Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 23, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
இம்மாத கடைசியில் கூடுகிறது - தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு
[Sunday, 2012-10-07 20:11:57]
News Service

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான ஒரு கோஷ்டியும், கேயார் தலைமையிலான இன்னொரு கோஷ்டியும் செயல்பட்டு வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் சங்கத்தின் தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கேயார் அணியிலிருந்து பலர் பிற நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அன்று முதலே சங்கத்தில் கோஷ்டி பூசல்கள் ஆரம்பமானது.

  

இரு அணியில் யார் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்கள் என்பதை காட்டிக் கொள்ள பல்வேறு நாடகங்கள் அரங்கேறியது. இந்த கோஷ்டி பூசல் நீதிமன்றம் வரை சென்றது. நீதி மன்றம் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில்தான் சங்கம் செயல்பட வேண்டும் என்று தீர்ப்பளித்ததை தொடர்ந்து எதிர் கோஷ்டி மவுனமானது.

சங்க விதிமுறைகளின் படி பொதுக்குழுவில் பெருவாரியான உறுப்பினர்கள் தற்போதைய நிர்வாகத்தின் மீதி அதிருப்தி தெரிவித்தால் அவர்கள் பதவி விலகி புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிறது சங்க விதி. இதனை இப்போது ஆயுதமாக எடுத்துக் கொண்டது எதிர் கோஷ்டி. சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தி எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எதிராக பொதுக்குழுவை கூட்டி அவரது தலைமையிலான நிர்வாகத்தை நீக்கி புதிய தேர்தல் நடத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது. சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது: ஆகஸ்ட் 4ந்தேதி சங்க அலுவலகத்தில் 194 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு எஸ்.ஏ.சந்திரசகேர் தலைமையிலான நிர்வாக குழு மீது முழு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கூட்ட வேண்டி சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் அடிப்படையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் விதி எண் 28ன் படி கூட்டப்படவில்லை. அதனால் தமிழ்நாடு சங்க பதிவு சட்டத்தின் படி சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

வருகி அக்டோபர் 28ந் தேதி அன்று காலை 10.30 மணிக்கு ராதா இன் பார்க் ஓட்டலில் பொதுக்குழு கூடுகிறது. அதில் சிறப்பு பொதுக்குழுவுக்கு தலைவரை தேர்ந்தெடுத்து எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையில் உள்ள நிர்வாக குழு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டள்ளது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

கேன்ஸ் திரைப்பட விழா பற்றி வித்யா பாலனின் பேட்டி
[Wednesday, 2013-05-22 18:37:18]

'குரு', 'பா', 'ஹே பேபி' போன்ற இந்தி படங்களில் நடித்த வித்யாபாலன், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தியில் எடுக்கப்பட்ட 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' படம் மூலம் பிரபலமானார். இப்படத்திற்காக மத்திய அரசின் தேசிய விருதும் பெற்றார். தொடர்ந்து கஹானி என்ற படத்தில் நடித்து இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்து கொண்டவர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள நடிகை வித்யாபாலன் அங்கு நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளார். அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி..!



'தனது கதாபாத்திரத்தை உயிர் துடிப்போடு செய்திருக்கிறார்' : தனுஷுக்கு ஸ்ரீதேவியின் பாராட்டு
[Wednesday, 2013-05-22 18:29:15]

முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள இந்தி படம் ராஞ்சனா. சோனம் கபூர் ஹீரோயின். முஸ்லிம் பெண்ணுக்கும், இந்து வாலிபனுக்கும் இடையே மலரும் காதல் பற்றிய கதை. ஆனந்த் எல்.ராய் இயக்கி உள்ளார். இப்படத்தின் சில காட்சிகளை சமீபத்தில் ஸ்ரீதேவி பார்த்தார். பின்னர் அவர் டுவிட்டர் பக்கத்தில் அதுபற்றி கூறும்போது :-



ஐந்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம்பெற்ற சினிமா நடிகையின் படம்
[Wednesday, 2013-05-22 17:55:42]

டெல்லியின் ஸ்பிரிங் டேல்ஸ் என்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பினருக்கான சுற்றுச்சூழல் பாடத்திட்டத்தில், நடிகையும், பாடகியும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கையையொத்த பாடம் இடம்பெற்றுள்ளது. அதில், பிரியங்காவின் குடும்ப படங்கள், மற்றும் 2000-ஆம் ஆண்டில் அவர் உலக அழகி பட்டம் பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்தப் பள்ளிக்கு சென்ற பிரியங்கா சோப்ரா, தன்னுடைய வாழ்க்கையையொத்த பாடம் இடம்பெற்றிருப்பதை கண்டு வியந்து போனார். ராணுவத்தில் பணிபுரிவோரின் குழந்தைகள் சிறுவயதில் பல இடங்களில் வசிக்கும் சூழ்நிலை ஏற்படுவதை குறித்த பாடமும், பிரியங்காவின் வாழ்க்கையை ஒத்து காணப்படுகிறது. பிரியங்காவின் தந்தை ராணுவத்தில் பணிபுரிந்ததால் அடிக்கடி வேறு ஊர்களுக்கு மாற்றலாக நேரிடும். எனவே, பிரியங்கா தனது சிறுவயதில், இந்தியாவில் பரேலி, லக்னோ, மும்பை ஆகிய இடங்களிலும், அமெரிக்காவில் நியூட்டன், மசாசுசெட்ஸ், அயோவா போன்ற இடங்களிலும் தனது வாழ்நாளைக் கழித்துள்ளார். இத்தகைய வாழ்க்கை முறையை குறிக்கும் பாடத்தில்தான் பிரியங்காவின் குடும்ப புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.



விஸ்வரூபம் 100வது நாளை எட்டியது: கமலுக்கு பெயின்டிங் பரிசு
[Wednesday, 2013-05-22 17:51:02]

விஸ்வரூபம் படம் 100 நாட்கள் கடந்துள்ளதை குறிக்கும் வகையில் அவருக்கு ஒரு பெயின்டிங் பரிசளித்துள்ளார் பிரபல ஓவியர் ஏபி ஸ்ரீதர். கமல்ஹாஸன் நடித்து தயாரித்து இயக்கிய படம் விஸ்வரூபம். நேற்று முன்தினம் இந்தப் படம் சத்யம் மற்றும் பிவிஆரில் நூறாவது நாளைத் தொட்டது. இந்த சிறப்பு நிகழ்வையொட்டி, கமலுக்கு அவரின் விஸ்வரூப கெட்டப்பை ஓவியமாக வரைந்து பரிசாக அளித்தார் பிரபல ஓவியர் ஏபி ஸ்ரீதர்.



சமூக சேவையில் ஆர்வம் காட்டும் குஷ்பு
[Wednesday, 2013-05-22 17:42:21]

சினிமாவுக்கு வெளியே குஷ்பு வேறு மாதிரியாக தெரிகிறார். அதாவது, நல்ல குடும்ப நிர்வாகி, நல்லதொரு தயாரிப்பாளர். அதையும் தாண்டி எதையும் தில்லாக நேருக்கு நேர் பேசும் அரசியல்வாதி என்றெல்லாம் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, கற்பு பிரச்னையில் தனது கருத்தை கடைசி வரை தைரியாக சொன்னவர் குஷ்பு. அதேபோல் கட்சி விசயங்களிலும் மனசில் பட்டதை சொல்லி வருகிறார். இதனால் அரசியல் வட்டாரங்களில் சமீபகாலமாக பேசப்படும் பிரபலமாகி விட்டார் குஷ்பு. இப்படிப்பட்ட குஷ்பு, சமீபகாலமாக சமூக அக்கறையிலும் மிகுந்தவராகி வருகிறார். குறிப்பாக, தன் கண்ணெதிரே நடக்கும் பொறுப்பற்ற செயல்கள், அரசு அதிகாரிகள் மெத்தனப்போக்கு, சாலைப் போக்குவரத்து, போதையில் வண்டி ஓட்டி விட்டு வருவது போன்ற செயல்களையும் சாடி வருகிறார். மனதில் தோன்றுவதை தனது டுவிட்டரில் அரங்கேற்றி வருகிறார் அப்படி தன் கண்ணில் படுவதை செல்போனில் படம் பிடித்தும் டுவிட்டரில் இடம்பெறச் செய்கிறார்.



