Untitled Document
April 25, 2024 [GMT]
ஒன்பது வயது சிறுவனை பார்வையாளராக இருக்க வைத்து கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிட்ட சக நண்பர்கள்!
[Tuesday 2016-12-20 07:00]

பிரித்தானியாவில் 9 வயது சிறுவனை பார்வையாளராக இருக்க வைத்து கிறிஸ்துமஸ் சிறப்பு விருந்தினை சக நண்பர்கள் உண்டது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவில் Rawcliffe துவக்க பள்ளியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு படித்து வரும் Callum Fox என்ற 9 வயது மாணவர் குறித்த சிறப்பு விருந்திற்கான அனுமதிச் சீட்டானது நிர்வாகத்தினரின் கவனக்குறைவால் மாறியுள்ளது.இதனால் மாணவன் Callum Fox-கு கிடைக்க வேண்டிய சிறப்பு விருந்து பாழானது. குறித்த நாளில் மாணவனின் தாயார் பாடசாலையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு விருந்து குறித்து வினவியுள்ளார்.


  

ஆனால் மாணவனின் பதில் அவருக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவனுக்கு அனுமதிச் சீட்டு இல்லை என்பதால் அவனை பார்வையாளனாக இருக்க விட்டு சக நண்பர்கள் அனைவரும் சிறப்பு விருந்தை ருசித்து சாப்பிட்டுள்ளனர். குறித்த மாணவனுக்கு ஒரு துண்டு ரொட்டியும் ஆப்பிள் பழம் ஒன்றும் உணவாக கிட்டியுள்ளது. மாணவனும் குறித்த விருந்தில் கலந்துகொள்ளும் பொருட்டு கட்டணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை ஈடாக்கியுள்ளனர். மட்டுமின்றி தாயாரிடம் இருந்து அதற்கான சீட்டையும் பாடசாலையில் அளித்துள்ளனர்.இருந்த போதும் நிர்வாகத்தினரின் கவனக்குறைவால் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து குறித்த பாடசாலையின் தலைமை ஆசிரியர் மாணவன் மற்றும் அவனது தாயார் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.இதனிடையே மாணவன் Callum Fox-ன் சகோதரரும் சகோதரியும் குறித்த விருந்தில் கலந்து கோண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா