Untitled Document
February 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருநங்கை தீக்குளித்து இறந்த சம்பவத்தினால் பரபரப்பு!
[Wednesday 2016-11-09 17:00]

தமிழகத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருநங்கை தீக்குளித்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த தாரா என்ற திருநங்கை காலையில் வாகனம் ஓட்டிச் சென்றுள்ளார்.அப்போது பொலிசார் அவரை இடைமறித்து விசாரணை செய்துள்ளனர், அதன் பின்னர் அவர் மது அருந்தியதாக கூறி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.தகவல் அறிந்த அத்திருநங்கையின் சகோதரிகள் காவல் நிலையத்திற்கு வந்து பார்த்த போது அவர் தீக்காயத்துடன் காவல் நிலையத்தில் உயிருக்கு போராடியுள்ளார்.இதைக் கண்டு அதிர்ச்சியடந்த சகோதரிகள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


  

மேலும் காவல் நிலையத்தில் தாராவுடனான விசாரணையின்போது வாக்குவாதம் தீவிரமாகி, பொலிசார் அவரைத் தாக்கினார்களா அல்லது வேறு ஏதும் பிரச்சனையா என சந்தேகத்தைக் கிளப்பியிருப்பதாக கூறி பொலிசாரை கண்டித்து திருநங்கைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com


சசிகலாவை கலாய்க்கும் இந்தியா டுடேவின் So Sorry கார்டூன்!Top News
[Wednesday 2017-02-22 21:00]

இந்திய தேசிய ஊடகமான இந்தியா டுடே அவ்வப்போது நடக்கும் அரசியல் நிகழ்வுகளை So Sorry என்ற பெயரில் கார்டூடன் படமாக வெளியிடும். இந்த So Sorry க்கு விருதுகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் சசிகலா பன்னீர் செல்வத்திற்கு So Sorry கார்டூடன் படம் வெளியிட்டுள்ளது இந்தியா டுடே. சசிகலாவை பகிரங்மாக கலாய்த்துள்ளது இந்தியா டூடே.


தமிழகத்தில் கட்டை விரல் நகத்தின் அளவில் சிறிய தவளைகள்: - புதிய கண்டுபிடிப்பு
[Wednesday 2017-02-22 17:00]

கட்டை விரலின் நகத்தில் கச்சிதமாக அமரக்கூடிய அளவு நான்கு புதிய தவளைகள், இந்திய காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகின் மிகச்சிறிய தவளைகளான இவைகள், காடுகளில் வாழக்கூடியவை; மேலும் இரவில் பூச்சிகளை போன்ற ஒலிகளை எழுப்பக்கூடியவை.மேற்கு தொடர்ச்சி மலைகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழு இரவுத் தவளை இனங்களில் மூன்று, பெரிய அளவைக் கொண்ட இனங்களாகும்.இந்தியாவின் மேற்கு கரைக்கு இணையாக இருக்கும் மலைப்பகுதி, பல அபாயகரமான செடிகள் மற்றும் விலங்குகளுக்கு இருப்பிடமாக உள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாட்டின் காடுகளில் பல நாட்கள் நடைபெற்ற ஆய்விற்கு பிறகு விஞ்ஞானிகள் இந்த புதிய இனங்களை கண்டுபிடித்துள்ளனர்.


ஒரே முகத் தோற்றத்தில் 28 பேர்…
[Tuesday 2017-02-21 20:00]

இந்த உலகில் ஒருவரைப் போன்று 7 பேர் இருப்பார்கள் என்று நம் முன்னோர்கள் சொல்வதுதான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தற்போது பல்வேறு நாட்டைச் சேர்ந்த ஒரே முகத்தோற்றத்தை உடையவர்கள் 28 பேர் உள்ளதாகவும், அதன் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படமானது, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. இந்த புகைப்படம் வாட்ஸ்அப்பிலும் வைரலாகப் பரவி மக்களை அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் அளித்துள்ள நிலையில், இது உண்மையா? பொய்யா? என குழப்பத்தில் உள்ளனர் இணையவாசிகள்..


சர்வதேச விண்வெளி நிலையத்தை முற்றுகையிட்ட ஏலியன்ஸ்!
[Monday 2017-02-20 17:00]

சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையாளம் தெரியாத 6 பறக்கும் பொருள்கள் வட்டமிட்டு சுற்றிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் நாசா வெளியிட்டிருந்த வீடியோவின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நிகழும் போது நாசா திடீரென வீடியோவை துண்டித்தது குறிப்பிடத்தக்கது.வீடியோவில், சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையாளம் தெரியாத 6 பறக்கும் பொருள்கள் வட்டமிட்டு சுற்றுகிறது.


வைரலாக பரவும் 'குட்டி டிரம்ப்' மீம்கள்
[Monday 2017-02-20 10:00]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கைகளின் அளவு குறித்து எழுந்த கருத்துகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதில் சொல்லியதை அவருடைய எதிர்ப்பாளர்கள் அறிந்திருப்பார்கள். தற்போது, சில இணையதள பயன்பாட்டாளர்கள் ஒருபடி மேலே சென்று டொனால்ட் டிரம்பின் புகைப்படங்களில் திருத்தங்களை செய்து அவரது உடல் சிறியதாக தோன்றும்படி செய்துள்ளனர். அவரை மிகவும் குட்டியாக காட்ட வேண்டும் என்பதால் டிரம்பின் பெரும்பாலான படங்கள் திருத்தப்பட்டுள்ளன. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றன. இந்த புகைப்படங்கள் குறித்து அமெரிக்க அதிபர் இன்னும் தன் கருத்துக்களை தெரிவிக்கவில்லை.


தற்கொலை செய்ய முயன்ற இளைஞனுக்கு புதிய முகம்!
[Sunday 2017-02-19 22:00]

முகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து உயிர் தப்பிய இளைஞர் ஒருவருக்கு ‘புதிய முகம்’ ஒன்றை வழங்கியுள்ளனர் வைத்தியர்கள்.


ஏரியில் வீசப்பட்ட குழந்தைக்கு தாயான பெண் பொலிஸ் அதிகாரி!
[Saturday 2017-02-18 19:00]

மொனராகலையில் கைவிடப்பட்ட குழந்தையை பொலிஸ் பெண் அதிகாரி ஒருவர் பராமரிக்கும் நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மொனராகலை கச்சேரி சந்தியில் 4 மாத பெண் குழந்தை ஒன்று ஏரியில் வீசப்பட்ட நிலையில் மக்களால் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையை புத்தல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே ஏரியில் வீசியுள்ளார். குறித்த குழந்தையின் தாய் எனவும் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கணவன் இறந்த சில மணி நேரங்களில் வீட்டிற்கு வந்த பரிசால் கலங்கிய மனைவி!
[Friday 2017-02-17 09:00]

கணவர் கொல்லப்பட்ட செய்தி கிடைத்த சில மணிநேரங்களில், அவர் அனுப்பியிருந்த பரிசுப்பொருட்கள் மனைவிக்குக் கிடைக்கப்பெற்ற சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. மேஜர் சதீஷ் தஹியா (31) என்பவர் ஹரியானாவின் பானிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி சுஜாதா (27). இந்திய இராணுவ அதிகாரியான சதீஷ், கடமை நிமித்தமாக காஷ்மீரில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ப்ரியாஷா (2) என்ற மகளும் இருக்கிறார்.


கூகுளில் வேலைக்கு விண்ணப்பித்த 7 வயது சிறுமி - சுந்தர் பிச்சையிடமிருந்து பதிலும் கிடைத்தது
[Friday 2017-02-17 08:00]

உலகின் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுளில் வேலை வழங்கக் கோரி ஏழு வயது சிறுமி கூகுளி்ன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்திற்கு சுந்தர் பிச்சை அனுப்பிய பதில் என்ன? என்பதை பார்ப்போம்.லண்டனை சேர்ந்த 7 வயது சிறுமியான கோலெ பிரிட்ஜ்வாட்டர், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


பெண் குழந்தையை கடித்து உடலில் சூடு வைத்த தாய்: - பதற வைக்கும் சம்பவம்
[Thursday 2017-02-16 14:00]

இந்தியாவில் பெண் குழந்தையை சொந்த தாயே உடலில் கடித்தும், சூடு வைத்தும் கொடுமைப்படுத்திய செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல், இவர் மனைவி பெயர் பூனம், இவர்களுக்கு 11 மாத பெண் குழந்தை உள்ளது.தன் குழந்தையிடம் அன்பாக இருந்து வந்த பூனத்தின் செயலில் திடீர் மாற்றம் ஏற்ப்பட்டது.திடீரென தன் குழந்தையின் உடலில் கடித்தும், சூடு வைத்தும் பூனம் கொடுமைப்படுத்தியுள்ளார்.இதனால் குழந்தையின் முகம் மற்றும் உடல் பகுதிகளில் காயம் ஏற்ப்பட்டுள்ளது.


வானொலி நேரலை நிகழ்ச்சியில் இரு ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொலை..
[Wednesday 2017-02-15 20:00]

வானொலி நேரலை நிகழ்ச்சியொன்றின்போது ஊடகவியலாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் டொமினிக்கன் குடியரசு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இக்கொலையுடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிரான்ஸ் நாட்டில் சிறிய ரக விமானங்களை வீழ்த்த கழுகுகளுக்கு பயிற்சி:
[Wednesday 2017-02-15 19:00]

உலகம் முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில், தீவிரவாதத்தை ஒழிக்க பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, பிரான்ஸ் நாட்டின் MONT-DE-MARSAN விமானப்படை தளத்தில் ஆளில்லா சிறிய ரக விமானங்களை வீழ்த்தும் பயிற்சி கழுகுகளுக்கு அளிக்கப்படுகிறது. சிறிய ரக விமானத்தில் கழுகுகளுக்கு தெரியும் வகையில் இறைச்சி வைக்கப்பட்டு, ரிமோட் கன்ட்ரோல் விமானம் பறக்க விடப்படுகின்றன. இறைச்சியை கண்டதும், விமானத்தை துரத்தும் கழுகுகள் அதை கீழே வீழ்த்துகின்றன.


ஒபாமாவின் காதல் டைரி..
[Wednesday 2017-02-15 08:00]

காதல் ஒரு மனிதனை என்னவாக வேண்டுமானாலும் மாற்றும். காதல் கோழைகளை வீரனாக்கும், காமெடியன்களை ஹீரோவாக்கும். அப்படிப்பட்ட காதல் ஒருவரை உலகின் சர்வ வல்லமை படைத்த பதவியான அமெரிக்க அதிபர் பதவிக்கு வரவைத்தது. எப்போதுமே ஒரு ஆண் சிறந்தவர் என மற்றவர்கள் கூறுவதை விட ஒரு பெண் கூறினால் அந்த ஆணின் மதிப்பு வேறு உயரத்தில் இருக்கும். அப்படித்தான் மிச்செல் ஒபாமாவின் ஒரே மேடைப்பேச்சு ஒபாமாவை அமெரிக்க அதிபராக்கியது.


சீனாவில் காதலர் தினத்துக்கு இணையாக கொண்டாடப்படும் ஷிஸி நாள்!
[Monday 2017-02-13 18:00]

உலகில் பல்வேறு தினங்கள் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும் காதலர் தினத்துக்கு என்று தனி உற்சாகம் இருக்கிறது.காதலிக்கு பரிசு வாங்கவும், காதலை வெளிப்படுத்தவும் இதை ஒரு சந்தர்ப்பமாக இளைஞர்கள் பலர் பயன்படுத்திக் கொள்கின்றனர்.அந்த நாளில் இவர்கள் சந்தோஷத்தில் மிதப்பதோடு மட்டுமல்லால் ஒட்டுமொத்த உலகத்தினரையும் சந்தோஷத்தில் ஆழ்த்திவிடுவார்கள். அந்த அளவுக்கு பார்க்கும் திசையெல்லாம் வண்ண வண்ண மலர்களும், பல்வேறு பரிசுப்பொருட்களும் தான் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் காதலர் தினம் வெவ்வேறு விதமாக கொண்டாடப்படுகின்றன. காதலர் தினம் உலகளவில் பிரபலமானது என்றால், சில நாட்டில் தனிப்பட்ட முறையிலும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.சீனாவில் காதலர் தினத்துக்கு இணையாக கொண்டாடப்படும் ஷிஸி நாள்.


உலகிலேயே அதிக எடை கொண்ட எகிப்து பெண்ணுக்கு மும்பையில் சிகிச்சை
[Sunday 2017-02-12 08:00]

எகிப்து நாட்டை சேர்ந்த 500 கிலோ குண்டு பெண், எடை குறைப்பு சிகிச்சைக்காக மும்பை கொண்டுவரப்பட்டார். கிரேன் உதவியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.எகிப்து நாட்டை சேர்ந்த 500 கிலோ குண்டு பெண், எடை குறைப்பு சிகிச்சைக்காக மும்பை கொண்டுவரப்பட்டார். கிரேன் உதவியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். எகிப்து தலைநகர் கெய்ரோவை சேர்ந்த பெண் எமான் அகமது (வயது 36). இவருக்கு 11 வயது ஆனபோது பக்கவாத நோயாலும், உடல் பருமனாலும் படுத்த படுக்கை ஆனார். யானைக்கால் நோய் மற்றும் உடலில் சுரப்பிகள் சுரக்காததால் அவர் மிகவும் குண்டானார்.


Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
AIRCOMPLUS2014-02-10-14
Mahesan-Remax-169515-Seithy
<b>02-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ideal Entertainment நிறுவன அறிமுக விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>29-01-2017 அன்று ரொரன்டோவில் தமிழ்நாடு சமூக மன்றம்  நடாத்திய தைப்பொங்கல் விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>28-01-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற கனடா தமிழர் மரபு மாநாட்டு விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா