Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
செக்ஸ், சிகரட்டை விட இப்போது மோகம் பேஸ்புக், டுவிட்டர் மீது தான்!
[Monday, 2012-10-08 07:46:32]
News Service

காலத்துக்கு ஏற்ப மக்களின் விருப்பங்களும் மாறுகின்றன. ஒரு காலத்தில் சினிமா மீது மக்களுக்கு அதிக மோகம் இருந்தது. இப்போது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்கள் மீது அதிக மோகம் கொண்டுள்ளனர். பலருக்கு செக்ஸ், சிகரெட் போன்றவற்றை விட இவையே அதிக ஆசையை தூண்டுவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

  

சிகாகோ பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை சார்பில் ஜெர்மனியில் ஒரு வாரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் 18 முதல் 85 வயது உடையவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மது, சிகரெட், செக்ஸ் மற்றும் பல்வேறு விருப்பங்கள் குறித்து அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

அவர்களில் பெரும்பாலானோர் பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமுதாய வலை தளங்களில் படங்களை பார்ப்பது, படிப்பது, கருத்துகளை எழுதுவது ஆகியவற்றை தவிர்க்கவே முடியவில்லை என்று கூறியுள்ளனர். மது, செக்ஸ் போன்ற எல்லாவற்றையும் விட அதிகமாக தங்களின் ஆசையை தூண்டுவது இவை என்று தெரிவித்துள்ளனர்.

ஆய்வில் பங்கேற்ற சிலர், எது ஆசையை தூண்டினாலும் எல்லாவற்றையும் விட வேலை செய்வதே தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளனர். சினிமா, டிவி பார்ப்பதும் தவிர்க்க முடியாது என்று பலர் கருத்து கூறுவதாக ஆய்வு நடத்தியவர்கள் தெரிவித்தனர்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

கடந்த ஆண்டில் 80 இலட்சம் பேர் அகதிகளாக இடம்பெயர்வு - ஐ.நா தகவல்!
[Wednesday, 2013-06-19 18:04:22]

தமது இருப்பிடங்களை விட்டு பலவந்தமாகத் தப்பி ஓடச் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது. ருவண்டா மற்றும் முன்னாள் யூகோஸ்லாவிய நெருக்கடி காலகட்டத்துக்குப் பிறகு இதுதான் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படும் காலமாகும். கடந்த ஆண்டில் 80 லட்சம் பேர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் போர் காரணமாகவே இடம்பெயர்ந்தனர்.இது மிகவும் மோசமான நிலைமை என்றும், சிரியாவின் மோதல் காரணமாகவே மிகவும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததாகவும் ஐநாவின் அறிக்கை ஒன்று கூறுகின்றது.



22 அணுகுண்டுகளை நெதர்லாந்தில் பதுக்கி வைத்துள்ளது அமெரிக்கா - முன்னாள் பிரதமர் பரபரப்புத் தகவல்!
[Wednesday, 2013-06-19 17:43:32]

அமெரிக்காவுக்கு சொந்தமான 22 சக்தி வாய்ந்த அணு குண்டுகள் நெதர்லாந்தில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து முன்னாள் பிரதமர் ரூட் லுபர்ஸ் தெரிவித்துள்ளார். நேஷனல் ஜியாக்ரபி என்ற சேனலின் செய்தி படத்திற்காக பேட்டியளித்த லுபர்ஸ் இவ்வாறு கூறியுள்ளார். 1982 முதல் 94 வரை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 22 சக்தி வாய்ந்த அணு குண்டுகள் பர்பண்ட் நகரில் உள்ள வோல்கெல் விமானப்படை தளத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. 2013 வரை அவை இங்கேயே இருக்கும் என நான் நினைத்ததில்லை என்று அவர் கூறியுள்ளார்.



சந்திரனில் தூங்கிக் கொண்டிருக்கும் 280 எரிமலைகள் - அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
[Wednesday, 2013-06-19 17:38:23]

அவுஸ்ரேலியாவில் உள்ள கர்டின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சந்திரன் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது,சந்திரனின் மேற்பரப்பில் 66 எரிமலைகள் இருப்பதற்கான வாய்ப்பு தென்படுவது தெரிந்தது. அதே நேரத்தில் கண்ணுக்கு தெரியாமல் 280 எரிமலைகள் அங்கு மறைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை சந்திரனின் மேற்பரப்பில் ஈரமற்ற நிலையில் இறுகி கிடக்கின்றன. இந்த தகவலை ஆய்வு மேற் கொண்டுள்ள பேராசிரியர் வில்பெதர்ஸ்டோன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் அறிவித்துள்ளனர்.



ரஷ்ய இராணுவத் தளபாடக் கிடங்கில் பாரிய வெடிவிபத்து!
[Wednesday, 2013-06-19 17:35:03]

ரஷ்யாவின் தென்மேற்கில் உள்ள சமரா பகுதியில் ராணுவ பயிற்சி முகாம்கள் உள்ளன. அங்கு ராணுவத் தளவாடங்களுக்கான கிடங்கு ஒன்று இயங்கி வருகின்றது.நேற்று மாலை இந்தக் கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் தீ கிடங்கு முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. ராணுவ தளவாடங்கள் இருந்த கிடங்கில் தீ பிடித்ததால் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தீயினால் வெடித்து சிதறின.முதலில் ஐந்து வெடி சப்தங்கள் கேட்டதாகவும், இதனால் ஏற்பட்ட தீ மளமளவென பரவ தொடங்கியதாகவும் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீ பிடித்து பல மணி நேரங்கள் கழிந்தும் வெடி சப்தங்கள் கேட்டுக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலில் 4 அமெரிக்கப் படையினர் பலி!
[Wednesday, 2013-06-19 17:29:49]

ஆப்கானிஸ்தானில் பஹ்ராம் விமான தளம் மீது தலிபான்கள் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 4 அமெரிக்கப் படையினர் பலியானதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏவுகணை அல்லது மோட்டார் தாக்குதலிலே இடம்பெற்றதாக நம்பப்படுகிறது. எனினும் மேலதிக விபரங்கள் எதையும் அமெரிக்க அதிகாரிகள் வெளியிடவில்லை. இந்தத் தாக்குதல் காபூல் நகரின் வடபகுதியிலிருந்து 30 மைல் தூரத்தில் நடந்துள்ளது.



அமெரிக்காவில் 20 வாரக் கருவைக் கலைக்க தடை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றம்.
[Wednesday, 2013-06-19 12:54:13]

அமெரிக்காவில் 20 வாரக் கருவைக் கலைக்க தடை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கு இந்த சட்ட மசோதாவுக்கு அதிக ஆதரவு இருந்த நிலையில், எளிதாக மசோதா நிறைவேற்றப்பட்டாலும், அடுத்த கட்டமாக செனட் குழுவுக்கு இந்த மசோதா செல்லும். செனட் குழுவில் இந்த சட்ட மசோதாவுக்கு ஏராளமான எதிர்ப்புகள் உள்ள நிலையில், அங்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, பிறகு அதில் அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்ட பிறகே சட்டமாக்கப்படும்.



ஃபுகுஷிமா அணு உலையின் அடியிலுள்ள நிலத்தடி நீரில் STRONTIUM கதிர்வீச்சு!
[Wednesday, 2013-06-19 12:52:00]

ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணுவுலையின் அடியிலுள்ள நிலத்தடி நீரில் ஆபத்தான கதிர்வீச்சு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. ஸ்டிராண்டியம் (STRONTIUM), டிரைட்டியம் (TRITIUM) எனப்படும் கதிர்வீச்சு ரசாயனங்கள் கலந்திருப்பதாக டோக்கியோ மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது. அணுவுலைகளிலும், அணு ஆயுதங்களிலும் பயன்படுத்தப்படும் யூரேனியம் (URANIUM) மற்றும் புளுட்டோனியம் (PLUTONIUM) ஒன்றோடு ஒன்று கலக்கும் போது ஸ்டிராண்டியம் (STRONTIUM) வெளியேறுகிறது.



4500 படையினரை வீட்டுக்கு அனுப்புகிறது பிரிட்டன் - செலவைக் குறைக்கும் நடவடிக்கை!
[Wednesday, 2013-06-19 07:43:40]

செலவுக் குறைப்பு நடவடிக்கை காரணமாக பிரிட்டனில் 4,500 படை வீரர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.இது குறித்து பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ள தகவல்:தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்னையைத் தீர்க்க அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ஒதுக்கப்படும் தொகை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே ராணுவத்தில் 20 சதவீதம் அளவுக்கு ஆள்குறைப்பு செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.



சிரியப் பிரச்சினைக்கு ஜெனிவாவில் பேச்சு - அமெரிக்கா, ரஷ்யா விருப்பம்!
[Wednesday, 2013-06-19 07:36:44]

சிரியாவில் நிகழ்ந்து வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர அரசும், கிளர்ச்சியாளர்களும் ஜெனீவாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவும், ரஷியாவும் விருப்பம் தெரிவித்துள்ளன. சிரியாவில் அதிபர் பஷார் அல் அஸாதின் ராணுவத்தை எதிர்த்துக் கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்கத் தாங்கள் தயாராக இருப்பதாக அமெரிக்கா சமீபத்தில் தெரிவித்தது. எனினும், ரஷியா இதை விரும்பவில்லை. அரபு நாடுகளில் தனது முக்கியமான தோழமை நாடான சிரியாவின் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவே ரஷியா விரும்புகிறது.



ஈரானுடன் பேசத் தயார் - ஒபாமா அறிவிப்பு!
[Wednesday, 2013-06-19 07:32:45]

ஈரான் நாட்டுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டதால் சர்வதேச அளவில் பல்வேறு பொருளாதார தடைகளுக்கு ஈரான் உள்ளானது. இப்போது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஹசன் ரெஹானி புதிய அதிபராகத் தேர்வாகியுள்ளார்.அணு ஆயுத விஷயத்தில் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளத் தயார் என்றும் ரெஹானி கூறியுள்ளார்.



ஆப்கானிஸ்தான் படைகளிடம் நாட்டின் பாதுகாப்பை ஒப்படைத்தது நேட்டோ படை!
[Wednesday, 2013-06-19 07:25:29]

ஆப்கானிஸ்தான் படைகளிடம், நேட்டோ படைகள், பாதுகாப்பு பொறுப்பை நேற்று முறைப்படி ஒப்படைத்தன. அல் குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன், ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்தார். அவரை ஒப்படைக்க, ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தலிபான்கள் மறுத்ததால், 2001ல், அமெரிக்கா, அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த போரினால், தலிபான்கள் ஆட்சியை இழந்து, பாகிஸ்தான் எல்லையில் ஓடி ஒளிந்தனர்.அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தற்போது, ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த படைகளுக்கு எதிராக, தலிபான்கள் அடிக்கடி, தற்கொலை படை தாக்குதலை நடத்தி வருகின்றனர்.



அமெரிக்காவின் இரகசியங்கள் தொடர்ந்து வெளிவரும்! - சிஐஏ முன்னாள் பணியாளர் எச்சரிக்கை.
[Tuesday, 2013-06-18 19:18:52]

இணையதள தகவல்களை அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு வேவு பார்த்தது குறித்த விபரங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடன், இது போன்ற உண்மைகள் வெளிவருவதை அமெரிக்காவால் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். ஹாங்காங்கில் தஞ்சம் அடைந்துள்ள ஸ்னோடன் நேற்று கார்டியன் பத்திரிக்கைக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- என்னை ஜெயிலில் அடைப்பதன் மூலமோ அல்லது கொலை செய்வதன் மூலமோ அமெரிக்க அரசு இதனை மூடி மறைக்க முடியாது என்பதை கூறிக்கொள்கிறேன். உண்மை வெளிவந்து கொண்டிருக்கிறது. இதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.



மரடோனாவின் உருவம், கையெழுத்தை பயன்படுத்திய சீன நிறுவனத்துக்கு 3 மில்லியன் யுவான் அபராதம்!
[Tuesday, 2013-06-18 19:15:27]

அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் டியாகோ மரடோனா. கால்பந்தாட்டத்தில் பல சாதனைகளை படைத்துள்ள இவரின் உருவம் மற்றும் கையெழுத்தை சீனாவைச் சேர்ந்த தி9 என்ற நிறுவனம் இணையத்தள கார்ட்டூன் விளையாட்டில் பயன்படுத்தியுள்ளது. இதற்கு மரடோனாவிடம் இருந்து அவர்கள் முறையான அனுமதி பெறவில்லை. இதைபற்றி அறிந்த மரடோனா தனது படத்தையும் கையெழுத்தையும் தவறாக பயன்படுத்தி விளையாட்டை உருவாக்கிய நிறுவனத்தின் மீதும், இணையத்தில் வெளியிட்ட சினா நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடர்ந்தார்.



தனக்குத் தானே அறுவைச் சிகிச்சை செய்த முதல் டாக்டர்!
[Tuesday, 2013-06-18 19:10:44]

பனிப்பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ரஷ்ய ஆய்வு கூடத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டராக பணியாற்றியவர், லியோனிட் ரோகோசோவ். 29-4-1961 அன்று காலை இவருக்கு திடீரென சோர்வு, வாந்தி, காய்ச்சல் என ஒன்றுபட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. சிறிது நேரத்திற்கு பிறகு கடுமையான வயிற்று வலியும் சேர்ந்துக்கொள்ள மனிதர் துடிதுடித்துப் போனார்.தனக்கு தெரிந்த கை வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தும் வயிற்று வலி மட்டும் குறைந்தபாடில்லை. ரஷ்யாவின் தலைமை ஆய்வு நிலையத்திற்கு செல்ல வேண்டுமானால் ஆயிரத்து 600 கிலோ மீட்டர் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும்.



பறக்கும் மோட்டார் சைக்கிள் - இங்கிலாந்து விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!
[Tuesday, 2013-06-18 19:05:46]

இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதுவிதமான பறக்கும் மோட்டார் சைக்கிளை தயாரித்துள்ளனர். இந்த மோட்டார் சைக்கிளில் விமானம் மற்றும் கப்பலில் இருப்பது போன்று 6 புரோபெல்லர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் 2 முன்புறமும், 2 பின்புறமும் மற்றும் ஓரங்களில் இருபுறமும் தலா ஒன்று என்ற வகையில் அவை உள்ளன. 95 கிலோ எடையுள்ள இந்த மோட்டார் சைக்கிள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்க கூடியது.இது சக்தி வாய்ந்த 2 பேட்டரிகளால் இயக்கப்படுகிறது. இந்த பறக்கும் மோட்டார் சைக்கிளின் செய்முறை பயிற்சி பராகுவேயில் நடைபெற்ற கண்காட்சியில் நடத்தப்பட்டது.



சீன அதிபருடனான பேச்சு விபரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டது அமெரிக்கா!
[Tuesday, 2013-06-18 17:54:56]

சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை குறித்து இந்திய அதிகாரிகளிடம் அமெரிக்கா விளக்கம் அளித்தது. சமீபத்தில் அமெரிக்கா வந்திருந்த சீன அதிபர் ஜீ ஜின்பிங், அந்நாட்டு அதிபர் ஒபாமாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.அதிபராக ஒபாமா பொறுப்பேற்றவுடன், இது போன்ற முக்கிய கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து தனது நட்பு நாடுகளிடமும், கூட்டாளி நாடுகளிடமும் அந்நாட்டு அரசு விளக்கமளிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.



இருகால்களும் செயலிழந்த பெண் கடலில் சுழியோடிச் சாதனை!
[Tuesday, 2013-06-18 07:34:15]

இரு கால்களையும் இழந்த பெண், சக்கர நாற்காலியை தானே வடிவமைத்து, அதன் மூலம் கடலில் சுழியோடி சாதனை படைத்துள்ளார். பிரிட்டனைச் சேர்ந்தவர், சூ ஆஸ்டின். 16 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மர்ம காய்ச்சலால், இவரது இரு கால்களும் செயல் இழந்தன. எனினும், நம்பிக்கையை கை விடாத ஆஸ்டின், தான் கற்றிருந்த நீச்சல் மீது, அலாதியான காதல் கொண்டிருந்தார். இதனால், மீண்டும் முன் போலவே நீந்த வேண்டும் என, ஆசைப்பட்டார். இதையடுத்து, தனக்கு வேண்டிய சக்கர நாற்காலியை தானே, பிரத்யேகமான முறையில் வடிவமைத்தார். இதன் மூலம், மீண்டும் நீச்சல் பழகிய ஆஸ்டின், கடலிலும் நீந்தி சாதனை படைத்துள்ளார்.



சுமாத்ரா காட்டுத் தீயால் புகைமூட்டத்தில் சிக்கிய சிங்கப்பூர், மலேசியா - பாடசாலைகளுக்கு விடுமுறை!
[Tuesday, 2013-06-18 07:30:29]

சுமத்ரா காடுகளில் ஏற்பட்ட தீயால், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் புகை சூழ்ந்துள்ளது. இதனால், பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின், சுமத்ரா தீவில் உள்ள காடுகளில், தீ பிடித்துள்ளது. இதனால், இரவு பகலாக காட்டு தீ எரிந்து கொண்டிருக்கிறது. இந்த தீயினால் ஏற்பட்ட புகை, சிங்கப்பூரை சூழ்ந்துள்ளது. இந்த புகை மண்டலம், மலேசியாவிலும் பரவி வருகிறது. கடும் புகை மண்டலத்தால், மக்கள் கண் எரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பலர் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தயங்குகின்றனர். நேற்று பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. காட்டு தீ தொடர்ந்து எரிவதால் ஏற்படும் புகையினால், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படும், என அஞ்சப்படுகிறது.



பாலியல் பலாத்காரம் செய்த தந்தையின் தலையை சீவியெறிந்தார் மகள்!
[Tuesday, 2013-06-18 07:25:10]

பப்புவா நியூ கினியா நாட்டை சேர்ந்த இளம் பெண், தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையின், தலையை துண்டித்துள்ளார். இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ள தீவு பப்புவா நியூ கினியா. இங்குள்ள ஒரு கிராமத்தில், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் வெளியே சென்றிருந்த நேரத்தில், தனது மூத்த மகளை, தந்தை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். மீண்டும் இந்த முயற்சியில் ஈடுபட முயன்ற தந்தையின் தலையை, 18 வயது மகள், அரிவாளால் வெட்டினார். இதில் தந்தை பலியானார். இந்த சம்பவத்தை அறிந்த போலீசார், இளம் பெண்ணை கைது செய்ய முயன்றனர்.ஆனால், கொடுர தந்தையை தீர்த்து கட்டிய மகளை கைது செய்ய, அந்த கிராமத்தினர் அனுமதி மறுத்து விட்டனர். கிராம பெரியவர்களும், பாதிரியாரும் கேட்டு கொண்டதற்கிணங்க, அந்த பெண் கைது செய்யப்படவில்லை.



உலகின் அதிவேக கணினியைக் கண்டுபிடித்து சாதனை படைத்தது சீனா!
[Tuesday, 2013-06-18 07:23:05]

உலகின் அதிவேக கணினியைக் கண்டுபிடித்து சீனா சாதனை படைத்துள்ளது. சீனாவின் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் அரிய முயற்சியில் டியானே-2 என்ற அதிவேக கணினி கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கம்ப்யூட்டர் விநாடிக்கு 54.9 குவாடிரில்லியன் வேகத்தில் செயல்படும் ஆற்றல் கொண்டது என சீனாவின் தேசிய தொழில்நுட்பப் பாதுகாப்புப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜூன் 2011 வரை சீனாவின் டியானே-1ஏ கணினி அதிவேக ஆற்றல் கொண்டதாக வளங்கியது. அதையடுத்து கண்டுபிடிக்கப்பட்ட ஜப்பானின் கே கணினி அதிவேக ஆற்றல் கொண்டதாக இருந்தது.


AJRwindows22.05.13
TDE_Computers2011
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
NIRO-DANCE-100213
Mahesan supramaniyam 031109
Ramans2011
TamilsGuid-191012-2013
INNSYS-20120930
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com