Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
பிலிப்பைன்சில் 40 ஆண்டுகால ஆயுதமோதலுக்கு முடிவு -கிளர்ச்சியாளருடன் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து!
[Tuesday, 2012-10-16 12:14:31]
News Service

பிலிப்பின்ஸ் அரசுக்கும் முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே திங்கள்கிழமை வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் மிண்டனாவ் மாகாணத்தில் நீடித்து வந்த 40 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  

இந்த ஒப்பந்தம், தலைநகர் மணிலாவில் உள்ள அதிபர் மாளிகையில் பிலிப்பின்ஸ் அதிபர் பெனிக்னோ அக்வினோ, மோரோ இஸ்லாமிக் லிபரேஷன் ஃபிரன்ட் (எம்ஐஎல்எஃப்) அமைப்பின் தலைவர் முராத் இப்ராஹிம் மற்றும் மலேசிய பிரதமர் நஜீப் ரஸக் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. இது தொடர்பான பேச்சுவார்த்தையில் நஜீப் முக்கியப் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, மிண்டனாவ் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதி "பாங்க்ஸ்மோரோ' என்ற பெயரில் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும். இதுகுறித்த வரைவு மசோதாவை உருவாக்க 15 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும். முஸ்லிம் வசிக்கும் பகுதியை தனி நாடாக அறிவிக்கக் கோரி எம்ஐஎல்எஃப் அமைப்பு கடந்த 40 ஆண்டுகளாக போராடி வந்தது. இது தொடர்பான போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இயற்கை வளம் மிகுதியாக இருந்தபோதிலும், போராட்டம் காரணமாக இந்தப் பகுதியின் வளர்ச்சி தடைபட்டு வந்தது. இந்நிலையில் மலேசியப் பிரதமரின் உதவியுடன் இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. எனினும், தனி நாடாக அறிவிக்க பிலிப்பின்ஸ் அரசு மறுத்து விட்டது. இந்தக் கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்றும் இந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது.

இதுகுறித்து பிலிப்பின்ஸ் அதிபர் அக்வினோ கூறுகையில், "இந்த ஒப்பந்தத்தின் மூலம் மிண்டனாவ் மாகாணத்தில் போராட்டம் முடிவுக்கு வந்து அமைதி நிலவும் என்று நம்புகிறேன். இதன்மூலம் இப்பகுதி இனி வளர்ச்சி அடையும்.வன்முறையைக் கைவிட்டு ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்யும். பாங்ஸ்மோரோ பகுதிக்கான சட்ட மசோதாவை உருவாக்க தேவையான உதவிகளை செய்வோம்'' என மலேசிய பிரதமர் நஜீப் தெரிவித்தார்.

புதிய தன்னாட்சி பெற்ற பாங்ஸ்மோரோ சட்டத்துக்கு பிலிப்பின்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கும் வரை இப்போது உள்ள நிலையே நீடிக்கும். இந்த ஒப்பந்தம் 2016ல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

சீனப் பிரதமரின் இந்தியப் பயணத்துக்கு எதிராக திபெத் அமைப்புகள் போராட்டம்!
[Monday, 2013-05-20 08:07:25]

சீனப் பிரதமர் லீ கெகியாங்கின் இந்திய சுற்றுப் பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரு நாள்களுக்கு தொடர் போராட்டங்களை நடத்த இருப்பதாக திபெத் அமைப்புகள் அறிவித்துள்ளன. இதையடுத்து தில்லியில் போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். லீ கெகியாங் தங்கியுள்ள ஹோட்டல், சீன தூதரகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தில்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே திபெத்தியர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதால், திங்கள்கிழமை காலை 8 முதல் 10 மணி வரை 4 மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்படுகின்றன. லீ கெகியாங், அவருடன் வந்துள்ள குழுவினரின் பயணத்திட்டங்களுக்கு ஏற்ப போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.



