Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 23, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் மறைந்து ஒரு வருடம் பூர்த்தி இன்று Top News
[Friday, 2012-10-05 20:25:37]
News Service

இன்றைய தினம் அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் உலகை விட்டு மறைந்து ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இதே திகதியில் அமெரிக்காவின் மிகப்பெரும் நிறுவனமான அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் காலமானார் என்ற செய்தி வெளியாகியது.

  

ஸ்டீவ் தனது 56 ஆவது வயதில் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் காலமானார்.

ஜொப்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார், அவரின் ஆயுட்காலம் வைத்தியர்களால் நிர்ணயிக்கப்பட்டு விட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் என்ற போதிலும் இச்செய்தி வெளியாகிய சில நிமிடங்களில் தொழில்நுட்ப உலகமே சற்று ஆடித்தான் போனது.

உலகம் முழுவதிலும் உள்ள அப்பிள் பாவனையாளர்கள் குறிப்பாக மேற்கத்தைய நாடுகளில் மக்கள் வீதிகளிலும், அப்பிள் ஸ்டோர்களின் முன்னாலும் ஸ்டீவுக்கு தங்களது அஞ்சலியைச் செலுத்தத் தொடங்கினர்.

அமெரிக்க ஜனாதிபதி உட்பட உலகத் தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் ஸ்டீவுக்த்கு தங்களது அனுதாபச்செய்தியினை ஊடகங்களின் மூலமாக வெளியிடத் தொடங்கினர்.

அப்பிளின் போட்டி நிறுவனங்களின் தலைவர்களும் கூட ஸ்டீவ் ஜொப்ஸுக்கு தமது அஞ்சலியைச் செலுத்தத் தொடங்கினர்.

ஸ்டீவ் ஜொப்ஸின் மரணம் குறித்து பேஸ்புக், ட்விட்டர் உட்பட சமூக இணையத்தளங்களில் அஞ்சலிக் குறிப்புகள் குவிந்தன.

ஸ்டீவ் ஜொப்ஸ்

இவர் 1955 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் பிறந்தார்.

ஸ்டீவின் தந்தையின் பெயர் அப்துல்பதா ஜோன் ஜண்டாலி. அவர் சிரிய நாட்டைச் சேர்ந்தவர். தாயார் பெயர் ஜொஹான் கெரோல் சீகிபில்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முன்னர் ஸ்டீவ் ஜொப்ஸ் பிறந்தார்.

எனினும் அவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த கிளாரா மற்றும் போல் ஜொப்ஸ் ஆகியோரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்.

கிளாரா மற்றும் போல் ஜொப்ஸ் தம்பதியினர் அதுவரை பெயரிடப்படாத தமது குழந்தைக்கு ஸ்டீவன் போல் ஜொப்ஸ் எனப் பெயரிட்டனர்.

ஸ்டீவின் வளர்ப்புத்தந்தையான போல் ஓர் இயந்திரவியலாளர். அவர் தனது இயந்திரவியல் மற்றும் இலத்திரனியல் அறிவை ஸ்டீவுக்கு சிறுவயது முதலே ஊட்டத் தொடங்கினார்.

தொலைக்காட்சிப்பெட்டி, வானொலிப்பெட்டி முதலானவற்றை எவ்வாறு கழற்றிப் பூட்டுவது என்பது தொடர்பில் ஸ்டீவுக்கு ஜொப்ஸ் கற்றுத்தந்தார்.

அவர்களது வீட்டின் வாகனத்தரிப்பிடத்தில் இலத்திரனியல் பொருட்களுடன் விளையாடும் சிறுவனாக ஸ்டீவ் மாறியதுடன் இதுவே அவருக்கு பின்னாளில் இலத்திரனியல் பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படவும் காரணமாயிற்று.

இளமைக்காலத்தில் வறுமை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பட்டப்படிப்பையும் இடையில் நிறுத்திவிட்டவர் ஸ்டீவ்.

இதன்பின்னர் சிறிது காலம் ஆன்மிக வாழ்க்கையை நாடிய ஸ்டீவ் தன் நண்பரான வொஸ்னியாக்குடன் சேர்ந்து அப்பிள் நிறுவனத்தைத் தனது வீட்டு வாகனத்தரிப்பிடத்தில் ஆரம்பித்தார்.

பல வெற்றிகரமான கண்டுபிடிப்பாளர்களைப் போன்று இவரும் தனது கண்டுபிடிப்புக்களை தனது வீட்டின் வாகனத்தரிப்பிடத்தில் ஆரம்பித்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து ஸ்டீவ் வாழ்வில் இடம்பெற்ற சில முக்கிய தருணங்கள்

1976: அப்பிள் கணனியை ஏப்ரல் முதலாம் திகதி உருவாக்கினார். அப்பிள் ஐ கணனி 666.66 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனைக்கு வந்தது.

1977: அப்பிள் நிறுவனம் கூட்டு நிறுவனமாக்கப்பட்டது. த அப்பிள் ஐ கணனி அறிமுகப்படுத்தப்பட்டது.

1978: ஸ்டீவ் ஜொப்ஸின் மகள் லிஸா பிறந்தார்.

1980: அப்பிள் நிறுவனம் முதல் முறையாகத் தனது பங்குகளை வெளியிட்டது. 110 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்டிக் கொண்டது.

1982: அப்பிள் நிறுவனத்தின் வருடாந்த வருவாய் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாய் அதிகரித்தது.

1983: அப்பிளின் லிசா கணனிகள் விற்பனைக்கு வந்தன.

1984: அப்பிளின் மெகிண்டொஸ் கணனிகள் விற்பனைக்கு வந்தன.

1985: நிறுவனத்தின் அப்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கூலி மற்றும் ஜொப்ஸ் இடையே மோதல், ஜொப்ஸ் மற்றும் வொஸ்னிஹக் ஆகியோர் அப்பிளில் இருந்து பதவி விலகினர்.

1986: ஜொப்ஸ், 'நெக்ஸ்ட்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்ததுடன், உயர் தொழில்நுட்பம் கொண்ட கணனிகளை பல்கலைக்கழகங்களுக்கெனத் தயாரிக்கத் தொடங்கினார்.

1989: முதலாவது நெக்ஸ்ட் கணனி விற்பனைக்கு வந்தது. விலை 6,500 அமெரிக்க டொலர்கள்.

1991: அப்பிள் மற்றும் ஐ.பி.எம். நிறுவனங்கள் இணைந்து கணனிகளுக்கான புதிய மைக்ரோபுரசசர்கள் மற்றும் மென்பொருட்களை உருவாக்கவுள்ளதாக அறிவித்தன.

பவர்புக் என்றழைக்கப்படும் காவிச்செல்லக்கூடிய மெக்ஸ் கணனிகளை அறிமுகப்படுத்தின.

ஜொப்ஸ், லொரன் பவல் என்பவரை சட்டப்படி மணந்தார்.

1996: ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் அவரது குழு இணைந்து உருவாக்கிய நெக்ஸ்ட் நிறுவனத்தின் இயங்குதளத்தினை 430 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யும் திட்டத்தினை அப்பிள் அறிவித்தது.

1997: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாகப பதவியேற்றார்.

2000: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்றார்.

2001: முதல் ஐ பொட் விற்பனைக்கு வந்தது. ஐ டியூன்ஸ் மென்பொருளை வெளியிட்டது.

இவ்வாறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தபோதிலும் ஸ்டீவ், தொழில்நுட்ப உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். இந்நிலையில் 2004 ஆம் ஆண்டு கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜொப்ஸ் சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுத்தார்.

ஸ்டீவின் வாழ்க்கை முடிந்தது எனப் பலரும் தெரிவித்த போதிலும் தனது பணியினை சரிவரச் செய்வதிலிருந்து அவர் தவறவில்லை. ஜொப்ஸ் 2006 ஆம் ஆண்டு டிஸ்னி நிறுவனத்தின் அதிகூடிய பங்குகளைக் கொண்ட தனி நபரானார்.

இதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு அப்பிள் தனது முதல் கையடக்கத் தொலைபேசியான ஐ போனை வெளியிட்டது. கையடக்கத்தொலைபேசி வரலாற்றையே மாற்றியமைத்த சாதனமாக இதைக் குறிப்பிடலாம். அனைவரதும் அமோக வரவேற்பினைப் பெற்ற இது விற்பனையிலும் சாதனை படைத்தது.

அப்பிளின் ஆதிக்கம் தொழில்நுட்ப உலகின் உச்சத்தை அடைந்து கொண்டிந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு ஜொப்ஸ் சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுத்தார்.

2010, 2011 காலப்பகுதியில் ஸ்டீவின் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது. இதனையடுத்து 2011 ஜனவரி 17 அன்று ஜொப்ஸ் 2 ஆவது முறையாக மருத்துவ விடுமுறையில் செல்வதாக அறிவித்தமையானது ஸ்டீவ் தனது ஆயுட்காலத்தின் இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதனைக் காட்டியது.

இதன் அடுத்தபடியாக 2011 ஓகஸ்ட் 24 ஆம் திகதி ஜொப்ஸ் தான் அப்பிளின் நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதன்பின்னர் ஜொப்ஸை வெளியுலகினர் யாரும் காணமுடியாமல் போனதுடன் அவர் தொடர்பான செய்திகளும் ஊடகங்களில் பெரிதாக வெளியாகவில்லை

இந்நிலையில் 2011 ஒக்டோபர் 5 ஆம் திகதி ஜொப்ஸ் காலமானதாக அவரது குடும்பத்தாரால் அறிவிக்கப்பட்டது.

எனினும் அவரின் பூதவுடலின் புகைப்படம் எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை. அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அவரது இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டனர்.

மக்கள் விரும்பியதை உருவாக்கி சந்தையில் வெற்றி பெறுபவர் ஒரு ரகம் என்றால் தாம் உருவாக்கியதை மக்கள் விரும்பச் செய்வது இன்னொரு ரகம். அந்த வகையில் ஸ்டீவ் ஜொப்ஸ் இரண்டாவது ரகம்.

அப்பிளின் புரட்சிகரக் கண்டுபிடிப்புகளை உலகமே ஏற்றுக்கொள்ள வைத்தவர் ஸ்டீவ்.

ஸ்டீவ் கடும்போக்காளர், பிடிவாதக்காரர் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. எனினும் தனது புரட்சிகர கண்டுபிடிப்புக்களை மற்றையோர் ஏற்றுக்கொள்ள வைப்பது என்பது இலகுவானதொரு காரியம் அல்ல. இதனையே ஆங்கிலத்தில் 'You need to be rebellious to be innovative' என்று கூறுவார்கள்.

தனது நவீன சிந்தனைகள் செயல்வடிவம் பெறுவதற்காக அவர் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். இது அவரை சற்று கடும்போக்காளராகக் காட்டியது உண்மையே.

எனினும் நாம் ஸ்டீவ் என்ற பெயரைச் சொன்னவுடன் ஞாபகம் வருவது அவரது கண்டிபிடிப்புகளே அன்றி அவரது குணாதியசங்கள் அல்ல.

ஜொப்ஸின் விடாமுயற்சி மற்றும் உழைப்பினாலேயே அப்பிளின் ஐ பொட் முதல் ஐ போன் வரை உருவாகியமையை யாரும் மறுக்கமுடியாது. தற்போது சந்தை மூலதனத்தின் அடிப்படையில் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமாக அப்பிள் உள்ளமைக்குக் காரணம் இவரது உழைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனையே ஆகும்.

ஸ்டீவ் ஒரு கடும் உழைப்பாளி. புற்றுநோயால் போராடிக்கொண்டிருந்த தருணத்திலும் தனது நிறுவனத்தின் நலனிலேயே அவர் அக்கறை கொண்டிருந்தார்.

ஸ்டீவ் தொழில்நுட்ப பொறியியலாளராக இல்லாத போதிலும் பலருக்கு இல்லாத அசாத்திய அறிவுத் திறமை ஜொப்ஸுக்கு இருந்ததுடன் கண்டுபிடிப்பாளர், முயற்சியாளர், சிறந்த தலைவர், சிறந்த சந்தைப்படுத்துனர், சிறந்த பேச்சாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர்.

"பசித்திரு. முட்டாளாயிரு' (Stay Hungry, Stay Foolish) என்ற ஸ்டீவின் அறிவுரையானது பல விடயங்களை எமக்குக் கற்றுத்தருகின்றது அதாவது பசித்திருக்கும் போது, பசிபோக்க வேண்டுமென்ற எண்ணம் அதற்கான வழிகளைத் தேடுவதற்கான வாய்ப்பை உண்டு பண்ணும். முட்டாளாயிருப்பதனால், ஒவ்வொரு பொழுதும் புதிய விடயங்களை அறிய வேண்டுமென்ற ஆவல் உண்டாகும்.

இது போன்ற பல அர்த்தமுள்ள அறிவுரைகளை உலகுக்கு வழங்கியுள்ள ஸ்டீவின் மறைவு பேரிழப்பாகும். அவரின் மறைவு என்றுமே ஈடுசெய்ய முடியாததாகும்.

தற்போது நாம் உபயோகப்படுத்தும் கணனி, குரலை இனங்காணும் தொழில்நுட்பமான 'Siri' , இணையம் போன்ற பல தொழில்நுட்ப வளர்ச்சிகள் தொடர்பாக 1983 ஆம் ஆண்டு ஆற்றிய உரையொன்றில் ஸ்டீவ் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய தூரநோக்கு சிந்தனையுடன் தொழில்நுட்பம் மெல்ல மெல்ல வளர்ந்து வரும் காலப்பகுதியிலேயே எதிர்வு கூறியவர்களில் ஸ்டீவ் ஜொப்ஸ் முதன்மையானவர்.

ஜொப்ஸ் மறைந்த போதிலும் அவரின் ஒவ்வொரு புரட்சிகரப் படைப்பும் அவரை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும். அவர் போன்ற ஒரு புரட்சிகர சிந்தனைகளைக் கொண்ட, தலைமைத்துவப் பண்புடைய, தன்னம்பிக்கையின் முழு உருவமானதொரு நபரை தொழில்நுட்ப உலகம் மீண்டும் பெறுமா என்பது சந்தேகமே!

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் பயன்பாட்டில் இருந்துள்ள நெய்!
[Thursday, 2013-05-23 00:05:25]

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர். மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.



குழந்தையின் மன வளர்ச்சியைப் பாதிக்கும் கர்ப்பகால அயடீன் குறைபாடு - ஆய்வில் தகவல்!
[Wednesday, 2013-05-22 19:30:46]

கர்பகாலத்தில் அயோடின் குறைபாடு இருந்தால், அது பிறக்கப் போகும் குழந்தையின் மன வளர்ச்சியை பாதிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கர்பகாலத்தில் தாய்மார்கள் அயோடின் சத்து நிறைந்த மீன் மற்றும் பால் பொருட்களை போன்ற உணவுகளை போதுமான அளவில் உட்கொள்ளாவிட்டால் பிறக்கப் போகும் குழந்தையின் அறிவுத்திறன் மற்றும் வாசிப்புத்திறன் ஆகியவை ஒப்பீட்டளவில் மற்ற குழந்தைகளைவிட குறைவாக இருந்ததாக அந்த ஆய்வில் கணடறியப்பட்டுள்ளது.



சருமத்தை அழகாக்கும் வொட்கா பேஷியல்!
[Wednesday, 2013-05-22 17:08:04]

சருமத்தை அழகாக்குவதில் ஒயின், வோட்கா போன்றவை சிறப்பான இடத்தை பெறுகின்றன. இதுவும் வோட்கா வைத்து செய்யும் பேசியல் சருமத்தை பொலிவாக்குகிறது. இதர ஆல்கஹால் பேஷியல் அயிட்டங்களுடன் ஒப்பிடுகையில் இது கொஞ்சம் வித்தியாசமானது. இரவில் படுக்கும் முன்பாக புதினா, தேனீர், எலுமிச்சை பழ சாறுடன் இரண்டு தேக்கரண்டி வோட்கா சேர்த்து குளிர்சாதன உள்பெட்டியில் (பிரீஸர்) பத்திரமாக வையுங்கள். காலையில் பார்த்தால் வோட்கா கலவை அப்படியே ஐஸ் கட்டியாக உறைந்திருக்கும். இதை வெளியே எடுத்து முகத்தில் 10 நிமிடம் தடவி வர வேண்டும்.. இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.



PCOS என விபரிக்கப்படும் சினைப்பை கட்டிகள் இருப்பதற்கான சில அறிகுறிகள்!
[Wednesday, 2013-05-22 17:01:23]

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்/பி.சி.ஓ.எஸ் (PCOS)எனப்படும் சினைப்பைக் கட்டிகள் என்பது பொதுவாக எல்லாப் பெண்களுக்கும் வருவதில்லை. ஹார்மோன் மாற்றங்களினால் வரும் இந்த குறைபாடு உடனடியாக கண்டறியப்பட முடியாதது. பி.சி.ஓ.எஸ் எனப்படும் சினைப்பைக் கட்டிகள் இருப்பது குறித்த அறிகுறிகள் மெல்ல தான் தெரிய ஆரம்பிக்கும். பெண்கள் பருவமடைந்ததும், அவர்களது தொடக்க டீன் ஏஜ் பருவத்தில், முதலாவது மாதவிலக்கிற்குப் பிறகு ஹார்மோன் மாற்றங்களால் பி.சி.ஓ.எஸ் ஆரம்பிக்கிறது. உடல் எடை அதிகரிப்பதைத் தொடர்ந்து இதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். பி.சி.ஓ.எஸ் இருந்தால். ஒன்றிரண்டு அறிகுறிகளோ அல்லது பல அறிகுறிகளோ தென்படலாம். பி.சி.ஓ.எஸ் காரணமாகத் தென்படும் அறிகுறிகளைத் தவறாக பிற நோய்களுக்கான அறிகுறிகள் எனக் கொள்வது சகஜமான ஒன்று. ஆனால் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையுள்ள பெண்களை மருத்துவரிடம் ஆலோசனைக்கு வரச் செய்யும் அறிகுறிகளுள் முதன்மையானவை, இதோ:



Galaxy Mega 6.3 ஸ்மார்ட் செல்பேசியை அறிமுகப்படுத்துகின்றது சம்சுங்!Top News
[Wednesday, 2013-05-22 16:25:03]

சம்சுங் நிறுவனமானது Samsung Galaxy Mega 6.3 எனும் அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் ஜுலை மாதம் அறிமுகம் செய்கின்றது. 6.3 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 1.7GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor, பிரதான நினைவகமாக 1.5GB RAM போன்றவற்றினையும் சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவையும் கொண்டுள்ளதுடன் இதனை microSD கார்ட்களின் உதவியுடன் 64GB வரை அதிகரிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.



பெண்களின் பாதங்களை வைத்தே இவ்வளவெல்லாம் சொல்கிறார்களா ..?
[Wednesday, 2013-05-22 11:51:42]

மங்கையரின் பாதங்கள் தாமரை இதழ்களைப் போன்று சிறந்த நிறமுடையனவாக அமைந்திருந்தால் அத்தகைய மங்கையர்கள் சத்குண சம்பத்துகள் உடையவர்களாகவும், சங்கீத சாகித்திய வித்வாசகம் பொருந்தியவர்களாகவும், இனிய குரலுடன் மகாராணி போன்ற சுகபோக சவுபாக்கியங்களை உடையவர்களாகவும் விளங்குவா். புண்ணிய காரியங்களைச் செய்வதிலும் தான, தர்மங்களைச் செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள்.



பல மர்மங்கள் நிலவும் மருத்துவ உலகம் - அவசியம் அறிந்திருக்கவேண்டிய தகவல்கள்!
[Tuesday, 2013-05-21 21:27:54]

வர வர எதுவும் புரியாமல், என்ன நடக்கிறது என்றே தெரியாமல், எதற்காக இவை செய்யப்படுகின்றன என்று கேட்கக் கூட முடியாத நிலைக்கு நோயாளிகளைத் தள்ளும் மாய உலகமாக, மர்ம நகரமாக மருத்துவ உலகம் மாறி வருகிறது. இதில் எல்லா மருத்துவர்களையும் குறை கூறுவதற்கு இல்லை. ஒரு சிலர் இப்படியும் இருக்கிறார்கள். பொதுவாக ஸ்கேன் என்பது இருவகைப்படும். சாதாரண அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன். மற்றொன்று சி.டி. ஸ்கேன் (கம்ப்யூட்டட் டோமோகிராபி ஸ்கேன்) என்பதாகும். இதில் முதல் வகை ஸ்கேனுக்கு குறைந்தது 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், இரண்டாவது வகையான சி.டி. ஸ்கேன் என்பது பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பல ஆயிரங்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.



சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதம் - இரத்தப் பரிசோதனை இன்றியே நோயை கண்டுபிடிக்கலாம்!Top News
[Tuesday, 2013-05-21 21:09:57]

சர்க்கரை நோயாளிகள் இனி இரத்த பரிசோதனை செய்ய உடலில் ஊசியை குத்தி பார்க்க தேவையில்லை. ஆம்! இனி கையில் ஊசியை குத்த அவசியமில்லை, ToucHb என பெயரிடப்பட்டுள்ள இந்த கருவியை கையில் வைத்துக்கொண்டாலே போதும் உங்கள் இரத்த குரூப், இரத்தத்தின் சர்க்கரை அளவு ஆகியவற்றை துல்லியமாக அளக்கலாம். இதை கண்டுபிடித்தது இந்திய விஞ்ஞானிகள் தான், இது மருத்துவ உலகில் ஓர் மைல்கல் என்றே கூறலாம். இது தற்போது விற்பனைக்கு வர உள்ளது.



இத்தனை வித்தைகள் தேங்காயில் உண்டா? தேங்காயின் சத்துப் பட்டியல்!
[Tuesday, 2013-05-21 16:16:24]

தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும் அது பருப்பு வகையோடு பிரித்து அறியப்படுகிறது. இதில் அடங்கிய சத்துக்களின் விவரத்தை அறியலாம்...

* தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.



மன அழுத்தத்தால் அவதிப்படுகின்றீர்களா? உடலுக்கு மசாஜ் செய்தால் மாயமாக மறைந்துவிடும்!
[Tuesday, 2013-05-21 15:50:03]

அமைதியாக இருந்து ஆளை கொல்வதில் மன அழுத்தம் முதன்மையானது. தற்போதைய அவரச உலகில் அனைவருக்கும் மன அழுத்தமானது அழையா விருந்தாளியாக வருகிறது. அதிலும் அதிகப்படியான வேலைப்பளு, வேகமான வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரச்சனை போன்றவற்றால் மன அழுத்தமானது அதிகரிக்கிறது. இத்தகைய மன அழுத்தத்தை சரியாக கவனித்து, அதனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடாவிட்டால், உடல் நிலையானது இன்னும் மோசமாகிவிடும். குறிப்பாக இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்றவை சீக்கிரமே வந்துவிடும். ஆகவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஒருசிறந்த நிவாரணி மசாஜ் தான். மசாஜ்களில் நிறைய வகைகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு இடத்திலும் மசாஜானது வித்தியாசப்படும். பொதுவாக அனைத்து வகையான மசாஜ்களும் மன அழுத்தத்தைப் போக்கக்கூடியவை.



செல்பேசிகளை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் சார்ஜரை கண்டுபிடித்து இந்திய வம்சாவளி மாணவி சாதனை!Top News
[Tuesday, 2013-05-21 15:25:29]

கலிஃபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் அந்த அமெரிக்க வாழ் இந்திய மாணவி ஈஷா காரே. இவர் வெறும் 20 வினாடிகளில் சார்ஜ் ஆகும் மொபைல் போன் சார்ஜரை கண்டுபிடித்து ஃபினிக்ஸ் என்ற இடத்தில் நடைபெற்ற இன்டெல் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் இடம்பெறச் செய்தார். அந்த லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு 50,000 அமெரிக்க டாலரை பரிசாக வென்றுள்ளது. சூப்பர் கெப்பாசிட்டரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இந்த மொபைல்போன் சார்ஜர், அளவில் மிகச்சிறியதாக உள்ளது. அதே சமயம் மற்ற வழக்கமான பேட்டரிகளை விட 10,000 தடவைக்கும் அதிகமாக மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்யும் திறன் கொண்டது இந்த மொபைல் சார்ஜர்.



