Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 25, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் தற்போது சிற்றூழியர்களுக்கும் கணனி உதவியாளர்களுக்குமான நேர்முகப்பரீட்சை நடந்து முடிந்துள்ளது: - ஆனாலும் தில்லுமுல்லுகள் முடியவில்லை!
[Saturday, 2012-10-06 10:39:29]
News Service

அதில் 156 பேர் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.இவர்களில் 34 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.வழமையில் நேர்முகப்பரீட்சைக்காக பல்கலைக்கழக பேரவை ஆட்களை நியமிக்கும். அவர்கள் நிர்வாக பொறுப்புக்களில் உள்ளவர்களும் கல்விப்புலத்தில் உள்ளவர்களும் பேரவை ,மூதவை உறுப்பினர்களும் நியமிக்கப்படுவது வழமை.

  

இந்த நேர்முகப்பரீட்சைக்கு பீடாதிபதிகளான பேராசிரியர் வி.பி.சிவநாதன்,பேராசிரியர் வேல்நம்பி,பேராசிரியர் கந்தசாமி போன்ற பலர் நியமிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு நடைபெற்று முடிவடைந்திருந்தது. இவர்கள் தெரிவு செய்த 34 பேரின் பெயர்களும் பேரவைக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட பின்பே நடைமுறைக்கு வருவது வழமை. வழமையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் நேர்முகத்தேர்வு முடிவடைந்ததும் வரும் பேரவையில் சமர்ப்பிக்கப்படுவதே வழமை. ஆனால் இந்த முறை அவ்வாறு நடைபெறவில்லை. இதனை சமர்ப்பிக்க வேண்டிய பதிவாளர் அதனைச் செய்யவில்லை.

இதனால் கடுப்பான பேராசிரியர்கள் தமது கண்டணத்தை தெரிவிக்க , பதிவாளர் குட்டை அவிட்டு விட்டார். அதாவது அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தான் இந்தப்பட்டியலை பேரவையில் போட வேண்டாம் என்று சொன்னதாக பதிவாளர் அவிட்டு விட்டதும். இதனை சற்றும் எதிர்பாராத துணைவேந்தர் தன்னுடன் எதுவும் கதைக்கப்படவில்லையே என்று தனது நடுநிலைமையை நிரூபிக்க அமைச்சருக்கு பேரவைக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது போன் செய்து கேட்டிருக்கிறார். அமைச்சர் தான் மூக்கை நுழைத்ததை உறிதிப்படுத்த பெட்டிப்பாம்பாக அடங்கிக் கொண்டார்.

இதற்கிடையில் பேரவைக்கு டக்லஸ் தேவானந்தாவால் நியமிக்கப்பட்ட முன்னாள் ஹாட்லி கல்லூரி அதிபர் சிறிபதி கடுப்பாகி பீடாதிபதிகளை கெட்ட வார்த்தைகளால் திட்டித்தீர்த்துள்ளார். ஏன் இவர் இப்படி கடுப்பானார் என்று விழித்துக்கொண்ட போது மேலும் பல விடயங்கள் வெளிவந்தன, தனது மகளுக்கு கணணனி உதவியாளர் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் டக்கிலஸிடம் போட்டுக் கொடுத்து ஏனையவர்களின் நியமனத்துக்கான அங்கீகாரத்தையும் தடுத்தவர் இவர் தான் என்று அறியக்கிடைத்தது. இதன் பின் துணைவேந்தரையும் கெட்டவார்த்தைகளால் திட்டித்தீர்த்துள்ளார்.

இதன் பின் உபவேந்நதரின் வேண்டுதலுக்கு அமைய பீடாதிபதிகள் எல்லோருமாக ஈ.பி.டி.பி கட்சியின் அலுவலகத்துக்கு சென்று தங்களின் தெரிவு முறை சரியானது என்று விளக்கியிருக்கிறார்கள். அத்தோடு சிறிபதி பற்றியும் முறையிட்டுள்ளார்கள். இவை எவற்றையும் செவிடன் காதில் ஊதிய சங்காக டக்லஸ்,சந்திரகுமார் ஒருவருக்கும் கேட்கவில்லை.அவர்களின் பிரச்சினையெல்லாம் சிறிபதியின் மகளுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றும் தாம் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு (அவர்கள் தகுதியானவர்களாக இல்லையென்றாலும்) அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இதில் இன்னொரு பிரச்னையென்னவென்றால் துணைவேந்தர் 34 பேருக்கான வெற்றிடம் இருக்கு என்று சொல்லவில்லை என்பதாகும்.முதலில் 14 பேருக்கு மட்டுமே நியமனம் வழங்கப்படும் என்று தெரிவித்ததால்.ஈ.பி.டிபி 12 பேரின் பெயர்களைக் கொடுத்துள்ளது. மீதி இரண்டு பேரை நியமிக்கும் அதிகாரத்தை மட்டுமே துணை வேந்தருக்கு வழங்கியிருந்தது. ஆனால் துணை வேந்தர் மொத்தமாக இருந்த 34 பேருக்கான வெற்றிடத்தையும் நிரப்பியது தான் தற்போது அமைச்சருக்கு கடுப்பாகியுள்ளது.

34 வெற்றிடமிருந்தது என்று சொல்லியிருந்தால் தனது பட்டியலாக 30 தந்திருக்கலாமே என்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரும் துணை வேந்தரை கடிந்து கொண்டாராம்.

இப்போ இங்கே எழுகின்ற விடையமென்னவென்றால். சுதந்திரமான செயற்பாட்டு கட்டமைப்புள்ள ஒரு உயர்கல்வி நிறுவனம் எவ்வாறு ஒரு அரசியல் கட்சியால் சீரழிக்கப்படுகிறது என்பதாகும். தம்மிடமுள்ள ஆயுதங்களால் கல்வியாளர்களை மிரட்டி அடிபணியவைத்து கீழ்த்தரமான அரசியலை சிறிபதி போன்றவர்களை வைத்து செய்து தமிழர்களுக்கு என்று இருக்கின்ற ஒரே கல்விச்சொத்தை சீரழிக்கிறார்கள். இதனை உலகத்தமிழர்கள் தடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

கடந்த காலங்களைவிட மிக மோசமான அரசியல் தலையீடு யாழ்பல்கலைக்கழகத்துக்கு வருவதற்கு என்ன காரணம்? 1995ம் ஆண்டு யாழ்ப்பாணம் மிகப்பபெரிய இடம்பெயர்வைச்சந்திக்கிறது.அப்போது பேராசிரியர் குணரட்ணம் துணைவேந்தராக இருக்கிறார்.

அவர் பல்கலைக்கழகத்தையும் இடம்பெயர்த்தி கிளிநொச்சிக்கு கொண்டு சென்று அங்கு அதை இயக்குகிறார். இந்த சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்துக்கு கொடியேற்ற வந்த அனுருத்த ரத்வத்தையிடமும்; தேவானந்தாவையும் பிடித்து பாலசுந்தரம்பிள்ளை தற்காலிக துணைவேந்தராக வருகிறார்.பின்னர் நிரந்தர துணை வேந்தராக வந்து இரண்டு தடவைகள(06வருடங்கள்); நீடிச்சார். இவரது காலத்தில் தான் பல்கலைக்கழகத்துக்குள் அரசியல் வரத்தொடங்கியது.இதன் பின் பேராசிரியர் சண்முகலிங்கத்தை டக்லஸிடம் கொண்டு சென்று காலில்விழுந்து கும்பிடச்சொல்லி அவருக்கு துணைவேந்தர் பதவியை வாங்கிக்கொடுக்கிறார் பாலசுந்தரம் பிள்ளை.

இதற்கு பின்னர் ரட்ணஐீவன்கூல் துணைவேந்தராக மகிந்தவால் நியமிக்கப்பட போகிறார் என்று எதிர்பார்த்த போது பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தை டக்கஸின்காலில் விழவைத்து மகிந்தரின் மனதைமாத்திரத்துக்கு ஒரு குழுவை தயார் செய்து அவரிடம் அனுப்பி நீண்ட கஷ்டத்துக்குப்பிறகு பேராசிரியர் சண்முகலிங்கத்திற்கும் ரட்ணஐPவன்கூலுக்கும் பதவி போகாது தடுத்து பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்துக்கு அந்தப்பதவியை டக்லஸ் வாங்கிக் கொடுக்கிறார். கொழுப்பில் எந்தச் சொல்வாக்கும் இல்லாத வசந்தி அரசரட்ணம் டக்லஸே தஞ்சமென்று இருந்து பதவியப்பெற்றதும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் கட்சி அலுவலகமாக மாற்றமடையத்தொடங்கியது.

அவ்வப்போது டக்லஸடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புக்கு ஏற்ப்ப நிர்வாகம் நடத்துபவராக அம்மையார் திகழ்கிறார். டக்லஸ் தன்னால் முடிந்தவரை பெண்துணை வேந்தரை அவ்வப்போது மிரட்டி தனது கட்சி உறுப்பினர்களை, தகுதியில்லாதவர்களை பல்கலைக்கழக காவலாளிகளாகவும்,சிற்றூழியர்களாகவும் நியமிக்க ஆரம்பித்தார். இந்த விடயங்கள் மானிய ஆணைக்குழுவுக்கு போனால் சமாளிப்பதற்காக அவ்வப்போது எஸ.;பி.திசநாயக்காவை வசந்தி அரசரட்ணத்தைக்கொண்டு யாழ்ப்பாணம் அழைத்து கவனிப்பது போல் கவனித்து அனுப்புகிறார்.அதில் எஸ்.பி குளிர்ந்து எது நடந்தலும் கண்டு கொள்வதில்லை. இதனால் சிறிபதியை தினமும் ஈ.பி.டி.பி வாகனத்தில் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி துணைவேந்தரை மூளைச்சலவை செய்கிறார்கள்.

எப்போதும் சிறிபதி துணைவேந்தர் அலுவலகத்தில் அமர்ந்திருந்து அங்கு வரும் பேராசிரியர்களை எள்ளிநகையாடுவது நடக்கிறது. இதனால் பேராசிரியர்கள் ,உத்தியோகஸ்தர்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். சிறிபதிக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள பட்டப்பெயர் ;பன்னாடை என்பதாகும்.பன்னாடை எப்போதும் நல்லதை விட்டுவிட்டு கூடாததுகளை மட்டும் தாங்கிவைச்சிருக்கும்.

அதே போலத்தான் சிறிபதியும் நல்லதுகளை விட்டுட்டு கூடாததுகளை மட்டுமே கதைத்துக் கொண்டிருப்பதால் இந்த செல்லப்பபெயர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழத்தில் சிறிபதிக்கு வைக்கப்பட்டுள்ளது. வெள்ளை வேட்டியுடன் வரும் இவர் மிக மோசமான வேலையை செய்வதாக பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் விசனப்பட்டுக் கொள்கிறார்கள்.

துணைவேந்தருக்கு சிறிபதி கெட்ட வார்ததைகளால் திட்டியதற்கு பீடாதிபதிகள் பலர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். சில பீடாதிபதிகள் தமது எதிர்ப்பை தெரிவிப்பதற்காக தமது பதவியை ராஐpனாமாச்செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தெரிகிறது. தற்போது ஈ.பி.டி.பி தலையீடு காரணமாக பல்பலைக்கழகத்தை அதனது சுதந்திரத்துடன் இயக்க முடியவில்லை. ஒவ்வொரு விடயத்துக்கும் அவரின் அனுமதி பெறவேண்டும். பேரவை உறுப்பினர்கள் 13 பேர் டக்லஸால் மூன்று வருடத்துக்கு ஒரு முறை நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவரும் மாதாந்தம் நடைபெறும் பேரவைக்கூட்டத்துக்கு முன் ஈ.பி.டி.பி கட்சி அலுவலகத்தில் கூட்டம் வைத்து என்ன செய்ய வேண்டும் என்று வலியுறுததப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் சொன்னது தொடர்பாகவே பேரவையில் முடிவுகள் எடுக்கப்படுகிறது.

சுயசிந்தனையுள்ள கல்வியாளர்கள் சுயமாக சிந்திக்க வேண்டிய விடயத்தை கல்வியறிவற்ற ஒரு அரசியல்வாதி தீர்மானிக்கின்ற கேடுகெட்ட நிலைக்கு யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் வந்துள்ளது. உலகம் போற்றிய பொறியியலாளரான துரைராஐா,பேராசிரியர் கைலாசபதி,பேராசிரியர் வித்தியானந்தன்,ஆகியோர் துணைவேந்தர்களாக இருந்து தமிழ் இனத்துக்கு பெருமை சேர்த்த பல்கலைக்கழகம் இன்று ஒரு அரசியல் கட்சியின் ஆட்டத்துக்கு ஆடுவது. மிகவும் கவலையானது.

இந்தப்பல்கலைக்கழகத்தை மீண்டும் தமிழன் தலை நிமிர்வுக்கானதாக மாற்றியமைக்க புலம்பெயர்ந்தவர்கள் துணை புரிய வேண்டும். தற்போது திரு.சிறிபதி தன்னை நிரந்தரமான பேரவை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்று அமைச்சர் டக்கலஸ் தேவானந்தாவை நச்சரிப்பதாகவும் இதற்கு அவர் ஆமா சொல்லியிருப்பதாகவும் அறியமுடிகிறது.

பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்துக்கு முதலாவது பெண் துணைவேந்தர் என்ற பட்டத்தையும் முதலாவது முதுகெலும்பில்லாத துணை வேந்தர் என்ற பட்டத்தையுமு; பெற்று சீரழிந்த நிர்வாகத்தை நடத்திவருகின்றார்.இதில் பல்கைலக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலையிட்டு கீழ்தரமான அரசியலுக்கு பல்கலைக்கழகத்தை இட்டுச்செல்லாமல் தடுக்க வேண்டும் என்று சமூக அக்கறையாளர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

நல்லூர் சிவம்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

மட்டக்களப்பு கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்!Top News
[Saturday, 2013-05-25 21:09:14]

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கிராம எல்லையில் குடிகொண்டு அருள்பாலிக்கும் கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்வசத்தின் திருக்குளிர்த்தியாடும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இவ்வாலய உற்சவம் கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமாகி சனிக்கிழமை காலை தீ மிதிப்பு, திருக்குளிர்த்தியாடும் வைபவத்துடன் நிறைவுபெற்றுள்ளது. இறுதி நாள் அன்னதானக் குழுவினரால் அன்னதானம் வழங்கப்பட்டது. தீ மிதிப்பு நிகழ்வில் ஐநூக்கு மேற்பட்ட பக்தர் கலந்து கொண்டிருந்தனர்.



வெசாக் தினத்தில் தீக்குளித்த பிக்கு மரணம்!
[Saturday, 2013-05-25 21:04:22]

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் மிருக வதையினை கண்டித்து தனக்கு தானே தீமூட்டிக்கொண்ட பௌத்த பிக்கு, சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி தலதா மாளிகைக்கு முன்பாகவே நேற்று வெள்ளிக்கிழமை அவர் தீ மூட்டிக்கொண்டார். வெசாக் தினத்தையொட்டி கண்டி தலதா மாளிகையில் விசேட மத நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே அவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டுள்ளார்.



இலங்கையைப் போல சிறந்த நிர்வாகத்தைக் கொண்ட நாடு உலகில் கிடையாது - பிரதமர்
[Saturday, 2013-05-25 20:09:26]

இலங்கையில் மதங்களுக்கிடையில் பாராபட்சம் நிலவுவதாகக் காட்டி நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் சர்வதேச நீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என பிரதமர் டி.எம். ஜயரட்ண குற்றம் சாட்டியுள்ளார். கண்டி தலதா மாளிகையில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் காலங்களில் எந்தவொரு நாடோ அல்லது இனவாதிகளோ நாட்டை அபகரிக்க இடமளிக்க முடியாது. நாட்டில் மதங்களுக்கிடையில் பாராபட்சம் நிலவுவதாகக் காட்டி நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான சூழ்ச்சிகளை சர்வதேம் மேற்கொண்டு வருகின்றது. எனவே இந்த விடயத்தில் அனைவரும் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியமாகும். நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் சகல மதங்களும் பராமரிக்கப்பட்டு மதத் தலங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இங்கு மதங்களுக்கிடையில் எத்தகைய ஏற்றத்தாழ்வும் கிடையாது.



அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த வைத்தியர் - கிண்ணியாவில் சம்பவம்
[Saturday, 2013-05-25 18:59:57]

கிழக்கு மாகாணத்தில் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அப்பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியினை வைத்து தைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக கடந்த 22 ஆம் திகதி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அப்பெண்ணின் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றுகுள் ஊசி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மீண்டும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்துவதற்காக அப்பெண் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



சார்க் நாடுகளின் திரைப்பட விழா இ்ம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பம்..
[Saturday, 2013-05-25 18:49:27]

இலங்கையிலுள்ள தெற்காசிய நாடுகளின் கலாசார மத்திய நிலையம் ஏற்பாடு செய்துள்ள சார்க் நாடுகளின் திரைப்பட விழா இம்மாதம் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தில் நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தான் தவிர்ந்த ஏனைய நாடுகள் இந்த திரைப்பட விழாவுக்காக சினிமா திரைப்படங்களையும் விவரணத்திரைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விழாவின் போது தெரிவு செய்யப்படும் சிறந்த திரைப்படங்கள் விவரணப்படங்கள் மற்றும் சிறந்த நடிகர் நடிகைகளுக்கு விருதுகளும் வழங்கப்படவுள்ளன. கடந்த ஆண்டில் இலங்கை திரைப்படம் ஒன்றே மேற்படி விழாவின் போது சிறந்த திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டது.



வராலற்று சிறப்பினைச் பதிவு செய்த தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு !Top News
[Saturday, 2013-05-25 17:43:54]

ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெரும் வராலற்று சிறப்பினைச் பதிவதாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் அதனையொட்டிய இடம்பெற்றிருந்த மாநாடும் அமைந்திருந்ததென மாநாட்டின் செயற்குழு தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டு செயற்குழுத் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : அடிமை ஒழிப்புக்குக் குரல் கொடுத்த பெருமகன் திரு. 'தாடுஸ் ஸ்டீவன்சன்' அவர்களின் பிறப்பிடமாகிய அமெரிக்காவின் பென்சில்வேனிய மாநிலத்தின் லாங்காஸ்டர் நகரில் தமிழீழசுதந்திர சாசனம் மே-18மம் நாள் சனிக்கிழமை (18-05-2013) உணர்வெழுச்சியுடன் முரசறையப்பட்டது.



கைதிகளுக்கு இம்முறை பொதுமன்னிப்பு இல்லை - சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர்!
[Saturday, 2013-05-25 17:39:43]

இம்முறை வெசாக் பண்டிகையின் போது சிறைக் கைதிகள் எவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லையென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே தெரிவித்துள்ளார். சிறு குற்றங்களை புரிந்து தற்போது சிறையில் உள்ள குற்றவாளிகள் சிலரின் பெயரை நீதி அமைச்சுக்கு பரிந்துரை செய்தபோதிலும் அதற்கான அனுமதி தமக்கு கிடைக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



கொழும்பு துறைமுக தீ விபத்து தொடர்பில் 13 பேரிடம் வாக்கு மூலம்!
[Saturday, 2013-05-25 17:31:37]

கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் இதுவரையிலும் 13 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகளும் இன்று இடம்பெற்றன. கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் நேற்று 24 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தீ விபத்தையடுத்து களஞ்சியசாலை தொகுதியை பொலிஸார் பொறுப்பேற்றதுடன் விசாரணைகளையும் துரிதப்படுத்தினர். இந்நிலையிலேயே இதுவரையிலும் 13 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.



தேன்மதுர தமிழ் இசையால் கோடிக்கணக்கான இதயங்களை கட்டிப்போட்ட மதுரக் குரல் இன்று ஓய்ந்தது! Top News
[Saturday, 2013-05-25 17:26:59]

பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் காலமானார். இருதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார். ஆயினும் இன்று சனிக்கிழமை சற்று நேரம் முன்னதாக அவர் தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 91. தென்னிந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக பின்னணி பாடி வந்த இவர், பட்டினத்தார் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 1923 ஆம் ஆண்டு மதுரையில் சௌராஸ்டிர குடும்பத்தில் பிறந்த இவரது தகப்பனார் பெயர் மீனாட்சி ஐயங்கார். 1950 ஆம் ஆண்டும் கிருஷ்ண விஜயம் என்னும் படத்தில் 'ராதே என்னை விட்டுப் போகாதடி'' என்னும் பாடலுடன் இவர் அறிமுகமானார். தமிழ் தவிர தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலுமாக 10, 000 பாடல்களுக்கும் அதிகமாக அவர் பாடியிருக்கிறார்.



கிளி.வட்டக்கச்சி இந்து மயானத்திற்கு எரிகொட்டகை கையளிப்பு! Top News
[Saturday, 2013-05-25 17:19:40]

வட்டக்கச்சி மம்மில் இந்து மயானத்திற்கு இராமநாதபுரத்தைச் சேர்ந்த அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை ஞாபகார்த்தமாக அவரின் குடும்பத்தவரால் எரிகொட்டகை அமைத்து வழங்கப்பட்டது. அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்களது நிதிப் பங்களிப்பில் வட்டக்கச்சி அறிவொளி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இவ் எரிகொட்டகை அமைக்கப்பட்டு, வட்டக்கச்சி கிராம முன்னேற்ற சங்கங்களிடம் கையளிக்கும் நிகழ்வு கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் வி.சுவிஸ்கரன் தலைமையில் மம்மில் இந்து மயானத்தில் இடம்பெற்றது.



இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பணிப்பெண் ஜோர்தானில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்! Top News
[Saturday, 2013-05-25 17:15:20]

ஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் கறுவாக்கேணியை சேர்ந்த 21 வயதான நாகேந்திரன் காந்திமதி என்ற பெண் ஜோர்தானில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இம்மாதம் 19-ம் திகதி அவரது குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 6-ம் திகதி உயிரிழந்ததாகக் கூறப்படும் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் தமக்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னரே அறிவிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் பிபிசி தமிழோசையிடம் கூறுகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 22ம் திகதி இவர் வீட்டுப் பணிப்பெண்ணாக ஜோர்தான் சென்றுள்ளார்.



இளம் பெண்ணை மிரட்டி பல தடவை பாலியல் வல்லுறவு - படத் தயாரிப்பாளர் கைது!
[Saturday, 2013-05-25 14:30:48]

யுவதியொருவரை தொடர்ச்சியாக மிரட்டி வல்லுறவுக்குட்படுத்தி வந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரொருவரை நாரஹெம்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யுவதி அதுருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யுவதி சினிமாவில் நடிப்பதற்காக தயாரிப்பாளரிடம் வந்துள்ளதாகவும் அவருக்கு வாய்ப்பு தருவதாகக் கூறி அவரை நிர்வாணமாக படமெடுத்து பின்னர் அதனை வெளியிடப்போவதாக மிரட்டியே குறித்த நபர் தொடர்ச்சியாக வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.



முக்கோண பாதையில் 3 கோள்கள் - இலங்கையர்கள் பார்வையிடலாம்!
[Saturday, 2013-05-25 14:27:24]

சூரியனை சுற்றியுள்ள கோள்களில் மூன்று கோள்கள் முக்கோண பாதையில் தற்போது சுற்றிவருவதை வானத்தில் பார்க்கலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார். இரவில் வானத்தில் தெட்டத்தெளிவாக தெரிகின்ற சனி, கோள்மண்டத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் மற்றும் சூரியனுக்கு மிகவும் அண்மையில் இருக்கின்ற புதன் ஆகிய கோள்களே முக்கோண பாதையில் சுற்றிவருகின்றன. இலங்கையின் வடமேல் வானத்திலேயே இதனை பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ள பேராசிரியர் சந்தன ஜயரத்ன இது போன்றதொரு நிகழ்வை 2021 ஆம் ஆண்டே பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



23வது ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் திங்களன்று ஆரம்பம்!
[Saturday, 2013-05-25 14:21:40]

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 23 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் ஹூன் மாதம் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த 23 ஆவது கூட்டத்தொடரின் அமர்வுகளின் போது நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் பல்வேறு நாடுகள் தொடர்பில் பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன. 47 உறுப்பு நாடுகள் இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதுடன் மேலும் பலநாடுகளும் அவதானிப்பு நாடுகளாகவும் கலந்துகொள்ளவுள்ளன.



ஈழத்தமிழருக்கு ஆதரவான கட்சி விரைவில் புதுடில்லியில் உதயமாகும் - தா.பாண்டியன்!
[Saturday, 2013-05-25 14:13:19]

புதுடில்லியில் விரைவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி நிச்சயம் அமையும். எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அது வெளிப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சென்னையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே பாண்டியன் இதனைத் தெரிவித்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுமிக்க ஆட்சியொன்று புதுடில்லியில் வெகுவிரைவில் அமையும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை விரைவாக எட்டுவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க முடியும் என்றும் பாண்டியன் தனது உரையில் குறிப்பிட்டார்.



13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு கோத்தபாயவிற்கு அதிகாரமில்லை - வாசுதேவ நாணயக்கார!
[Saturday, 2013-05-25 14:04:31]

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பாதுகாப்பு செயலாலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அதிகாரமோ உரிமையோ கிடையாது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவினால் முன் வைக்கப்படவுள்ள தனி நபர் பிரேரணை செல்லுபடியற்றதாகும். எனவே, அரசு மேற்படி பிரேரனைக்கு அங்கீகாரம் வழங்காது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.



மட்டக்களப்பு நுழைவாயிலில் வைக்கப்படும் புத்தர் சிலை இனங்களுக்கிடையே மனக்கசப்பை ஏற்படுத்தும் - யோகேஸ்வரன் எம்.பி பிரதமருக்கு கடிதம்!
[Saturday, 2013-05-25 13:57:56]

மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியானது இனங்களுக்கிடையில் மனக்கசப்பை ஏற்படுத்தும் செயலாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். புத்தர் சிலையை நிறுவுதல் தொடர்பில் பிரதமர் தி.மு ஜயரட்னவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



கல்லுடன் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு: முல்லைத்தீவில் சம்பவம்!
[Saturday, 2013-05-25 09:56:07]

முல்லைத்தீவு பனிச்சங்குளப் பகுதியில் பாலியல்வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்ததேகிக்கப்படும் நிலையில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நிலையில் இச் சடலம் இருப்பதாகவும் சடலத்திலுடன் கல்லுக்கட்டப்பட்டு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



ஆஸிக்கு செல்ல முயற்சித்த 21 இலங்கையர்கள் கேரளாவில் கைது!
[Saturday, 2013-05-25 09:30:44]

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 21 இலங்கை அகதிகள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பிரதேசத்தில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கியூ பிரிவு பொலிஸார் மற்றும் கேரளப் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின்படி இந்தச் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 7 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் நியூகொச்சின் பகுதி ஹோட்டல் ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னையிலிருந்து ரயில் மூலமாக கேரளா சென்றுள்ளனர்.



திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் விசாரணை செய்யவுள்ள இலங்கை அரசு!
[Saturday, 2013-05-25 09:14:17]

அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலையில் பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையத்தை (அமெரிக்கன் கோணர்) அமைப்பதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், திருகோணமலை நகரசபையுடன் கடந்த 22ம் நாள் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது. இந்த உடன்பாடு குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்படாதது சிறிலங்கா அரசாங்கத்துக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு முடிவு செய்துள்ளது.


INNSYS-20120930
AJRwindows22.05.13
TDE_Computers2011
TamilsGuid-191012-2013
Suresh-remax-2013-01-01
Ramans2011
Mahesan supramaniyam 031109
Canada Kanthasamy Kovil
RoyaShades-l2011(04-12-11)
NIRO-DANCE-100213
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com