Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
மகிந்த கூறியதை சுதந்திரம் கிடைத்த போது இருந்த அரசு கூறியிருந்தால், இனப்பிரச்சினையே வந்திருக்காது: டளஸ் அழகப்பெருமவின் கண்டுபிடிப்பு.
[Tuesday, 2012-10-23 11:14:38]
News Service

நாட்டில் சிறுபான்மையினர் என்ற ஒரு இனம் இல்லை என்பதை நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த போதே கூறி இருந்தால், இலங்கையில் இந்த அளவுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.

  

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கையில் சிறுபான்மையினர் என்ற ஒரு இனம் இல்லை என்றும், அனைவரும் இலங்கையர்களே என்றும் யுத்தம் நிறைவடைந்த பின்னரே ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

ஆனால் இலங்கைக்கு சுதந்திம் கிடைக்கப்பெற்ற காலத்தில் இந்த அறிவிப்பை அந்த காலத்தில் இருந்த அரசாங்கம் வெளியிட்டிருந்தால், இலங்கையில் பாரிய அளவுக்கு இனப்பிரச்சினை தோன்றி இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது - மன்மோகன் சிங் உறுதி மொழி
[Wednesday, 2013-06-19 09:42:31]

இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், செல்வன் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன், பொன். செல்வராசா ஆகியோர் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரை செவ்வாய்க்கிழமை மாலை தனித்தனியாகச் சந்தித்து சுமார் அரை மணி நேரம் அவர்கள் பேச்சு நடத்தினர். இதன் பின்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சம்பந்தன், இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே 13-ஆவது சட்டத் திருத்தத்தில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் கலாசாரத்தையும், தமிழ் மொழியையும் அழிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. அதை தடுத்து நிறுத்த இந்தியா விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இலங்கையில் தமிழ் இனம் அழிந்துவிடும்.



சிங்கள, முஸ்லிம் அதிகாரிகள் வடமாகாண அரச காரியாலயங்களில் பதவிக்கு அமர்த்தப்பட வேண்டும் - கோத்தபாய
[Wednesday, 2013-06-19 09:18:15]

வடமாகாணத்தில் தனி தமிழர்கள் மாத்திரமே வாழ முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடமாகாணம் அனைத்து இனங்களையும் வரவேற்கும் மாகாணமாக இருக்க வேண்டும். சிங்களவர்கள் அங்கு தங்களது காணிகளை கொள்வனவு செய்யக்கூடிய உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் சிங்களர்கள் சொந்த காணிகளை கொள்வனவு செய்து குடியேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதேபோன்று சிங்கள மற்றும் முஸ்லிம் அரசாங்க அதிகாரிகளும் வடமாகாண அரசாங்க காரியாலயங்களில் பதவிக்கு அமர்த்தப்பட வேண்டும் என்றும் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.



ஒரே நாளில் 32 லட்சம் ரூபாய்க்கு தொலைபேசியை பயன்படுத்திய நபர் மீது விசாரணை
[Wednesday, 2013-06-19 08:47:34]

ஒரே நாளில் 32 லட்சம் ரூபாவை கையடக்க தொலைபேசி கட்டணமாக பதிவு செய்த ஒருவர் குறித்து கொழும்பு மோசடிகள் புலனாய்வுத் தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இத்தாலியில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கு கையடக்க தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனம் ஒன்று ரோமிங் வசதியுடன் கூடிய சிம் கார்ட் ஒன்றை வழங்கியுள்ளது. எனினும் குறித்த வாடிக்கையாளர் அந்த சிம்மை பயன்படுத்தவில்லை. அதனை அவரது உறவினரான மொஹமட் முஸாரப் என்ற அவரது உறவினரிடம் வழங்கியுள்ளார். அவர் ஒரே நாளில் 32 லட்சம் ரூபாவுக்கு ரோமிங்கை பயன்படுத்தியுள்ளார். இது குறித்து சேவை வழங்கும் நிறுவனம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.



வவுனியா நெளுக்குளத்தில் தமிழர்களின் வீடுகள் தீக்கிரை
[Wednesday, 2013-06-19 08:39:51]

வவுனியா- நெளுக்குளம், பாரதிபுரம் பகுதியில் தமிழர்களின் சில வீடுகளை முஸ்லிம்கள் தீயிட்டு எரித்துள்ளதோடு, தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். பாரதிபுரம் பகுதியிலுள்ள விக்ஸ் மரக்காடு என்ற தமிழர்களின் பகுதியில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் அப்பகுதியில் குறைவான மக்களே வசித்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் அப்பகுதியில் சில தொழில் முயற்சிகள் ஏற்படுத்தப்பட்டு இடம்பெயர்ந்த தமிழர்கள் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன்போது அப்பகுதியில் முஸ்லிம்கள் காணிபிடிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மக்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தனர். இதன்பின்னர் அந்த பகுதியில் எந்த முஸ்லிம்களும் காணி பிடிக்க கூடாது என்றும் அது தமிழர்கள் வசிக்கும் பகுதி என்றும் பொலிஸார் முஸ்லிம்களை எச்சரித்துள்ளனர். இந்நிலையில் தமிழர்களின் வீடுகள் சில தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேலைக்கு சென்ற சமயம் இந்த நாசவேலையில் முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



நாவிதன்வெளி பிரதேச கணக்காளருக்கு புலிகளிடமிருந்து மிரட்டல் கடிதம் - பொலிஸார் விசாரணை
[Wednesday, 2013-06-19 08:05:41]

நாட்டிலிருந்து கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முற்றாக நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கணக்காளரிற்கு 2013.05.25ஆம் திகதியிடப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத்தலைப்பில் அம்பாறை மாவட்ட புலனாய்வு பொறுப்பாளர் ஈழவன் எனக்குறிப்பிடப்பட்டு மிரட்டல் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்கடிதம் கணக்காளரிற்கு முகவரியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தாங்களும் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரான அன்வர்டீன் என்பவரும் சேர்ந்து நாவிதன்வெளி பிரதேச செயலகத்தை முஸ்லிம் பிரதேச செயலகமாக மாற்றுவதற்கும், கூடுதலான முஸ்லிம் ஊழியர்களையும், தலைமை உத்தியோகத்தர்களையும் உள்ளீர்ப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றீர்கள்.



வாஸ் குணவர்த்தன பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கம்!
[Tuesday, 2013-06-18 21:35:07]

பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன அவருடைய பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலையுடன் தொடர்புபட்டதாக கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்ட வாஸ் குணவர்தன சுகயீனம் காரணமாக பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 15ம் திகதி இரவு பிரதி பொலிஸ் மா அதிபர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



கியூபெக் அறிவுச்சோலை கல்வி நிலையத்தின் மூன்றாவது கலைச்சோலை நிகழ்வுகள்!Top News Top News
[Tuesday, 2013-06-18 21:21:12]

கியூபெக் அறிவுச்சோலை கல்வி நிலையத்தின் மூன்றாவது கலைச்சோலை கடந்த 08-06-2013 அன்று சனிக்கிழமை மாலை 7.00 மணியளவில் 100 Sauve .St.Marie Anne High School கலையரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழர் கலை கலாச்சாரவிழுமியங்களை முழுமையாக வெளிக்கொண்டுவரும் வண்ணம் இசை இயல் நாடகமென முத்தமிழையும் மிகவும் அழகாக கலைகள் மூலம் எமது கல்வி நிலைய மாணவர்களைமட்டும் கொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்நிகழ்வானது முற்று முழுதாக சிறார்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் நிகழ்வாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.



தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் அவர்களுக்கு அகவணக்கம்: - தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - விக்ரோறியா - அவுஸ்திரேலியா
[Tuesday, 2013-06-18 21:12:15]

தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்திற்காக தன்னையையும் இணைத்துநின்ற தமிழ்த்திரைப்பட இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் அவர்களின் மரணச்செய்தி அனைவரையும் கலங்கவைக்கின்றது. அவலங்களையே சுமந்துநிற்கின்ற ஒரு தேசத்தின் விடிவிற்காக குரல் எழுப்புகின்ற அனைவருமே அம்மக்களின் ஆழ்மனதில் எப்போதும் உயிர்ப்புடனே இருப்பார்கள்.



இலங்கை இராணுவத்தை வெளியேற்றக் கோரி வெலிங்டனில் இராணவ முகாம் முற்றுகை - 500 பேர் கைது!Top News
[Tuesday, 2013-06-18 20:52:27]

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டனில் ராணுவ முகாம் மற்றும் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு கடந்த 27-ந்தேதி முதல் இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் தசநாயகே, மேஜர் ஹரிச்சந்திரா ஆகிய 2 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதமும் எழுதினார். வெலிங்டன் ராணுவ முகாமில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகளை உடனே வெளியேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகியவையும் இலங்கை வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர்.



இந்தியா சென்றுள்ள கூட்டமைப்பினர் சல்மான் குர்ஷித்துடன் பேச்சுவார்த்தை! Top News
[Tuesday, 2013-06-18 20:12:14]

இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணசபைக்கு செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் 13வது அரசியல் சட்டத்திருத்தத்தை மாற்றியமைக்க புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றவும் முயற்சி செய்து வருகிறது. ஒருவேளை அரசு கொண்டு வர உள்ள புதிய மசோதாவிற்கு ஆதரவு இல்லை என்றாலும், தேர்தலை நடத்துவதில் உறுதியாக உள்ளது. இதற்கு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க மறுக்கும் இலங்கை அரசின் செயற்பாடுகளை தொடர்ந்து கண்டித்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் இந்தியா சென்றுள்னர். சம்பந்தன் தலைமையில் அவர்கள் இன்று பிற்பகல் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விளக்கினர். 13வது அரசியல் சட்டத்திருத்தத்தை பலவீனமாக்க இலங்கை அரசு முயற்சி செய்கிறது என்றும், இதனை இந்தியா அனுமதிக்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.



நாட்டில் நீதியில்லை என்பதனை ஜனாதிபதி மகிந்தவே ஏற்றுக்கொண்டுள்ளார் - சரத்
[Tuesday, 2013-06-18 20:07:35]

இலங்கையில் நீதியில்லை என்பதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஒப்புக்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அண்மையில் ஆளும் கட்சியின் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் பாடசாலை ஆசிரியர் ஒருவரை முழங்காலிடச் செய்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு ஜனாதிபதியே தொலைபேசியில் அழைத்து, நீதி நிலைநாட்டப்படும் என தெரிவித்துள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் நாட்டில் நீதியில்லை என்பது புலனாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மகளுக்கு ஆலோசனை வழங்கிய ஆசிரியையை உண்மையில் பிரதேச அரசியல்வாதி பாராட்டியிருக்க வேண்டுமே தவிர, தண்டித்திருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.



இராணுவ முகாமில் வைத்து கைதுசெய்யப்பட்ட மருத்துவர் சிவசங்கர் விடுதலை!
[Tuesday, 2013-06-18 19:53:02]

இலங்கையின் வடக்கே, கிளிநொச்சி மாவட்டத்தில் கொக்காவில் இராணுவ முகாமுக்குச் சென்றிருந்தவேளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்ட டாக்டர் இரத்தினசிங்கம் சிவசங்கர் திங்களன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் மாவட்ட சுகாதார வைத்திய அதிகரியாகிய இவர், சுமார் ஐந்து மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் தன்னைக் கைது செய்திருந்ததாக அவர் தெரிவித்தார்.



இந்தியாவுடனான கடல் எல்லை மோதலை தீர்க்க சர்வதேசத்தின் உதவியை நாடும் இலங்கை!
[Tuesday, 2013-06-18 19:39:35]

இந்தியா கடல் எல்லையை விரிவுபடுத்தும் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் எல்லை பிரச்சினை ஒன்று எழும் பட்சத்தில் அதற்கு முகங்கொடுப்பதற்கு இந்தியா தயாராகவே உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவுக்கு சொந்தமான கடல் எல்லை விரிவுபடுத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் தமக்கு சொந்தமான கடல் எல்லைகளை விரிவுபடுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தது. இதன்படி இந்தியா இரண்டாவது முறையாகவும் தமது கடல் எல்லையை விரிவுபடுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. இவ்வாறு இந்திய கடல் எல்லையை விரிவுபடுத்தும் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் எல்லை பிரச்சினை ஒன்று எழும் பட்சத்தில் அதற்கு முகங்கொடுப்பதற்கு இந்தியா தயாராகவே உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



'எமது நிலம் எமக்கு வேண்டும்' - வெலிஓயா பிரதேச செயலரிடம் மகஜர் கையளிக்கவுள்ள முல்லை. மக்கள்!Top News
[Tuesday, 2013-06-18 19:34:51]

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச எல்லைக் கிராமங்களில் வாழும் தமிழ் மக்கள், தமது பூர்வீக நிலங்களை தருமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு தலைமையில் வெலிஓயா பிரதேச செயலருக்கு மகஜர் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் வாழும் தமிழ் மக்கள் சார்பில் கையளிக்கப்படவுள்ள மேற்படி மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



இந்தியாவிலிருந்து ஒரு கோடி பெறுமதியான ஹெரோயினை கடத்த முயன்ற நபர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது!
[Tuesday, 2013-06-18 19:27:34]

சென்னையிலிருந்து இலங்கைக்கு ஹெரோயின் எடுத்து வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யூ.எல். 122 என்ற விமானத்தில் பயணித்த ஒருவரே இலங்கை சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பயணப் பையை சோதனையிட்ட போது ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இவரிடமிருந்து ஒரு கிலோ 500 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி 20 லட்சம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.



ஜனாதிபதிக்கு சகலவிதமான அதிகாரங்களும் உள்ள போது ஏன் மாகாண சபைகளின் இணைப்பில் அச்சமடைய வேண்டும்? - திஸ்ஸ
[Tuesday, 2013-06-18 19:19:52]

ஜனாதிபதிக்கு சகலவிதமான அதிகாரங்களும் உள்ள போது ஏன் மாகாண சபைகளின் இணைப்பில் இந்த அரசாங்கம் அச்சமடைய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பினார். ராஜகிரியவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.



13வது திருத்தச் சட்டம் தொடர்பிலான சிக்கல்களை இந்தியா கவனத்தில் கொள்ளும் - மன்மோகன் சிங்!
[Tuesday, 2013-06-18 16:45:31]

இலங்கையில் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை இரத்துச் செய்வதற்கு இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் முயற்சிகளின் தாற்பரியங்களை ஆராய்ந்த பின் தனது கருத்தை அறிவிக்கவுள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளர். 'இலங்கையில் உள்ள பல அரசியல் கட்சிகள் தீர்மானிக்கவுள்ள விடயமாக இது இருப்பினும், நாம் அதன் தாற்பரியங்களை நிச்சயமாக கவனத்தில் எடுப்போம். அதன் பின் இலங்கையின் அதிகாரம் வாய்ந்தவர்களுக்கு இந்த விடயம் தொடர்பில் எமது கருத்தை தெரியப்படுத்துவோம்' என தி.மு.க. தலைவர் மு.கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் இந்திய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.



13 ஆவது திருத்த விவகாரம் - கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்!
[Tuesday, 2013-06-18 16:41:50]

கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் கறுப்பு பட்டியணிந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 13 ஆவது திருத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டாம் என்று கோரியே அவர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு மாகாண சபையமர்வு இன்று நடைபெற்றது. சபையமர்வின் போது எதிர்க்கட்சிகளை சேர்ந்த சகல உறுப்பினர்களும் பிரசன்னமாய் இருந்தபோதிலும் ஆளும் கட்சியில் ஒரு உறுப்பினர் மட்டுமே சமூகமளித்திருந்தார். ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினரான ஜயந்த விஜயசேகர மட்டுமே வருகை தந்திருந்தார். இந்த பகிஷ்கரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், கிழக்கு மாகாணசபை அதிகாரங்களில் ஆளுநர் மேலாதிக்கம் செலுத்தி வருவதைக் கண்டித்து அரச மேல் மட்டத்தில் முறையிட்டும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.



வடக்கு மாகாணத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களும் வாக்களிப்பதற்கான விசேட சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது!
[Tuesday, 2013-06-18 16:41:38]

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த விசேட சட்டமூலம் இன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சில திருத்தங்களுடனேயே குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் முன்னர் இருந்த இடத்திலேயே வாக்காளர்களாக பதிவு செய்யப்படுவதோடு, இரண்டு இடங்களில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தல் தொடர்பில் புதிய சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1983ஆம் ஆண்டு மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் சட்டத்தைக் கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.



கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தார் அசாத் சாலி!
[Tuesday, 2013-06-18 16:37:10]

தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளரும் முன்னாள் கொழும்பு மாநகர பிரதிமேயருமான அசாத் சாலி இம்மாத இறுதியில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டபின் முதன்முறையாக கிழக்கு மாகாணத்திற்கு இவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். இதற்கிணங்க 28ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கு 29ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் 30ஆம் திகதி திருமலை மாவட்டத்திற்கும் அவர் விஜயம் செய்யவுள்ளார். இதன்போது ஓட்டமாவடியில் சாய்ந்தமருதிலும் கிண்ணியாவிலும் பொதுக்கூட்டங்கள் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.


TDE_Computers2011
NIRO-DANCE-100213
INNSYS-20120930
Mahesan supramaniyam 031109
AJRwindows22.05.13
Ramans2011
Suresh-remax-2013-01-01
RoyaShades-l2011(04-12-11)
TamilsGuid-191012-2013
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com