முகத்திற்கு பொலிவு தரும் வித்தை பூசணிக்காயிடம் உண்டு - அறிவீர்களா?
[Monday, 2013-05-20 21:27:44]

பூசணிக்காயில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. அதிலும் இதில் உள்ள ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டீன், ரெட்டினோயிக் ஆசிட் போன்றவை, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், பழுப்பு நிற சருமத்தை பொலிவாக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

* பூசணிக்காயின் கூழை எடுத்து, தினமும் முகத்தில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவாக இருக்கும்.



நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் இருக்க கவலை எதற்கு?
[Monday, 2013-05-20 19:14:03]

உங்கள் பரம்பரையில் யாரேனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா? அல்லது நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? கவலை வேண்டாம். ஏனெனில் பெரும்பாலானோருக்கு புற்றுநோயால் இறப்பு ஏற்படுவதற்கு காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான். ஆம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களானாலும் சரி, புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் சரி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், தினந்தோறும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றினால், நிச்சயம் புற்றுநோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம். அந்த வகையில் ஒருசில உணவுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாக உள்ளன. நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும், எளிதில் குணமாக்கலாம். மேலும் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் இருந்தால், புற்றுநோய் இன்னும் தீவிரமாகத் தான் இருக்கும். ஆனால் அத்தகையவற்றையும் ஒருசில உணவுகள் மூலம் கட்டுப்படுத்தலாம். இப்போது அத்தகைய புற்றுநோயை உண்டாக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!



அதிவேகம் மற்றும் அதிக தூரத்திற்கு சமிக்ஞையை கொண்டு செல்லும் WiFi Router!
[Monday, 2013-05-20 15:29:49]

வைஃபை ரவுட்டரின் பிரச்சினை கீழே மாட்டினா மாடி ரூம்ல சிக்னலே வராது அதனால் அடிக்கடி ரவுட்டரை மாற்றி கொண்டே இருப்பார்கள் டெக்கீஸ். அது போக ஏற்கனவே ஸ்பீடு பத்தாது இதுல ரவுட்டர் கவரேஜ் வேற சொதப்பினா எப்படி இருக்கும்? இதற்க்கு ஆப்பு வைக்கும் போல ஒரு நிகழ்வு அதான் உலகத்தின் அதி வேக அதிக பேன்ட்வித் கொண்ட ஒரு வைஃபை ர்வுட்டரை ஜெர்மனியின் ஃபிரான்ஹோஃபர் இன்ஸ்டிட்யூட் கண்டு பிடித்திருக்கிறார்கள் இந்த ரவுட்டர் 1 கிலோ மீட்டர் வரை கவரேஜ் செய்வது மட்டுமில்லாமல் இதன் வேகம் 40 கிகாபைட்ஸ். இதன் மூலம் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தை 1 நொடி ஆமாமுங்கோ - வெறும் ஒரு நொடியில் டவுன்லோட் செய்யலாம்.



8வது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றது யூ டியூப் - புதிய மென்பொருளும் அறிமுகம்!
[Monday, 2013-05-20 15:17:18]

முதற்தர வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் YouTube தளத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றின் வரிசையில் தற்போது Visual Youtube Downloader எனும் ஒரு புதிய மென்பொருளும் இணைந்துள்ளது. இலகுவான பயனர் இடைமுகம் மற்றும் விரைவான செயற்பாட்டினைக் கொண்ட இம்மென்பொருளானது உயர் தரம் வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுவதனால் ஏனைய மென்பொருட்களிளை விடவும் சிறந்ததாக இருக்கின்றது.



