Untitled Document
March 29, 2024 [GMT]
காதல் திருமணம் செய்தவருக்கு 17 இலட்சம் ரூபா அபராதம்..!
[Friday 2017-03-10 21:00]

பழங்குடியின பெண்ணை காதலித்து திருமணம் செய்ததற்காக, இளைஞர் ஒருவருக்கு 17 இலட்சம் அபராதம் விதித்த சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானின் இந்துக்கள் அதிகம் வாழும் சிந்து மாகாணத்திலுள்ள பஜர் அபாத் எனும் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்து கொண்டதனால், தமது குடும்பத்திற்கு சமுதாயத்தில் அவப்பெயர் ஏற்பட்டுவிட்டதாக குறித்த பெண் வீட்டார், பழங்குடியின நீதிமன்றமான ஜிர்காவில் முறைப்பாடொன்றை செய்துள்ளனர்.


  

குறித்த வழக்கை விசாரித்த ஜிர்கா பழங்குடியின நீதிமன்றம், கட்டுப்பாடுகளை மீறி திருமணம் செய்து கொண்ட இளைஞர் குற்றவாளி என தீர்ப்பளித்து, 17 இலட்சம் அபராதம் விதித்துள்ளதோடு, காதல் திருமணம் செய்து கொண்ட குறித்த ஜோடியை கிராமத்தைவிட்டு மூன்று மாதகாலம் ஒதுக்கி வைக்குமாறும் தீர்பளித்துள்ளமை, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. அத்தோடு நீதிமன்ற வழக்குகளை குறைப்பதற்காகவும், குடும்ப வழக்குகளை உடனடியாக தீர்த்து கொள்வதற்கும், பாகிஸ்தான் பாராளுமன்றம் கடந்த மாதம் பழங்குடியின நீதிமன்றங்களுக்கு சட்ட அதிகாரம் அளித்துள்ள நிலையில் குறித்த தீர்ப்பு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா