Untitled Document
January 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ஐந்து நாட்கள் நடைபெற்ற ஆடம்பர திருமணம்! ரூ.17 கோடி திருமண புடவை, 500 மாடல் அழகிகள்!
[Thursday 2016-11-17 18:00]

பெங்களூருவில் பல கோடி ரூபாய் செலவில் ஜனார்த்தனரெட்டி மகளின் ஆடம்பர திருமணம் நடந்தது. மணமக்களை கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்–நடிகைகள் நேரில் வாழ்த்தினர். முன்னாள் மந்திரியும், கனிம சுரங்க தொழில் அதிபருமான ஜனார்த்தனரெட்டியின் மகள் பிரமணிக்கும், ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ராஜீவ்ரெட்டிக்கும் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று திருமணம் நடந்தது. பல கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமான முறையில் நடந்த இந்த திருமணத்திற்காக அரண்மனை மைதானத்தில் தற்காலிகமாக பிரமாண்டமான அரங்குகள், வீடுகள் அமைக்கப்பட்டு இருந்தன. திருப்பதி திருமலை கோவில், ஹம்பி கோவில் மற்றும் பல்லாரி கோவில்களின் மாதிரி கட்டிடங்களும் வடிவமைக்கப்பட்டு இருந்தன.


  

கவர்னர் வஜூபாய் வாலா, மந்திரிகள் எச்.கே.பட்டீல், டி.கே.சிவக்குமார், ராமலிங்கரெட்டி, பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், துணைத்தலைவர் ஆர்.அசோக், நடிகர்கள் விஷால், புனித் ராஜ்குமார், கணேஷ், சாய்குமார், பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, ஜெயந்தி மற்றும் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

5 நாட்கள் நடைபெற்ற இந்த திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பங்கேற்ற இசை கச்சேரிகள், நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அரண்மனை மைதானத்தில் சுமார் 36 ஏக்கர் பரப்பளவில் ஜனார்த்தனரெட்டியின் சொந்த ஊரான ‘காலி’ கிராமமே அங்கு வடிவமைக்கப்பட்டு இருந்தது. அரண்மனை மைதானத்தின் நுழைவு வாயிலில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் முக்கிய பிரமுகர்கள் திருமணம் நடந்த கிராமத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த திருமணத்திற்காக ஜனார்த்தன ரெட்டி பல கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்குமாறு சமூக ஆர்வலர் ஒருவர் வருமான வரித்துறையில் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நாடே பணப்பிரச்சனையால் திண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், ரூ.650 கோடி செலவில் திருமணம் நடத்தி ஒட்டுமொத்த இந்திய மக்களின் கவனத்தையும் திசை திருப்பியுள்ளார்.

* திருமணத்துக்காக, பெங்களூரு அரண்மனை மைதானத்தில் 36 ஏக்கர் பரப்பளவில் விஜயநகர பேரரசின் கிருஷ்ண தேவராயர் காலத்து அரண்மனை, திருப்பதி வெங்கடேஷ்வரா கோயில், ஹம்பி விட்டாலா கோயில், பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் வீடு, பெல்லாரியில் உள்ள காலி கிராமம், தாமரைக் குளத்துடன் கூடிய கிராமிய விளையாட்டு மைதானம் போன்ற பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டன.

* கடந்த 12-ம் தேதி இரவு நலங்கு நிகழ்ச்சியில் தொடங்கி தினமும் ஒவ்வொரு இரவும் மெஹந்தி, சங்கீதம், நடனம் என விதவிதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் மணமக்களின் குடும்பத்தினரும், பாஜகவினரும் அதிகளவில் பங்கேற்றனர்.

* முகூர்த்த தினமான நேற்று காலை ஜனார்த்தன ரெட்டி தனது மகளை சாரட் வண்டியில் அமர வைத்து திருப்பதி வெங்கடேஷ்வரா கோயில் போன்று அமைக்கப்பட்டுள்ள செட்டுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தார்.

* வைரம் மற்றும் தங்கத்தால் ஜரிகை செய்யப்பட்ட சேலை அணிந்திருந்த பிராமணிக்கு முழுவதும் வைரத்தால் ஆன நகைகளை அணிவித்து இருந்தனர். இதேபோல மணமகன் ராஜீவ் ரெட்டி உட்பட இரு குடும்பத்தாரும் முழுவதும் வைரத்தால் ஆன நகைகளே அணிந்திருந்தனர்.

* மகள் திருமணத்தின் காரணமாக ஒட்டுமொத்த பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் குடும்பமே வைரத்தால் மின்னியது. குறிப்பாக பெண்கள் அனைவரும் ஒட்டியானம், காப்பு உட்பட வகைவகையான வைர நகைகளை அணிந்திருந்தனர்.

* அவர் அணிந்த முகூர்த்த புடவையின் விலை மட்டும் ரூ.17 கோடி. தங்க ஜரிகையால் நெய்யப்பட்டிருந்த புடவையில் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற வைர கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.

* கடந்த 5 நாட்கள் இரவில் நடைபெற்ற பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளில் விருந்தினர்களுக்கு அளிக்கப்பட்ட வெற்றிலை பாக்கு ஆகியவற்றின் செலவு மட்டும் ரூ.50 லட்சம். இதில் திருமண தினமான நேற்று மட்டும் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.

* வெற்றிலை பாக்கு மடித்து தருவதற்காக 500 மாடல்களும், 500 இளம்பெண்களும் வரவழைக்கப்பட்டு இருந்தனர். பாக்குக்கு பெயர் பெற்ற பெல்லாரியில் உள்ள குல்சார் பான் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பெங்களூரு அழைத்துவரப்பட்டு வெற்றிலை பாக்கு வகைகளை உருவாக்கினர்.

* திருமணத்தின் போது விருந்தினர்களை வரவேற்கவும், சிவப்பு கம்பளத்தின் மீது நடக்கும் மணமக்களின் மீது காஷ்மீர் ரோஜா மற்றும் ஆம்பூர் மல்லி பூக்களை தூவுவதற்கு மாடல்கள் வரவழைக்கப்பட்டனர்.

* இதற்காக மும்பை, சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து தலா 500 ஆண் மற்றும் பெண் மாடல்கள் வந்திருந்தனர். இந்த மாடல்களுக்கு வெள்ளை நிற பட்டு வேட்டி சட்டை, வெள்ளை நிற பட்டுப்புடவை மற்றும் கவரிங் நகைகள் சீருடையாக வழங்கப்பட்டது.

* இந்த திருமணத்தில் பங்கேற்ற லட்சக்கணக்கான மக்களுக்கு ஆந்திரா, உடுப்பி, சீனா, இத்தாலி ஆகிய ஸ்டைலில் 152 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

  
   Bookmark and Share Seithy.com


இதோ உங்கள் பெயரையும் நிலவில் பதிக்கும் வாய்ப்பு
[Saturday 2017-01-21 21:00]

விண்வெளி ஆய்வு நிறுவனம் ஒன்று தனது ஆய்வு முயற்சிக்குத் தேவையான பணத்தை பொதுமக்களிடம் இருந்து பெற வித்தியாசமான வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறது. அது, நிலவில் உங்கள் பெயரை எழுதுவதுதான்! பெங்களூருவில் உள்ள இந்த நிறுவனம், இம்மாத இறுதியில் இந்தியா அனுப்பவுள்ள விண்கலத்தில் தாம் உருவாக்கிவரும் ரொபோ ஒன்றை அனுப்பவுள்ளது. எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி - அதாவது, இந்தியாவின் 71வது குடியரசு தினத்தன்று - பிஎஸ்எல்வி ரொக்கெட் மூலம், சந்திரனில் விண்கலம் ஒன்றை அனுப்ப இந்தியா தயாராகிவருகிறது. அதனுடன், மேற்படி நிறுவனம், தான் உருவாக்கிவரும் ரொபோ ஆய்வு இயந்திரம் ஒன்றையும் அனுப்ப எண்ணியுள்ளது.


டிரம்ப்பிற்காக தயாரிக்கப்பட்ட ஐபோன்
[Saturday 2017-01-21 20:00]

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்று விட்டார், இதனால் அவருடைய பாதுகாப்பு கருதி செல்போன் விடயத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ரகசிய சேவை நிறுவனம் ஸ்பெஷலாக அவருக்காக தயாரிக்கப்பட்ட ஐபோனை தான் இனி டிரம்ப் உபயோகப்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. ஜனாதிபதி டிரம்பின் பேச்சுக்களை யாரும் ஹேக் செய்ய முடியாத வகையில் இந்த போன்வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஈழப் பெண்ணுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு
[Saturday 2017-01-21 20:00]

கனடாவில் வாழும் ஈழத் தமிழ் பெண்ணக்கு பிரதான தமிழ் சினிமா படத்தில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளளது. லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் என்ற ஈழப் பெண்ணுக்கே இந்த வாய்ப்பு கிடைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் விரைவில் திரைக்கு வரவுள்ள போகன் திரைப்படத்திலலேயே பிண்ணனி பாடகியாக அறிமுகமாகி பாடல் ஒன்றை பாடியுள்ளார். இசையமைப்பாளர் டி.இமான் மூலமே ,கனடாவில் வாழும் இலங்கை தமிழ் பெண்ணான லக்ஷ்மிக்கு இந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.


பேஸ்புக் நட்பினால் இலட்சக்கணக்கில் பணத்தை இழந்த இலங்கை பெண்
[Friday 2017-01-20 17:00]

கம்பஹாவை சேர்ந்த பெண்ணொருவரிடம் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பிரதான நீதவான் டீ.ஏ.ருவண் பத்திரன உத்தரவிட்டுள்ளார். பேஸ்புக்கில் நண்பராகி குறித்த பெண்ணிடம் 8 லட்சத்து 65 ஆயிரதம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்த குற்றச்சாட்டில் நைஜீரிய இளைஞனருக்கு நீதிபதி விளக்கமறியல் உத்தரவிட்டார். சந்தேகநபரான நைஜீரிய நாட்டவரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்து கோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.


அதிமுகவுக்கு ரூ.400 கோடி, திமுகவுக்கு ரூ.300 கோடி..? - பீட்டாவின் இமெயிலை ஆராய்ந்த ஹாக்கர் குழு அதிர்ச்சி தகவல் !
[Thursday 2017-01-19 22:00]

Anonymous legion என்கிற ஹாக்கர் குழு, பீட்டாவின் இமெயில் தகவல்களை ஆராய்ந்து பார்த்ததில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் தற்போது வாட்ஸ்அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஹாக்கர் குழுவின் தகவலில், ஆளும் கட்சியான அதிமுகவுக்கு 400 கோடி, திமுகவுக்கு 300 கோடிக்கு மேல் கடந்த 6 மாதங்களில் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


பிரித்தானியாவில் சூட்கேஸில் பிணமாக மீட்கப்பட்ட பெண்: - அதிர்ச்சி சம்பவம்
[Thursday 2017-01-19 18:00]

பிரித்தானியாவில் பெண் ஒருவர் சூட்கேஸில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 46 வயதான Kiran Daudia என்ற பெண்ணே இவ்வாறு பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.லீசெஸ்டர், Cromer தெருவில் உள்ள பொது நடைபாதையில் மர்ம சூட்கேஸ் ஒன்றை கண்ட பொதுமக்களில் ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவயிடத்திற்கு விரைந்து பொலிசார் சூட்கேஸை திறந்து பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதில் பெண் ஒருவரை பிணமாக கண்டெடுத்துள்ளனர்.


இங்கிலாந்தில் நிர்வாண உடலில் ஒன்றுகூடிய 3000 பேர்
[Wednesday 2017-01-18 13:00]

பல்லாயிரக்கணக்கானோர் உடலில் நீல வர்ணத்தைப் பூசிக் கொண்டு 3000 பேர் ஒன்றுகூடிய கண்காட்சியொன்று இங்கிலாந்தின் ஹல் சிற்றி நகரில் நடைபெற்றுள்ளது.கலைப்படைப்புக்காக இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பென்ஸர் டுனிக்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் சுமார் 3000 தொண்டர்கள் உடலில் நீல வர்ணத்தைப் பூசிக் கொண்டு திரண்டிருந்தனர். ஸ்பென்ஸர் டுனிக், உலகின் பல்வேறு நகரங்களிலுள்ள பிரசித்தி பெற்ற இடங்களில் நிர்வாண கோலத்திலுள்ள நூற்றுக்கணக்கானோரை ஒன்றுதிரட்டி புகைப்படங்களை பிடிப்பதில் பெயர் பெற்றவர்.


ரஷ்ய அதிபரின் மாளிகையின் மதிப்பு ஒரு பில்லியன் பவுண்ட்ஸ்: - வெளியானது வியக்க வைக்கும் பட்டியல்
[Wednesday 2017-01-18 07:00]

அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையை விடவும் ரஷ்ய ஜனாதிபதியின் கிரெம்லின் மாளிகை விலை மதிப்பு அதிகம் என்று புதிதாக வெளியாகியுள்ள பட்டியல் தெரிவிக்கின்றது.அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் மதிப்பு 30 மில்லியன் பவுண்ட்ஸ் எனவும் ரஷ்ய அதிபரின் மாளிகையின் மதிப்பு ஒரு பில்லியன் பவுண்ட்ஸ் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் வெளியாகியுள்ள இந்த பட்டியலில் வியப்புக்குள்ளாக்கும் வகையில் சீனா ஜனாதிபதியின் மாளிகை முதலிடத்தில் உள்ளது. சீனா ஜனாதிபதியின் மாளிகையான Zhongnanhai ன் மதிப்பு 31 பில்லியன் பவுண்ட்ஸ் என கூறப்படுகிறது.


ஆர்வக் கோளாரால் ஜிம்மில் முதுகெலும்பை உடைத்த வீரர்
[Tuesday 2017-01-17 23:00]

உடற்பயிற்சி நிலையத்தில் வீரரொருவர் அதிக நிறையுடைய பளு தூக்கிய போது முள்ளந்தண்டு இரண்டாக உடைந்த சம்பவத்தின் வீடியோவாக பதிவு இணையத்தில் வெளியாகி உடற்பயிற்சி பயிற்சி ஆசையில் இருப்பவர்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் ஒருவர் உடற்பயிற்சி நிலையத்தில் அதிக எடையுடன் இருக்கும் பளுவை தூக்க முயற்சிக்கும் வேளையில் பளுவை தூக்கி நிமிர்ந்து நிற்கும் போது திடீரென கீழே போடுகிறார். பின்னர், அப்படியே சரிந்து கீழே விழுகிறார். பின்னர், மேற்கொண்ட வைத்திய பரிசோதனையில் அவரின் முதுகெலும்பு இரண்டாக உடைந்துள்ளது தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.


தீவிரவாதியுடன் செல்பி எடுத்தாரா ஏஞ்சலா மெர்க்கல்? - வைரலான புகைப்படம்
[Saturday 2017-01-14 16:00]

ஜேர்மனியின் சான்சலர் ஆன Angela Merkel (62) கடந்தாண்டு பெர்லினில் உள்ள அகதிகள் முகாமிற்கு சென்றார்.அப்போது சிரியாவிலிருந்து வந்து அங்கு தங்கி வேலை பார்த்து கொண்டிருக்கும் Anas Modamani (19) என்னும் இளைஞர் அவருடன் செல்பி எடுத்துள்ளார்.இந்த செல்பியானது பின்னாளில் Anasக்கு எவ்வளவு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என அவருக்கு அப்போது தெரியவில்லை.இந்த புகைப்படம் பின்னர் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் பரவ தொடங்கியது.


சவுதியில் 15 ஆயிரம் இளவரசர், இளவரசிகள்!
[Thursday 2017-01-05 18:00]

மன்னராட்சிக்குப் புகழ்பெற்ற நாடு சவுதி அரேபியா. ஆசியாவில் ஐந்தாவது பெரிய நாடு. இந்த நாட்டில் கடந்த 1938-ம் ஆண்டில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிருந்தே செல்வத்தில் கொழிக்கத் தொடங்கியது சவுதி. நாட்டின் முதல் மன்னர் அப்துல் அசீஸ். கிங் அப்துல்லாசிஸ் என பரலாக அழைக்கப்பட்டவர். பெட்ரோலிய வளத்தை முறையாகப் பயன்படுத்தி சவுதி அரேபியாவை வளம் கொழிக்கும் நாடாக மாற்ற வித்திட்டவர் இவர்தான். இரண்டாம் உலகப் போரின் போது, உலகம் முழுக்க பெட்ரோலின் தேவை அதிகமாக, அதைப் பயன்படுத்தி பாலைவனத் தேசத்தை பணக்கார பூமியாக மாற்றினார் கிங் அப்துல்லாசிஸ். இவருக்கு மட்டும் 17 மனைவிகள் வழியாக 36 குழந்தைகள் உண்டு. இப்படிதான் சவுதி அரேபியாவின் மன்னர் குடும்பம் உருவாகத் தொடங்கியது.


கள்ளக்காதலனை அடித்து துவைத்த கணவன்: வைரலாகும் வீடியோ! Top News
[Tuesday 2017-01-03 18:00]

அமெரிக்காவில் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட மனைவியின் கள்ளக்காதலனை அவரது கணவர் அடித்து உதைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அலபாமா மாகாணத்தில் கணவர் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறியதும் அவரின் மனைவி தனது கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில் வெளியே சென்ற அவரது கணவர் வீடு திரும்பிய போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது மனைவியுடன் படுக்கையில் வேறு ஒரு நபரை கண்ட அவர் கோபத்தின் உச்சத்திற்கே சென்றார்.


பூமியை உடைத்துக்கொண்டு நுழைந்த பெரிய விண்கல்! Top News
[Saturday 2016-12-31 08:00]

பெரிய விண்கல் ஒன்று மூன்று துண்டுகளாக பிளந்துக் கொண்டு பூமியில் நுழைந்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி வியக்க வைத்துள்ளது. பூமியில் விண்கல் விழுந்த இடத்தை குறித்த தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏனெனில் அது தங்கத்தை விட நாற்பது மடங்கு விலை உயர்ந்தது என கூறப்படுகிறது. அந்த வீடியோவில், பெரிய தீப்பந்துகள் பூமியை உடைத்துக்கொண்டு வானத்தில் ராக்கெட்டுகள் போல் வேகமாக செல்கிறது. ஆனால், அந்த விண்கல் விழுந்த இடம் மர்மமாகவே உள்ளது.


உறவுக்கு மறுத்த இளம்பெண்ணை கொன்று அமிலத்தில் உடலை கரைத்த இளைஞர்!
[Wednesday 2016-12-28 08:00]

மெக்ஸிக்கோவில் இளைஞர் ஒருவர் உறவுக்கு மறுத்த இளம்பெண்ணை கொன்று அமிலத்தில் உடலை கரைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.26 வயதான Francia Ruth Ibarra என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். குறித்த குற்றத்தில் ஈடுபட்ட 26 வயதான Emmanuel Delani Valdez Bocanegr என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.Ibarra காணவில்லை என அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர். Ibarraவின் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்ததின் மூலம் அவர் Tinder என்ற டேட்டிங் தளத்தில் Bocanegrவுடன் பழகி வந்தது தெரியவந்துள்ளது.


110 சீன நாய்கள் கனடாவில் தஞ்சம்: - நாய் கறி திருவிழாவில் இருந்து தப்பியது
[Monday 2016-12-26 08:00]

சீனாவில் யுலின் மாகாணத்தில் ஆண்டு தோறும் டிசம்பரில் நாய் கறி திருவிழா நடைபெறுகிறது.அன்று நாய் கறி சாப்பிட்டும், மது அருந்தியும் பொழுதை பொதுமக்கள் குதூகலமாக கழிப்பார்கள். இதன் மூலம் குளிர்காலம் தங்களுக்கு உடல் நலத்தையும், வளத்தையும் தருவதாக நம்புகின்றனர்.திருவிழா அன்று சுமார் 2 கோடி நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சி விற்கப்படுகிறது. இதற்கு சமூக நல ஆர்வலர்கள்கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.அதை தொடர்ந்து கனடாவில் சர்வதேச இரக்க சிந்தனை சங்கம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.


Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
AIRCOMPLUS2014-02-10-14
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
NIRO-DANCE-100213
<b> 15-01-2017 அன்று ஃபான் ஃஅம் மையத்தில்  நடைபெற்ற முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களது பொதுக் கூட்ட  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 15-01-2017 அன்று மார்க்கம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற பொங்கல் திருவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா(Puthinamphotos.com)
<b> 14-01-2017 அன்று ரொரன்டோவில் கனேடிய தமிழர் பேரவை (CTC) நடாத்திய பொங்கல் விழா விருந்து நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா (Puthinamphotos.com)