வெளிநாட்டு பட நிறுவனங்களுக்கு இந்தியாவில் படப்பிடிப்பு நடத்த சிரஞ்சீவி அழைப்பு!
[Wednesday, 2013-05-22 17:39:09]

வெளிநாட்டு பட நிறுவனங்கள் இந்தியாவில் படப்பிடிப்பு நடத்த வரவேண்டும் என்று மத்திய அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவி அழைப்பு விடுத்துள்ளார். பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் படவிழாவில் சிரஞ்சீவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்தியா சினிமா வளர்ச்சியடைந்துள்ளது. நவீன தொழில்நுட்பங்களில் படங்கள் எடுக்கப்படுகின்றன. உலக தரத்தில் இந்திய படங்கள் தயாராகின்றன. இந்தியப் படங்கள் எடுப்பவர்கள் சர்வதேச அளவில் பேசப்படுகிறார்கள். வருடத்துக்கு 365 நாட்களும் இந்தியாவில் சினிமா படப்பிடிப்புகள் நடக்கின்றன. இந்திய தட்ப வெப்பநிலை அதற்கு உகந்ததாக உள்ளது. சில நாடுகளில் பனியும், சில நாடுகளில் மழையும் இருக்கும். அங்கு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடியாது. ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல. எப்போது வேண்டுமானாலும் படப்பிடிப்பை நடத்தலாம். படப்பிடிப்புக்கு ஏற்ற இடங்களும் உள்ளன. ஆஸ்கர் விருதை வென்ற லைப் ஆப் பை படம் இந்தியாவில்தான் எடுக்கப்பட்டது. எனவே வெளிநாட்டவர்கள் இந்தியாவில் படப்பிடிப்புகள் நடத்த முன்வர வேண்டும். கேன்ஸ் படவிழாவில் இந்திய படங்கள் அதிகம் பங்கேற்பது வளர்ச்சியை கூட்டுகிறது, என்றார்.



சில்க் ஸ்மிதாவை ரோல் மாடலாக கொண்டு வாழ்வில் சாதிக்கப்போகிறேன்! - சனாகானின் சபதம்
[Wednesday, 2013-05-22 17:34:45]

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில் உருவாகியுள்ள நடிகையின் டைரி படத்தில் நடித்திருப்பவர் சனாகான். அதற்கு முன்பே பல படங்களில் நடித்திருந்தபோதும், இப்போதுதான் சனாகான் என்ற பெயரை ரசிகர்கள் உச்சரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு காரணம் சில்க்ஸ்மிதா. அவரது கதாபாத்திரத்தில் நடிப்பதால் சனா மீதும் வெளிச்சம் பாய்ந்திருக்கிறது. அதனால், தனது மார்க்கெட்டு சூடுபிடித்திருக்கும் இந்த நேரத்தை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சனாகான், சில்க்கைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவரது கதையில் நடிக்க வேண்டும் என்றதும் அவரது முக்கியமான படங்களையெல்லாம் பார்த்தேன். அப்போதுதான் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி எந்தமாதிரி கேரக்டர்களில் எல்லாம் அவர் நடித்திருக்கிறார் என்பது புரிந்தது.



ஆன்மீகத்திற்கு மாறிப்போன சிம்பு...
[Wednesday, 2013-05-22 17:31:13]

சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தர் சிறந்த பக்திமான். மாலை நேரங்களில் அவரது வீட்டுக்கு சென்றால், பூஜை அறை மட்டுமின்றி வீடெங்கும் காட்சி தரும் அனைத்து சாமி உருவப்படங்கள் முன்பும் நின்று மனமுருகி வேண்டுவாராம். அப்படி அவர் வீட்டில் உள்ள மொத்த தெய்வங்களையும் கும்பிட்டு முடிப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகுமாம். அந்த அளவுக்கு பெரிய பக்திமான் அவர். வெள்ளிக்கிழமைகளில் 6 மணிக்கு மேல் தனது வீட்டில் இருந்து பத்து பைசாகூட வெளியில் விட மாட்டாராம். தொழிலாளிகள் வேலையை முடித்து விட்டு கூலி கேட்டு நின்றால்கூட நாளைக்கு வா என்று அனுப்பி விடுவாராம். அதோடு, மட்டுமின்றி நியூமராலஜியில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருபவர். இந்த சமயத்தில் இது நடக்கும் என்பதை துள்ளியமாக சொல்லி விடும் ஆற்றல் மிக்கவர், ஆனால், அவரது மகனான சிம்பு அதற்கு நேர்மாறாக இருந்தார். அப்பாவைப்பற்றி இதுவரை ஒரு கிசுகிசுக்கள்கூட எந்த பத்திரிகையிலும் வந்ததில்லை. ஆனால், சிம்புவைப்பற்றிய கிசுகிசுக்கள் வராத பத்திரிகைகளே இல்லை.



ஜி.வி.பிரகாஷ்குமார் - சைந்தவி திருமணத்திற்கு முதல்வர் ஜெயலலிதாவை அழைப்பு
[Wednesday, 2013-05-22 17:28:59]

வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். அதையடுத்து இப்போது பாரதிராஜா, விஜய் போன்றவர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராகியிருக்கும் அவர் இதுவரை 25 படங்களுக்கு இசையமைத்து விட்டார். இந்த நிலையில், பாடகி சைந்தவியை ஜூன் 27-ந்தேதி சென்னையில் திருமணம் செய்து கொள்கிறார். ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் பள்ளியில் படிக்கிற காலத்தில் இருந்தே நண்பர்களாம். இந்த நிலையில், ஜிவி.யின் இசையில் சைந்தவி பின்னணி பாடி வந்தபோது அவர்களது நட்பு காதலாக மாறியிருக்கிறது. இதுபற்றி இருவரும் வீட்டில் சொன்னபோது, அவர்களது திருமணத்துக்கும் சம்மதம் சொன்னார்களாம். அதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு அவர்களது நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் திருமணத்துக்கு இப்போது உறவினர் மற்றும் நட்பு வட்டாரங்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதில் ஜி.வி.பிரகாசும், சைந்தவையும் இறங்கியுள்ளனர்.



பின்னணி பாடகர் ஹரிஹரனுக்கு லதா மங்கேஷ்கர் விருது
[Wednesday, 2013-05-22 17:15:51]

ரோஜா, பம்பாய், ஜீன்ஸ், இந்தியன், சிவாஜி, குரு உள்பட பல தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் பாடல்கள் பாடியவர் ஹரிஹரன். இவருக்கு லதாமங்கேஷ்கர் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த விழாவில் பின்னணி பாடகர் ஹரிஹரன் இந்த விருதினையும் ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசையும் பெற்றுக்கொண்டார். அந்த மாநில அமைச்சர்கள் கைலாஷ் விஜய்வராகியா, லட்சுமிகாந்த் சர்மா ஆகியோர் விருதை வழங்கினர். மலையாளம், கன்னடம், மராத்தி, போஜ்புரி, தெலுங்கு, ஆகிய மொழி திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ள ஹரிஹரன் ஏற்கனவே கடந்த 2004ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் என்பது கூடுதல் தகவல்.



ஹன்சிகாவை 'அழகாக இருக்கிறீர்கள்' என கூறிய ஆளுநர்
[Tuesday, 2013-05-21 19:16:21]

'தீயா வேலை செய்யணும் குமாரு' ஷூட்டிங் ஜப்பானில் நடந்தபோது படப்பிடிப்பு தளத்துக்கு டோயோமா மாநில கவர்னர் நேரில் வந்தாராம். அங்கிருந்த ஹீரோயின் ஹன்சிகாவிடம் பேசிய அவர் 'நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்' என்று ஜப்பான் மொழியில் பாராட்டினாராம். ஹன்சிகாவுக்கு ஜப்பான் மொழி தெரியாது என்பதால் கவர்னர் பேசிய பேச்சை அருகிலிருந்தபடி ஒருவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொன்னாராம்.



சிங்கம் 2 படத்தின் டீசர் வெளிவந்துவிட்டது Top News
[Tuesday, 2013-05-21 19:06:29]

கொலிவுட்டில் சூர்யா நடிக்கும் சிங்கம் 2 படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹரி இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த ஓராண்டு காலாமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்ட கிளைமேக்ஸ் காட்சியை தென் ஆப்பிரிக்காவில் எடுத்துள்ளனர். இப்படம் ஏற்கெனவே சூர்யா நடித்து வெளிவந்த சிங்கம் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகியுள்ளது.



லட்சுமி மேனனின் 17வது பிறந்த நாள் கொண்டாட்டம்..
[Tuesday, 2013-05-21 19:04:06]

நடிகை லட்சுமிமேனன் சென்னையில் தனது 17வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார். இரண்டு மலையாளப் படங்கள் நடித்திருந்தாலும், சுந்தர பாண்டியன், கும்கி ஆகி படங்கள் அம்மணியின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளன. தற்போது மஞ்சப் பை, சிப்பி, குட்டிப்புலி, பாண்டியநாடு உள்பட 5 புதுப்படங்களில் நடித்து வரும், லட்சுமி மேனனுக்கு 16 வயது முடிந்து 17 வயது பிறந்துள்ளது. தனது 17வது பிறந்த நாளை சென்னையில் குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்த லட்சுமி மேனன். என் பாட்டியுடன் ஷாப்பிங் போய் தங்கச் சங்கிலி வாங்கினேன். மறக்க முடியாத பிறந்த நாள் இது, என்கிறார்.



அஜீத் - தமன்னா நடிக்கும் படத்தில் கானா பாலாவின் பாடல்
[Tuesday, 2013-05-21 18:02:41]

நடுக்கடலில கப்பலை இறங்கி தள்ள முடியுமா? என்று அட்டகத்தி படத்தில் பிரபலமடைந்த கானா பாலா தொடர்ந்து பல படங்களில் பாடல்களை எழுதி பாடி வருகிறார். தற்போது இவர் பாடிய உதயம் என்.ஹெச் 4, சூதுகவ்வும் ஆகிய படங்களின் பாடல்களும் ஹிட் ஆகியுள்ளன. இந்த நிலையில் அஜீத் நடிக்கும் படத்தில் கானா பாலா பாடல் பாடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் - தமன்னா நடிக்கும் படத்தில் தன்னுடைய டிரேட் மார்க் பாடலை கானா பாலா பாடப்போகிறாராம். 'தல' படத்தில் பாடவேண்டும் என்பது தன்னுடைய கனவு அது இப்போது நிறைவேறப்போகிறது என்று மகிழும் பாலா அவரது ஸ்டைலுக்கு ஏற்ப பாடல்களை எழுது பாடுவேன் என்கிறார்.



தெனாலிராமனின் கதையில் உருவாகும் படத்தில் வடிவேலுவிற்கு ஜோடியான மீனாட்சி
[Tuesday, 2013-05-21 17:59:15]

இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிக்கும் படம் தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும். இப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கிறார் மீனாட்சி தீக்ஷித். கிருஷ்ணதேவராயர் அரசவையில் இருந்த மதியூகியும் மந்திரியுமான தெனாலிராமனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் இது. இப்படத்திற்கு கஜபுஜ புஜகஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என தலைப்பு வைத்துள்ளனர். இதற்காக வடபழனி ஸ்டூடியோக்களில் பல லட்சம் செலவில் மன்னர் காலத்து அரண்மனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். இதில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க முதலில் பார்வதி ஓமன குட்டனிடம் பேசினார்கள். அவருக்கு ரூ.70 லட்சம் வரை சம்பளம் தர முன்வந்ததாக கூறப்பட்டது. ஆனால் வடிவேலு ஜோடியாக நடிக்க விருப்பமில்லை என்று முதலில் கூறிய பார்வதி, பின்னர் 1.5 கோடி வரை சம்பம் கேட்டாராம். இதையடுத்து தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துள்ள சினேகா உல்லலை அணுகினர். அவரும் வடிவேலுவுடன் நடிக்க விரும்பவில்லை என கூறிவிடவே, இறுதியாக நடிகை மீனாட்சி தீட்சித் தெரிவாகி உள்ளார். இவர் தெலுங்கு படங்களில் குத்தாட்டம் ஆடியுள்ளார். தமிழில் விஜயகாந்த் கடைசியாக இயக்கி நடித்த விருத்தகிரி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



விஜய்யின் பிறந்த நாளில் 'தலைவா' ஆடியோ வெளியீடு
[Tuesday, 2013-05-21 17:50:47]

'ஸ்ரீ மிஸ்ரி புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரித்து வரும் படம் 'தலைவா'. 'தாண்டவம்' படத்திற்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் விஜய், அமலா பால் ஜோடியாக நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யராஜ், சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்த நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22- ஆம் தேதி நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தினை கேரளாவில் வெளியிடும் உரிமையை 'தமீன்ஸ் ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் ஷிபு என்பவர் பெற்றுள்ளார்.



இளை‌ஞர்‌களை‌ கவரும்‌ சுவரா‌ஸ்‌யமா‌ன தி‌ரை‌க்‌கதை‌யில் உருவாகும் 'உன்‌ வருகை‌க்‌கா‌க லா‌லி‌""'
[Tuesday, 2013-05-21 17:42:40]

கொலிவுட்டில் நா‌ர்‌த்‌ ஈஸ்‌ட்‌ பி‌லி‌ம்‌ பே‌க்‌டரி‌ மற்‌றும்‌ ரங்‌கீ‌லா‌ எண்‌டர்‌பி‌ரை‌சஸ்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌த்‌துள்‌ள படம்‌ "உன்‌ வருகை‌க்‌கா‌க லா‌லி‌" '. பு‌துமுகம்‌ மெ‌ளரி‌யா‌, சோ‌னி‌யா‌ சூ‌ரி‌, ஜெ‌ய்‌லா‌னி‌, லக்‌ஷா‌ உட்‌பட பலர்‌ நடி‌க்‌கும்‌ இந்‌தப்‌ படத்‌தை ‌ரெ‌ங்‌கரா‌ஜன்‌ இயக்‌குகி‌றா‌ர்‌.. கதை‌, தி‌ரை‌க்‌கதை‌, வசனத்‌தை‌ பி‌.சி‌த்‌தி‌ரை‌ச்‌செ‌ல்‌வன்‌ எழுதி‌ உள்‌ளா‌ர்‌. கவி‌யரசு வை‌ரமுத்‌து, தா‌மரை‌ இருவரும்‌ பா‌டல்‌கள்‌ எழுத பி‌.சி‌.சி‌வன்‌ ஸ்ரீரா‌கவ்‌ இருவரும்‌ இசை‌யமை‌த்‌துள்‌ளனர்‌. கே‌.சி‌.ரவி‌தே‌வன்‌, ஜி‌.மதன்‌, ஐ.பி‌ரசா‌த்‌ ஆகி‌ய மூ‌வரும்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌க்‌கும்‌ இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ செ‌ன்‌னை‌யி‌ல்‌ தொ‌டங்‌கி‌ மலே‌சி‌யா‌வி‌ல்‌ இருபது நா‌ட்‌களும்‌, தெ‌ன்‌ கொ‌ரி‌யா‌வி‌ல்‌ பத்‌து நா‌ட்‌களும் நடை‌பெ‌ற்றது. இதன் படப்பிடிப்பு தற்‌போ‌து கே‌ரளா‌வி‌ல்‌ உள்‌ள ஆலப்‌பு‌ழா‌வி‌ல்‌ நடை‌பெ‌ற்‌று வருகி‌றது. ஆந்‌தி‌ரா‌வி‌ல்‌ உள்‌ள ரா‌மோ‌ஜி‌ரா‌வ்‌ பி‌லி‌ம்‌ சி‌ட்‌டி‌யி‌ல்‌ இறுதி‌கட்‌ட படப்‌பிடி‌ப்‌‌பு‌ நடை‌பெ‌ற உள்‌ளது.



"ஹாய் பேஸ்புக்கை லாக்கின் பண்ணு"... - என பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்
[Tuesday, 2013-05-21 17:34:56]

எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் சர்வானந்த். அதையடுத்து, தமிழில் இருந்து 50க்கும் மேற்பட்ட கதைகளை கேட்டும், எந்த கதையும் தனக்கு பிடிக்கவில்லை என்று மறுத்து வந்தவர், இப்போது ஜேகே என்னும நண்பனின் வாழ்க்கை என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் இப்போது படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. இப்படத்தில் கணினி மூலம் காதல் செய்யும் விதத்தில் ஒரு பாடலை படமாக்கியுள்ளார்களாம். ஹாய் பேஸ்புக்கை லாக்கின் பண்ணு என்று தொடங்கும அந்த பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், மேகா இருவரும் பாடியுள்ளார்களாம். 25 லட்சம் ரூபாய் பொருட்செலவில் உருவாகியுள்ள அந்த பாடல் காட்சியில் சர்வானந்துடன் அவானா, மேக்னா என்ற இரு மும்பை மாடல் அழகிகள் நடனமாடியுள்ளார்களாம். பேஸ்புக்கிலேயே சதா கடலை போடும் இன்றைய இளைஞர், இளைஞிகளின் மனநிலையை பதிவு செய்யும் விதமாக இப்பாடல் உருவாகியுள்ளதாம்.



சினிமாவை விட சைடு பிஸ்னஸில் அதிகம் சம்பாதிக்கும் சோனியா அகர்வால்
[Tuesday, 2013-05-21 17:27:50]

டைரக்டர் செல்வராகவனால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர் சோனியா அகர்வால். அதையடுத்து இவர்கள் இருவரும காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தனர். அதையடுத்து செல்வராகவன் மறுமணம் செய்து கொண்டபோதிலும், சோனியாஅகர்வால் அந்த மாதிரி துணையை தேடிக்கொள்ளவில்லை. மீண்டும் ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரியாகி தற்போது பரவலாக நடித்துக்கொண்டிருக்கிறார். பாலக்காட்டு மாதவன் என்ற படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார் சோனியாஅகர்வால். இந்த நிலையில், சினிமாவை மட்டுமே அவர் முழுசாக நம்பிக்கொண்டிருக்கவில்லை. தனது தம்பியைக்கொண்டு இசைப்பள்ளி ஒன்றை நடத்தி வருபவர், அழகுக்கலை பயிற்சி பள்ளி உள்பட சில சுயதொழில்களிலும் ஈடுபட்டுள்ளாராம். அதனால், சினிமாவில் சம்பாதிப்பதைவிட சைடு பிஸ்னஸ்களில்தான் சோனியா அகர்வாலுக்கு தற்போது நல்ல வருமானமாம். இப்படியே தொடர்ந்து எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபர் பட்டியலில் சோனியா அகர்வால் இடம்பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள்.



சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் - பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்
[Tuesday, 2013-05-21 17:22:43]

மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். டி.எம்.சவுந்தரராஜன் சென்னை மந்தவெளியில் உள்ள அவருடைய வீட்டில் இருந்தபோது, கால் தவறி கீழே விழுந்தார். அதில், அவருடைய தலையில் அடிபட்டு காயம் அடைந்தார். அதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர், வீடு திரும்பிய அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிஎம்எஸ்-ஐ பரிசோதித்த டாக்டர்கள், அவருடைய கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தார்கள். இதற்காக அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள். கடந்த 20 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்றபின், டி.எம்.சவுந்தரராஜன் குணம் அடைந்தார். இதையடுத்து அவர் வீடு திரும்பினார்.


TDE_Computers2011
TamilsGuid-191012-2013
INNSYS-20120930
Ramans2011
Canada Kanthasamy Kovil
RoyaShades-l2011(04-12-11)
AJRwindows22.05.13
Suresh-remax-2013-01-01
NIRO-DANCE-100213
Mahesan supramaniyam 031109
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com