போக்குவரத்து பொலிசார் வண்டியின் மீட்டரைப் பார்க்காமலே வேகத்தை கணிப்பது எப்படி என்று தெரியுமா?
[Sunday, 2013-05-19 21:32:57]

நம் வண்டியின் ஸ்பீடோ மீட்டரைப் பார்க்காமலேயே போக்குவரத்து காவல்துறையினர் அதிக வேகம் என்று அபராதம் கட்டச் சொல்வது எப்படி? நாம் போகும் வேகத்தை தூரத்திலிருந்தே அவர்கள் எப்படிக் கணிக்கின்றனர்? இந்த இடத்தில்தான் டாப்ளர் எஃபெக்ட் என்ற ஒப்பற்ற அறிவியல் அடிப்படை உதவுகிறது. அந்த அடிப்படையை ஆராய்ந்து உலகுக்குத் தந்தவர் ஆஸ்திரிய அறிவியல் மேதை கிறிஸ் டியன் டாப்ளர். ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் 1803ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிறந்தவர் டாப்ளர். இவர் தந்தை, கல் உடைக்கும் தொழிலாளி. இளவயதில் நோஞ்சான் குழந்தையாக இருந்ததால், தந்தையின் தொழிலிலிருந்து தப்பித்தார் டாப்ளர். பள்ளிக் கல்வியை முடித்து, வியன்னாவிலும் சால்ஸ்பர்கிலும் வானியல் மற்றும் கணிதத்தைக் கற்றுத் தேர்ந்தார். பின் பிராகா பல்தொழில் நுட்பக் கல்லூரியில் பணியாற்றினார்.



குறைந்த விலையில் Asus அறிமுகப்படுத்தும் புதிய லேப்டொப்!Top News
[Sunday, 2013-05-19 12:31:10]

முதற்தர கணனி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Asus நிறுவனமானது கணனி வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பானதாகக் கருதப்படும் Ubuntu இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட மடிக்கணினிகளை அறிமுகப்படுத்துகின்றது. Asus 1015E எனும் பெயர் கொண்ட இக்கணனிகள் 1.1 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Intel Celeron dual-core processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டு காணப்படுவதுடன் 10.1 அங்குல அளவு மற்றும் 1366 x 768 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.



உடல் உபாதைகளை சரிசெய்யும் சில விசித்திரமான இயற்கை வைத்தியங்கள்!
[Sunday, 2013-05-19 11:46:29]

உடலில் பிரச்சனைகள் ஏற்படும் போது, அதனை குணப்படுத்துவதற்கு சிறந்த வழியென்றால் அது இயற்கை வைத்தியங்கள் தான். பணத்தை செலவழித்து மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை விட, இயற்கை வைத்தியங்களை பின்பற்றினால், உடலில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதோடு, வேறு எந்த பிரச்சனையும் உடலைத் தாக்காமலும் தடுக்கும். ஆனால் கெமிக்கல் கலந்த மருந்து மாத்திரைகளை பின்பற்றினால், அது சில நேரங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தி, நிலைமையை இன்னும் மோசமாக்கச் செய்யும். இயற்கை வைத்தியம் என்றதும் வேறு ஏதோ ஒன்று என்று எண்ண வேண்டாம்.



கணினி வன்றட்டின் (Hard Disk) நிலையை அறிவதற்கு உதவும் மென்பொருள்!
[Sunday, 2013-05-19 08:28:30]

நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில், பைலை சேவ் செய்கையில், அல்லது புதிய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், டிஸ்க்கில் உள்ள ட்ரைவில் இடம் பற்றாக்குறையாக உள்ளது என்ற செய்தி நமக்கு அச்சத்தைத் தரலாம். அப்படி என்ன நான் அதிகக் கோப்புகளை உருவாக்கி, அல்லது புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தைப் பயன்படுத்தி விட்டேன் என ஆச்சரியப்படலாம். உடனே ட்ரைவின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று, எங்கு அதிக இடம் பயன்படுத்தப்பட்டு உள்ளது எனத் தேடித் தேடிப் பார்க்கலாம். உங்களின் இந்த நேரத்தில் உதவத்தான் WinDirStat என்ற புரோகிராம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.



கறுப்பான சருமமா? பப்பாளி, ஆரேஞ்சு இருக்க கவலை எதற்கு?
[Saturday, 2013-05-18 19:52:16]

கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் களையாக மாற வழிகள்...

* முகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடைத்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை துடைக்கவேண்டும்.


TDE_Computers2011
RoyaShades-l2011(04-12-11)
TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
Mahesan supramaniyam 031109
Ramans2011
Canada Kanthasamy Kovil
INNSYS-20120930
AJRwindows22.05.13
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com