Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 18, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
குடிவரவு மற்றும் ஏதிலி பாதுகாப்பு சட்ட வழக்கில் கனடிய தமிழர் பேரவை தலையீடு: Top News
[Friday, 2012-10-19 09:00:03]
News Service

குடிவரவு மற்றும் ஏதிலி பாதுகாப்பு சட்டம் (அய்.ஆர்.பி.ஏ) பிரிவு 34 பற்றிய மேன்முறையீட்டு வழக்கு இன்று கனடிய உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

  

மேற்படி வழக்கில் கனடிய தமிழர் பேரவை தலையீடு செய்தருந்தது:

இன்று அக்றேய்றா (Agraira) என்பவர் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அவசரகால முன்னேற்பாடு அமைச்சர் அவர்கட்கு எதிரான மேன்முறையீட்டை கனடிய உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது ஒரு முக்கிய வழக்கு. இதில் தலையீடு செய்யும் தகுதியை உச்ச நீதிமன்றம் கனடிய தமிழர் பேரவை (கதபே-CTC) க்கு வழங்கியுள்ளது.

இந்த வழக்கு குடிவரவு மற்றும் ஏதிலி பாதுகாப்பு சட்டம் (அய்ஆர்பிஏ-IRPA) பிரிவு 34 பிரிவு பற்றியது. இது கனடிய தமிழர்களுக்கு முக்கியமானது. காரணம் பல தமிழர்கள் ஏதிலிகளாக கனடாவால் ஏற்றுக்கொள்ளத் தகுதியற்றவர்கள் என்று காணப்பட்டுள்ளார்கள்.

இன்றுள்ள நிலையில் குடிவரவு மற்றம் ஏதிலி பாதுகாப்புச் சட்டம் (அய்ஆர்பிஏ) பிரிவு 34 மிகவும் விசாலமானது. 'உறுப்பினர்' என்ற சொல்லின் கட்டுப்பாடற்ற பொருள்விளக்கம் எந்த வன்முறையிலும் ஈடுபடாத ஒருவரை அவர் ஏதாவதொரு சம்பவத்தில் எடுத்துக்காட்டாக பன்முகப்பட்ட அமைப்பின் மனிதாபிமான நடவடிக்கையில் அதன் கிளை ஒன்று ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பின் அப்படிப்பட்டவர்களை அது உள்ளடக்குகிறது.

பிரிவு 34(2) அப்படிப்பட்டவர்களுக்கு அதிலிருந்து விதிவிலக்கு அளித்தாலும் அமைச்சு மிக அரிதாகவே அப்படிப்பட்டவர்களுக்கு - அவர்கள் கனடாவுக்கு அச்சுறுத்தலாக இல்லாவிட்டாலும் - விதி விலக்கு வழங்குகிறது. இதனால் ஒருவர் 'பயங்கரவாதி' என முத்திரை குத்தப்பட்டால் அதனை மாற்றுவதற்கு பயனுள்ள பொறிமுறை இல்லை.

எடுத்துக்காட்டாக மறைந்த யோசேப் பரராசசிங்கம் அவர்களுடைய ஏதிலிக் கோரிக்கை அவரது கணவர் வி.புலிகளோடு உறவு வைத்திருந்த ஒரு கட்சியின் உறுப்பினர் என்பதால் நிராகரிக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் கதபே இந்த மேன்முறையீட்டின் பெறுபேறு தொடர்பாக ஆழமான கரிசனை கொண்டுள்ளது. காரணம் அதன் பெறுபேறு கனடிய தமிழர்களுக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.

'எமது சமூகத்தோடு 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்ததன் பலனாக ஏதிலி பாதுகாப்புச் சட்டம் (அய்ஆர்பிஏ) பிரிவு 34 தமிழர்களுக்குப் பயன்படுத்தும் போது அதன் பொருள்விளக்கம் மற்றும் அதன் பயன்படுத்தல் தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்கலாம்' என கதபே இன் தேசியப் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் 'குகுடிவரவு மற்றும் ஏதிலி முறைமைக்கு முகம் கொடுக்கும் தமிழர்கள் பயங்கரவாதிகள் என முத்திரையிடப்படுகிறார்கள். அதன் போது அந்த முத்திரையில் இருந்து தப்புவதற்கு உண்மையாகத் தகுதியுடையவர்களுக்கு விருப்புரிமை அடிப்படையில் விதிவிலக்குக் கிடையாது.

கதபே இன் சார்பாக பிரபல சட்டத்தரணி பாபரா யக்மன் (Barbara Jackman) மற்றும் ஹடயற் நசாமி (Hadayt Nazami) வாதாடுகிறார்கள்.

குடிவரவு மற்றம் ஏதிலி பாதுகாப்புச் சட்டம் (அய்ஆர்பிஏ) பிரிவு 34 இன் கீழ் அமைச்சருக்கு இருக்கும் விருப்புரிமை மிக தாராளமான முறையில் பயன்படுத்த வேண்டும். அப்படிச் செய்யும் போது கனடாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லாதவர்கள் தங்களது ஏதிலித் தகைமையை முறைப்படுத்தி அமைதியாக வாழ அனுமதிக்கப் பட வேண்டும் என கோரிக்கைவிடப்பட்டுள்ளது.

தொடர்பு: டேவிட் பூபாலபிள்ளை - கனடிய தமிழர் பேரவை 416 -240 0078.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

கனடிய கொன்சவ்வேட்டிவ் மத்திய அரசில் தமிழ் கனடிய சமூகத்திற்கு ஆதரவாக பல நண்பர்களும் ஆதரவாளர்களும் இருக்கிறார்கள், அதில் நானும் ஒருவன் - பிரட் பட் எம்.பி.
[Saturday, 2013-05-18 11:24:16]

கனடாவில் வாழும் தமிழ் கனடிய சமூகம் இலங்கையில் இடம்பெற்ற பல தசாப்தகால உள்நாட்டுப் போர் நிறைவின் நான்காவது ஆண்டு நினைவை அனுஸ்டிக்கும் போது நாமும் அச்சமூகத்துடன் இணைந்து கொள்கிறோம். பல தசாப்த காலமாக போரில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த அப்பாவிப் பொதுமக்களை இவ்வாரத்தில் நினைவுகூர்வதுடன் இலங்கையில் வாழும் மக்களுக்கும் ஒரு சுபீட்சமான எதிர்காலம் அமையுமென எதிர்பார்க்கும் காலமாக அமைகிறது.



டென்மார்க்கில் பாராளமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மக்கள் மனு கையளித்தனர்! Top News
[Saturday, 2013-05-18 08:14:10]

17.05.2013 அன்று டென்மார்க் வெளிவிவகார அமைச்சகத்தின் அலுவகத்தின் முன்பாக பேரணி ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து பாராளமன்றம், நோக்கி பெரும் திரளான மக்கள் உணர்வு பூர்வமாக முள்ளிவாய்காலில் இடம்பெற்ற இனவழிப்பில் இறந்த தமிழீழ மக்களின் படங்கள் மற்றும் தமிழீழ தேசிய கொடியை ஏந்தியவண்ணம் தமிழீழம் ஒன்றே இறுதி முடிவு என்ற உணர்வுடன் ஊர்வலமாக பாராளமன்றம், நோக்கி பேரணியாக வந்தடைந்தார்கள்.



மௌரிசியஸ் தமிழ் மக்கள், தமிழீழ மக்களுடன் கைகோர்த்து போராட்டத்தி​ல் ஈடுபட்டனர்!Top News
[Saturday, 2013-05-18 08:00:22]

நேற்று மே 17 ஆம் திகதி மௌரிசியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸில் மௌரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு, அங்கு இருக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் எங்கு உள்ள அனைத்து ஆலயங்களிலும் செய்தபின் அந்நாட்டு பாராளுமன்றம், மற்றும் இந்திய, அமெரிக்க துதராலயங்களை நோக்கி பல்லாயிரம் மக்கள் உணர்வு பூர்வமாக தமிழீழ தேசிய கோடியை ஏந்தியவண்ணம் தமிழ் ஈழம் தான் இறுதி முடிவு என்று உணர்த்து முகமாக எமது தேசிய நிறமான சிவப்பு மஞ்சள் கோடியில் தமிழ் ஈழம் என்று பொறித்து எல்லோரும் ஏந்தி சென்றனர். அத்துடன் சிறி லங்கா சர்வதேச அமைப்புகளில் இருந்து புறக்கணிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.



லண்டனில் இன்றைய பேரணிக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் பூர்த்தி:
[Saturday, 2013-05-18 07:59:08]

லண்டனில் இன்று சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக பிரித்தானிய தமிழர் பேரவையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய தினம் பி.ப 1 மணிக்கு North Carriage Park, Hyde Park (Closest station: Marble Arch) ஆரம்பிக்கும் பேரணி பி.ப 3 மணியளவில் Waterloo Place , (Closest station: Piccadilly Circus) நிறைவுறும். இதனைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் உரையாற்றவிருப்பதுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.



மே 18 - தமிழர் இனவழிப்பு நினைவு நாள் 2013 - தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிக்கை
[Saturday, 2013-05-18 07:49:51]

இன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள். ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சி கொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது.



தயா மாஸ்டரின் கோரிக்கையை நிராகரித்தது எதிர்க்கட்சி!
[Saturday, 2013-05-18 07:48:10]

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரின் கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட தயா மாஸ்டர் கோரியதாகவும், அதனை நிராகரித்ததாகவும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியையும், புலிகளையும் இணைத்து பல்வேறு சேறு பூசல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.



கொழும்பில் முன்னாள் போராளிகள் இருவர் கைது!
[Saturday, 2013-05-18 07:43:41]

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து குறித்து சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய குற்றச்சாட்டின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவர், மற்றையவர் சில காலம் சிறைத்தண்டனை அனுபவித்தவர். புறக்கோட்டை பஸ் குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.



வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது - அரசு அறிவிப்பு!
[Saturday, 2013-05-18 07:41:56]

வட பகுதியிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிநாட்டுச் சக்திகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்கு அமைய இராணுவ முகாம்களை அகற்றிக்கொள்ள முடியாது. வன்னிப் போர் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் அரசாங்கம் இதனை அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகளின் சில தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் அடிக்கடி வடக்கிற்கு விஜயம் செய்து இராணுவ முகாம்கள் பற்றி மக்களுடனும் அரசியல் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.



யாழ்.பல்கலைக்கழகத்தை சூழ இரவோடு இரவாக இராணுவம் குவிப்பு!
[Saturday, 2013-05-18 07:36:51]

யாழ்.பல்கலைக்கழக சூழலில் மீண்டும் நள்ளிரவு முதல் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நாலாம் ஆண்டைய நினைவு நிகழ்வுகள் கெடுபிடிகள் மத்தியில் இன்று பல்கலைக்கழக சமூகத்தினால் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் விடுதிகளினிலும் மாணவர்கள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நாலாம் ஆண்டைய நினைவு நிகழ்வுகளை முன்னெடுக்கலாமென்ற அச்சத்திலேயே மாணவர்கள் விடுதிகளுட்பட்ட பல்கலைக்கழக சூழல் சுற்றிவளைக்கப்பட்டிருக்கலாமென்ற அச்சம் எழுந்துள்ளது.



தலைவர் பிரபாகரன் தப்பிச்சென்றதாக வெளியான தகவலில் உண்மையில்லை - சிங்கள பத்திரிகை தெரிவிப்பு!
[Saturday, 2013-05-18 07:32:52]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பிச் சென்றதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பிரபாகரனின் கைவிரல் அடையாள சாட்சியங்களின் மூலம் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அதிகாரிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கைவிரல் அடையாள மாதிரிகளும், நந்திக்கடல் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட பிரபாகரனின் சடலத்தின் கைவிரல் அடையாள மாதிரிகளும் ஒத்துப் போவதாக சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.



விடுதலைப்புலிகளின் மாவட்ட தலைவர் எனக்கூறி கப்பம் பெற்றவர் கைது செய்யப்பட்டார்!
[Saturday, 2013-05-18 07:30:45]

விடுதலைப்புலிகளின் யாழ். மாவட்ட தலைவர் எனக்கூறி சுமார் 12 இலட்சம் ரூபாவை கப்பமாக பெற்ற பிரதான நபரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு. எல். விக்கிரமராச்சி இன்று தெரிவித்தார். கிளிநொச்சி பரந்தன் சந்தி பகுதியில் கடந்த 3 ஆம் திகதி யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இருவர் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட இருவரும் திருநகர் மேற்கு கிளிநொச்சி மற்றும் குருக்கள் வீதி கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இருவரும் யாழ். பொலிஸ் நிலையத்தில் 3 மாத கால தடுத்து காவலில் வைக்கப்பட்டு, பொலிஸ் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.



13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் - இலங்கையிடம் இந்தியா கோரிக்கை!
[Friday, 2013-05-17 22:13:12]

இலங்கையில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வடக்கு மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னதாக நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாக தெரிவித்துள்ள இந்திய 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தே இலங்கை அரசாங்கத்திடம் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியபோதே மேற்கண்டவாறு வலியுத்தியுள்ளார்.



யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!Top News
[Friday, 2013-05-17 22:09:10]

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வு காலை 11.30 மணி தொடக்கம் 12.30 மணிவரை இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள சிவன் ஆலயத்தின் முன்பாக கையில் தீபங்கள் ஏந்தி உணர்வு பூர்வமாகவும் இடம்பெற்றதுடன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



நீர்கொழும்பில் விபச்சாரிகளுக்கு எதிராக சுவரொட்டிகள்!Top News
[Friday, 2013-05-17 21:51:56]

நீர்கொழும்பு நகரின் பல இடங்களில் விபசாரிகளுக்கு எதிராக எச்சரிக்கை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வீதியோர விபசாரிகளுக்கு 'அசிட் வீச்சு' என்ற வாசகமே இந்த எச்சரிக்கை சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக வைத்தியசாலை அருகில் கடந்த வாரம் இதே போன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டடிருந்தன. இந்நிலையில் வியாழக்கழமை இரவு முதல் மீண்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. விபசாரத்தை ஒழிப்பதற்கு உடனடியாக ஒன்று சேருவோம், விபசாரிகளுக்கு இனிமேல் தண்டனை 'அசிட்' ஆகும் போன்ற வாசகங்கள் இந்த சுவரொட்டிகளில் சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகளுக்கு எவரும் உரிமை கோரவில்லை.



வடமாகாணம் மட்டும்தான் தமிழர் தாயகமா? பா.அரியநேந்திரன்
[Friday, 2013-05-17 21:13:35]

தமிழர்களின் தாயகம் வடக்கு மாகாணம் மட்டும் தானா? என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். வடமாகாணசபைத் தேர்தல் சம்பந்தமாக சிவில் சமூகம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகளின் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.



வலியும் வீரமும் சுமந்த வாழ்வு - இதயச்சந்திரன்
[Friday, 2013-05-17 17:06:26]

திருமலை மாவிலாற்றிலிருந்து
வன்னியின் கிழக்கெல்லை வரை
வெந்து தணிந்தது காடுகள்.



நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, ஊழல் மோசடிக்கு ஜனாதிபதியே பொறுப்பு - ரவி கருணாநாயக்க எம்.பி!
[Friday, 2013-05-17 17:05:36]

நாட்டில் காணப்படுகின்ற ஊழல் மோசடிகளுக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ராஜகிரியவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



மே 18 இல் விளக்கேற்றினால் அடுத்த முள்ளிவாய்க்கால் பதில் சொல்லும் - இராணுவப் புலனாய்வாளர்கள் எச்சரிக்கை!
[Friday, 2013-05-17 16:56:48]

"மே18 இல் முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களை நினைவுகூர்ந்து ஆலயங்களில் அல்லது வீடுகளில் அல்லது பொது இடங்களில் விளக்கேற்றினால் அடுத்த முள்ளிவாய்க்கால் உங்களுக்குப் பதில் சொல்லும்." இவ்வாறு இராணுவப் புலனாய்வாளர்கள் எனத் தம்மை அடையாளம் காட்டிக்கொண்டு ஒரு குழுவினர் கிளிநொச்சி மக்களிடம் கடும் தொனியில் எச்சரித்துள்ளனர். கிளிநொச்சி நகரில் வசிக்கும் மக்களிடம் நேற்று முன்தினம் மாலை இந்த மிரட்டலை அவர்கள் விடுத்துள்ளனர். எனத் தெரியவந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு வன்னியில் இறுதி யுத்தம்நிறைவுக்கு வந்த மே18ஆம் திகதியை இலங்கை அரசு ஒவ்வொரு வருடமும் யுத்த வெற்றிவிழாவாகக் கொண்டாடிவருகின்றது.நாளை 18 ஆம் திகதியும் காலிமுகத்திடலில் பெரும் ஏற்பாட்டில் யுத்த வெற்றிவிழாவைக் கொண்டாட அரசு ஒழுங்குகளைச் செய்து வருகின்றது.



அரசு வட மாகாணசபைத் தேர்தலை நடாத்துமா? கூட்டமைப்பினரிடம் வினவினார் அமெரிக்க தூதுவர்!
[Friday, 2013-05-17 16:49:49]

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிசெல் சிசெனிடம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எடுத்துக்கூறியுள்ளது. அமெரிக்க தூதுவர் மிசெல் சிசென் கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். பம்பலப்பிட்டியிலுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது வடமாகாண சபைத்தேர்தல் நடத்தப்படுமா? என்பது தொடர்பிலும் கூட்டமைப்பினரின் கருத்தினை அமெரிக்கத் தூதுவர் கேட்டறிந்துள்ளார்.



குழந்தைகள் மூவரை கிணற்றில் வீசி தானும் தற்கொலைக்கு முயற்சித்த தாய் - வவுனியாவில் சம்பவம்!Top News
[Friday, 2013-05-17 16:45:37]

இலங்கையின் வடக்கே வவுனியா தாண்டிக்குளத்தில் இளம் தாயொருவர் தனது மூன்று பெண் பிள்ளைகளுடன் கிணற்றில் பாய்ந்ததில், மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். தாய் மட்டும் உயிர் தப்பியுள்ளார். உயிர் தப்பிய தாயிடம் பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்த மூத்த பிள்ளைக்கு 3 வயதாகிறது. மற்றைய இரண்டு பிள்ளைகளும் ஒன்றரை வயதான இரட்டைக் குழந்தைகள் என்று பொலிசார் கூறுகின்றனர். கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்த இந்தத் தாய் வவுனியா தாண்டிக்குளத்தில் கணவருடன் வசித்து வந்துள்ளார். கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்து குடும்பத்தைக் கவனிக்காமல் விட்டதனால், குடும்பம் வறுமையில் வாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


INNSYS-20120930
NIRO-DANCE-100213
TamilsGuid-191012-2013
Ramans2011
Suresh-remax-2013-01-01
TDE_Computers2011
Mahesan supramaniyam 031109
Canada Kanthasamy Kovil
RoyaShades-l2011(04-12-11)
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com