Untitled Document
April 19, 2024 [GMT]
ஈழத் தமிழர்கள், லைக்கா வீடு, பேரு ரஜினிக்கு: 2.o படத்தை ஓட வைக்க
[Friday 2017-03-24 21:00]

எந்திரன் 2′ படத்தை ஓட வைக்க ரஜினி, லைக்கா நிறுவனத்தின் அடுத்த பம்மாத்து வேலைகள் ஆரம்பம். ரஜினியே கைக்காசு போட்டு கட்டித்தருவது போல ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. விவரம் படிங்க..!? யாழ்ப்பாணம் நகரில் ஈழத்தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்கிறார் ! லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குகிறார்.


  

வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது ஞானம் அறக்கட்டளை. லைகா அதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகை அவர்களின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை இது. இந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி இலங்கையில் யாழ்ப்பாணம் நகரில் நடைபெறவுள்ளது.

விழாவில் தனது கரங்களால், தமிழ் மக்களுக்கு இந்த புதிய வீடுகளை வழங்குகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இலவச வீடுகள் வழங்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவேண்டும் என்று ரஜினிகாந்த் அவர்களிடம் கேட்டபோது, ஈழத்தமிழர்களுக்கான நிகழ்ச்சி என்ற காரணத்தினால் உடனே மகிழ்ச்சியுடன் வரச் சம்மதித்தார். அவர் இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வது இதுவே முதல்முறையாகும்.

ஆனால், உள் விவரம் அறிந்த சிலர் என்னவோ ரஜினியே மக்களுக்கு சொந்த காசில் வீடு கட்டித் தருவது போல கதை கட்டுறார்கள். ஆனால், வெறும் நூறு வீடுகள் தான் ஓரளவு நிறைவு பெற்றிருக்கிறது. அதையும் பயனாளிகளே செலவு செய்து முடித்துக் கொள்ளவேண்டும். இப்படி இருக்க ரஜனியே செலவு செய்வது போல ஊடகங்களில் கதை பரப்புகிறார்கள். உண்மையில் ரஜினி இலங்கை வர ப்ளைட் டிக்கெட் கூட லைக்கா தான் செலவு செய்கிறது.

பத்து பைசா செலவு இல்லாமல் 2.0 படத்தை ஓடவைப்பதற்காக புழுகு மூட்டையை அவிழ்த்துவிடுகிறார்கள் என்று கொதிக்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்.

  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா