Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 23, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
உரிய விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்: - சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தல்
[Sunday, 2012-10-28 13:16:31]
News Service

இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது, மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

  

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகள் நடைபெறவுள்ளதாகவும் இதனால் இந்தத் தருணத்தில் இலங்கை விவகாரம் தொடர்பில் அழுத்தம் கொடுக்க முடியும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்திய கிளை சுட்டிக்காட்டியுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபட்டோருக்கு எதிராக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை, வலியுறுத்தக்கோரி இந்திய பிரஜைகள் ஐம்பதாயிரம் பேரின் கையொப்பங்களுடன் கூடிய விசேட மகஜர் ஒன்று இந்திய பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், சித்திரவதைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்தல், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகள் அமுல்படுத்தல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டோரை விடுதலை செய்தல், குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்தல், தேசிய மனித உரிமை செயற்திட்டத்தை அமுல்படுத்தல் உள்ளிட்ட சில விடயங்கள் குறித்து இலங்கை கவனம் செலுத்த வேண்டுமெனவும் மன்னிப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த போதிலும் இதுவரையில் கவனம் செலுத்தப்படவில்லை. எனவே இந்திய மத்திய அரசு இவ் விவகாரங்களில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்திய கிளை சுட்டிக்காட்டியுள்ளது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

மத்தளயில் விமான நிலையத்துக்கு பதிலாக குளத்தை கட்டியிருந்தால் ராஜபக்ஷ பெயரும் வரலாற்றில் பதிவாகியிருக்கும் - பொது பலசேனா
[Thursday, 2013-05-23 10:14:15]

மத்தளயில் சர்வதேச விமான நிலையத்தை கட்டியதற்கு பதிலாக அங்கு குளம் ஒன்று கட்டியிருந்தால் மஹா பராக்கிரமபாகு போன்று ராஜபக்ஷ பெயரும் வரலாற்றில் பதிவாகியிருக்கும் என்று தெரிவித்துள்ள பொதுபலசேனா ஜனாதிபதியை சூழவுள்ள ஆலோசகர்கள் இவ்வகையான பயனற்ற திட்டங்களை ஜனாதிபதிக்கு கூறி மக்களின் நிதிக்கு ஆப்பு வைக்கக் கூடாது என்றும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது. பொதுபலசேனாவின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போது மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.



பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் மீண்டும் கஜேந்திரனிடம் விசாரணை!
[Thursday, 2013-05-23 09:56:59]

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரின் யாழ்.அலுவலகத்தில் நேற்று நண்பகல் 12.30 மணியிலிருந்து பிற்பகல் 3.00 மணிவரை இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. இவ் விசாரணை தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்; பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் யாழ்ப்பாணம், நாவலர் வீதியிலுள்ள அவர்களுடைய அலுவலகத்திற்கு நண்பகல் 12.00 மணிக்கு என்னை வருமாறு அழைத்திருந்தனர். அதற்கமைய நானும் குறித்த நேரத்திற்கு அவ் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். என்னிடம் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பாக சுமார் மூன்று மணித்தியாலங்கள் விசாரணைகளை மேற்கொண்டனர். மேலும் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் என்னிடம் விசாரித்தனர் என்றார்.



எதிர்வரும் 28ம் திகதி முல்லைத்தீவிற்கு செல்கின்றார் பஷில் ராஜபக்ஷ!
[Wednesday, 2013-05-22 20:01:12]

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது, முல்லைத்தீவு மல்லாவி பகுதி மற்றும் கிளிநொச்சி பாண்டியன் குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் திட்டத்தினை திறந்துவைக்கவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பின் யாழ். பிராந்திய முகாமையாளர் பாலசுப்பிரமணியம் தவேந்திரகுமார் கூறினார்.



இராணுவத்தினரின் காணி சுபீகரிப்பு குறித்து ஐ.நா அதிகாரிகளுக்கு ஹத்துருசிங்க விளக்கம்!Top News
[Wednesday, 2013-05-22 19:59:38]

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தேவைக்காக சில காணிகள் இனங்காணப்பட்டுள்ளன. இராணுவம் பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படும் காணிகளின் அளவை சிலர் வேண்டுமென்றே அதிகரித்துச் சொல்வதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளார். ஐ.நா.வின் மனிதாபிமான ஒத்திசைவாக்க அலுவலகத்தின் உயரதிகாரிகளான அக்னெஸ் அஸகென்பே மற்றும் மார்க் பிரளோபா ஆகியோருக்கு யாழ். வலிகாமம் வடக்கிலுள்ள நிலங்களை இராணுவம் பொறுப்பேற்பது தொடர்பான பிரச்சினை குறித்து விளக்கமளிக்கும் போதே யாழ். கட்டளைத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, இராணுவம் பொதுமக்களின் காணிகளை பொறுப்பேற்பதாக கூறுவதை அவர் மறுத்துள்ளார். பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் என்பவற்றின் அபிவிருத்திக்காக காணிகள் பொறுப்பேற்கப்படுவதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.



உடனடியாக 13வது திருத்தம் இரத்துச் செய்யப்பட வேண்டும் - ஹெல உறுமய!
[Wednesday, 2013-05-22 19:52:56]

13 ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் உடனடியாக இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஹெல உறுமய தெரிவித்துள்ளது. கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஹெல உறுமயவின் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இதற்கான தனிநபர் பிரேரணையின் நகல் வெளியிடப்பட்டது.



சிங்களவர்களின் காணிகளையும் அரசு அபகரிக்கின்றது: விக்கிரமபாகு குற்றச்சாட்டு!
[Wednesday, 2013-05-22 19:47:58]

தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் அரசு அங்கு சிங்களவர்களை குடியமர்த்துவதாக சிங்கள மக்கள் நினைக்கின்றனர். ஆனால் சிங்கள மக்களின் காணிகளை சுவீகரித்து ஒட்டுமொத்த நாட்டினையுமே வெளிநாடுகளுக்கு அரசாங்கம் விற்பனை செய்கின்றதென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்பும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



வட மாகாணசபை தேர்தல் நடாத்தப்படாவிட்டால் நாடு இரண்டாகும்: சிறிதுங்க ஜயசூரிய
[Wednesday, 2013-05-22 19:42:31]

வட மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றால் இலங்கை ஒருநாடாக இருக்கும் அதேநேரம் தேர்தல் இடம்பெறாது போனால் நாடு இரண்டாக பிளவுபட வழி சமைக்கும் என சேஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்பும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



இந்திய வீடுகள் அமைக்கும் பணி மட்டக்களப்பில் ஆரம்பம் - இந்திய உயர்ஸ்தானிகர் ஆரம்பித்து வைத்தார்!Top News
[Wednesday, 2013-05-22 19:36:00]

கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியுடனான வீடமைப்பு திட்ட வேலைகள் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் வீட்டுத் திட்டங்களுக்கான வேலைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர். மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலக நிர்வாக பிரிவிலுள்ள மூன்று கிராமங்களில் நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வுகளின் போது, சிங்கள கிராமமான மங்களாகம கிராமத்திலே முதலாவது வைபவம் இடம்பெற்றது.



செங்கலடி இரட்டைக் கொலை சந்தேக நபர்களுக்கு 29 ஆந் திகதிவரை விளக்கமறியல்!
[Wednesday, 2013-05-22 19:28:24]

செங்கலடி நகரில் நள்ளிரவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பேருக்குமான விளக்கமறியல் காலம் எதிர்வரும் 29 ஆந் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். பிரபல வர்த்தகர் சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் படுக்கையறையில் கோரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர். இக்கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் செங்கலடி மத்திய கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்களை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.



இவ்வருட இறுதிக்குள் 340 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவர் - சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவிப்பு!
[Wednesday, 2013-05-22 16:53:25]

தற்போது புனர்வாழ்வு பெற்றுவருகின்ற முன்னாள் போராளிகள் 340 பேரையும் இந்த வருட இறுதிக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.சமூகமயப்படுத்தல் செயற்பாடுகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, வவுனியா மருதமடுவில் இயங்கிவந்த புனர்வாழ்வு முகாம் மூடப்பட்டுள்ளது. அதன்படி இந்த முகாமில் புனர்வாழ்வு பெற்றுவந்த 100 முன்னாள் போராளிகளும் பூந்தோட்டம், சேனதுறை மற்றும் கந்தக்காடு ஆகிய புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.



தமிழர்களை கொன்ற நினைவு நாளுக்காக தமிழர்களிடம் 10ரூபா அறவிடும் வடமாகாணசபை!
[Wednesday, 2013-05-22 16:48:53]

தேசிய போர் வீரர்கள்' தினத்தை முன்னிட்டு இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரையை வடக்கு மாகாண சபை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் வாங்க வேண்டும் என வற்புறுத்தி விற்பனை செய்யப்படுவதாக மாகாண ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 2009க்குப் பின்னர் இலங்கை அரசால் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18 ஆம் திகதி போர் வெற்றிவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்காக 5 ரூபா பெறுமதியான நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.



பீரிசை தொலைபேசியில் மிரட்டினார் குர்ஷித்?
[Wednesday, 2013-05-22 16:46:25]

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தம்மை அச்சுறுத்தும் வகையிலோ, அடக்குகின்ற வகையிலோ உரையாடவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை காலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் கல்மான் குர்ஷித் தொலைபேசி மூலம் உரையாடியிருந்தார். இதன்போது, மாகாணசபையின் அதிகாரங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான சட்டத்திருத்தங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் சல்மான் குர்ஷித் எச்சரித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.



மஹிந்த அரசை கவிழ்க்க சூழ்ச்சி தேவையில்லை - ரணில்!
[Wednesday, 2013-05-22 16:38:06]

இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சிகள் செய்யத் தேவையில்லை எனவும் வாக்கு பலத்தின் ஊடாக அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பெண் தூதுவர் ஒருவரை சந்தித்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானதென ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். ஜேர்மன் உதவி கிடைக்கும் 'பெட்ரிக் நியூமான் பவுன்டேசன்' என்ற அமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நடத்தும் கருத்தரங்கை அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சி என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதால் அதில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் இன்று (22) பாராளுமன்றில் தெரிவித்தார்.



புதிய சட்டமூலத்தின் ஊடாக வட மாகாண சபையை திரிபுபடுத்த அரசு முயற்சி - கூட்டமைப்பு!
[Wednesday, 2013-05-22 16:32:34]

அரசாங்கம் வட மாகாண சபையை திரிபுபடுத்த புதிய சட்டமூலம் ஒன்றை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்பும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவை - சம்பந்தனுக்கு அஸாத் சாலி கடிதம்!
[Wednesday, 2013-05-22 16:27:37]

தமிழ் முஸ்லிம் சமூகங்கள் சில முக்கிய பொதுவான விடயங்களில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது என்று தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,



வேடர்களும் நாகர்களுமே இலங்கையின் ஆதிக்குடிகள் - பொதுபல சேனாவுக்கு இதுதான் பதில்! - மனோ கணேசன்!
[Wednesday, 2013-05-22 16:16:55]

பொதுபல சேனாவின் வண. ஞானசார கலபொட தேரர், இந்த நாடு சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்கிறார். இந்த அடிப்படையில் வடக்கில் தமிழர் பெரும்பான்மை அதிகாரத்தின் கீழ் மாகாணசபை ஒன்று உருவாக முடியாது என்கிறார். ஆகவே மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்கிறார். அனைத்துக்கும் முதலில் இந்த நாட்டின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை கலபொட தேரர் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த அடிப்படை உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறி, தத்தம் மூதாதையர்கள் வந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டும்.



மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் போராட்டம்!
[Wednesday, 2013-05-22 10:32:03]

சாதாரண மக்கள் இன்றும் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். மக்கள் அவ்வாறு அடக்கி ஒடுக்கப்படுகின்றபோது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை தொழிற்சங்கம் என்ற வகையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களுக்கும் உண்டு. இவ்வாறு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவித்தார். மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக வாயிலில் நேற்று நடந்த கவனவீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர், பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கம் என்ற ரீதியில் பல்கலைக்கழகத்தில் மட்டுமன்றி நாட்டில் எந்தவொரு மக்களும் அடக்கி ஒடுக்கப்படுகின்ற போது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை எமக்கு உண்டு. எதிர்காலத்தில் மக்கள் நசுக்கப்படும் போது அடக்கப்படும்போது அதற்கெதிராக நாம் குரல் கொடுப்போம் என்றார்.



எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்திய சம்பந்தன் ஐயா, மாவை போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன் - முரளிதரன்
[Wednesday, 2013-05-22 10:13:18]

எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்திய சம்பந்தன் ஐயா மற்றும் மாவை சேனாதிராஜா போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று சபையில் தெரிவித்தார். ஜனாதிபதியிடம் தான் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதியமைச்சர் முரளிதரன் இதனைத் தெரிவித்தார்.



வடக்கை போன்று கிழக்கிலும் இராணுவ ஆட்சி: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு
[Wednesday, 2013-05-22 10:02:05]

வடக்கில் நிலவி வரும் இராணுவ ஆட்சி போன்றே இப்போது கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜகிரியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.



சங்கீதக் கதிரை விளையாட்டு போல அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற முடியாது - ஹக்கீம்
[Wednesday, 2013-05-22 09:52:01]

சங்கீதக் கதிரை விளையாட்டில் பாடல் நின்றவுடன் கதிரையை நீக்கிவிட்டுச் செல்வது போன்று, அரசை விட்டு வெளியேறும் சித்து விளையாட்டில் எமது கட்சி ஈடுபடமாட்டாது. ஆனால் சில சக்திகள் அவ்வாறுதான் விரும்புகின்றன. இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டி, தம்பதெனிய, நிக்கவரெட்டிய தேர்தல் தொகுதிகளில் உள்ள சில கிராமங்களில் நடைபெற்ற கூட்டங்களின் போதே அவர் இவ்வாறு கூறினார்.


TamilsGuid-191012-2013
INNSYS-20120930
Suresh-remax-2013-01-01
AJRwindows22.05.13
Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
Canada Kanthasamy Kovil
Ramans2011
RoyaShades-l2011(04-12-11)
TDE_Computers2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com