Untitled Document
February 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பூமியை உடைத்துக்கொண்டு நுழைந்த பெரிய விண்கல்! Top News
[Saturday 2016-12-31 08:00]

பெரிய விண்கல் ஒன்று மூன்று துண்டுகளாக பிளந்துக் கொண்டு பூமியில் நுழைந்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி வியக்க வைத்துள்ளது. பூமியில் விண்கல் விழுந்த இடத்தை குறித்த தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏனெனில் அது தங்கத்தை விட நாற்பது மடங்கு விலை உயர்ந்தது என கூறப்படுகிறது. அந்த வீடியோவில், பெரிய தீப்பந்துகள் பூமியை உடைத்துக்கொண்டு வானத்தில் ராக்கெட்டுகள் போல் வேகமாக செல்கிறது. ஆனால், அந்த விண்கல் விழுந்த இடம் மர்மமாகவே உள்ளது.


  

மெக்சிகோ எல்லை அருகே இந்த பெரிய விண்கல் விழுந்து வெடித்ததாக உள்ளுர் வாசிகள் கூறுகின்றனர். இந்த விண்கல் மெக்னீசியம் மற்றும் சோடியத்தால் ஆனது என நம்பப்படுகிறது. கடந்து மூன்று மாதங்களுக்கு முன்பு 30 டன் எடையுள்ள உலகின் இரண்டாவது பெரிய விண்கல் அர்ஜென்டீனாவில் விழுந்தது நினைவுக் கூரதக்கது.

  
   Bookmark and Share Seithy.com


ஏரியில் வீசப்பட்ட குழந்தைக்கு தாயான பெண் பொலிஸ் அதிகாரி!
[Saturday 2017-02-18 19:00]

மொனராகலையில் கைவிடப்பட்ட குழந்தையை பொலிஸ் பெண் அதிகாரி ஒருவர் பராமரிக்கும் நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மொனராகலை கச்சேரி சந்தியில் 4 மாத பெண் குழந்தை ஒன்று ஏரியில் வீசப்பட்ட நிலையில் மக்களால் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையை புத்தல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே ஏரியில் வீசியுள்ளார். குறித்த குழந்தையின் தாய் எனவும் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கணவன் இறந்த சில மணி நேரங்களில் வீட்டிற்கு வந்த பரிசால் கலங்கிய மனைவி!
[Friday 2017-02-17 09:00]

கணவர் கொல்லப்பட்ட செய்தி கிடைத்த சில மணிநேரங்களில், அவர் அனுப்பியிருந்த பரிசுப்பொருட்கள் மனைவிக்குக் கிடைக்கப்பெற்ற சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. மேஜர் சதீஷ் தஹியா (31) என்பவர் ஹரியானாவின் பானிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி சுஜாதா (27). இந்திய இராணுவ அதிகாரியான சதீஷ், கடமை நிமித்தமாக காஷ்மீரில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ப்ரியாஷா (2) என்ற மகளும் இருக்கிறார்.


கூகுளில் வேலைக்கு விண்ணப்பித்த 7 வயது சிறுமி - சுந்தர் பிச்சையிடமிருந்து பதிலும் கிடைத்தது
[Friday 2017-02-17 08:00]

உலகின் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுளில் வேலை வழங்கக் கோரி ஏழு வயது சிறுமி கூகுளி்ன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்திற்கு சுந்தர் பிச்சை அனுப்பிய பதில் என்ன? என்பதை பார்ப்போம்.லண்டனை சேர்ந்த 7 வயது சிறுமியான கோலெ பிரிட்ஜ்வாட்டர், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


பெண் குழந்தையை கடித்து உடலில் சூடு வைத்த தாய்: - பதற வைக்கும் சம்பவம்
[Thursday 2017-02-16 14:00]

இந்தியாவில் பெண் குழந்தையை சொந்த தாயே உடலில் கடித்தும், சூடு வைத்தும் கொடுமைப்படுத்திய செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல், இவர் மனைவி பெயர் பூனம், இவர்களுக்கு 11 மாத பெண் குழந்தை உள்ளது.தன் குழந்தையிடம் அன்பாக இருந்து வந்த பூனத்தின் செயலில் திடீர் மாற்றம் ஏற்ப்பட்டது.திடீரென தன் குழந்தையின் உடலில் கடித்தும், சூடு வைத்தும் பூனம் கொடுமைப்படுத்தியுள்ளார்.இதனால் குழந்தையின் முகம் மற்றும் உடல் பகுதிகளில் காயம் ஏற்ப்பட்டுள்ளது.


வானொலி நேரலை நிகழ்ச்சியில் இரு ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொலை..
[Wednesday 2017-02-15 20:00]

வானொலி நேரலை நிகழ்ச்சியொன்றின்போது ஊடகவியலாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் டொமினிக்கன் குடியரசு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இக்கொலையுடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிரான்ஸ் நாட்டில் சிறிய ரக விமானங்களை வீழ்த்த கழுகுகளுக்கு பயிற்சி:
[Wednesday 2017-02-15 19:00]

உலகம் முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில், தீவிரவாதத்தை ஒழிக்க பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, பிரான்ஸ் நாட்டின் MONT-DE-MARSAN விமானப்படை தளத்தில் ஆளில்லா சிறிய ரக விமானங்களை வீழ்த்தும் பயிற்சி கழுகுகளுக்கு அளிக்கப்படுகிறது. சிறிய ரக விமானத்தில் கழுகுகளுக்கு தெரியும் வகையில் இறைச்சி வைக்கப்பட்டு, ரிமோட் கன்ட்ரோல் விமானம் பறக்க விடப்படுகின்றன. இறைச்சியை கண்டதும், விமானத்தை துரத்தும் கழுகுகள் அதை கீழே வீழ்த்துகின்றன.


ஒபாமாவின் காதல் டைரி..
[Wednesday 2017-02-15 08:00]

காதல் ஒரு மனிதனை என்னவாக வேண்டுமானாலும் மாற்றும். காதல் கோழைகளை வீரனாக்கும், காமெடியன்களை ஹீரோவாக்கும். அப்படிப்பட்ட காதல் ஒருவரை உலகின் சர்வ வல்லமை படைத்த பதவியான அமெரிக்க அதிபர் பதவிக்கு வரவைத்தது. எப்போதுமே ஒரு ஆண் சிறந்தவர் என மற்றவர்கள் கூறுவதை விட ஒரு பெண் கூறினால் அந்த ஆணின் மதிப்பு வேறு உயரத்தில் இருக்கும். அப்படித்தான் மிச்செல் ஒபாமாவின் ஒரே மேடைப்பேச்சு ஒபாமாவை அமெரிக்க அதிபராக்கியது.


சீனாவில் காதலர் தினத்துக்கு இணையாக கொண்டாடப்படும் ஷிஸி நாள்!
[Monday 2017-02-13 18:00]

உலகில் பல்வேறு தினங்கள் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும் காதலர் தினத்துக்கு என்று தனி உற்சாகம் இருக்கிறது.காதலிக்கு பரிசு வாங்கவும், காதலை வெளிப்படுத்தவும் இதை ஒரு சந்தர்ப்பமாக இளைஞர்கள் பலர் பயன்படுத்திக் கொள்கின்றனர்.அந்த நாளில் இவர்கள் சந்தோஷத்தில் மிதப்பதோடு மட்டுமல்லால் ஒட்டுமொத்த உலகத்தினரையும் சந்தோஷத்தில் ஆழ்த்திவிடுவார்கள். அந்த அளவுக்கு பார்க்கும் திசையெல்லாம் வண்ண வண்ண மலர்களும், பல்வேறு பரிசுப்பொருட்களும் தான் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் காதலர் தினம் வெவ்வேறு விதமாக கொண்டாடப்படுகின்றன. காதலர் தினம் உலகளவில் பிரபலமானது என்றால், சில நாட்டில் தனிப்பட்ட முறையிலும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.சீனாவில் காதலர் தினத்துக்கு இணையாக கொண்டாடப்படும் ஷிஸி நாள்.


உலகிலேயே அதிக எடை கொண்ட எகிப்து பெண்ணுக்கு மும்பையில் சிகிச்சை
[Sunday 2017-02-12 08:00]

எகிப்து நாட்டை சேர்ந்த 500 கிலோ குண்டு பெண், எடை குறைப்பு சிகிச்சைக்காக மும்பை கொண்டுவரப்பட்டார். கிரேன் உதவியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.எகிப்து நாட்டை சேர்ந்த 500 கிலோ குண்டு பெண், எடை குறைப்பு சிகிச்சைக்காக மும்பை கொண்டுவரப்பட்டார். கிரேன் உதவியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். எகிப்து தலைநகர் கெய்ரோவை சேர்ந்த பெண் எமான் அகமது (வயது 36). இவருக்கு 11 வயது ஆனபோது பக்கவாத நோயாலும், உடல் பருமனாலும் படுத்த படுக்கை ஆனார். யானைக்கால் நோய் மற்றும் உடலில் சுரப்பிகள் சுரக்காததால் அவர் மிகவும் குண்டானார்.


அகதி இல்லமாக மாறிய நெதர்லாந்து சிறைகள்..
[Saturday 2017-02-11 21:00]

நெதர்லாந்தில் உள்ள சிறைகளில் கைதிகளே இல்லாததால் கைதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறைசாலை அகதி இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. பெல்ஜியம், இங்கிலாந்து, கெய்தி, இத்தாலி, அமெரிக்கா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சிறைகளில் கைதிகள் நிரம்பி வழிகின்றனர். அங்கு வழக்கத்தைவிட 2 மடங்கு அதிக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் நெதர்லாந்தில் உள்ள சிறைகளில் கைதிகளே இல்லை.


காதலருடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொண்ட பெண்ணுக்கு பொதுமக்கள் மத்தியில் பிரம்படி!
[Saturday 2017-02-11 08:00]

இந்தோனேசியாவில் பெண் ஒருவர் தமது காதலருடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொண்டதாக கூறி அதிகாரிகளால் பொதுமக்கள் மத்தியில் பிரம்படி வழங்கப்பட்ட காணொளி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.இந்தோனேசியாவின் Aceh மாகாணத்தில் குறித்த சம்பவம் நடந்தேறியுள்ளது. 20 வயதான Nur Elita எனும் இளம்பெண் தமது காதலருடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவருக்கு பொதுமக்கள் மத்தியில் பிரம்படி வழங்கப்பட்டுள்ளது.ஷரியா சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்தும் மாகாணங்களில் ஒன்று இந்தோனேசியாவின் Aceh மாகாணம். இங்குள்ள மக்கள் மது மற்றும் போதை மருந்து பயன்படுத்துவதாக பிடிக்கப்பட்டால், பொதுமக்கள் மத்தில் பிரம்படி தண்டனை வழங்கப்பட்டு வருகின்றன.


ரொறொன்ரோவில் மாயமானவர் 5 ஆண்டுகளுக்கு பின்னர் அமேசான் பகுதியில் இருந்து மீட்பு!
[Saturday 2017-02-11 08:00]

கனடாவின் ரொறொன்ரோ பகுதியில் இருந்து மாயமான நபர் ஒருவரை 5 ஆண்டுகளுக்கு பின்னர் அமேசான் மழைக்காடுகளில் இருந்து மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரொறொன்ரோவை சேர்ந்தவர் 39-வயதான அன்ரன் பிலிப்பா. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தமது குடியிருப்பு பகுதியில் இருந்து மாயமானதாக கூறப்படுகிறது.மாயமான நபரை தேடும் பொருட்டு இவரது சகோதரர் நிதி உதவிக்காக ஒரு நிதி திரட்டும் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.இந்த நிலையில் அன்ரன் பிலிப்பா எனப்படும் இவர் அமேசான் பகுதியில் பெரிய நகரம் ஒன்றின் நெடுஞ்சாலையில் அலைந்து திரந்து கொண்டிருக்கையில் அப்பகுதி பொலிசாரால் கடந்த ஆண்டு நவம்பர் 28 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டார்.இவர் தமது குடியிருப்பு பகுதியில் இருந்து 6500 மைல்கள் தொலைவில் உள்ள அமேசான் மழைக்காடுகள் பகுதிக்கு கால் நடையாகவே சென்றுள்ளது பலருக்கும் வியப்பை அளித்துள்ளது.குழப்பமடைந்த நிலையில் பதட்டத்துடனும் பேச முடியாத நிலையிலும் குறித்த நபர் காணப்பட்டார் என கூறப்படுகிறது.


பயங்கரவாதிகளின் தொடர் அச்சுறுத்தல்! - ஈஃபிள் டவரை என்ன செய்யப் போகிறார்கள் தெரியுமா?
[Friday 2017-02-10 07:00]

பயங்கரவாதிகளின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக ஈஃபிள் டவரை சுற்றி 8 அடி உரத்தில் வலிமையான கண்ணாடி சுவர் எழுப்ப இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்சின் தனிச்சிறப்புகளில் ஒன்றாக தலை நிமிர்ந்து நிற்கும் ஈஃபிள் கோபுரத்தை அடுத்த தலைமுறையும் கொண்டாடும் பொருட்டு அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி தற்போது போடப்பட்டிருக்கும் உலோக வேலிகள் அனைத்தையும் அகற்றிவிட்டு அங்கு கண்ணாடி சுவர் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக பாரிஸ் நகர மேயர் அலுவகம் தெரிவித்துள்ளது.


குழந்தை பிறப்பதை சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்த அமெரிக்க பெண்!
[Friday 2017-02-10 07:00]

ஒரு பெண்ணின் வயிற்றில் கரு உண்டாகிவிட்டாலே, அந்தப் பெண்ணை ஒரு குழந்தைப்போல் தான் பாவிப்பார்கள். குழந்தை பிறக்கும் வரை ஒரு அச்ச உணர்வாகவே இருக்கும். அதிலும், குழந்தை பிறக்கும் நேரம் தான் மிகவும் முக்கியமாகும். ஆனால், ஒரு பெண் குழந்தை பிறப்பதையே சமூக வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான தகவல் ‘இண்டிபெண்டன்ட்’ என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள வேல்ஸ் என்ற பகுதியில் உள்ள ஒரு பெண் யோசிஸ்.


என்றும் இளமையுடன், அதிக ஆண்டு உயிர் வாழும் வரம் கிடைத்தவர்கள்..
[Tuesday 2017-02-07 07:00]

இந்த உலகில் என்றும் இளமையுடன், அதிக ஆண்டுகள் உயிர் வாழும் வரத்தை வாங்கி வந்துள்ளனர் குன்ஸா இனம். இவர்கள் இஸ்லாமிய மதத்தைக் கடைபிடிக்கிறார்கள். குன்சா என்பது அங்குள்ள இஸ்லாமியர்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினரைக் குறிக்கிறது. இந்த இனத்து மக்களை கோட்டீஸ் என்றும் அழைக்கிறார்கள். வடக்கு பாகிஸ்தானில் உள்ள கரகோரம் என்னும் மலைப்பிரதேசத்தில் தான் இந்த சாதியினர் வாழ்கின்றனர். குறிப்பாக, இவர்கள் அதிகம் வாழும் பகுதியென்றால் புருஸீ குன்ஞ்சவாலி என்னும் பள்ளத்தாக்குப் பகுதியில் தான். உலகிலேயே அதிக ஆண்டுகள் உயிர் வாழ்வதும் அதிக ஆரோக்கியமாக இருப்பதும் இவர்கள் தான்.


Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
AIRCOMPLUS2014-02-10-14
<b>02-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ideal Entertainment நிறுவன அறிமுக விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>29-01-2017 அன்று ரொரன்டோவில் தமிழ்நாடு சமூக மன்றம்  நடாத்திய தைப்பொங்கல் விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>28-01-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற கனடா தமிழர் மரபு மாநாட்டு விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா