Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
20 வருடங்களுக்கு மேலாகக் காணாமல் போயிருந்த தாயாரை, கைதடி முதியோர் இல்லத்தில் கண்டு நெகிழ்ந்த வயோதிபர்!
[Saturday, 2012-10-13 13:32:40]
News Service

கைதடி அரச முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்ட முல்லைத்தீவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் 20 வருடங்களுக்கு மேலாகக் காணாமற் போயிருந்த தனது தாயாரையும் அங்கு கண்டு கட்டித்தழுவிய உணர்வு பூர்வமான சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைதடியில் இடம்பெற்றுள்ளது.

  

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கனகசபை அற்புதானந்த ஈஸ்வரன் (வயது 65) என்பவரே தனது வயது முதிர்ந்த தாயாரான கனகசபை பரமேஸ்வரி (வயது95) என்பவரை 20 வருடங்கள் கழித்துக் கண்டுகொண்டமையால் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.இரு தசாப்தத்துக்குப் பின்னர் தனது மகனைக் கண்டு தாயாரும் தனது வயது முதிர்ச்சி மற்றும் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் அவரைக் கட்டி அணைத்து முத்தமிட்டார்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள் மத்தியில் ஒரு உணர்வு பூர்வமான சந்தோஷத்தை ஏற்படுத்தியதாக இல்லத்தின் அத்தியட்சகர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகக் கொண்டவர் கனகசபை அற்புதானந்த ஈஸ்வரன் அவருக்கு இப்போது வயது 65. கடந்த போரினால் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை இழந்த இவர் தனிமையில் தவித்து வந்தார்.ஊனமுற்ற நிலையில் இருந்த இவரைப் பராமரிக்க எவரும் இல்லாமையால் அப்பகுதிக் கிராம அலுவலர் மூலம் கைதடி அரச முதியோர் இல்லத்தில் இவர் சேர்க்கப்பட்டார். கடந்த ஒரு மாத காலத்துக்கு முன்னரே அவர் முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்டார்.

ஏற்கனவே இவரது தாயாரான கனகசபை பரமேஸ்வரி கடந்த 20 வருடங்களாக கைதடி முதியோர் இல்லத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறார். அவருக்குக் கண்பார்வை இல்லை. படுத்த படுக்கையிலேயே இருக்கிறார். அவர் அங்கு இருப்பது மகனான அற்புதானந்த ஈஸ்வரனுக்குத் தெரியாது.இந்த நிலையில் அற்புதானந்த ஈஸ்வரன் முதியோர் இல்ல நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று யாழ்ப்பாணத்தில் இருக்கும் உறவினரைச் சந்திக்கச் சென்றுள்ளார். உறவினர் வீட்டுக்குச் சென்றபோதுதான் தனது தாயார் முதியோர் இல்லத்தில் இருக்கும் விடயம் உறவினர் மூலம் அவருக்குத் தெரிய வந்தது.

இதனையடுத்து நேற்று முன்தினம் அற்புதானந்த ஈஸ்வரன் மீண்டும் முதியோர் இல்லத்துக்குச் சென்றார். அவர் முதியோர் இல்ல வாசலிலேயே பலத்த சத்தத்துடன் அழத் தொடங்கிவிட்டார். இதனால் இல்ல நிர்வாகிகள் திகைப்படைந்தனர்.

பின்னர் விடயத்தை விசாரித்த போது தான் உண்மை தெரியவந்தது.

தனது தாயார் இல்லத்தில் இருக்கும் செய்தியை அவர் இல்ல நிர்வாகிகளிடம் கூறினார். உடனடியாக இந்தத் தகவல் தாயாருக்குத் தெரிவிக்கப்பட்டது. மகனான அற்புதானந்த ஈஸ்வரனும் தாய் இருக்கும் இடத்தை நோக்கி ஓடிச் சென்றார். அங்கே தாயும் மகனும் ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

இது அங்கு கூடியிருந்த அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்ததாக இல்லத்தின் அத்தியட்சகர் கூறினார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகளின் வழியைப் பின்பற்றினால் அரசு அதை பொறுத்துக்கொள்ளாது - லக்ஸ்மன் யாப்பா!
[Thursday, 2013-06-20 17:28:57]

விடுதலைப் புலிகள் துப்பாக்கிகளின் மூலம் அடைய நினைத்ததை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியாக அடைவதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. ஆனால், இந்த விவகாரத்தை பின்தள்ளிப் போடலாம். அது தமிழ் மக்களுக்கு தீங்கானது.எதைச் செய்ய வேண்டுமானாலும், அவர்கள் தெரிவுக்குழு முன் தோன்ற வேண்டும். தற்போதைய பிரச்சினைக்கு சிறிலங்கா அரசாங்கத்தினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் தனித்து தீர்வு காணமுடியாது.



தனது கள்ள மனைவியை வெட்டிக் கொன்ற நபருக்கு மரண தண்டனை!
[Thursday, 2013-06-20 17:21:01]

தனது கள்ள மனைவியை கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் தல்துவ - தெஹியோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தனது கள்ள மனைவி மீதான சந்தேகத்தினால் இந்நபர் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். இந்நிலையில் தனது பிள்ளைகளுக்கு சுகயீனம் காரணமாக அவர்களை பார்த்துக் கொள்ளவேண்டும் எனக் கூறி தன்னை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.



கடும் காற்று வீசும் என கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
[Thursday, 2013-06-20 17:14:54]

மன்னாரிலிருந்து காலி ஊடாக பொத்துவில் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைவரையான பகுதிகளில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக் கூடும் என்பதால் கடற்றொழிலாளர்களையும் கடற்படையினரையும் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



இந்தியாவிலிருந்து 1600 அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்!
[Thursday, 2013-06-20 17:05:23]

கடந்த ஆண்டில் 1600 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்கள் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்தனர். போர் நிறைவடைந்ததன் பின்னர் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்பி வருகின்றனர். 2010ம் ஆண்டில் 2040 பேரும், 2011ம் ஆண்டில் 1670 பேரும் நாடு திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.



பேரூந்து மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழப்பு - சீனக்குடாவில் சம்பவம்!
[Thursday, 2013-06-20 16:54:23]

திருகோணமலை- மட்டக்களப்பு ஏ-15 வீதியில் பஸ் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணியளவில் சீனக்குடா மீன்பிடித் துறைமுகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையில் இருந்து கிண்ணியா ஊடாக கொழும்புக்கு சேவையில் ஈடுபடும் பஸ்ஸே இவர் மீது மோதியுள்ளது. பஸ் சாரதியும் நடத்துனரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் மிகுந்த மதுபோதையில் இருந்ததாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. பஸ் வண்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சீனக்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளரை தாக்கிய மாணவன் தொடர்ந்தும் மயக்க நிலையில்!
[Thursday, 2013-06-20 16:44:32]

நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் சட்ட பீட விரிவுரையாளரை தாக்கியதாகக் கூறப்படும் சட்டபீட மாணவனின் இரத்த மாதிரி, கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாக களுபோவில வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் லயனல் மொஹாந்திரம் தெரிவித்தார். வைத்தியருமான மேற்படி மாணவன், குடித்ததாகக் கூறப்படும் விஷம் யாதென கண்டுபிடிப்பதற்காகவே அம்மாணவனின் இரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.



சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளை எந்த அளவு மீற முடியும் என்பதை ஜனாதிபதி மகிந்த நிரூபித்து காட்டிவிட்டார்!
[Thursday, 2013-06-20 08:36:28]

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை தம்மால் எந்த அளவு மீற முடியும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஏற்கனவே இந்தியாவிடம் காட்டிவிட்டதாக உள்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 13ம் திருத்தசட்டத்துக்கு எதிரான குரல்கள் உள்நாட்டு அடிப்படைவாத கட்சிகளுக்கு இடையில் வலுப்பெறுகின்றன. ஜனாதிபதிக்கும் இந்த சட்ட மூலத்தில் உடன்பாடு இல்லாத நிலையில் அதன் மீதான திருத்தங்களை அங்கீகரித்துள்ளார். இந்த நிலையில் இந்தியா இலங்கை மீது கடும் அதிருப்தியை கொண்டுள்ளது. இதேவேளை, இலங்கையின் இந்தியாவை மீறிய செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில், இந்தியாவினால் இலங்கைக்கு எதிராக எதனை வேண்டுமானாலும் மேற்கொள்ள முடியும் என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. மேற்குலக நாடுகளில் சீனாவை விட இந்தியாவுக்கான ஆதரவு அதிகம். ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வலுவூட்டி வளர்த்த இந்தியா தற்போது மீண்டும் அந்த செயற்பாட்டினை தொடராலாம் என்றும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.



புலிகள் சாதிக்க முயற்சித்ததை ஜனநாயக ரீதியில் சாதிக்க கூட்டமைப்பு முயற்சி - லக்ஸ்மன் யாபா அபேவர்தன
[Thursday, 2013-06-20 08:30:54]

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதத்தினால் சாதிக்க முயற்சித்தத்தை, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனநாயக ரீதியில் அடைந்துக் கொள்ள முயற்சிப்பதாக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரையில் தமிழ் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. ஆனால் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் முழு தமிழ் சமூகத்தையும் பாதிப்பதாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்த நடவடிக்கைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



நுவரெலியாவில் பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது - 4 பேர் பலி 87 பேர் காயம்!
[Thursday, 2013-06-20 08:28:37]

நுவரெலியா, சீதா எலிய பகுதியில் பஸ்ஸொன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால், குறித்த பஸ்ஸில் பயணித்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் உட்பட நால்வர் பலியாகியுள்ளதுடன், 87 பேர் காயமடைந்துள்ளனர். பதுளையிலிருந்து நுவரெலியாவுக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு சுற்றுலா வந்த தனியார் பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.



வட மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் காணி, பொலிஸ் அதிகாரங்களில் மாற்றமில்லை - நிமல்
[Thursday, 2013-06-20 08:19:58]

செப்டம்பரில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறான திருத்தங்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கப்படலாம். சகல அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதனால் இரண்டு அல்லது இரண்டிற்கு அதிகமான மாகாண சபைகள் இணைவதை தடுக்கும் திருத்தம் இரண்டுவாரங்களுக்குள் சட்டமாக்கப்படும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சரும், சபைத்தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இந்த விவகாரங்களில் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் அழுத்தத்திற்கு அரசாங்கம் அடிபணியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு எதிரான சக்திகளின் அழுத்தம் காரணமாகவே கடந்த மார்ச் மாதம்; நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. இதனை நாம் விளங்கிக்கொண்டுள்ளோம்.



தமிழர்களுக்கு எந்த காலத்திலும் நியாமான தீர்வு கிடைக்கக்கூடாது என்பதில் அரசு தீவிரம் - சித்தார்த்தன்
[Thursday, 2013-06-20 08:18:14]

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு மத்திய அரசாங்கத்தின் தலையீடற்ற சமஷ்டி தீர்வே தேவை. எவ்வாறாயினும் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு எந்தக் காலத்திலும் கிடைக்கக்கூடாது என்பதில் அரசாங்கம் தீவிரமாகச் செயற்படுகின்றது என்று புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை, யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, '1987ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதில் ஒன்றும் இல்லை என்று அதனை நிராகரித்த தமிழர் தரப்பு, இன்று 13இல் எந்தவிதமான மாற்றமும் செய்ய வேண்டாம். அதற்கான அழுத்தத்தை இந்தியா வழங்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் காய் நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளது' என்று குறிப்பிட்டார்.



13 ஆம் திருத்தச் சட்டச் சர்ச்சைகள் குறித்துப் பேசுவாராம் - சிவசங்கர் மேனன் கொழும்பு வருகின்றார்:
[Thursday, 2013-06-20 08:10:19]

இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் இந்தியாவினது மூத்த இராஜ தந்திரியுமான சிவ்சங்கர் மேனன் இந்திய அரசின் ஏற்பாட்டில் முக்கிய பயணமொன்றை மேற்கொண்டு ஜூலை 7ஆம் திகதி கொழும்பு வரவுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பயணத்தின் போது மேனன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்திப்பாரென இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..



கொழும்பு துறைமுக களஞ்சியசாலை தீ விபத்து - பணிப்பாளர்கள் இருவருக்கு விளக்கமறியல்
[Thursday, 2013-06-20 08:10:00]

60 கோடி ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய கொழும்பு துறைமுக களஞ்சியசாலை தீ விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பணிப்பாளர்கள் இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பணிப்பாளர்கள் இருவருரையும் கொழும்பு மேலதிக நீதவான் சந்திம பெர்னாண்டோ முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்திய போதே அவ்விருரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். விரைவாக தீ பற்றக்கூடிய இராசாயன பொருட்களை அனுமதியின்றி களஞ்சியப்படுத்தியிருந்தனர் என்ற குற்றச்சாட்டு இவ்விருவருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோவிடம் விசாரணை நடத்த முடியாது : சட்டத்தரணி
[Thursday, 2013-06-20 07:43:21]

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோவிடம் விசாரணைகள் நடத்த முடியாது என்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த அரச தரப்பு சட்டத்தரணி சமிந்த அத்துகோரள நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்தார். 2010 ஆம் ஆண்டு காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் வை.ஆர்.பீ நெலும்தெனிய முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவின் கோரிக்கைக்கு அமைவாக அவர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி உபுல் குமார பெரும, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோவை விசாரணைக்கு அழைக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.



ஊடகங்களை ஒடுக்கும் நோக்கிலேயே புதிய ஒழுக்க விதிகள் இலங்கை அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: - மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு
[Thursday, 2013-06-20 07:33:13]

இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்கள் ஏற்கனவே அழுத்தங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் அரசினால் புதிதாகக் கொண்டு வரப்படும் ஊடக ஒழுக்க விதிகள் பேச்சுச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவே அமையும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.



எமது விளைநிலங்களை எம்மிடமே தாருங்கள்! வெலிஓயா பிரதேச செயலரிடம் மகஜர் கையளிப்பு!Top News
[Wednesday, 2013-06-19 21:00:36]

முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் ரவிகரன் தலைமையிலான பிரஜைகள் குழுவினரும், தமது வயல்நிலங்களை இழந்து தவிக்கும் கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களைச்சேர்ந்த மக்களின் பிரமுகர்களும், இணைந்து, வயல்நிலங்களின் காவல் தெய்வமான கோட்டைக்கேணி பிள்ளையார் கோவில் இறை வழிபாட்டின் பின்னர், வெலிஓயா பிரதேச செயலர் தீபல் நிஸாந்த திரிமன்னவிடம் இன்று காலை 11.00 மணியளவில் மகஜரை கையளித்ததோடு, மகஜரின் பிரதி ஒன்றை மகாவலி திட்ட அதிகார சபையின் வெலிஓயாவுக்கான இணைப்பதிகாரியிடமும் கையளித்தனர்.



வவுனியா வைத்திய சாலையில் தாதியர்கள் பணி பகிஷ்கரிப்பு! Top News
[Wednesday, 2013-06-19 20:52:13]

அரசாங்க தாதிமார் சங்கத்தை சேர்ந்த தாதிய உத்தியோகத்தர்கள் பல அம்ச கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா வைத்திய சாலை முன்றலில் சுலோக அட்டைகளை தாங்கியவாறு ஒரு மணி நேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அரசே ஒரு வாரத்திற்கான வேலை நாட்களை ஐந்து நாட்களாக மாற்று ,ஆபத்து கொடுப்பனவு அனைத்து தாதிய உத்தியோகத்தர்களுக்கும் வழங்க வேண்டும்,மேலதிக நேர கொடுப்பனவு என்பன அதிகரிக்கப் பட வேண்டும் ,அரசே 1979 ல் வெளி வந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் ,பட்டதாரி தாதிய உத்தியோகத்தர் களுக்கு நியமனத்தை வழங்கு ,சேவை மூப்பு அடிப்படையின் அடிப்படையின் படி மூத்த தாதியர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்கு என்பவற்றை முதலான கோரிக்கைகளை முன் வைத்து இப்போராட்டம் நடை பெற்றது.



யாழ்.மக்கள் இராணுவத்தினரை விரும்புகின்றனர் - லலித் வீரதுங்க!
[Wednesday, 2013-06-19 20:26:48]

யாழ்ப்பாணத்திலுள்ள காணிகள் பொது மக்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆயுதபடைகளை அங்கு தொடர்ந்தும் இருக்குமாறு யாழ்ப்பாண மக்கள் மனப்பூர்வமாக கேட்பதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். பல நிலங்கள் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளன, அரசாங்கத்துக்கு தேவையான நிலங்களை அரசாங்கம் வைத்துக்கொள்ளும். உயர் பாதுகாப்பு வலயம் 60 சதவீதத்தால் குறைந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



13 பிளஸ் எனக்கூறியது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வையே : இந்தியாவிற்கு இலங்கை புது விளக்கம்!
[Wednesday, 2013-06-19 18:53:08]

"13 + என நாம் சொன்னது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான தீர்வு" இதுவும் மகிந்த சிந்தனையின் ஒரு துளி இலங்கையின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் மிகவும் விரிவுப்படுத்தப்பட்ட பொதுவான தீர்வையை 13 பிளஸ் என இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு அறிவித்திருந்தாக இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு புதிய விளக்கம் அளித்துள்ளது. அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் ஊடாக இலங்கை அரசாங்கம் இதனை இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. 13வது அரசியல் அமைப்புத் திருத்தமானது அரசியல் கட்சிகளின் உரிய இணக்கங்கள் இன்றியே ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.



விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்களை தடைசெய்யுமாறு ஆஸி. பிரதமரிடம் இலங்கை வேண்டுகோள்! Top News
[Wednesday, 2013-06-19 18:46:02]

அவுஸ்திரேலியாவில் இயங்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளை தடைசெய்யுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஜுலியா கில்லார்ட்டிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாமல் ராஜபக்ச,லொஹான் ரத்வத்த, திலங்க சுமதிபால, வசந்த சேனநாயக்க ஆகிய ஆளும்கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்குத் தலைமையேற்று அவுஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜுலியா கில்லார்ட், வெளிவிவகார அமைச்சர் றொபேட் கார் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இதன்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதுடன், வரும் நவம்பரில் கொழும்பில் கொமன்வெல்த் உச்சி மாநாட்டை நடத்துவதற்கான அவுஸ்திரேலியாவின் உதவியையும் கோரியுள்ளார்.


NIRO-DANCE-100213
TDE_Computers2011
RoyaShades-l2011(04-12-11)
TamilsGuid-191012-2013
Ramans2011
AJRwindows22.05.13
Suresh-remax-2013-01-01
Mahesan supramaniyam 031109
INNSYS-20120930
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com