Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
இசைஞானி இழையராஜாவின் நிகழ்வை நிறுத்தவேண்டும் - ஏன் ?
விமர்சனம் இணைப்பு.. Top News

[Saturday, 2012-10-06 11:14:46]
News Service

எதிர்வரும் நவம்பர் மாதம் 03ம் திகதி ரொறன்ரோவில் நடைபெறவுள்ள ,இசையுலகின் ஆசான் இசைப்புயல் இழையராஜாவின் இசை நிகழ்வு பற்றி எமக்கு பல விமர்சன மின்னஞ்சல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் அனேகமானவை நவம்பர்மாத்தில் இந்த நிகழ்வு வைப்பதை தடுக்கவேண்டும் என கருத்துடையவையாக உள்ளன.

  

ஆம் கார்த்திகை மாதமென்பது ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல உலகத்தமிழர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து மாவீரர்களை நினைவுகூர்ந்து அகவணக்க நிகழ்வுகளை செய்யும் உன்னதமான மாதமாகும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை!

ஆனாலும்!

கடந்த இரண்டுமாதமாக மேற்படி நிகழ்வின் ஏற்பாட்டாளா்கள் ரொறன்ரோவில் நடைபெறும் அனைத்து சிறிய பெரிய கழியாட்ட நிகழ்வுகளிலும் இந் நிகழ்வுபற்றி விளம்பரப்படுத்தி வந்தார்கள் - அப்போது யாரும் ஏன் இதை யோசிக்கவில்லை! சிந்திக்கவில்லை! கனடாவிலுள்ள அனைத்து பத்திரிகைகளும் வானொலி தொலைக்காட்சிகளும் பணத்தைப்பெற்றுக்கொண்டு கடந்த இரண்டு மாதங்களாக விளம்பரப்படுத்திவருகின்றன.

தற்போது நவம்பர் மாதம் என கூறி மேற்படி நிகழ்வை நிறுத்தமுயல்வது ஏற்புடையதன்று - அதுவும் குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளா்கள் பெருந்தொகைப்பணத்தை செலவிட்டுள்ளதாக அறியமுடிகிறது. பெருமளவான அனுமதிச்சீட்டுக்களை விற்றுத் தீர்த்துள்ளனர். இதை நடாத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும் தமிழர்கள் என்பதை சிந்திக்கவேண்டும். நவம்பர் மாதம் என்பதும் மாவீரர் வாரம் என்பதும் ஒவ்வொரு தமிழனது ஆன்மாவிலும் குடிகொண்டுள்ள நினைவுதின வாரம். இசைஞானி இழையராஜாவின் இசைநிகழ்வு பற்றிய விமர்சனங்கள் பொதுவாக கடந்த இரண்டுநாட்களாக பலரிடமிருந்து பல வடிவங்களில் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

எமது ஆசிரியர் குழு கூடி ஆராய்ந்து எடுத்துள்ள முடிவின்படி நிகழ்வு நிறுத்தப்படவேண்டும் என்ற கருத்தும் அதற்கு சாட்டாக மாவீரர்களது ஆத்மாக்களை பயன்படுத்தி பகடைக்காய்களாக பாவித்து அரசியலாக்கி அதை வைத்து ஊடகங்களை திசை திருப்பும் முயற்சியை முற்றாக நிராகரிக்கிறோம்.

ஒரு சாராரின் கருத்துப்படி இழையராஜா ஈழத்தமிழர்களுக்கு என்னத்தை பெரிதாக செய்தார் என்பதாகும்..

அவர் என்னத்தை செய்தார் என்பதிலும் - அவரை வைத்து யாரும் ஏன் எதையும் செய்யநினைக்கவில்லை என்பதே எமது கேள்வி?

உதாரணத்திற்கு அண்மையில் கனடா ஈழநாடு பத்திரிக்கை பாடகர் திருவாளர் உன்னி கிருஷ்ணனை வைத்து ஒரு நிகழ்வை நடாத்தியிருந்தது. சேர்க்கபட்ட நிதியனைத்தும் வன்னியிலுள்ள அன்பு இல்லச் சிறார்களுக்காக அனுப்பட்டதாக அறியமுடிகிறது. அவ்வாறு ஒரு நிகழ்வை நடாத்த வாருங்கள் என கேட்டு அதை இசைஞானி மறுத்திருத்தால் நாம் அனைவரும் அவரது நிகழ்வை புறக்கணிக்கலாம் விமர்சிக்கலாம் அப்படியேதும் முயற்சிகள் செய்யப்பட்டு மறுக்கப்பட்டிருந்தால் செய்தி இணையம் நிச்சயம் நிராகரிக்க உறுதுணைபுரியும்.

குறிப்பு.

இந்நிகழ்வின் ஏற்ப்பாட்டாளா்கள் யார் அவர்களது பின்னணி என்ன போன்ற விபரங்கள் - நல்லவை கெட்டவை வியாக்கியானங்கள் எவையும் நாம் அறிந்திருக்கவில்லை என்பதை தெரிவிப்பதுடன் - நிகழ்வை நிறுத்த உதவுமாறும் தமது கருத்துக்களை பிரசுரிக்குமாறும் கோரி எமக்கு மின்னஞ்சல்கள் அனுப்பிக்கொண்டிருக்கும் வாசகா்கள் மற்றும் பிரமுகர்கள் அனைவருக்கும் மற்றும் நிகழ்வு ஏற்பாட்டோடு சம்பந்தபட்ட அனைவருக்கும் நாம் கூறவிழைவது யாதெனில் - எதையும் பேசித்தீர்ப்பதில்தான் ஒரு தீர்வைக்காணமுடியும்! ஒரு இணக்கப்பாட்டை அடையமுடியும்! என்பதை வலியுறுத்தவிரும்புகிறோம்.

நன்றி

செய்தி இணையம்.

இழையராஜா கனடா வருகைபற்றி முதுபெரும் ஊடகவியலாளரும் விமர்சகர் மற்றும் ஆய்வாளருமாகிய திரு-நக்கீரன் தங்கவேலு அனுப்பிவைத்துள்ள விமர்சனம்:

--------------------- இடைத்தங்கல் முகாம்களில் அல்லல்படும் 200,000 மக்களது வாழ்வாதாரத்துக்கு உதவ இளையராசா வந்திருந்தால வாழ்த்தி வரவேற்றிருக்கலாம்.

இளையராசா குடிசையில் இருந்து தனது இசை ஞானத்தால் கோபுரத்துக்கு உயர்ந்தவர். தமிழிசையை, தமிழிசை பற்றிய அறிவு இல்லாத சாதாரண மனிதனும் சுவைத்துக் கேட்க வைத்தவர். நாட்டுப்புற மெட்டுக்களையும், மரபு வாத்தியங்களையும் தனது இசைப்படைப்பில் பயன்படுத்தி அவற்றுக்கு உயிர் கொடுத்தவர்.

இந்திப் பாடல் கேட்டு இரசித்து வந்த மக்களை தமிழ்ப்பாடல் கேட்க வைத்தவர்.

ஆனால் இதற்கு மேலாக அவருக்கு இனப்பற்றோ, மொழிப்பற்றோ, சமூகப்பற்றோ கிடையாது. தமிழ்ப் பற்றிருந்தால் தனது இராசையா என்ற பெயரை இளையராசா என்று மாற்றியவர் தனது பிள்ளைகளுக்கு கார்த்திகேயன், யுவன் ஷங்கர், பவதாரிணி என்ற வடமொழிப் பெயர்களை வைத்திருக்க மாட்டார்.

அவரது தமையனார் பாவலர் பொதுவுடமையையும் பகுத்தறிவையும் பரப்பியவர். அவர் பாடிய பாடல்களே இன்று இவருக்குக் குப்பைகளாம். "அந்தக் குப்பைகளையெல்லாம் கடந்து வெகுதூரம் வந்து விட்டேன்" என்கிறார்.

பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க மறுத்தவர். அதனால் ஒன்றும் பெரியாருக்கு இழப்பு இல்லை. இழப்பு இளையராசாவுக்குத்தான்.

ஈழத்தில் நம் சொந்தங்கள் கொத்துக் கொத்தாக, சதைக் குவியலாக, குருதிச் சேற்றில் பிணங்களாகக் கிடந்தபோது அதைப் பற்றி வாய்திறக்காதவர். இது வரை உலகம் கண்டிராத மிக மிகக் கொடூரமான முறையில் ஒரே வாரத்தில் 40 ஆயிரம் தமிழ் மக்கள், பெண்கள், குழந்தைகள் என முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர். தமிழீழ விடுதலை பற்றிக் கிஞ்சித்தும் அக்கறைப்படாதவர்.

மலேசிய வாசுதேவன் ( நடடா ராஜா மயிலைக் காளை நல்ல நேரம் வருகுது)

மனோ (தென்னங் கீற்றில் தென்றல் வந்து மோதும்)

வாணி ஜெயராம் (வீசும் காற்றே தூது செல்லு தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு)

ரி.எம். சவுந்தரராசன் (நடந்து வந்த பாதை தன்னைத் திரும்பிப் பாரடா)

எஸ்.எம். இராஜேஸ்வரி ( காகங்களே காகங்களே காட்டுக்குப் போறீயளா?

எஸ்.பி. பாலசுப்ரமணியம் + சித்திரா (பூகம்பத்தின் வேகத்திலே பூமி பட்ட பாட்டைப் பாரு காளைகளே)

ஹரிஹரன் (மண்ணில் விளைந்த முத்துக்களே! மரணம் ஏதடா)

ஓ.எஸ்.அருண் (கார்த்திகை 27, காலையிலே அதி காலையிலே)

நித்யஸ்ரீ மஹாதேவன் (எங்கள் தலைவன் பிரபாகரன்)

துள்ளிசை பாடகர் திப்பு (வெள்ளடியன் சாவலோ விடியும் போது கூவுது, வீட்டுக்குள்ள நீயிருந்து என்ன உறக்கம்?

கல்பனா (மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே) போன்ற பாடகர்கள் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்!

அதுவும் கார்த்திகை 27 எனும் பாடல் மாவீரர் வாரத்தில் பள்ளியெழுச்சிப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இன்னம் எத்தனையோ பாடகர்கள் விடுதலை எழுச்சிப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். ஈழத்து விடுதலைப் பாடல்களுக்கு பங்களிப்புச் செய்திருக்கிறார்கள்.

அந்த வரிசையில் திரையுலகக் கலைஞர்கள் பி.சுசீலா, உன்னிமேனன், கிருஷ்ணராஜ், சுஜாதா, எஸ்.என்.சுரேந்தர், கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் அறிவுமதி எனப் பலர் வருகிறார்கள். இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்கள், தொழிநுட்பக்கலைஞர்கள் என்று எமது போராட்டத்தைத் தம் தோளில் தாங்கிப் பிடித்த உறவுகளின் எண்ணிக்கை மிக அதிகமாகும்.

ஆனால் விதி விலக்காக ஒருவர் இருக்கிறார். அவர்தான் இளையராசா! அவர் மறந்தும் ஒரு பாடல் பாடவில்லை!

எந்த மரத்தின் கீழ் இருந்தாரோ இப்போது மட்டும் கடல் கடந்து, கடல்கடந்து வாழும் தமிழர்களைப் பார்க்க வருகிறாராம்! இதை நாம் நம்ப வேண்டுமாம்? அவரைக் கூப்பிட்டவர்கள் ஒரு பொது நோக்குக்குக் கூப்பிட்டிருந்தால் அதை மெச்சி இருக்கலாம். இப்போதும் இடைத்தங்கல் முகாம்களில் எந்த அடிப்படை வசதியுமின்றி அல்லல்படும் 200,000 மக்களது வாழ்வாதாரத்துக்கு உதவ வந்திருந்தால வாழ்த்தி வரவேற்றிருக்கலாம்.

ஆனால் இதில் தேறும் மிகு வருவாய் தாங்கள் பிறந்த சமூகம் பற்றிச் சிந்திக்காத, கவலைப்படாத தனிப்பட்ட நபர்களது பைக்குள் போகிறது.

-நக்கீரன்-

கனடா இளையராஜா இசை நிகழ்ச்சி பின்னணியில் இலங்கை அரசு-கவலையில் தமிழர்கள்!.. ஒன் இந்தியா இணையத்தில் செய்தி..

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கான நான்காம் ஆண்டு நினைவேந்தல், மயிலாடுதுறை - உலக தமிழர் பாதுகாப்பு இயக்கம்!Top News
[Monday, 2013-05-20 21:10:53]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமுன்தினம் மயிலாடு துறையில் இடம்பெற்றது (18 05 2013). இதில் ஏராளமான தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டதோடு படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலிகளையும் செலுத்தியுள்ளனர்.



நெதர்லாந் நாட்டில் இடம்பெற்ற தமிழினவழிப்பின் 4ம் அண்டு நினைவு நாள். Top News
[Monday, 2013-05-20 20:22:03]

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின் உச்சக்கட்டமே 18. வைகாசி 2009ம் ஆண்டாகும். வைகாசி 18ம் திகதியை உலகெங்கும் வாழ்கின்ற தமிழீழ உறவுகள் ஓர் துயரநாளாகவும் தமிழீழ மண்ணை மீட்டெடுக்க வேண்டுமென உறுதியெடுக்கின்ற நாளாகவும் எழுச்சிப்பூர்வமாக நினைவுகூர்ந்து வருகின்றார்கள்.



லயன் எயார் விமானம் தொடர்பில் கிளம்பியது புதிய சந்தேகம் - சுட்டு வீழ்த்தப்பட்டதா? கடத்தப்பட்டதா என குழப்பம்!
[Monday, 2013-05-20 19:51:45]

இரணைதீவுக் கடலில் 1998ம் ஆண்டில் வீழ்ந்த லயன் எயர் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது கடத்தப்பட்டதா என்ற சந்தேகம், அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இரணைதீவுக் கடலில் இந்த மாதம் 4ம் நாள் தீவிரவாத புலனாய்வுப் பிரிவின் வழிகாட்டலில், லயன் எயர் விமானத்தின் சிதைவுகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டனர். கடலில் 25 அடி ஆழத்தில் இருந்த சுழியோடிகளால் விமானத்தின் இரண்டு இறக்கைகள், மூன்று சக்கரங்கள் உள்ளிட்ட பல பாகங்கள் மீட்கப்பட்டன. இரண்டு நாட்கள் நீடித்த இந்த மீட்புப் பணியின் போது, பெண் ஒருவரின் தேசிய அடையாள அட்டை, செயற்கைப் பல், மற்றும் மனித எலும்புகள் சிலவும் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது.



வேலைநிறுத்த போராட்டத்தின் போது ஏதாவது ஒரு காரியாலயம் மூடப்பட்டால் நான் பதவி துறப்பேன்: பிரதியமைச்சர்
[Monday, 2013-05-20 19:04:39]

மின்சார கட்டண அதிகரிப்பிற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்த போராட்டத்தின் போது ஏதாவது ஒரு காரியாலயம் மூடப்பட்டால் நான் பதவிதுறப்பேன் என்று பிரதியமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். அரசாங்க காரியாலயங்கள் அல்லது எந்தவொரு தனியார் காரியாலயமும் நாளை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டால் நான் பதவிதுறப்பேன். என்று பெருந்தோட்ட கைத்தொழில் பிரதியமைச்சர் ஏர்ல் குணசேகர தெரிவித்துள்ளார். கம்பளை ரத்னாசார விஹாரையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு சவால் விடுத்தார்.



ஆட்கொணர்வு மனுவை மீளப்பெறுமாறு காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு படையினர் அச்சுறுத்தல்!
[Monday, 2013-05-20 19:00:15]

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெறுமாறு மனுதாரர்களுக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் 2009 ம் ஆண்டு மே 18ம் திகதி இராணுவத்தினரின் அறிவித்தலுக்கு அமைய சரணடைந்திருந்தனர். இதன் பின்னர் சரணடைந்தவர்கள் அவர்களது உறவினர்களின் கண்ணெதிரே படையினரால் பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். எனினும் அதன் பின்னர் அவர்களது நிலை என்னவென்று தெரியா நிலையில் அவர்களது உறவினர்கள் உள்ளனர்.



மக்கள் எழுச்சியைக் கண்டு ராஜபக்ஷ ரெஜிமென்ட் பயந்துவிட்டது - ரணில்!
[Monday, 2013-05-20 18:42:18]

ராஜபக்ஷ ரெஜிமென்ட் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்துள்ள நிலையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய தொழிற்சங்க போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தற்போதைக்கு வழங்கப்படத் தேவையில்லை - டக்ளஸ்!
[Monday, 2013-05-20 18:27:33]

தற்போதைக்கு மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் இரண்டு பிரதான இன சமூகங்களுக்கு இடையில் சரியான புரிந்துணர்வு எட்டப்படும் வரையில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்குவது தொடர்பிலான தீர்மானத்தை சற்றே ஒத்தி வைக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். வட மாகாணசபைக்கு காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சிங்கள மக்கள் அது குறித்து கவனம் செலுத்துவர், இந்த அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் தமிழ் மக்கள் அது குறித்து கவனம் செலுத்துவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



மீண்டும் த.தே.ம.மு உறுப்பினர்களை விசாரணைக்கு அழைத்தது குற்றத்தடுப்பு பொலிஸ்!
[Monday, 2013-05-20 18:17:34]

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொதுச் செயலாளர் உட் பட்ட 4பேர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று மீளவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் யாழ்.வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 18ம் திகதி மன்னாரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சமயம் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் இளைஞரணி தலைவர் எஸ்.சத்தியசீலன் உட்பட 15பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் நள்ளிரவு விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் முன்னணியின் உபதலைவர் சி.கஜேந்திரகுமார், மற்றும் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.வசந்தரூபன் ஆகியோர் இன்று காலை 9மணிக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.



இராணுவத்தினால் காணி சுவீகரிப்பு - தடுக்குமாறு நாமல் எம்.பிக்கு கடிதம்!
[Monday, 2013-05-20 18:13:18]

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காணியினை அரசாங்க அதிபர் குழுவினர் சுவீகரிக்க முயற்சிப்பதாகவும் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சிசாலை ஊழியர்கள் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 12 ஏக்கர் காணியில், முதற்கட்டமாக வனவள திணைக்களத்திற்கும், சிறுவர் பூங்காவிற்கும், இராணுவத்தினரின் புனித பூமிக்குமாக எமது காணி சுவீகரிக்கப்பட்டது.



வடக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரவில்லை: தயா மாஸ்டர்
[Monday, 2013-05-20 17:51:40]

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எந்தவொரு கட்சியையும் அணுகவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு எந்தவொரு அரசியல் கட்சியிடமும் கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட தயா மாஸ்டர் சந்தர்ப்பம் கோரியதாகவும் அதனை நிராகரித்ததாகவும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார். எனினும், இவ்வாறான எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



வவுனியாவில் 7 வயதுச் சிறுமி மீது பாலியல் வல்லுறவு - நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டம்!Top News
[Monday, 2013-05-20 15:33:34]

வவுனியா நெடுங்கேணி சேனைப்பிலவில் 7 வயது சிறுமியொருவரைப் பாலியல் பலாத்காரம் செய்தவரை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக்கோரி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பேரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் எதிராக நடத்தப்படுகின்ற சித்திரவதைகள் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றனர்.



பாராளுமன்றத்திற்கு செல்வது போன்று அடிக்கடி 4ம் மாடிக்கும் செல்கின்றோம் - அரியநேந்திரன் எம்.பி!
[Monday, 2013-05-20 15:21:41]

எப்போதும் தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை கிடைக்கின்றதோ அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பிரார்த்தனை செய்யும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கணடவாறு கூறினார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,



கோவையில் நடைபெற்ற மே 18 போர்க்குற்றநாள் நிகழ்வில் பெருமளவு ஈழ விடுதலை ஆதரவாளா்கள் பங்கேற்ப்பு. Top News
[Monday, 2013-05-20 10:26:35]

கோவையில் நேற்றையதினம் (18 05 2013) முள்ளிவாய்க்கால் இனப்படுகொல போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவான தமிழீழ விடுதலை ஆதரவாளா்களும் செயற்ப்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.



ஜனாதிபதி மஹிந்த சீனாவுக்கு ஆறாவது தடவையாக விஜயம்!
[Monday, 2013-05-20 09:16:57]

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் 22ம் நாள் தொடக்கம் 26ம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். எனினும் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை. ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர், சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் ஆறாவது பயணம் இதுவாகும். அண்மையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர், சிறிலங்கா அதிபர் நடத்தவுள்ள முதல் சந்திப்பு இதுவாகும்.



கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் நடைபெற்ற தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வு Top News
[Monday, 2013-05-20 09:15:07]

"ஈழத் தமிழ் மக்களுக்கான தீர்வு சுதந்திர இறைமை உடைய தமிழீழ அரசே"
- தமிழீழ சுதந்திர சாசன முரசறைவில் பிரதமர் உருத்திரகுமாரன் வலியுறுத்தினார்.

"தமிழீழ மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி அமைய விருக்கும் தமிழீழ அரசு ஜனநாயக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். சுதந்திர இறைமை உடைய அரசே தமிழ் மக்களுக்கு அவசியம். மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு சட்டமியற்றி, அதனை அமுல்படுத்தும் உரிமை இருக்கும். சட்டத்தின்முன் தமிழீழ மக்கள் அனைவருமே சரிசமமாக நடாத்தப்படுவார்கள். தமிழீழ அரசாங்கம் மதசார்பற்றதாக இருக்கும். தமிழ், முஸ்லீம் மக்களது தனித்துவம் பேணப்படும்.



கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் இம்மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம்: - சிவாஜிலிங்கம்
[Monday, 2013-05-20 09:12:26]

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. இதற்கான பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ரெலோவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.



கனடாவின் நகர்வுகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என்கிறது இலங்கை அரசு!
[Monday, 2013-05-20 09:11:55]

கனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் கனடா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என்பது குறித்து கவனிக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடத்தப்படுவது குறித்து கனடாவும் பஹாமாஸூம் அண்மையில் நடாத்திய பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டின் உண்மையான நிலைமைகள் குறித்து அந்தந்த நாடுகளுக்கு தெளிவுபடுத்துமாறு வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.



அரசின் யுத்த வெற்றிவிழா ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இரத்தக் கண்ணீரால் எழுதப்பட்ட ஒரு துக்க தினம். - ஜனா
[Monday, 2013-05-20 09:06:05]

யுத்த வெற்றிவிழா இலங்கை அரசைப் பொறுத்தவரை கொண்டாட்ட நிகழ்வாக இருக்கும். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இரத்தக் கண்ணீரால் எழுத்தப்பட்ட ஒரு துக்க தினம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவிக்கிறார். யுத்த வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறுவது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நோர்வே அரசு அதிர்ச்சி!
[Monday, 2013-05-20 08:52:13]

இலங்கை நீதிமன்றின் தீர்ப்புகள் தமக்கு அதிர்ச்சியளிப்பதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கைக்கான நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என கொழும்பு நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது. கொழும்பு மேலதிக நீதவான் அமாலி ரணவீர இந்த உத்தரவினை பிறப்பித்திருந்தார். முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனமான சகவாழ்வு மன்றத்தின் தலைவர் குமார் ரூபசிங்கவினால் நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உறுதிமொழி அளிக்கப்பட்டதனைப் போன்று நிதி உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நோர்வேயின் முன்னாள் தூதுவர் ஹில்டே ஹரால்ஸ்டட் மற்றும் இரண்டு அதிகாரிகள் 98.5 மில்லியன் ரூபாவினை வழங்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



பௌத்த பிக்குகள் பொறுமையுடனும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டும் - பிரதமர்
[Monday, 2013-05-20 08:39:20]

பௌத்த பிக்குகள் மிகவும் பொறுமையுடன் செயற்பட வேண்டுமென பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். சிலர் வேற்று மதங்களுடன் மோதல்களை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். இதனால் நாட்டின் பெரும்பான்மை இனத்திற்கு அதிக அழிவு ஏற்படும். இதனை பௌத்த மாநாயக்கத் தேரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பௌத்த மதத் தலைவர்கள் பொறுமையுடனும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டும். மக்களின் மனதுகளை வென்றெடுக்கக் கூடிய மதத் தலைவர்கள் இல்லையென்றால், எத்தனை பெரிய விஹாரைகள் அமைத்தாலும் அதில் பயன் கிடையாது என பிரதமர் தெரிவித்துள்ளார். களனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


TamilsGuid-191012-2013
Ramans2011
Suresh-remax-2013-01-01
INNSYS-20120930
Mahesan supramaniyam 031109
RoyaShades-l2011(04-12-11)
NIRO-DANCE-100213
Canada Kanthasamy Kovil
TDE_Computers2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com