Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 27, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வீசா அவசியமற்ற முறைமை?
[Monday, 2013-05-27 07:55:08]

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வீசா அவசியமற்ற முறைமை ஒன்றை அமுலாக்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன. இலங்கையும் இந்தியாவும் நீண்ட நாள் நட்பு நாடுகளாக உள்ள நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையில் பயணிக்கும் போது வீசா அவசியப்பாடு அற்ற நிலை ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு நாட்டின் நட்புறவினையும் மேலும் வலுப்படுத்திக் கொள்ள முடிவதுடன், சுற்றுலாத்துறையையும் அபிவிருத்தி செய்துக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.



2 கிலோமீற்றர் வீதிக்காக எமது கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது - சம்பந்தன்
[Monday, 2013-05-27 07:28:04]

வட மாகாணத்துக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது குறித்து நான் அவரோடு பேச தயாரில்லை. காரணம், அவர் அரசாங்கம் இல்லை என்று இலங்கை தமிழரசுக் கட்சின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பொதுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை, நியூ சில்வர் ஸ்டார் விடுதியில் நடைபெற்றது. தேர்தல் பணிகளுக்காக முகவர்களை நியமித்தல், கட்சியின் கிளைகளைப் புனரமைத்தல், தற்கால அரசியல் நிலை என்பவை தொடர்பாக விளக்குவதற்கு இக்கூட்டம் கூட்டப்பட்டது. இதன்போது உரையாற்றிய இரா. சம்பந்தன், கூறுகையில், "தமிழ் மக்களது போராட்டம் ஐக்கிய நாடுகள் சபை வரை சென்றுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் விவாதங்களை நடத்தியது. இவ்வாறானதொரு நிலையில், 2 கிலோமீற்றர் வீதிக்காக எமது கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது" என்றார்.



அனைத்துலக தமிழ்மொழித் தேர்வு எதிர்வரும் யூன் 01 ம் திகதி சனிக்கிழமை நடைபெறும். - அறிவகம் கனடா Top News
[Sunday, 2013-05-26 22:06:15]

2012 / 2013 ஆம் ஆண்டிற்கான அனைத்துலக தமிழ்மொழித் தேர்வு எதிர்வரும் யூன் 01 ம் திகதி சனிக்கிழமை நடைபெறும். தர நிலைகளுக்கு ஏற்ப நடைபெறும் இத்தேர்வில் உலகளாவிய ரீதியில் நாற்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதினாங்கு நாடுகளில் இருந்து கலந்து கொள்கின்றனர்.



கோதாபய ராஜபக்ச அரசாங்க அதிகாரியாக இருந்துகொண்டு அரசியல் கருத்துகள் கூறக்கூடாது - மனோ கணேசன்
[Sunday, 2013-05-26 21:55:19]

கோத்தபாய ராஜபக்ச இன்று ஒரு அமைச்சின் செயலாளர். வேறு எந்த ஒரு அமைச்சின் செயலாளரும் பகிரங்கமாக அரசியல் பேசுவதில்லை. ஜனாதிபதியின் சகோதரர் என்ற ஒரே அந்தஸ்த்தின் காரணமாக கோத்தபாய தன்னை ஒரு உப ஜனாதிபதியாக உருவகித்து கொண்டுள்ளார். இதன் காரணமாகவே அவர் இன்று வரம்பு மீறி பகிரங்கமாக அரசியல் பேசுகிறார். இவருக்கு நான் கடந்த மாதமே ஒரு பிரபல சிங்கள ஊடகம் மூலமாக ஒரு ஆலோசனை சொன்னேன். அதை மீண்டும் இப்போது சொல்கிறேன். கோத்தபாய ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்ற உறுப்பினாராக பதவி ஏற்கட்டும். அதன் பிறகு பாதுகாப்பு அமைச்சர் ஆகட்டும்.



ஒருபோதும் 13வது திருத்தச் சட்டத்தை நீக்க ஒத்துழைப்பு வழங்கப்பட மாட்டாது - ஹக்கீம்!
[Sunday, 2013-05-26 21:04:19]

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் எந்தவொரு சரத்தையும் நீக்குவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்த நாட்டின் அரசியல் அமைப்பில் நிரந்தரமாக இருக்கின்ற ஒரு திருத்தமாகத்தான் 13வது சட்டத் திருத்தத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நோக்குகின்றது. அந்த சட்டத் திருத்தத்தின் எந்த அம்சத்தையும் அகற்றுவதற்கு அது பொலிஸ் அதிகாரங்களாக இருந்தாலும் சரி, காணி அதிகாரங்களாக இருந்தாலும் சரி அகற்றுவதற்கு எந்த விதத்திலும் உடந்தையாக இருக்க மாட்டோம்.



நாட்டில் காதி நீதிமன்றம் எதற்கு? பொதுபல சேனா கேள்வி!
[Sunday, 2013-05-26 20:55:12]

நாட்டில் நீதிமன்றம் ஒன்று இருக்கையில் காதி நீதிமன்றம் ஒன்று தேவையாவென பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வியெழுப்பியதுடன் இந்த நீதிமன்றத்தில் தான் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் சட்ட அங்கீகாரம் கிடைக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். சம்புத்தத்வ ஜயந்தி மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்த தீயுடன் சங்கமமானது டி.எம்.சௌந்தரராஜனின் பூதவுடல்!Top News
[Sunday, 2013-05-26 20:03:50]

மறைந்த பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம்.செளந்தரராஜன் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடந்தது. ஆயிரக்கணக்கானோர் அதில் கலந்து கொண்டனர். காவரம் படைத்த பல ஆயிரம் பாடல்களைப் பாடிய டிஎம்எஸ் கண் மூடி விட்டார். அவரது மறைவால் உலகத் தமிழர்கள் பெரும் சோகமடைந்துள்ளனர். எங்கு பார்த்தாலும் டிஎம்எஸ் பேச்சாகவே உள்ளது. காய்கறிக் கடை, டீக் கடை, கறிக் கடை என்று எந்த இடமாக இருந்தாலும் மக்கள் டிஎம்எஸ்ஸின் குரலையும், அவரது பாடல்களையும் பற்றியே பேசியபடி உள்ளனர். சென்னையில் உள்ள டிஎம்எஸ்ஸின் வீட்டில் திரைப்படத் துறையினர், அரசியல் துறையினர், பல்துறைப் பிரபலங்கள், ரசிகர்கள் குவி்ந்து அஞ்சலி செலுத்தி வந்தனர்.



காணி சுவீகரிப்பு மலையத்திலும் தொடர்கிறதா? மனோ கணேசன் கேள்வி!
[Sunday, 2013-05-26 12:45:14]

பயன்படுத்தப்படாத காணிகள் என்று சொல்லி, 25,000 ஏக்கர் மலையக தோட்டப்புற காணிகளை தோட்ட நிறுவனங்களிடமிருந்து மீளப்பெற்று, அவற்றை தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு, ஆளுக்கு இரண்டு ஏக்கர்களாக பிரித்து வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. காணிகளை பெறுகின்ற வேலையற்ற இந்த இளைஞர்களுக்கு, இந்த காணிகளில் விவசாயம் செய்வதற்காக கடன் வழங்கவும், காணிகளில் பயிரிட நாற்றுகளை, விதைகளை வழங்கவும், உரவகைகளை வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக முதல்கட்டமாக 100 மில்லியன் ரூபாவை திறைசேரி ஒதுக்கியுள்ளது. இந்த தோட்டப்புற காணிகளையும், கடன் உதவிகளையும் பெறுகின்ற 12,500 வேலையற்ற இளைஞர்கள் பட்டியலில், வேலையற்ற தோட்டப்புற மலையக தமிழ் இளைஞர்கள் எத்தனை பேரின் பெயர்கள் இடம்பெறுகின்றன என்பதை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக தமிழ் அரசியல்வாதிகள் அறிவார்களா என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.



ஈழத்தமிழரை அழிப்பதில் கோத்தபாய தீவிரம் - மன்னார ஆயர் சாடல்!
[Sunday, 2013-05-26 12:38:49]

"13 ஆவது அரசமைப்பு திருத்தத்தின் பற்களை அரசு ஏற்கனவே கழற்றிவிட்டது. மிஞ்சியிருப்பது காணி, பொலிஸ் அதிகாரங்கள்தான். அவற்றையும் இல்லாதொழிக்குமாறு சிங்களப் பேரினவாதிகள் சிலர் கூச்சலிடுகின்றனர். அரசு அவ்வாறு செய்யுமானால் தமிழ் மக்கள் இறுதியாக வைத்துள்ள நம்பிக்கையையும் அது இழக்கும்.'' இவ்வாறு மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவண. இராயப்பு ஜோசப் தெரிவித்தார்.



தடைசெய்யப்பட்ட வலயமாக கொழும்புத் துறைமுகம் பிரகடனம்!
[Sunday, 2013-05-26 12:34:46]

கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையை அண்மித்த பகுதி தடைசெய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் முடியும் வரையிலும் அந்த பகுதி தடைசெய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். பொலிஸ் மற்றும் துறைமுக பாதுகாப்பு பிரிவினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர். கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் கடந்த 24 ஆம் திகதி திடீர் தீ விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



அம்மாவைக் கொலை செய்து மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் தப்பிச் செல்லும்போது மரணம்!
[Sunday, 2013-05-26 11:59:47]

கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்லும் போது மரணமடைந்துள்ளார். தாயைக் கொலை செய்து மகளை கடத்திச் சென்று பாழடைந்த வீடொன்றில் வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரே தப்பிச் செல்லும் போது மரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் இன்று அதிகாலை 4 மணியளவில் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்டவேளை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



பொரளைப் பகுதியில் பதற்ற நிலைமை!
[Sunday, 2013-05-26 11:45:23]

பொரளையிலுள்ள ஜயரட்ன மலர்ச்சாலைக்கு முன்பாக பதற்றமான நிலைமை ஏற்பட்டது. தீக்குளித்து உயிரிழந்துள்ள வண. போவத்த இந்திரட்ன தேரரின் பூதவுடலை இரத்தினபுரிக்கு எடுத்துச் செல்வதற்கு சிஹல ராவய உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த நிலையிலேயே அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.



இலங்கையில் எனக்கு பாதுகாப்பில்லை: அமெரிக்க தூதரிடம் அசாத் சாலி தெரிவிப்பு!
[Sunday, 2013-05-26 09:08:05]

இலங்கையில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்று கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வரும், முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி, அமெரிக்க தூதரிடம் தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்க தூதரகத்தில் வைத்து, அசாத் சாலி அவரை சந்தித்து இந்த விடயம் குறித்து பேச்சு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அரசாங்கம் தமக்கு உரிய பாதுகாப்பை வழங்க தவறிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த விடயம் தொடர்பில் இஸ்லாமிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார். இதேவேளை தமக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, மேலும் இரண்டு அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகளை தாக்கல் செய்யவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



சர்வதேச திரைவெளியில் தடம்பதிக்க முனையும் ஈழத்தமிழ் கலைஞர்கள்! Top News Top News
[Sunday, 2013-05-26 08:55:00]

சர்வதேச திரைப்பட விழாக்களில் முக்கியமானாதொரு திரைப்பட விழாவென கருதப்படும் Shanghai International Film Festivalவில் கனடா வாழ் ஈழத்தமிழ் கலைஞர் லெனின்.எம்.சிவம் இயக்கிய A Gun & A Ring எனும் திரைப்படமும், றுகினா பசோ நாட்டில் இடம்பெறுகின்ற Cin Droit Libre de Ouagadougou விழாவில் பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழ்கலைஞர் விஜிதன் சொக்கா ஒளி-ஒலி பதிவுசெய்திருந்த journalistes-vos-papiers ஆவணப்படமும் கலந்து கொள்கின்றன.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்று அமைச்சர்கள் ஆதரவு! - சுரேஸ்
[Sunday, 2013-05-26 08:46:50]

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூன்று இடதுசாரி அமைச்சர்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். பேராசிரியர் திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார, மற்றும் டியு.குணசேகர ஆகியோரே தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை நாடாளுமன்றக் கட்டடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவை இவர்கள் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் போது, 13வது திருத்தச்சட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது என்றும் அதில் எந்தத் திருத்தமும் செய்யப்படாமலேயே வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் மூன்று அமைச்சர்களும் கூறியதாக த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



அடேல் பாலசிங்கம் மீது நெசர்பே பிரபு குற்றச்சாட்டு!
[Sunday, 2013-05-26 08:44:01]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் கடந்தகால ஆலோசகருமான காலஞ்சென்ற திரு அன்ரன் பாலசிங்கத்தின் பாரியார் அடேல் பாலசிங்கம் பாதுகாப்பாக லண்டனில் வாழ்ந்து வருகின்றார் என பிரித்தானிய இலங்கை அனைத்து கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவர் நெசர்பே பிரபு தெரிவித்துள்ளார் சிறுவர் போராளிகளை ஊக்கப்படுத்தி யுத்தத்தில் ஈடுபடுத்திய அடேல், தென் லண்டனில் அமைதியாக வாழ்ந்து வருகின்றார் என அவர் தெரிவத்துள்ளார்.



ஆயுதக்குழு கடத்தலானது திட்டமிட்ட குடியேற்றங்களை தடுப்பவர்களை எச்சரிக்கும் செயற்பாடு - அரியநேந்திரன் எம்.பி!
[Sunday, 2013-05-26 08:40:58]

அம்பாறை மல்வத்தை பகுதியிலுள்ள தனியார் காணிகளில் திட்டமிடப்பட்டுள்ள அத்து மீறிய குடியேற்றத்தை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தவே தமிழரசுக்கட்சியின் அப்பகுதி மூத்த உறுப்பினர் ஆயுதக் குழுவால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரந்திரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



புலம்பெயர் தமிழர்களின் கைப்பாவையாக சர்வதேச மன்னிப்புச்சபை செயற்படுகிறது - ருவன் வணிகசூரிய
[Sunday, 2013-05-26 08:38:55]

போர்க்குற்றவாளிகள் இலங்கையில் சுதந்திரப் பறவைகளாக உலாவுகின்றனர் என்று சர்வதேச மன்னிப்புச்சபை சுமத்தியுள்ள குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்த இராணுவம், புலம்பெயர் தமிழர்களின் கைப்பாவையாக மன்னிப்புச்சபை செயற்பட்டு இலங்கைக்கு எதிராக இதுபோன்ற ஆதாரமற்ற பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து சர்வதேச ரீதியில் தமக்குள்ள நற்பெயரை இழக்கின்றது எனவும் இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதற்குத் தகுந்த ஆதாரங்கள் இருப்பின் அவற்றைச் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கவேண்டும் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, மன்னிப்புச்சபையிடம் கோரிக்கை விடுத்தார்.



மீண்டும் தமரா குணநாயகத்தை ஜெனீவா அனுப்புவது குறித்து கவனம் செலுத்துகின்றது அரசு!
[Sunday, 2013-05-26 08:37:27]

இலங்கையின் சிரேஸ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான தமரா குணநாயகத்தை மீளவும் ஜெனீவா அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதியாக மீளவும் குணநாயகத்தை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதியாக தற்போது ரேனுகா செனவிரட்ன கடமையாற்றி வருகின்றார். இவரை ஐரோப்பிய நாடொன்றின் தூதுவராக நியமித்து அந்தப் பதவியை குணநாயகத்திற்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



தற்கொலைகளில் இலங்கை உலகசாதனை படைத்துள்ளது - எதிர்க்கட்சி தெரிவிப்பு!
[Sunday, 2013-05-26 08:34:01]

இலங்கை தற்கொலைகளில் உலக சாதனை படைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மதுபான மற்றும் தற்கொலைகள் நுகர்வில் இலங்கை உலக அரங்கில் முன்னணி வகிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். போதைக்கு முற்றுப் புள்ளி என அரசாங்கம் பிரசாரம் செய்தாலும், உண்மையில் நிலைமை தலைகீழாகவே காணப்படுகின்றது. கண்டியில் பௌத்த பிக்கு ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள மேற்கொண்ட முயற்சி பாரதூரமானது. இதற்கு யார் உந்து சக்தியாக அமைந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்ததுடன், உடலுக்கு தீ மூட்டிக் கொண்டமையின் பின்னணியில் ஏதேனும் அரசியல் சக்திகள் செயற்பட்டனவா என்பது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும்.


Ramans2011
TDE_Computers2011
AJRwindows22.05.13
NIRO-DANCE-100213
Suresh-remax-2013-01-01
INNSYS-20120930
RoyaShades-l2011(04-12-11)
Mahesan supramaniyam 031109
TamilsGuid-191012-2013
Canada Kanthasamy Kovil
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com