலங்கையின் யாப்பில் கொண்டுவரப்படவுள்ள உச்தேச 13 ஆவது சட்டதிருத்தம் - இன்று சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பரவல் மூலம் வழங்கப்பட்டுள்ள ஒரே சலுகை - இந்த வாக்குறுதி மீறல்களுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு.



இனமானக் கலைஞர் மணிவண்ணனுக்கு கனடிய மண்ணில் நடாத்தப்பட்ட நினைவெழுச்சி வணக்க நிகழ்வு Top News
[Wednesday, 2013-06-19 09:55:44]

ஜூன் 16, 2013, ஞாயிற்றுக் கிழமை 5 மணிக்கு 733 பேர்ச்மௌன்ட் வீதியில் கனடா கந்தசாமி ஆலயத்தில் ஈழ விடுதலையை தன் உயிர் மூச்சு எனக் கொண்ட பன்முக கலைஞன் மணிவண்ணன் ஐயாவின் நினைவஞ்சலி கூட்டம் கனடியத் தமிழர் தேசிய அவையினரால் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மக்கள் கலந்து கொண்டு பூவள்ளி தூவி வணங்கி நினைவெழுச்சி உரைகளில் எழுகை பெற்றுச் சென்றனர். இந்த நிகழ்வில் காசி ஆனந்தன் அண்ணாவின் சிறப்புரை நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. இனமானக் கலைஞர் மணிவண்ணன் அவர்களை நினைத்து உலகெங்கும் வாழும் தமிழர்களால் நடாத்தப்பட்ட நினைவெழுச்சி நிகழ்வுகள் வரிசையில் கனடிய மண்ணில் நடைபெற்ற இந்த நிகழ்வும் மிக சிறப்பாக நடைபெற்றது.



இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது - மன்மோகன் சிங் உறுதி மொழி
[Wednesday, 2013-06-19 09:42:31]

இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், செல்வன் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன், பொன். செல்வராசா ஆகியோர் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரை செவ்வாய்க்கிழமை மாலை தனித்தனியாகச் சந்தித்து சுமார் அரை மணி நேரம் அவர்கள் பேச்சு நடத்தினர். இதன் பின்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சம்பந்தன், இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே 13-ஆவது சட்டத் திருத்தத்தில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் கலாசாரத்தையும், தமிழ் மொழியையும் அழிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. அதை தடுத்து நிறுத்த இந்தியா விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இலங்கையில் தமிழ் இனம் அழிந்துவிடும்.



13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை வேண்டும்: - பா.ஜ.க
[Wednesday, 2013-06-19 09:18:45]

இலங்கைத் தமிழர் விடயத்தில் சரியான முனைப்புடன் இந்தியா செயற்டுகிறது என்பதை உறுதிப்படுத்த 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைத் தமிழர் விடயத்தில் மௌனமாக இருப்பதால், இலங்கைக்கு பிழையான செய்தியை அனுப்பும் என பாரதீய ஜனதா கட்சியின் தமிழக பிராந்திய தலைவர் பொன்.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.



சிங்கள, முஸ்லிம் அதிகாரிகள் வடமாகாண அரச காரியாலயங்களில் பதவிக்கு அமர்த்தப்பட வேண்டும் - கோத்தபாய
[Wednesday, 2013-06-19 09:18:15]

வடமாகாணத்தில் தனி தமிழர்கள் மாத்திரமே வாழ முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடமாகாணம் அனைத்து இனங்களையும் வரவேற்கும் மாகாணமாக இருக்க வேண்டும். சிங்களவர்கள் அங்கு தங்களது காணிகளை கொள்வனவு செய்யக்கூடிய உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் சிங்களர்கள் சொந்த காணிகளை கொள்வனவு செய்து குடியேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதேபோன்று சிங்கள மற்றும் முஸ்லிம் அரசாங்க அதிகாரிகளும் வடமாகாண அரசாங்க காரியாலயங்களில் பதவிக்கு அமர்த்தப்பட வேண்டும் என்றும் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.



