Untitled Document
March 29, 2024 [GMT]
டயானா பற்றிய உண்மைகளை பேசப்போகும் இளரவரசர் வில்லியம் - ஹரி:
[Saturday 2017-06-03 09:00]

பிரித்தானியா இளவரசி டயானா குறித்த பலருக்கும் தெரியாத விடயங்களை அவரின் மகன்களான இளவரசர் வில்லியமும், ஹரியும் டாக்குமெண்டரி திரைப்படம் மூலம் வெளி உலகுக்கு தெரிவிக்க உள்ளார்கள். பிரித்தானியா இளவரசி டயானா கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி கார் விபத்தில் மரணமடைந்தார். டயானா உயிரிழந்து 20 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் அவரை பற்றி மகன்களான இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹரி மனம் திறந்து பேசவுள்ளனர்.


  

இது ஒரு டாக்குமெண்டரி திரைப்படமாக தயாராகிறது.

90 நிமிடங்கள் ஓட கூடியதாக உருவாகும் இந்த திரைப்படத்தில், டயானா வாழ்ந்த வாழ்க்கை, இரண்டு மகன்களுடான அவரின் உறவு, திடீர் மரணம் போன்ற விடயங்கள் இடம்பெறவுள்ளன. மேலும் டயானாவின் மகன்கள் மட்டுமில்லாமல் அவரின் நண்பர்கள், உறவினர்கள், அரசியல் நண்பர்கள் போன்றவர்களும் டயானா இறப்புக்கு பின்னர் முதல்முறையாக பேசவுள்ளனர்.

ஏற்கனவே இளவரசர் வில்லியம் சில தினங்களுக்கு முன்னர் தாயின் பிரிவால் தான் வாடுவதை குறித்து மனம் உருக பேசியிருந்தார். அதில் டயானா இறந்து இருபது வருடங்கள் ஆகியிருந்தாலும் மரணம் குறித்து பேச தற்போதும் கடினமாகவே இருக்கிறது என கூறினார். மேலும் பலரும் டயானாவை பற்றி எல்லாம் தெரிந்தது போல பொய்யாக பேசுகிறார்கள் என்றும் தனக்கும், ஹரிக்கும் மட்டுமே தங்களது தாய் குறித்து அனைத்தும் தெரியும் எனவும் கூறியிருந்தார்.

  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா