Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 25, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இந்திய ராணுவ உளவுப் பிரிவுக்கும் தொடர்பு இருக்குமா? - தினமணியின் ஆய்வில் சந்தேகம்!
[Thursday, 2012-10-11 08:53:59]
News Service

2009-ஆம் ஆண்டில் இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. அதையடுத்து, போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் அடைக்கலம் தேடினர். போர் முடிந்த தற்போதைய சூழலில் அவர்களுக்குள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊடுருவினார்களா என்பதைக் கண்டறிய முகாம்களில் தஞ்சமடைந்தவர்களிடம் விசாரணை, சோதனை என்ற பெயரில் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

  

போரின்போது வசிப்பிடங்களை விட்டு வந்த மக்களை மீண்டும் அவர்களின் சொந்தப் பகுதிகளுக்கே மீள்குடியேற்றம் செய்வது இலங்கைத் தமிழர் மறுவாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

அந்த மக்களுக்கு வீடுகள் கட்டித் தருவது, வாழ்வாதாரத் திட்டங்களை உருவாக்குவது போன்றவற்றில் இலங்கைக்கு உதவ இந்தியா முன்வந்தது. இதே போல், அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன.

ஆனால், இத்திட்டங்கள் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த அளவுக்குப் பயன் அளிக்கின்றன என்பதை அறிய போரினால் பாதிக்கப்பட்ட முக்கியப் பகுதிகளில் "தினமணி" செய்தியாளர் ஆய்வு செய்தார்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்:

இலங்கையில் போரின்போது கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 2009-ஆம் ஆண்டு போரில் இப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் உயிரிழந்தனர்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திரிகோணமலை ஆகிய மாவட்டங்கள் 2007-ஆம் ஆண்டில் இலங்கை ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அங்கு ஜனநாயக முறைப்படி மக்களுக்கு வாழ்வுரிமை வழங்கப்பட்டுள்ளது.

முள்வேலி முகாம் மக்கள் எங்கே?

2009-ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை அரசு ஓர் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த வவுனியா மாவட்டத்தில் முள்வேலி முகாம் உருவாக்கப்பட்டது.

":மனிக் ஃபார்ம்" எனஅழைக்கப்பட்ட இந்த முகாமுக்கு 15 நாள்களுக்குள் வந்து தங்களின் விவரங்களைப் பதிவு செய்து கொள்வது அந்த நேரத்தில் கட்டாயமாக்கப்பட்டது. மற்ற பகுதிகளில் இருப்பவர்கள் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அந்த மக்களுக்கு நிபந்தனைக்கு உள்பட்ட சுதந்திரம் வழங்கப்பட்டது. முகாமில் வசிப்பவர்கள் அருகில் உள்ள தோட்டங்கள், தொழிற்சாலைகளில் கூலி வேலைக்குச் சென்று விட்டு தினமும் மாலையில் முகாமில் தங்கள் வருகையைப் பதிவு செய்ய வேண்டும். இவர்களில் பெரும்பாலானவர்கள் நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்த வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

"முகாமில் உள்ளவர்களை அவர்களின் பூர்வீகப் பகுதிகளுக்கு 180 நாள்களில் மீள் குடியேற்றம் செய்வோம் என இலங்கை அரசு 2009 டிசம்பரில் அறிவித்தது. ஆனால், 2010, 2011-ம் ஆண்டுகளிலும் இந்தப் பணி நீடித்தது. இறுதியாக, முகாமில் இருந்த மக்கள் பூர்வீகப் பகுதிகளுக்குப் பதில் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதால் வேறு இடங்களில் அவர்கள் குடியமர்த்தப்பட்டதாக இலங்கை அரசு விளக்கம் அளித்தது.

மூன்று லட்சம் பேர் அடைக்கப்பட்டிருந்த முள்வேலி முகாமில் கடந்த ஜூலையில் 7,500 பேர் மட்டுமே இருந்தனர். இந்த ஆண்டு செப்டம்பரில் அவர்களும் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விட்டதாகவும் முள்வேலி முகாம் (மேனிக் ஃபார்ம்ஸ்) கடந்த 30-ஆம் தேதி மூடப்பட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்தது.

இந்தப் பின்னணியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களின் நிலைமையை ஆராய்ந்தால் குழப்பமும் அதிர்ச்சியும் மட்டுமே மிஞ்சின.

சிங்களர் குடியேற்றம்:

யாழ்ப்பாணத்தில் சிங்களர்கள் குடியேற்றம் செய்யப்படுவதாகக் கூறப்பட்டாலும் அவர்கள் அப்பகுதியில் புதிய தொழிலில் ஈடுபடுவதையும் வாடகைக்கு வீடு எடுத்து தங்குவதையும் பார்க்க முடிகிறது. அவர்கள் தமிழர் பகுதிக்கு வருவதற்குத் தமிழர்களிடமிருந்து பெரிய அளவில் எதிர்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

சிங்களர்களும் ராணுவத்தினரும் வசிப்பதால் எங்களுக்கு வருமானம் கிடைக்கிறது. அதனால் அவர்கள் வசிப்பதில் தயக்கம் இல்லை. பாதுகாப்பை உணருகிறோம் என்று சொந்த வீடுகளை வாடகைக்கு விட்டு வெளியூர்களில் வசிக்கும் தமிழர்கள் கூறுகின்றனர்.

பிரபாகரன் வாழ்ந்த பகுதி:

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தமது கடைசிக் காலத்தில் வாழ்ந்த இடம் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதி. அவர் வாழ்ந்த பாதாளச் சுரங்க வீடு, விடுதலைப் புலிகள் வைத்திருந்த ஆயுதங்கள், படகுகள் போன்றவை சுற்றுலாத் தலம் போல் மாற்றப்பட்ட காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், அந்தப் பகுதியில் பொதுமக்கள் வசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வளையப் பகுதியாக முள்ளிவாய்க்கால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படை கட்டுப்பாட்டில் காங்கேசன்துறை:

விடுதலைப் புலிகளுடனான போரின்போது மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது காங்கேசன்துறை துறைமுகம். இங்கு வர்த்தகப் படகுப் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை.

தமிழகம், காரைக்காலில் இருந்து வரும் சிமெண்ட் உள்ளிட்ட சரக்குகள் அருகே உள்ள மயிலிட்டி சிறு துறைமுகத்துக்கு வருகின்றன. அங்கிருந்து கடற்படைப் படகுகள் மூலம் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு சரக்குகள் கொண்டு வரப்படுகின்றன. இதே போல், இலங்கையில் இருந்தும் தேயிலை, பனை பொருள்கள் இந்தியாவுக்கு கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

போரின்போது மூழ்கடிக்கப்பட்ட சுமார் 10 கப்பல்கள் இங்குள்ள கடல் பகுதியில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளன. அங்கு அகழ்வுப் பணிகள் முடிந்த பிறகு பெரிய கப்பல்கள் துறைமுகத்துக்கு வர வழியமைக்கப்படும் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் துறைமுகத்தில் வடக்கு பிராந்திய கடற்படைத் தலைமையகமும் வீரர்களுக்கான பயிற்சி மையமும் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 2,000 வீரர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் நாகை மாவட்டம், புதுச்சேரியின் காரைக்கால் ஆகியவை மிக அருகில் உள்ள பகுதிகளாகும்.

பலாலி விமான தளம்:

இலங்கை விமானப் படையின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் உள்ள உயர் பாதுகாப்பு வளையப் பகுதி இது. இந்த தளத்தில்தான் இந்திய அமைதிப் படையினர் முதன் முறையாக 1987-ஆம் ஆண்டில் வந்திறங்கினர். பலமுறை விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான இந்த விமானப் படைத் தளத்தை இந்திய அரசு மறுநிர்மாணம் செய்ய உதவியுள்ளது.

கேரளத்தின் திருவனந்தபுரத்துக்கு இங்கிருந்து வான் வழியாக 20 நிமிடங்களில் செல்லலாம். சிவில் விமானப் போக்குவரத்து வசதி உள்ள பலாலி விமானப் படைத் தளத்தில் இருந்து கொழும்பு நகருக்கு சில தனியார் விமான சேவைகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.

கிளிநொச்சியில் சிறப்பு மருத்துவமனை:

போரில் சிக்கிச் சேதமடைந்த பகுதிகளில் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனை மிக முக்கியமானதாகும். மறுசீரமைக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைக் கருவிகளையும் இந்திய அரசு வழங்கியுள்ளது. இங்குள்ள பெரும்பான்மை மருத்துவர்கள் தமிழகத்தில உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்கள் என்பது தனிச்சிறப்பு.

மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, சேவை, எங்கும் தூய்மை, மருந்து வாசனையற்ற சுற்றுச்சூழல் போன்றவை சுகாதாரத்துக்கு எடுத்துக்காட்டாக இந்த மருத்துவமனையை விளங்கச் செய்கின்றன.

முல்லைத்தீவில் ராணுவ கெடுபிடி:

விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கிய முல்லைத்தீவில் இன்றும் ராணுவ கெடுபிடி நீடிக்கிறது. அங்குள்ள புதுக்குடியிருப்பு, நந்திக்கடல் ஆகிய பகுதிகளில் மறுவாழ்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் மக்கள் வசிக்கின்றனர். மனிதாபிமான மீள்குடியேற்றத்துக்கு உதவுகிறோம் என்ற பெயரில் ராணுவத்தினர் ஆயிரக்கணக்கில் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

கண்ணிவெடி அகற்றும் பணியில் மர்மம்:

இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகளாலும் இலங்கை ராணுவத்தினராலும் பரஸ்பரம் வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக இந்தியாவைச் சேர்ந்த ஹாரிசன், சர்வத்ரா ஆகிய அமைப்புகள் 2003-ஆம் ஆண்டில் ஈடுபடுத்தப்பட்டன. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட நோர்வே அரசுதான் இந்த இரு அமைப்புகளுக்கும் கண்ணிவெடி அகற்றும் திட்டத்துக்காக நிதி உதவி செய்து வந்தது.

கடந்த ஆண்டு அந்நாட்டு அரசு நிதி அளிப்பதை நிறுத்திக் கொண்டது. இப்போது இந்திய அரசு இவ்விரு அமைப்புகளுக்கும் நிதி அளித்து வருகிறது. இந்த நிதி எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது என்ற கேள்விக்கு ஹாரிசன், சர்வத்ரா அமைப்புகளின் நிர்வாகிகளிடம் இருந்து சரியான பதில் இல்லை.

2003-ஆம் ஆண்டில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக நியமிக்கப்பட்ட இந்த அமைப்புகள் 2002-ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய உயரதிகாரிகள் சிலர் ஓய்வுபெற்றதும் தொடங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் இவற்றின் செயல்பாட்டில் இந்திய ராணுவ உளவுப் பிரிவுக்கும் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகம் பல தரப்புகளாலும் எழுப்பப்படுகிறது.

இலங்கையில் இந்த இரு அமைப்புகளைத் தவிர வெளிநாடுகளைச் சேர்ந்த டேனிஷ் குழு, ஹலோ டிரஸ்ட், கண்ணிவெடி அகற்றல் ஆலோசனைக் குழு, ஸ்விஸ் அறக்கட்டளை ஆகிய அமைப்புகளும் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கண்ணிவெடி நிறைந்த பகுதிகள்:

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள் கடந்த பிறகும் ஏராளமான பகுதிகள் கண்ணிவெடி அகற்றப்படாத இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் கிளிநொச்சியில் உள்ள முகமாலை, யாழ்ப்பாணம் மாவட்டம் மருதன்கேணி வட்டத்தில் உள்ள நாகர்கோவில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாந்தை கிழக்கு, கொக்குதொடுவை, மன்னார் மாவட்டத்தில் உள்ள மாந்தை மேற்கு, மது ஆகிய பகுதிகள் அடங்கும்.

இந்தப் பகுதியில் சுமார் 118 சதுர கிலோ மீட்டர் தூரத்துக்கு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஹம்பன்தோட்டவில் சீன ஆதிக்கம்:

இலங்கையில் கப்பல், ரயில், வீட்டுவசதி, தொழில், வர்த்தக திட்டங்களை இந்தியா மேற்கொள்வது போல் சீன அரசு சாலை வசதி, துறைமுகக் கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

இலங்கை முழுவதும் சாலை அமைக்கும் பணி, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் சொந்த ஊரான ஹம்பன்தோட்டவில் துறைமுகம் அமைக்கும் பணி, விமான நிலையம் அமைக்கும் திட்டங்களை சீன அரசு மேற்கொண்டுள்ளது. அங்கு ஏற்கெனவே ஆயிரக்கணக்கில் சீனக் கடற்படை வீரர்கள் பணியாற்றுகின்றனர்.

இலங்கையில் தொலைத்தொடர்புத் திட்டங்களையும் செயல்படுத்தும் சீன அரசின் விருப்பத்துக்கு இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இவை எதிர்காலத்தில் இந்தியாவுக்கு கவலை தரும் பிரச்னைகளாக எதிரொலிக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.

இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட, போருக்குப் பிந்தைய படிப்பினை மற்றும் நல்லிணக்கக் குழு அளித்த பரிந்துரையை முழுமையாக நிறைவேற்றுவதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. சிலவற்றை அதிகார மட்டத்தில் நிறைவேற்றலாம். ஆனால் பல பரிந்துரைகளைச் செயல்படுத்த நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற வேண்டும்.

-எம்.ஏ.பரணிதரன்-

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

மட்டக்களப்பு கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்!Top News
[Saturday, 2013-05-25 21:09:14]

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கிராம எல்லையில் குடிகொண்டு அருள்பாலிக்கும் கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்வசத்தின் திருக்குளிர்த்தியாடும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இவ்வாலய உற்சவம் கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமாகி சனிக்கிழமை காலை தீ மிதிப்பு, திருக்குளிர்த்தியாடும் வைபவத்துடன் நிறைவுபெற்றுள்ளது. இறுதி நாள் அன்னதானக் குழுவினரால் அன்னதானம் வழங்கப்பட்டது. தீ மிதிப்பு நிகழ்வில் ஐநூக்கு மேற்பட்ட பக்தர் கலந்து கொண்டிருந்தனர்.



வெசாக் தினத்தில் தீக்குளித்த பிக்கு மரணம்!
[Saturday, 2013-05-25 21:04:22]

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் மிருக வதையினை கண்டித்து தனக்கு தானே தீமூட்டிக்கொண்ட பௌத்த பிக்கு, சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி தலதா மாளிகைக்கு முன்பாகவே நேற்று வெள்ளிக்கிழமை அவர் தீ மூட்டிக்கொண்டார். வெசாக் தினத்தையொட்டி கண்டி தலதா மாளிகையில் விசேட மத நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே அவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டுள்ளார்.



இலங்கையைப் போல சிறந்த நிர்வாகத்தைக் கொண்ட நாடு உலகில் கிடையாது - பிரதமர்
[Saturday, 2013-05-25 20:09:26]

இலங்கையில் மதங்களுக்கிடையில் பாராபட்சம் நிலவுவதாகக் காட்டி நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் சர்வதேச நீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என பிரதமர் டி.எம். ஜயரட்ண குற்றம் சாட்டியுள்ளார். கண்டி தலதா மாளிகையில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் காலங்களில் எந்தவொரு நாடோ அல்லது இனவாதிகளோ நாட்டை அபகரிக்க இடமளிக்க முடியாது. நாட்டில் மதங்களுக்கிடையில் பாராபட்சம் நிலவுவதாகக் காட்டி நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான சூழ்ச்சிகளை சர்வதேம் மேற்கொண்டு வருகின்றது. எனவே இந்த விடயத்தில் அனைவரும் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியமாகும். நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் சகல மதங்களும் பராமரிக்கப்பட்டு மதத் தலங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இங்கு மதங்களுக்கிடையில் எத்தகைய ஏற்றத்தாழ்வும் கிடையாது.



அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த வைத்தியர் - கிண்ணியாவில் சம்பவம்
[Saturday, 2013-05-25 18:59:57]

கிழக்கு மாகாணத்தில் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அப்பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியினை வைத்து தைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக கடந்த 22 ஆம் திகதி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அப்பெண்ணின் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றுகுள் ஊசி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மீண்டும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்துவதற்காக அப்பெண் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



சார்க் நாடுகளின் திரைப்பட விழா இ்ம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பம்..
[Saturday, 2013-05-25 18:49:27]

இலங்கையிலுள்ள தெற்காசிய நாடுகளின் கலாசார மத்திய நிலையம் ஏற்பாடு செய்துள்ள சார்க் நாடுகளின் திரைப்பட விழா இம்மாதம் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தில் நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தான் தவிர்ந்த ஏனைய நாடுகள் இந்த திரைப்பட விழாவுக்காக சினிமா திரைப்படங்களையும் விவரணத்திரைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விழாவின் போது தெரிவு செய்யப்படும் சிறந்த திரைப்படங்கள் விவரணப்படங்கள் மற்றும் சிறந்த நடிகர் நடிகைகளுக்கு விருதுகளும் வழங்கப்படவுள்ளன. கடந்த ஆண்டில் இலங்கை திரைப்படம் ஒன்றே மேற்படி விழாவின் போது சிறந்த திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டது.



வராலற்று சிறப்பினைச் பதிவு செய்த தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு !Top News
[Saturday, 2013-05-25 17:43:54]

ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெரும் வராலற்று சிறப்பினைச் பதிவதாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் அதனையொட்டிய இடம்பெற்றிருந்த மாநாடும் அமைந்திருந்ததென மாநாட்டின் செயற்குழு தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டு செயற்குழுத் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : அடிமை ஒழிப்புக்குக் குரல் கொடுத்த பெருமகன் திரு. 'தாடுஸ் ஸ்டீவன்சன்' அவர்களின் பிறப்பிடமாகிய அமெரிக்காவின் பென்சில்வேனிய மாநிலத்தின் லாங்காஸ்டர் நகரில் தமிழீழசுதந்திர சாசனம் மே-18மம் நாள் சனிக்கிழமை (18-05-2013) உணர்வெழுச்சியுடன் முரசறையப்பட்டது.



கைதிகளுக்கு இம்முறை பொதுமன்னிப்பு இல்லை - சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர்!
[Saturday, 2013-05-25 17:39:43]

இம்முறை வெசாக் பண்டிகையின் போது சிறைக் கைதிகள் எவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லையென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே தெரிவித்துள்ளார். சிறு குற்றங்களை புரிந்து தற்போது சிறையில் உள்ள குற்றவாளிகள் சிலரின் பெயரை நீதி அமைச்சுக்கு பரிந்துரை செய்தபோதிலும் அதற்கான அனுமதி தமக்கு கிடைக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



கொழும்பு துறைமுக தீ விபத்து தொடர்பில் 13 பேரிடம் வாக்கு மூலம்!
[Saturday, 2013-05-25 17:31:37]

கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் இதுவரையிலும் 13 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகளும் இன்று இடம்பெற்றன. கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் நேற்று 24 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தீ விபத்தையடுத்து களஞ்சியசாலை தொகுதியை பொலிஸார் பொறுப்பேற்றதுடன் விசாரணைகளையும் துரிதப்படுத்தினர். இந்நிலையிலேயே இதுவரையிலும் 13 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.



தேன்மதுர தமிழ் இசையால் கோடிக்கணக்கான இதயங்களை கட்டிப்போட்ட மதுரக் குரல் இன்று ஓய்ந்தது! Top News
[Saturday, 2013-05-25 17:26:59]

பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் காலமானார். இருதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார். ஆயினும் இன்று சனிக்கிழமை சற்று நேரம் முன்னதாக அவர் தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 91. தென்னிந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக பின்னணி பாடி வந்த இவர், பட்டினத்தார் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 1923 ஆம் ஆண்டு மதுரையில் சௌராஸ்டிர குடும்பத்தில் பிறந்த இவரது தகப்பனார் பெயர் மீனாட்சி ஐயங்கார். 1950 ஆம் ஆண்டும் கிருஷ்ண விஜயம் என்னும் படத்தில் 'ராதே என்னை விட்டுப் போகாதடி'' என்னும் பாடலுடன் இவர் அறிமுகமானார். தமிழ் தவிர தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலுமாக 10, 000 பாடல்களுக்கும் அதிகமாக அவர் பாடியிருக்கிறார்.



கிளி.வட்டக்கச்சி இந்து மயானத்திற்கு எரிகொட்டகை கையளிப்பு! Top News
[Saturday, 2013-05-25 17:19:40]

வட்டக்கச்சி மம்மில் இந்து மயானத்திற்கு இராமநாதபுரத்தைச் சேர்ந்த அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை ஞாபகார்த்தமாக அவரின் குடும்பத்தவரால் எரிகொட்டகை அமைத்து வழங்கப்பட்டது. அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்களது நிதிப் பங்களிப்பில் வட்டக்கச்சி அறிவொளி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இவ் எரிகொட்டகை அமைக்கப்பட்டு, வட்டக்கச்சி கிராம முன்னேற்ற சங்கங்களிடம் கையளிக்கும் நிகழ்வு கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் வி.சுவிஸ்கரன் தலைமையில் மம்மில் இந்து மயானத்தில் இடம்பெற்றது.



இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பணிப்பெண் ஜோர்தானில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்! Top News
[Saturday, 2013-05-25 17:15:20]

ஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் கறுவாக்கேணியை சேர்ந்த 21 வயதான நாகேந்திரன் காந்திமதி என்ற பெண் ஜோர்தானில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இம்மாதம் 19-ம் திகதி அவரது குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 6-ம் திகதி உயிரிழந்ததாகக் கூறப்படும் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் தமக்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னரே அறிவிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் பிபிசி தமிழோசையிடம் கூறுகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 22ம் திகதி இவர் வீட்டுப் பணிப்பெண்ணாக ஜோர்தான் சென்றுள்ளார்.



இளம் பெண்ணை மிரட்டி பல தடவை பாலியல் வல்லுறவு - படத் தயாரிப்பாளர் கைது!
[Saturday, 2013-05-25 14:30:48]

யுவதியொருவரை தொடர்ச்சியாக மிரட்டி வல்லுறவுக்குட்படுத்தி வந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரொருவரை நாரஹெம்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யுவதி அதுருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யுவதி சினிமாவில் நடிப்பதற்காக தயாரிப்பாளரிடம் வந்துள்ளதாகவும் அவருக்கு வாய்ப்பு தருவதாகக் கூறி அவரை நிர்வாணமாக படமெடுத்து பின்னர் அதனை வெளியிடப்போவதாக மிரட்டியே குறித்த நபர் தொடர்ச்சியாக வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.



முக்கோண பாதையில் 3 கோள்கள் - இலங்கையர்கள் பார்வையிடலாம்!
[Saturday, 2013-05-25 14:27:24]

சூரியனை சுற்றியுள்ள கோள்களில் மூன்று கோள்கள் முக்கோண பாதையில் தற்போது சுற்றிவருவதை வானத்தில் பார்க்கலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார். இரவில் வானத்தில் தெட்டத்தெளிவாக தெரிகின்ற சனி, கோள்மண்டத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் மற்றும் சூரியனுக்கு மிகவும் அண்மையில் இருக்கின்ற புதன் ஆகிய கோள்களே முக்கோண பாதையில் சுற்றிவருகின்றன. இலங்கையின் வடமேல் வானத்திலேயே இதனை பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ள பேராசிரியர் சந்தன ஜயரத்ன இது போன்றதொரு நிகழ்வை 2021 ஆம் ஆண்டே பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



23வது ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் திங்களன்று ஆரம்பம்!
[Saturday, 2013-05-25 14:21:40]

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 23 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் ஹூன் மாதம் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த 23 ஆவது கூட்டத்தொடரின் அமர்வுகளின் போது நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் பல்வேறு நாடுகள் தொடர்பில் பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன. 47 உறுப்பு நாடுகள் இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதுடன் மேலும் பலநாடுகளும் அவதானிப்பு நாடுகளாகவும் கலந்துகொள்ளவுள்ளன.



ஈழத்தமிழருக்கு ஆதரவான கட்சி விரைவில் புதுடில்லியில் உதயமாகும் - தா.பாண்டியன்!
[Saturday, 2013-05-25 14:13:19]

புதுடில்லியில் விரைவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி நிச்சயம் அமையும். எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அது வெளிப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சென்னையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே பாண்டியன் இதனைத் தெரிவித்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுமிக்க ஆட்சியொன்று புதுடில்லியில் வெகுவிரைவில் அமையும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை விரைவாக எட்டுவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க முடியும் என்றும் பாண்டியன் தனது உரையில் குறிப்பிட்டார்.



13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு கோத்தபாயவிற்கு அதிகாரமில்லை - வாசுதேவ நாணயக்கார!
[Saturday, 2013-05-25 14:04:31]

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பாதுகாப்பு செயலாலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அதிகாரமோ உரிமையோ கிடையாது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவினால் முன் வைக்கப்படவுள்ள தனி நபர் பிரேரணை செல்லுபடியற்றதாகும். எனவே, அரசு மேற்படி பிரேரனைக்கு அங்கீகாரம் வழங்காது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.



மட்டக்களப்பு நுழைவாயிலில் வைக்கப்படும் புத்தர் சிலை இனங்களுக்கிடையே மனக்கசப்பை ஏற்படுத்தும் - யோகேஸ்வரன் எம்.பி பிரதமருக்கு கடிதம்!
[Saturday, 2013-05-25 13:57:56]

மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியானது இனங்களுக்கிடையில் மனக்கசப்பை ஏற்படுத்தும் செயலாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். புத்தர் சிலையை நிறுவுதல் தொடர்பில் பிரதமர் தி.மு ஜயரட்னவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



கல்லுடன் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு: முல்லைத்தீவில் சம்பவம்!
[Saturday, 2013-05-25 09:56:07]

முல்லைத்தீவு பனிச்சங்குளப் பகுதியில் பாலியல்வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்ததேகிக்கப்படும் நிலையில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நிலையில் இச் சடலம் இருப்பதாகவும் சடலத்திலுடன் கல்லுக்கட்டப்பட்டு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



ஆஸிக்கு செல்ல முயற்சித்த 21 இலங்கையர்கள் கேரளாவில் கைது!
[Saturday, 2013-05-25 09:30:44]

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 21 இலங்கை அகதிகள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பிரதேசத்தில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கியூ பிரிவு பொலிஸார் மற்றும் கேரளப் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின்படி இந்தச் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 7 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் நியூகொச்சின் பகுதி ஹோட்டல் ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னையிலிருந்து ரயில் மூலமாக கேரளா சென்றுள்ளனர்.



திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் விசாரணை செய்யவுள்ள இலங்கை அரசு!
[Saturday, 2013-05-25 09:14:17]

அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலையில் பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையத்தை (அமெரிக்கன் கோணர்) அமைப்பதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், திருகோணமலை நகரசபையுடன் கடந்த 22ம் நாள் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது. இந்த உடன்பாடு குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்படாதது சிறிலங்கா அரசாங்கத்துக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு முடிவு செய்துள்ளது.


TDE_Computers2011
Mahesan supramaniyam 031109
TamilsGuid-191012-2013
AJRwindows22.05.13
RoyaShades-l2011(04-12-11)
Ramans2011
INNSYS-20120930
Suresh-remax-2013-01-01
NIRO-DANCE-100213
Canada Kanthasamy Kovil
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com