தபால் ஊழியர்கள் அதிகளவில் நாய்க்கடியால் பாதிக்கப்படும் நகரம் லொஸ்ஏஞ்சல்ஸ் தானாம்!
[Monday, 2013-05-20 08:03:17]

தபால் துறை ஊழியர்கள் நாய் கடியால் பாதிக்கப்படுவது லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில்தான் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.நாய்கள் ஜாக்கிரதை எச்சரிக்கை பலகை உலகளவில் பல வீடுகள், பங்களாக்களில் வைக்கப்படுகின்றன. தெரிந்தவர்களை, நன்றாக பழகியவர்களையே பல வேளைகளில் செல்ல நாய்கள் கடித்து வைக்கின்றன. அப்படி இருக்கும் போது, அரசு சீருடையில் வருபவர்களை பார்த்ததும் சும்மா இருக்குமா? குறிப்பாக நாய்களால் அதிகம் பாதிக்கப்படுவது தபால் துறை ஊழியர்கள்தான் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க தபால் துறை சேவை செய்தி தொடர்பாளர் ஈவா ஜேக்சன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:



எல்லையில் அமைதி குலைந்தால் இருதரப்பு உறவு பாதிக்கும் - சீனப் பிரதமரை எச்சரித்தாராம் மன்மோகன்சிங்!
[Monday, 2013-05-20 07:58:41]

எல்லைப் பகுதியில் அமைதி குலைந்தால் இருதரப்பு உறவு பாதிக்கும் என சீன பிரதமர் லீ கெகியாங்கிடம் பிரதமர் மன்மோகன் சிங் கண்டிப்புடன் கூறியுள்ளார். சீனப் பிரதமராகப் பொறுப்பேற்ற பின், லீ கெகியாங் முதல் வெளிநாட்டுப் பயணமாக தில்லி வந்தடைந்தார். மூன்று நாள் பயணமாக வந்துள்ள அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் கடந்த மாதம் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது குறித்த தனது கவலையை பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.



பாரிய விண்கல் சந்திரனில் மோதியதால் பெரும் பள்ளம் தோன்றியது!
[Monday, 2013-05-20 07:37:37]

விண்கல் மோதியதில் நிலவில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தெரிவித்துள்ளது. "சிறிய அளவிலான பாறை போன்ற விண்கல் கடந்த மார்ச் 17-ம் தேதி நிலவில் மோதியது. அப்போது, இதுவரை பார்த்திராத அளவுக்கு அதிகளவு வெளிச்சம் உண்டானது' என்று விண்கற்கள் ஆராய்ச்சியாளர் பில் குக் தெரிவித்தார். நிலவில் மோதிய விண்கல் 40 கிலோ அளவுக்கு எடை கொண்டதாகவும், 0.3 முதல் 0.4 மீட்டர் நீளம் கொண்டதாகவும் இருந்தது. அது, மணிக்கு 90123 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



விண்வெளிக்கு ரஸ்யா அனுப்பிய எலிகள், பல்லிகள், நத்தைகள் பத்திரமாக பூமிக்குத் திரும்பின!
[Monday, 2013-05-20 07:10:31]

ரஷ்யா அனுப்பிய விண்கலத்தில் சென்ற எலி, பல்லி, நத்தை போன்றவை, நேற்று, பாதுகாப்புடன் பூமிக்குத் திரும்பின. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்குரிய சூழல் உள்ளதாக, விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதற்கான ஆய்வுகளில் பல நாடுகள் ஈடுபட்டு உள்ளன. செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் நடவடிக்கையிலும், சில தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன. செவ்வாய் கிரகத்தின் சூழல், உயிரினங்களுக்கு எந்த வகையில் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைக கண்டறிவதற்காக, ரஷ்ய விஞ்ஞானிகள், சுண்டெலி, நத்தை, பல்லி உள்ளிட்ட உயிரினங்களை, பயோன்-எம் விண்கலம் மூலம், கடந்த மாதம், விண்வெளிக்கு அனுப்பினர். இந்த விண்கலம், ரஷ்யாவின், ஓரன்பர்க் நகரில் நேற்று பாதுகாப்பாக தரை இறங்கியது.



ஒரே நேர்கோட்டில் புதன், வியாழன், வெள்ளி கிரகங்கள் - வரும் 28ம் தேதி தெளிவாகத் தெரியும்!
[Sunday, 2013-05-19 20:36:13]

புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் நிற்கும் அற்புத நிகழ்வை வரும் 28-ம் தேதி காணலாம். பூமியில் இருந்து காண்போரின் கண்களுக்கு இந்த காட்சியானது புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிரகங்கள் அருகருகே இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இரண்டு பவுர்ணமி நிலவின் அளவிற்கு புதன் கிரகம் காணப்படும். அதனையடுத்து சற்று ஒளிமங்கிய நிலையில் வியாழன் கிரகமும், நேர்க்கோட்டில் தென்படும். இவை இரண்டிற்கும் சற்று தூரத்தில் வெள்ளி கிரகமும் தெரியும். வரும் 28-ம் தேதி சூரியன் மறைந்த பிறகு வானத்தின் மேற்கு திசையில் இக்காட்சியை காண முடியும்.



அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு ஈரானில் மரணதண்டனை!
[Sunday, 2013-05-19 19:50:08]

உளவு பார்த்ததாக ஈரானில் இரு உளவாளிகளுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. இஸ்ரேலைச் சேர்ந்த முகமது ஹைதாரி, இவர் அந்நாட்டு உளவு நிறுவனமான மூசாத் அமைப்பிற்கு ஆதரவாகவும், அமெரிக்காவைச் சேர்ந்த கவுரோஷ் அகமாதி , சி.ஐ.ஏ. உளவு அமைப்பிற்காகவும், ஈரானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஈரானின் அணு ரகசியங்களை உளவு பார்த்தது உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.



முன்சக்கரம் இயங்க மறுத்ததால், தரையில் சறுக்கியபடி தரையிறங்கிய அமெரிக்க விமானம்!
[Sunday, 2013-05-19 19:27:52]

அமெரிக்க நியுயோர்க் பன்னாட்டு விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது.அப்போது அந்த விமானத்தின் முன் சக்கரப் பகுதியில் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமான முன் சக்கரம் கீழிறங்காமல், விமானத்தின் முன்பகுதி தரையை கிழித்துக் கொண்டு சறுக்கி சென்றது. இதனால் விமானத்திற்குள்ளே இருந்தவர்கள் என்ன ஆவர்களோ என்று பரபரப்பு நிலவியது. இருந்தும் அந்த விமானம் சறுக்கி சென்றுச் நின்று விட்டதால், அதிலிருந்த 34 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



வரும் 31ம் திகதி இரவு பூமியைத் தாக்குமா ராட்சத எரிகல்?
[Sunday, 2013-05-19 19:19:57]

இந்த மாத இறுதியில் பூமியை நெருங்கும் ராட்சத கல் பூமியை தாக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் ஏராளமான எரிகற்கள் சுற்றி திரிகின்றன. இந்நிலையில், ராட்சத பாறை போன்ற எரிகல் ஒன்று பூமியை நோக்கி நெருங்கி வருகிறது. இது 1.7 மைல் நீளம் கொண்டது. இதை கடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்காவின் மசாசூசெட்ஸ்சில் உள்ள வின்கோல்ன் தொழில் நுட்பத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டது. நியூ மெக்சிகோவில் சொகோர்ரோ என்ற இடத்தில் எரிகல் ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது இது கண்டறியப்பட்டது. இந்த ராட்சத எரிகல் வருகிற 31ந்தேதி இரவு 9.59 மணிக்கு பூமிக்கு மிக அருகில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இங்கிலாந்தில் நான்கு சிறுநீரகங்களுடன் வாழும் பெண் - டாக்டர்கள் அதிர்ச்சி!
[Sunday, 2013-05-19 19:13:48]

லண்டனை சேர்ந்த ஜெஸ்சிகா கர்பே (20). இவருக்கு வயிற்றின் வலது பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது. எனவே அவர் டாக்டரை சந்தித்தார். அப்போது சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், சிறுநீர் தொற்று நோய் இருப்பது தெரியவந்தது. அதற்குரிய மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. இருந்தும் நோய் குணமாகவில்லை.எனவே, அவரது சிறுநீரகம் ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது, வலது புற சிறுநீரகத்துடன் 7 செ.மீட்டர் கட்டி இருப்பதை டாக்டர்கள் பார்த்தனர். இதை தொடர்ந்து 11 நாட்கள் கழித்து மீண்டும் பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில், அவருக்கு வலப்புறத்தில் 2 சிறுநீரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



சீனாவில் கனமழையால் 100 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - 55 பேர் பலி!
[Sunday, 2013-05-19 10:27:15]

சீனாவில் கனமழைக்கு இதுவரை 55 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். போர்க் கால அடிப்படையில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சீனாவின் தென் பகுதிகளில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். கன மழையில் இதுவரை மூழ்கியும், நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கியும் 55 பேர் இறந்துள்ளனர். அவர்களின் உடல்களை மீட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி மேலும் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளம் சீனாவின் தென் பகுதிகளில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.



பாலின மாற்று அறுவைச் சிகிச்சையால் பிரம்படி தண்டனையில் இருந்து தப்பிய ஆண்!
[Sunday, 2013-05-19 10:20:38]

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆண் ஒருவர் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியதால் பிரம்படி தண்டனையில் இருந்து தப்பினார். அவருக்கு 14 மாதம் சிறைத் தண்டனை மட்டும் விதிக்கப்பட்டது. அவரது பெயர் பெனிதா (21). இவர், தனது ஆண் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர் ஒருவரது வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கினார். அவரது வீட்டு கதவை தீ வைத்து கொளுத்தினார் என்பது குற்றச்சாட்டு. சிங்கப்பூரில் ஆண்கள் இதுபோன்ற குற்றங்களைச் செய்தால் பிரம்படி தண்டனை வழங்கப்படுவது வழக்கம்.



சீனப்பிரதமர் இன்று இந்தியாவுக்கு விஜயம் - மூன்று நாட்கள் தங்கிருப்பார்!
[Sunday, 2013-05-19 10:18:28]

சீன பிரதமர், லி கெகியாங், மூன்று நாள் பயணமாக, இன்று மதியம், இந்தியா வருகிறார். இருதரப்பு நல்லுறவு, வர்த்தகம் தொடர்பாக, பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. சீன பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற லி கெகியாங், தன் முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணமாக, இன்று இந்தியா வரவுள்ளார். மதியம், டில்லி வரும் அவர், தனிப்பட்ட முறையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுகிறார். இரவில் அவருக்கு, பிரதமர், மன்மோகன் விருந்து அளிக்கிறார். அதில், மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.திங்கள் கிழமை, இருதரப்பு முக்கிய பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், தொழில் ஒத்துழைப்பு மற்றும் எல்லைப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.



நான்கு வயதுச் சிறுவனை மேயராக்கிய அமெரிக்க நகரவாசிகள்!
[Sunday, 2013-05-19 10:13:16]

அமெரிக்காவின், மின்னிசோட்டா மாகாணத்தில் வசிக்கும் ராபர்ட் டப்ஸுக்கு இப்போது 4 வயது.. இன்னும், பாலர் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், அமெரிக்காவில், 22 பேர் மட்டுமே வசிக்கும், "டோர்செட்' நகரத்தின் மேயர். இந்நகர மக்கள், கடந்த ஆண்டு நடந்த ஒரு விழாவில், டப்சை, மேயராகத் தேர்ந்தெடுத்தனர். "மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டப்ஸ், ஒரு பொது நல விரும்பி; அவன் பெரிய படிப்புகளை இன்னும் முடிக்கவில்லை. ஆனால், மக்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினான். முதியோர்களின் கைத்தடிகளைப் பிடித்து, சாலையை கடக்கச் செய்வான்; நன்றாக மீன் பிடிப்பான்' என, டோர்செட் நகர பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார். "மேயர் மிகவும் அழகாகப் பாடுவார்; நன்றாக நடனம் ஆடுவார்; மேலும், மக்கள் மிகவும் கவனமாக தெருக்களைக் கடக்க சொல்லிக் கொடுப்பார்' என, மின்னிசோட்டா பகுதி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.



தரையிறங்கும் போது தீப்பிடித்த விமானம் - விமானியின் சாதுரியத்தினால் 136 பயணிகளும் உயிர்தப்பினர்!
[Sunday, 2013-05-19 10:07:16]

மொஸ்கோவில் தரையிறங்கிய விமானத்தில் திடீரென தீ பற்றியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் சிறு காயமின்றி தப்பினர். ரஷ்யாவின் தென்பகுதியான ஸ்டாவ்ரோபோலில் இருந்து மாஸ்கோவிற்கு போயிங்-737 என்ற விமானம் 136 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் மாஸ்கோவில் தரையிறங்கும் போது ‌தீ பிடித்து மேலும் கீழுமாக தள்ளாடிய போதிலும் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்.இது குறித்து அவசரகால நிலைகள் துறை அமைச்சகம் ‌கூறுகையில் விமானம் தரையிறங்கும் போது தீ பிடித்த போதிலும் விமானி திறமையாக செயல்பட்டு தரையிறக்கினார். இதனால் பயணிகள் யாருக்கும் காயங்கள் இல்லை பயணிகள் 129 பேர் தான் இருந்தனர் என்றது.



இன்று ஒரே நாளில் மூன்று குறுந்தூர ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது வடகொரியா!
[Saturday, 2013-05-18 20:22:36]

குறைவான தூரம் பாய்ந்து சென்று தாக்கும் மூன்று ஏவுகணைகளை பசிபிக் கடலின் கிழக்குப் பகுதியில் வடகொரியா இன்று ஒரே நாளில் ஏவியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இது குறித்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கிம் மின்-சியோக் கூறுகையில், இன்று காலை இரண்டு ஏவுகணைகளையும், மதியம் ஒரு ஏவுகணையையும் வடகொரியா ஏவியதாக குறிப்பிட்டார். வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையை அடுத்து கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.



இந்தியாவுக்கு இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்ய அமெரிக்க அரசு அனுமதி!
[Saturday, 2013-05-18 20:16:55]

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இயற்கை எரிவாயுவை ஏற்றமதி செய்ய அந்நாட்டு அரசு விதிமுறைகளுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது. அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயுவை, அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்ட நாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும். இந்தியா இது போன்ற ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் செய்து கொள்வில்லை. எனினும், இந்தியாவுக்கு இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்ய அமெரிக்காவின் எரிசக்தித்துறை விதிமுறைகளுடன் கூடிய சிறப்பு அனுமதி அளித்துள்ளது.



செயற்கைக் கோள்களைத் தாக்கும் ஏவுகணையை சீனா ஏவியதாக சர்ச்சை!
[Saturday, 2013-05-18 20:14:07]

சீனா கடந்த சனிக்கிழமை சிசுவான் மாகாணத்தில் உள்ள ஸிசாங் செயற்கை கோள் தளத்தில் இருந்து விண்ணுக்கு ஒரு ராக்கெட்டை செலுத்தியது. ஆனால் இது செயற்கை கோளை வழிமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.இதை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. விண்ணில் ராக்கெட் செலுத்தியது ராணுவ வளர்ச்சிக்குதான் என தெரிவித்தது. ஆனால் பூமியின் மேற்பரப்பில் பாறை அடுக்குகளில் உள்ள சக்தி வாய்ந்த துகள்கள் மற்றும் காந்த வயல்கள் குறித்து ஆய்வுக்காக அனுப்பப்பட்டதாக சீனாவின் தேசிய விண்வெளி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற மாறுபட்ட கருத்துகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



நியுயோர்க்கில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல் - 60 பேர் காயம்!
[Saturday, 2013-05-18 20:07:50]

நியூயார்க்கின் வடக்கு புறநகர் பகுதியில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன. இதில் சுமார் 60 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூயார்க்கில் இருந்து வந்த ரயிலும், கனெக்டிகட்டிற்கு சென்ற ரயிலும் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் ‌நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்துக்கு குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கிச் சூடு - நடிகர்கள் தப்பியோட்டம்!
[Saturday, 2013-05-18 20:03:17]

பிரான்சின் கேன்ஸ் நகரில் நடைபெறும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டை அடுத்து விழாவிற்கு வந்திருந்த நடிகர், நடிகைகள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் அரங்கத்தை விட்டு வெளியே ஓடினர். இதனால் சிறிது நேரம் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. துப்பாக்கியால் சுட்டவரை மேடை அருகில் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து துப்பாக்கி, கத்தி, பிளாஸ்டிக் கையெறி குண்டுகள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Mahesan supramaniyam 031109
Ramans2011
NIRO-DANCE-100213
Suresh-remax-2013-01-01
RoyaShades-l2011(04-12-11)
TDE_Computers2011
INNSYS-20120930
TamilsGuid-191012-2013
Canada Kanthasamy Kovil
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com