Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 25, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
மீண்டும் அரசியல் பேச்சுக்களை நடத்துவது தொடர்பான எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை: சின ஊடகத்திடம் சுரேஸ் பிறேமச்சந்திரன்.
[Friday, 2012-10-19 08:33:54]
News Service

சிறிலங்கா அரசுடன் மீண்டும் அரசியல் பேச்சுக்களை நடத்துவது தொடர்பான எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சீன செய்தி நிறுவனத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது..

  

நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு சிறிலங்கா அரசு தீர்வு கண்டால் தான், அவர்களுடன் பேச்சுக்களை மீள ஆரம்பிக்க முடியும். என்று கூறியுள்ளார். முன்னதாக, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடனான சந்திப்பை முடித்துத் திரும்பியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா அரசுடனான பேச்சுக்களை மீளத்தொடங்கும் என செய்திகள் வெளியாகியிருந்தன. என செய்தியாளர் டீகட்டபோது .. இல்லை, அது உண்மையில்லை. பேச்சுக்களை மீளத் தொடங்குவது குறித்தோ, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைவது குறித்தோ நாம் தீர்மானிக்கவில்லை என பதிலளித்துள்ளார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை ஈழத்தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இடையிலான ஒரு உறவுப் பாலம்! - நக்கீரன்
[Saturday, 2013-05-25 08:10:25]

தமிழர்களிடை ஒற்றுமை இல்லை, அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூட்டை போல இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டைப் பலர் முன் வைக்கிறார்கள். ஒற்றுமை என்பது ஒரு ஒப்பீட்டுச் சொல். நூற்றுக்கு நூறு ஒற்றுமை எந்த இனத்தவரிடமும் இல்லை. ஒற்றுமைக்குப் பெயர் போன யூதர்கள் பற்றி ஒரு பகிடி சொல்வார்கள். பத்து யூதர்கள் இருந்தால் பதினொரு கட்சிகள் இருக்குமாம். எல்லாம் வீட்டுக்கு வீடு வாசல்படி என்று சொன்ன கதைதான்.



விடுதலைப்புலிகள் தொடர்பில் பிரதியமைச்சர் முரளிதரன் விடுத்த கோரிக்கை அரசினால் நிராகரிப்பு!
[Saturday, 2013-05-25 08:10:06]

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில், பிரதி அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் விடுத்துள்ள கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களை விடுதலை செய்யுமாறு பிரதியமைச்சர் முரளிதரன் அரசாங்கத்திடம் கோரியிருந்தார். விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியமை, இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியமை, மக்களை கொலை செய்தமை உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 200 புலிஉறுப்பினர்கள் கைது செய்பப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் மட்டும் பொது மன்னிப்பு அடிப்படையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



தமிழ் எம்.பிக்கள் மீதான 4ம் மாடி விசாரணை - அமைச்சர்களை கடிந்து கொண்டார் சம்பந்தன்!
[Saturday, 2013-05-25 08:03:11]

தமிழ் எம்.பிக்கள் தொடர்ச்சியாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் தொடர்ச்சியாக விசாரணைக்கு அழைக்கப்படும் விவகாரம் தொடர்பாக பாராளமன்றில் நேற்று மதியபோசனை இடைவேளையின் போது அமைச்சர்களிடம் கடுமையாக பேசினார் சம்பந்தன் எம்.பி. அண்மையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சுரேஷ் ஆகியோரை நான்காம் மாடியில் வத்து விசாரித்துள்ளீர்கள். புதன்கிழமை சிவசக்தி ஆனந்தனை அழைத்து விசாரித்துள்ளீர்கள். நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்வீர்களா? ஏன் நீங்கள் இப்படி தாந்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றீர்கள்? ஏன் எம்மைப் புலிகள் என்று நினைக்கின்றீர்களா? அல்லது நான்காம் மாடி விசாரணை மூலம் தமிழர்களை அல்லது கூட்டமைப்பின் உறுப்பினர்களை அச்சமடையச் செய்யலாம்.என்று நினைக்கின்றீகளா? எனவும் சம்பந்தன் அமச்சர்களிடம் கேட்டார்.



இலங்கையைச் சேர்ந்த 16 புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா!
[Saturday, 2013-05-25 07:57:36]

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மேலும் 16 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அந்நாட்டு அரசாங்கத்தினால் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய வேண்டாம் எனத் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்ற போதும், அக்கோரிக்கையை செவிமடுக்காது சட்டவிரோதமாக வந்த 16 பேரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்தார். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்திலிருந்து சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தி வருகிறது.



பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டு கோத்தபாய அரசியல் பேசவேண்டும்: - சுரேஷ்பிரேமச்சந்திரன்
[Saturday, 2013-05-25 07:57:33]

13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலோ கருத்துக்கூறுவதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அதிகாரம் இல்லை. அவர் அரசாங்க அதிகாரியேயாவார். அரசியல் விடயங்கள் குறித்து பேசவேண்டுமானால் அவர் பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டு வரவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.



முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுக்கிறார்கள்! Top News
[Friday, 2013-05-24 22:40:09]

மாடு வெட்டுவதை கண்டித்து இன்று கண்டி தலதா மாளிகைக்கு அருகில் புத்த பிக்கு ஒருவர் தீக்குளித்ததாக தினக்கதிரில் செய்தி வெளியானதை பார்த்த நேயர் ஒருவர் இந்த படத்தையும் அனுப்பி வைத்ததுடன் ஏன் சிங்களவர்கள் மாடு வெட்டுவதில்லையா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். இலங்கையில் முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுகின்றனர். அதற்கான ஆதாரம் இதோ என இப்படத்தை அனுப்பியிருக்கிறார். இந்த புத்த பிக்கு எந்த உலகில் இருக்கிறார் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருந்தார்.



மட்டக்களப்பு கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித்தினப் போட்டி! Top News
[Friday, 2013-05-24 21:00:28]

மட்டக்களப்பில் நடைபெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித்தினப் போட்டியில்வாகரை கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் டெங்கை ஒழிப்போம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூத்து நிகழ்ச்சியில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளது. மனிதரைக் கொல்லும் கொடிய டெங்கு நோயை ஒழிக்கும் வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக விசேட கூத்தாக இக்கூத்து தயாரிக்கப்பட்டது. மக்கள் மத்தியிலே டெங்கு நோய் சம்பந்தமாக சுற்றாடலை சுத்தமாக பேணுவது தொடர்பாக ஆலோசனை கூறப்படும் வேளையில் ஒரு சிலர் ஒத்துழையாமை, எதிர்ப்பு தெரிவித்தல், விமர்சனம் செய்தல் போன்ற வகைகளால் குறித்த நோக்கம் எட்டப்படவில்லை. இதே போன்றது ஒரு எண்ணக்கருவை மையமாக வைத்து டெங்கு நோயை பரப்புகின்ற நுளம்பை கட்டுப்படுத்துவதற்கான ஒரு மார்க்கமாகவே இந்த விசேட கூத்து டெங்கை ஒழிப்போம் எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டது.



நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்வீர்களா? - அமைச்சர்களிடம் கடுமையாக பேசிய சம்பந்தன்
[Friday, 2013-05-24 20:32:10]

தமிழ் எம்.பிக்கள் தொடர்ச்சியாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் விவகாரம் தொடர்பாக பாராளமன்றில் நேற்று மதியபோசனை இடைவேளையின் போது அமச்சர்களிடம் கடுமையாக பேசினார் சம்பந்தன் எம்.பி அண்மையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சுரேஷ் ஆகியோரை நான்காம் மாடியில் வத்து விசாரித்துள்ளீர்கள் புதன்கிழமை சிவசக்தி ஆனந்தனை அழைத்து விசாரித்துள்ளீர்கள்.



சாரணர் பயிற்சிக்கு சென்ற மாணவன் ஆற்றில் மூழ்கி மரணம் - வாழைச்சேனையில் சம்பவம்!
[Friday, 2013-05-24 18:16:27]

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மாந்தறை ஆற்றில் மூழ்கி மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். மரணமானவர் பிறைந்துரைச்சேனை ஷாதுலியா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்விகற்கும் பதுர்தீன் முஹம்மது பாயிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



ஒற்றுமையின் மூலமே பெற்றுக்கொண்ட சமாதானத்தை பாதுகாக்க முடியும் - ஹத்துருசிங்க!
[Friday, 2013-05-24 16:54:42]

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெற்றுக்கொண்ட சாமாதானத்தை ஒற்றுமையின் மூலமே பாதுகாக்க முடியும் என்று யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை வெசாக் தினத்தையொட்டி பாதுகாப்பு படைகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற பசுமாடுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்...



அரசியல் பேதங்களை பின்தள்ளி வைத்துவிட்டே சமய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் - விமல் வீரவன்ச!
[Friday, 2013-05-24 16:49:50]

சமய நடவடிக்கைகளின் போது, அரசியல் பேதங்களை பின்தள்ளி வைக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சமய நடவடிக்கைகளின் போது அரசியல் கட்சிகள் பேதங்களை புறந்தள்ளி விட்டு, அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். விகாரை ஒன்றை அபிவிருத்தி செய்யும் பணியின் போது, அங்குள்ள மத தலைவர்களின் அரசியல் நிலைப்பாடுகளையோ பங்களிப்புச் சபையின் அரசியல் குறித்தே கவனம் செலுத்தக் கூடாது. எனினும் சில அரசியல்வாதிகளின் எதிரான அரசியல் செயற்பாடுகள் காரணமாக தற்போதுள்ள மத வழிப்பாட்டுத் தலங்கள் குறித்து கவனத்தில் கொள்ளாது செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.



பிரித்தானியாவிற்கு ஆட்களை கடத்திவந்த இலங்கையர் கைது.
[Friday, 2013-05-24 16:46:01]

இலங்கையர்களை பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக ஆட்கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இலங்கையர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்து தற்போது பிரித்தானியாவில் வசித்துவரும் 50 வயதான சுப்ரமணியம் விக்னராஜா என்பவர் மீதே ஆட்கடத்தல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. லண்டன் - லுடோன் மற்றும் இசெக்ஸ் பகுதிகளில் கடந்த புதனன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் மேலும் 11 பேருடன் சுப்ரமணியம் விக்னராஜா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.



அலட்சியப் போக்குடனே அரசு எங்களை நடத்துகின்றது - ரவூப் ஹக்கீம்!
[Friday, 2013-05-24 16:45:51]

கிழக்கு மாகாணத்தில் இன்று ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கையில் வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது என அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாலை சாய்ந்தமருதில் இடம்பெற்ற நூலகத்திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,



காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வட மாகாண சபைக்கு வழங்கப்பட வேண்டும் - ராஜித சேனாரத்ன!
[Friday, 2013-05-24 16:39:04]

வடக்கு மாகாண சபைக்கு 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை வழங்க வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த மாகாண சபைத் தேர்தல் 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் கீழ் நடைபெறும் எனவும் அந்த மாகாணத்திற்கு அனைத்து அதிகாரங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.



பெரியளவிலான விலையைக் கொடுத்தே இலங்கையில் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம் - சவேந்திர சில்வா
[Friday, 2013-05-24 16:27:18]

பெரியளவிலான விலையைக் கொடுத்தே இலங்கையில் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு நான்கு ஆண்டு வெற்றி விழா நியூயோர்க்கில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



13வது திருத்தத்தை மட்டுமன்றி முழு அரசியல் யாப்பையும் மாற்ற வேண்டும் - பொதுபல சேனா!
[Friday, 2013-05-24 13:48:12]

13ஆவது திருத்தத்தையும் மாகாணசபை முறைமையையும் மாற்றி இனங்களுக்கிடையில் நல்லுறவையும் நாட்டில் சமாதானத்தையும் கொண்டுவர முடியாது. இந்நாட்டின் அரசியல் அமைப்பில் வெளிநாடுகளில் அழுத்தங்கள் காணப்படுவதால் முழு அரசியல் யாப்பையும் மாற்றியமைக்க வேண்டும்மென பொதுபலசேனா அமைப்பின் இணைப்பாளர் டிலந்த விதானகே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,



புகலிடக் கோரிக்கையாளர்கள் இருவருக்கு சட்டவுரைஞர் உதவி!
[Friday, 2013-05-24 13:34:45]

இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த 2 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிறென்டன் ஓ கொனர் சட்டவுரைஞர் உதவி வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த 2 புகலிடக் கோரிக்கையாளர்களும் அகதிகளுக்கு உதவி செய்யும் சட்டவுரைஞர் டேவிட் மான் என்பவருக்கு கிறிஸ்மஸ்தீவிலிருந்து அகதி பாதுகாப்புக்காக விண்ணப்பிக்க உதவி கோரி கடந்த புதன்கிழமை மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தனர். அண்மையில் கிறிஸ்மஸ்தீவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 31 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களும் வழமை போல சட்ட ஆலோசனை இல்லாத நிலையில் விசாரிக்கப்பட்டதாக மனித உரிமைகள் சட்டவுரைஞர் டானியல் வெப் கூறியுள்ளார்.



புத்த பிக்கு ஒருவர் வெசாக் தினமான இன்று தீக்குளிப்பு!Top News
[Friday, 2013-05-24 13:29:15]

வெசாக் தினமான இன்று கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று காலை சுமார் 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மாடுகள் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பிக்கு தனக்கு தீ வைத்துக் கொண்டுள்ளார். உடம்பில் பெற்றோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட பிக்குவை அருகில் இருந்தவர்கள் பிடித்து தீயை அணைத்து கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.



ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கனேடிய தமிழர் கைது!!
[Friday, 2013-05-24 13:24:03]

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள் டொமினிக்கன் குடியரசில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய பிரஜையான கருணாநிதி நல்லதம்பி என்பவரே இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பலுக்கு தலைமை தாங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கனேடிய கடவுச் சீட்டுத் திணைக்களத்தில் கடவுச் சீட்டுக்களைத் திருடி அவற்றில் மாற்றங்களைச் செய்து வேறு நாடுகளுக்கு மக்களை சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நல்லதம்பி என்பவரே கடவுச் சீட்டுக்களை திருடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.



விபத்தில் மரணமடைந்த வாழைச்சேனை இந்துக்கல்லூரி ஆசிரியர் ஹேமராஜனின் பூதவுடல் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது. Top News
[Friday, 2013-05-24 12:27:40]

வாழைச்சேனையில் கடந்த புதன்கிழமையன்று இடம்பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்த வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் கணிதப் பாட ஆசிரியர் சி.ஹேமராஜனின் பூதவுடல் அடக்கம் செய்வதற்காக பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மாணவர்கள் கண்ணீர் மல்க ஆசிரியரின் பூதவுடல் நல்அடக்கல் செய்யப்பட்டது.


INNSYS-20120930
AJRwindows22.05.13
Mahesan supramaniyam 031109
Ramans2011
TamilsGuid-191012-2013
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
Canada Kanthasamy Kovil
NIRO-DANCE-100213
TDE_Computers2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com