Untitled Document
April 19, 2024 [GMT]
பத்து வயதிலேயே 192 கிலோ எடை! ஒரு நாளைக்கு 5 முறை சாப்பிட்ட சிறுவன்!
[Sunday 2017-05-28 09:00]

இந்தோனேஷியாவை சேர்ந்த 10 வயது சிறுவன் 192 கிலோ எடையுடன் உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவன் என கடந்த ஆண்டு ஊடகங்கள் மூலம் பிரபலமானார். அந்த சிறுவன் தற்போது அறுவை சிகிச்சை மூலம் அவருடைய எடையை குறைத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தாலும், தினமும் நூடுல்ஸ், இறைச்சி, கோலா என அபரிமிதமான உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டதால் இந்தோனேஷியாவை சேர்ந்த 10 வயது சிறுவன் ஆர்யா பெருமானா உடல் பருமன் அதிகரித்து உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவனாக ஆனார்.


  

10 வயதிலேயே 192 கிலோ எடை இருந்ததால் அவரால் நடக்க கூட முடியவில்லை. மேலும் பள்ளிக்கும் செல்ல முடியாமல் அவர் கஷ்டப்பட்டு வருகிறார். மேலும் அவருடைய உடலுக்கு ஏற்ற ஆடையை தைக்க முடியாமல் அவரது பெற்றோர்கள் தவித்துவருகின்றனர்.

இதனால் அவர்களுடைய மகனின் உடல் எடையை குறைக்க கோரி மருத்துவர்களை நாடினர் பெருமானாவின் பெற்றோர். மருத்துவர்கள் இறைச்சி உள்ளிட்ட கொழுப்பு பொருட்களை தவிர்க்ககோரியும், காய்கறிகள் மற்றும் பழவகைகள் மட்டுமே சாப்பிட வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். ஆனால் அது அதிக பயன் தரவில்லை. இந்த சாதாரண உணவு பழக்கத்தால் வெறும் 6 கிலோ எடை மட்டுமே குறைந்தது. இதனால் சிறுவனின் நடவடிக்கைகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. இதனால் மருத்துவர்களிடன் தங்கள் குழந்தைகளை காப்பாற்றும்படி பெற்றோர்கள் மீண்டும் முறையிட்டனர்.

பெற்றோர்களின் வேண்டுதலுக்கு இணங்க அறுவை சிகிச்சையின் மூலம் சிறுவனின் உடல் எடையை குறைக்க மருத்துவர்கள் முடிவுசெய்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி சிறுவன் ஆர்யா பெருமானாவிற்கு, உடல் எடையை குறைக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைகு பின் 20 கிலோ எடை குறைந்துள்ளதாக பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். ஆனால் பள்ளிக்கு செல்ல வேண்டுமானால் மற்ற குழந்தைகளை போல வயதிற்கு ஏற்ற உடல் எடையுடனும், ஆரோக்கியமாகவும் ஆர்யா பெருமானா மாற வேண்டும் என அவருடைய பெற்றோர் தெரிவித்துள்ளனர். அதற்காக மருத்துவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுவருவதாக அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

மேலும் சிறுவன் வழக்கத்திற்கு மாறாக அதிக எடையுடன் இருப்பதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை ஒரு காட்சிப் பொருளை போல பார்த்து செல்வதால் பெற்றோர் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். மேலும் அவர்களுடைய மகன் விரைவில் குணமடைந்து மற்ற சிறுவர்களைப் போல பள்ளிக்குச் செல்வான் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா