Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 25, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
கதாநாயகிகள் கிடைக்காமல் முடங்கி கிடக்கும் தமிழ் சினிமா..
[Sunday, 2012-10-28 20:48:39]
News Service

கூடுதல் சம்பளம், இந்திப்பட மோகம் போன்ற காரணங்களால் தமிழ் படங்களுக்கு கதாநாயகிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிறைய படங்கள் கதாநாயகிகள் கிடைக்காமல் முடங்கி கிடக்கின்றன. படப்பிடிப்பை துவங்க முடியாமல் இயக்குனர்கள் தவிக்கின்றனர்.

  

நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, ஹன்சிகா, ஸ்ருதி, அமலாபால், அஞ்சலி போன்றோர் ரூ. 70 லட்சத்தில் இருந்து ரூ. 1 கோடியே 25 லட்சம் வரை தங்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்துள்ளனர். அதைவிட குறைவான சம்பளம் வாங்க அவர்கள் தயாராக இல்லை.

முன்பெல்லாம் கதாநாயகிகள் சம்பளத்தை பொருட்படுத்துவது இல்லை. முன்னணி கேரக்டர்களுடன் நடிப்பதிலேயே ஆர்வம் காட்டினர். சம்பளத்தை படப்பிடிப்பு துவங்கும் போதே முடிவு செய்தார்கள். ஆனால் தற்போது நடிகர்கள் பற்றி பொருட்படுத்துவது இல்லை. சம்பளத்தில் தான் கவனமாக இருக்கிறார்கள் என்று ஒரு தயாரிப்பாளரும் இயக்குனரும் வருத்தப்பட்டனர். சமீபத்தில் பெரிய ஹீரோ ஜோடியாக நடிக்க முன்னணி கதாநாயகியை அணுகியதாகவும் அவர் கதை கேட்கும் முன்பே சம்பளம் பற்றித்தான் பேசினார் என்றும் அவர்கள் கூறினர்.

தமன்னா, இலியானா, காஜல் அகர்வால் போன்றோரின் அதிக சம்பளத்தை கொட்டி கொடுக்கும் இந்தி, தெலுங்கு படங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழ் இயக்குனர்களிடம் இருந்து வரும் போன் அழைப்புகளை கூட எடுப்பது இல்லையாம். இதனால் கும்கி, சுந்தரபாண்டியன் படங்களில் நடித்துள்ள லட்சுமிமேனன் போன்ற புதுமுக நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. முதல் படத்துக்கு ரூ. 3 லட்சம் சம்பளம் வாங்கிய லட்சுமிமேனன் சுந்தரபாண்டியன் ஹிட்டானதால் சம்பளத்தை ரூ. 30 லட்சமாக உயர்த்தி விட்டார்.

விஜய்யை வைத்து டைரக்டர் விஜய் இயக்க உள்ள புதுப்படத்துக்கு கதாநாயகி இன்னும் கிடைக்கவில்லை. வெங்கட்பிரபு இயக்கும் பிரியாணி படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க கதாநாயகி வேட்டை பல மாதங்களாக நடந்தும் யாரும் சிக்கவில்லை. தனுசை வைத்து சற்குணம் இயக்கும் "சொட்டவாளக்குட்டி" படத்துக்கும் கதாநாயகி கிடைக்கவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள் படங்களை திட்டமிட்டபடி தொடங்க முடியாமல் தவிப்பில் உள்ளனர்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

சிறுமி கடத்தல் வழக்கில் சிக்கிய மெண்டல் பட நடிகை சனாகான் தலைமறைவு!
[Saturday, 2013-05-25 17:55:45]

சல்மான் கானின் மெண்டல் படத்தில் நடித்து வரும் நடிகை சனா கான், தற்போது தலைமறைவாகியுள்ளதாக போலீஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது. தனது உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக 15 வயதுச் சிறுமியை வலுக்கட்டாயமாகக் கடத்த முயன்றார் என்று சனாகான் மீது கடத்தல் வழக்கு பதியப் பட்டது. இந்நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.



பிரபல பின்னணிப் பாடகர் T.M.சௌந்தரராஜன் காலமானார்
[Saturday, 2013-05-25 17:52:30]

பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் T.M.சௌந்தரராஜன் தனது 91வது வயதில் காலமானார். இதயக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார். எனினும் இன்று அவர் உயிரிழந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. தென்னிந்தியத் திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் பின்னணி பாடி வந்த இவர், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1923 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த இவர், 1950 ஆம் ஆண்டு கிருஷ்ண விஜயம் என்னும் படத்தில் 'ராதே என்னை விட்டுப் போகாதடி'' எனும் பாடலை பாடியதன் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 10,000ற்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கிரிக்கெட் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்துடன் நெருங்கி பழகிய நடிகைகள்: - போலீஸ் விசாரணை.
[Saturday, 2013-05-25 17:49:51]

கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதான ஸ்ரீசாந்துடன் நெருங்கி பழகிய நடிகைகள் விவரங்களை போலீசார் சேகரிக்கிறார்கள். அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. ஸ்ரீசாந்துடன் அதிக நெருக்கம் வைத்திருந்தவர் இந்தி நடிகை சுர்வின் சாவ்லா. இருவரும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் ஜோடியாக நடனம் ஆடினர். அதன் பிறகு அடிக்கடி சந்தித்து பேசினார்கள். இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியானது. எனவே சுர்வின் சாவ்லாவிடம் போலீசார் விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



பாரதிராஜாவின் புதுமை புரட்சி சின்னத்திரை சீரியலிலும் ஆரம்பம்..
[Saturday, 2013-05-25 17:30:30]
சினிமாவில் சமூக அக்கறையுடன் படங்கள் இயக்கி வருபவர் பாரதிராஜா. அவர் இயக்கிய சில படங்களுக்குக்காக தேசிய விருதுகளும் பெற்றுள்ளார். அதில் சிவாஜிகணேசன்-ராதா நடித்த முதல் மரியாதையும் ஒன்று. இப்படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் பட்டையக்கிளப்பியது. அந்த அளவுக்கு பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி கொடிகட்டிப்பறந்த பொற்காலம் அது. அந்த பாரதிராஜா தற்போது அன்னக்கொடி என்றொரு படத்தை இயக்கியிருந்தபோதும், அதற்கு முன்பு தெற்கத்தி பொண்ணு என்றொரு தொடரை கலைஞர் டி.விக்காக இயக்கி வந்தவர், இப்போது முதல்மரியாதை என்ற பெயரிலேயே ஒரு நெடுந்தொடரை இயக்கப்போகிறாராம். குடும்ப உறவுகள் பற்றிய செண்டிமென்டான தொடர் என்பதால், இதற்காக கிழக்குச்சீமையிலே படம் போன்று 7 பாடல்களையும் உருவாக்கியுள்ளாராம் பாரதிராஜா. அதோடு நில்லாமல் அந்த பாடல்களை ஆடியோ விழா நடத்தி சினிமா பாணியில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார். பாரதிராஜா செய்யப்போகும் இந்த புதுமை சின்னத்திரை வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளது.


அஞ்சலிக்கு எதிராக தீவிரமாக செயற்படும் அமலா பால்..
[Friday, 2013-05-24 18:42:37]

சித்தியுடன் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக, முழுநேர தெலுங்கு நடிகையாகி விட்டார், அஞ்சலி. கோலிவுட்டிலிருந்து, பட விஷயமாக யாராவது பேசினாலும், தெலுங்கில், நான் ரொம்ப பிசி. அப்புறம் பார்க்கலாம் என, போனை, கட் பண்ணி விடுகிறாராம்.தெலுங்கில் ஏற்கனவே, சமந்தா, அமலா பால், கைகள் ஓங்கியிருப்பதால், அவர்களை வீழ்த்தி விட்டு, முன்னணி நடிகையாகி விட வேண்டும் என, முண்டியடித்து வருகிறார். அஞ்சலியின் இந்த அதிரடி முயற்சி காரணமாக, அமலா பால் பேசி வைத்திருந்த, ஒரு படம், அஞ்சலிக்கு வந்து விட்டதாம். அதனால், இதுவரை சத்தமில்லாமல் நடித்து வந்த அமலா, அஞ்சலிக்கு எதிரான நடவடிக்கைகளில், தீவிரமாக இறங்கியுள்ளதோடு, பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக, சம்பளம், கிளாமர் போன்ற விஷயங்களில், தாராளம் காட்டவும் முடிவு செய்துள்ளாராம்.



ஐ படத்தில் பாடிபில்டராக நடிக்கும் விக்ரம்
[Friday, 2013-05-24 18:38:05]

உடல் எடையை ஏற்றியும், இறக்கியும் ஷங்கரின் 'ஐ' படத்தில் விக்ரம் நடித்துள்ளார். படத்தின் சில காட்சிகளில் பாடிபில்டராக விக்ரம் வருகிறார். தமிழ் நாடு பாடிபில்டிங் சாம்பியன் காமராஜ் வில்லனாகவும், முன்னாள் மிஸ்டர் இந்தியா அரசு நடுவராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. ஐ படத்தின் நாயகன் வேடத்துக்காக விக்ரம் கடுமையாக உடற்பயிற்சிகளை செய்து உழைத்துள்ளார். தற்போது நியூசிலாந்தில் நடக்கும் படப்பிடிப்பில் இருக்கிறார். படத்தில் 'பாடிபில்டிங்' சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் ஷங்கர் வைத்துள்ளார். முக்கியமான பாடிபில்டர்ஸ் படத்தில் வருகிறார்கள் என்கிறது பட வட்டாரம்.



'தீயா வேலை செய்யணும் குமாரு'விற்கு யு சான்றிதழ்..
[Friday, 2013-05-24 18:01:51]

கொலிவுட்டில் சித்தார்த், ஹன்சிகா மொத்வானி நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்தில் சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மத கஜ ராஜா திரைப்படத்துக்குப் பின்பு சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இயக்குனர் சுந்தர்.சி-யின் மனைவி குஷ்பூ சுந்தர் இப்படத்தை தயாரித்து இருக்கிறார். எங்கேயும் எப்போதும் படத்தின் இசையமைப்பாளர் சத்யா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்றுவிட்டன. தீயா வேலை செய்யணும் குமாரு யூன் 14ம் திகதி வெளியாகிறது. இதனிடையே படம் தணிக்கைக் குழுவின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. முழுப்படத்தையும் பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்திற்கு 'யு' சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தை யுடிவி நிறுவனம் விநியோகம் செய்யவிருக்கிறது.



இந்தியிலும் பாடல் பாடி கலக்கிய ரஜினி
[Friday, 2013-05-24 17:49:51]

கோச்சடையான் படத்துக்காக ரஹ்மான் இசையில் முதன் முறையாக இந்தியில் பாடியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மகள் சௌந்தர்யாவின் இயக்கத்தில் ரஜினிகாந்து நடித்துள்ள படம் கோச்சடையான். இந்த படத்துக்காக ரஹ்மான் இசையில் தமிழில் ரஜினிகாந்த் பாடியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் இந்தி பதிப்புக்காக தன் சொந்த குரலில் முதன் முறையாக ரஜினி பாடியுள்ளார். இந்த பாடலை இர்ஷத் கமில் என்பவர் எழுத, நேற்று பதிவு செய்தார் ரஹ்மான். பொதுவாக தான் எந்த மொழியில் நடித்தாலும் தன் சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதுதான் ரஜினி வழக்கம். அவருக்கு இந்தி மிக நன்றாகத் தெரியும். இதுவரை அவரது அனைத்து இந்திப் படங்களிலும் அவரே பேசியுள்ளார். ஆனால் இந்தியில் பாடுவது இதுதான் முதல் முறை. தமிழில் மன்னன் படத்தில் இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடியிருந்த ரஜினி, இப்போது கோச்சடையானுக்காக ரஹ்மான் இசையில் பாடியுள்ளார். கோச்சடையான் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஜூன் முதல் வாரத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று தெரிகிறது.



நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் தமன்னா
[Friday, 2013-05-24 17:41:13]

கடந்தாண்டில், அனைவரையும் கவர்ந்த பெண்கள் பட்டியலை, பிரபல பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், முதல் இடத்தை, தமன்னா பிடித்துள்ளார். இந்த செய்தியை தொடர்ந்து, மார்க்கெட் சரிவினால் சோர்ந்து போயிருந்த தமன்னா, மீண்டும் உற்சாகத்துடன் வலம் வருகிறார்.இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வரும் பல நடிகைகளும், இந்த பட்டியலில் பின் தங்கியிருப்பது தான், அந்த காரணம். அனுஷ்காவிற்கு மூன்றாவது இடமும், இலியானா, டாப்சிக்கு 5 மற்றும் 6 வது இடமும், அமலா பாலுக்கு ஏழாவது இடமும், ஹன்சிகாவிற்கு எட்டாவது இடமும், தெலுங்கில் நம்பர் ஒன்னாக இருக்கும் சமந்தாவுக்கு ஒன்பதாவது இடமும் கிடைத்துள்ளதாம். இதுபோதாதா, தமன்னா சந்தோஷப்படுவதற்கு.



கெட்டப்பை மாற்றி புதிய பாணிககு மாறிய கெளதம்
[Friday, 2013-05-24 17:27:27]

மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகமானவர் கார்த்திக்கின் மகன் கெளதம். அப்படத்தில் முதல் படம் என்று தெரியாத அளவுக்கு அவருக்கு நல்ல ட்ரெய்னிங் கொடுத்து நடிக்க வைத்திருந்தனர். இருப்பினும் படம் தோற்றுப்போனதால் கெளதமின் நடிப்பு பேசப்படவில்லை. அதோடு, மணிரத்னத்தின் அறிமுகம் என்பதற்காக அவரை வைத்து அடுத்தடுத்து படம் இயக்க காத்து நின்ற சில இயக்குனர்களும் அவரது முதல் தோல்வி நம்மை தொற்றிக்கொள்ளக்கூடாது என்று ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று மகனை தட்டிக்கொடுத்து வந்த கார்த்திக், அவருக்கான படவேட்டைகளிலும் தீவிரமடைந்தார். அவரது முயற்சியின் பலனாக இப்போது 3 படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் கை ராஜா வை படத்திற்கு கமிட்டான கெளதம், இப்போது தெலுங்கில் வெளியான அலமொடலய்ண்டி என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்கிறார்.



சித்தார்த்தின் படத்தில் கௌரவ வேடத்தில் சமந்தா
[Friday, 2013-05-24 17:18:34]

சித்தார்த், ஹன்சிகா இணைந்து நடிக்கும், 'தீயா வேலை செய்யணும் குமாரு' என்ற படம், விரைவில் வெளிவருகிறது. காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற, சுந்தர்.சி தான், இந்த படத்தின் இயக்குனர் என்பதால், படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது, இந்த படத்தை பற்றிய போனஸ் செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில், நடிகை சமந்தாவும், பிரபல தெலுங்கு நடிகர், ராணா டகுபாட்டியும், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்களாம். 'தெலுங்கில் பிசியாக இருக்கும் சமந்தா, இந்த படத்தில், கவுரவ வேடத்தில் நடிக்க, எப்படி சம்மதித்தார் என, விசாரித்தபோது, மேலும் ஒரு சுவாரசியமான தகவல் கிடைத்தது. சித்தார்த் இந்த படத்தின் ஹீரோ என்பதால் தான், சமந்தா, இந்த படத்தில், கவுரவ வேடத்தில் நடிக்கிறாராம்.



ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் மலையாள படம்
[Friday, 2013-05-24 17:16:08]

மலையாளத்தில் கிரிக்கெட் வீரர்களை மையப்படுத்தி உருவாகி வந்த மதுவில்லினட்டம்வரே என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடித்து வந்தார் இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த். ஆனால் இப்போது அவர் கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி கைது செய்யப்பட்டிருப்பதால், அப்படத்தில் இருந்த அவர் நடித்த காட்சிகளை நீக்கியுள்ளனர். ஆனால், அதே மலையாள சினிமாவில் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் சூதாட்டத்தை மையமாக வைத்து தற்போது ஒரு படம் தயாராகிறது. அந்த படத்துக்கு கிரிக்கெட் என்றும் பெயர் வைத்து விட்டனர். அதில் முக்கிய கதாபாத்திரம் ஸ்ரீசாந்த் சம்பந்தப்பட்டதுதானாம். அவருக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் இருந்த கிரேஸ், அவர் ஆட்டத்தில் காட்டிய வேகம் தொடங்கி கடைசியில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டு மக்களின் நம்பிக்கை எப்படியெல்லாம் வீணடித்து விட்டார் என்ற கோணத்தில் கதை செல்கிறதாம்.



படப்பிடிப்பின் போது நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்
[Friday, 2013-05-24 17:10:35]

சமீபத்திய பரபரப்பு நடிகையான ஸ்ருதிஹாசன், தற்போது பிரபுதேவா இயக்கிவரும் ராமையா வஸ்தாவய்யா என்ற படத்தின் தெலுங்கு, இந்தி என இரண்டு பதிப்புகளிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே பல படங்களில இவர் பிசியாக நடித்து வருவதால், ஸ்ருதி கால்சீட் தரும் நாட்களில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை வேகவேகமாக படமாக்கி வருகிறாராம் பிரபுதேவா. இந்த நிலையில், கடந்த சில தினங்களுககு முன்பு, அப்படத்தின் தெலுங்கு பதிப்பில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஸ்ருதிஹாசன் நடிக்கும் காட்சிகளை ஐதராபாத்தில் நடத்தியிருக்கிறார் பிரபுதேவா. ஒரு நீச்சல் குளத்தில் நின்றபடி அவர்கள் பேசிக்கொண்டிருப்பது போல் காட்சி படமாக்கப்பட்டதாம். அப்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்து விட்டாராம் ஸ்ருதிஹாசன். இதனால் அவரது கை, காலில் சிராய்ப்பு ஏற்பட்டு, ரத்தம் வழிந்திருக்கிறது. இதையடுத்து உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற ஸ்ருதி, அன்று ஒருநாள் மட்டும் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் மறுநாள் படப்பிடிப்பு கலந்து கொண்டாராம்.



தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் சித்தார்த் - சந்தானத்தின் காமெடி கூட்டணி வெற்றி..
[Friday, 2013-05-24 16:29:07]

காமெடி ட்ரேக் ரெடி பண்ணும் விசயத்தில் மற்ற காமெடியன்களை விட சந்தானம் கூடுதலாக மெனக்கெடுவார். அதிலும் தனது அபிமானத்திற்குரிய ஹீரோக்கள் நடிக்கும் படமென்றால், தூங்காமல் உட்கார்ந்து காமெடி சீன்களை யோசிப்பார். அப்படி யோசித்தது தனக்கு நன்றாக இருப்பது போல் தெரிந்தால் உடனே அப்படத்தில் நடிக்கும் ஆர்யாவோ, சிம்புவோ, உதயநிதியோ யாராக இருந்தாலும் உடனே அவர்களுக்கு போன் போட்டு சீனை சொல்லுவார். அதைக்கேட்டு அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தால் அந்த காட்சியை ஓ.கே செய்வார். இல்லையேல் ஓரங்கட்டி விடுவார். இதேபாணியில்தான் சித்தார்த்துடன் முதல்முதலாக இணைந்து நடிக்கும் தீயா வேலை செய்யனும் குமாரு படத்துக்காகவும் கடுமையாக மெனக்கெட்டுள்ளாராம் சந்தானம். சித்தார்த்தும் ஒரளவு காமெடி சென்ஸ் உள்ளவர் என்பதால், இவர் சொல்லும் காட்சிகளுக்கு அவரும் தனது கருத்துக்களையும் உள்ளே திணிக்க, இப்படத்தில் எதிர்பார்த்ததைவிட சித்தார்த் - சந்தானத்தின் காமெடி கூட்டணி பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகி உள்ளதாம்.



பூனை குறுக்கே பாய்ந்ததால் அலறிய வித்யாபாலன்..
[Thursday, 2013-05-23 20:46:44]

தி தர்ட்டி பிக்சர், கஹானி போன்ற வித்தியாசமான கதையம்சம் உடைய படங்களில் நடித்த, வித்யா பாலன், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக, தினமும் வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது, எதிரில், யாராவது வருகிறார்களா, என்பதை கவனித்தப் பிறகே வெளியேறுவார். அப்படிப்பட்ட வித்யா பாலன், சமீபத்தில் தன் கணவர் சித்தார்த்துடன், ஆஷிகி என்றொரு படத்தின் சிறப்புக் காட்சியை பார்க்க சென்ற போது, ஒரு பூனை, தியேட்டர் வாசலில், அவருக்கு குறுக்கே பாய்ந்து விட்டதாம். இதனால் அலறிய அவர், சகுனம் சரியில்லை என, கூறி, வீட்டுக்கு திரும்ப முடிவு செய்தார். கணவர், சமாதானப்படுத்தியதால், ஒரு வழியாக, தியேட்டருக்கு சென்றார். இருப்பினும், யாரிடமாவது வாய் கொடுத்தால், அது வம்பில் முடியக்கூடும் என, நினைத்து, படம் முடிந்து, வீட்டிற்கு வந்து சேரும் வரை, யாரிடமும், வாய் திறக்கவே இல்லையாம்.



தாய்லாந்தில் விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு...
[Thursday, 2013-05-23 19:27:31]

கமல்ஹசான் தயாரித்து இயக்கி நாயகனாக நடித்த விஸ்வரூபம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அண்மையில் இந்தப் படம் 100வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கமல்ஹாசன் ஏற்கெனவே அறிவித்தப் படி விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முதல் பாகத்தில் எந்த கதாபாத்திரங்களில் நடித்தார்களோ, அதே கதாபாத்திரங்களில் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியாவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. விஸ்வரூபம் படத்தில் இல்லாத காதல் மற்றும் சென்டிமென்ட் விஸ்வரூபம் 2 வில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் விஸ்வரூபம் 2 திரைக்கதை இந்தியாவில் நடைபெறுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தை இந்த வாரம் தாய்லாந்து நாட்டில் கமல்ஹாசன் ஆரம்பிக்க உள்ளதாக கோடம்பாக்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர ஐரோப்பிய நாடுகளிலும் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்.



நவீன காலத்து சினிமாவை ரசிகர்களுக்கு கொடுப்பேன் : ஸ்ரீப்ரியா உறுதிமொழி
[Thursday, 2013-05-23 19:21:01]

25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் கொடிகட்டிப்பறந்த நடிகைகளுள் ஸ்ரீப்ரியாவும் குறிப்பிடத்தக்கவர். இவரும் ஸ்ரீதேவியும் சம காலத்து நடிகைகள். அந்த சமயத்தில் சிவாஜி, ரஜினி, கமல் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்த ஸ்ரீப்ரியா, கவர்ச்சி கதாநாயகியாகவும் திகழ்ந்தவர். அதனால் அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டமும் இருந்தது. அப்படி பிசியாக நடித்து வந்தவர், படவாய்ப்புகள் குறைந்தபோது நானே வருவேன், சாந்தி முகூர்த்தம் ஆகிய படங்களையும இயக்கினார். அதன்பிறகு சினிமா விட்டு விலகியிருந்த ஸ்ரீப்ரியா, சின்னத்திரைகளில் முகம் காட்டி வந்தவர், இப்போது மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். ஆனால் நடிகையாக அல்ல, இயக்குனராக. தானே கதை உருவாக்கி ரிஸ்க் எடுக்காமல், மலையாளத்தில் வெளியான 22 பீமேல் கோட்டயம் என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்யப்போகிறாராம். பகத்பாசில், ரீமா கல்லிங்கல் நடித்த இப்படம் அங்கு வெற்றி பெற்றதோடு, ரீமா கல்லிங்களுக்கு சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றுத்தந்தது.



அஜித்தின் கடமை உணர்ச்சிக்கு அளவேயில்லை
[Thursday, 2013-05-23 19:16:53]

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் அஜித் தற்போது நடித்துக் கொண்டிருக்கின்றார். படப்பிடிப்பிற்காக அஜித் டெல்லியிலிருந்து குலுமனாலி புறப்பட்டுச் சென்றார். இப்படத்தில் நடிக்கும் நயன்தாரா, டாப்சியும் அங்கு சென்றார்கள். எல்லோருக்கும் மலையின் அழகை ரசிக்கும் ஆர்வமும் இருந்தது. நீண்ட தூரம் பயணம் செய்ததால் படப்பிடிப்பு தளத்தில் அஜித்துக்கு திடீர் முதுகுவலி ஏற்பட்டு காய்ச்சலிலும் அவதிப்பட்டார். ஆனால் படப்பிடிப்பை தள்ளி வைக்க முடியாத சூழலில் இயக்குனர் இருந்தார். உடனடியாக படப்பிடிப்பை தொடங்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. படப்பிடிப்பு தன்னால் பாதிக்கப்படக் கூடாது என்று அஜித் முடிவுசெய்து காய்ச்சல் மற்றும் முதுகுவலியை பொருட்படுத்தாமல் நடித்தார். கிளைமாக்சும் மேலும் சில காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டன. அனைத்தையும் முடித்து கொடுத்தார். அஜித்தின் தொழில் ஈடுபாட்டை படப்பிடிப்பு குழுவினர் வியந்து பாராட்டினர். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. 'வலை' என்ற பெயரை வைக்க பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



நயன்தாராவும், டாப்சியும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர்..
[Thursday, 2013-05-23 19:08:31]

அஜீத் நடிக்கும் புதிய படத்தில், ஆர்யா, நயன்தாரா, டாப்சி என, ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இதனால், படப்பிடிப்பு தளத்தில், ஒரே ஜாலியும், அரட்டையுமாக, எப்போதும், உற்சாகம் களை கட்டுகிறது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள், இமாச்சல பிரதேசத்தில் உள்ள, அடர்ந்த மலைப் பகுதியில், ஜில் ஜில் சீதோஷ்ண நிலையில், படமாகின்றன. இதற்காக, நட்சத்திர குழு, அங்கு முகாமிட்டுள்ளது. இந்த படத்தில் நடித்ததன் மூலம், நயன்தாராவும், டாப்சியும், ரொம்பவும் நெருங்கிய தோழிகளாகி விட்டார்களாம். நேரம் கிடைக்கும்போதெல்லாம், இந்த தோழிகள், அரட்டை அடிக்க தயங்குவது இல்லை. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், நயன்தாராவும், டாப்சியும், மலைப் பிராந்தியத்தில், ஜாலியாக, 'பைக் ரைடிங் செய்தார்களாம்.



மரியானில் தனுஷ் உயிர பணயம் வச்சு நடிச்சாராம்...
[Thursday, 2013-05-23 19:01:59]

துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்க வந்தவர் தனுஷ். மீசை முளைக்காத பையனாக வந்தவர், இப்போது சிறகு முளைத்த நடிகராகி விட்டார். எந்த மாதிரி கதை என்றாலும் புகுந்து விளையாடுகிறார். விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களே சிறந்த நடிகர் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார் தனுஷ்.ஆனால் அப்படிப்பட்ட தனுஷ் மரியான் படத்தில் நடிக்கத் தொடங்கியதில் இருந்து படப்பிடிப்பு முடியுற வரைக்கும் திகிலோடுதான் நடித்துக்கொண்டிருந்தாராம். முதலில் எனக்கு நீச்சலே தெரியாது. அப்படிப்பட்ட நான் நடுக்கடலுக்குள் சென்று மீன் பிடிக்க வேண்டும். இந்த அனுபவம் எப்படி இருக்கும் நீங்களே நினைத்துப்பாருங்கள் என்கிறார். அடுத்து, நபீபியா பாலைவனத்தில் சுடும் மணலில் காலில் செருப்பே போடாமல் நடித்தேன். அப்போதெல்லாம் இந்த பரத்பாலாகிட்ட இப்படி வந்து சிக்கிக்கிட்டோமே என்று பீல் பண்ணினேன். இதற்கெல்லாம் மேலாக சிறுத்தையுடன் கூண்டுக்குள் அடைத்துப்போட்டு படமாக்கியது ரொம்ப கொடுமையான அனுபவம். எப்ப சிறுத்தைக்கு இரையாகப்போறோமோன்னு பயந்து நடுங்கிக்கிட்டே நடிச்சேன். இப்படியெல்லாம் உயிர பணயம் வச்சி ஒரு படத்துல நடிக்குனுமான்னு முதல்முறையா என்னை நானே கேட்டுக்கிட்டே நடிச்சேன்.


Mahesan supramaniyam 031109
TamilsGuid-191012-2013
Suresh-remax-2013-01-01
Canada Kanthasamy Kovil
RoyaShades-l2011(04-12-11)
AJRwindows22.05.13
TDE_Computers2011
Ramans2011
INNSYS-20120930
NIRO-DANCE-100213
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com