Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 23, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு ௭திராக குற்றவியல் பிரேரணை கொண்டுவரும் ௭ண்ணம் இல்லை: நிமல்
[Thursday, 2012-10-11 09:29:52]
News Service

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு ௭திராக குற்றவியல் பிரேரணையை கொண்டுவரும் ௭ண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை. ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமானது நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் உள்ளது ௭ன்று சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

  

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நேற்று கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது,

உள்ளூராட்சிமன்ற திருத்தச் சட்டமூலம் மற்றும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம் ஆகியன நிறைவேற்றப்படவுள்ளமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். இந்த தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் நீண்டகாலமாக ஆராய்ந்து தற்போது முடிவுக்கு வந்துள்ளோம். இனிவரும் காலங்களில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொகுதி முறைமையிலேயே நடத்தப்படும். இதன்போது சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் பாதிக்கப்படக்கூடாது ௭ன்பதற்காகவே 30 வீதம் விகிதாசார முறைமையும் காணப்படுகின்றது.

இது மிகப்பெரிய மைல்கல்லாகும். அதிகளவில் விமர்சனத்துக்கு உட்பட்ட தேர்தல் விகிதாசார முறைமை காணப்பட்டது. தற்போது அதில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். ௭திர்காலத்தில் மாகாண சபைத் தேர்தலுக்கும் இந்த முறைமையை உள்ளடக்குவது குறித்து ஆராயப்படும் ௭ன்பதனை தெரிவிக்கின்றோம். இதேவேளை, திவிநெகும சட்டமூலம் பாராளுமன்றத்தில் ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்னும் ஏழு நாட்களுக்குள் யார் வேண்டுமானாலும் குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தலாம். இது இவ்வாறு இருக்க தனக்கு அனுப்பவேண்டிய விடயத்தை உயர்நீதிமன்றம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பியமை தவறானது ௭ன்று சபாநாயகர் கூறியிருந்தார். மாறாக உயர் நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் சபாநாயகர் திருப்தியில்லை ௭ன்று கூறவில்லை. ஆனால் அணுகுமுறை தவறாக உள்ளது ௭ன்றே குறிப்பிட்டிருந்தார். அதாவது நீதிமன்ற தீர்ப்புக்களை விமர்சிக்கலாம். ஆனால் நீதிபதிகளை விமர்சிக்க முடியாது.

நீதிமன்ற தீர்ப்புக்களை விமர்சித்து புத்தகங்களே ௭ழுதப்பட்டுள்ளன. அத்துடன் இதற்கு முன்னர் முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து கூற்று வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இதனை வைத்துக்கொண்டு நீதித்துறைக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் முறுகல் ௭ன்று கூறுவது பொருத்தமற்றதாகும். அவ்வாறு ஒரு பிரச்சினையும் இல்லை. ௭மது அரசாங்கம் நீதித்துறையின் சுயாதீனத்தை மதிக்கின்றது. இதேவேளை, பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு ௭திராக குற்றவியல் பிரேரணையை கொண்டுவரும் ௭ண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை.

இவை பிரச்சிைனயை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் விடயங்களாகும். ஜனாதிபதி தலைைமயிலான அரசாங்கமானது நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிபடுத்த அர்ப்பணிப்புடன் உள்ளது. நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் ௭திர்க்கட்சியைவிட அரசாங்கம் சிந்திக்கின்றது.

தாக்குதலை மேற்கொண்டவர் யார் ௭ன்பதனை கண்டறிய வேண்டிய தேவை அதிகளவில் ௭ங்களுக்கே இருக்கின்றது. ஏதாவது ஒரு சம்பவம் இடம்பெற்றவுடன் உடனடியாக அதனை அரசாங்கத்தின் மீது சுமத்தக்கூடாது. விசாரணைகள் நடத்தப்படும் வரை பொறுத்திருக்கவேண்டும். முன் தீர்மானங்களுக்கு செல்லக்கூடாது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

7 வயதுச் சிறுமி மீது பாலியல் பலாத்காரம் - இராணுவ வீரர் கைது!
[Thursday, 2013-05-23 17:26:35]

வவுனியா நெடுங்கேணி பகுதியில் 7 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் இராணுவ வீரர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 14.05.2013 அன்று வவுனியா நெடுங்கேணி சேனைப்புலவு என்ற கிராமத்தில் ஏழுவயதான பள்ளிச் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார். இச்சம்பவமானது அப்பிரதேசத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் தாமதித்தமையால், கடந்த திங்கட்கிழமை பிரதேச மக்களால் குறித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.



ஜனாதிபதி அறிவித்தவாறு எதிர்வரும் செப்டம்பரில் வடமாகாண சபைத் தேர்தல்!
[Thursday, 2013-05-23 17:13:02]

இலங்கையின் வடமாகாண சபைக்கான தேர்தல் ஜனாதிபதி அறிவித்துள்ளபடி எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அரசு தெரிவித்துள்ளது. அந்தத் தேர்தலை ஒத்திப் போடும் எண்ணம் அரசுக்கு கிடையாது என்று வாராந்திர அமைச்சரவை முடிவுகள் குறித்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அதன் பேச்சாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அதே போல மாகாண சபைகளை உருவாக்கி அதற்கு காணி மற்றும் போலிஸ் அதிகாரங்களை வழங்கிய அரசியல் அமைப்பின் 13 ஆவது சட்டத் திருத்ததில் மாறுதலையும் கொண்டுவரவோ அல்லது அதை ரத்து செய்யவோ அரசாங்கத்துக்கு எந்த எண்ணமும் இல்லை என்றும் அமைச்சர் யாப்பா இந்தக் கூட்டத்தில் அறிவித்தார்.



மட்டக்களப்பில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த இருவர் கைது!
[Thursday, 2013-05-23 17:02:54]

மட்டக்களப்பு மாவட்டத்தின் உறுகாமம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வின்போது துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததாகக் கூறப்படும் இருவரை கரடியனாறு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் உறுகாமம் பிரதேசத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததாகக் கூறப்படும் இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இவர்களிடமிருந்து மேற்படி துண்டுப்பிரசுரங்களை கைப்பற்றியுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.



விடுதலைப்புலிகளின் தலைவரை கோழை என தெரிவித்த அமைச்சர் நாராயண சாமிக்கு எதிராக முறைப்பாடு!
[Thursday, 2013-05-23 16:55:38]

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக அமைச்சர் வி.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கைபற்றி முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையானது தமிழ்பேசும் இந்தியர்களுக்கும் தமிழர் அல்லாதோருக்கும் இடையில் பகைமையை தோற்றுவித்தது என, நியாயதுரந்திரர் சி.ரமேஷ் தெற்குவலய பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்றை தொடுத்துள்ளார். கடந்த 20ம் திகதி அமைச்சர் நாராயணசாமி விடுத்த அறிக்கையில்,



'இந்திய அரசின் வீட்டுத் திட்டமா? இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா?' மட்டக்களப்பில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தவர்கள் கைது!
[Thursday, 2013-05-23 11:38:36]

மட்டக்களப்பு மாவட்டத்தின் உறுகாமம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வின்போது துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததாகக் கூறப்படும் இருவரை கரடியனாறு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் உறுகாமம் பிரதேசத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததாகக் கூறப்படும் இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இவர்களிடமிருந்து மேற்படி துண்டுப்பிரசுரங்களை கைப்பற்றியுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.



கனடா - பிரித்தானியா - பிரான்ஸ் : தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வரங்கும் ! Top News
[Thursday, 2013-05-23 11:26:46]

தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை மையாக கொண்டு முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டுப் பெருவலியினை கூட்டுநினைவு கொள்ளும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வுகள் கனடா, பிரித்தானியா, பிரான்சு ஆகிய நாடுகளில் இடம்பெற்றுள்ளன. தமிழீழ சுதந்திர சாசன முரசறைவின் பிரதான நிகழ்வு அமெரிக்காவில் இடம்பெற்றிருந்த சமவேளை, பிரித்தானியா, கனடா (ரொறன்ரோ) மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் ஒன்றுகூடிய தமிழர்கள் உணர்வுபூர்வமாக சுதந்திர சாசனத்தினை முரசறைந்து நினைவேந்திக் கொண்டிருந்தனர்.



கிழக்கில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர் என்பதற்கான அடையாளமே இந்திய வீடமைப்புத் திட்டம் - பஷில்
[Thursday, 2013-05-23 11:23:49]

கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு அடையாளமாகவே இந்திய வீடமைப்புத் திட்டம் விளங்குகிறது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.



13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை - அரசாங்கம்
[Thursday, 2013-05-23 11:17:01]

13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜே.என்.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரியிருந்தன. 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனித்து தீர்மானம் எடுக்க மாட்டார் என அரசாங்க பதில் பேச்சாளர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பில் இதுவரையில் எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்காக ஜே.என்.பி.யும் ஜாதிக ஹெல உறுமய கட்சியும் பல்வேறு வழிகளில் முயற்சி எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



வடக்கில் தேர்தல் இடம்பெறுவது சந்தேகமே? - பிபிசி
[Thursday, 2013-05-23 10:52:37]

இலங்கையின் வட மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படையாக அறிவித்திருந்தாலும் அந்தத் தேர்தல் நடைபெறுமா என்று கேள்விக் குறிகளும் எழுந்துள்ளன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, தேசப்பற்றுள்ள மக்கள் முன்னணியின் தலைவர் குணதாச அமரசேகர ஆகியோர் இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். பின்னர் பௌத்த கடும்போக்கு அமைப்பு என்று கருதப்படும் பொதுபல சேனா எதிர்ப்பை வெளியிட்டது. இப்போது ஆட்சியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமயவும் இதை எதிர்க்கிறது.



பிரபாகரனுடன் என்னை ஒப்பிடவேண்டாம் - மன்னார் ஆயர்
[Thursday, 2013-05-23 10:29:01]

"பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பு முளைத்துள்ளது. இதை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்." இவ்வாறு கடும் ஆவேசத்துடன் தெரிவித்தார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப். "இனவாதிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தியே ஆகவேண்டும். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளையும் வழங்கவேண்டும். அதேவேளை, வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.



மத்தளயில் விமான நிலையத்துக்கு பதிலாக குளத்தை கட்டியிருந்தால் ராஜபக்ஷ பெயரும் வரலாற்றில் பதிவாகியிருக்கும் - பொது பலசேனா
[Thursday, 2013-05-23 10:14:15]

மத்தளயில் சர்வதேச விமான நிலையத்தை கட்டியதற்கு பதிலாக அங்கு குளம் ஒன்று கட்டியிருந்தால் மஹா பராக்கிரமபாகு போன்று ராஜபக்ஷ பெயரும் வரலாற்றில் பதிவாகியிருக்கும் என்று தெரிவித்துள்ள பொதுபலசேனா ஜனாதிபதியை சூழவுள்ள ஆலோசகர்கள் இவ்வகையான பயனற்ற திட்டங்களை ஜனாதிபதிக்கு கூறி மக்களின் நிதிக்கு ஆப்பு வைக்கக் கூடாது என்றும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது. பொதுபலசேனாவின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போது மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.



வலிகாமம் வடக்கு காணி சுவீகரிப்பு தொடர்பில் அடிப்படை மனித உரிமை வழக்குகள் யாழ்ப்பாணச் சட்டத்தரணிகளால் தாக்கல்!
[Thursday, 2013-05-23 10:02:59]

நேற்றையதினம் (22.05.2013) இலங்கை உயர்நீதிமன்றத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த 192 பேர் தமது காணிகள் சுவீகரிக்கப்படுவதை எதிர்த்து அடிப்படை உரிமை மீறல் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். தமக்கு வௌ;வேறாக சொந்தமாக இருக்கக் கூடிய காணிகள் ஒரே காணியாக கருதப்பட்டு சுவீகரிக்க முடியாது என்றும் அவ்வாறாக சுவீகரிப்பதற்கான பொதுத் தேவை தொடர்பில் தெளிவாகத் தமக்கு கூறப்படவில்லை என்றும் தமக்கு முறையாக தமது காணிகள் சுவீகரிப்பது தொடர்பில் அறிவித்தல் தரப்படவில்லை என்றும் கூறி இவ் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தம் சார்பில் சட்டத்தரணிகள் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் சென்று அறிவித்தல்களைப் பார்வையிடுவதற்கும் இராணுவத்தினர் அனுமதி மறுத்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் மீண்டும் கஜேந்திரனிடம் விசாரணை!
[Thursday, 2013-05-23 09:56:59]

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரின் யாழ்.அலுவலகத்தில் நேற்று நண்பகல் 12.30 மணியிலிருந்து பிற்பகல் 3.00 மணிவரை இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. இவ் விசாரணை தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்; பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் யாழ்ப்பாணம், நாவலர் வீதியிலுள்ள அவர்களுடைய அலுவலகத்திற்கு நண்பகல் 12.00 மணிக்கு என்னை வருமாறு அழைத்திருந்தனர். அதற்கமைய நானும் குறித்த நேரத்திற்கு அவ் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். என்னிடம் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பாக சுமார் மூன்று மணித்தியாலங்கள் விசாரணைகளை மேற்கொண்டனர். மேலும் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் என்னிடம் விசாரித்தனர் என்றார்.



கனடா ஒன்ராரியோ பாராளுமன்றம் முன்றலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை நினைவு நாள் - மே 18, 2013 Top News
[Thursday, 2013-05-23 09:43:07]

மே 18, 2013, சனிக்கிழமை, மாலை 5:00 மணிக்கு கனடாவில் ரொறன்ரோ மண்ணில், குயின்ஸ் பார்க் (ஒன்ராரியோ பாராளுமன்ற) முன்றலில், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நான்காம் ஆண்டு நினைவாக 'தமிழினப் படுகொலை நாள் 2013' நிகழ்வானது மாபெரும் மக்கள் எழுச்சியோடு ஓரணியில் அணி திரண்ட பேரணியாக எழுச்சிகரமாக நடைபெற்றது. விடுதலைக்காக விதைக்கப்பட்டவை என்றோ ஒரு நாள் தலைமுறைகள் கடந்தாலும் மறுபடியும் பலமுறைகள் முளைத்தே தீரும் என்பதற்கு முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை ஒரு சிறந்த எடுகோள். கனடியத் தமிழர் தேசிய அவையின் ஒருங்கிணைப்பில் கனடாத் தமிழர் சமூகமும், மாணவர் சமூகமும் மற்றும் ஏனைய அமைப்புக்களையும் பொதுமக்களையும் உள்ளடக்கிய மக்கள் சமூகமாக ஒருங்கிணைந்து இந்த மாபெரும் நிகழ்வு நடந்தேறியது.



எதிர்வரும் 28ம் திகதி முல்லைத்தீவிற்கு செல்கின்றார் பஷில் ராஜபக்ஷ!
[Wednesday, 2013-05-22 20:01:12]

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது, முல்லைத்தீவு மல்லாவி பகுதி மற்றும் கிளிநொச்சி பாண்டியன் குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் திட்டத்தினை திறந்துவைக்கவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பின் யாழ். பிராந்திய முகாமையாளர் பாலசுப்பிரமணியம் தவேந்திரகுமார் கூறினார்.



இராணுவத்தினரின் காணி சுபீகரிப்பு குறித்து ஐ.நா அதிகாரிகளுக்கு ஹத்துருசிங்க விளக்கம்!Top News
[Wednesday, 2013-05-22 19:59:38]

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தேவைக்காக சில காணிகள் இனங்காணப்பட்டுள்ளன. இராணுவம் பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படும் காணிகளின் அளவை சிலர் வேண்டுமென்றே அதிகரித்துச் சொல்வதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளார். ஐ.நா.வின் மனிதாபிமான ஒத்திசைவாக்க அலுவலகத்தின் உயரதிகாரிகளான அக்னெஸ் அஸகென்பே மற்றும் மார்க் பிரளோபா ஆகியோருக்கு யாழ். வலிகாமம் வடக்கிலுள்ள நிலங்களை இராணுவம் பொறுப்பேற்பது தொடர்பான பிரச்சினை குறித்து விளக்கமளிக்கும் போதே யாழ். கட்டளைத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, இராணுவம் பொதுமக்களின் காணிகளை பொறுப்பேற்பதாக கூறுவதை அவர் மறுத்துள்ளார். பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் என்பவற்றின் அபிவிருத்திக்காக காணிகள் பொறுப்பேற்கப்படுவதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.



உடனடியாக 13வது திருத்தம் இரத்துச் செய்யப்பட வேண்டும் - ஹெல உறுமய!
[Wednesday, 2013-05-22 19:52:56]

13 ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் உடனடியாக இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஹெல உறுமய தெரிவித்துள்ளது. கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஹெல உறுமயவின் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இதற்கான தனிநபர் பிரேரணையின் நகல் வெளியிடப்பட்டது.



சிங்களவர்களின் காணிகளையும் அரசு அபகரிக்கின்றது: விக்கிரமபாகு குற்றச்சாட்டு!
[Wednesday, 2013-05-22 19:47:58]

தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் அரசு அங்கு சிங்களவர்களை குடியமர்த்துவதாக சிங்கள மக்கள் நினைக்கின்றனர். ஆனால் சிங்கள மக்களின் காணிகளை சுவீகரித்து ஒட்டுமொத்த நாட்டினையுமே வெளிநாடுகளுக்கு அரசாங்கம் விற்பனை செய்கின்றதென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்பும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



வட மாகாணசபை தேர்தல் நடாத்தப்படாவிட்டால் நாடு இரண்டாகும்: சிறிதுங்க ஜயசூரிய
[Wednesday, 2013-05-22 19:42:31]

வட மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றால் இலங்கை ஒருநாடாக இருக்கும் அதேநேரம் தேர்தல் இடம்பெறாது போனால் நாடு இரண்டாக பிளவுபட வழி சமைக்கும் என சேஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்பும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



இந்திய வீடுகள் அமைக்கும் பணி மட்டக்களப்பில் ஆரம்பம் - இந்திய உயர்ஸ்தானிகர் ஆரம்பித்து வைத்தார்!Top News
[Wednesday, 2013-05-22 19:36:00]

கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியுடனான வீடமைப்பு திட்ட வேலைகள் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் வீட்டுத் திட்டங்களுக்கான வேலைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர். மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலக நிர்வாக பிரிவிலுள்ள மூன்று கிராமங்களில் நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வுகளின் போது, சிங்கள கிராமமான மங்களாகம கிராமத்திலே முதலாவது வைபவம் இடம்பெற்றது.


TamilsGuid-191012-2013
Ramans2011
Canada Kanthasamy Kovil
Suresh-remax-2013-01-01
AJRwindows22.05.13
NIRO-DANCE-100213
TDE_Computers2011
RoyaShades-l2011(04-12-11)
Mahesan supramaniyam 031109
INNSYS-20120930
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com