சாவகச்சேரியில் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள காணியை மீட்டுத் தாருங்கள்: - பிரதேச செயலகத்திடம் பொதுமக்கள்
[Wednesday, 2013-06-19 08:57:52]

இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சிலர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சாவகச்சேரி பிரதேச செயலகத்தினால் காணிக் கச்சேரி நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதில் பெரும்எண்ணிக்கையான பொதுமக்கள் பங்கெடுத்தனர். இதில் பங்கெடுத்த பொதுமக்கள் சிலர், இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள கெற்பேலிக் காணியை மீட்டுத்தருமாறு கோரியுள்ளனர்.



ஒரே நாளில் 32 லட்சம் ரூபாய்க்கு தொலைபேசியை பயன்படுத்திய நபர் மீது விசாரணை
[Wednesday, 2013-06-19 08:47:34]

ஒரே நாளில் 32 லட்சம் ரூபாவை கையடக்க தொலைபேசி கட்டணமாக பதிவு செய்த ஒருவர் குறித்து கொழும்பு மோசடிகள் புலனாய்வுத் தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இத்தாலியில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கு கையடக்க தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனம் ஒன்று ரோமிங் வசதியுடன் கூடிய சிம் கார்ட் ஒன்றை வழங்கியுள்ளது. எனினும் குறித்த வாடிக்கையாளர் அந்த சிம்மை பயன்படுத்தவில்லை. அதனை அவரது உறவினரான மொஹமட் முஸாரப் என்ற அவரது உறவினரிடம் வழங்கியுள்ளார். அவர் ஒரே நாளில் 32 லட்சம் ரூபாவுக்கு ரோமிங்கை பயன்படுத்தியுள்ளார். இது குறித்து சேவை வழங்கும் நிறுவனம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.



வவுனியா நெளுக்குளத்தில் தமிழர்களின் வீடுகள் தீக்கிரை
[Wednesday, 2013-06-19 08:39:51]

வவுனியா- நெளுக்குளம், பாரதிபுரம் பகுதியில் தமிழர்களின் சில வீடுகளை முஸ்லிம்கள் தீயிட்டு எரித்துள்ளதோடு, தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். பாரதிபுரம் பகுதியிலுள்ள விக்ஸ் மரக்காடு என்ற தமிழர்களின் பகுதியில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் அப்பகுதியில் குறைவான மக்களே வசித்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் அப்பகுதியில் சில தொழில் முயற்சிகள் ஏற்படுத்தப்பட்டு இடம்பெயர்ந்த தமிழர்கள் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன்போது அப்பகுதியில் முஸ்லிம்கள் காணிபிடிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மக்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தனர். இதன்பின்னர் அந்த பகுதியில் எந்த முஸ்லிம்களும் காணி பிடிக்க கூடாது என்றும் அது தமிழர்கள் வசிக்கும் பகுதி என்றும் பொலிஸார் முஸ்லிம்களை எச்சரித்துள்ளனர். இந்நிலையில் தமிழர்களின் வீடுகள் சில தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேலைக்கு சென்ற சமயம் இந்த நாசவேலையில் முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



நாவிதன்வெளி பிரதேச கணக்காளருக்கு புலிகளிடமிருந்து மிரட்டலாம்? - பாட்டி வடை சுட்ட கதை என சக ஊழியர்கள் விசனம்
[Wednesday, 2013-06-19 08:05:41]

நாட்டிலிருந்து கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முற்றாக நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கணக்காளரிற்கு 2013.05.25ஆம் திகதியிடப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத்தலைப்பில் அம்பாறை மாவட்ட புலனாய்வு பொறுப்பாளர் ஈழவன் எனக்குறிப்பிடப்பட்டு மிரட்டல் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்கடிதம் கணக்காளரிற்கு முகவரியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தாங்களும் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரான அன்வர்டீன் என்பவரும் சேர்ந்து நாவிதன்வெளி பிரதேச செயலகத்தை முஸ்லிம் பிரதேச செயலகமாக மாற்றுவதற்கும், கூடுதலான முஸ்லிம் ஊழியர்களையும், தலைமை உத்தியோகத்தர்களையும் உள்ளீர்ப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றீர்கள்.



13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை வேண்டும்: - பா.ஜ.க
[Tuesday, 2013-06-18 21:36:53]

இலங்கைத் தமிழர் விடயத்தில் சரியான முனைப்புடன் இந்தியா செயற்டுகிறது என்பதை உறுதிப்படுத்த 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைத் தமிழர் விடயத்தில் மௌனமாக இருப்பதால், இலங்கைக்கு பிழையான செய்தியை அனுப்பும் என பாரதீய ஜனதா கட்சியின் தமிழக பிராந்திய தலைவர் பொன்.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.



வாஸ் குணவர்த்தன பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கம்!
[Tuesday, 2013-06-18 21:35:07]

பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன அவருடைய பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலையுடன் தொடர்புபட்டதாக கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்ட வாஸ் குணவர்தன சுகயீனம் காரணமாக பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 15ம் திகதி இரவு பிரதி பொலிஸ் மா அதிபர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் அவர்களுக்கு அகவணக்கம்: - தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - விக்ரோறியா - அவுஸ்திரேலியா
[Tuesday, 2013-06-18 21:12:15]

தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்திற்காக தன்னையையும் இணைத்துநின்ற தமிழ்த்திரைப்பட இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் அவர்களின் மரணச்செய்தி அனைவரையும் கலங்கவைக்கின்றது. அவலங்களையே சுமந்துநிற்கின்ற ஒரு தேசத்தின் விடிவிற்காக குரல் எழுப்புகின்ற அனைவருமே அம்மக்களின் ஆழ்மனதில் எப்போதும் உயிர்ப்புடனே இருப்பார்கள்.



இலங்கை இராணுவத்தை வெளியேற்றக் கோரி வெலிங்டனில் இராணவ முகாம் முற்றுகை - 500 பேர் கைது!Top News
[Tuesday, 2013-06-18 20:52:27]

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டனில் ராணுவ முகாம் மற்றும் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு கடந்த 27-ந்தேதி முதல் இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் தசநாயகே, மேஜர் ஹரிச்சந்திரா ஆகிய 2 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதமும் எழுதினார். வெலிங்டன் ராணுவ முகாமில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகளை உடனே வெளியேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகியவையும் இலங்கை வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர்.



இந்தியா சென்றுள்ள கூட்டமைப்பினர் சல்மான் குர்ஷித்துடன் பேச்சுவார்த்தை! Top News
[Tuesday, 2013-06-18 20:12:14]

இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணசபைக்கு செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் 13வது அரசியல் சட்டத்திருத்தத்தை மாற்றியமைக்க புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றவும் முயற்சி செய்து வருகிறது. ஒருவேளை அரசு கொண்டு வர உள்ள புதிய மசோதாவிற்கு ஆதரவு இல்லை என்றாலும், தேர்தலை நடத்துவதில் உறுதியாக உள்ளது. இதற்கு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க மறுக்கும் இலங்கை அரசின் செயற்பாடுகளை தொடர்ந்து கண்டித்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் இந்தியா சென்றுள்னர். சம்பந்தன் தலைமையில் அவர்கள் இன்று பிற்பகல் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விளக்கினர். 13வது அரசியல் சட்டத்திருத்தத்தை பலவீனமாக்க இலங்கை அரசு முயற்சி செய்கிறது என்றும், இதனை இந்தியா அனுமதிக்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.



நாட்டில் நீதியில்லை என்பதனை ஜனாதிபதி மகிந்தவே ஏற்றுக்கொண்டுள்ளார் - சரத்
[Tuesday, 2013-06-18 20:07:35]

இலங்கையில் நீதியில்லை என்பதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஒப்புக்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அண்மையில் ஆளும் கட்சியின் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் பாடசாலை ஆசிரியர் ஒருவரை முழங்காலிடச் செய்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு ஜனாதிபதியே தொலைபேசியில் அழைத்து, நீதி நிலைநாட்டப்படும் என தெரிவித்துள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் நாட்டில் நீதியில்லை என்பது புலனாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மகளுக்கு ஆலோசனை வழங்கிய ஆசிரியையை உண்மையில் பிரதேச அரசியல்வாதி பாராட்டியிருக்க வேண்டுமே தவிர, தண்டித்திருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.



இராணுவ முகாமில் வைத்து கைதுசெய்யப்பட்ட மருத்துவர் சிவசங்கர் விடுதலை!
[Tuesday, 2013-06-18 19:53:02]

இலங்கையின் வடக்கே, கிளிநொச்சி மாவட்டத்தில் கொக்காவில் இராணுவ முகாமுக்குச் சென்றிருந்தவேளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்ட டாக்டர் இரத்தினசிங்கம் சிவசங்கர் திங்களன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் மாவட்ட சுகாதார வைத்திய அதிகரியாகிய இவர், சுமார் ஐந்து மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் தன்னைக் கைது செய்திருந்ததாக அவர் தெரிவித்தார்.



இந்தியாவுடனான கடல் எல்லை மோதலை தீர்க்க சர்வதேசத்தின் உதவியை நாடும் இலங்கை!
[Tuesday, 2013-06-18 19:39:35]

இந்தியா கடல் எல்லையை விரிவுபடுத்தும் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் எல்லை பிரச்சினை ஒன்று எழும் பட்சத்தில் அதற்கு முகங்கொடுப்பதற்கு இந்தியா தயாராகவே உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவுக்கு சொந்தமான கடல் எல்லை விரிவுபடுத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் தமக்கு சொந்தமான கடல் எல்லைகளை விரிவுபடுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தது. இதன்படி இந்தியா இரண்டாவது முறையாகவும் தமது கடல் எல்லையை விரிவுபடுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. இவ்வாறு இந்திய கடல் எல்லையை விரிவுபடுத்தும் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் எல்லை பிரச்சினை ஒன்று எழும் பட்சத்தில் அதற்கு முகங்கொடுப்பதற்கு இந்தியா தயாராகவே உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



'எமது நிலம் எமக்கு வேண்டும்' - வெலிஓயா பிரதேச செயலரிடம் மகஜர் கையளிக்கவுள்ள முல்லை. மக்கள்!Top News
[Tuesday, 2013-06-18 19:34:51]

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச எல்லைக் கிராமங்களில் வாழும் தமிழ் மக்கள், தமது பூர்வீக நிலங்களை தருமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு தலைமையில் வெலிஓயா பிரதேச செயலருக்கு மகஜர் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் வாழும் தமிழ் மக்கள் சார்பில் கையளிக்கப்படவுள்ள மேற்படி மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



இந்தியாவிலிருந்து ஒரு கோடி பெறுமதியான ஹெரோயினை கடத்த முயன்ற நபர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது!
[Tuesday, 2013-06-18 19:27:34]

சென்னையிலிருந்து இலங்கைக்கு ஹெரோயின் எடுத்து வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யூ.எல். 122 என்ற விமானத்தில் பயணித்த ஒருவரே இலங்கை சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பயணப் பையை சோதனையிட்ட போது ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இவரிடமிருந்து ஒரு கிலோ 500 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி 20 லட்சம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.



ஜனாதிபதிக்கு சகலவிதமான அதிகாரங்களும் உள்ள போது ஏன் மாகாண சபைகளின் இணைப்பில் அச்சமடைய வேண்டும்? - திஸ்ஸ
[Tuesday, 2013-06-18 19:19:52]

ஜனாதிபதிக்கு சகலவிதமான அதிகாரங்களும் உள்ள போது ஏன் மாகாண சபைகளின் இணைப்பில் இந்த அரசாங்கம் அச்சமடைய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பினார். ராஜகிரியவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.


RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
AJRwindows22.05.13
Mahesan supramaniyam 031109
Ramans2011
INNSYS-20120930
TamilsGuid-191012-2013
TDE_Computers2011
NIRO-DANCE-100213
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com