Untitled Document
March 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நயன்தாராவை மறைமுகமாக தாக்கி பேசிய விவேக்!
[Tuesday 2016-10-25 17:00]

புதிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது அப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கூறியிருக்கிறது. ஒப்பந்தத்திலும் இந்த விதி சேர்க்கப்படுகிறது. பெரும்பாலான ஹீரோயின்கள் கலந்து கொண்டபோதும் நயன்தாரா உள்ளிட்ட ஒரு சிலர் புரமோஷனில் பங்கேற்பதில்லை. காஷ்மோரா படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்திருக்கிறார் நயன்தாரா. கோகுல் இயக்கி இருக்கிறார். கார்த்தியின் தந்தையாக விவேக் நடித்துள்ளார். அவர் கூறியது: கடந்த 3 வருடமாக காஷ்மோரா படத்தை தயாரித்து வருகின்றனர். அதன் படப்பிடிப்பு முடிந்தது. தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. முதன்முறையாக கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.

பல்வேறு சூழல்களால் விட்டுவிட்டு படப்பிடிப்பு நடந்தபோதிலும் இதில் பணியாற்றிய அனைவருமே 3 வருடமாக இணைந்து பணியாற்றியது பாராட்ட வேண்டிய விஷயம். எந்தவொரு படத்தையும் கஷ்டப்படாமல் எடுக்க முடிவதில்லை. ஆனால் இணைய தளவாசிகள் சிலர் டுவிட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் அந்த படத்தைப்பற்றி கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிடுகிறார்கள். அந்த காலத்தில் வெளிவந்த அன்னக்கிளி 3 வாரத்துக்கு பிறகுதான் படத்தின் டாக் பரவி சாதனை படைப்பாக அமைந்தது. இல்லாவிட்டால் ஒரு இளையராஜா நமக்கு கிடைத்திருக்கமாட்டார். தற்போது அந்த சூழல் இல்லை. இப்போதெல்லாம் 3 தினங்கள்தான் படம் ஓட்டுகின்றனர்.

அதற்குள் படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்ற மவுத் டாக் பரவ வாய்ப்பில்லை. அதற்கு அவகாசம் தராமல் இணைய தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் படத்தின் கதையை முடித்துவிடுகிறது. அதுபோன்ற நெகடிவ் கருத்துக்களை தவிர்க்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். படங்களில் நடிக்கும் ஹீரோயின்கள் சிலரும் புரமோஷனுக்கு வரமறுத்து விடுகிறார்கள். அதற்கு காரணம் கேட்டால் நாங்கள் வந்தால் அந்த படம் சென்டிமென்டாக ஒர்க்அவுட் ஆவதில்லை என்று காரணம் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட நடிகைகள் தங்களின் கடைசி பேமென்ட் (சம்பளத்தை) சென்டிமென்ட்டாக விட்டுத்தருவார்களா? இவ்வாறு விவேக் கூறினார். நயன்தாராவை விவேக் மறைமுகமாக தாக்கி பேசியது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

  
  
   Bookmark and Share Seithy.com



முகம்சுளிக்க வைக்கும் கவர்ச்சியில் பிக்பாஸ் புகழ் மதுமிதா! Top News
[Friday 2024-03-29 07:00]

விஜய் டிவியின் பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் மதுமிதா. அவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மதுமிதா உச்சகட்ட கவர்ச்சி காட்டி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி இருக்கிறது.



"ரஜினி 171" - லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அப்டேட்!
[Thursday 2024-03-28 18:00]

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.



கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி வைத்த சூர்யா!
[Thursday 2024-03-28 18:00]

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.



சித்தார்த் மற்றும் அதிதி ராவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!
[Thursday 2024-03-28 18:00]

மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த், அதற்கு முன்பு கண்ணத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் அவருக்கு துணை இயக்குனராக இருந்து வந்தார். அதன்பின் பாய்ஸ், உதயம் NH4, 180, அரண்மனை, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் நாயகனாக நடித்து வந்தார்.



"சாப்பிட கூட வழி இல்லை" - மேடையில் கண்ணீர் விட்ட விஜய் டிவி மணிமேகலை!
[Thursday 2024-03-28 06:00]

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பிரபலம் ஆனவர் மணிமேகலை. அவர் ஹுசைன் என்ற டான்சரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர் வேறு மதம் என்பதால் மணிமேகலை வீட்டில் ஒப்புதல் இல்லை. வீட்டை எதிர்த்து தான் மணிமேகலை ஹுசனை திருமணம் செய்துகொண்டார். அந்த நேரத்தில் அவர்கள் மதத்தை வைத்து சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ட்ரோல்கள் வந்தது.



வனிதா 4வது திருமணம்: காரி துப்பும் தங்கச்சி!
[Thursday 2024-03-28 06:00]

தமிழ் திரையுலகில் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் எப்போதும் உள்ளது. அந்த வகையில் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவிற்கு பிறந்த மூத்த மகள் வனிதா விஜயகுமார் தமிழ் திரையுலகில் நடிகையாக களம் இறங்கினார். எனினும் இவர் எதிர்பார்த்த அளவு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவரது அம்மா மஞ்சுளா மற்றும் அப்பா விஜயகுமார் போல இவரது நடிப்பு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.



ஜெட் வேகத்தில் பறந்து வரும் சிவகார்த்திகேயன்!
[Wednesday 2024-03-27 18:00]

அசர்கிற நேரத்துல தான் ஆட்டைய போடணும் என்று ஒரு சொலவடை சொல்வார்கள். அதுபோலதான் சிவகார்த்திகேயனின் செயல்கள் இருக்கிறது. அதாவது விஜய் அரசியல், அஜித் டைம் பாஸ்க்கு படங்களில் நடிப்பது, ரஜினி வருஷத்துல ஒரு தடவை படம் பண்ணுவது, கமல் பெயர் சொல்ற மாதிரி ஒரு படத்தை பண்ண வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒரு கோட்பாடு வைத்து அதன்படி நடித்து வருகிறார்கள்.



ஷாருக்கான் போல அட்லிக்கு வேற நடிகரை கோர்த்துவிட்ட விஜய்!
[Wednesday 2024-03-27 18:00]

அட்லி இயக்க கூடிய படங்கள் காபி கேட் என்று கூறினாலும் அவரிடம் இருக்கும் தனித் திறமையால் வசூல் அளவில் சாதனை படைக்கும் அளவிற்கு வெற்றி இயக்குனராக ஜொலித்து வருகிறார். எப்படி இங்கே விஜய்யை வைத்து மெர்சல், பிகில் படங்களை கொடுத்தார்.



10 வருட காதல்: ரகசிய திருமணம் செய்துகொண்ட டாப்ஸி!
[Wednesday 2024-03-27 18:00]

தனுஷின் ஆடுகளம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை டாப்ஸி. இதன்பின் ஆரம்பம், காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து வந்தார். பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வரும் டாப்ஸி சமீபத்தில் தான் ஷாருக்கான் உடன் இணைந்து டங்கி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை டாப்ஸிக்கு அவருடைய 10 வருட காதலருடன் திருமணம் என தகவல் வெளிவந்தது.



பச்சை கொடி காட்டியதால் துணிந்து விளையாடும் சங்கர்!
[Wednesday 2024-03-27 06:00]

உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 மற்றும் 3 படப்பிடிப்பு நிறைவடைந்து, ரிலீசுக்கு தயாராகி வருவதால் சங்கர் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிப்பில் ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் உருவாகி வருகிறது ஷங்கரின் கேம் சேஞ்சர்.



இயக்குனர் பேரரசுக்கு பதிலடி கொடுத்த வெற்றிமாறன்!
[Wednesday 2024-03-27 06:00]

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார். அவர் பிரபல இயக்குனர் பேரரசுக்கு மேடையில் பதிலடி கொடுத்ததாக ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. யானை கதையை வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் கள்வன் என்ற படத்தின் பிரெஸ் மீட்டில் பேசிய பேரரசு சொன்ன கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெற்றிமாறன் பேசி இருக்கிறார்.



பிரபல நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்!
[Tuesday 2024-03-26 18:00]

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக இன்று (மார்ச் 26) காலமானார். மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு சிகிச்சை பலனின்றி காலமானார். 2002-ம் ஆண்டு வெளியான தனுஷின் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.



நடிப்பை ஓரங்கட்டி பழைய பாணிக்கு திரும்பும் பிரபுதேவா!
[Tuesday 2024-03-26 18:00]

போட்டி நிறைந்த திரை உலகில் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் விடாமுயற்சியுடன் ஜெயித்தே ஆக வேண்டும். இல்லை என்றால் தன்னை மிதித்துக் கொண்டு ஆயிரம் பேர் வருவதற்கு தயாராக இருப்பார்கள். இப்படித்தான் பிரபுதேவாவின் நிலைமையும் ஆகிவிட்டது.



"ஹிந்தி படங்களில் நடிக்காததற்கு காரணமே இதுதான்" - த்ரிஷாவே கூறிய பதில்!
[Tuesday 2024-03-26 18:00]

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை திரிஷா. 1999ம் ஆண்டு பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரேஒரு காட்சியில் நடித்திருந்தார். சூர்யாவுடன் மௌனம் பேசியதே படத்தில் முதன்முதலில் நாயகியாக நடிக்க அதன்பிறகு சினிமாவில் அசுர வளர்ச்சி கண்டார்.



ஆண்டவருக்காக ரொமான்டிக் அவதாரம் எடுத்த லோகேஷ்: காரணம் இதுதான்!
[Tuesday 2024-03-26 06:00]

நடிக்கப் போகிறார் என்றதுமே அனைவருக்கும் ஒரு ஆர்வம் இருந்தது. ஆனால் இனிமேல் ஆல்பம் பாடல் டீசரை பார்த்ததும் அது ஆனந்த அதிர்ச்சியாக மாறிப்போனது. நம்ம லோகியா இது என கேட்கும் அளவிற்கு அவர் ரொமான்ஸில் பட்டையை கிளப்பி இருந்தார். அதை தொடர்ந்து இன்று முழு பாடலும் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.


Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா