Untitled Document
September 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ப்ரூஸ்லீ இறப்பின் மர்மம் :33 வருடங்களுக்கு வெளியான மருத்துவ அறிக்கை:
[Saturday 2017-09-09 07:00]

மாபெரும் கராத்தே லெஜன்ட், ப்ரூஸ்லீயின் இறப்பு குறித்த ரகசிய மர்மம் 33 வருடங்களுக்கு பிறகு மருத்துவ அறிக்கையில் கசிந்துள்ளது. அவரை ப்ளான் பண்ணி கொலை செய்துள்ளனா் என்பதே அதிா்ச்சியான செய்தியாகும். காெலைக்கு முக்கியமான காரணம் அவர் மனைவி என்பது தான் பேரதிா்ச்சியை உண்டாக்கியுள்ளது.


  

மே 10, 1973 அன்று மாபெரும் கராத்தே லெஜன்ட் ப்ரூஸ்லீ அவரது இல்லத்தில் இருந்து உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். லீ வலிப்பு மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டதால், உடனடியாக டாக்டர்கள் பரிசோதித்து பெருமூளை வீக்கம் என கண்டறிந்தனர். மருத்துவர்களால் மானிடோல் சிகிச்சை மூலம் வீக்கத்தை குறைக்க முடிந்தது என்பது இங்கு குறிபிடத்தக்கது.

மீண்டும் தலைவலி மற்றும் பெருமூளை முற்றிலும் பாதிப்பு அடைந்து விட்டதால் மருத்துவா்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதன் பிறகு மரணத்தை தழுவினாா் ப்ரூஸ்லீ. லீ இறப்பில் மர்மம் என்று எதுவும் இல்லை…! அது ஒரு மனைவியின் துரோகத்தால் நடத்தப் பட்ட ஒரு படுகொலை என்று மருத்தவா்கள் கூறிய டைரி குறிப்புகள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.

டைரி குறிப்புகள்,

திட்டமிட்டு, ஆஸ்பிரின் அதிக அளவில் கூல் ட்ரிங்க்ஸ் உடன் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதே அவரது மரணத்துக்கு காரணம் என தொியவந்துள்ளது. இறக்கும் தருவாயில், ப்ரூஸ்லீ எதோ சொல்ல முற்பட்டார் ஆனால் அவரின் மனைவி எதையும் சொல்ல அனுமதிக்கவில்லை. அவரது மனைவியை வெளியே அனுப்ப முயன்றோம் அவர் மறுத்துவிட்டார்.

மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு வரும் போதே அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தாா். அதற்கு 2 நிமிடங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக ஆஸ்பிரின் கரைசல் அவர் வாயில் புகட்டப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது

ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ப்ரூஸ்லீ மனைவி சொன்ன காரணங்களையே திருப்பி சொல்ல முற்பட்டது. இன்னும் சொல்லபோனால் லீ இறப்பதற்கு முன்பே இறந்து விட்டதாக ஒரு நியூஸ் வெளியே பரவியது.

மருத்துவ நிர்வாகமும் ப்ரூஸ்லீ மரணிப்பதையே ஆவலுடன் எதிர் பார்த்தது. அதே போல ப்ரூஸ்லீ மாண்டார்..அவர் இறந்த இருபது நாட்களில், அவருடைய மனைவி அமெரிக்கா பறந்தார்.

  
   Bookmark and Share Seithy.com


கிருஷ்ண ஜெயந்தி - பச்சிளம் குழந்தையை இரண்டரை மணிநேரம் இலையில் கட்டிவைத்த சம்பவம்!
[Thursday 2017-09-14 18:00]

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 3 வயது குழந்தையை சுமார் இரண்டரை மணிநேரம் இலையில் கட்டிவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது, இந்த பண்டிகை அன்று தங்கள் குழந்தைகளை கிருஷ்ணர் போன்று அலங்காரம் செய்வார்கள், மேலும் பல்வேறு வகையான பலகாரங்களை செய்து தங்கள் வீட்டிற்கு கிருஷ்ணரை வரவேற்பார்கள்.


முழு சூரிய கிரகணத்தில் பிறந்த குழந்தை: - பெற்றோர்கள் வைத்த வித்தியாசமான பெயர்
[Thursday 2017-08-24 09:00]

அமெரிக்காவில் நேற்று முன்தினம் நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தின் போது பிறந்த குழந்தைக்கு வித்தியாசமாக பெயரிட்டு பெற்றோர்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.அமெரிக்காவின் 14 மாகாணங்களில் 99 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் நடைபெற்ற முழு சூரிய கிரகணத்தை அனைவரும் பார்த்து களிப்படைந்தனர்.


அஹோசின் தேவதை படுகொலை! - நைஜீரியருக்கு ஆயுள் தண்டனை?
[Thursday 2017-08-17 18:00]

இலங்கையைச் சேர்ந்த அகதிப் பெண் ஒருவர் ஜேர்மனியின் அஹோஸ் நகரில் கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் கைதானவரின் வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது. அஹோஸ் பகுதியில் வசித்து வந்த 22 வயதான சூபிகா பரமநாதன் என்ற குறித்தப் பெண், அவரது ஆண் நண்பர் என்று கூறப்படும் நைஜீரியாவைச் சேர்ந்த அகதி ஒருவரால் கடந்த பெப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார். அகதிகளுக்கான தொண்டுபணிகளியில் ஈடுபட்டு வந்த அவரை ‘அஹோசின் தேவதை’ என்று அந்த பகுதி மக்கள் அழைத்துவந்ததாக ஜேர்மனியின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


12 வயது சிறுவனுக்கு 12 அங்குலமுள்ள பெரிய கைகள்: -ஒதுக்கிய கிராம மக்கள்
[Sunday 2017-08-13 07:00]

இந்தியாவில் 12 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட அரிய வகை நோயினால் அவனது கை 12 அங்குலம் அளவிற்கு பெரியதாகியுள்ளதால், அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் இது சிறுவனுக்கு ஏற்பட்ட சாபம் என ஒதுக்கியுள்ளனர். உத்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் Tarik. 12 வயதாகும் இச்சிறுவனுக்கு பிறக்கும் போதே அரியவகை நோயின் பாதிப்பினால் அவனது கைகள் சாதரணமாக மனிதனுக்கு இருப்பதை விட பெரிய கைகளாக இருந்துள்ளது.


மலேசியாவில் மகளை பாலியல் தொல்லை செய்த தந்தைக்கு 12 ஆயிரம் வருடம் சிறை:
[Friday 2017-08-11 18:00]

மலேசியாவில் தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த 36 வயது தந்தையை கைது செய்த போலீஸ் நீதிமன்றம் அவருக்கு 12 ஆயிரம் வருடங்கள் வரை சிறைத் தண்டனை கொடுக்க வேண்டும் என கோரியது. மலேசியாவை சேர்ந்த 36 வயதுடைய ஆண் ஒருவர் அவருடைய மனைவியை விவாகரத்து செய்து 15 வயது மகளும் வசித்து வந்தார். இவருடன் மனைவி இல்லாமலிருந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை வரையிலான இடைப்பட்ட அந்த நபர் மகளை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.


உலகம் செப்டம்பரில் அழிந்து விடுமா? - பிரபல நிபுணர் பரபரப்பு தகவல்
[Tuesday 2017-08-08 09:00]

பூமியில் மனித இனம் சந்திக்கும் கடைசி மாதம் ஆகஸ்ட் எனவும், அடுத்து வரும் செப்டம்பர் மாதத்தில் உலகம் அழிந்துவிடும் எனவும் பிரபல எண் கணித நிபுணர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த David Meade என்பவர் எண்களையும், பூமியில் ஏற்படும் நிகழ்வுகளையும் பைபிளுடன் ஒப்பிட்டு எதிர்காலத்தை துள்ளியமாக கணிப்பதில் சிறந்தவர் ஆவார்.


சிறையில் அடைக்கப்பட்ட சீனாவை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை!
[Tuesday 2017-08-01 18:00]

சீனாவை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.Han Riu Hou என்ற 4 வயது பெண் குழந்தை தனது தாய் Zialoin மற்றும் மாமா Song Qi Hou ஆகிய இருவருடன் கேரளாவுக்கு வந்துள்ளது.


குழந்தையை இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்த தாய்: - ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
[Friday 2017-07-28 09:00]

குழந்தையை இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்த தாய்க்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்தவர் Paul Hogan. இவர் மனைவி Cody-Anne Jackson (20) இவர்களுக்கு Macey Hogan (2) என்ற பெண் குழந்தை உள்ளது.மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக Paul அவரை பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் Maceyயின் புகைப்படத்தை Paul-க்கு Jackson அனுப்பியுள்ளார்.


பழிக்கு பழியாக குடும்பத்தினர் எதிரிலேயே சிறுமியை பலாத்காரம் செய்ய உத்தரவிட்ட பஞ்சாயத்து!
[Thursday 2017-07-27 18:00]

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ‘பழிக்கு பழி’ வாங்கும் விதமாக 16 வயது சிறுமி பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிரிலேயே பஞ்சாயத்து உத்தரவுப்படி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முஸாஃபராபாத்தின் ராஜ்பூர் கிராமத்தில் ஜூலை 18ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அஷ்ஃபாக் என்பவரின் தங்கையை வாடா என்ற இளைஞர் ஜூலை 16ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.


கனடாவில் காணாமல் போன தமிழர்! - தகவல் அறிந்தால் தருமாறு பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.
[Friday 2017-07-21 07:00]

கனடாவின் Stouffville பகுதியில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 18ஆம் திகதி முதல் இந்த நபர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர். 61 வயதான பொன்ராசா நாகராஜா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கடந்த 18ஆம் திகதி காலை நடைபயிற்சியில் ஈடுபடுவதற்காக சென்றுள்ள நிலையில் அவர் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


5 கிலோ வெள்ளி, 30 லட்சம் பணம் 100 சவரன் தங்கம் கொட்டி கொடுத்தும் மருமகளை அடித்தே கொன்ற டாக்டர் குடும்பம்: Top News
[Wednesday 2017-07-19 20:00]

5 கிலோ வெள்ளி, 30 லட்சம் பணம் 100 சவரன் தங்கம் கொட்டி கொடுத்தும் போதவில்லை , 10 லட்சம் கேட்டு மருமகளை அடித்தே கொன்று நாடகமாடிய டாக்டர் குடும்பம் , மன்னார் குடியில் நடந்த பயங்கரம் – வீடியோ அதிகமாக பகிருங்கள் இவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வரட்சனை கொடுமையால் இளம் பெண் அடித்து கொலை செய்யப்பபட்டுள்ளார்.


ஷாப்பிங் சென்று விட்டு உள்ளே வரும் சசிகலா!
[Tuesday 2017-07-18 18:00]

பெங்களூர்: பெரா வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜரான போது வெள்ளை நிற சிறை கைதி ஆடை அணித்திருந்த சசிகலா அன்னியன் மாதிரி அவ்வப்போது சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் ஆடையை மாற்றியிருப்பது அம்பலமாகி உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக டிஐஜி ரூபா அம்பலப்படுத்தினாா். மேலும் சிறைத் துறை அதிகாரியின் காரிலேயே அவர் பலமுறை சிறையை விட்டு வெளியே சென்று வந்துள்ளார் என்று தெரிகிறது.


அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பெண்:
[Tuesday 2017-07-11 20:00]

இலங்கையில் சாதாரண குடும்பம் ஒன்றில் பிறந்து அமெரிக்காவில் சிறந்த சமையல்காரராக மாறி பெண், அந்த நாட்டு உணவகம் ஒன்றுக்கு உரிமையாளராகியுள்ளார். அயோமா கருணாரத்ன என பெயர் கொண்ட குறித்த இலங்கை பெண், திருமணத்திற்கு பின்னர் அயோமா வைலன் என அழைக்கப்படுகின்றார். கண்டி மாஹாமாய பாடசாலையின் பழைய மாணவியான அவர் சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்தவராகும். அவரது தந்தை பேராதனை பகுதியில் உள்ள மிகச்சிறிய கடை ஒன்றின் உரிமையாளராகும்.


அறுவை சிகிச்சை மூலம் கழுத்திலிருந்து அகற்றப்பட்ட 90 குண்டூசிகள்!
[Saturday 2017-07-08 15:00]

ராஜஸ்தானை சேர்ந்த பத்ரிலால் என்பவரது ழுத்தில் இருந்து 90 குண்டூசிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவரான இவர் அதிகமான குண்டூசிகளை விழுங்கியுள்ளார். இதனால் கழுத்தில் வலி மற்றும் உணவு சாப்பிட மிகவும் சிரமப்பட்டுள்ளார்.டில்லியில் உள்ள ஆந்திய மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குள்ள மருத்துவர்கள் அவரை சி.டி.ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்திய போது, அவரது உடலின் உள்ளே பல்வேறு இடங்களில், 150 குண்டூசிகள் இருந்தது தெரிய வந்தது.


பாசத்திற்கும் சட்டத்திற்கும் நடுவில் ஊசலாடும் 11 மாதக் குழந்தையின் உயிர் போராட்டம்!
[Wednesday 2017-07-05 17:00]

சட்டப்புத்தங்களின் வரிகளுக்கு நடுவிலும், பெற்றோரின் தணியாத முயற்சிகளுக்கு இடையிலும் ஒரு 11 மாதக் குழநதையின் உயிர் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் சம்பவம் மனதை நெகிழச் செய்வதாக உள்ளது.


Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா