Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 18, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
வேண்டும் விடுதலை

வேண்டும் விடுதலை என்றுநீ பாடு
விண்ணிலும் கேட்டிடப் பாடிடுவாய்
மீண்டும் தமிழினம் ஆண்டிட வேண்டியே
மேதினி யெங்குமே கூடிடுவாய்!

பட்டினிச் சாவினிற் பள்ளியிற் பாலகர்
படுந்துயர் தன்னைநீ கூறிடுவாய்
கட்டிலில் மெத்தையில் இன்பம் நுகரும்
கடல்கடந் தோரும் அறிந்திடவே!

பறவை விலங்கினம் பல்வகைப் பூச்சிகள்
பாடிடும் வண்டினம் பார்த்திடுவாய்!
உறவினைப் பேணிடும் உன்னத வாழ்வின்
உண்மை உறுதி உணர்ந்திடுவாய்!

பறந்திடும் காக்கை யினத்தினை நோக்குவாய்
பக்குவம் தன்னைநீ பெற்றிடுவாய்
சிறகொடிந் தாலும் தமதினம் காத்திடும்
சீரிய பண்பினைக் கற்றிடுவாய்!

தரையிலே ஊர்ந்திடும் சிற்றெறும் புந்தான்
தவறியும் தன்நேர் சிதைவதில்லை
கரையில் உலாவரும் நண்டினம் கூடக்
காப்பினிற் சொந்தத்தைப் பேணிடுமே!

விண்ணில் ஒளிர்ந்திடும் வெண்ணிலா என்றுமே
வேற்றுமை மாந்தரிற் கண்டதில்லை
மண்ணில் விழுநல் மழைத்துளி மண்டல
மன்னுயிர் தம்மை நனைக்கிறதே!

மலர்கள் மணத்திலும் மாற்றங் களில்லை
முகர்கையில் இன்பம் முகிழ்ந்திடுமே
புலர்விலும் ஞாயிறு வேற்றுமை யின்றிப்
புவிதனில் எங்கும் ஒளிர்கிறதே!

ஐந்தறிவு ஆன்மா அவனியில் ஆறுதல்
அய்யமின்றிப் பெற்று மகிழ்ந்திடவே
பைந்தறிவு பெற்றுயர் பாங்குறு நம்மினம்
பாரில் அலையும் நிலையேனோ?

ஒற்றுமை என்னும் உயர்வினை மாந்தர்
உதறியே தள்ளும் மடமையன்றோ!
கற்றவை வாழ்வினைக் கட்டி யெழுப்பவே
காண்போம் விடிவு கனிந்திடவே!

இனமானம் பேணிடல் இன்பத் தமிழனின்
ஈடிலா வாழ்வின் கடமையன்றோ!
கனிவான எண்ணம் கவினுறு நெஞ்சினில்
கண்ணியம் காத்திடின் வெற்றியன்றோ!

- கனடாவிலிருந்து பவித்திரா -


[Sunday, 2012-06-03 21:08:30]
  Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
வெம்புலி பெற்ற அம்புலி
[Wednesday, 2013-04-24 23:40:58]
பல கோடி அவதாரம்
[Monday, 2013-04-08 01:20:21]
சிந்தனையில் தீ வை...!!!
[Tuesday, 2013-03-26 09:22:51]
மனித விலங்குக்கு மனசாட்சி இருக்குமா ?
[Tuesday, 2013-03-26 09:21:58]
மண்ணிருந்து வானேறி வந்தது
[Tuesday, 2013-03-26 09:12:29]
என்றும் சாகாத பிறப்பின் விடியல்..
[Sunday, 2013-03-24 22:06:00]
நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்..
[Thursday, 2013-03-21 21:21:36]
பொங்கியெழுந்ததடா மானத் தமிழகம்:
[Thursday, 2013-03-21 21:18:59]
வீட்டில் எண்ணெயின்றி எரியும் விளக்கு; அம்மா!
[Sunday, 2013-03-03 22:34:29]
காதல் பதியம் . . . !
[Wednesday, 2013-02-13 22:09:45]
INNSYS-20120930
NIRO-DANCE-100213
TamilsGuid-191012-2013
Suresh-remax-2013-01-01
TDE_Computers2011
Ramans2011
Mahesan supramaniyam 031109
Canada Kanthasamy Kovil
RoyaShades-l2011(04-12-11)
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com